குருதியும் கண்ட தமிழகத்தில் பார்ப்பனப் பாசிசத்துக்குப் பாடம் புகட்டலாம்.
"தமிழகத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன
இந்துவெறியர்களுக்கெதிரான தாக்குதலானது பார்ப்பனியத்துக்கும்,இந்துமதப்
பாசிசத்துக்கும் எதிரானதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அன்றேல்,சமுதாயத்தில்
நிலவுகின்ற பார்ப்பனியப் பண்பாட்டுச் சீரழிவை மாற்றியமைப்பதற்கானதாகவும் அதன்
அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களையும் தவிடுபொடியாக்கும் போரைச் சிதைப்பதில் இத்தகைய
தாக்குதல்கள் வழிசமைக்கும்."
மு.கருணாநிதி அவர்களின் தலைக்கு விலைபேசும் சனாதனவாதியான இராம்விலாஸ் பாசிஸ்டின் கருத்துக்கு எதிரானதாகத் தமிழகமெங்கும் பரவலாக நடைபெறும் எதிர்ப்புணர்ச்சிச் சம்பவங்கங்கள் யாவும் ஏதோவொரு மனிதரின் தனிப்பட்ட கூற்றுக்காகவும்,அது முழுக்க முழுக்க இன்னொரு தலைவரின்மீதான வன்முறையாகவும் கட்டப்பட்ட கருத்தின் வாயிலாக இடம்பெறுவதாக நிகழும் சம்பவங்கள், ஒருவகையில் அதன் உட்பரிணாமத்தை மறுக்கும் இன்னொரு பக்க விளைவுக்குக் காரணியாக இருக்கலாம்-இருக்கப் போகிறது.
இந்தச் சம்பவத்தை வெறும் தனி நபர்களுக்கிடையிலான பிணக்காக உணரும் நிலையைக் கடந்து,இந்தியாவை மறைத்துவரும் காவிப் புழுதியின் பாசிச அபாயமாக உணர்வது மிக முக்கியமாகும்.வட இந்தியாவில் இரத்த ஆற்றை ஓடவிட்ட பார்ப்பனிய-பனியா சாதிகளின் திமிர்த்தனமானது இங்கே தமிழ்நாட்டைச் சீண்டுவதன் மூலமாக இந்த மண்ணைப் பார்பனியத்துக்கேற்றவாறு பண்படுத்தும் பாரிய சமூக உளவியலை மெல்லவுருவாக்கும் காரியத்தில் ஆர்.எஸ்.எஸ்-பாரதிய ஜனதா மற்றும் இந்துத்துவப் பரிவாரங்களும் அரசியல் ரீதியாக முனைப்படைவதற்கான முன் முயற்சியில் இறங்கியபோது, தமிழ்நாட்டை அவமானப்படுத்துவதற்கான குறியீடாகக் கருணாநிதி அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது.இது, ஒரு வகையில் மாறிவரும் சூழலுக்கேற்றவாறு இந்து-இந்தி-இந்தியத் தயாரிப்புக்காவும் அதனூடாகக் கட்டியெழுப்ப முனையும் அடிமைச் சமுதாயத்துக்கான எல்லையை மேலும் விஸ்தரிப்பதற்காவும்,அந்தத் தரணத்தோடு தரகு முதலாளியத்துக்கு எதிராக வளர்ந்துவரும் கம்ய+னிசத்துக்கெதிராகவும் தம்மை நிலைப்படுத்த அகலக் கால்விரிக்கும் இந்துமதப் பாசிசமானது காலாகாலமாகப் பண்பாட்டுத்தளத்தில் பதியம்போட்ட கருத்தியற்றளத்தோடு தன்னை மீள் உருவாக்கஞ் செய்வதற்கான பரிட்சாத்தத்தைத் தமிழகத்தில் செய்வதின் எதிர்வினை(எதிர் நடவடிக்கை) நம்மிடம்(தமிழகத்தில்) நிகழ்ந்து வருகிறது.
"பண்பாட்டுத்தளத்தில் பதியம்போட்ட பார்ப்பனியம் பாடையிற் போவது புரட்சிக்குள் மட்டுமே நிகழும் தோழர்களே!"
பார்ப்பனியத்தை தமிழர் பண்பாட்டுத்தளத்தில் மெல்லப் பதியம் போட்டது எவர்?,இதுநாள்வரைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இதைக் கடைவிரித்து மக்களைப் பார்ப்பனியப் பண்பாட்டிற்கு அடிமையாக்கிய கயவர்கள் தமிழகத்தை ஆளும் கட்சிகளும் அவர்களது வெகுஜனக் கல்வியும் அதன் வழி சமுதாய அரங்குக்குப் படையெடுத்த ஊடகங்களுமே.இத்தகைய ஊடகங்களை வைத்து நாளும் பொழுதும் மக்கள் அரங்கில் காவிப் புழுதி தோய்ந்த கதைகளாலும்-காட்சிகளாலும் பாப்பனிய மயப்படுத்தி உழைப்பவர்களை அடிமைப்படுத்திய ஓட்டுக்கட்சிகள் இந்த இழிசெயலுக்கு வழிவகுத்தவர்களாகிறார்கள்.
இங்கே, கருணாநிதி அவர்களின் குடும்ப ஊடகமான சன் தொ(ல்)லைக் காட்சியினதும் மற்றைய ஊடகங்களினதும் மிகக் கெடுதியான தீங்கின் விளைவாக இன்றைய தமிழகத்துக்குத் தீங்கு காவி நிறத்தில் வருகிறது.பார்ப்பனியத்தை வேரோடு சாய்க்க வேண்டிய தமிழகத்தின் ஆட்சியமைப்புகள் பார்ப்பனியத்துக்குக் கரசேவகர்களாக இருந்த இந்தக் கணம்வரை நாம் இவர்களின்(தி.மு.க-அ.தி.முக. மற்றும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும்,போலிக் கம்யுனிஸ்டுக்கும் )கொடிய இழி செயலை வர்ணிக்க முடியும்.
கருணாநிதி அவர்களின் தலைக்கு உலை வைக்க முனையும் பார்ப்பனப் பாசிசத்தின் அதீத அடிப்படை வாதமானது ஏலவே அப்பாவித் தொழிலாளர்களைச் சாதிரீதியாகப் பிரித்துக் கொடிய வன்முறையை ஏவிக் கொலை செய்தது.இத்தகைய கொடிய பார்ப்பனப் பாசிசத்தைத் தமது ஏவல் நாயான தமிழகத்துப் பொலிசை வைத்துக் காத்து வந்த கருணாநிதி-ஜெயலலிதா கும்பலுக்கு என்ன அருகதையுண்டு இந்தப் பார்ப்பனப் பாசிசத்தைப் பற்றிக் கதையளக்க?
இதன் உண்மையை அறிந்த கருணாநிதியோ மெல்ல அடக்கி வாசிக்கிறார்.
பிழைப்புக்குத் தமிழ்வாதம் புரியும் கூலிக் கவிஞர்கள் வைக்கும் ஓப்பாரியோ மீளவும் இந்தப் பிரச்சனையைத் தனிப்பட்டவொரு இந்துமத வெறியனின் கருத்தாகக் குறுக்கிவிட முனைகிறது.இங்கே, இந்தப் புல்லுருவிகளிடம் மக்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
இன்றைக்கு நிகழும் இந்தப் பார்ப்பனியப் பாசிசத்துக்கெதிரான இந்தவுணர்வைத் தொடர்ந்து சமுதாயமட்டத்தில் ஆவேசமாக விருத்திக்கிட்டுச் சென்று, அந்தப் பார்ப்பனியத்தின் முதுகெலும்பை உடைப்பதற்கான எதிர்த் தாக்குதல்களை நடாத்திப் பார்ப்பனியப் பயங்கரவாதத்தை இந்திய எல்லையைத் தாண்டி அழித்துவிட வேண்டும்.இதற்கான போரைத் தொடர்ந்து நடாத்தி வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தோடு தோள் சேர்ந்தும் தொழிலாள வர்க்கத்தோடு இணைந்தும் இந்தப் பாசிசத்தைத் தொலைத்துவிட முயற்சி எடுத்தாகவேண்டும்.
ஆனால்,உண்மையில் இந்தப் போராட்டம் தமக்கு எதிராக வளரும் என்பதைக் கருணாநிதி அவர்கள் நன்றாக அறிவார்.எனவே, இப்போராட்டம் பிசுபிசித்துப்போவதென்பது உண்மையான யதார்த்தமாக இருக்கிறது.தமிழ்நாட்டை ஒட்டச் சுரண்டும் இந்த ஓட்டுக்கட்சி அரசியலும் அதனால் பாதுகாக்கப்படும் ஆளும் வர்க்கமும் (கருணாநிதிகூட ஆளும் வர்க்கத்துள் ஒரு பிரிவுதாம்.அவரிடம் குவிந்துள்ள தமிழ் நாட்டின் செல்வத்தின் மதிப்பு இலட்சம் கோடியைத் தாண்டும்.)பார்ப்பனியப் பாசிசத்தால் தன்னைக் காத்து வருகிறது.இந்தப் பார்ப்பனியத்தின் இருப்புக்கு மிக அவசியமான அரசியல் பொருள்ளியல் அடித்தளமானது இதை ஒருகட்டத்துக்குமேல் நகர்த்தாது.இதை மிக ஒழுங்காகப் புரிந்துகொண்ட பார்ப்பனர்கள் கொடுப்புக்குள் சிரித்தபடி கமுக்கமாக இருக்கிறார்கள்.ஆனால், நமது தோழர்களோ அந்தா இந்தா"ராவண லீலை"என்றெல்லாம் குதிப்பது சிறுபிள்ளைத் தனமானது.
போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.
அது, தொடர்ந்து பல்முனைத் தளங்களில் நடப்பது.அங்கே, ஒழுங்கமைந்த புரட்சிகரக்கட்சியின் பின்னே அணிதிரளாத தன்முனைப்புப் போராட்டம் ஒரு சில நொடிப்பொழுதில் காணாது போய்விடும்.இன்றைய தமிழகத்தின் இந்த உந்துதலுக்குப் பின்னாலுள்ள சக்திகள் இந்தப் போராட்டவுணர்வைத் தமது எல்லைக்குட்பட்டவரை அநுமதித்துவிட்டு அடக்கிவிடும்.
இதை அறியாதவர்கள் அவதிப்பட்டு,அந்தா-இந்தாவென்பது ஆரியக் கூத்தின் அடுத்த கட்டமாகப் போகிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
24.09.2007
No comments:
Post a Comment