Saturday, September 03, 2005
கற்பவிழ்ப்பு!
கற்பவிழ்ப்பு!
எதுவும் வெட்கத்தை தருவதாவில்லை
ஒரு இருண்ட பொழுதில் கனத்த உணர்வைத் தவிர
எதுவும் மனதில் தைக்கவில்லை
கனத்த உணர்வும் காலியான எனது பியர்க் குவளையிலிருந்த
நுரையாய்ப் போனது
தெருவெங்கும் ஆராயப்பட்ட
புணர்வுக்குப் பின்பான
'குற்றம் சுத்தம்'
நீதிக்கான திசையைத் திருடிக் கொள்ளும்
கற்பவிழ்ப்பு!
இது தொடர் கதை
அம்மாவினது மடியில் ஆசைகொண்ட அப்பனும்
அவள் தங்கை அகத்துக்காய் ஏங்கிக் கிடந்த சகதியில்
மையம்கொண்ட புயலாய் இது நீண்ட தொடர்
நேற்றுமட்டும்
புதிதாக முளையரும்பிய முயற்சியல்ல
தவித்திருக்கும் உயிர்களுக்கு -உறவுகளுக்கு
ஒரு குவளையால் வயிறு நிரப்பக்
கரம் வலிக்கும் சிறுசுகளுக்கு
அம்மாவுக்கு அடுப்பெரிக்க
தம்பிக்கு போச்சி நிரப்ப
அக்காள் அடுத்தவர் அடுக்களையில் அவிவதும்
வலுக்கரங்களால் வதைபடுதலும்
ஆயிரமாண்டுத் தொடர்ச்சி
என் தேசத்தின் அடி வாரத்தில்
எனினும்
ஒரு தேசம் தெருவெல்லாம் பிணமுருள
எழ முயன்ற கணமெங்கே?
இரும்புத் தொப்பி அந்நியனும்
இருண்ட காலத்தில் ஏறிமிதித்த என் தேசம்
தன்னைத்தாம் சுவரோடு மோதிக் கொண்டது
துருப்பிடித்த குருதிவெறி
அடங்காது அவிழ்த்தெறிந்த கோவணத்தால்
தேசத்தின் மானம் தெருவெங்கும் கந்தலாக
கனத்த உணர்வை கண்ணீர் கரைத்தது
உயிர் தொலைத்து
உணர்வுருக்கி உடல் காத்த ஊரெல்லாம்
திசைமாறி
வெண்ணை திரளும் சாடிகவிழ்த்தால்
என் தேச மகள் கதியிதுதாமோ?
எனது பியர்க் குவளை
வழிந்திறைத்த நுரைபோன்று
என் உணர்வும் சில நொடியில் கரை மேவ
குருதிகொட்டும் விழி
வசவெறிந்த வாயோடு
மதில் பூனைகளும்
வழிமீது உணர்வு குவித்து வாசல்கள் நோக்கி...
ப.வி.ஸ்ரீரங்கன்
03.09.2005
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
12 comments:
நல்ல கவிதை
ஸ்ரீரங்கன்,
கருத்துச்சுருக்கம் நல்லதாகவிருக்கிறது
வணக்கம் குழைக்காட்டான்,பெயரிலி!நிறைந்த கருத்திட்ட உங்களிருவருக்கும் என் நன்றி!
நன்று
என்னார்
வேதனை, வேதனை தருகிறது.
வணக்கம்,என்னார்,இரத்தினவேலு,தருமி.தங்களனைவரினதும் கருத்துகளுக்கு நன்றி.
அன்புடன்
ஸ்ரீரங்கன்
உங்கள் நீளநீளமான கட்டுரைகளைவிட கவிதைகள் தெளிவாக இருக்கின்றன.கட்டுரைகளில் வலிந்து சேர்க்கப்படும் கோசங்கள் போலன்றி உணர்விலிருந்து வரும் உண்மையாகவும் இருக்கின்றன.
நட்புடைய பொறுக்கி,வணக்கம்!தங்கள் கருத்துகளுக்கு என் நன்றி உரித்தாகட்டும்.
அன்பரே சிறி, எழுதுவதைப் புரிதந்து கொள்ளவில்லை.
சிறி, எழுதுவதைப் புரிந்து கொள்ள பொறுமையாகக் கற்கும் அணுகுமுறை தேவை அன்பரே.
சுதன்
நிச்சியமாக!அதைப் பொறுமையோடு செய்வதே பயனளிக்கும்.என்வரையில் இந்த அநுபவம் பயன்மிக்கதாகவே காணுகிறேன்.இவ்வண்ணம் காரயமாற்றும்போது சிந்தனைத்தளத்தில் பாரியவொரு மாறுதலும்,அதுசார்ந்த தேடுதலும்- ஒரு'வார்த்தைக்கு'ப் பல்முனைப் புரிதல் கைக்கூடும்.அங்ஙனமானவொரு நிலையில் மட்டுமே விமர்சனமானது முழுமைபெறும்.இதில் நாமெல்லோரும் தெளிவாகவே இருப்போமில்லையா?
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
kulatthuraan.
thankalin kavi varigal sattru virasamai irunthalum rasikkakuudiathai ullathu.
please thankal entha ooru.
vaazhviat sogam ingu varalaragirathu.
தங்கள் கருத்துக்கு நன்றி,குளத்தூரான்.
Post a Comment