Tuesday, January 29, 2013

இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலகம்: சாத்திரியும்,பங்கு பிரிப்பும் படுகொலையும்!

"ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். "-சாத்திரி   http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html

ந்த 2013 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள்நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான  ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள்,புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச் " சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?"அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!

கடந்த 2012 ஆம் ஆண்டு மாவீரர் தினக் கொண்டாட்டத்துள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துள் உருவாக்கப்பட்ட "புரட்சிப் பொறி " மாவீரருக்கு விளக்கேற்றும் "தார்மீக" உரிமைக்கானதென ஆரம்பித்து, இறுதியில் பலரைச் சிதைத்துக் கைதுகளோடு சிங்கள இராணுவம்தமிழ்ப் பிரதேசமெங்கும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான நியாயம் கொடுக்கப்பட்டது.இதுவும்,மேலே சொன்ன சதி வியூகத்தோடிணையும் சக்திகளோடு சந்திக்கும் புள்ளி இந்தியச் சாணாக்கியம்-புலத்துப் புரட்சிப் புரட்டென்று நாம் தொடர்ந்து எழுதினோம்.





இதைக் குறித்து, நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தோம். இது சதிவலையென்றும் மக்களை மீளக் காட்டிக்கொடுக்குஞ் சதியென்றுஞ் சொல்லியிதையெதிர்க்க வேண்டுமெனக் குறித்துரைத்தோம்.ஆனால், புலத்தில் "மாற்றுக் கருத்தாளர்கள்", இடதுசாரிகள்,புரட்சிக்காராகளென ஓட்டுமொத்தமானவர்களும் கூடவே,புலிகளும் இதை ஆதரித்துச் சங்கூதினர் மக்களுக்கு!. வழமைபோலவே தட்டந்தனியாக உண்மைக்காகப் போராடினோம். இதன் சதிகளை அம்பலப்படுத்தி "இது முற்றிலும் தவறான சக்திகளது தெரிவு " என்று மக்களை எச்சரித்தோம்.

இந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களது கலகத்தைத் தூண்டிய சக்திகள் அறுவடைக்குத் தயாரானபோது அதை சாத்தியமாக்குவதற்கான முறையில் நிலத்திலுள்ள பல போராட்ட அநுபவமுள்ள"அறிஞர்கள்" வேலி ஓணானாக மௌனமாகவிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சீண்டிய நாம் புலத்திலுள்ளவர்களது மௌனத்தைக் கலைத்தோம். அதுள்,கலகத்தின் பின்னே நிலவும் உண்மைகளை உறுதிப்படுத்தத் தக்க வகையிலேயேதாம் அவர்கள் தமது மனசாட்சியை வெளிப்படுத்தினர்.அஃது, உண்மையின் சாயல் வரவேற்கப்பட வேண்டியது.அவர்கள், இந்திய அரசின் நிகழ்ச்சிக் குட்பட்டிருப்பினும் இந்தவிடத்தில் மனசாட்சியோடு கருத்து வைக்கும் தார்மீகத்துக்குக் கட்டுப்பட்டு மக்களோடு நின்றனர்.

ஆனால்,புலத்தில் விழுந்தடித்துக்கொண்டு போட்டிபோட்டு "யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புரட்சிப் பொறியை" யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களெனும்பந்தத்துள் அந்தப் பல்கலைக் கழகக் கலகத்தை  முழுக் குத்தகைக்கு எடுத்து, இரயாகரன் குழு அதை ஆதாரித்து "மாணவர் எழுச்சி,மக்கள் எழுச்சியென"ப் பல பத்துக்கட்டுரை போட்டு அந்நியச் சக்திகளது சதிக்கு உடைந்தையாகவிருந்தது.இதேபோலவே, புலத்தில் பலர் அந்நியச் சதியை மக்களது தார்மீகப் போராட்டவுணர்வின் பேரால் ஆதரித்து அறிக்கைகள் விட்டனர்.அதுள், முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்க "அமைப்புகள்" புதிய திசை-புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற  இரயாகரனது பெயர்ப்பலகை!

என்னவொரு அந்நிய விசுவாசம்!,அடிமைச் சேவகம், இந்த அமைப்புகளுக்கு!!

இலட்சக் கணக்கான மக்களை"தமிழீழப்போராட்டம்"செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருந்தனர்.

நாம்,இந்த அவலத்தின் நடுவே, ஓங்கியொலித்து மாணவர்களது கலகமானது அந்நியச் சக்திகளது தெரிவு,அது அவர்களாற் தூண்டப்பட்டு மக்களது உரிமைகள்-போராட்டவுணர்வுக்கு விலங்கிட்டு அடிமைப்படுத்தும் சதியெனச் சொன்னபோதெல்லாம் அதை இந்தப் புலத்து புரட்சிகாரர்கள் ஏதேதோ சொல்லிக் கருத்தடி தந்தனர்!.

கூடவே, எமக்குச் சமூகவியக்கம்,அதன் அசைவாகத்துள் உருவாகிய புதிய தலைமுறையின் சமூகவுணர்வு குறித்தெல்லாம் வகுப்பெடுக்க வெளிக்கிட்டனர். ஆனால்,அவர்கள் சமூகவியலில் எந்தக் கடைக்கோடி நிலையில் நிற்கிறாகளெனத் தம்மை நிரூபித்தபடி தமது அந்நியச் சேவையைத் திறம்படச் செய்தனர்.அதனால், இத்தகைய கலகங்களையும் அதுசார்ந்து இலங்கையின் தென் மாகாணப் பல்கலைக்கழகத்துக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட கலகத்தையெல்லாம் "இனங்கடந்த போராட்டவுணர்வு தோழமை " யென வகுப்பெடுத்துத் தமது எஜமானர்களுக்கிசைவாகக் கருத்தாடினர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும்,முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடித்தனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இந்தச் சதிகளது தெரிவில் சிலவுண்மைகளது முடிச்சவிழ்க்கும் "பங்கு பிரிப்பும்,படுகொலையும்" எழுதும் சாத்திரியைக் குறித்து நாம் சில கருத்துக்களை முன்வைத்தாகவே வேண்டும்.





சாத்திரி,ஒருவகையில் முழுமையான புலி விசுவாசி.பிரபாகரனுக்காக எதையும் செய்யும் மனநிலையுடையவரென்பதும்,வியாபாரப் புலிகளால் ஏமாற்றிப் படுகொலைசெய்யப் பட்ட பிரபாகரனுக்குப் புலத்தில் தமது வட்டத்துக்குள் முதன்முதலாகப் பொதுவெளியில் மாவீரர் அஞ்சலி செய்தவரும் சாத்திரிதாம்.சாத்திரி இத்தகைய மனிதரென்பதால் புலிகளையும்,அவர்கள் வழியிலான விதேசியப் போராட்டத்தையும் நாம் விமர்சித்த கடந்த காலத்தில் இந்தச் சாத்திரியார் எமது கட்டில்வரை வந்து எம்மைத் தூசித்தவர். எனினும்,அதையெல்லாம் நாம் எமது சமூக நடாத்தையினதும்,அதன் வளர்ச்சிக்கட்டத்திலும் புதைந்து பார்த்ததன் காரணத்தால் அது ஆச்சரியமோ அன்றி வேதனையையோ தரவில்லை.மாறாகச் சமூகக் கோபத்தையே தந்தது.என்றபோதும்,இந்தச் சாத்திரியின்இந்தப் "பங்கு பிரிப்பும்,படுகொலையும்" என்ற தொடரை மிக முக்கியமானவொரு சமூகப்பணியாகவே நாம் பார்க்கிறோம்.

புலிகள் தம்மைக் குறித்த ஆவணங்கள் யாவையும் நாசிகளைப்போலவே தாமும்  கைக்கெட்டியவரை அழித்துத் தமது அந்நியத் தொடர்புகளை,சதியை அதையொட்டி அந்நியருக்காக மக்களைக் கொலைகளத்துக்கனுப்பிய அனைத்து அரசியல் ஆவணங்களையும் இல்லாதாக்கிவிட்டனர்.புலத்தில் புலிப்பினாமிகள்,வியாபாரப் புலிகள்-மாணவப் புலிகளெல்லோரும் நேரடியாக அந்நிய ஏஜென்டுகளோடு உறவாடித் தம்மிடமிருக்கும் அனைத்தையும் மறைத்துவிட்டனர்.

இந்த நிலையில்,தமிழீழப் போராட்டத்தால் நாம் இடம் பெயர்ந்ததுக்கும்-அழிந்ததுக்கும்,திக்குத்திக்காய் புலம் பெயர்ந்ததற்கும்காரண காரியம் தேடும்வருங்காலச் சந்ததிக்கு,அதன் அறிவுக்கும்-தேடுதலுக்கும் அவசியமான"தமிழீழப் போராட்டத்தின்" உண்மையான வரலாறு இன்னும் உருவாகப்படவில்லை.அத்தகைய வரலாறு தரவுகளையும்,உண்மைகளையும் சார்ந்தே எழ முடியும்.அஃது,அநேகமாகக் கை கூடாதும் போகலாம்.ஆனால், சாத்திரியின் தொடர் அதுள் சிறு பொறியையாவது வருங்காலச் சந்ததிக்கான உண்மையாகவிட்டுச் செல்லும்.

நாமும், இந்தச் சாத்திரியின் மூலமாக இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் தொடர் முடிச்சுக்களை போடும் நிலைக்கு அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் கலகத்தின் பின் புலத்தையும், அதற்குக் கயிறு கொடுத்தவர்களையும் குறித்துப் பேசுகிறார்.அந்தக் கயிறு இந்தியாவால் திரிக்கப்பட்ட தெய்வீகன் மற்றும் புலத்துப் புலி வியாபாரிகள்!எப்படியிருக்கிறது இந்தச் சதி? மக்களைக் கொல்லுஞ் சதி-அந்நியர்களால் நடாத்தப்படுகிறது, இந்தக்கலகமெனத் தொடர்து இடைவிடாது கூறிக்கொண்டோம்.கபோதி, இரயாகரன் குழு இதை "மக்கள் எழிச்சி-மாணவர் எழுச்சி" என்றிட்டுக்கட்டி அந்நிய எஜமானர்களுக்காக நமது இளைஞர்களைச் சிங்களத்துச் சிறைக்கனுப்பினார்கள்-பாவிகள்-கொடும் மாபியாக்கள்!!இவர்கள்தாம் இப்போது அந்நிய சேவைக்கேற்ப முன்னிலைச் சோசலிசக்கட்சிக்கு வால்பிடித்துத் தம்மைத் தக்கவைக்க முனைகிறார்கள். அன்று, தம்மால் கொள்ளையிடப்பட்ட கட்டன் நசனல் வங்கிக்குள்ளிருந்த மக்களது பல கோடி பணம்-நகைள் மூலம் அமைப்புகளுக்கு நிதியிட்டும்,பொருளிட்டும் தமது ஏஜமானர்களிடம் இதற்காக இரட்டிப்பாக அறுவடை செய்கின்றனர்.;இது,எதன் பெயரால்? மக்களது விடுதலை-புரட்சியின் பெயரால்!

எதிர்ப் புரட்சியாளர்கள் வரலாற்றில் சறுக்கியவர்களல்ல. மாறாகப் புரட்சிக்குரிய நிலவரத்தைத் திட்டமிட்டுச் செயற்கையாகப் படைத்து அதன்வழியாகத் தம்மைப் புரட்சிகரச் சக்தியாகக் காட்டிப் புரட்சியைச் சிதைத்தபடியே தம்மைப் புரட்சியாளர்களெனத் தொடர்ந்து நிரூபித்துப் பற்பல புரட்சிகரக் கட்சி நாமத்துடன்  உலகெல்லாம் விரிந்து வாழ்பவர்கள். இது, புட்சிகரத் தோழமைக்குள் நியாயப்படுத்தப்பட்ட தோழமையாக விரித்து வைக்கும் சதி முதலாளித்துவத்து இருப்புக்கான வியூகத்தின் தெரிவிலொரு வழியாகும்.எனவேதாம், மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில்:" எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ]". என்பது. இதன்வழி நமது சிந்தனையாளர்கள் பலர் 2009 வரை ஆழ்ந்த மௌனத்தைப் புலிப்பாசிசத்தின் முன் கடைப்பிடித்தபோது அதன் கிளைகள்-வேர்கள்-விழுதுகள் தற்போது புரட்சிகரச் சக்தியாகப் படங்காட்டிப் பின்னும் சதிவலையைக்கூடப் புரட்சியென நம்பும் நம் மக்களை விட்டில் பூச்சியாகவே நாம் இனம் காணவேண்டும்.

ஆகவே, யாழ்மாணவர்கள்கலகத்துக்குப் பின் நின்று தூண்டிய சக்திகளை நாம் ஏலவே சொன்னோம்.சாத்திரியின் குறிப்பின்வழி அது பலமான தொடர் புள்ளிகளை நமக்குத் தருகிறது.

இதிலிருந்து,இன்னொரு புள்ளிக்குத் தாவினால் அதுள் சந்திப்பவர் பரணி கிருஷ்ணரஜனி.

இவர் 2009 க்குப் பின் பொதுவெளிக்கு வருகிறார்.முள்ளி வாய்க்காலில் புலிகள் மண்கவ்வி மக்களைப் பலிகொடுத்து அழிந்துபோன பின்புலிகளது தவறுகள்,தப்புகள்,போராட்டச் செல்நெறிகள்,அவர்களது காட்டிக்கொடுப்பு,அந்நிய அடியாட்படைப் பாத்திரத்தோடு புலிகளது வரலாற்றுத் துரோகம் குறித்து நிறையக் கேள்விகளோடு மக்களும்,அவர்களது குழந்தைகளும் புலத்திலும்-நிலத்திலும் முனையுங் தருணமிது.

இதைத் தடுத்து, மக்களைத் தொடர்ந்து விவேகமாகச் சிந்திக்கவிடாதிருக்க அதே புலிவழிபாடு,தலைவர் துதியைத் தொடர்ந்து அச்சுப் பிசாகமால் பரணி செய்து வருகிறார்.இது இந்திய அரசின் மிகப்பெரும் கருத்தியல் தாக்குதலாகும்.

புலத்தில் மீள,அதே புலிவழிச் சிந்தனையையும்-ஏமாற்றையும் மனோவியற் புரிதெலெனுந்தொலியின்வழி  சொல்லிப் புனைந்து, புலத்தில் புலி குறித்த சரியான மதிப்பீட்டுக்கு மக்கள்வராதிருக்கப் பாடுபடுகிறார்.இது, ஒருவகையில் பார்ப்பனர்கள்இன்று தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுவதுபோன்றது.அதாவது, ஜெயலலிதாவையும் கவனித்துக்கொள்ள முடியுமென்கிறேன்.


வீன் பல்கலைக்கழகப் பின் கற்கையியல் மாணவன்பரணியின் வயதையொட்டிய ஆறாவடுச் சயந்தன் கதிர் பரணியின் இத்தகைய நடவடிக்கைக்குச் சமீபத்துள் எங்கோவொரு குறிப்பில்சொன்ன கருத்து:" பரணி, சின்ன விடலைகளுக்கு உசுப்பேத்திக் கதைவிடுகிறார்"என்பதாக இருந்தது.


ஆனால்,நாம் தொடர்ந்து கூறினோம் பரணி இத்தகையவழியில் இளைஞரைச் சிந்திக்கவிடாது புலிகளுக்கு ஒளிவட்டம் கட்டி மாயயை ஏற்படுத்துவது அந்நியச்சதி. இளையர்களைத் தொடர்ந்து போலித்"தமிழீழ" க் கனவின் வழி மழுங்கடிப்பதற்கான வியூகம் இதுவென்றோம்.அதுதாம் உண்மையென்பதைப் பல்கலைகழக மாணவர்களது கலகம் குறித்த பரணியின் உரையாடலின் மூலமும் ,புலி மாணவன்-இளய போராளி தெய்வீகனது இந்திய மண்ணில் இருத்தலுக்குட்ட பாதுகாப்பும் இன்னும் அதிகமாகப் பரணியின் பாத்திரத்தை உறுதிப்படுத்தும்

பரணி கடந்த 2012 கார்த்திகை மாதம் ஆரம்பத்திலேயே யாழ்ப் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் உறுமுகிறார்கள்-ஒரு புரட்சி வெடிக்கும்,அது துனேசியாவைப்போல வெடிக்கும் என்றெல்லாம் கதைவிடத் தொடங்கினார்.இது திட்டமிடப்பட்ட சதிகளது முன்கூட்டிய தொடர்பு,அதன்வழியான பின்புலச்சக்திகளது உரையாடல் மூலமாக அவர் பெற்றுக்கொண்டபின் அதை அவிட்டுவிட்டார்.

இப்படிப் புலிகளால் வளர்க்கப்பட்ட பல மாணவர்களே இந்திய உளவுப்படைகளால் இப்போது உள்வாங்கப்பட்டு முழுக்க முழுக்க இந்திய நலனுக்கான தெரிவில் புலியைப் போற்றியும்,தேசம்-தேசியம்-தமிழீழம்"என்று கருத்துக்கட்டி மக்களைப் புதிய தெரிவுகளிலிருந்து அப்புறப்படுத்த்தித் தொடர்ந்து புலிக்கனவில் வைத்து ஒடுக்குவதற்கான கூட்டுக்கள்-சதிகள் தொடருகிறது.

இதை எங்ஙனம் முறியடிப்பது?

மக்களைத் தவறான பாதைக்குள் தள்ளிப் பலியெடுக்கும் இந்திய-மேற்குலக-இலங்கைச் சதிக்கார லொபிகளுக்கும் அவர்களது "இயக்க-கட்சி-புரட்சிக்குள்ளிருந்து" அடுத்த தலைமுறையை எங்ஙனம் காக்கப்போகிறோம்?

அரபுத் தேசத்துள்அமெரிக்க மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியத்துக்காகச் சாகும் அரேபியர்கள்போன்றோ அல்லது தமிழீழப் போராட்டத்தின் மூலம் அந்நியர்களுக்காக நமது மண்ணில் வீழ்ந்த பல இலட்சம் மக்களைப் போன்றோ இனியும் மக்களைச் சாகடிக்கும் அரசியலைப் புரட்சி-விடுதலை என்று வகுப்பெடுப்பவர்களைக் குறித்து எப்படிப் பார்ப்பது?

அந்நிய ஏஜென்டுகளை-கூலிகளை,லொபிகளை புரட்சிக்காரர்கள், விடுதலைப் போராளிகளென்றுரைக்கும் முட்டாள்தனத்தை எப்போது விடப்போகிறோம்?

குறைந்தபட்சமாவது சாத்திரியின் இத்தகைய உண்மை கூறிலின்வழியாவது சில சதிகளை கருத்து ரீதியாவுணர்ந்தாலும் செயற்பாட்டில் இத்தகைய குழுக்களை,புலத்தில் புரட்சிப்படங்காட்டும் புலிப்பினாமிகளையெல்லாம் வெற்றிகொள்ளும் ஆற்றலை முழுமையான உண்மை கூறற் கருத்துக்காளாலும் அது சார்ந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் பெறமுடியும்.

ஒரு சிறு பொறியை எழுப்ப முடியும்.

அந்த வகையில் சாத்திரியும் தமிழீழப் போராட்டத்தின் மூலமான சதி வரலாற்றை ஒரளவு மக்கள் அறிவதற்கு முக்கியமானவொரு பங்கைச் செய்திருக்கிறார்.


ப.வி.ஸ்ரீரங்கன்
29.01.2013

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...