அன்பு வாசகர்களே,வணக்கம்!
கடந்த(10.04.07) சில வாரங்களாக தலையில் பலமாக அடிபட்டு வைத்தியசாலையில் கிடந்தேன்.வீட்டு வேலைக்காக(நாற்காலியில் நின்று கதவுப் பிணைச்சல் திருத்தியது) ரோல் நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்தபோது,திடீரெனக் கதிரை ஓடத்துவங்க நான் பிடரி அடியுண்டச் சுவரில் மோதி,மண்டையோடு வெடித்தும்,மூளை குலங்கியும் வைத்திய சாலையில் கிடந்தேன்.
இப்போது ஓரளவுதாம் நலமுடையேன்.தொடர்ந்த தலை வலியும்-தலைச் சுற்றும் நிகழ்வதால் மேற்கொண்டு எழுத முடியவில்லை.பூரண நலமடைந்தபின் தொடர்கிறேன்.
அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
26.04.07
10 comments:
நீங்கள் விரைவில் குணமடைய என் அன்பும் பிரார்த்தனைகளும்.
நன்றி,டி.ஜே!
சிறிரங்கன்!
குணமுறப் பிரார்த்திக்கின்றேன்.
அன்பு மலைநாடர்,தங்கள் பிரத்தனைக்கு என் நன்றி.
வணக்கமண்ணை.
அவ்வப்போது நினைத்ததுண்டு காணவில்லையென.
விரைவில் குணமடைவீர்கள். வருவீர்கள்
வணக்கம்
தோழரே முதலில் உங்கள் உடல் நலத்தில் கவனம் எடுங்கள். தங்களை குணமாக்கியபின்னர் தங்களின் வரலாற்றுக் கடமையை தொடரலாம். மனித மனங்களே சின்னாபின்னப்பட்ட நிலையில் மனவுழைச்சல் என்பது இன்றும் அதிகமாக ஏற்படும். நோவின் வலியும் நடக்கின்ற கொடுமைகளின் கொதிப்பும் உடல் வியாதியையும் அதிகப்படுத்தும் உடல் நலத்தில் கவனம் எடுங்கள்.
சுதன்
ஸ்ரீரங்கன்,
விரைவில் நலம் பெற விழைகிறேன்.
//ரோல் நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்தபோது,//
நான் இனி இப்படிச் செய்யமாட்டேன்.
நலம் பெறுங்கள்!
அன்புக் கொழுவி,தோழர் சுதன்,என்றும் பரிவுடைய பெயரிலி,அன்புச் சுந்தரவடிவேல்,அனைவருக்கும் என் நன்றி.
இப்போதுதான் இதைப் பார்க்கிறேன். வலைப்பூவில் அதிகம் வருவதில்லை.
தங்களைப்ற்றிய பாதுகாப்பு பற்றிய கவலை அற்ற செயற்படுவதில் தமிழர்களின் மனோநிலை ஒன்றாகவே உள்ளது.
இது கவலைக்கு உரியது.
Post a Comment