Monday, February 06, 2023

இலங்கைப் பாதாளவுலகப் பொருளாதாரம் -சிறு , குறிப்பு

 வடமாகணம் : இதயமே அற்ற ; நீதியற்ற இலங்கை இராணுவ -அரசியல்வாதிகளின் கூட்டுக் கிளான் (Der Sri Lanka-Clan) , இலங்கைப் பாதாளவுலகப் பொருளாதாரம் -சிறு , குறிப்பு 


இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவேஇராணுவக் குட்டிமுதலாளிய வர்க்கத்தின் பாதாளவுலக மாப்பியாப் பொருளாதார முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கைமேலும்  வடமாகணத்தில் நிலைப்படுத்த வேண்டிய தருணத்தைச் செல்வ-மற்றும் இயற்கைக் கடல் வள , விவாசாய நில வளச் சுரண்டலிலிருந்து தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.


  • கடல் அட்டை , இறால் பண்ணை ; நண்டுப்பண்ணை —கடல் வள அபகரிப்பு 
  • தமிழரின் விவசாய நில அபகரிப்பு ,
  • இராணுவப் படைகளின் விவசாயச் செய்கை
  • கேரளக் கஞ்சா -அபின் மற்றும் போதை ஊக்கப் பொருட்கடத்தல் 
  • இராணுவ / கட்சி / அரச ஆதிக்கம்
  • ஜனநாயகக் குறுக்கல்


இன்றைய மேற்காட்டிய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவேஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் , பெரும்பான்மைச் சமுதாயத்தின் முன்னாள்ஜனாதிபதி -பிரதமர் மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில்  மோதி , மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்க முனைகிறது .


2009’ஆம் ஆண்டு , முள்ளிவாய்க்காலுக்குப் பின்பாகவும் நிலவும் இராணுவவாத ஆட்சி முறைகள் [ Martial law ] தொடர்ந்து சிறுபான்மை இனங்களைப் பிளந்து நகர்த்தும் அரசியலுள் ,இலங்கை அரசின் ஆதிக்கத்தைஇனவாத வியூகத்தோடுத் தமிழ் - முசீலீம் ; மலையக மக்களது ஐதீக நிலப்பரப்பில் தொடர்ந்து நிறுவுகிறதுஇலங்கைப் பாதாளவுலகப் பொருளாதார நலன்கள் . 


சிங்கள இராணுவாதப் பாதாளவுலகப் பொருளாதாரம்  இந்திய மாபியா வலைப்பின்னலுக்கிடையிலானதுஇந்தச் சிங்கள இராணுவத் தலைமைகள் பாதாளவுலகப் கிளான் ஆளும் வர்க்கமாக (Clan-Kriminalität in der Wirtschaft ) இலங்கையில் ஆட்சியைக் கட்டுப்படுத்துகிறது . 


மகிந்தாவின்  வடபுலத்து அரண்மனை  வடமாகாணத்து மக்களின் விவாசாய நில அபகரிப்போடு ஜனநாயகத்தைமறுத்து நிற்கும் தெரிவில் , இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்கு நல்ல உதாரணம் !


மகிந்தாவின் வடபுலத்து அரண்மனைக்கு இலங்கை மக்களின் வரிப்பணத்தில் காவல் காக்கும் பாதுகாப்புப்படையும் , அந்த மாளிகையைச் சுற்றிய பெரும் கண்காணிப்பும் ஆக்கிரமிப்பின் அடையாளம் ஆகும் . வடபுலத்தில் நிலை கொண்டுள்ள இராணுவமே இன்று , பாதளவுலகப் பொருளாதாரத்தை ; கிளான் மாபியாவலைப்பின்னலை நிச்சியமாக இயக்குகிறது . 


சிங்களப் பெளத்த செளவினிச (Chauvinism) பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவெழுந்த அரசியலுக்கு-போராட்டத்துக்கு மக்கள் பரவலாகத் தமது உயிரை -உடமையைத் தாரவார்த்தபோது ,இதுவரை கிட்டத்தட்டமூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் ; சிறுபான்மை இனங்களது வாழும் வலையம் [ Lebensraum ]சிதைக்கப்பட்டும் ;உடமைகள் சூறையாடப்பட்டும் ; நிலங்கள் சிங்கள வன்முறை யந்திரத்தால்அபகரிக்கப்பட்டும் [ Invasion of Eelam ]அவைஇராணுக் குடிப் பரம்பலாகச் (Military occupation )சிங்களஅரச ஆதிக்கத்தால் தற்போது நிலை நிறுத்தப்பட்ட இலங்கைச் சட்டவாக்கத்துள் [ laws of war ] உயர்பாதுகாப்பு வலயங்களாயின.


பல்லாயிரக்கணக்கான இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்களதுமண்ணானது சகல சமூக அசைவியக்கத்தையும் இராணுவஞ்சார்ந்த இயக்குமுறும் நிலைக்குள்[ Occupation ] பலியிடவேண்டிய நிலையின் நிமித்தம் அவர்களது பொருளாதார வாழ்வானது இராணுவத் தரகுக் குட்டிமுதலாளியமாகத் தற்போது மாற்றமடைந்துள்ளது.


இராணுவமே சகலதையும் தீர்மானிக்கும் அலகாக மேலெழுந்த அதன் நலனுக்கேற்ற [ Between Government of Sri Lanka, Sinhala armed forces, and industrial support they obtain from the commercial sector in political approval for research, development, production]பொருளாதார நகர்வை அது சிறுபான்மைஇனங்கள்மீது திணித்த வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்கு பின் நிகழ்ந்துள்ளது.


இராணுவம் யாழ் மாவட்ட மக்களது விவசாய வளமுடைய நிலத்தை அபகரித்துத் தம் சொத்தாக மாற்றிக்கையகப்படுத்திக் கடந்த கால் நூற்றாண்டாக விவசாயம் செய்கிறது . 


காங்கேசன்துறைக் கடற்கரைகளில் தம் தேவைகேற்க உல்லாச விடுதிகளைக் கட்டியும் கூடவே , இராணுவம்தமது தேவைக் கேற்க காங்கேசன்துறைத் துறைமுகத்தைக் கடத்தல் வர்த்தகத்துக்குப் பயன்படுத்துகிறதுஎன்று  வடபுலத்து மக்கள் கூறுகிறார்கள் . 


காங்கேசன்துறையில் அப்பப்பப் பிடிபடும் போதைப் பொருட்கள் , கண்துடைப்புக்கான ஒரு செயற்பாடாகும் . இதன் உள்ளடக்கம் பாதாளவுலகப் பொருளாதார இராணுவ-அரசியல்வாதிகளது கிளான் கூட்டைத் தொடர்ந்துஇயக்கும் வியூகமாகும் .


இந் நிலையால் வடபுலத்து மக்கள்தம் சமூக அசைவியகம் நிலவும் இராணுவ மேலாத்திக்கத்துக்குச் சேவைசெய்யுமொரு உறுப்பாகச் சிறுபான்மை இனங்களது வாழ்வியல் மதிப்பீடுகள் உருவாகிவிட்டென


இராணுவத்தை ஆதரித்து அவர்களைத் தாயாபண்ணிப் பிழைப்பு நடாத்தும் இந்த இனங்களது —தமிழர்களதுபொருள்வாழ்வானது மேலும் இனவாத அரச ஆதிக்கத்தை தனக்குள் உள்வாங்கிக்கொண்டே அதனொருசேவைத் துறையாக( security contractors ) இந்த இனங்களை மாற்றிய இந்தப் பொருளாதாரம் தொடர்ந்துநடைபெறுவதானால் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை மூடியே கிடக்க வேண்டும் . 


ஆள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட வலயமே மாபியப் பொருளாதாரத்தின் அடிப்படை . இது ,உலகமாபியாக்கள் குறித்த ஆய்வாளர் யூர்கன் ரோத்Der Deutschland-Clan. Das skrupellose Netzwerk aus Politikern, Top-Managern und Justiz. By Jürgen Roth / Eichborn, Frankfurt am Main 2006, ISBN 3-8218-5613-0. ) அவர்களது ஆய்வின் கண்டடைவு !


யூர்கன் ரோத் அவர்களின் ஆய்வின்படி , 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் என்பது இலாபம் அல்லது , வர்த்தக்தை முழுமையாகக் கைப்பற்றிஅதிகாரத்தைப் பின்தொடர்வதன் மூலம் தீர்மானிக்கப்படும் கிரிமினல் குற்றங்களின் திட்டமிடப்பட்ட ஆதிக்கம்ஆகும்இஃதுள் , இரண்டு வகைக் கூட்டுப் பங்கேற்பாளர்கள் ( இராணுவம் -ஆளும் கட்சிகள் ; தலைவர்கள் , அமைச்சர்கள் இருக்கின்றார்கள் . 


இந்தக் கிளான் கூட்டு ஒரு தேசத்துள் - வலயத்துள் நீண்டகாலம் அல்லது , காலவரையற்ற காலத்திற்குக்களவாணி வேலையைப் (Wirtschafts­kriminalität ) பகிர்ந்து கொண்டால்(Gangsterwirtschaft. Wie uns die organisierte Kriminalität aufkauft. By Jürgen Roth / Eichborn, Frankfurt am Main 2010, ISBN 978-3-8218-5680-3.)  தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோஇவை , நாட்டில் கணிசமான முக்கியத்துவம்வாய்ந்ததுஇதன் பொருட்டு கீழ்வரும் குணங்களைத் தேசத்துள் இனங்காணலாம் :


 

  • ) : வணிக அல்லது வணிகம் போன்ற கட்டமைப்புகளைப் பயன்படுத்துதல்
  • ) : சக்திவள ஆதாரத்தை -உற்பத்திச் சக்திகள் ( விவசாய நிலபுலங்கள் மற்றும் கடல்வளக்கையகப்படுத்தல் ; மூலவளக் கையகப்படுத்துல் ; பண்ட உற்பத்தி ஜந்திரங்கள் ; கட்டுமானங்கள் ; இராணுவ அடிக்கட்டுமானங்கள் ) கட்டுப்படுத்த பொருத்தமான இராணுவ ஆதிக்க மிரட்டல் வழிகளைப்பயன்படுத்துதல்
  • ) : அரசியல்ஊடகம்பொது நிர்வாகம்நீதித்துறை மற்றும் , பொருளாதாரம் ஆகியவற்றில் செல்வாக்குசெலுத்தி  நிலவும் ஆளும் கட்சிகளோடு ஒன்றாக வேலை செய்யுங் காட்டாட்சி 


என்பவையாகும் . 


இதுஅபாயகரமான அரசியல் மற்றும்இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இராணுவ / அரச-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களதுஉரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக் கொள்கிறதுஇதுதாம் , கிளான்மாபியப் பாதவுலகப் பொருளாதாரத்தின் பாத்திரம் (Economic role of clans ) என்பதைப் புரியாதவரைஇலங்கை மக்கள் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் ஓட்டுக் கட்சிகளால்குறுந்தேசியவாதக் கட்சிகளால் நிலவும்அரசாங்காத்தால் தொடர்ந்து ஏமாற்றப்படுவார்கள் ! 


குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-இராணுவ்வாத ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும்இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமதுதலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.


இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சிஅரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ்சுட்டுகிறதுஇதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடுஉணரத்தக்கதே.அதன்மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.


இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்ததந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானதுஎங்ஙனம் இனிவரும் இலங்கையில்ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதே எமது அச்சம்!


இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.


இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மைஎன்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை , நீங்கள் விட்டாலுஞ்சரி எம்மை இதுஅச்சப்படுத்துகிறதென்பது உண்மை.


இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில் மேலும்இராணுவவாதம் மற்றும்கட்சி-இயக்க ஆதிக்கமானது பாசிசப் போக்கில் , வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும்அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.


இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொருவகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்றுவாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது


இந்த அவலத்தை , வரும் 2023’ஆம் ஆண்டுக்கான உள்ளூர் ஆட்சித் தேர்தல் கட்சிகளின் பரப்புரைகளுள்உரைத்துப் பார்க்க முடியும் . 


.வி.ஶ்ரீரங்கன்                       06.02.23

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...