அரிப்பெடுத்த எனது ஆண்குறி
அல்குல் வழித்துவராக் கனவில்
இன்னொருத்தியின்
மார்புக்காம்பைக்
கோவில் வாசலில் திருகிக் கொள்ளக்
கரங்களைத் தயாராக்கியது
எனது சமயக் கதைகள் இவற்றையும் கடவுள் பெயரில்
காவியமாக்கும்,கதைகளாக்கும்!
உப்புக்கு வழியற்றவளின் உறவோ
ஒரு செம்பு நீருக்கும்
அதுள் வேகும் அரிசிக்குமான தேவையில் அமையும்
அவளுக்கு அம்பாளின் சமனமும்
அளப்பரிய கற்புமுடியும் அவசியமென
அரிப்பெடுத்த எனது ஆண்குறி அறிவுப்புச் செய்கிறது
அப்பப்ப செருகிக்கொள்ளும் ஆசையோடு
நேற்றைய குருதிவெடில்
நாசித்துவாரத்தை விட்டகலா இன்றைய பொழுதில்
எனது அப்பனும்,பாட்டனுமிட்ட அதே கதைகளை
நானும் புதிப்பித்தபோது எனது 'விருப்பு' விலங்குடைத்தது
'தொப்புளில் நா பதித்து
அரசிலை தடவி...'
சீதையையெண்ணக் கம்பனின் இரசம் மேலெழும்பிக் கொண்டது
எனது முகத்தை தரைக்குள் ஆழப்புதைத்தபடி
இப்போது சொல்வேன்:
'எனது குலத்துப் பெண்ணை நான் கனவிலும் புணரேன்
அவள் எனது தாய்-மாதா!'
பாரதத்தின் குலத் தோன்றலான எனக்குப் பெண்மையும்
குலமேன்மையும் தேச மானத்தின் கருவறை!
எனது கச்சையை இறுகப் பிடித்துக்கொண்டு
கிஞ்சித்தும் கலாச்சாரம் மாசடையாதிருக்க
பெண்ணினது கழுத்தில் 'தாலி'யேற்றிவிடத் துடித்தால்
கூலி தரத்தக்க நிலையில் அவள் நிலையில்லை
நடுச்சாமத்தில் பேயோட்டியின்
உடுக்கையின் ஒலியில்
அவள் பிடவை விலக்கப்படும் நடுவீட்டுள்
அதைப் பேயினது பெயரால் கிராமமும் அங்கீகரிக்கும்
இத்தனைக்கும் பிறகும்
எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது-
கருக்கலைத்துக் கொள்ள வரும் சிறுசை
'பெரியவளின் ஒப்புதலோடு'
உறவுக்குப்பிறகிடும் மருந்தே
ஆழச் சென்று அதைக் கொல்லுமெனுஞ் சாக்கில்
மீளக் கலைக்கும் அவள் துணிகளை!
எனதும்,உனதுமான
தமிழ்க் கலாச்சாரத்தின்'உயரிய'பெண்மதிப்பீடு
இப்படியிருக்க
ஒருத்தி எதையோ சொல்லிக் கொள்ள
உருப்படியற்ற எதையோ
எனக்காகவாகவும்> உனக்காகவாகவும்
சில பைத்தியங்கள் சுவர்களில் எழுதிக் கொள்கின்றன(ர்)
-ப.வி:ஸ்ரீரங்கன்
26.09.2005
6 comments:
//அவளுக்கு அம்பாளின் சமனமும்
அளப்பரிய கற்புமுடியும் அவசியமென
அரிப்பெடுத்த எனது ஆண்குறி அறிவுப்புச் செய்கிறது
அப்பப்ப செருகிக்கொள்ளும் ஆசையோடு//
ஸ்ரீரங்கன், இந்த வரிகள் சொல்லிவிடுகின்ற அனைத்தையும். சொல்லாதது கட்சி அரசியலை மட்டும் தான்.
நன்றி!
நன்றி,தங்கமணி.
பிடித்துள்ளது எல்லாமும்,
குறிப்பாக எதிர்முனைகளைச் சொல்லும் இது,
//எனது சமயக் கதைகள் இவற்றையும் கடவுள் பெயரில்
காவியமாக்கும்,கதைகளாக்கும்!
உப்புக்கு வழியற்றவளின் உறவோ
ஒரு செம்பு நீருக்கும்
அதுள் வேகும் அரிசிக்குமான தேவையில் அமையும்//
கார்த்திக் ராம்,தங்கள் வருகைக்கும்,கருத்துகளுக்கும் உளமொப்பிய நன்றி!
உள்ளது உள்ளபடி சொல்லும் கவிதை!கொஞ்சம் வரசம்போல தெரிந்தாலும்,இந்த மொழியை ஏற்பதுதான் சரி.உண்மைக்கு முகமூடியோ இல்லை பூசி மெழுகலோ தேவையில்லை.தொடர்ந்து எழுதவும்.
naanraha tholirithu eluthapatta kavithai..paarathukaall..nanrikal..
Post a Comment