தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டமானது எதைக் குறித்துரைக்கிறது?

அதாவது தமிழீழ மீட்புப் பணிக்காக மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதிகள் மீளக் கையளிக்கும் நடவடிக்கை துரிதமாகச் செயல்ப் படுத்தப்பட்டு வருகிறது.இன்று பளையிலிருந்து 'வெக்டோன்'தொலைக்காட்சி நிருபர் இவற்றைத் தொகுத்தளித்தார்.
மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி மீளக் கையளிப்புச் செய்வதானால் இலங்கையின் அரச ஆதிக்கத்திலிருந்த ஈழம் விடுபட்டிருக்கவேண்டும்.அது தன்னைத் தனியரசாகப் பிரகடனப்படுத்தி,தமிழ் மக்களுக்கானவொரு அரசாக உலக அரங்கில் அங்கீகரம் பெற்றிருக்கவேண்டும்.இத்தகைய நிலையில் அந்த அரசு மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியைக் கையளிப்பது நியாயமானது.இத்தகையவொரு நிலை நமக்குக் கிடைத்துவிட்டதா?தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை'தனியரசு'மூலம் பெற்றுவிட்டதின் குறியீடாக இது இருக்கிறதா?

அல்லது ஈழப்போர்-ஈழமென்ற அரசியற் கருவூலமெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,எனவே மக்களிடம் பெற்றதை நியாயமாக அவர்களிடம் ஒப்படைக்கின்றோமென்கிறார்களா?
நிறைந்த கேள்விகள் எழுகிறது.
இது என்ன வகை அரசியல்?

மக்களின் வாழ்விடங்கள் நிர்மூலமாகப்பட்டுள்ளது.அவர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த வாழ்விடங்களைச் சிங்களப் பாசிச இராணுவம்'உயர் பாதுகாப்பு வலையமாக'க் கையகப்படுத்தி வைத்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான சதுர மைல் இப்படிப் பறிபோய், மக்கள் வெவ்வேறு இடங்களில் இடம் பெயர்ந்து'அகதி'யாக உள் நாட்டில் வாழ்கிறார்கள்.அவர்களது சமூக வாழ்வு சிதைக்கப்பட்டிருக்கும்'உயர்பாதுகாப்பு வலையம்' அப்படியேதாம்... மக்கள் தமது வாழ்வாதாரச் சமூக முன்னெடுப்புகளை முன்னெடுக்கத்தக்க 'இயல்பு நிலை' திரும்பி வந்திருக்கிறதா? அதை இந்த ஈழம் உறுதிப்படுத்திக் காக்கும் அரசாகத் தன்னை விடுதலைப் படுத்தியுள்ளதா?
இது என்ன?

மக்களிடமிருந்து பெற்றது வெறும்'பொருள்கள்'மட்டும்தாமா?
அவர்களது உயிர்,உடமை, மாவீரர்களும்,துரோகிகளுமாக்கப்பட்ட அவர்களது குழந்தைகள்? என்ன இது?
இன்றும் அரசியற் கைதிகளாக் கிடந்து அவலப்படும் இளைஞர்கள்?
சர்வதேசிய ரீதியாக மதிப்பிடும்படி அமையும் நமது மக்களின் வாழ்வுச் சிதைவுகளுக்கு எந்த நஷ்ட ஈடு வந்துள்ளது?இதைத் தரவேண்டிய இலங்கை அரசின் நிலையென்ன?
ஈழத்தின் கதை என்ன?

இந்த மீள் கையளிப்புத்தாம் மக்களால் எதிர் பார்கப்பட்டதா?
இதன் அரசியலும்,புலிகளின் இந்த நகர்வும் எதைக் குறித்துரைக்கிறது?
-ப.வி.ஸ்ரீரங்கன்
11.09.2005
11 comments:
மக்களிடம் பெறும் பணம் எதிர்காலத்தில் மீண்டும் தரப்படும் என்பதை சுட்ட, ஒரு அடையாள மீள் கையளிப்பே இது. சில வேளைகளில் ஈழத்தில் இருக்கும் மக்களின் பண தேவைகளை கருதி, புலம்பெயர் நிதி உதவியுடன் இது மேற்கொள்ளப்படலாம். வேறு நிலையில், இது மக்களை ஏமாற்றும் ஒரு நாடகம் போலவும் தோன்றலாம்.
புலம் பெயர்ந்தவர்களுக்கு இலக்க அட்டை குடுத்து நிதி அறவிடும் ஆழுமை கொண்ட புலிகள், அவர்களுக்கும் ஒரு காலத்தில் இவ் நிதி மீண்டும் தரப்படலாம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கவும் இவ் நடவடிக்கை உதவலாம்.
எது எப்பிடியோ இது இன்று நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அல்ல!
உண்மையில் 2 பவுண்கள் பெறப்பட்ட அடுத்த வருடமே இது ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கையளிப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவீரர் தின காலங்களிலும் குலுக்கல் முறையில் தேர்நதெடுக்கப்பட்டவர்களுக்கு இக்கடன் மீளளப்பு செய்யப்படுகின்றது.
2 பவுண்கள் பெற்றதற்கான பற்றுச்சீட்டில் தமிழீழ மீட்புநிதிக் கடன் என்று தான் இருக்கிறது.
ஆம். இது ஒவ்வொரு வருடமும் மீள வழங்கப்பட்டே வருகிறது. இம்முறை எங்கள் குடும்பமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறி ரங்கன், இந்த நிதி மீள் தரப்படும் என்று கடன் அடிப்படையிலேயே வாங்கப்பட்டத்து. வாங்கி அடுத்த வருடமே குலுக்கல் முறையில் தெரிவு செய்து மீள கொடுக்க தொடங்கிவிட்டார்கள். யாழ் குடா நாடு இராணுவ கட்டுபாட்டிற்குள் வந்த்ததனால் அவர்களது நிதி யாழ் பாத்தை திறக்கும் வரை மீள வழங்கப்படவில்லை. பாத்தை திறந்தபின் மீள ஆரம்பித்தார்கள். இது தான் உண்மை.
இந்த மீள் கையளிப்பு குறித்துச் சென்ற வருடமும் கேள்விப் பட்டிருந்தேன். பதிவுக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி.
//அல்லது ஈழப்போர்-ஈழமென்ற அரசியற் கருவூலமெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,எனவே மக்களிடம் பெற்றதை நியாயமாக அவர்களிடம் ஒப்படைக்கின்றோமென்கிறார்களா?//
என்ன சிறீரங்கன் பேசுறீங்க!
புலிகள் 12 வருசமா இதை திருப்பி கொடுத்துக்கிட்டு வர்றாங்க! அது உங்களுக்கு தெரியாமல் போயிருச்சே!
கடன் அப்பிடின்னு சொல்லி வாங்கினாங்க! அதை ஈழம் கிடைக்குதோ இல்லயோ திருப்பி கொடுக்கத்தானே வேணும்.!
இதப் போய் ஈழத்தை கைவிட்டுட்டாங்களோ? அப்பிடியோ? இப்பிடியோ..ன்னு எழுதுறீங்களே!
93 வது வருசத்தில இருந்து கடனைத் திருப்பி கொடுக்கிறாங்க! நீங்க அதப்போய் இப்போ தான் கண்டு பிடிச்ச மாதிரி எழுதுறீங்க!
தோந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் இந்தச்சுட்டியில் http://www.tamilnaatham.com/meedpu20050818/
நற்கீரன்,சயந்தன்,அநாமதேய நண்பர்கள்,மற்றும் குழைக்காட்டான்,சுந்தரவடிவேல்,கொழுவி அனைவருக்கும் வணக்கம்!தங்கள் கருத்துகளுக்கு நன்றி.கொழுவி எனக்கிது புதிய செய்தி.எனவே இதன் தாக்கம் வேறொரு கோணத்தைத் தந்தது.எழுதிவிட்டேன்.எனினும் கேள்விகளில் கேட்டதற்கான காரணம் உங்கள் பதில்களில் தெளிவுறவே!இப்போது அறிந்துகொண்டேன்.நன்றி மீண்டும்.முன்பெல்லாம் புலிகளின் செய்திகளை வாசிப்பதில்லை.எதையும் தலைவர் துதிதாமென எமக்குள் ஒரு கருத்து நிலவியது.இப்போது பல தளங்களில் விவாதங்கள் வரும்போது-புலிகளின் விவாதங்களிலும் மாற்றங்களைக்காணும் நாம் அவற்றைக் காது கொடுத்து உள்வாங்குகிறாம்.இதுதாம் உண்மை!
இது கடனாக மக்களிடம் வாங்கிய பணத்தினை கட்டம் கட்டமாக மீள்ளிப்பு
செய்துவருகின்றனர்.புலிகளை விமர்சிக்கும் பலர் இப்படி தான் உண்மைகளை தெரிந்து கொள்ளாமல்
அல்லது உண்மைகளை தெரிந்து கொள்ள
விரும்பாமல் இருந்து விமர்சித்து வருகின்றனர்.இருந்தும் இதை தைரியமாக ஒப்புக்கொண்ட உங்களின் நேர்மை பாரட்டதக்கது.
12 வருடங்களாகவே இக்கடன் மீளாளிக்கப்பட்டுவருகிறது.
புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்ககாசுகள் வழங்கப்பட்டன.
மேலதிக விபரத்துக்கு...
http://www.nithiththurai.com/
//புலிகளின் விவாதங்களிலும் மாற்றங்களைக்காணும் நாம் அவற்றைக் காது கொடுத்து உள்வாங்குகிறாம்.இதுதாம் உண்மை!//
மிகச்சரியாக உங்களைப் போலவே புலியெதிர்ப்பாளர்களின் விவாதங்களில் மாற்றங்களைக் காணும் புலிகளும் அவற்றைக் காது கொடுத்து கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தப் போராட்டம் சரியான செல்நெறியில் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எல்லாம் தங்கள் விமர்சனங்களை நேரடியாக புலிகளிடமே சொல்லுங்கள். அவர்கள் கண்டிப்பாக காது கொடுத்து கேட்பார்கள்.
கரிகாலன்,அநாமதேய அன்பருக்கும் வணக்கம்.தங்களிருவரினதும் கருத்துகளுக்கு நன்றி யை உரித்தாக்குகிறேன்!
Post a Comment