Friday, July 15, 2005

ஜேஆன்-பவுல் சாற்ரார் (1905-1980)


சிந்தனையை சிறப்பாக்கிய சிற்பி!

ஜேஆன்-பவுல் சாற்ரார் (1905-1980)
சாற்ராரும் மானுடவிடுதலையும்-கனவுகளுக்கு விடைகொடுத்த இருப்பின் வலியுணர்ந்த உன்னதம்.

வரும் 21.ஜுலை 2005 சாற்ராருக்கு 100 வயது,இது நினைவாகி விட்டது.


ஒரு பிந்திய- மந்தமுடைய சமூகமாக மானுடம் இருப்பதும்,உற்பத்தியின் வீச்சில் உறுதிப்படுமெனவெண்ணும் வாழ்வாதாரங்களையும் நம்புவதற்கு மனத்தளவிற்கூட முடியாதிருக்கும் காலம் இன்றைய காலமாகும்.எந்தத் தளத்திலும் கால்வைத்திருக்க முடியாத தரணத்தில் மிதக்கும் மௌன மனவோட்டத்திற்கு மதிலொழுப்பிக் கொள்ள முனைவதில் ஆத்மீகம் தோற்றுப்போனது. அவதியோடு சாவை நோக்கும் கரித்துண்டமாக வாழ்வும்,உயிர்ப்பும் சிறுமைப்படும்.

'சுதந்திரம்-விடுதலை' இன்றைக்கு அதிகமாக உணரப்படும் வார்தைகள்,குறியீடாகிக் கருத்துணர்ந்து அநுபவிக்கும் மானுட தரிசனமாகும்.இவற்றை இதுவரை மானுடம் நேர்த்தியாகப் பெறமுடிந்ததா?அநுபவித்துக்கொள்ளும் வாய்ப்புத்தாம் கிடைத்ததா?

இன்னும் யோசிப்பதே விடையாகும்.

பொருளுண்டு,புவியுண்டு! எனினும் மானுடர் வாழ்வு வெற்றுப் புள்ளியில் வீரியம்பேசி வினையாற்ற வக்கின்றித் தன்னைத்தானே அடிமைத் தளைக்குள் உந்தி தள்ளியபடி.

இங்கு சாற்ராரும் இந்த நெருக்கடிக்கு உந்தப்பட்டுத் தன் வாழ்நாளெல்லாம் மனித விடுதலைக்காகச் சிந்திக்கிறார். தன் முன்னோர்களையும்,பின்னோர்களையும் கோடுகிழித்து சுதந்திரமென்றால் 'சுயதேர்வு'செயற்படுத்தல்,என்பதும்,எதையும் மறுதலிக்கையில் தேர்விடுதலே சுதந்திரமென்பதாயும் கூறிச் சென்றவர்.இருபதாம் நூற்றாண்டின் மகத்துவமற்ற முறைமைகளுக்காக மனிதம் பலியாகியதைக் காணும் அறிவுப்பரப்புக்குச் சொந்தக்காரர் சாற்ரார்.பிரான்சின் குடிமகனாகவும்,உலகக் குழந்தையாகவும் வரித்துக் கொண்ட அரசியல் மனிதனவர்.
"Being and Nothingness", "Huis Clos", "Les Mouches", "Les Mains Sales","La Nausee" "Critique of Dialectic Reason","Les Mots" என்ற பல நூற்களுடாய் மனிதரின் இருப்புக்கு விடைகாண முற்பட்டவர். தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவருக்கு இரண்டாவது உலகமகாயுத்தம் தேசிய உணர்வைத் தூண்டிவிட பிரான்சின் இராணுவத்தில் சேர்ந்திருந்தபோது ஏற்பட்ட மனச்சிதைவானது பின்னாளில் யூதஎதிர்ப்பு மனத்தளவிலிருந்ததாக இன்றைய சமூகவியலாளர் கூறுகின்றனர்.என்றபோதும் பொதுவுடைமைப் போராளியாகவே இவரை நான் பார்க்கிறேன்.இவர் இரண்டாவது உலகப் போரில் கிட்லரின் படுகொலைகளை:அவுஸ்விச்,செல்மோ,மாஜ்டானேக்,சோபிபோர் ஆகிய யூதஅழிப்புச்சாலைகளைப்பற்றி(இவ்விடங்களில் பல இலட்சம் மக்கள் நச்சுவாயுவுக்குப் பலியானார்கள்)மௌனம் சாதித்ததாகவும்,அதுபற்றி ஒருவார்த்தை எழுதவில்லையென்றும் இந்த நூற்றாண்டின் புதிய தலைமுறை குற்றஞ் சாட்டுகிறது.

சமூகத்தில் அறிவுஜீவியின் பாத்திரமானது இதயத்திற்குச் சமமானதென நாம் பலமாக நம்பலாம்.

1964 இல் நோபல் பரிசையே வேண்டமறுத்துப் போராடிய இந்த மகத்தான மனிதரை,இன்றைய மாணர்வர்கள் புரட்டிப்போடுவதும் கண்கூடாகவே நடக்கிறது. நமது தவறுகள் நாளை நம் மாணவர்களால் புதியபல விளக்கம் பெறுமெனச் சொல்லலாம்.சாற்ரார் பற்றிய நிறைய விமர்சனங்களை பற்பலர் முன் வைக்கின்றனர். தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் பேசும் நம் நண்பர்கள் இவர்மீதான தமது பார்வைகளை இதுவரை முன்வைக்கவில்லை.

ப.வி.ஸ்ரீரங்கன்
14.07.2005

5 comments:

Thangamani said...

நல்ல பதிவு. புதிய விவாதமொன்றிற்கான விதையைப்பொடுகிறீர்கள்! நல்லது.

Sri Rangan said...

உண்மைதாம் தங்கமணி!இப்படியிந்தப் பாதையாலவும் நடப்பமென்றால் நண்பர்கள் ஒருவரும் வரவில்லை.எல்லோரும் மௌன விரதத்திலிருக்கின்றனரோ என்னவோ!நன்றி தங்கமணி.

சன்னாசி said...

//தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் பேசும் நம் நண்பர்கள் இவர்மீதான தமது பார்வைகளை இதுவரை முன்வைக்கவில்லை.//
ஒரு புனைகதையாளராக காம்யு அடைந்த வெற்றியை சார்த்தரால் அடையமுடியாததும், கருத்தாக்கங்கள் தாண்டிப் பரவலாக அறிமுகப்படுத்த இயலாமற்போனதற்கு ஓரளவு காரணமென்று நினைக்கிறேன்.

பதிவுக்கு நன்றி.

இளங்கோ-டிசே said...

இந்தப் பதிவுக்கு நன்றி சிறிரங்கன்.

Sri Rangan said...

வணக்கம்,மாண்ட்ரீஸர்!டி.ஜே வணக்கம்.தங்களிருவரின் கருத்துகளுக்கு என் நன்றி!
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...