'07.07.2005 துன்பியல் நிகழ்வு [On the morning of Thursday, 7 July 2005, four Islamist extremists separately detonated three bombs in quick succession aboard London Underground trains across the city and, later, a fourth on a double-decker bus in Tavistock Square. ] நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம், இனவாதம், வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'
இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம் (Chief Imam ,Dr. Khalifa Ezzat) இங்ஙனம் உரைத்தார்,கடந்த 07.07.2005 ஆம் ஆண்டு , இலண்டன் குண்டு வெடிப்புக்குப் பின்னரான உரையாடல் ஒன்றில்.
அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி[ https://en.wikipedia.org/wiki/List_… ] எங்ஙனம் நிகழ்ததென்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின் 'ம்' கொட்டுவதாகவுமே காலம் போனதுதாம் மிச்சம்.
இஸ்லாத்தின் பெயரின் வாயிலான 'தாக்குதல்கள்' சமீபத்துப் பாரிசுத் தாக்குதல் [ The Bataclan concert hall following fatal shootings in Paris, Nov. 13, 2015. ]முதல் நியூயோர்க், ட்ஜேர்பா,பாலி,மாட்றிட்,மற்றும் நெதர்லாந்துத் திரைப்பட இயக்குனர் திரு.தேயோ வன் கோக்(Theo van Gogh)- இவையனைத்தும் கண்கெட்ட பயங்கரவாதமாகவும்,பொது மக்களைப்பற்றிக் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத நாளாந்தக் காட்டுமிராட்டித்தனமான'இஸ்லாமியப் பயங்கர வாதம்'என்பதை நாம் மறுக்கவோ -மறக்கவோ கூடாது!
இத்தகைய "தற்கொலைத் தாக்குதல்" மிகக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதமெனக் கூறுகின்ற மேற்குலக அரசியலைப் பிரதிபலிப்பதுபோன்றே ஜேர்மனிய/நெதர்லாந்து இடதுசாரி வட்டமும் பிரதிபலிக்கிறத! இதுமேலும் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப்போல் அதி தீவிரவாதக்-மதவாத இசுலாத்தின் குறுங்குழுவாதப் பயங்கரவாதமானது தமிழ்நாட்டை வேட்டைக்காடகக் காணுந் தருணமொன்று தவ்ஹீத்ஜமாஅத் அமைப்புகள்போன்று , இந்தியாவில் இன்னொரு மோடித் தாண்டவத்தின் ஊற்றுக்கண்ணைத் திறக்கப் போகிறது.
நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட 'சுதந்திரத்துக்குள்'வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
தாக்குதல்களுக்காக 'உந்துதல் கருத்தியல்' தளத்திலிருந்து 'அநுதாப' உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத்தாடப்படும் தளம் பூர்ச்சுவா அமைப்புகளிடமிருந்து நடைபெறுவதாகா.மாறாக மேற்குலக முற்போக்கு சக்திகளிடமிருந்து இந்த விமர்சனம் எழுகிறது.பல்தேசியக் கம்பனிகளின் பாரிய சுரண்டலின்பால் கவனத்தைக் குவித்து அதுசார்ந்த முறைமைகளோடு தொடர்புடைய இத்தகைய 'இஸ்லாமியத் தீவிரவாதப் பழிக்குப் பழி'கவனமாக ஆய்ந்துணரவேண்டிய தளத்தைவிட்டு தடம் புரள்வதுபோல் படுகிறது.
இத்தகைய'இஸ்லாமியப் பயங்கரவாதம்'எனும் மேற்குலகக் கூற்றை நாம் 'இஸ்லாமிப் பழிக்குபழி' நடவடிக்கையென அழைப்பதையே விரும்புகிறோம்.
இந்தச் செயலூக்கத்தை ஜேர்மனியப் புத்திஜீவிகள் ' இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல இலட்சக்கணகான டொச் மக்களின் கருத்தியல் மனதைக் கடந்த காலத் தலைமையால் துஷ்ப்பியோகம் செய்ததை மறுபடி ஞாபகப்படுத்துவதாகவும்-இது தலைமைத்துவத்தால் (கிட்லர்) துஷ்ப்பிரோயகம் செய்யப்பட்டது-,இது குறித்து ஜேர்மனியர்கள் இஸ்லாமியர்களின் பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு அநுதாபிகளாக இருப்பதே தவறு என்கிறார்கள்'ஏனெனில் ஜேர்மனியையும் மேற்குலகத்தையும் இன்று வரை பாலாத்தகாரப்படுத்தி வைத்திருப்பதாக இஸ்லாமியப் பழிக்குப்பழி நடவடிக்கையைக் காணுகின்றனர்.
1989 இல் ஈரானிய அதிபர் அயுத்துல்லா கொமேனியால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு- அவரது'சாத்தானின் வேதம்'எனும் நூலின் கருத்துகளால் ஆத்திரமுற்று (மேற்படி ஆசாமியால்)- மரணத்தண்டனை மொழியப்பட்டு ருஷ்டியைக் கொல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தத் தளத்தைமேலும் விரிவுப்படுத்துவதைப் பார்க்கிலும் அந்த நிலைக்குள் ஊடுருவியுள்ள அடிப்படை வாதமானது தனது வியாபகமான அதிகாரத்தை உலகு பூராகவும் நிறுவியுள்ளதை இனம் காண்பதுதாம் சாலப் பொருத்தமானது இன்றைய நமது சூழலில்.
கொய்மேனியின் அதிகாரத்துவ மொழிவுக்குப் பின்பாக மேற்குலக இடதுசாரிகளால் ருஷ்டிக்குத் தோள் கொடுத்த தோழமை- மேற்குலக இடதுசாரிகள் நிச்சியமாக இந்த இஸ்லாத்தின்'"Fatwa"வை இங்ஙனம் பார்க்கலாம்:'இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கொய்மேனி நடந்த பாதையானது 'ஸ்சறியா'(Sharia) குறித்துரைக்கும் கொள்கைகளோடு தொடர்புடையது.
இது இஸ்லாம் குறித்துரைக்கும் சட்டதிட்டங்களையும் உலகத்துக்குப் பொதுமைப்படுத்துகிறது.அதாவது ருஷ்டியைக் கொல்பவன் கொலைக்காகத் தயார்ப் படுத்தப்பட்ட கைக்கூலியல்ல.மாறாக ஒவ்வொரு இஸ்லாமியப் பற்றுள்ள இஸ்லாமைச் சேர்ந்தவரும் ருஷ்டியைக் கொல்ல உரித்துடையவர்.இங்ஙனம் கொல்ல நாட்டமுற வேண்டியது அல்லாவுக்கு விருப்புடையதாகக் கருத்தியல் விதைக்கப்பட்டது.'இந்தக் குடிசார் மனது நெதர்லாந்தின் திரைப்படக் கலைஞர் திரு.வன் கோக்கைக்(Theo van Gogh) கொன்று தனது "Fatwa" வை வெளிப்படுத்தியது!
இஸ்லாமானது கருத்தியல் தளத்திலும் அரசியல் திட்டமிடலிலும் ஒரு திடமான பிரேரணைகளை முன் மொழிகிறது.இது நாசிகளின் பாசிச இனவாதக் கொலைகள்,கருத்துக்களிலுமிருந்து மிகத் தெளிவாக வேறுபடுகிறது.இஸ்லாத்தின் இந்தக் கருத்தியலானது ஒரு குறிப்பிட்ட இனவாதாக் கொள்கையை நிராகரித்துவிட்டு,முழு மனிதர்களையும் தனது கருத்தியல் தளத்தில் கவனிக்கிறது.இதுதாம் தமது கடவுளாரான 'அல்லாவுக்கு'எதிராகச் செயற்படுபவர் எவராயினும் இஸ்லாத்தை தழுவிய எந்தப் பொது மனிதராலும் கொல்வதற்கு உருத்தாக்கி விடுகிறது.
இங்ஙனம் கொல்கின்றவர்-இஸ்லாமுக்காகத் தனது ஆயுளை அற்பணிக்கும்போது 'சொர்கத்துக்கு'நேரடியாகப் போகின்றார். எனவேதாம் ,"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு(தமிழச்சிக்கு ) எதிராகக் குண்டுகள் பாயும் " என்று தமிழ்நாட்டுத் தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பு அறைகூவலிட்டு எச்சரிக்கிறது!
இது உலகியல் வாழ்வில் அநுபவிக்கும் நரக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறையாகவும் குறித்துரைக்கப்பட்டு இஸ்லாமிய மனிதரை உருவாக்கிவிடுகிறது.இஸ்லாமானது உடோபிசம் இல்லை.அது குறித்துரைக்கும் கருத்துக்கள்,நடவடிக்கைகள் யாவும் மனிதனைக் கடைந்தேற்றும் செயல் முறையாக அன்றாடம் வாழக் கற்றுக் கொடுத்துள்ளது.எனவே, இது கற்பனாவாதாக் கருத்து நிலையிலிருந்து வேறுபடுகிறது.
இது ஈரானிலுள்ள மாசாத் எனும் நகரில் கடந்த ஜுலாய் 2005 இல் இரண்டு பதின்ம வயதுப் பாலகர்களுக்கு 'வெளியரங்கில்'மரணத்தண்டனை வழங்கியது.கழுத்தில் சுருக்குப்போட்டு மக்களின் பார்வைக்கு முன்னால் கழுமரத்தில் தொங்கவிட்டது.
அவர்களுக்கான மரணத் தண்டனை எதனால் வழங்கப்பட்டது?இச் சிறார்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்கான தண்டனைதாம் இஃது!
ஐரோப்பாவில் தடைகளுக்குள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதம்,பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயப் போரையே மிகவும் பலயீனப்படுத்திவிட்டது.இந்த நிலையில் எந்தத் தீவிரவாதத்துக்கும்,தேசியவாத முன்னெடுப்புகளுக்கும் மேற்குலக'வெகுஜன மட்டம்'எதிராகவுள்ளது. 'பயங்கரவாதச் செயல்களைச் சர்வசாதரணமாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களால்,குடிசார் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் சூழல் உருவாகிறது.
உயிர்த்திருத்தல் என்பது நிசத்தில் சாத்தியமற்றவொன்றாகப் போயுள்ளததை இது வலியுறுத்துகிறது...' இங்ஙனமே ஐரோப்பிய வெகுஜனங்கள் கருதும்போது யூத ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க முடியாத பாலஸ்தீனத்தின் நியாயமான போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகக் காட்டுவதில் இசுலாமிய டிப்படைவாதம் மேற்குலகுக்கு உதவுகிறது - இசுரேலுக்கு உவப்பானதாக் காரியமாற்றுகிறது.
நெதர்லாந்தில் புகலிடம் கோரிய மொரக்கோ நாட்டு இஸ்லாமியனுக்கு என்ன நடந்ததோ அதே நிலையில்தாம் தமிழ்நாட்டுத் தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினுள்ளும் பலருள்ளர்கள்.தேயோ வன் கோக் இஸ்லாத்தைப்பற்றி பொய்யுரைக்கவில்லை.கடந்த பல வருடங்களாகப் பெண்ணிய வாதிகள் கூறிவந்தவற்றையே தனது "Submission"திரைக்கதையூடாக முன் வைத்தவர்.பெண்ணியவாதியான அன்யா மொய்லன்பெற்;(Anja Meulenbelt)இதுவரை காலமாக இஸ்லாத்தின் கருத்தியலையும்,அது குறித்துரைக்கும் பெண் தன்மையையும் விமர்சித்தளவுக்குக்கூட தேயோ வன் கோக்கின் திரைப்படம் முன் வைக்காது போயினும்'விசூவல் மீடியாவின்'வலு அந்த மொரோக்கோ நாட்டினனைச் சொர்க்கத்தின் கனவுக்குள் மூழ்கடித்துள்ளது.
நமது தேசங்களது எம்.எஸ்.சையது இப்ராஹீம்களது [ https://www.facebook.com/MEDIATNTJ/… ] நிலையும் இஃதே.மாற்றுக் கருத்தாளர்கள் ,இசுலாத்தை ; ஷரியச் சட்டத்தை விமர்சிப்பவர்கள் சனநாயகச் செயற்பாட்டாளர்கள் - மனிதர்கள் , இவர்கள் 'பொதுத் தளத்தில் கருத்தாடும் நிலைக்குச் செல்லும் மாற்றுக் கருத்தாளர்கள்.இவர்களை இசுலாமிய அடிப்படைவாதம் உயிரோடு வாழ அநுமதிப்பதில்லை.
இங்கே, தமிழ் நாட்டிலுள்ள இசுலாமியக் குழுக்களுக்குள் தேயோ வன் கோக்'கு நடந்த அதே பயங்கர வாதம் மக்கள் மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாச்சு! இதுவுமொரு மூலக் காரணம் ,குசாரத்து மோடியின் (இன்றைய பாரதப் பிரதமர் அவர்)படுகொலை அரசியலுக்கானதென்பதை நாம் பரவலாகச் சொல்லவில்லை!
மீளவும் அந்தப் பிரித்தானிய இமாமின் வார்த்தையை நினைத்துப் பார்க்கிறேன்,
'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம், இனவாதம், வேலையில்லாத்திண்டாட்டம், ஏழ்மை,மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது, அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'
தமிழ் நாட்டு இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளது இன்றைய நிலையை மேற்சொன்ன அவரது கூற்றிலிருந்து நிதானமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
ப.வி.ஶ்ரீரங்கன்.
No comments:
Post a Comment