Friday, August 11, 2006

யுத்தம் வேண்டாம்!

Rebellen: 50 tote bei Armeeangriff

Im Osten Srilanka ist es nach Angaben
der Tamilen - Rebellen der LTTE erneut zu
Artillerie und Luftangriffen der Armee
mit zahlreichen Toten gekommen.


Der LTTE- nahe Internetdienst "Tamilnet "berichtete
50 Zivilisten seien bei Gefechten in Rebellen
gebieten getötet worden. Es habe hunderte Verletzte
gegeben. ein LTTE Sprecher sagte laut Tamilnet:
" Wir können das nur als Kriegserklärung Columbos deuten".


Bei den Gefechten sollen auch Soldaten
ums Leben gekommen sein. Die Rede war
hier vom fünf Toten und 35 Verletzten.

ARD Text: Nachrichten Tagesschau ( Do. 10.08.06 )



(மேற்காணும் செய்தியை ஜேர்மன் அரச தொலைக்காட்சியின் வீடியோ எழுத்துச் செய்தி வெளிப்படுத்தியது.அது தமிழ்நெட்டிலிருந்து இந்தச் செய்தியைத் திரட்டித் தந்திருந்தது.உலக அரசுகளால் தமிழ் நெட்டும் படிக்கப் படுகிறது.

புலிகளின் செய்திகளின்படி கிழக்கிலங்கையில் இலங்கை இராணுவத்தின் வான்வழி மற்றும் ஆட்டிலறித் தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள்.புலிகளுக்குச் சாதகமான தமிழ்நெட் தகவல் தருவதின்படி 50 பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்கள்.நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமும் அடைந்துள்ளார்கள்.புலிகளின் பேச்சாளரின் கருத்து:"இத் தாக்குதலானது கொழும்பினது யுத்தப் பிரகடனமாக நாம் அர்த்தம் கொள்ளலாம்"என்று தமிழ்நெட் கூறுகிறது.இந்தச் சண்டையில் இராணுவமும் கொல்லப் பட்டுள்ளார்கள்.இந்தப் பேச்சானது 5 இராணுவம் இறந்து, 35 இராணுவம் காயமடைந்துள்ளது.

-ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி.)

யுத்தம் வேண்டாம்!

லெபனானில் குண்டு போடப்படுகிறது,ஈராக்கில் குண்டு வெடிக்கிறது,ஈழத்திலும் குண்டுகள் நாலா பக்கமும் கொட்டப்படுகிறது,மானுடம் செத்து மடிகிறது!-மடிகனக்க மழலையைக் காக்க மண்டியிட்டுக் கிடக்கிறது தாய்மை!

குருதியால் உலகம் சிவக்கிறது.

புணங்கள் வீதிகள் தோறும் அழுகி நாறுகிறது!

இந்தப் பொழுதில் எந்தவொரு மனிதராவது உலகம் அழகானதென்றும்,அற்புதமானதென்றும் எழுதமுடியுமா?

இருந்தும் பலரால் எழுதமுடிகிறது!

இன்றைய உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் மானுடவர்க்கத்தைச் சிதைத்தபடி அரசியலொன்றை நடாத்துகிறது.அதன் நோக்கு நிலையானது மனித நலனின்பாற்பட்டதென்று நாம் நம்பும்படி பழையபடி ஐயா ஜோச்சு புஷ்சு பிளேயர் கூட்டணி கருத்துரைக்கிறது."நாம் இஸ்லாமியப் பாசிசப் பயங்கர வாதிகளுக்குள் சிதைந்து போகாது எதிர்த்துப் போராடுகிறோம்,எமது இனத்தை அழிப்பதில் அவர்கள் நோக்கமாக இருக்கிறார்கள்"என்றபடி அனைத்து மக்களுக்கும் கருத்துரைக்கும் உலகத்து ஜனாதிபதிக்கு நாசாகார இஸ்ரேல் செல்லப்பிள்ளை.

பிறகென்ன!

"ஆய் அல்லா!"என்று குண்டடிபட்டுச் சாகும் அப்பாவி லெபனான்-அரபுத் தேச மக்கள் இஸ்லாமியப் பாசிஸ்ட்டுக்கள்.இந்த ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நலன்கள் தமது வருமானத்தை உத்திரவாதப்படுத்திய அரசியலை முன் தள்ளும்போது அப்பாவிகளின் அழிவுகூடப் பயங்கரவாதிகளின் அழிவென்பதாகவே (தமது) மக்கள் முன் காட்டப்படுகிறது.இது தொடர்கதையாகி நெஞ்சை வருத்தியபோது எதையும் எழுதமுடியாதவொரு இக்காட்டான சூழலுக்குள் நாம் மூழ்கிப்போனோம்.

எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அதர்மம் தலைவிரித்தாடுகிறது.அப்பாவி மனிதர்கள் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ வலுவால் அழித்தொழிக்கப்படுகிறார்கள்-அடித்து விரட்டப்படுகிறார்கள்.யாருமே எதுவும் செய்ய முடியாதிருப்பதற்கானவொரு சூழல்தாம் இன்றைய சூழல்.

இதுவரை அரை மில்லியன் கையெழுத்துக்களை"லெபானான் மக்களைக் காப்பதற்கு"ப் பெட்டிசனாகச் சேர்த்திருக்கிறது ஒரு இணையம். என்றபோதும் சியோனிச இஸ்ரேலிய நாசகார இராணுவம் லெபனான் மக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.இந்த அற்பமான அதிகாரத் திமிரானாது இன்னொருவடிவில் இலங்கைச் சிங்களச் சியோனிசத்தினதும், தமிழீழப் போராட்டத்தினதும் வடிவில் இலங்கைத் தமிழ்,முஸ்லீம் மக்களை வேட்டையாடுகிறது.

இலங்கைப் போரானது தமிழ் மக்களை வேட்டையாடி வரும்போது ஈழப்போரானது தமிழ்பகுதிகளில் வாழும் முஸ்லிம் இனத்தை வேரோடு பிடுங்கியெறிய முனைகிறது.இதில் எத்தகைய நியாய வாதத்தையும் எவரும் வைக்கலாம். ஆனால் அழிவது அப்பாவிகள்தாம்.இந்த அப்பாவி மக்கள்தாம் கடந்த வருடத்தில் சுனாமியால் சூறையாடப்பட்டார்கள்.அந்த மக்களின் பிரேதங்களைக்காட்டிக் காசு சேர்த்த அரச-அமைப்புகள் இன்று யுத்த மோகங்கொண்டு வான்வழித்தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் செய்து மக்களைக் கொல்லுகிறார்கள்.
என்னவொரு தேசம்?

இதில்தாம் எத்தனை வகை அரசியல்!

என்ன மசிரப்புடுங்கின தேசம்,தேசியம்,இறமை?

அப்பாவி மக்களை அழித்தபடி தேசம் தன்னைப் பாதுகாக்கிறதாம்!

ஆண்டு கொழுத்த வர்க்கம் அப்பாவி மக்கள்மீது சவாரி செய்யும்போது அழிவது அந்தந்தத் தேசத்தின் குடிகளே- மக்களே.

அவர்களது உயிரைக் குடித்தபடி அரசியல்,சமாதானம் பேசும் பிசாசுகள்தாம் தத்தமது மக்களுக்குச் சுதந்தரம் பறைகிறது.

மூதூரில் தொடங்கிய முஸ்லீம்களின் அவலம் திருகோணமலை மற்றும் பல பகுதிகளையும் எட்டிப்பிடித்து எல்லாவகை மத,இனக் கோதாரி விலங்குகள் மாட்டிய மக்களையும் அழித்தப்படி தேசமெங்கும் குருதியாறாய்ப் பாய்கிறது.

இங்கே,நீ தமிழன்-அவன் சிங்களவன்,இவன் முஸ்லீம் என்று எம்மால் மக்களைக் கூறிட்டுப் பேச முடியவில்லை!அப்பாவிகளை அழிக்கும் அரசியலை எல்லா வகைப் போராட்டங்களும் கையப்படுத்தி வைத்துள்ளன.அவை நேரத்துக்கேற்றபடி தமது காரியத்தைச் செய்கிறபோது செத்துத் தொலைவது ஏழை எளிய மக்கள்!

இவர்களை எங்ஙனம் காப்பது?

எந்த அரசியல் இலக்கு இந்த மக்களைக் காப்பது?-இது கேள்வி அல்ல!

எமக்கு முன் பல பொறுப்புகள் தோன்றிக் கொண்டிருக்கிறது.

எமது வாழ்வு சிதறடிக்கப்பட்டு நாம் அகதியாகி அல்லற்படும் இந்தப் பொழுதில் அப்பாவி மக்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகளற்று அகதிகளாக்கப்படுகிறார்கள்-அழிக்கப்படுகிறார்கள்.

யுத்தத்துக்கெதிரான அணித்திரட்சி,
அதிகாரத்துவத்துக்கெதிரான திரண்ட தார்மீகப் போராட்டங்கள் எழ வேண்டும்.

இத்தகைய மக்கள் குரல்களை மையப் படுத்தியவொரு அரசியல் கோரிக்கையானது"யுத்தத்தை நிறுத்து"என்பதாக விரிந்து தேசமெங்கும் கலகம் வெடித்தாக வேண்டும்.

யுத்தப் பிரியர்களைத் தனிமைப் படுத்தி,யுத்த அகோரத்தைத் தோலுரித்துக் காட்டியாகவேண்டும்.


யுத்தம் மனித இருத்தலையே கேள்விக் குறியாக்கிறது.

யுத்தத்தால் எந்தவொரு இனமும் சுதந்திரமாக இலங்கையில் வாழவில்லை.இத்தகைய நிலையில் யுத்த வியாபாரிகள் மீள யுத்தத்தைத் தொடக்கி, யுத்தமே தீர்வு என்று வம்பளத்தால் அவர்களை அத்தகைய நிலைக்குள் தள்ளித் தனிமைப் படுத்தி மக்கள் நலனைக் காத்தாக வேண்டும்.

இதற்காக மக்களின் அனைத்து வலுவையும் திரட்டியாகவேண்டும்.

மக்கள் அகதியாகி,
நாடோடிகளாய் அல்லற்படும் இன்றைய நேரத்தில்,
அவர்களின் தார்மீக வலுவை யுத்தத்துக்கெதிராகத் திரட்டுவதற்கான பணி
ஒவ்வொரு மக்கள் நல அமைப்புகளிடமும் வரலாற்றுக் கடமையாகக் கிடக்கிறது.

இதை நிராகரித்துவிட்டு எந்தவொரு மானுட விழுமியத்தையும் எவரும் காத்திடமுடியாதென்பதே உண்மையாகும்.

உலகத்தின் எந்தப் பகுதிக்கும் இஃதே அவசியமானது.

அடக்கப்படும் மக்கள் தத்தமது அடையாளங்களோடு அணி திரள்வது அவசியமானது.அந்த அடையாளமானது ஒப்பற்ற மானுட நேசிப்பாக ஒடுக்குமுறையாளர்களைப் பந்தாடுவதற்கான ஒத்த கரத்தின் இணைவாக இருத்தல் வேண்டும்.இதைச் சாதிக்காமால் எந்தவொரு இனமும்,மதமும் வரலாற்றில் நிலைத்திருக்க முடியாது.
ப.வி.ஸ்ரீரங்கன்
11.08.06

1 comment:

Anonymous said...

கொல்லப்பபடுவது எமது உறவுகள்
ரசிப்பதுபது புலியெதிர்ப்புச்சிந்தனை
சாகடிக்கப்படுவது மனித நேயம்
மீண்டும் சிதைக்கப்பதுவது இனத்துவ ஒற்றுமை
இரத்தங்கள் ள் மூலம் பெறுவது வங்கி பெறுமதி காகிதங்கள்
இரத்தங்கள் மூலம் பெறுவது உழைப்பாளிகளின் வாரிசுகள்
இரத்தங்கள் மூலம் பெறுவது உழைக்காது பெறும் சொத்துப் பெருக்கம்
இரத்தங்கள் மூலம் பெறுவதோ ஊதாரிவாழ்க்கை

கொல்லப்படுவது எமது இரத்தங்கள்
இதனால் பெறுவது பிரச்சார கேடயம்
இதனால் பெறுவதே ஒப்பற்ற மனித உயிர்களின் உடல்கள்
பலப்படுத்துவதோ அதிகார வர்க்கத் திமிர்த்னம்
ஆனால் சிதைக்கப்படுவதோ மனித நேயம்

பாரதி என்பான் உரைத்தது போல ~~உப்பென்பான்
உள்நாட்டுச் சேலை என்பான்””
ஆனால்
இன்றோ டொலர் என்பான்
ஆனால் இவர்களோ பிச்சை எடுப்பது
ஆட்சிக்கான ஒப்புதல்
தேசியத்துக்கான ஒப்புதல்
பதுங்கு குழிக்கான ஒப்புததல்

பெறுவது என்னவோ பிச்சைப் பாத்திரம்
ஆனால் எண்ணம் என்னவோ கோடீர்ஸ்வர சிந்தனை
மொத்தத்தில் கூலிக்காரர்கள்
நினைப்பு என்னவோ தேசத்தின் பாதுகாவலர்கள்

சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது
ஆனால் சிறுபிள்ளை கற்பனை வீடுவந்து சேரும் தானே?

ஆனால் கற்பனையின் பெறுமானம் கற்பனைக்கு உற்பட்டதே
ஆனால் கற்பனை கூட தவறென்றால் தேசியம் வீறிட்டெறுமே
ஆனால் சிறுபிள்ளை விளையாட்டை மறுப்பது தகுமோ

ஆனால் நாம் சிறுபிள்ளை விளையாட்டு இந்த வக்கற்றவர்களுக்கு காட்டுவோம்
ஏனெனில் அதுவே எமது இராச தந்திரம்
இதுவே எமது
அரசியல் தந்திரோபாயம்
இதனை விமர்சிப்பதோ
இராச துரோகம்

ஆக
இருப்பது ஒன்றே சர்வதேச எசமானர்களின் எதிரி
அவர்களை
முன்னிறுத்திவிடுவோம்

ஐயா மார்க்ஸ் அவர்களே
தோழரே தலைவரே
வழிகாட்டியே
இதைக்கூட உச்சரிக்க எவரும் அனுமதிப்பதில்லை என்பது வேறு விடயம்
தோழரே தலைவரே
உன்சிந்தனையை
விலைபேசும் கயவர்கள்
இதனை மறுதலித்தால் துரோகிகள்
ஆக்கிவிடுகின்றனர்

மொத்தத்தில் தேசம் தேசியம்
இவைகள் துரோகம் தேசியம் என்பதற்குள் கூசல் ஆடுகின்றது.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...