வணக்கம்!
சொல்லத் தக்க விஷயங்கள் பல, வெவ்வேறு தரணங்களில் பேச முடியாது போய்விடுகிறது.அதைப் பேசித்தாம் ஆகவேண்டுமென்றும் எந்தக் கட்டாயமும் இல்லை!
எனினும் சொல்லிவிடத் தூண்டும் நிகழ்வுகள் சதா நம்மைச் சுற்றி நிகழ்ந்தபடியே...
உலகம் என்றுமில்லாதுவாறு சுருங்கிவிட்டது.இந்தப் புவிப்பரப்புமீது ஆதிக்கஞ் செய்யும் பெரும் தொழிற்கழகங்களும்,அவைகளின் விய+கங்களும் மனித வாழ்வை-வாழும் சூழலை,உயிர் வாழும் புற வலையத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளது.ஒரு இனத்தின் இருப்பை-அவைகளின் நியாயப்பாடுகளை,உரிமைகளை,குறிப்பிட்டவொருவினத்தின் உயிர்வாழும் உரிமையை,சமூகத் தகுதியை இவை காலில் போட்டு நசித்தழிக்கின்றன!
மூன்றாமுலகத்திலுள்ள பற்பல நாடுகளில் தேசியவினப் போர்கள் நிறைவுக்கு வரமுடியாது சிக்கலுக்குள் தள்ளிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.உதாரணமா பாலஸ்தீனம்,காஷ்மீர்,நாகலாந்து,ஈழம்... என்று தொடர்ந்து செல்கிறது.வாழத் துடிக்கும் பல தேசிய இனங்கள் எந்தவுரிமையுமின்றிப் போர்களால் மடிந்து போகின்றன.யுத்தங்களால் சூழல் வலுவாகப் பாதிப்படைகிறது.இதனால் பாரிய விஷக் கிரிமிகளின் கொடிய தாக்குதல்வேறு அடிப்படை வசதிகளற்ற மக்களைத் தினமும் அழித்தபடி...
இவையெல்லையற்ற தொடர் நிகழ்வாய் உலகம் சுழன்றபடி.சுழலும் ஒவ்வொரு நொடியும் இப் புவியில் உயிர்வாழப் போராட்டம் நிகழ்ந்தபடி.புவிப்பரப்பு அமைதிப் ப+ங்காவல்ல!-அது போராட்டக்களம்.
இந்தப் போராட்டக் களம்(ஆளும் வர்க்க அடக்கு முறை) விருப்புடையதல்ல!இது மனிதவிரோதமானது.
இந்த மனித விரோதப்போக்கை மனிதர்களின் குவிப்புறுதி மனதைக் கடந்த உற்பத்திப் பொறிமுறையும்,நிதி மூலதனமுமே நடாத்திச் செயற்படுத்தி வருகிறது!
நாம் எமது தலைமுறைகளோடு இந்த உயிர்வாழும் தகுதியை இழந்துவிடும் நிலைமை நெருங்கி வருகிறது.
எங்கும் யுத்தம்!
எதற்காகவென்றே தெரியாதபடி,அமைதிக்குச் சமாதானத்துக்கு,ஜனநாயகத்துக்கு-மனிதவுரிமைக்கு என்றபடி சதா போர் நடாத்தப்படுகிறது.
பல தேசத்து இராணுவங்கள் ஒன்றுகூடிக் கொண்டு ஜ.நா.ப் படைகளென்று பம்மாத்துப்பண்ணி மேற்கத்தைய நாடுகளின் தலைமையில் மூன்றாம் உலகமெனக் கூறப்படும் கனிவளமிக்க நாடுகளை வேட்டையாடி வருகின்றன!
இந்த மையமான மனித வதைச் சூழலில் எந்த மனிதரும் உலகத்தின்-இயற்கையின்,இலக்கியத்தின்-கலையின் அழகைப் பேசமுடியாது!அப்படிப் பேசிக் கொண்டால் அது அவரவர் அறிவீனத்தையல்ல இந்தச் சமுதாயத்தின் அக்கறையற்ற சமூகவெண்ணவோட்டத்தையேதாம் வெளிச்சப்படுத்துகிறது.
மனிதர்களின் வாழ்வை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல,வாழ்நிலையே உணர்வைத் தீர்மானிக்கின்றது.இந்த வாழ் நிலையில் நமது உணர்வு மேற்காணும் நோக்கு நிலைக்குள் சுற்றியே பின்னப்பட்டுள்ளது!
புயலடிக்கும்,கடல் நீர் கொந்தளித்து படகுகள் நீரில் அமிழ்ந்து போகின்றன!பல பத்து மக்கள் இந்தக் கோரத்தில் நாளும் பொழுதும் இறந்துபோகிறார்கள்!இது எங்கே?
சொற்கத்துக்கும் நரகத்துக்கும் எல்லையிடப்பட்டதாக உணரப்படும் இஸ்பெயினுக்கும் மேற்கு ஆபிரிக்காவுக்குமான எல்லைப் புகுமுகத்தில்.இத்தாலிய,இஸ்பெயின் கடற் தீவுகளில் வந்திறங்கும் ஆபிரிக்க மக்களை நாயிலும் கேவலமாக அடித்து விரட்டும் மனித அவலம் இன்னும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.அப்பாவி ஆபிரிக்க மக்களின் வாழ்விடங்களைச் சூறையாடும் மேற்குலகத் தொழிற்கழகங்கள் அவர்களது உயிர்வாழும் சூழலை அழித்துவிட்டு,இங்ஙனம் இந்த மக்களை அகதிகளாக இடம் பெயர்ந்து சாகும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.
இந்த வாரம் நான் இத்தகையவை பற்றியே எழுதவிருக்கிறேன்.
தமிழ் மணத்தில் இந்தவாரம் எனக்கானதென முன்கூட்டித் தெரிந்திருப்பினும்,எதையும் முன்கூட்டி எழுதிவைத்துவிட்டு மணிக்கொரு தடவை பதிவேற்றம் செய்யும் நிலையில் நான் செயற்படவில்லை.பதிவேற்றம்படும் தரணம்வரை எழுதிவிட்டு,அடுத்தவினாடி பதிவேற்றுவதுதாம் எனது நிலை!இதைவிட்டுத் தயார்ப்படுத்தி எதையும் எழுதுவது கிடையாது.(தினமும் எனது உணர்வு வெளிக்குள் சிறைப்படும் சூழலே என்னை எழுதத் தூண்டுபவை.இந்தப் புற நிலைகளின் தன்மையே எனது சிந்தனைகளைத் தூண்டுவதால்,நான் இந்தச் சமூகத்தில் கால் பதித்து இருக்கிறேன்.இதைக் கடந்து வானத்தில் எம்பிக் குதித்து-எனக்கு முன் நிகழ்பவற்றைத் தாண்டி அழிகியல் பேச முடியாது,தத்துவம் பேசிக் கொள்ளவும்,தவப் பயன்களை அறிவிக்கவும் முடியாது.
வாங்க!நமது கால்களில் மிதிபடும் நமது முகங்களைத் திரும்பப் பார்ப்போம்.நம்மீது சுமத்தப்படும் சுமைகளின் பாரத்தை இறக்க முனைவோம்.)
எனவே,தினமும் ஒரு பதிவு என்னிடமிருந்து வருவதற்கில்லை.அப்படி வருவேண்டுமென எவரும் ஒத்தக்காலில் தவமும் செய்யப் போவதுமில்லை.-தெரியும்!என்றபோதும்,இந்தவொரு வாரத்தில் மூன்று பதிவுகளையாவது எழுதிவிடுவேனென எனது மனது உணருகிறது.அப்படி எழுதப்படும் பதிவுகள் எமது வாழ்வின்(மனித வாழ்வின் அகதியக் கோலம்!) சீர்கேட்டுக்கான காரணங்களை அறிவிப்பதில் முனைப்புறும்.
இதை முன்மொழிவதால்,விருப்புடையவர்கள் இவற்றை வாசிப்பதற்கும்,அதற்றவர்கள் ஓடியொதுங்குவதற்குமான சாத்தியப்பாட்டின் கதவைத் திறந்துவிடுகிறேன்.
மழை மேகத்தின் நிலைத்திருப்பில் அப்பப்பத் தலைகாட்டும் கதிரவனின் நிலைதாம் எனது.
அதுவரை...
நட்போடு
ப.வி.ஸ்ரீரங்கன்
28.08.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...
12 comments:
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள் ஸ்ரீரங்கன்.
பதிவோட எண்ணிக்கை அவ்வளவு முக்கியம் இல்லீங்க.
இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்...
வணக்கம். தொடருங்கள்.
All the best adn congrats
வாங்க ஸ்ரீரங்கன் சார். வாங்க.
இந்த வார நட்சத்திரமானதிற்கு வாழ்த்துகள்.
எந்தத் தேர் எந்த வீதி போனாலும் நம்ம சோறு நமக்குள்ள போற மாதிரிதான் எல்லாமும். அந்த மாதிரிதான் இந்த நட்சத்திர பதவியும். முடிஞ்தச் சொல்லுங்க. கேட்டுக்கிறோம்.
வாழ்த்துக்கள் இந்த வார நட்சத்திரம்.
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்
அன்புத் துளசி(துளசி என்றெழுதும்போது என் அக்காள் ஞாபகத்துக்கு வருகிறாள்.தினமும் மாலையில்
துளசிச் செடிக்கு விளக்கேற்றித் தேவாரம் பாடுபாள்.)குழலி அவர்கள்,செல்வநாயகி அவர்கள்,அனித்தா பவன்குமார் அவர்கள்,ஜீ.இராகவன் அவர்கள்,மற்றும் வணக்கத்துடன்,திரு அவர்கள்,சின்னக்குட்டி அவர்கள்,எல்லோருக்கும் என் நன்றி!துளசி "பதிவோட எண்ணிக்கை முக்கியமில்லை"யென்பது சரி.
"எந்தத் தேர் எந்த வீதி போனாலும் நம்ம சோறு நமக்குள்ள போற மாதிரிதான் எல்லாமும். அந்த மாதிரிதான் இந்த நட்சத்திர பதவியும். " சரியாகச் சொன்னீங்க இராகவன் அவர்களே!முடிந்ததைச் சொல்வேன்.மீண்டும் நன்றி,எல்லோருக்கும்!
இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்...
இந்த வாரம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
உங்களின் எழுத்துக்களின் ஆழத்தில் மிளிரும் சோகம் பல நேரங்களில் முழுவதும் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்துவது என்னமோ உண்மை.
அகதி என்ற சொல்லில் இருக்கும் கொடுமை......மிக மிக வேதனையானது.
பின்னூட்டம் முக்கியம் கிடையாது. உங்களின் எழுத்தை பலரும் படிக்கிறார்கள் என்பதே உண்மை.
தேசம் பற்றி எரியும் வேளையில்
அதன் மீது பற்றுள்ளவர்களில் நீங்களும்
ஒருவர் நட்சத்திரவாரத்தில் வந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் நல்ல
பதிவுகளை எதிர்பார்க்கலாம்
துபாய் ராஜா அவர்களுக்கும்,மன்சூர் ராசா அவர்களுக்கும்,மற்றும் பெயர் குறிப்படாத நண்பருக்கும் நன்றி!தங்கள் எல்லோரினதும் வாழ்த்துக்கும்,கருத்துகளுக்கும் நன்றியுடையவனாக இருக்கிறேன்!
Post a Comment