Thursday, November 13, 2008

எமக்குப் பெரு வழியாகினாய்

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க!

அண்ணாவுக்கு அகவை ஐம்பது
ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு
அன்பொழுகும் உங்கள் அகத்தை
என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள்

வாழ்வுப் பெரு வெளியில் ஐம்பது
சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில்
பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள்
அகவை ஐம்பதென்பதும் ஒரு படி நிலை

பார்ப்பதற்குக் கனிவும்
பழகுவதற்கு இனிமையும்
ஏந்தப் பெற்ற என் அண்ணா
எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து

எவருக்கும் இரக்கமுறும் இதயம் பெற்றாய்
இன்புற்று இனிதாய் உணரும்
உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள்
நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி!

எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள்
வாழத்தக்க முறைமைகள் தாங்கி
வருவோருக்கு இன்முகமாய்
இனித்தே இதயம் திறப்பாய்

இன்றுனக்கு ஐம்பது!
அளப்பெரிய புருஷனாகி
அகவை ஐம்பதுக்குள்
அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய்

இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும்
உன் இதயப் பெருவெளியின்
இருப்பை உறுதி செய்ய
உலகின் உய்விப்புக்கு இப்படியும் ஒரு வடிவம்

நீ,இந்தப் பயணத்துள்
என்றும் இளையவனாய்
இளைப்பறியா எங்கள் வழித்துணையாய்
இருக்கக் கடவாய்!

இதயத்தின் அதிர்வுகளனைத்தும்
உன்னுறவின் பெரு வியப்பில்
எமையாழ்த்தும் ஒவ்வொரு துடிப்பாய்
இயக்கமுறும் எம் உயிர்ப்பில்

தாமோதரமெனும் நாமம் கொண்டு
இன்னும் மகிழ்ந்தோயா இதயத்தோடு
இனிதே நீ ஈரைம்பதாண்டுகள்
எங்கள் இதயத்தோடு இணைந்திருக்க

வாழ்க நீ,
வையகம் போன்றே,
எந்தத் திசையிலும் கொலுவுறும் மழலைச் சிரிப்பாய்
மகிழ்ந்தே இருப்பாய்-நீ நலந்தாங்கி,வாழ்க நீடூழி!!!

3 comments:

கொழுவி said...

ஐம்பத்து நான்குதானே.. இவர் என்ன அண்ணாவுக்கு வயது ஐம்பதென்கிறாரே என்ற டவுட்டுடன் வாசித்து கொண்டு வந்தேன்.

அட.. கடைசியில அது வேறு யாரோ :) :) :)

Sri Rangan said...

கொழுவித் தம்பி,வணக்கமடா.

ஐம்பத்திநான்கு அகவையாகும் அண்ணாவை வாழ்த்தும் தகுதி,இந்தப் பரதேசிக்கு இல்லைத்தம்பி.

அண்ணாவும் எப்போதும்போல நம்மட வாழ்த்தையெல்லாம் பொருட்படுத்துவதும் இல்லை!

அவரை வாழ்த்தும் தகுதி ஈழத்து ஆஸ்த்தான கவி-அந்த ஆணவக்காரனுக்குத்தாம் உண்டு!நாம இப்படிச் சாதரண அண்ணாக்களைத்தாம் வாழ்த்துவோம்.

நன்றி.

எங்கே,நீண்ட நாட்களாக உமது தலைக் கருப்பைக் காணயில்லை?

கொழுவி said...

நம்மட தளத்தை ஒருதடவை பாருங்களேன். உங்களுக்கு விளம்பரமெல்லாம் தந்து பொலிவாய் புதிதாய் வந்திருக்கிறம் :)

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...