தனிபட்டதும்,அஃது,சந்தர்ப்பத்தில் "பொது" வெளிப்பட்டதும்,அரசியல் வாழ்வில்-"நண்பர்களாக" ச் சில தன்முனைப்பு மனிதர்கள்-என்னைப்போலவேதாம்?
இடது கரங்கொடுத்ததை வலது கரம் தெரியாதிருக்கும் "கர்ண" பரம்பரை- குபேரன்அல்லது வங்கிக் கொள்ளைப் பணத்தில் சொத்துச் சேர்த்து வைத்துப் புரட்சி பேசும்"தோழரும்" நானில்லை!
நான் சாதாரணத் தொழிலாளி-சாமான்ய மனிதன்.
என்றபோதும்,எனக்கும் "தமிழ் பேசும்" மனிதர்களைக் குறித்து ரொம்ப நல்ல அநுபவ வாழ்வைக் காலம் கனிய வைத்திருக்கிறது. அதற்குத் "தமிழீழப் போராட்டம்" இன்றைய புலிகளது வாழ்வியல் நிலவரம்,மக்களது நிலைமையென ஓராயிரம் பக்க விளைவுகள் புரியுவும்-தெரியவும்.இந்தக் காலம் உதவித்தாம் இருக்கிறதென்று சொல்வதை விட வரலாறு இப்படியெல்லாம் நம் முன் உண்மைகளோடு உறவாடுகிறதென்றுரைப்பதே சரி!. இந்தத் தமிழ்ச் சமூகத்துள்தாம் நானும்,பார்த்திபனும் வாழ்கிறோம்!
சமீபத்தில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.
அக்குறிப்பின் ஆரம்பம்"நான் ரொம்பக் கவலையாக இருக்கிறேன்..." என்பதாக.
இக் குறிப்பு எழுதியபோது,வெறும் சாதரண மனிதனுக்குரிய "நட்பு-நிராகரிப்பு" என்றவுணர்வுக்குள் நானும் அப்பப்பவென்ன எப்போதும் உணர்வுரீதியான எதிர்பார்ப்புகள் இருக்கும்போது,இவை குறித்தான மனிதத் தொடர்பாடல்-சமூகக்கூட்டு,எனும் வாழ்வியல் நமக்கு இல்லாதவொரு புலம் பெயர் வாழ்வில் சமூகத்தோடானவுறவு,பழைய நண்பர்களைச் சந்திப்பதில் ஆர்வமெனும் உணர்வு எமக்குள் சில எதிர்பார்ப்பு-கனவுகளைத் தருவதென்பது இயல்பானது.
அந்தவகையில், சமீபத்தில் பார்த்திபனும்,முகமறியா ஜசீதரனும் அவரது குடும்பமும் சயந்தன் கதிர் வீட்டுக்குப் போயிருந்தபோது சயந்தன்" அவர்களது படத்தையும் முகநூலில் போட்டுக்" குறிப்பு எழுதினான்.எனக்கு,ஏற்கனவே,பர்த்திபன்மீது "மதிப்பும்,தொடர்ந்து சந்திக்க வேண்டுமெனவுணரும் விருப்பும்" இருப்பதென்பது உண்மை.
நான்,அழைத்தாலும் பார்த்திபன் வருவதில்லை!நேரமில்லை என்பது அவரது தரப்பு நியாயம்.அதுவும், சந்தர்ப்பத்தில் சரியானதுதாம்!
கடந்த ஓரிருமாதத்துக்குமுன் எனது சகலர் வீட்டுக்குப் பார்த்திபனும்,ஜசீதரன் குடும்பமும் வந்திருந்தை நான் அறிந்தேன்.இது,எனக்கு மனதில் அதிகம் அழுத்தத்தைக் கொடுத்திருந்து.
ஜசீதரன்,இலங்கை அரசாங்கத்தால் புலிகளென்று சந்தேகத்துக்குள்ளாகிச் சிறையில் இருந்தார்.அவரது விடுதலைக்கு-வக்கீல் செலவுக்குப் புலம் பெயர் மண்ணில் காசுகள் சேர்த்தபோது (நண்பர்-அறிந்தவர் வட்டத்துள்)நானும் உதவுவதாகப் பார்த்திபனுக்குச் சொல்லி 100 யூரோவும் உதவியிருந்தேன்.
என் சகலனது வீடு 20 கிலோமீட்டர் அண்மையிற்றாம் இருக்கிறது.
அங்கே,ஜசீதரனைக்கூட்டி வந்த பார்த்திபன், என்னையும் எட்டிப் பார்த்திருக்கலாம்,ஜசீதரன் என்னிடம் வந்திருக்கலாமென நான் உணர்ந்த புரிதலில் மனம் நொந்திருந்தபோது சயந்தன் கதிரது படமும்,பார்த்திபன்,ஜசீதரன் குடும்பத்தை அவன் வரவேற்றுபசரித்த குறிப்பும் எனக்குள் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது-நான்,என்ன மகாத்மாவா என்ன?
என்னடா," நாம் இவ்வளவு தோழமையாகவிருந்தும் நம்மிடம் வரமுடியாதளவுக்கு நாமென்ன தப்பை இவர்களுக்குச் செய்திருக்கிறோம்?,நாம் ஏன் மற்றவர்களுக்கு நட்புப்பாராட்டும்படி நடக்கவில்லை" என்றும் எனக்குள் ஒரே கேள்வி.
எப்போதும்,பலருக்கு உதவியவுணர்வும்,என்னை நட்புப் பாராட்டி ஏமாற்றிய கவிஞன் காங்கேசன் கோவிந்தகுமார் " எல்லாம் "ஞாபகம் வந்தது-வந்தார்கள்.காங்கேசன் கோவிந்தகுமார் ஆயிரக்கணக்கான டொச்சு மார்க்கை என்னிடம் வேண்டி ஏமாற்றி இருக்கிறான்.இன்று, இருபது வருடாமாச்சு, இந்த ஏமாற்றுக்கு!.அப்படியொருவுணர்வில் நான்-எனது முகநூல் நிலைத் தகவலில் இப்படியொரு குறிப்பெழுதினேன்:
Sri Rangan Vijayaratnam:
26. Dezember 2012 in der Nähe von Wuppertal
நான் ரொம்பக் கவலையாக இருக்கிறேன்.இவன் பார்த்திபனால் நான் பல மாணவருக்குவுதவி செய்திருக்கிறேன்.உதவி அமைப்பினூடாகவுஞ்கூட . செல்வி ஜனகாவின் ஊடாக நான் 6 மாணவர்களை உயர் கல்வி வரை இந்தியாவிலும்,ருஷ்சியாவிலும்வைத்துப் படிப்பித்திருக்கிறேன்.எனது உழைப்புகள் யாவும் இப்படியே அழிந்திருக்கிறது.எனது குடும்பத்தைப் பார்க்காது-எனது தாயை அநாதையாகச் சாகவிட்டு இவவர்களைப் படிப்பித்திருக்கிறேன்.பலர் இப்போது பொறியியலாளராக இருக்கின்றார்கள்.ஆனால், எனக்கு இவர்களால் எதுவும் நடாவது போயினும்,எனது உறுவுகளை இவர்களால் நான் இழந்துள்ளேன்!ஜசிதரனது வக்கீல் செலுவுக்கும் நான் உதவி செய்திருக்கிறேன். ஆனால்,எனது சகலனது வீட்டுக்கு வந்த ஜசீதரன் எனது வீட்டுக்கு வரமுடியவில்லை!நான் ஜசீதரனுக்கு எனது குருதியில் பங்களித்திருக்கிறேன்-உதவி செய்திருக்கிறேன்.என்றபோதும் ,என்னிடம் வரமுடியாததன் காரணமென்ன?
புலிக் குணமா?
போங்கடா புலிப் பயல்களே!
நான் மனிதர்களையே நேசிப்பவன்.
எனது குறிக்கோள்-உண்மைக்கு முன் எந்த நாய்களும் எனக்குப் பெறுமதியற்ற பிண்டங்களே!
சயந்தன் வீட்டுக்குப் போனவர்கள் எனது வீட்டை வரவேண்டுமென நினைக்கவில்லை!
இனிமேல்,எவனாவது உதவியென வந்தால் செருப்பால் அடிப்பேன் நாய்களே!
இதைப் பார்த்த பார்த்திபன்,எனக்கொரு குறிப்பும் எழுதி,நான் ஜசீதரன் வழக்கில் செலவுக்கு அனுப்பிய 100,€ யூரோப் பணத்தையும் மீள, எனக்கு அனுப்பியிருக்கிறார்.
சிறீரங்கன்..
Facebookஇல உங்களை நீங்களே அறிமுகப்படுத்தியதைப் பார்த்தன்.அதின்ர ஒரு copyயை ஞாபகத்துக்கு இதோட அனுப்புறன்.
நான் உங்களை எந்த உதவியும் செய்யச் சொல்லிக் கேக்கேல.உதவி-நீங்களா செய்தது.எண்டாலும் யசிகரன்/வளர்மதி வழக்கிற்கு நீங்கள் தந்த 100 யூரோவை உங்கட வங்கிக் கணக்குக்கு இண்டைக்கு அனுப்பியிருக்கிறன்.காசு அனுப்பினத்துக்கான வங்கிப் பற்றுச்சீட்டு copyயும் இதோட அனுப்புறன்.
** நீங்கள் தந்த காசை நான் திருப்பித் தந்தாலும்,அந்த நேரம் நீங்களாகச் செய்த அந்த உதவியை நான் இப்பவும் மதிக்கிறன்.
சிறையில இருந்து சுவிசுக்கு வந்தவுடன் வளர்மதியும்,யசீகரனும் உங்கட உதவிக்குத் தலைசாய்த்து நன்றி தெரிவித்து உங்களுக்கு எழுதின கடிதத்தின்ர copyயையும் ஒரு ஞாபகத்துக்கு இதோட அனுப்புறன்.
எனக்கு எத்தினையோ கல்லெறி விழுந்திருக்கு/விழுகுது.ஆனா,உங்களிட்டை காசை வேண்டினதால உங்கடை உறவுகளை நீங்கள் இழந்ததாயும்,குடும்பத்தைப் பார்க்காது தாயை அநாதையாக சாகவிட்டதாயும் நீங்கள் எனக்கெறியிற கல்லுப் புதிசு.வாழ்த்துக்கள்.
உங்களிட்டை உதவி பெற்றவை தங்கட நன்றியை உங்களுக்கு எந்தெந்த விதத்தில்-வழியில தெரிவிக்க வேணுமெண்டு நீங்கள் பஞ்சியைப் பாராமல் ஒரு Catalog தயாரிச்சு தருவியளாயிருந்தால்,என்னைப்போல நடுச்சந்தியில் உங்களிட்டை ஆசீர்வாதம் வாங்குகிற நிலமை தங்களுக்கும் வராமல் மற்றவை தங்களைப் பாதுகாக்கலாம்.
எந்தச் சவுண்டும் இல்லாம சைலன்ற்றா உதவி செய்யிற சில மனிசரும் எனக்கு இன்னும் நண்பர்களாயிருக்கினம் எண்டதுதான் என்னட்டை மிஞ்சியிருக்கிற நம்பிக்கையள்.
உங்கட பார்வையில்
பெறுமதியற்ற பிண்டம் /உதவி கேட்டு வந்த நாய்,
பார்த்திபன்
07.01.2013
அவரிடம் பணம் இருக்கிறது.
அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
இப்போது,புலம் பெயர்ந்து வாழும் அனைவரிடம் வேலையிருக்கிறது. அதனால்,ஓரளவு பணமும் பெறமுடியம்.
அதற்காக அன்று செய்தவுதவிகளைச் " சொல்லிவிட்டோம் " என்பதற்காக மீள அனுப்பிவைப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை.
முதலில், உள்ளவும் உதவுபவர்களையெண்ணுதலும்,அவர்களையும் ஒருக்கால் பார்த்திருக்க முடியுமென்பதும் மனித நடாத்தையின் பண்புதாம்.அதை எதிர்ப்பார்க்கும் நானும் மனிதர்தாம்.
பார்த்திபன்," தொப்பி நல் அளவாக இருப்பதால்" அதைத் தனக்கே போட்டுவிட்டுக் குறிப்பெழுதிப் பணம் 100.€ யூரோவையும் திருப்பி அனுப்பியுள்ளாராம்.
அதை,யார் கேட்டான்.
உங்களிடம் இருக்கா-அனுப்பிட்டீர்களா?நல்லது!அப்பணத்தை இன்னொரு தேவையான மனிதர்[களுக்]கு மீள அனுப்பிப்பியபடி நான் உங்களையெல்லாம் கடந்து செல்வேன்.
இதுள்,நீங்கள் நாயுமில்லை-நானும் பேயுமில்லை!.
பார்த்திபனைப் போலவே, புலிகளும் இருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்!
மக்களைக் கொள்ளையடித்த-தட்டிப்பறித்த பணத்தை மீள அவர்களுக்கு வழங்கியும்,பல இலட்சம்தமிழர்களைக் கொன்று குவித்த ஈனச் செயலுக்குப் பொதுமன்னிப்புக்கோரி,தமக்கான தண்டனையைப் பொதுமக்களாகிய தமிழரிடம் கோரினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
உலகம் இவ்வளவுதாமாம்!
இவர்கள்தாம்,மக்களுக்குள்-சமூகத்துக்குள் இயங்குபவர்கள்!தூ...
பிற்குறிப்பு:
பார்த்திபன், உங்களைக் குறித்து,சுவிஸ் இரவீந்திரனும்,ரஞ்சியும் என்னென்னவோ சொல்லியும் அதை நம்ப முடியாமல் இருப்பவனும் நான்தான்.அதுபோல், உங்கள் நண்பர் இரயாகரனுக்கும் இது நன்றாகவே தெரியும்.புகலிடச் சிந்தனை மையச் சந்திப்பில் உங்களைப் பற்றியும் ரொம்ப விசனத்தோடு விமர்சனத்தை முன்னாள் மனிதம் சஞ்சிகை ஆசிரியர் குழுவுள் ஒருவரான இரவீந்தரன் வைத்தபோது அதை நம்ப முடியாதிருந்தவன் நான்.எல்லாம் ஆச்சரியம் பார்த்திபன்!
உம்மை,இப்போது ரொம்ப நன்றாகவே புரிந்திருக்கிறேன்.
நீர்,மற்றவர்களது உணர்வை உம்மிலிருந்து புரிகிறீரென்பது புரியக் கூடியதே!
நன்றி.
நான்,உயிருடன் இருக்கும் வரை உம்மை எங்கும் காணாதிருக்க வேண்டுமெனக் காலத்தை வேண்டுகிறேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
09.01.2013
No comments:
Post a Comment