Sunday, September 17, 2023

திரிகோணமலை : ஆத்திரமூட்டும் அரசியல்

 திரிகோணமலை : கட்சிவாத அடையாள அரசியலும் , ஆத்திரமூட்டலும் (Provokation) ; அடிபாடுகளும் —சிறு, குறிப்பு ! 

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி பார்த்திபன் இராசையா செய்த சாகும்வரை உண்ணாவிரதம் அவரது மரணத்தில் முடிந்தது . அவரை , மரணிக்குவரை நடாத்தப்பட்ட அரசியற் சூதாட்டம் மிகவுந் தந்திரமானது ; ஆதிக்க சக்திகளது பலப்பரீட்சை ஆயுதத்தால் மட்டும் நிலை நாட்டப்படுவதில்லை . ஆதிக்கம் என்பது , எங்கும் , எப்போதும் பெரும் பகுதி மக்களது நம்பிக்கையினால் மட்டுமே நிலைப்பெறும் ; சாத்தியமாகும் . 

20’ஆம் நூற்றாண்டில் அகிம்சை மீதான இந்திய மக்களது நம்பிக்கையே காந்தியை மகாத்மா ஆக்கியது . அந்த நம்பிக்கையே ஆதிக்கமாகவும் எழுகிறது . 

1987’ஆம் ஆண்டு பார்த்திபனின் அகிம்சைமீதான நம்பிக்கை அவனை பட்டுணி கிடக்க வைத்தது . ஆனால் , ஈழமக்களிடம் ஆயுதத்தின் மீதான காதலே இருந்த காலத்துள் அகிம்சை என்பது பாரிய நம்பிக்கையாக நிலவவில்லை .இதனால் , அவன் தோல்வியொடு “தியாகி தி~லீ~பன்” என்றானான் ! 

சாகசம் நிறைந்த கொரில்லா தாக்குதற் குழுவொன்று , ஆயுதத்தை அணைத்தபடி பார்த்திபனை தி~லி~பனாக்கி அகிம்சை நாடகத்தை அரசியலாக்கியது . இந்த அமைப்போடு ஐக்கியமாகிய மக்களும் அகிம்சையை மிகவும் மலினப்படுத்தி இந்தியாவோடு சொறிந்தார்களேயொழிய அகிம்சை மீதான பற்றுதியோ , நம்பிக்கையோ கொண்டு இயங்கியவர்கள் அல்ல, ஈழத் தமிழர்கள். எல்லாம் , வெறும் நடிப்பு /நாடகம் !

எனவே , 1987’ஆம் ஆண்டு பார்த்திபனை ஈழ மக்கள் கொல்லும் நிலைக்குச் சென்று  , அகிம்சையை மலினப்படுத்தினார்கள் . 

இந்தக் கேலித்தனமான அடையாள அரசியலை  இன்று , மீளவும்.  ஞாபகப்படுத்தி திருகோணமலையில் பார்த்திபனின் படத்தை வைத்து ஊர்த்திகள் அணிவகுப்புச் செய்து , சிங்கள மக்களின் உணர்வுகளைத்தூண்டி , மக்களை சமூகத்தளத்திலும் , தன்னிலையிலும் ஆவேசப்படுத்தியபடி; ஆத்திரமூட்டுதல் சார்ந்து இயங்கிய கஜேந்திரகுமார் யாருடைய முகவர்(Agent provocateur)? இனப்பகையைத் தொடர்ந்து ஊதிப்பெருக்கி சமுதாயத்தை அச்சப்படுத்தி , நடுங்க (Angst und Panik) , ஒடுங்க வைத்து அரசியல் இலாபம் அடைதல் சமூகவிரோதமாகும் . 

இத்தகைய அடையாள அரசியலைத் திட்டமிட்டு நகர்த்தி ,தொடர்ந்து ஆத்திரமூட்டல்களின்வழி ( Provokation) சிங்களமக்களிடமிருந்துமிருந்து தமிழினத்தை தூர விலக்கிக் கொள்ளவும் அல்லது, இனப்பதட்டச் சூழ்நிலைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுத்தும் இந்த அபாயகரமான அரசியலின் பின்னே உள்ள சக்திகள் யார் -யார் ? 

தமிழ் விதேசியக் கட்சிவாத அரசியலின் தொடர்ச்சி , இங்ஙனம் ஆதிக்கத்துக்காக , அதிகாரத்துக்காக முன்னெடுக்கும் இந்த அபாயகரமான அரசியற் சதி , தமிழ்பேசும் மக்களின் நலத்தின்பாற்பட்டதல்ல.அதிகாரம்-ஆதிக்கம் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு "தனிமனிதரை குழுவை-தேசத்தை"யென பணிவுக்குட்படுத்திச் செல்வதில் அதன் கொள்கையளவிலான பண்புகள்"அதிகாரத்தைச் செலுத்துபவரும்,அதிகாரத்துக்குட்படுபவரும் இருவேறு தளத்திலான நம்பிக்கைக்குட்படுகின்றனர்.

வர்க்கச் சமுதாயத்துள் ஒருவர் உடமை வர்க்கத்தவராகவும் மற்றவர், உழைப்பாளராகவும் தேர்ந்து போயினர். இதுள்,ஒருவர் ஆதிக்கத்தைச் சட்ட பூர்வமாக்கவும்,நிறுவனப்படுத்தவும் , அதிகாரத்தை நம்ப வைக்கவும்,அது அதிகாரத்துக்குட்படுபவரின் விமோசனத்துக்கானதெனச் சொல்லியே ஆதிக்கத்தை வியாபிக்க முனைகிறார்.இதுவே , இன்று , மீளவும் , இராசையா பார்த்திபனின் ( இ.தி~லீபன்) படத்தை வைத்து ஊர்வலஞ் சென்று ஆதிக்கத்தைப் பெற மக்களிடம் வருகிறது . மக்கள் இதை நம்ப வேண்டுமென வியூகம் அமைத்து இந்தக் கயமைவாதக் கட்சிகள் இயங்குகின்றன . 

ஆதிக்கமானது இத்தகைய தருணத்தில் நம்பகாமாக ஏற்கப்படும்போது மட்டுமே சட்டரீதியான வெளித் தோற்றத்தைச் சமூகத்துள் நிறுவனப்படுத்துகிறது. இதற்காக , கலகங்களும் ; சண்டைகளும் உருவாக்க முனைதல் கூட சட்டரீதியான அங்கீகாரத்தை இலக்கு வைத்தே நகருகிறது .

இங்கு , நாம் புரிய மறுப்பது ; நம் கட்சிகள் புரிய மறுப்பது , அதிகாரமும்-ஆதிக்கமும் வெவ்வேறாகிறது என்பதையே . 

மக்ஸ் வேப்பரது[ Maxs Weber ]நீண்டவுரையாடலைச் [ Wirtschaft und Gesellschaft-Tübingen 1972 ]செழுமைப்படுத்திய  கைன்றிக் போபிற்சு[ Heinrich Popitz] இதைத் தெளிவாகவே நமக்கு[ Das Konzept Macht] உரைத்திருக்கிறார்.உயர் குடிகளுக்கான வாய்ப்பு மிக இலகுவாகவுள்ளதை அவர் புட்டுவைத்தார்.

முள்ளிவாய்க்கால்வரை தமிழ்த் தேசியமானது தனது சக்திகுட்பட்ட அதிகாரத்தைச் செலுத்துவதற்கான நம்பிக்கைகளை மிக இலாவகமக தமிழ்பேசும் மக்களுக்குள் உருவாக்கியது.அஃது, தொடர்ந்து இன்னொரு மக்கட்டொகுதியை ஆத்திரப்படுத்தலுக்கான வழிமுறைகளைக்கொண்டே[Differentiation of Society-Luhmann,M. In Canadian Journal of Sociology 2.] ஒரு இனத்தின்மீதான இன்னொரு இனத்தின் அத்துமீறிய ஆதிக்கத்தை நிலைப்படுத்த விரும்பியது.

இதன்சாரத்துள் மறைக்கப்பட்ட நலனானது தமிழ் மேட்டுக்குடியின் நலன்களைச்சார்ந்தே இயங்கிக்கொண்டது.இதன் உச்சபட்சம் மரபார்ந்த அனைத்து அறங்களையும் நாசமாக்கியது.

இனங்களுக்கிடையிலான மூலதனவிருத்தி,போட்டிகளை மலினப்படுத்தியபோது அவை முரண்பாடுகளாகவும்-இனம், மொழி,மதம்,பண்பாட்டுக்கெதிரான தாக்குதற் கருவூலமாகப் புரிய வைக்கப்பட்ட நம்பிக்கைகளே [Symbolic Power.Critique of Anthropology-Bourdiee,Pierre.1979 ]இறுதியில் சட்டபூர்வமான ஆதிக்கத்துக்கான அரசின் உறுப்பாக மாற்றப்படுகிறது.

சில கட்சிகள் , ஆளும் வர்க்க மனிதர்களின் நலன்களது தெரிவு எங்ஙனம் ஒரு இனத்தையே மொட்டையடிக்கும் விதேசிய வாதமாக மாறுகிறதென்பதைக் கடந்த முள்ளிவாய்க்கால்வரையான சாவுவாதப் போராட்டம்  குறித்துரைக்கிறது.

இது,அதிகாரம்-ஆதிக்கம் குறித்த கைன்றிக் போபிற்சினது(Heinrich Popitz]"சட்டபூர்வமான-தன்மையிலான அங்கீகாரமின்றி ஆதிக்கம் இல்லை"[Ohne Legitimität keine Herrschaft] என்பதோடு நெருக்கமானது .

இந் நிலையில் இலங்கையின் சமூக-அரசியலை மக்கள்-மண்-இயற்கை-சூழலென அனைத்தையும் பிணைத்து உள்வாங்கியவொரு உரையாடலாக நகர்த்தும்போது மட்டுமேதாம் இலங்கை மக்கள் அனைவருக்குமானவொரு இலங்கையை நாம் யோசிக்க முடியும் . அதுவரை , இனங்களை ஆத்திரமூட்டி , ஒருவரையொருவர் வேட்டையாட வைக்கும் அரசியல் தொடர் கதையாகும் ! 

உலகம் பூராக நாம் , உழைப்பின் உறவால் ஒன்றுபட்ட மனிதர்கள்.

நமக்கு"இனம்-மதம்-மொழிவழித் தேசம் "என்பவைகள் இரண்டாம் பட்சமானவை. 

இவைக்கும்,உழைப்பவர்களது,ஒடுக்கப்படுபவர்களது,தாழ்த்தப்படுபவர்களது,இந்த அமைப்பால் விளிம்புக்குத் தள்ளப்பட்ட வலுவற்றவர்களது "சுகவாழ்வுக்கும்-விடுதலைக்கும்" எந்தத் தொடர்புமில்லை!

தமிழ்பேசியவர்கள், தமிழர்களை ஒடுக்கவில்லையா?

தாழ்த்தவில்லையா?

கொன்று இரயர் போட்டெரிக்கவில்லையா?

துரோகி சொல்லிப் பொட்டு வைக்கவில்லையா?

இவைக்காகத்"தமிழீழம்"என்ற ஒரு புனைவை முன்தள்ளித்தாமே நியாயம் கூறினர்?

அந்தத் "தமிழீழம்" இன்றெவரது கைக்குச் செல்வத்தைக் குவித்து வழங்கியிருக்கிறது-எந்தெந்தக் குடும்பங்களது தலைமையில் அதிகாரத்துக்கான திசையமைவுகளை இன்றுவரை பார்த்திபன் படத்தைக் காவிக்கொண்டியக்கி வருகிறது? 

எவரெவரோடு கூட்டுவைத்து இலங்கையிலும்,மேலைத் தேசங்களிலும் இயங்கிக்கொள்கிறது?

இத்தகைய ஏமாற்றை-வரலாறு விட்டுச் சென்ற பக்கங்களை நாம் இயல்பான அறிவாய்வுப்பண்பாடு தமிழ்த் தேசிய மாயையை விலத்திச்சொல்லும்போது உண்மைகளை நாம் தரிசிக்கவிடாத தேசிய வாதத்தைக் குறித்து மீள் மதிப்பீட்டுக்கு வரமுடியும்.

இதுள்,"இனம்-மொழி-மதம்-தேசம்"கடந்து வர்க்க ஒன்றிப்பில் நிகழும் இயக்கப்பாட்டை நோக்குங்கள் இளையோரே!

எனவே , நமக்கான உண்மையைக் கண்டடையக் கல்-முள் கொட்டப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுவுண்மைசார்ந்த ஆய்வுப் பாதைக்குள் நடந்தே தீரவேண்டும்.


நமக்கு இதைவிட வேறு குறுக்குப் பாதையில்லை!


—ப.வி. ஶ்ரீரங்கன்           17.09.2023

Thursday, August 24, 2023

பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது !

 சந்திரயான்-3 ‘ம் நம் மக்களும் : பலி ஆடுகள் ! , “பல்வேறுபுரிதலைக் கோரி”—சிறு சுட்டிக் காட்டல்கள் ! 


.விஶ்ரீரங்கன் 


பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி . 


உருசிய நிலவாய்வுச் செய்மதி இலூனா-25(Luna-25)விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகுஇந்தியநிலவு தரையிறங்கும் பணி தீர்க்கமான கட்டத்தில் நுழைந்து , நேற்றுப் புதன் கிழமை 23.08.23  அன்றுபாதுகாப்பாக நிலவுத் தரையில் சந்திரயான்- 3 (Chandrayaan-3 ) இறக்கி விடப்பட்டுள்ளது . இதன் , உயிர்வாழும் காலம் இரு கிழமைகளே ! 


இந்தியாவின் விண்வெளி நிறுவனம் நிலவின் தென் துருவத்தில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முயற்சி செய்துவெற்றியீட்டியுள்ளது !  இதன்மூலம் , இந்தியாவானது ஒரு விண்வெளி பயண நாடாகத் தன்னைமாற்றியமைத்து விட்டதென்பது உண்மை .


சந்திரயான்-3 நிலாவுக்கு தரை இறங்குவதற்குமுன் உருசிய இலூனா-25 நிலாவில் தரையிறங்கப்பட்டஅவசரமும் பின்பு அதன் தகர்வும் நிச்சியக்கப்பட்ட பின்பே இந்த நிகழ்வுகள் இடம் பெறுகின்றன . 


இதன் , உள்ளர்த்தம் நமக்குப் பல சந்தேகங்களை விட்டு வைத்துள்ளது . இங்கு நிகழும் விஞ்ஞானவிளையாட்டுக்கு என்னபெயர் ? உலக முதற்றர வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவுக்கான போட்டிக்குஇந்தியாவைத் தயார்ப்படுத்திக் களத்துக்கு அனுப்பும் CIA‘ யின் வான விளையாட்டா இது ? கடந்த காலத்துள்  சீனாவையும் , இந்தியாவையும் அடிபட வைத்தவர்கள் அமெரிக்கப் புலனாய்வுத்துறை என்பதை நாம்ஆதாரபூர்வமாக (Covert operation —National Security Act ) நிரூபிக்க முடியும் . அவ்வண்ணம் , இந்தியஅனைத்து தேசிய-மாநிலக் கட்சிகளையும் , திராவிடக் கட்சிகளை ; இயக்கங்களையும் CIA தன்கட்டுப்பாட்டுக்குள் 1965’ ஆம் ஆண்டே கொணர்ந்தது . அதன் பின் இந்தியாவுக்கான புலானாய்வு துறையை(Research and Analysis Wing) 1968’ஆம் ஆண்டு அமெரிக்கப் புலனாய்வுத்துறையே நிர்மாணிக்கஆலோசனை வழங்கியது . 


அன்றைய இந்திய-சீன யுத்தம் 1962’இல்( Sino-Indian War ) ஆரம்பிக்கத் தூபமிட்டவர்கள் அமெரிக்கர்கள் . அப்போது , இருகசியமாகச் சீனாவைக்குள் போதைப் பொருள் நுழைத்து யுத்தஞ் (Air America: größte Fluggesellschaft Südostasiens während des Vietnamkriegs, von der CIA kontrolliert und seit 1962 intensiv für Geheimoperationen und zum Schmuggel von Heroin eingesetzt)  செய்தது . இக்காலக்கட்டத்துள் 1959 ‘ ஆண்டிலேயே திபேத் வசந்தம்(1959 Tibetan uprising) மூலம்அமெரிக்காவோடிணைந்து இந்தியா மூக்கை நுழைத்தது . CIA முற்று முழுதாக இந்தியாவைச் சீனாவுக்குஎதிராக வளர்த்தெடுத்தது . அதேபோல் திபத்தைச் சீனாவுக்கு எதிராகத் தகவமைத்துப் பயிற்சி வழங்கிது (The CIA trained Tibetans from 1957 to 1972, in the United States, and parachuted them back into Tibet to organise rebellions against the PLA. ) . இது வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்ல . இன்றைய இந்திய வானவியற்திட்டத்தின் பின்னால் அமெரிக்கா உண்டு . எங்ஙனம் நாசா SpaceX என்று மாற்று வடிவத்துள் நுழைகிறதோ , அதே வியூகத்தோடு அஃது , இந்திய ISRO வடிவமாகவும் மாற்றுமுறுகிறது இந்திய முகத்தோடுஇதுசீனாவைஎதிர்கொள்ளும் அமெரிக்க யுக்தி !


சந்திரயான்-3 திட்டம்தெற்கு மாநிலமான ஆந்திராவில் உள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளித் தளத்தில்இருந்து ஜூலை 14 அன்று ஏவப்பட்டது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) சந்திரயான்-3 பணி பற்றிய மிக முக்கியமான உண்மைகளைஇங்கே , மேல உங்களுக்குச் சொன்னேன் . இது , முற்றிலும் அமெரிக்க வல்லாதிகத்தின் அடுத்தகட்டசீனாமீதான யுத்தத்தின் முன் தயாரிப்பு என்பதே உண்மையாகும் . 


சந்திரயான்-3ன் இலக்கு என்ன?


சந்திரயான்-3 பணியின் குறிக்கோள் நிலவின் தென் துருவமாகும்இது உறைந்த நீரின் ஒரு பகுதிஇதுஇறுதியில் நிரந்தர சந்திர காலனிக்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கலாம்.


வெற்றிகரமாகத்  தரையிறங்கிய இந்த விண்கலம் -செய்மதி சந்திரயான்-3 , இரண்டு வாரங்களுக்குசெயல்பாட்டில் இருக்கும் அத்தோடு நிலாவினது மேற்பரப்பின் கனிம கலவையின் ஸ்பெக்ட்ரோமீட்டர்பகுப்பாய்வு உட்பட தொடர்ச்சியான சோதனைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக நியூயோக்கர்ரைம்ஸ் பல்லிளிக்கிறது . 


நாசா நிர்வாகி பில் நெல்சனின் கூற்றுப்படிஅமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்தியப் பணி என்ன கொண்டுவரும் என்பதைப் பார்க்க "உற்சாகமாகஉள்ளதாம்எனக்குச் சிரிப்பு வருகிறது நண்பர்களே . செய்பவனும் , செய்து முடிப்பவனும் கிருஷ்ணாவான நாசாதாம் ; அமெரிக்காதாம் ! பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில்தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி . 


இங்கே , உருசிய இலூனா-25 ‘இன் அவசரமாகப் பயணித்துச் சென்றதன் மர்மம் துலக்கப்பட்டதா ? அல்லதுதுலங்குகிறதா? ; துலங்க வேண்டும் ! பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் கூட்டுத் தொடர் நிகழ்வில் இந்தச்சந்திரயான்-3 ‘ இன் வெற்றி பேசப்பட வேண்டுமென்பது திட்டமிடப்பட்ட வித்தை . அபெரிக்காவானது பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பை இந்தியவெனும் ஆப்பை உருவாக்கிப் பிளப்பதன் அரசியல் இது . 


அரசியல் ரீதியாகவும்பொருளாதார ரீதியாகவும் நிறைய ஆபத்து உள்ள இந்தத் அமெரிக்க-இந்தியக் கூட்டுச்சதி , வளர்ந்துவரும் சீனாவை இந்தியாவுடன் மீளக் கொழுவ வைத்து இந்தியாவின் மூலம் சீனாவைப்பலவீனப்படுத்தி சீனாவை அமெரிக்கா அடித்து வீழ்த்தும் தந்திரத்துக்குட்பட்ட வியூகமாகும் .


வெற்றிகரமாக்க் காட்டப்பட்ட சந்திரயான்-3’இன் இயக்கத்தின் மூலம்அப்போதைய  சோவியத் ஒன்றியம்உட்பட , அமெரிக்கா மற்றும் , சீனாவுக்குப் பிறகுசந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாகஇந்தியா மாற்றப்பட்டுள்ளது , அமெரிக்காவால் . இதற்கான சஞ்சோற்றுக் கடன் , சீனாமீது சகலவழிப் பின்கதவு-பனியுத்தம் ஒன்றை இந்தியாவின் மூலம் செய்தலாகும் . 


மேலும் , அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தன்னை விண்வெளி சக்தியாக நிலைநிறுத்தியபடிபாரதிய ஜனதா அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலைத்து ஆட்சியில் அமரவும் இத் திட்டத்தின் வழி காய்நகர்த்தப்பட்டுள்ளது ! 


கூடவே , அமெரிக்க சார் தனியார் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் , செயற்கைக்கோள் சார்ந்தநிறுவனங்களில் முதலீடுகளை ஆதரிக்க பிரதமர் நரேந்திர மோடியையும் கட்டாயப்படுத்துகிறது அமெரிக்கா ! 


இந்தத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த தசாப்தத்திற்குள் அமெரிக்க-இந்தியத் தனியார் விண்வெளி நிறுவனங்கள்உலக சந்தையில் தங்கள் பங்கை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று  அமெரிக்கா தொடர்ந்து சதிசெய்து இந்தியாவைக் கட்டிப் போடுகிறது .


இஸ்ரோ—ISRO  "இந்தியாவின் விண்வெளி ஆராட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைஎழுதி வருவதாகவும், "ஒவ்வொரு இந்தியரின் கனவுகள்இலட்சியங்களைஊக்குவித்து வருவதாகவும் நிலாப்  பயணத்தின் துவக்கநிகழ்வில் மோடிஜீ கூறியதை இங்குஞாபகப்படுத்துபடி உங்களைக் கோரி அமர்கிறேன் தோழர்களே ! ; புரிந்தவன் பிஷ்தா !!


விஶ்ரீரங்கன்          24.08.23 

Saturday, August 12, 2023

கனடா தாயகம் இதழின் அபத்தம் , சிறுபிள்ளை வேளாண்மை : கற்சுறா கடவுளும் அல்ல , கருப்பு ஜூலை கண்ணீருமல்லக் கண்டியளோ ?

 “கற்சுறா கடவுளுமில்லை, கருப்பு ஜூலை கண்ணீரும் அல்ல”  : எந்தக் கடவுளாரும் வர்க்கத்துக்கு அப்~பார்-அல்ல ! 

இலங்கையில் சிங்கள பெளத்த செளனிச அரசபாசிச இன ஒடுக்குமுறையையும் / ஈழப் போராட்ட இயக்கவாத அராஜகம் குறித்தும் கடந்த 40 ஆண்டுகளாகப் பேசி வருகிறோம் . இந்த”தமிழீழம்” எனுங் கருத்தியற் புனைவுக்கும் , அதன் அரசியற் செல் நெறிக்கும் இணைவாக ஒத்துழைத்த அந்நிய தேசங்களது நலன்சார் ஊக்கத்துக்குப் பலியான தமிழ்-இஸ்லாம் , சிங்கள மக்கள் அண்ணளவாக நான்கு இலட்சம் என்பது , மறைக்கப்பட்ட உண்மை !


உட்கட்சிப் படுகொலைகள் ; சகோதர இயக்கப்படுகொலைகள் , >துரோகி—காக்கை வன்னியன்-எட்டப்பன்< புனைவுக் கருத்தியலுக்குப் பலி கொள்ளப்பட்ட தமிழர்கள் ஏராளம்-ஏராளம் . இவைகள் , குறித்து மெளனித்தபடி >கருப்பு ஜூலை—Black July < நினைவு கூர்தலின் அரசியலைப் பேசுதல் என்பது அபத்தம் !


கற்சுறா , அபத்தம் இதழில் உரையாடும் அரசியல் “தமிழீழ அபிமானிகள்” தம் குருதி நாளங்களைப் புடைக்க வைக்கும் ; சிங்கள் அரச வன்முறையை 1977/ 1983 நேரடியாக அநுபவித்தவர்களை (Der gefährliche Aufstieg des buddhistischen Chauvinismus) ; எதிர் கொண்டவர்களைக் கூடக் கலகமடைய வைத்துக் கூச்சப்பட வைக்கும் ! 


1986’ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதம் ரெலோ இயக்கத்தின்( Tamil Eelam Liberation Organisation ) மீதான புலிப் பாய்ச்சல்  அதிக அராஜமுடைய சகோதர இயக்கப் படுகொலையாகும் . இந்த நடவடிக்கையுள் இராணுவமாகப் பயிற்றப்பட்ட 600  ரெலோப் போராளி இளைஞர்கள் வரை 1986’ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள் என்று , அரச/உலக ஆவணங்கள் உரைக்கின்றன !  


83-ஜூலை , சிங்கள அரசால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் ; கொதிக்கும் சூடான தார்ப்பீப்பாக்களுக்குள் மூழ்க வைத்துத் தமிழர்களை இலங்கை அரசு கொன்றது . கூடவே , வெலிக்கடைச் சிறையில் அரசியற் கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்களில் 53 தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பின் அதி—உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில்  வைத்துச் சக சிங்களக் கைதிகளைக் கொண்டு சிங்கள அரசு  குத்தியும் , வெட்டியும் , கண்களைத் தோண்டியும் தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்தது.


1986’ஆம் ஆண்டு புலிகள் , ரெலோமீதான சகோதர இயக்கப்படு கொலை இன்னும் திகில் நிறைந்தது . 


நரவேட்டை செய்த புலிகள் , படுகொலை செய்யப்பட்ட ரெலோப் போராளிகளின் உடல்களை மக்களைக் கொண்டே இரயர் போட்டு எரித்தார்கள் . மக்களும் தம் குழந்தைகளை இரயர் போட்டு எரித்துக் களைத்துப்போன கையோடு கொக்கோ கோலா குடித்தும் , வழங்கியும் மகிழ்ந்தது வரலாறு .இது, கூறும் அரசியல் வெறும் தமிழ்த்  தேசிய -தேச நலன் ; வேளாள ஆதிக்கத் தமிழ்ச் சுயம் அல்ல ! 


இந்த நிகழ்வூக்கத்தின் பின்னான உளவியல் ஊக்கம் என்ன ?


இதன் வரலாற்று நியாயம்/அநியாயம் என்ன புரிதலை நமக்குத் தருகிறது ?


“சிங்களம் -தமிழ் “ இரு மொழிகளுக்குள்ளும் 

சகோதரப்படு கொலைகள் நிகழ்கிறது ; நிகழ்ந்தது .


1971’ஆம் ஆண்டு JVP‘ யின் மீதான இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுத் தாக்குதலால் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள் உத்தியோக பூர்வமாக 5.000 என்பதை உத்தியோகப் பற்றற்று 50.000 என்று கூற முடியும் —சிங்கள அழகி புஸ்பவதி மனம்பாரியை உரிந்து , “கற்பழித்து” தெருத்தெருவாக அம்மணமாக இழுத்துச் சென்று , சிங்கள இராணுவம் தெருவில் வைத்து எரித்துச் சாம்பலாக்கியது . இதே, இலங்கை அரசின் சிங்கள இராணுவம் தமிழ் மகள் கோணேஸ்வரியைக் “கற்பழித்து” அவள் யோனிக்குள் குண்டு புதைத்து வெடிக்கவைத்தது அவள் யோனியையும் ; உடலையும்  , சிங்கள அரசு . 


1987-1989 வரையான இலங்கை அரசியலுள் பிரேமாதாசவின் தலைமையில் மீள JVP(மக்கள் விடுதலை முன்னணி) மீதான சிங்கள அரசின் வன்முன்றை ஜந்திரத்தின் பாய்ச்சல் , இரு ஆண்டுக்குள் 80.000 சிங்கள இளைஞர்களைக் கொன்று தள்ளிக் களனி கங்கையில் மிதக்க விட்டது ;  பேராதனைப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களைக் கூட்டாகச் சுட்டு JVP அபிமான மாணவர்களெனக் களை எடுத்தது சிங்கள அரசு . இதே அரசு வன்மத்தோடு மக்கள் விடுதலை முன்னணியின் சிங்களத் தலைவரை (சிங்கள ரோகண விஜயவீர) காலுக்குக் கீழே சுட்டு ,அம்மணமாக்கி அடித்துச் சித்திரவதை செய்து (A rumour circulated that he was taken to a cemetery, shot in the leg and then summarily executed by being burnt alive in the crematorium .) உயிரோடு எரித்துச் சாம்பலாக்கியது , இந்தப் பாசிச சிங்கள அரசின் சிங்கள இராணுவம் . 


இதேபோன்று “அதுராதபுரத்தில் சிங்களத்தின் உச்சி பிளந்து (Operation Ellaalan : The attack happened on 22 October 2007) எல்லாளனைக் காட்டிய பிர~பா~வேலு~கரனுக்கு முள்ளிவாய்க்காலில் உச்சி பிளந்து , கோவணங்கட்டி ; அவன் துணைவி -மகள் முன் கோவணத்தைக் கழற்றிய துட்டக்வைமுனுவைச் சிங்கள அரசு காட்டியது , சிங்கள ஆண்மையை !  


இப்போது , புலி வன்முறை ஜந்திரம் -சிங்கள அரச வன்முறை ஜந்திரங்கள் இரண்டும் ஒரு நிகழ்வுகளைச் செய்துள்ளன . இரண்டுமே , தத்தம் இனங்களின் புதல்வர்களை ஆயிரக்கணக்கில் அழித்துள்ளன. இரண்டும் பிற இனங்களை தாக்கியும் அழித்தன; துரத்தின-நாடு கடத்தின , குடியுரிமை பறித்தன (ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க) !


இப்போது சொல்லுங்க என்னங்கடா உங்கள் பிரச்சனை ?


சாதியா , 

மதமா, 

இனமா, 

பிரதேசமா —

“வர்க்கமா ?” 


இங்கு , யார் -யாருக்காக வெட்கப்பட வேண்டும் ? 


கருப்பு ஜூலை நினவு ஏந்தலுடைய வர்க்க அரசியல் என்ன ? 


சாதியை, மதத்தை, இனத்தை, பிரதேசத்தை, பால் வேறுபாட்டைச் சொல்லி சும்மா கடந்து போக முடியாது !


சிங்கள -தமிழ் ஆளும் வர்க்கத்துக்குச் சாதி/மதம்/பிரதேசம் -இனம் ; மொழி உண்டா ? 


ஒடுக்குமுறை வர்க்கத்தை “யாழ் மேலாதிக்கம் , சைவ வேளாளிய ஆதிக்கம் தமிழ்த்தேசிய ஆதிக்கம் “  என்று பார்த்தல் சிங்கள ஆளும் வர்கத்தின் ஆதிக்கத்தையும் , அதன் வன்முறைசார் செல்நெறியையும் , இலங்கை உழைக்கும் வர்க்கத்தின்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் வர்க்க ஒடுக்குமுறையையும் ஊக்கப்படுத்திக் காத்தல் இல்லையா ? 


சிறார் இராணுவம்  ; குழந்தைப் போராளி என்பதை புலிகள் அமைப்பின் குறியீடாக முறித்த பனை மரத்தில் தொங்கவிட்ட இந்தச் சுட்டிகள் ; சொற்பான்கள் கற்சுறா ஆக்கத்திலும் சொல்லும் அரசியல் என்ன ? 


ஐரோப்பிய -அமெரிக்க , ஆசிய , ஆபிரிக்கக் கண்டங்களதும் போராட்ட வரலாறும் ; காலனித்துவ கொடுங் கோன்மையும் சொல்லாத சிறார் இராணுவச் செய்திகளையா தமிழ்ச்சிறார் இராணுவத்தின் குறியீடுகள் பேசுகின்றன ?


கத்தோலிக்கத் திருச்சபைகள் கொல்லாத பழங்குடிச் சிறார்களின் வாழ்வு நாசத்தை விடவா புலிச் சிறார் இராணுவ வாதம் அபாயகரமானது ? இன்றும் , கனடாவிற் பழங்குடிச் சிறார் புதை குழிகள் தோண்டப்பட்டு (Canadian Indian residential school ) வெளியிற் கசியும் இனச் சுத்திகரிப்பைக் கனேடிய அரசு மறைப்புக்கட்ட முனைகிறதே ?


தினமும் கத்தோலிக்கத் திருச்சபைகளும் , தேவாலயங்களுள் , வற்றிக்கானுள் எத்தனை ஆயிரம் சிறார்கள் பாலியல் அடிமைகளாகப் கத்தோலிக்கப் பாதிரிகள் , ஆயர்மார்களால் சிறார் துஷ்ப்பிரயோகம் பல் நூறு ஆண்டுகளாக நிகழும் கொடுமை புரிந்ததா உனக்கு ? . 


இலங்கை-தாய்லாந்துக் கடற்கரைகளுள் எத்தனை இலட்சம் குழந்தைகளை அந்நியச் சுற்றுலாப் பயணிகள் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார்கள் . இவையெல்லாம் கூறும் குழந்தைப்போராளிகள் அரசியல் என்ன ? 


இன்று , உக்கிரைனில் சாகும் ஆயிரக்கணக்கான குழந்தைப்போராளிகள் முதல் அங்கோலாவில் ஏலவே செத்த இலட்சக்கணக்கான சிறார் இராணுவக் குழந்தைகளும் வரை இன்னும் ஞாபகத்துள் வந்தபடி . ஒவ்வொரு மூன்றாவது அங்கோலாக் குழந்தைகளும் அங்கவீனர்களாக்கப்பட்ட அந்நிய யுத்தத்தின் பெயரென்ன ? 


இன்று , உலகத்துள் 164 நாடுகளிற் தடை செய்யப்பட் கொத்துக் குண்டு ( Cluster munition : CBU-87 Combined Effects Munition ; CBU-97 Sensor Fuzed Weapon) பாவிக்க முடியாதென்று உலகமே சொல்லும்போது அதை உக்கிரைனுக்கு அனுப்பிவைத்து, இருஷ்சியக் குழந்தைகளைக் காலம் பூராகவும் வேட்டையாடும் அமெரிக்கனின் அறத்துக்கும் தமிழர்களின் -புலிகளின் குழுந்தைப் போராளிகள் அசியலுக்கும் வித்தியாசம் உண்டா ? 


ஈராக்கின்மீதான அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியப் பொருளாதாரத் தடையால் Antibiotic இன்றி  ஈராக்கியச் சிறார்கள் மரித்தார்களே  ; ஐந்து இலட்சம் குழந்தைகள் !! அதையும் , அமெரிக்க அரசு விலைமதிக்க முடியாத பெறுமதி மிக்க தம் அரசியல் வியூகம் என்றதே ! 


ஈராக் பாலுட்ஜா நகரத்தின்(Falludscha) மீதான நேட்டோ இராணுவப்படைகளின் தாழ் அணுக் குண்டுத்தாக்குதலால் (Depleted uranium : The DU penetrator of a 30 mm round) இன்றும் பாலகர்கள் குறைப் பிரவசமாக (Fallujah on cancer, birth defects !!!) இந்தப் பூமிக்கு வருகிறார்களே ?  


அமெரிக்க வானேவித் தாக்குதலைத் துரிதப்படுத்தினான் முன்னாள் அதிபர் ஓபமா . இந்த U.S. Drone Strikes —வானேவித் தாக்குதல்களால் உருக்குலைந்து  செத்த மழலைகள் -சிறார்கள் உலகம் பூராகவும் 4.000 என்பது சர்வதேச மன்னிப்பு சபையின்—Amnesty International அறிக்கையின் தொகுப்பினது சாட்சி . 


ஆக, இப்படி நிறைய எழுதிச் செல்லலாம் . 


இங்கு , சிங்கள இனவாத , பெளத்த பேரினவாத செளனிசத்துக்கு முன் தடுப்பு யுத்தத்தைச் செய்த புலிகள் தம் இருப்புக்காக மக்களை , சிறார்களைப் பலி கொடுத்தது தமிழ் ஆளும் வர்க்க பங்குச் சண்டைக்கே . என்றபோதும் , சிங்கள அரச பாசிசத்தினது தமிழர்கள்மீதான இன ஒடுக்குமுறை இதன் மூலமும் அல்லது, எதன் மூலமும் (சாதி-மத-பிரதேச/தீண்டாமை) நியாயப்பட முடியாது . 


அப்படி , இந்த அரசியலை நியாப்படுத்துபவ(ள்)ன் கெட்ட கிரிமினல் மட்டுமல்ல , மக்கள் விரோதி —ஒடுக்குமுறை அரச பயங்கரவாதத்தின் லொபி —அவ்வளவுதாம் !


—ப.வி.ஶ்ரீரங்கன்      12.08.2023

Monday, February 06, 2023

இலங்கைப் பாதாளவுலகப் பொருளாதாரம் -சிறு , குறிப்பு

 வடமாகணம் : இதயமே அற்ற ; நீதியற்ற இலங்கை இராணுவ -அரசியல்வாதிகளின் கூட்டுக் கிளான் (Der Sri Lanka-Clan) , இலங்கைப் பாதாளவுலகப் பொருளாதாரம் -சிறு , குறிப்பு 


இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவேஇராணுவக் குட்டிமுதலாளிய வர்க்கத்தின் பாதாளவுலக மாப்பியாப் பொருளாதார முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கைமேலும்  வடமாகணத்தில் நிலைப்படுத்த வேண்டிய தருணத்தைச் செல்வ-மற்றும் இயற்கைக் கடல் வள , விவாசாய நில வளச் சுரண்டலிலிருந்து தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.


  • கடல் அட்டை , இறால் பண்ணை ; நண்டுப்பண்ணை —கடல் வள அபகரிப்பு 
  • தமிழரின் விவசாய நில அபகரிப்பு ,
  • இராணுவப் படைகளின் விவசாயச் செய்கை
  • கேரளக் கஞ்சா -அபின் மற்றும் போதை ஊக்கப் பொருட்கடத்தல் 
  • இராணுவ / கட்சி / அரச ஆதிக்கம்
  • ஜனநாயகக் குறுக்கல்


இன்றைய மேற்காட்டிய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவேஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் , பெரும்பான்மைச் சமுதாயத்தின் முன்னாள்ஜனாதிபதி -பிரதமர் மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில்  மோதி , மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்க முனைகிறது .


2009’ஆம் ஆண்டு , முள்ளிவாய்க்காலுக்குப் பின்பாகவும் நிலவும் இராணுவவாத ஆட்சி முறைகள் [ Martial law ] தொடர்ந்து சிறுபான்மை இனங்களைப் பிளந்து நகர்த்தும் அரசியலுள் ,இலங்கை அரசின் ஆதிக்கத்தைஇனவாத வியூகத்தோடுத் தமிழ் - முசீலீம் ; மலையக மக்களது ஐதீக நிலப்பரப்பில் தொடர்ந்து நிறுவுகிறதுஇலங்கைப் பாதாளவுலகப் பொருளாதார நலன்கள் . 


சிங்கள இராணுவாதப் பாதாளவுலகப் பொருளாதாரம்  இந்திய மாபியா வலைப்பின்னலுக்கிடையிலானதுஇந்தச் சிங்கள இராணுவத் தலைமைகள் பாதாளவுலகப் கிளான் ஆளும் வர்க்கமாக (Clan-Kriminalität in der Wirtschaft ) இலங்கையில் ஆட்சியைக் கட்டுப்படுத்துகிறது . 


மகிந்தாவின்  வடபுலத்து அரண்மனை  வடமாகாணத்து மக்களின் விவாசாய நில அபகரிப்போடு ஜனநாயகத்தைமறுத்து நிற்கும் தெரிவில் , இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்கு நல்ல உதாரணம் !


மகிந்தாவின் வடபுலத்து அரண்மனைக்கு இலங்கை மக்களின் வரிப்பணத்தில் காவல் காக்கும் பாதுகாப்புப்படையும் , அந்த மாளிகையைச் சுற்றிய பெரும் கண்காணிப்பும் ஆக்கிரமிப்பின் அடையாளம் ஆகும் . வடபுலத்தில் நிலை கொண்டுள்ள இராணுவமே இன்று , பாதளவுலகப் பொருளாதாரத்தை ; கிளான் மாபியாவலைப்பின்னலை நிச்சியமாக இயக்குகிறது . 


சிங்களப் பெளத்த செளவினிச (Chauvinism) பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவெழுந்த அரசியலுக்கு-போராட்டத்துக்கு மக்கள் பரவலாகத் தமது உயிரை -உடமையைத் தாரவார்த்தபோது ,இதுவரை கிட்டத்தட்டமூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் ; சிறுபான்மை இனங்களது வாழும் வலையம் [ Lebensraum ]சிதைக்கப்பட்டும் ;உடமைகள் சூறையாடப்பட்டும் ; நிலங்கள் சிங்கள வன்முறை யந்திரத்தால்அபகரிக்கப்பட்டும் [ Invasion of Eelam ]அவைஇராணுக் குடிப் பரம்பலாகச் (Military occupation )சிங்களஅரச ஆதிக்கத்தால் தற்போது நிலை நிறுத்தப்பட்ட இலங்கைச் சட்டவாக்கத்துள் [ laws of war ] உயர்பாதுகாப்பு வலயங்களாயின.


பல்லாயிரக்கணக்கான இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்களதுமண்ணானது சகல சமூக அசைவியக்கத்தையும் இராணுவஞ்சார்ந்த இயக்குமுறும் நிலைக்குள்[ Occupation ] பலியிடவேண்டிய நிலையின் நிமித்தம் அவர்களது பொருளாதார வாழ்வானது இராணுவத் தரகுக் குட்டிமுதலாளியமாகத் தற்போது மாற்றமடைந்துள்ளது.


இராணுவமே சகலதையும் தீர்மானிக்கும் அலகாக மேலெழுந்த அதன் நலனுக்கேற்ற [ Between Government of Sri Lanka, Sinhala armed forces, and industrial support they obtain from the commercial sector in political approval for research, development, production]பொருளாதார நகர்வை அது சிறுபான்மைஇனங்கள்மீது திணித்த வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்கு பின் நிகழ்ந்துள்ளது.


இராணுவம் யாழ் மாவட்ட மக்களது விவசாய வளமுடைய நிலத்தை அபகரித்துத் தம் சொத்தாக மாற்றிக்கையகப்படுத்திக் கடந்த கால் நூற்றாண்டாக விவசாயம் செய்கிறது . 


காங்கேசன்துறைக் கடற்கரைகளில் தம் தேவைகேற்க உல்லாச விடுதிகளைக் கட்டியும் கூடவே , இராணுவம்தமது தேவைக் கேற்க காங்கேசன்துறைத் துறைமுகத்தைக் கடத்தல் வர்த்தகத்துக்குப் பயன்படுத்துகிறதுஎன்று  வடபுலத்து மக்கள் கூறுகிறார்கள் . 


காங்கேசன்துறையில் அப்பப்பப் பிடிபடும் போதைப் பொருட்கள் , கண்துடைப்புக்கான ஒரு செயற்பாடாகும் . இதன் உள்ளடக்கம் பாதாளவுலகப் பொருளாதார இராணுவ-அரசியல்வாதிகளது கிளான் கூட்டைத் தொடர்ந்துஇயக்கும் வியூகமாகும் .


இந் நிலையால் வடபுலத்து மக்கள்தம் சமூக அசைவியகம் நிலவும் இராணுவ மேலாத்திக்கத்துக்குச் சேவைசெய்யுமொரு உறுப்பாகச் சிறுபான்மை இனங்களது வாழ்வியல் மதிப்பீடுகள் உருவாகிவிட்டென


இராணுவத்தை ஆதரித்து அவர்களைத் தாயாபண்ணிப் பிழைப்பு நடாத்தும் இந்த இனங்களது —தமிழர்களதுபொருள்வாழ்வானது மேலும் இனவாத அரச ஆதிக்கத்தை தனக்குள் உள்வாங்கிக்கொண்டே அதனொருசேவைத் துறையாக( security contractors ) இந்த இனங்களை மாற்றிய இந்தப் பொருளாதாரம் தொடர்ந்துநடைபெறுவதானால் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை மூடியே கிடக்க வேண்டும் . 


ஆள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட வலயமே மாபியப் பொருளாதாரத்தின் அடிப்படை . இது ,உலகமாபியாக்கள் குறித்த ஆய்வாளர் யூர்கன் ரோத்Der Deutschland-Clan. Das skrupellose Netzwerk aus Politikern, Top-Managern und Justiz. By Jürgen Roth / Eichborn, Frankfurt am Main 2006, ISBN 3-8218-5613-0. ) அவர்களது ஆய்வின் கண்டடைவு !


யூர்கன் ரோத் அவர்களின் ஆய்வின்படி , 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் என்பது இலாபம் அல்லது , வர்த்தக்தை முழுமையாகக் கைப்பற்றிஅதிகாரத்தைப் பின்தொடர்வதன் மூலம் தீர்மானிக்கப்படும் கிரிமினல் குற்றங்களின் திட்டமிடப்பட்ட ஆதிக்கம்ஆகும்இஃதுள் , இரண்டு வகைக் கூட்டுப் பங்கேற்பாளர்கள் ( இராணுவம் -ஆளும் கட்சிகள் ; தலைவர்கள் , அமைச்சர்கள் இருக்கின்றார்கள் . 


இந்தக் கிளான் கூட்டு ஒரு தேசத்துள் - வலயத்துள் நீண்டகாலம் அல்லது , காலவரையற்ற காலத்திற்குக்களவாணி வேலையைப் (Wirtschafts­kriminalität ) பகிர்ந்து கொண்டால்(Gangsterwirtschaft. Wie uns die organisierte Kriminalität aufkauft. By Jürgen Roth / Eichborn, Frankfurt am Main 2010, ISBN 978-3-8218-5680-3.)  தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோஇவை , நாட்டில் கணிசமான முக்கியத்துவம்வாய்ந்ததுஇதன் பொருட்டு கீழ்வரும் குணங்களைத் தேசத்துள் இனங்காணலாம் :


 

  • ) : வணிக அல்லது வணிகம் போன்ற கட்டமைப்புகளைப் பயன்படுத்துதல்
  • ) : சக்திவள ஆதாரத்தை -உற்பத்திச் சக்திகள் ( விவசாய நிலபுலங்கள் மற்றும் கடல்வளக்கையகப்படுத்தல் ; மூலவளக் கையகப்படுத்துல் ; பண்ட உற்பத்தி ஜந்திரங்கள் ; கட்டுமானங்கள் ; இராணுவ அடிக்கட்டுமானங்கள் ) கட்டுப்படுத்த பொருத்தமான இராணுவ ஆதிக்க மிரட்டல் வழிகளைப்பயன்படுத்துதல்
  • ) : அரசியல்ஊடகம்பொது நிர்வாகம்நீதித்துறை மற்றும் , பொருளாதாரம் ஆகியவற்றில் செல்வாக்குசெலுத்தி  நிலவும் ஆளும் கட்சிகளோடு ஒன்றாக வேலை செய்யுங் காட்டாட்சி 


என்பவையாகும் . 


இதுஅபாயகரமான அரசியல் மற்றும்இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இராணுவ / அரச-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களதுஉரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக் கொள்கிறதுஇதுதாம் , கிளான்மாபியப் பாதவுலகப் பொருளாதாரத்தின் பாத்திரம் (Economic role of clans ) என்பதைப் புரியாதவரைஇலங்கை மக்கள் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் ஓட்டுக் கட்சிகளால்குறுந்தேசியவாதக் கட்சிகளால் நிலவும்அரசாங்காத்தால் தொடர்ந்து ஏமாற்றப்படுவார்கள் ! 


குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-இராணுவ்வாத ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும்இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமதுதலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.


இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சிஅரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ்சுட்டுகிறதுஇதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடுஉணரத்தக்கதே.அதன்மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.


இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்ததந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானதுஎங்ஙனம் இனிவரும் இலங்கையில்ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதே எமது அச்சம்!


இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.


இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மைஎன்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை , நீங்கள் விட்டாலுஞ்சரி எம்மை இதுஅச்சப்படுத்துகிறதென்பது உண்மை.


இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில் மேலும்இராணுவவாதம் மற்றும்கட்சி-இயக்க ஆதிக்கமானது பாசிசப் போக்கில் , வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும்அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.


இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொருவகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்றுவாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது


இந்த அவலத்தை , வரும் 2023’ஆம் ஆண்டுக்கான உள்ளூர் ஆட்சித் தேர்தல் கட்சிகளின் பரப்புரைகளுள்உரைத்துப் பார்க்க முடியும் . 


.வி.ஶ்ரீரங்கன்                       06.02.23

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...