Monday, April 09, 2007

கிட்லர்-ஸ்டாலின்-உடன்பாடு(Hitler-Stalin-Pakt) .

கிட்லர்-ஸ்டாலின்-உடன்பாடு(Hitler-Stalin-Pakt) .


அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் மற்றும் தோழர் இரயாகரன் அவர்களும் ஓரளவு இது குறித்து விவாதித்திருக்கிறார்கள்.தோழர் இரயாகரன் கூறுவது போன்று வரலாற்றை- கிட்டலர்-ஸ்டாலின் இருவருக்குள்ளும் வரலாற்றைத் திரித்துக் குறுக்குவது மிகவும் கபடத்தனமானதுதாம்.தோழர் இரயாகரன் கூறுவது:"அரவிந்தன் நீலகண்டன் போன்ற பார்ப்பனிய அறிவிலிகள், பூணூலிட்டு மனித வரலாற்றை பார்ப்பனியமாக்கிவிட முடியாது. அதுபோல் மனித வரலாறு ஏகாதிபத்தியமயமாகி விடாது. நிகழ்கால சமுதாய கொடுமைகளுக்கு பதிலளிக்க முடியாது, அதைப் பாதுகாக்கும் பார்ப்பனியம் கடந்த காலத்தை திரிக்க முனைகின்றது. அரவிந்தன் நீலகண்டன் என்ற அறிவிலி வரலாற்றை ஹிட்லர், ஸ்ராலின் ஊடாக திரிக்கின்றது. உங்களுக்கு வரலாற்றைச் சொல்லித்தரும் ஏகாதிபத்தியம் என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் அவர்கள் சோவியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்ய மறுத்தார்கள்? ஏன் ஹிட்லருடன் செய்தனர்? இப்படி மறுபக்கத்தை மறுக்கும் பார்ப்பனியம் எப்படிப்பட்டது என்பதற்கு இந்த சாதிய சமூக அமைப்பே ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்றை ஸ்ராலின், ஹிட்லர் என்று மட்டும் சுருக்கி காட்டும் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும், எதைத்தான உழைக்கும் மக்களுக்கு சொல்ல முனைகின்றது?"இங்கே தோழர் இரயாகரன் குறிப்பிடுவதும், கேட்பதுவும் மிகவும் சரியானதுதாம்.எனினும்,அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளே அத்தகைய ஒரு ஒப்பந்தத்துக்குள் ஸ்டாலினையும்-கிட்லரையும் உந்தித் தள்ளியதென்பது ஒரு பகுதி உண்மைதாம்.அன்றைய காலத்து வரலாற்றை நேரடியாக அனுபவித்தும் பின்னாளில் தனது கல்விப்பணியாலும் மிக ஆர்வத்தோடு வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இருந்த ஜேர்மனியப் பேராசிரியர் திரு.கார்ல் டீட்றிக் ஏர்ட்மான்;(Prof.Dr.Karl Dietrich Erdmann)ஜேர்மனிய வரலாற்றை எழுதியுள்ளார்.அவர் பல பத்துத் தொகுதியாக இராண்டாம் உலக யுத்தம் பற்றிய வரலாற்றைத் தொகுத்து எழுதியுள்ளார்.அவரது வரலாற்று ஆவணத் தொகுப்புகளிலருந்தும்;(Handbuch der Deutschen Geschichte Band 1-24) மற்றும் ஜேர்மனியப் பேராசிரியர்கள் திலோ போகில்சாங்;( Prof.Dr.Thilo Vogelsang)அவர்கள் எழுதியDas geteilte Deutschland எனும் வரலாற்றுப் பதிவிலுருந்தும்,திரு.மார்ட்டின் ப்றோசாட்;(Prof.Dr.Martin Broszat)அவர்கள் எழுதியDer Staat Hitlersஎனும் வரலாற்று நூலிலருந்தும் நாம் இந்த விவகாரத்தை அணுகப் போகிறோம்.

வரலாற்றை எவருக்காவும் பூசி மெழுக முடியாது!அது கிட்லராக இருந்தாலென்ன அல்லது ஸ்டாலினாக இருந்தாலென்ன நாம் உண்மைகளைப் பேசியாக வேண்டும்.நமது தேவை மிக ஆராக்கியமான மனித விடுதலைக்கான புரட்சிகர அமைப்பாண்மையாகும்.இங்கே தோழர் இரயாவின் எழுத்துப் பேசுவது ஸ்டாலின்மீதான விமர்சனங்களைச் சரியான வகையில் பேசவில்லையென்றே எண்ணுகிறேன்.இந்த இடத்தில் அரவிந்தன் நீலகண்டன் முன்வைக்கும் எழுத்துக்கள் அவரது சொந்தச் சரக்கல்ல.அது பலபத்து ஏகாதிபத்தியப் பேராசிரியர்கள்,அவர்கள் சார்ந்திருந்த வர்க்கத்தின் அபிலாசைகளை இராண்டவது உலகப் போராட்டத்தனு}டாகப் பார்க்கப்பட்ட முறைகளில் அவர்களின் ஆர்வங்களைப் பேசியதே.அரவிந்தன் எடுத்துப் போட்ட இந்தத் தரவுகள் மிகவும் பிற்போக்குத்தனமான அரசியலுக்கும் அதை அநுபவிக்கத் துடிக்கும் ஒடுக்குமுறை வர்க்கத்துக்குமான வரலாற்றுத் தொடர் நிகழ்வின் மனவிருப்போடு சம்பந்தப்பட்டது.இங்கே நாம் இவற்றைக்கடந்து மனித விடுதலையைச் சாதிப்பதற்கான சமத்துவ சோசலிசச் சமுதாயத்தைப் படைக்கும் புரட்சிகரக் கட்சியின் தேவையையும் அதன் நேர்மையான போராட்டத்தையும் வேண்டி இவ்விவகாரத்தை விவாதிக்கவுள்ளோம்.

கட்சிசார்பு அரசியிலிலோ அல்லது இயக்கவாத மற்றும் பார்ப்பனிய-காவி அரசியல் அபிலாசையுடனோ நாம் இவ்விவகாரத்தைப் பிரித்தெடுத்து விவாதிக்க விரும்பவில்லை.அன்றைய வரலாற்றுத் தவறுகள் இன்று நம்மை இவ்வளவு தூரம் ஒடுக்குவதற்கு உடந்தையாகியதும் அதன் வாயிலாக சோசலிசக் கட்டமைப்புகள் தகர்ந்து தவிடு பொடியாவதற்கான கால அவகாசத்தை ஏகாதிபத்தியங்களுக்கும் பின் அதன் மூர்க்கமான எதிர்ப் புரட்சிக்கும் வழிவிட்டன.இங்கே சோவியத்தின் அரசியல் அஸ்தமனம் வெறும் வார்த்தைகளால் ஒற்றைத்தனமாக அந்நியச் சதி-ஏகாதிபத்தியம் என்று நாம் கூட்டிக் கழிக்க முடியாது.தலைமையிலிருந்த அன்றைய தலைவர்களின் அரசியல் வியூகத்தோடு சம்பந்தப்பட்டிருந்த இந்த விடையத்தை நாம் மிகக் கவனமாக விவாதித்துப் பிற்போக்கு சக்தியான இந்த ஏகாதிபத்தியத்தையும் அதன் அடிவருடிகளான மூன்றாம் உலக அரவிந்தன் நீலகண்டன்களையும் எதிர்த்து முறியடிப்பது அவசியமாகும்.இவர்கள் பயன்படுத்தும் சோவியத் தலைவர்களின் வரலாற்றுத் தவறுகளை நியாயமாக ஒத்துக்கொண்டு,அவற்றை வரலாற்றுக் கட்டங்களோடு பொருத்தித் தவறின் உட்-பிற காரணங்களை விளங்கிக் கொண்டால் மட்டுமே நமது நோக்கம் ஆரோக்கியமாகும்.அன்றைய மனிதப்படுகொலைகளை இயக்க-கட்சிவாத அரசியலுக்காக நாம் கண்மூடித் தள்ளிவிட முடியாது.வரலாற்றுத் தவறுகளிலிருந்து பாடங் கற்க மறுக்கும் எந்த அரசியல் முன்னெடுப்பும் நமக்கு உகந்ததல்ல.நாம் அநுபவித்துவரும் இன்றைய கொடிய சூழலில் இத்தகைய விவாதங்களுடாக வரலாற்றை அதன் உண்மைத் தனத்தோடு புரிவதும் புதிய உத்வேகத்தோடு போராட்டச் செல் நெறியைத் தகவமைப்பதும்(அது எத் தளத்தினதும்)மிக மிக அவசியமாகும்.

இந்த வகையில் இரண்டாவது உலக யுத்தத்தை உந்தித் தள்ளியது கிட்லர் என்ற தனிமனிதனின் விருப்பல்ல என்பதும் அதை உற்பத்தி செய்த வர்க்க அரசியலில் ஆளும் வர்க்கமாக இருந்த பெரும் தொழிற்பேட்டைச் செல்வர்களும் அவர்களின் தொழிற் சாலைகளின் மூலவளத் தேவைகளுக்கும் அவசியமான இந்தப் போர்கள் கிட்லரை மட்டும் வரலாற்றில் பொம்மையாக ஆட்டவில்லை என்பதும் வரலாற்று உண்மையெனும் தறுவாயில் இந்தவுலகத்தின் மூலதனவாதிகளின் இருப்பும் அவர்களின் ஆர்வங்களும் எத்தகைய மனித விரோத்தன்மையானதென்பதும் அம்பலமாவது அவசியமாகும்.

கிட்லருடன் ஒப்பந்தமிட்டுக் கையெழுதிட்ட பின் இருஷ்ய அதிபர் ஸ்டாலின், கைகளில் கிளாஸ் குவளை நிரம்பிய சம்பான்யாவை வைத்துக்கொண்டு"சியர்ஸ்"பண்ணியது கிட்லருடன்.பின்பு அந்தக் கூட்டத்தில் கிட்லர் குறித்துக் கருத்துத் தெரிவித்தபோது:Stalin brachte nach der Unterzeichnung(Auf der Grundlage des Neutralitätsvertrages zw. der SU und dem deutschen Reich vom April 1926 wurde am 23.08.1939 der deutsch-sowjetische-Nichtangriffspakt(Hitler-Stalin-Pakt) geschlossen.) einen Trinkspruch auf Hitler aus: „ich weiß,wie sehr das deutsche Volk seinen Führer liebt; ich möchte deshalb auf seine Gesundheit trinken!"-38 Rossi, A.: Zwei Jahrzehnte deutsch sowjetisches Bündnis. Köln 1954, S. 50 f."."ஜேர்மனிய மக்கள் தங்கள் தலைவர்மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார்கள் என்று நான் அறிவேன்,ஆதலால் அவரது ஆரோக்கியத்தின்பாலாக இதை(சம்பான்யா) அருந்துகிறேன்"-ஸ்டாலின்.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2007

No comments:

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...