Wednesday, December 26, 2012

இரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல்


இந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள "பகிரங்கமடல்" மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் "நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை"என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும்.



//சிறிரங்கனுக்கு பகிரங்க மடல்...
.............................
Sri Rangan Vijayaratnam க்கு 'கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை!

மட்டுப்படுத்தப்பட்ட விபரம்...

* இந்த வங்கி 'மனேசர்' சுட்டுக் கொல்லப்பட்டார்...
** இதன் சொத்துக்கள் புலிகளால் அபகரிக்கப்பட்ருந்தது...
*** இராயாகரானால் பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் முதுகெலும்பில்லாதவர்காளால் தாரைவார்க்கப்பட்டது...

*** ஐயரிடம் ஒப்படைக்பப்பட்ட சொத்துக்களின் விபரத்தை... 'இனியொரு' , 'சிறீரங்கன்' போன்றவர்களால், ஏதோ 'பில்டா விடுபவர்கள்' சரியாக, அல்லது மாதிரியாகத்தன்னும் வெளியில் (முகப்புத்தகத்தில்) வைக்க முடியுமா???-குமார்

Ceylon Illaikai : ஐயரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது தமிழீழக்கட்சியிடம் கொடுக்கப்பட்டது. இப்போ வசதிக்காக அனேக முற்போக்குகள் மௌனமான இருக்கிறார்கள். இதுதான் புரட்சிவாதிகளின் தோழமையோ. தோழர் ......//



இரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல்






ந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள "பகிரங்கமடல்" மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் "நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை"என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும்.

பல முகமூடிக்குள்ளிருக்கும் இந்த இரயாகரன் குழுவானது தன்னைச் சுற்றிப்போடும் வேடமானது அப்பணத்தைக் காத்துக் கொண்டு அதன்மீது நாமம் போடும் அரசியலைக்குறித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்களது,விளக்கத்தின்படியே இரயாவிடமிருந்த பணம் இறுதியில் தமிழீழக் கட்சிக்கும் போனதாம்.அதாவது,ஜான் மாஸ்டரின் தலைமையில் தமிழீழ மக்கள் கட்சியென்றும்,அதன் அரசியல் ஏடென்றும்"தமிழீழம்"சஞ்சிகை தலைமறைவாக அனைவருக்கும் கிடைத்து வந்ததை நண்பர்கள் அறிவார்கள்.

இந்தத் தமிழீழக் கட்சியானது புலிப் பாசிசத்தைக் கருத்தியல் ரீதியாக ஆதரித்து மக்களைக் காயடித்த புலிப் பினாமிகளது  முகாமாகும்.அச்சஞ்சிகை புலிப்பாசிசம் உச்சத்தில் இருந்த போது அதைத் தேசிய இராணுவமாகவும்,தேசம் அதனால் விடுவிக்கப்படுவதுமாகப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களைப் புலத்தில் திறம்படக் காயடித்தது.இதற்குக் காசைத் தாரவார்த்த இரயாகரன் யார்?-சீச்சீ அது இரயாகரனல்ல-ஐயர் கையளித்தது! :-)

இந்தக் கேள்விக்கும் புரட்டல்வாதிகளது பதில் இவ்வாறு "புரட்சிகரக் குழுவாகத் தோன்றியதன் நம்பிக்கையில் வழங்கினோம்.அது,புலிப் பாசிசத்துடன் அண்மித்து முதுகெலும்பில்லாது அரசியல் செய்விட்டதென்றுங்கூட வகுப்பெடுத்தலாக அமையலாம்." ஏனெனில், இரயாகரன் குழுவினது புரட்டல் "இப்படி" எத்தனை ஆயிரம் நமக்குள் கடந்த 20 வருடமாக அனுபவமாகியது-புலத்துள்!

புலிப் பாசிசத்துக்குக் கருத்தியற்பலம் கொடுத்த தமிழீழக் கட்சிக்குக் கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளையில் நிதியிட்ட இரயாகரன் புலிப்பினாமியென நான் ஆய்ந்து சொல்வதன்  நியாயத்தைப் பாருங்கள்!

இவர்கள், இப்படியாக மக்களை மொட்டையடித்த மகாத் திருடர்கள்,பாசிஸ்டுக்கள்-எதிர்ப் புரட்சிகாரர்கள் என்பதைக் குறித்து மிகக் கவனமாக உற்று நோக்குங்கள்.

ஒரு சதிகாரக் கூட்டு, எப்படியெல்லப் புரட்சிகரச் சக்திகளையும் வேட்டையாடியதென்பதை மிக விரைவில் உணர்த்துகொள்ளவேண்டும்!

பயங்கரமான சதிக் குழுவான இரயாகரன்-குழு,சதி நிரம்பியதென்பதற்கு இந்த ஒப்புதல் வாக்கு மூலங்கள் அவர்களையறிவதற்கு இன்னுமொரு படிக்கல்!

இவர்கள் எப்படியெல்லாம் புலிக்கு முகவர் வேலைசெய்து, தமிழிச்சிகளது தாலியை அறுத்தனரென்பது நாம் அறிய வேண்டிய வரலாற்றுண்மைகள்!

இப்போது அதே எதிர்ப் புரட்சியை மீளப் "புரட்சி வேடங்கட்டி" அந்நியர்களுக்கும்,அவர்களது வியூகத்துக்குமொப்ப அந்நியச் சக்திகளால் தூண்டப்பட்ட"மாவீரர் தினக்கொண்டாட்ட"ஆதரவுக் கலகப் "பல்கலைக் கழகப் போராட்டத்தை" மக்களது ஆவேசமாகவும்,தார்மீகவுரிமையாகவும் வர்ணித்து, அதைச் சொல்லி மீளவும், இலங்கை-இந்திய விச அரசியலுக்குக் கருத்தியல் நியாயம் கற்பிக்கும் கபோதிகளைக் கவனமாக் கண்காணிக்க வேண்டும்.

அன்று,தமிழீழக் கட்சியின்வழி முகமூடிபோட்டுப் புலிக்காவடி தூக்கிய இரயாகரன் குழு, மிக மோசடியான மாபியாக்களென்பதைத் தமிழீழக் கட்சி-ஜான் மாஸ்டர்,தமிழீழச் சஞ்சிகை,அவர்களது"தேசிய இராணுவம்"தமிழீழம்"விடுவிக்கப்பட்டு வருகிறதென்ற பாசிச ஆதரவுப் பரப்புரைகள்-கருத்துக் கட்டலிலிருந்தும்,இதே குழுவுக்குள் பல தலைகள் "விக்கியென்று,இளங்கோவென்று,ஜான் மாஸ்டரென்று,இரயாகரன் குழுவென்று" புலிகள் தமக்கான உளவுப்படைகளை எப்படியெல்லாம் உருவாக்கிவைத்துச் சிறு தொகையான இடது சாரிகளை வேட்டையாடினர்,இப்போதும் அதே குழுவை வைத்து எப்படி அந்நியச்சக்திகள், புலியினது புலம்பெயர் பினாமிகள் காரியத்தை முடிகிறார்களெனப் பார்த்தால் இந்தக் கற்றன் நசனல் வங்கிப் பணம்,விஸ்வா நந்ததேவனின் படுகொலை,கோவிந்தனின் படுகொலை,புலிகளால் இரயாகரன் கைது-தப்பித்தல் நாடகமெல்லாம் புலியினது வியூகத்துக்கமைய நடாத்தப்பட்டுப் புரட்சிகர அணிகளை நம்பவைத்துக் கழுத்தறுத்தது ஒரு பெருஞ் சதி!


இஃது, வரலாறாக நம் முன் எஞ்சி நிற்கிறது,புலிகள் இரயாகரன் குழுவை புரட்சிகர முகாமுக்குள் மெல்லத் தள்ளிப் புரட்சிகரவணிகளையுடைத்தும்-சிதைத்தும் வெற்றிகொண்டது, புலத்திலும்-நிலத்திலுமென்பது ஜீரணிக்க முடியாதவுண்மை!


இந்த மாபியாக்களை எங்ஙனம் வெற்றி கொள்வது?

இவர்களை அம்பலப்படுத்தித் தமிழ் அரசியற் பரப்பிலிருந்து அகற்றவது நிலத்து மக்களதும்,புலத்து மக்களதும் கடமை.

இவர்களால் தொடர்ந்து சுத்தப்படும் அரசியல் சதிகள், தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு புரட்சிகரக் கட்சியின் தோற்றத்தைத் தொடர்ந்தழித்து வருகிறது.

புரட்சிகரக் கருத்தியலைச் சிதைத்தும்,தனிநபர்களான புரட்சிகரச் சிந்தனையாளர்களை தமக்குள் உள்ளிளுத்துச் சிதறடித்தும்-காட்டிக்கொடுத்தும் வரும் இரயாகரன் குழு மிகப்பெரும் சதிகாரக்குழுவென்பதைப் பகிரங்கமாகவுரையாடவேண்டும்.

இவர்களது அனைத்து வேடங்களும் கலையாதவரை புலத்தில் புரட்சிகர அணிகள் தொடர்ந்து சிதைக்கப்பட்டுத் தோல்விகண்டே வருவர்.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2012

Saturday, October 06, 2012

மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?

சிங்கள இராணுவக் குடிப் பரம்பல் கண்டு,
மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?

" மனிதர்கள் உன்னதமாகவிருக்கவேண்டும்
கருணை நிறைந்ததும் மற்றும் சிறப்புமாகும் இது.
இந்தவொன்றே அவர்களை
மற்றெல்லா உயிரினத்திடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ." -Goethe

[„Edel sei der Mensch,
hilfreich und gut!
Denn das allein
unterscheidet ihn
von allen Wesen,
die wir kennen.“- Goethe]


இங்கு திரு.மனோ கணேசன் அவர்கள் தொட்டிருக்கும்-சுட்டும் பிரச்சனைகள் கடந்த 20 வருடங்கட்கு முன்னமேவுணரப்பட்டது!புலிவழிப் போராட்டமென்பது புதிய இராணுவக் குடியேற்றங்களைச் செய்யுமென்பதை யாழ்"இடப் பெயர்வோடு"அதிகமாகவழுத்திச் சொன்னோம்.50 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர்  காலவோட்டத்தில்50 ஆயிரம் குடும்பங்களை அமைப்பதும்,அதன் வழி இராணுவக் குடியிருப்புகள் குடும்பங்களாகிக் குடிசார் இணக்கத்துள் வரும்போது அவை ஒரு இனத்தினால் விடப்பட்டு,பாழாய்ப்போன வாழ்விடங்களுக்குள் உள்வாங்கப்படும்.அப்போது,சிங்களமயப்படுத்தலது விருட்ஷம் நமது முகத்தில் ஓங்கியறையும் என்றாகச் சொல்லியே "தமிழீழப்போராட்டம்"வழி தந்துரோபாய இடப்பெயர்வு-தள மாற்றமெனப் புலிகள் செய்த போராட்டத்தைக் குறித்து விமர்சனம் வைத்தோம்.

சிங்கள இராணுவம் கூலிப்படையாகவிருந்த 80 இன் ஆரம்பப்பகுதிகளுக்குள்"தமிழீழப் போராட்டக்காரர்கள்"தம் போராட்டம் வெகுவாகவுயர்கிறது!அங்கே,தமிழ்க் குடியிருப்பு-கிராமம்,நகரம்,மாவட்டமென நகர்ந்த புலிவழி இராணுவத்தாக்குதல்கள் மக்களைக் குடிப்பரம்பலிலிருந்து சிதறடித்துக்கொண்டது-கொன்றது!உயிர்காத்து ஓடவைத்தது.

இராணுவமானது முகாமை விட்டுக் குடியிருப்புகளுக்குள் நுழையவும்,அங்காங்கே உறுப்புத் தளங்களை அமைக்கவும் ஒத்திசைவாகவிருந்த இந்த "ஈழப்போராட்டமானது"தமிழ்ச் சமுதாயத்தின் குடிசன மதிப்பீட்டையும்,அவர்களது வாழ்விடங்களையும் ஒருபோதும் கணக்கெடுத்ததே கிடையாது!




இதன் உச்சம்: "ஒரு தமிழன் உயிருடன் இருக்கும்வரை போர் தொடரும்,விழ விழ எழுவோம்"

என்று கதை விட்டவர்கள்,தாம் எந்தக் காட்டுக்குள் இடம் பெயர்கிறார்களோ அதுதாம் தமிழர்களது வாழ்விடம்-வலயம் என்று மக்களையும் துரத்தி அடித்துத் தம்மோடு அழைத்துச் சென்றனர்(இதைத் தட்டிக் கேட்டால், " இதுதாம்மக்கள் போராட்டம்.மக்கள்தாம் புலிகள்,புலிகள்தாம் மக்கள்" என்று படம் காட்டினார்கள்!).யாழ் இடப்பெயர்வும் அப்படியேதாம் நிகழ்ந்தது. எனினும், சில மாதங்களிலேயே கணிசமான மக்கள புலியிடமிருந்து தப்பி;, இராணுவம் தங்கிய-பிடித்த யாழ்ப் பாணத்துக்குள்ளே தமது இயல்பு வாழ்வை ஏற்படுத்தலாகினர்.இத்தகைய மக்கள் புலிகள் வன்னிக்குள் "தமிழீழ அரசு அமைத்து ஆட்சி" நடாத்தியபோது தமக்கும்,இதற்கும் சம்பந்தமில்லாமலே துண்டுபட்டு வாழ்ந்தனர்.இது முதல் வெற்றி அரசுக்கு!மெல்லக் குடியேற்றம்,கூடிக் கலத்தல்,மணவழி ஒன்றித்தலென தமிழ்த் தேசியவின அடையாளமெல்லாம் மெல்லத் தகர்ந்தன(இனக் கலப்பும்,ஒன்றிந்துப் போதலையும் நான் வரவேற்பேன்.வரலாறு பூராகவும் மனிதர்கள் கலந்து போயினர்).

இத்தகைய தருணத்துள்,அரசோடு ஒத்துழைத்த தமிழ்க் குழுக்கள்,பிளவுபட்ட புலியுறுப்புகள் யாவும் ஒரு புதிய இலக்காகக் கண்டடைந்த பிரதேசரீதியான பிளப்பு ஏலவே இந்திய-அமெரிக்க விருப்ப அரசியல் வியூகமாகவிருந்தபோது அதை அவர்கள் இத்தகைய தமிழர்வழி மிக நேர்த்தியாக அரசிலாக்கினர்.இதன்வழி , "கிழக்கு-வடக்கினால் ஒடுக்கப்படுவதாகப்பாடிப்" பிளவை அரசியல்ரீதியகச் சட்டமாக்கினர்.இஃது, தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தின் இதயத்தைப் பிளப்பதென்பதும்-இருப்பை அசைக்குமென்பதும் அனைத்துக் கிழக்கு வாதிகளுக்கும் தெரியும்.எனினும்,தமது வருமானங்கட்காகத் தமிழர்களது தலையிற் நெருப்பை அள்ளிக் கொட்டியதுமல்லாமற் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனத்துக்குமே அது கொள்ளிக் கட்டையாகுமென அவர்கள் புரிந்திருந்தும் தமது நல்வாழ்வுக்காக அதைப் புறந்தள்ளினர்.எதிரி,ஒரு கையில் ஆயுதத்தையும்,இன்னொரு கையில் அரசியல் வியூகத்தையும் வைத்துச் செய்த சாணாக்கிய தந்திரத்துள் பலியானவர்கள் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களே.






இவர்களது இன்றைய கட்சி அரசியலானது மீளவும் சிங்கள மயப்படுத்திய சமூக அசைவாக்கத்துள் சட்டரீதியான உறுதிப்பாட்டையும்,அதற்கான தார்மீக நியாயத்தையும் சிங்கள அரசுக்கு உறுதிப்படுத்துவதும் அதுசார்ந்த இயக்கத்துள் இலங்கையில் பெரும்பான்மை மக்கள் தமக்கான ஐதீகப் பாரம்பரியப் புவியிற்றொhடர்ச்சியைக் காலப்போக்கில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்த நிலத்தில் வரலாற்று ரீதியாகவுறுத்திப்படுத்தும் அரச ஆதிக்கத்துக்கும் துணையாகவே நிற்கின்றனர்.எனவேதாம் சிங்கள அரச அதிகாரத்தைக் கிழக்கு மாகாணத்தின் வசந்தமென ஞானம்-பிள்ளையான் கூட்டு அதிகமாக வகுப்பெடுத்தனர்.டக்ளஸ் அதை வடக்குக்கும் வசந்தமாக மொழி பெயர்த்தார்.

இத்தகையவொரு மிகக் கெடுதியான அரசியற் சூழ்ச்சிக்குள் சிக்குண்ட தமிழ்பேசும் மக்கள், தமது வாழ்விடங்கள்-வரலாற்று ரீதியாகத் தம்மால் உணரப்பட்டதும்,உறவாடப்பட்டதென்பதற்கும்மேலாக அவற்றின் இன்றைய அவலத்தை உணர்வுரீதியாவுள்வாங்குகின்றனர்.

தமிழ்பேசும் மக்களது சுகவாழ்வுக்கான மண்,சிங்கள ஆதிக்கத்தினது அதிகாரத்தின் தொடர் ஆக்கிரமிப்புக்கு மத்தியில்"தமக்கான வலயமாக" இல்லாதாக்கப்படுஞ் சூழலையும்,அந்த வலயத்துள் தமக்கான பொருண்மிய வாழ்வு இல்லாதாகப்படுவதும்,அந்த ஆதாரங்களைக் கட்டியமைக்காது திட்டமிடப்பட்ட சதியால் பின்தள்ளப்படும் புனரமைப்பு,அபிவிருத்தியானவை தமிழ் பேசும் மக்களது வாழ் சூழலைப் பலமாகப் பாதிக்கிறது.இது யுத்தத்தைவிட மோசமானது.

இத்தகைய சூழல் தொடர்ந்து நிலவும்போது, மக்கள் கப்பல் மூலமென்ன கால் நடையாகவாவது தாம் வாழ்வதற்கும்,தமது சுக வாழ்வுக்காகவும் எங்கும் இடம்-புலம் பெயர்ந்தே தீருவார்கள்.

அதைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம், தமழ் பேசும் மக்களது வாழ்விடங்கள் யாவும் அவர்கள் உழைத்து உண்ணக்கூடிய வலயமாக முதலில் மாறியாகவேண்டும்.அதன் காரணமாகத் தொழில்ரீதியான முனைப்புகள் சிறிய குடிசார் அமைப்பாண்மைக்கு வித்திடும்.அப்போது இந்த மக்கள் அச்சமின்றி தாம் ஒரளவு வாழ்வதற்கான சூழல் தமக்கு வாய்த்ததாகவுணரும்போது இடப்பெயர்வு இல்லாமற் போகமுடியும்.






யாழ்ப்பாணத்தவர்கள் எப்போதும்,தமது மண்ணினது நிலைமைக்கேற்ப இடம்பெயர்ந்து உழைத்துப் பழக்கப்பட்டவர்கள்.குடும்பத்தைவிட்டுக் கொழுப்பிலும்,கண்டியிலும்,காலியிலும் பிழைக்கச் சென்ற அதே அகக் காரணிகள் இப்போதைய காலத்துக்கேற்கக் குடும்பங்களையும் துணைக்கழைத்து வெளி நாடுகளுக்கு இடம் பெயர்வதொன்றும் குற்றமானதல்ல!

"எங்கு மனிதர்கள் சுதந்திரமாக உழைக்க,உயிர்த்திருக்க,பாதுகாப்பாக வாழ முடியுமோ அந்தத் தேசமோ-வலயமோதாம் தாயகம்.அதைவிட்ட அனைத்தும் பொய்யானது-சேர்க்கையானது!"

இதுள் புலம் பெயர்ந்தவர்களை-பெயருபவர்களை நொந்தென்ன-கடிந்தென்ன? காலந்தாம் அனைத்தையும் பதிலாக்கி வைத்திருக்கிறது.அதுள் நமது கடந்த-நிகழ்காலப் பாத்திரங்கள் என்ன பங்குடன் நம்மைக் கடக்கின்றனவென்பதே உணரப்படவேண்டியது.இதுள் புலிவழி (வி)தேசியவாதப் போராட்டத்தைக் குறித்து நிறையவே உணரப்படவேண்டும்.அப்போதுதாம் சிங்கள அரச ஆதிக்கத்தையும் அதன் அதிகாரத்தையும் புரிந்துகொள்ள முடியும்.மனோ கணேசன் அவர்கள் அந்த பக்கமும் மெல்லக் கவனித்துவுணர்வது ஒடுக்கப்படும் சிறுபான்மை இலங்கை மக்களுக்கு அவசியமானது.மனோ கணேசனது இக் குறிப்பு அந்த வகையில்முக்கியமான-அவசியமான குறிப்பாகவே பர்க்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2012

Wednesday, September 05, 2012

Eastern provincial election soon:

PROVINCIAL COUNCIL ELECTIONS – EASTERN PROVINCE

9th September  2012

By P.V. Sri Rangan

Why did I turn to the issue of politics? I used to think just like many other citizens that politics is a boring business, and anyway I can not influence. But then I got information that made me aware and I began to self-investigate. What I found out it is scandalous.

Anyway, the more I am venturing into this field, the more exciting it became. The tamils_politics is a dirty business, where lies and corruption are commonplace, that actually know most people in Sri Lanka. Therefore it is all the more shocking that there are still so many people participating in this game wrong by supporting the system. You have certainly experienced many times that grandiose announcements were made in anticipation of elections, from which the corresponding politicians after the elections, as then strangely not want to know much. And yet there are still many citizens go to the polls, in the hope that the situation would improve. But, as might be expected, it always follows the same pattern.






How is this done?

An essential part is the so-called controversy, a special language. This stand has only the task of politicians from ordinary citizens, the unworthy Mobb, and as much to say as little as possible with content, what then should still be unclear. Not infrequently, the key messages of 10-minute speech gushes on two sets with a specific statement must be reduced. But this is only suitable hollow ramblings feign volume and content. Much worse, however, is the introduction of words or statements that are actually  empty words because there are words or statements that do not exist!

Such nonsense is in statements of M.R. Stalin Gnanam, Pillaiyan order of the day and if we citizens hear this often enough, then it falls to us to hardly yet. Often used is the weakening or gradation of terms that are not gradable. A Little War does not sound as brutal as war. No ifs and buts








But this is to see through some practice yet. It becomes more problematic then even more complex statements that are not see through immediately. Willingly abused as is any form of solidarity.

But that is only part of the disaster in which we find ourselves. If they think that only the system needs to be improved in order to improve the situation, then they have another thing coming.


A wrong system can not be improved, but it must be replaced by another!!

The system of democracy is a fraud system. What most people think of when they hear the term democracy? Think of freedom, human dignity and so on. But what our real democracy is, indeed?



05.09.2012
Germany



Sunday, May 06, 2012

ஒன்றுபடும் இந்திய நலன்சார் அரசியல் தரகர்கள்:

இந்த நூற்றாண்டானது தமிழ்பேசும் மக்களது உரிமைகளைப் பகிரங்கமாகவே காட்டிக்கொடுக்கும் நூற்றாண்டாகும்.இதுவரை ஆயுதப் போராட்டத்தின்வழி தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்த இந்தியா,இப்போது நேரடியாகவே தனது அநுதாபிகளைக் களத்தில் இறக்கி இந்திய அரசியல் நலன்களைத் தமிழ்பேசுபவர்களது நலனாகக் காட்டுகிறது.

புலிகளுக்குள் இருந்த இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும்,முகவர்களும் பகிரங்கமாகவே இந்தியப் பிராந்திய வியூகத்தின் நிகழ்ச்சி நிரலைப் பேசுகிறார்கள்.அவர்களில் கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்றோர் மிக ஆபத்தாகவே தமிழ்பேசும் மக்களது நலனைப் பற்றிய உரையாடல்வழி இந்திய அரசியலை தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கின்றனர்.

இவர்களும்,இந்தியக் கைபாவைகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்.வரதராஜப் பெருமாள்,புஷ்பராஜா குடும்பத்தவரோடு கை கோர்ப்பதில் புதிய வகை மாதிரியான அரசியலைப் பேசுகிறார்கள்.

கடந்த காலத்தில் எதிரும் புதிருமாகக் காட்டிக்கொண்டவர்கள் இவர்கள்.ஆனால்,இந்திய சாணாக்கியமானதுகடந்தகாலத்துள் தனது முகவர்களை எங்ஙனம் அனைத்து அமைப்புக்குள்ளும் பிரித்துப் பிரித்து உள் தள்ளியிருப்பதென்பதற்கு இவர்களே சாட்சி.

இவர்கள், அனைவருமே இந்திய முகவர்களாக இருந்துகொண்டு மக்களைப் பல தளங்களில் மொட்டையடித்திருக்கின்றனர்.





புஷ்பாராணியின் போராட்ட அநுபவ நூல் வெளிவருகிதாம்("ஈழப் போராட்டம்,தமிழர் உரிமைப் போராட்டமெல்லாம் இவர்களது குத்தகையென்பதையும் புலிகள் ஏற்றிருப்பது வரவேற்கத் தக்கதே.இதற்குப் புலிவால்களது கள்ள மௌனமே சாட்சி இந்தப் புலம்பெயர் தளத்தில்!).

அதற்குப் புலிப் பிரமுகக் கவிஞர் கருணாகரன் நீண்ட முன்னுரை வழங்கியுள்ளார்.திடீரென இந்த எதிரும்-புதிரும் சந்தித்துக் கொள்ளவில்லை.அல்லது, இது தற்செயல் நிகழ்வுமில்லை.

இவர்கள் அனைவரும் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட தமிழ்அரசியல் முகவர்கள்.இவர்களே நமது மக்களை இன்றுவரை ஏமாற்றித் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்குத் தடையாக இருக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் இந்திய முகவர்களது அரசியல் நாடகமே இப்போது "விடுதலை,சுதந்திரம்,தமிழீழம்,புரட்சி" என்று பேசிக்கொள்கிறது.

இவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.அப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது"இலக்கியம்-போராட்ட வரலாறு"என்று தொகுப்புகளிட்டுத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறது.புஷபராஜாவின் விருப்பு மெல்ல நிறைவேறி வருவதால் அவரது ஆத்மா இப்போது சாந்தியடைந்திருக்கும்.

 "ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட, ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்!’’ - புஷ்பராஜா.


ப.வி.ஸ்ரீரங்கன்.
06.05.2012

Saturday, March 31, 2012

உரையாடல்களுக்கிடையிலான பொது உரையாடல் வெளியினைத் திறப்பதே எமது நோக்கமாகும்

"புதிய இணைய மாத சஞ்சிகைக்கு எழுதுமாறு உங்கள் அனைவரையும் கேட்கிறோம்! ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்திற்கும் கருத்தியல் வாதம்,உரையாடல் வெளிக்குமான புதிய கதவினை திறப்போம்! "
-by Mahroof Fauzer


பௌசர்,உங்களிடம் சில விளக்கங்களைக் கேட்பது அவசியமெனக் கருதுகிறேன்.

1: "தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்" என்கிறீர்கள்.இந்தச் செயற்பாடுகள் எதை நோக்கியது?ஏனெனில்,இன்று மொழி,மதம்,பண்பாடு சார்ந்த ஒடுக்குமுறைகள்-பௌதிக இருத்தலை மறுக்கும் ஒடுக்குமுறைகள்அனைத்தையுஞ் செய்தபடி அதற்கும் மேலாக மனிதர்கள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுபவர்களாகவும்,ஒடுக்குபவர்களாகவுமிருக்கிறார்கள்.இதுள் நீங்கள் எந்த வகைமாதிரியை உணர்கிறீர்கள்?

2: செயற்பாட்டகம் என்பதன் பொதுப்படையான புரிதலென்ன?செயற்பாடு வினையுறும் திசைவழியின் செல் நெறி என்ன-எதைச் சார்ந்து செயற்பாடு விரிகிறது?

3:"தமிழ் மொழிச் சமூகங்கள்" என்பதன் விளக்கமென்ன?சமூகம் என்றால் என்ன-சமுதாயம் என்றால் என்ன?இதுள் மொழிகள்-மதங்கள்,பண்பாடு,பால் வேறுபாடுகள் கடந்து இயங்க முனையும் மனிதர்களின் இடம் என்ன?

4:"ஜனநாயக அடிப்படை"என்கிறீர்கள் நீங்கள் குறித்தியங்கும் ஜனநாயகம் குறித்த புரிதல் என்ன?


5:துருவமயப்பட்டு நிற்கும் சிந்தனைக்கு மாற்றாகச் செயற்படுதல் "மாற்று-கருத்து நிலைகள்"இல்லையா?;இயங்கு தளத்துக்கு நகர்த்தலென்பதன் அர்த்தம் என்ன?-"இயங்குதல்-தளம்"இருண்டுக்குமான இயங்கிற்றொடர்பில்இயங்குதல் எந்த வடிவத்தின் மறுப்பை மறுத்து உருமாறதலைக் கொணர?அது,எதன் பொருட்டிலான தளத்தை மையப்படுத்துக்கிறது அல்லது கருதுகோளாக்கிறது,அன்றியும் நோக்கை உணர்த்துகிறது?

6: ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படும் " பேசுபொருள்"எத்தகைய நோக்கத்தைச் சார்ந்தியங்குகிறது அதன் அடிப்படையான அரசியல் என்ன?(நாம் அரசியல்-இயக்கம்சாராதவர்கள் என்று சொல்லிவிடாதீர்கள்).

7: ஒருவர் ஒற்ற நிலைக் கருத்துடையவரென எந்த அளவுகோல் அடைப்படையில் வரையறை செய்கிறீர்கள்?அந்த ஒற்றை நிலைக்கெதிரான பன்முகத் தன்மையைக் கோருவது"மாற்றாக"-கருத்தாக இருக்க முடியாதா?

8: ||நாம் ஒரு அரசியல் இயக்கமோஃகட்சியோ இல்லை.ஒரு அரசியல்கொள்கையைஃநிலைப்பாட்டினை முன்னிறுத்தி அவற்றினை நியாயம் காணசெய்வதற்கும் அவற்றினை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்கும் ஏனைய கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குவதும் எமது நோக்கமன்று.|| ஒரு அரசியல் இயக்கம்-கட்சி குறித்த உங்கள் கணிப்பீடுகள் என்ன?அரசியற்கொள்கை-நிலைப்பாடுகள்,அவற்றைத் தவிர்கக்கும் நீங்கள்-நியாயம் செய்ய மறுக்கும் நீங்கள்,எந்தக் கருத்தையும் கேள்விக்குட்படுத்தாத நீங்கள், "துருவமயப்பட்டு நிற்கும் சிந்தனைக்கு"மாற்றாக இயங்குவதாக இருப்பின் அது,துருவமயப்பட்ட கருத்துக்களைக் கேள்வி கேட்பதாகதா?அப்போது எங்ஙனம் மேற்காணும் உங்கள்கொள்கையை உருவகப் படுத்துவதில் முனைப்படைகிறீர்கள்?

9:||நாங்கள் மாற்று செயற்பாட்டாளர்களுமல்ல. மாற்று உரையாடல்களை நடத்துவது தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் நோக்கமும் இல்லை. அனைத்து மாற்று உரையாடல்களுக்கிடையிலான பொது உரையாடல் வெளியினைத் திறப்பதே எமது நோக்கமாகும்.||(!;?)மாற்று உரையாடலை நடாத்துவது உங்கள் நோக்கமல்ல.மாற்றுச் செயற்பாட்டளருமல்ல.ஆனால், அதற்காக நீங்களொரு பொதுவெளியைத் திறக்கிறீர்கள்.அந்த வெளியை மீளவும்,மாற்று உரையாடல்களுக்காகவே-அதற்கானவொரு இடையில் நின்று ஒரு பொதுவெளியை(யூர்கன்காமர்மார்ஸ் சொன்னமாதிரி?) திறப்பதில் உங்கள் நோக்கம் இருக்கிறது.அப்படியாயின்"பொது உரையாடல்"என்பது என்ன?அது,ஒன்றிற்குச் சார்பானதா அல்லது அதற்கு மாற்றானதா?அல்லது நிலவுகின்ற அமைப்பைக் கடந்த"இயங்கு தளம்"ஒன்றைக் கணித்த பொதுவெளிச் செயலூக்கமா?

10:||நமது சமூகச் சூழலானது மிகமோசமான துருவநிலைப்பாட்டாலும்இபகை முரண்களாலும் ஒதுக்கங்களாலும் ஒருவரையொருவர் எதிர்நிலைக்கு தள்ளிஇஉரையாடல்களுக்கான சாத்தியங்களையும் நியாயப்பாடுகளை அலசி ஆராய்வதற்கான பொது வெளியையும் இல்லாதொளித்தே நிற்கிறது.இதன் விளைவுகளை பாடமாகவும் அனுபவமாகவும் கொண்டு புதியதோர் பண்பாட்டு தளத்தில் நகர வேண்டிய அவசியத்தின் தேவைப்பாட்டினை ஏற்றல் என்கிற அடிப்படையில்தான் நாம் இந்த பணியில் இணைந்து பணியாற்றுகிறோம்.திட்டமிடுகிறோம்இசெயற்படுகிறோம்.||புதியதொரு பண்பாடு குறித்துக் கணிக்கிறீர்கள்.அது,நிலவும் அமைப்பைக்கடந்து புதிதாக முன்னேறமுடியாது.புதிதாகக் கோடு கீறுதல் பண்பாட்டத்தளத்தில் இயலாது.அநுபவங்களைக்கடந்த இன்னொரு புதிய அநுபவ வெளி-வாழ்வு நிலை நிலைப்பதாயின் அது ஏலவே இருந்தவைகளிலிருந்து மாற்றைக் கோருவது.எனவே,"மாற்றுக் கருத்து-எண்ணம்"பண்பாட்டுருவாக்கத்துள் உருவாகிறது. அப்படியாயின் எதை மறுத்து"மாற்றுக் கருத்தாளர்கள் நாம் இல்லை"என்கிறீர்கள்? அப்படி இல்லாதிருக்கும் பட்சத்தில் நிலவும் அமைப்பில் உங்கட்கு என்ன முரண் நிலவ முடியும்?-பிறகெதற்கு இயங்கு தளம்,புதியதோர் பண்பாட்டத்தளத்துக்கு நகர்தல்?

உங்கள் கொள்கைப் பிரகடனமும்"இயங்கு தளமும்"தமிழ் மொழிச் சமூகங்களும் குறித்து விரிவாகச் சொல்லுங்கோ.இக்கேள்விகளை நாம் கேட்டு நமது நேரத்தை வீணாக்காதிருப்பதற்கு.

ப.வி.ஸ்ரீரங்கன்
31.03.2012

Tuesday, March 13, 2012

பொய்யுரைப்பதே புலிகள் என்றாச்சு!

முள்ளி வாய்க்கால் நாடகத்துக்குப் பின்னும்,நாம் தமிழ்த் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம்.

முள்ளி வாய்க்காலில் சரணடைந்து மாண்டுபோன பாசிசப்புலிகளது தலைமையின் தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம்,புலிகளால் இரண்டு இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.


இன்று,வன்னிக்குள் தினமும் பட்டுணியால் செத்து மடிபவர்களுக்கு புலிகளது சரணடைவுச் சாவுத் துரோகக் கைக்கூலிப்படை போராட்ட வரலாறு என்ன தீர்வைக் கொடுத்துள்ளது?மக்களது தியாகத்தை இலங்கைப் பாசிச அரசுக்கேற்பத் தகவமைத்து, இலங்கை ஆளும் வர்க்கத்தின் காலில் போட்டுவிட்டு, ஒரு தலைமுறையைச் சீரழித்துச் சென்றுள்ளது தமிழ்ப் பாசிச அரசியல் வரலாறு!

மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுத்தி அழிவு யுத்தத்தில் பலிகொடுத்த புலி-இலங்கை அரச பயங்கர வாதத்துக்கும் என்ன வேறுபாட்டைக்காணமுடியும்?,இதுவரையான புலிகளது மிச்சசொச்சங்களது அரசியலானது சந்தி சிரிக்கும் வியாபாரத்தனமானது!

மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்கும் எஞ்சிய புலிகளோ, இலங்கையில் அரச பாசிசம் நிலைத்திருக்க வழி செய்யும்போது,புலம் பெயர் தேசங்களிலோ புலிப்பினாமிகள் மீள மக்களை மொட்டையடிக்கும் அரசியலோடு உண்டியல் குலுக்கிப் பணத்தைச் சுருட்டுவதில் கவனமாகக் காரியஞ் செய்யும்போது,நாடுகடந்த அரசாங்கம் மேற்குலக லொபியாகச் செயற்படுகிறது.மிக வியாபாரத்தனமாகச் செயற்படும் ஒரு கோமாளிக்கூட்டம் அந்த நாடுகடந்த அரசாங்கத்துக்கு எம்.பி. களாகவும்,அமைச்சர்களாகவும் இருக்கிறது!

இப்போது,இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.கள்,மந்திரிகள் பாலியல் வல்லுறவுக்காகப் பெண்களைத் தயார்ப்படுத்துகிறார்கள்?

அப்படியானவொரு சூழலுள்மாட்டுபட்டு, பாதிக்கப்பட்ட டாக்டர் மீனா கந்தசாமி,தனது ஆதங்கத்தை எழுத்தாகவும் முன்வைத்துள்ளார்.ஒரு கல்வியாளருக்கே இப்படியென்றால் பாமர மக்களது நிலை என்னவாகும்?

இத்தகையவொரு சூழலைச் சந்திக்க முனையும் புலம் பெயர் தமிழ்ச் சிறார்களது நிலை என்னவாகும்?அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் இந்தக் கூட்டத்தை நம்பிப் பேரணிகள்-போராட்டமெனச் சிறார்கள் இவர்களது பின்னே செல்வது பாதுகாப்பானதா?

இந்த நிலையில் பினாமிப்புலிக்குக் காவடி தூக்குபவர்களே,புலிகள் இதுவரை தம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள்? சொல்லுங்கள்!எஞ்சிய மக்களையும் பொருள் ரீதியாகவும்-பாலியல் ரீதியாகவும் சுரண்டுவதைத் தவிர வேறென்ன மக்களுக்காகச் செய்கின்றனர்?

மக்களிடம் சேர்த்த பலகோடிகள் டொலரை யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்காகச் செலவிட்டார்களா?அல்லது அவர்களது ஒரு நேரக் கஞ்சிக்கு உப்பிட்டார்களா?

எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதை முன்னின்று நடாத்தும் புலிகளது சிந்தாந்தத் தலைமை மேலும்பொய்யுரைப்பதில் காலங்கடத்துகிறது!

இது கடந்த காலத்தில் புலிகளது இராணுவக்கட்டமைப்பை "தேசிய விடுதலை இராணுவமாகவும்"தமிழீழத்தின் படையணியாகவும் கருத்துக்கட்டியது.இப்போது இப்பிழையான போராட்ட நெறியைத் தியாகமாக்க முனையும் ஒவ்வொரு பொழுதும் தமிழ் மக்களது சுயநிர்ணயப் போராட்டப் புறவயச் சூழலுக்குப் புலியைத் தியாகத்தின் குறியீடாக்குவதால் நாசஞ் செய்கிறோம்.

இது,ஆபத்தானது!

போலித்தனமாகத் தேசியவிடுதலை பேசுகின்ற புலிகளது கைக்கூலிகள் தமது தலைமையின் சரணடைவு அவலச் சாவைத் தமிழ் மக்களது விடுதலையின்பெயரால் தியாமெனச் சொல்வது மனித நடாத்தைக்குப் புறம்பானது.

இங்கே,தலைவர்கள்உயிரோடும்,தளபதிகள் போராடித்தாம் செத்தார்கள் என்று கூறுவதனூடாக இதுவரை, புலிகளால் காயடிக்கப்பட்ட அனைத்துக் கொலைகளுக்கும் தேசத்தினதும்,விடுதலையினதும் பெயரால் நியாயங் கற்பிப்பதும்,தியாகத்துக்காக-விடுதலைக்காக அவர்கள் செத்தார்களெனச் சொல்லிப் பாசிச வரலாற்றை நியாயப்படுத்துவதில் மிக நாசுக்காக இந்த மக்கள்விரோதிகள் சித்தாந்த எல்லைக்குள் ஒளிந்தபடி மிக நேர்த்தியாகச் செஞ்சோற்றுக் கடனை ஆற்றுகிறார்கள்.

ஒளிபரப்பப்படவுள்ள சனல் 4 தொலைக் காட்சியின் விவரணப் படக் காட்சிகள் "தற்போது" போலியானவை எனவும் புலிகளது ஒரு அணி பிரச்சாரஞ் செய்யத் தொடங்கிவிட்டது.இலங்கை பற்றிய குற்றத்துக்கு அதையே சாட்சியாக எடுத்தவர்கள்,பின் தமது தலைமையினது சரணடைவுத் துரோக அரசியலைக் குறித்து அச்சங்கொண்டபடி இப்போது சனல் 4 ஒளிபரப்பும் விவரணம் போலியானதெனவும் சொல்ல முற்படுகிறார்கள்.இவர்களே தமிழ் மக்களது தலைமையாம்-தமிழரின் தலைவிதிதாம் இது!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.03.2012

Monday, February 27, 2012

ஐ.நா. முன்றலில் நாளை கூடும் மக்களைப்பாத்து...

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில்...

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும்,எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.நாம் ஏதோவொரு சதி அரசியலைப் புரட்சி சொல்லி நகர்த்துகிறோம்.குழுவாதிகளாகவும் சீரழிந்து மொக்குத்தனமாக ஒவ்வொரு முகாமுக்குள் நின்று, இருப்புக்கான அரசியலைச் செய்கின்றோம்.இந்த நாம்தாம் புலம்பெயர் தளத்தில் மீளவும் காய்நகர்த்தும் புலிப்பினாமிகள்-வியாபாரிகள் கோரிக்கையின்வழியிலான ஐ.நா. முன்றலில் நாளை கூடும் மக்களைப்பாத்து அறைகூவல் இடுகிறோம்!

மீளவும் பிழைப்புவாத புலிவழி வியாபாரிகளால்,சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.

கடந்த காலத்தில் புலிகளது வளர்ச்சியும்,அழிவும் அவர்களைமட்டும் பாதிக்கவில்லை!

புலிகளாலும்-சிங்கள அரசாலும் செத்தவர்கள்-அழிக்கப்பட்டவர்கள் இலங்கையின் அனைத்துப்பகுதி மக்களுமே.இனவாத அரசியலது பங்கு இஃதென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.எதிரெதிர் இனக்குரோத அரசிலானது இலங்கையின் அனைத்துப் பகுதி யையும்பாதித்து,அந்தத் தேசத்தின் மக்களை மிகக் கேவலமாக அடக்கி ஒடுக்கியபடி யுத்துத்துக்குள் தள்ளி அவர்களது எதிர்காலத்தையே நாசமாக்கியது.2009 முள்ளி வாய்க்கால் புலி அழிப்பு அரசியலோடு பெரும்பகுதி அப்பாவித்தமிழர்களும் சேர்த்தே அழிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை அரசினது ஓரவஞ்சக அரசியலானது,மக்களைக்கொன்றாவது புலிகளைப் பூண்டோடழிப்பதில் அந்நியத் தேசங்களது ஒத்துழைப்போடு அனைத்தையும் கைச்சிதமாக நடாத்தி வெற்றிகொண்டது, தமிழ் மக்களையும்கூடவே!

இந்த வரலாறைத் தொடர்ந்து கணிக்கும்போது,ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.இந்த நிலையிற்றாம் நாளை(27.02.2012) ஜெனிவாவில் கூடி மனிதவுரிமை குறித்து மேற்குலகத்துக்கு உணர்த்தப்போகிறார்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்!ஐ.நா.வின் மனிதவுரிமைப் பித்தலாட்டமெல்லாம் ஆதிக்கவாத அமெரிக்க-ஐரோப்பிய யுத்தங்களால் நாடுகளைக்கொள்ளையிடும் வியூகத்துக்கானதென்பதை லிபியாவின்மீதான பயங்கரவாத நேட்டோவின் ஆக்கரமிப்பிலும் வெளிப்படையாகவுணர்ந்தோம்.இத்தகைய கபடக் கூட்டுத்தொடர்களுக்குள் மீளவும் நசிந்து ஏமாந்துபோகும் மக்களாக நாம் மாற்றப்படுவது யாரால்?

தமிழர்களையும்,தமிழர்களது உரிமைக்கான குரலையும் எந்தத் தேசங்களது நலனுக்கான லொபிகளாக மாற்றப்பார்க்கிறார்கள்? இதைத் திட்டமிட்டு நடாத்துவது யாரு?

ஜீ.ரி.வி. விளம்பரத்துள், சினிமா நடிகன் சத்தியராஜ்வரை எமது மக்களிடம் வேண்டுகோள்விட்டுக் " கூட்டத்தொடருக்குமுன்கூடி ஆர்பாட்டஞ் செய்யும்படி" வேண்டுமளவுக்கு நமது பிரச்சனை சினிமாத்தனமாக மாறிவிட்டது!

சினிமாத்தனமாக நமது மக்களது உரிமை குறித்துச் சீமான் வகுப்பெடுப்பதும்,அதையே சத்தியராஜ் அறைகூவல் செய்வதும் தமிழகத் தமிழரைக் கனவுக்குள்வைத்தா? அல்லது இந்திய அரசினது வியூக முன் நகர்வுக் காரணியத்தின் ஒரு நிபந்தனையாகவாக? இங்கு இத்தகைய கோமாளிகளால் சொல்லப்படும் நமது அபிலாசை என்பது என்ன?

தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின்ஆயுத இயக்கங்கள்போரரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.புலியோடுசேர்ந்து அழிக்கப்பட்டது மக்களது அனைத்து வாழ்வாதாரமும்தாம்!

என்றபோதும்,இனவாத அரசியலது தெரிவில் காசுபல கண்ட தமிழ் வியாபாரிகள் இயக்கமாகவும்,குழுக்களாகவும் "தமிழீழ விடுதலை" சொல்லிச் சேர்த்த காசுகள் கோடி கோடி டொலர்கள்.

இதைக்கொண்டு பெரு வர்த்தகஞ்செய்யும் இவர்களே மீளவும், இனவாத அரசியலோடு ஆட்சேர்ப்பதில் தீவிரமாகப் பிரச்சாரஞ் செய்கின்றனர்.மக்களைப் பிளக்கும்இனவாத்தை, தமிழ்- சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது. இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.இவர்களேதாம் இப்போது ஐ.நா.முன்றலில் நாளை 27.02.2012 அன்று நம்மைக் கூட்டத்தோடு கோவிந்தா போட அழைக்கின்றனர்.


இங்கே புலம்பெயர் பினாமிப்புலிகனில்ஒருபகுதியும்,மறுபகுதி முன்னாள்ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,நாடுகடந்த தமிழீழ அரசையும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சிகளையும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள்பயன் படுத்துகிறார்கள்.

மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டு அபல அரசியலைச் செய்யும் பிழைப்புவாதத் தமிழர்களால் நிலத்திலுள்ள மக்களது தார்மீகவுரிமைகள் யாவும் இலங்கை அரசாலும்,இந்திய நலத்தின் பொருட்டாலும் அழித்துக்கொள்ளப்படுகிறது.

சாதாரணமாகப் புலிவழிப்போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின்பால் கவனஞ் செய்தும் இத்தகைய வியாபாரிகளால்நமது மக்கள் கட்டுண்டுபோகிறார்களே-இது ஏன்,எப்படிச் சாத்தியமாகிறது?

இலங்கை அரச பயங்கரவாதத்துக்குமுன்மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது.

சமுதாயத்தை இவ்வளவு கொடுமையாக அடக்கித் தமிழ் மக்களின் வரலாற்றைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றி அழித்துவரும் கொடிய வன்முறையாளர்களை அழிப்பதற்கு நம்மால் இரும்புக் கம்பிகளை எடுக்க முடியாதுபோனாலும்,குறைந்த பட்சமாகவேனும் இத்தகைய அழியுறும் சமுதாயத்தைக் காத்தாகக் கதைத்தோ,பறைந்தோ-பேசிப் பறைந்து கொடுமையான இந்தப் பிழைப்புவாத அரசியலை அம்பலப்படுத்தியாக வேண்டும்.

ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஆட்பிடிக்கும் பிழைப்புவாதச் சினிமாக்கூட்டமோ தமது இந்தியாவென்ற தேசத்தால் தமது மக்கள் ஒடுக்கப்படுவதுகுறித்து வாயே திறக்காது பிழைப்புவாதிகள்-கோமாளிகள்!இந்தியவென்றவொரு நாடு சிறுபான்மைத் தேசியினங்களின் சிறைக்கூடமென்று திரு பணிக்கர்,அசீஸ் நந்தி போன்ற இந்திய சமூவியலாளர்கள் எப்பவோ கருத்துக் கூறியுள்ளார்கள்.இதைக்கூட நாம் நமது அரசியல் பிழைப்புக்காக ஒழித்து மக்களைக் கருவறுக்கத் தயாராகிறோம்.இதை இந்திய நலன் தன்னாலான அனைத்து வழிகளிலும் கச்சிதமாகச் செய்கிறது.

முள்ளிவாய்க்கால்வரை இரண்டு இலட்சம் மக்கள்ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார் 9 றில்லியன் ரூபாய் பெறுமதியான வளங்கள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்கு யாரூ காரணம்?


இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும்அரசுகள்-இயக்கள் மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக் கொப்பத் தண்டிக்கப்பட வேண்டியவை-வேண்டியவர்கள்.இதுவன்றி மக்கள் அராஜகத்துக்குப் பயந்து முடங்குவதற்கான ஒரு சூழல் இனிமேல் நிகழ்வதற்கு எந்த ஜனநாயகச் சக்திகளும் இடமளிக்க முடியாது.ஆனால்,இதை இந்த ஐ.நா.செய்யுமெனக்கொள்வதற்கான எந்த நியாயமானவொரு நடாத்தையைக் கொஞ்சமாவது இனங்காட்டுங்கள்!உலகமெல்லாம் யுத்தத்தை நடாத்த ஒப்புதல் அளிக்கும் ஐ.நா.வுக்கு இலங்கையைத் தண்டிக்கும் எந்த நியாயமான தார்மீகவுரிமையுங் கிடையாது!இந்த இலட்சணத்தில் நாளை 27.02.2012 இல் நாம் கூடிக் கத்துவதால் மேற்குலகினது நலன்களுக்கிசைவாகவே கத்திவிடப்போகிறோம்.மற்றும்படி, நமது மக்களது தலைவிதி அடிமைத் தனமானதாகவே இருக்கப்போகிறது. ஏனெனில்,இலங்கையில் அவர்களது வாழஇவுக்கான எந்தப் போராட்டத்தையும் இந்த அரசியல்-பிழைப்புவாதிகள் அனுமதிக்கவேயில்லை.இதை அங்கு மகிந்தாவின் மடியில் உட்கார்ந்திருக்கும் முன்னாள் புலிகள் நன்றாகவே அறிவர்!

காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்! இந்த "அற்பத்தனமான" சமூக விரோத ஈழப்போரானது ஒருசில நூறு தமிழரின் வசதிக்கும்,வாய்புகளுக்குமானதென்பதை நாம் பெரும்பாலும் மக்களரங்குக்கு கொண்டு செல்லவேண்டிய நேரத்தில்-அவற்றைச் செய்யாது, தவறுவிட்டுள்ளோம்.இதனால்,மீளவும்,தமிழ்பேசும் மக்களது உரிமையென இந்திய உளவுப்படைகளது பினாமிகளே நமது மக்களுக்குள் அரசியல் செய்யவும்,போராடவும் முனைப்போடு குழிபறிக்கின்றனர் தமிழ் புலிவழி வியாபாரிகள்.

நம்மை நடாற்றில் தள்ளிவிட்ட புலிகளின் அரசியல் வியூகமற்ற ஆயுதப் போராட்டம்முள்ளி வாய்க்காலில்அழிந்துபோனது மட்டுமல்ல இனிமேல் இந்தியாவின் எந்தச் சதியை ஒருபோதும் வெற்றிகொள்ளமுடியாது தத்தளித்துக்கொண்டேயிருக்கும். இனியாவது,தமது தவறுகளைப் பகிரங்கமாகப்பேசியும்,விமர்சித்தும் புலம்பெயர் புலிப்பினாமிகள் மக்கள் சொத்தை அவர்களிடமே கையளித்து, மக்களை ஜனநாயக வழிகளில் இயங்க அனுமதித்து அவர்களை வெகுஜனப்படுத்தி மக்கள்திரள் போராட்டுத்துக்கு வழிகோலட்டும்.இத்தோடு, கூட்டோடு கோவிந்தாப் போடும் இந்த ஐ.நா. முன்றலில் கூடிக் கத்துவதை நிறுத்துங்கள் மக்களே!இது உங்களைச் சொல்லித் தமிழ் வியாபாரிகள் பிழைக்கும் வழி.


இதைவிட வேறு மார்க்கத்தை நீங்கள் கண்டடையும் வழிவகைகளைத் தேடுங்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.02.2012

Monday, January 23, 2012

15 வயதுப் பாலகனது தற்கொலை!

தற்கொலை!

துகுறித்து நான் பல முறைகள் பலரைப் படித்துவிட்டேன்.எமில் துர்க்கைம் முதல் காம்யு எனப் பலரைப்படித்துவிட்டு,இப்போது பீட்டர் சிமாவையும் மேலதிகமாகவே[ Infantilisierung in der Fun-Gesellschaft] கற்கிறேன்.நேற்று எனது நண்பன் ஒருவனின் மகன் 15 வயதுப் பாலகன் இரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டான்!பாடசாலையில் அழுத்தங் கூடியதாகவும்,10 ஆம் ஆண்டில் மீளவும் இருந்து கற்க வேண்டிய அவஸ்த்தையில் அவன் வதங்கியதாகவும் ஒரு பகுதிக் கதை அரும்புகிறது.

15 வயதுப் பாலகனது வாழ்வு இப்படி முடியும்போது,நான் ஒரு தந்தையாக-இரு குழந்தைகளுக்கு(19-14 வயதுக்கு குழந்தைகளுக்குத் தந்தையாக)தந்தையாக இருக்கும்போது அந்தப் பாலகனது மரணம் என்னை வருத்துகிறது.

எனது தலை குனிகிறது!

இன்றைய குழந்தைகளது தேவையைப் புரியமுடியவில்லை!

அவர்களது உலகத்தைத் தரிசிக்கத் தெரியவில்லை.அவர்கள் முற்றிலுமே வேறானவர்களென்பதை அங்கீகரிக்கவும் முடியவில்லை!

குழந்தைகளை நமது சொத்தாக,எமது பிற்காலத்து முதுமைக்கு ஒரு ஊன்றுகோலாகவே நாம் கண்டு வந்திருக்கின்றோம்.இதை எமது பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுவந்தேன்.எனது குழந்தைகள் என்னிடமிருந்து இதைக் கற்கக் கூடிய சூழலை நான் ஏற்படுத்தவேயில்லை!அவர்களை-அவர்களாகவே இருக்க விடுவதென்பது எனது கற்கையின் வழி நான் கண்டடைந்தவுண்மை!

இந்திய-இலங்கை மற்றும்தமிழ் சூழலில் மனிதருக்குள் என்னென்ன பிரிவினைகள் இருப்பதென்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. விக்கிப் பீடியாவில் சாதியக் கட்டமைவுகளையும்,இந்து மதத்தைக் குறித்த கற்கையில் கண்டடைந்த எனது மூத்தமகன், சில கேள்விகளைக் கேட்டான்.அவனுக்கு: " இந்துமதம் என்பதும்,உலக மதங்கள் யாவும் மக்களை அடிமைப்படுத்தும் அபினி " என்பதை உரைத்தபோது ,அவன் மறுப்பெதுவும் கூறாது ஏற்றான்!மரபுரீதியான எந்தத் தமிழ்ச்சம்பிரதாயமும் அவர்களுக்குத் தெரியாது!எனினும்,பயமாக இருக்கிறது.குழந்தைகளது உலகத்தையும்,அவர்களது சிந்தனைத் திசைவழிகளையும் நாம் சரிவரப் புரியவில்லை!


அவர்கள்:

1: அதீதமான சுதந்திரவுணர்வுமிக்கவர்களாக இருக்கிறார்கள்,

2:தன்முனைப்பு அதிகமான தன்நிலைகளைத் தகவமைப்பவர்களாக இருக்கின்றனர்,

3:பெற்றோர்களைக் குறித்து எந்தக் கவலையுமற்ற அந்நியர்களாக இருக்கின்றனர்.அல்லது, பெற்றோர்கள் கட்டுப்பெட்டிகளெனப் புரிந்துபோயினர்,

4:தமது நலன்சார்ந்தும்-விருப்புச் சார்ந்தும் அதிகமாகச் சிந்திக்கின்றனர்,

5: கல்வி குறித்து எந்தப் பொறுப்புமற்ற உலகத்தில் தமது போக்குக்குக்கேற்ப எதையோ தேடிச் செல்வதாக அவர்களது காலம் கழிந்துபோகிறது.படைப்பாற்றலின்றிப் பாடசாலையில் அதிகம் அவமானப்படுபவர்களுமாக இவர்களே இருக்கின்றனர்.

இவற்றை, இந்த வர்த்தகச் சமூகமே படைத்து இவர்களைத் தமக்கேற்பவும் தயாரித்துவிட்டபின்,நம் குழந்தைகள் நம்மவர்கள் இல்லை!அவர்கள்,இந்த நுகர்வடிமைச் சமுதாயத்தின் வாரீசுகளாகிப்போயிருக்கிறார்கள்.மீள, வேருக்கு அழைப்பதும் முடியாது போகிறது.அப்படி அழைக்காதவரை இந்தச் சமுதாயத்தின் அற்பத்தனங்கள் அவர்களைச் சிறுபருவத்திலேயே கொலைக்குத்தூண்டுகிறது-தற்கொலை சாதாரணமாக நிகழ்கிறது.வாழ்வு பரிகாசத்துக்குரியதாகப் படைக்கப்பட்டவெளியில் [Das Leben ist es wert gelebt zu
werden, da ein Gott oder eine Weltvernunft den grundsätzlich positiven Charakter menschlichen Daseins im Normalfall garantiert. ]அவர்கள் தம்மைத் தாதாவாக்கி வைத்து ஊர்கோலம் போகின்றனர்.குறிப்பிட்ட காலத்தில் தாதாவுக்குரிய மகுடஞ் சரியும்போது தமது வாழ்வை முடிப்பதில் ஒரு எதிர்நிலையான கற்பனை வீரத்தைக்காண்பதோடு,மரணத்துள் தமது தோல்வியைப் புதைக்கின்றனர்!

இந்த நிலையில்,இந்த மாதம் ஜனவரி 2012 க்குள் இரண்டு இளைஞர்கள் நானறியத் தற்கொலை செய்துவிட்டனர்.

ஒருவனுக்குப் பதினெட்டு வயதாகிறது.அவன் வீட்டைப் பெருக்கச் சொன்ன தாய்கு வாய்காட்ட,அவனது தந்தை அவனை மெல்லத் தட்டிவிட்டுத் தாயும் தந்தையும் கடைத்தெருவுக்குச் சாமான்கள் வேண்டச் சென்றபோது, அந்தப் பையன் சொன்ன வார்த்தைகள்:"நீங்கள் வீட்டுக்கு வரும்போது வீடு எப்படி இருக்குமென்று பாருங்களேன்"என்பதே!

கடைத்தெருவிலிருந்து வீடுமீண்ட அப்பாவிப்பெற்றோர்கள் அந்தப் பதினெட்டு வயது இளந்தாரியின் உடலைத் தொங்கிக்கொண்டிருக்கும் சூழலில் பார்க்கும்போது வாழ்வில்-குழந்தைகளோடான அணுகுமுறையில் நமது தவறென்ன-குழந்தைகள்கொண்டிருக்கும் சுதந்திரவுணர்வென்ன-புரிதலென்னவெனக் கேட்டு வைப்பது சாத்தியமாகிறதா?
Kierkegaard: „Entweder-Oder“ sagen:„Ein Selbstmord ist der negative Ausdruck für die unendliche Freiheit"கீர்கேகோட் வாதத்தின்படி வாழ்வு தேர்வாகிறது."அதுவா-அல்லது இதுவா"தற்கொலையென்பதாவது எதிர்மறையான பொருட் குறித்துரைப்பினும் அது முடிவற்ற சுதந்திரத்தை வழங்கிவிடுவதென்பதில் எனக்குச் சிக்கல்கள் அதிகமாகிறது.

நேற்றுப் பச்சப்பாலகன்,15 வயது ஆரம்பிக்கும் சிறுவன் தாயிடம்கூறிப் படம்பார்க்கச் செல்கிறான்.இரவு படம் முடிந்து நண்பர்களோடு வரும் அந்தப் பாலகன்,இம்பிஸ்[Imbiss] கடையில் டொனர்(Döner) வேண்டிச் சாப்பிட்டபடி அம்மாவுக்கு போன் செய்கிறான்:"அம்மோய் நான் டோனர் [ Döner ]சாப்பிடுகிறேன்.அடுத்த பஸ்சுக்கு வீட்டை வந்துவிடுவேன்." என்னவொரு ஊழ்வினை?இரவு பத்து மணிக்கு மகனின் தொலைபேசி மணியைக்கேட்ட பெற்றோருக்கு இப்போது, இரவு 11 மணிக்கு வீட்டு மணி ஒலிக்கிறது.

மகன் வந்துவிட்டானென ஓடோடிச்சென்று கதவைத் திறக்கும் தாய்க்கு, ஜேர்மனியப் பொலிசாரே கண்களில்படுகிறார்கள்.

பதை பதைத்துப் போனவர்களிடம்,"இது உங்கள் பையனின் ஜெக்கற்றா,இது அவனது மணிபேர்சா,இது அவனது பாடசாலை அடையாள அட்டையா"எனப் பொலிசார் விசாரித்துவிட்டு,மகன் ஓடும் இரயிலின்முன் பாய்ந்து இறந்துவிட்டான் எனும் செய்தி சொல்லப்படுகிறது.

அட,அநியாமே!இதுவொரு வாழ்வா?

ஏன்-ஏன்?

உனக்குக் குறை வைப்பவன் எனது நண்பனில்லை!அவனது குமாரனான நீ-ஏன் இப்படி?

கொஞ்சம்,இந்தத் தருணத்தை உள்வாங்கிச் சிந்திக்கின்றேன்.

அவனது பெற்றோர்,மிக நடுநிலையானவர்கள்.பொதுவாக எவரோடும் சோலி சுரட்டுக்குப்போகாத மென்மையான இதயமுடையவர்கள். எனினும்,அவர்களது பையனும் தற்கொலைக்குப் போகும் சந்தர்ப்பம் எதனால் உருவாகியது?

கல்விக்கூடத்தின் அதிகாரத்துவ நிலைக்கு,அல்லது குடியேற்றவாசிகளைக் குட்டும் ஆசிரிய மனோ நிலைக்கு[ fatalistischer Selbstmord ] இந்த மாணவன் பலியானான்?புரியவில்லை!


அல்பேர்ட் காம்யு குறித்த " Das Gefühl des Absurden[உலகத்தின் _அபத்தமாகும் உணர்வு ] "இந்த மாணவ மனநிலையில் உலகத்தின் பொருள் [Es gibt nur ein wirklich ernstes philosophisches Problem: den Selbstmord ]எதுவுமில்லையென உணர்ந்திருப்பதால் இந்த அதிவேகப் பயணம்? பெற்றவர்கள் நாம்.மனம் வேதனையாலும்,தோல்வியாலும் அவஸ்த்தைப்படுகிறது.

எப்படி இவற்றை விளங்க முற்படுவது?.

ஒவ்வொன்றாக எழும் முரண்பாடுகள்,இறுதியில் பாலகர்களது உலகத்தில் அர்த்தமற்ற உலகமென [ die Welt sei absurd ]விரிவதா?

எமில் துர்க்கைமை மீளவும் வாசித்துப் பார்க்கிறேன்.என்ற போதும் மனம் ஒருமைப்பட மறுக்கிறது.

சாவை [Freitod ]அரவணைக்கும் பாலகனின் தோல்வி என்னவாக இருக்கமுடியும்?

தற்கொலைபற்றிய கூட்டு மனப்பாங்கை இந்தவயதில் இவன் உள்ளத்தில் உருவகப்படுத்திய சந்தர்ப்பம் எப்படியுருவாகிறது?


அவனது மனிதிலே உணரப்பட்டது எது?

Das Gefühl des Absurden:
Egoismus_தன்முனைப்பு(-), Anomie_ஒழுங்கு பிறழ்வு நிலை(-)

Fatalismus_விதிமுனைவாதம் (+), Altruismus_பொதுமைச்சார்பு (+ ),


அவனது உலகம்,அவனுக்கு வசப்படவில்லையா?

அந்தவுலகத்தை அவன் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடாக இந்த மரணம் இருக்கமுடியுமா?

அல்லது,அவனது உலகத்தை மறுக்கும் இந்த வாழ்நிலையை எதிர்த்து அவனது கலகமாக விரியும் பரிகாசமா [Egoistischer Selbstmord -altruistischer Selbstmord ? ]இந்த மரணம்?

இரு குழந்தைகளுக்கு அப்பனான நான் அச்ச முறுகிறேன்.

குழந்தைகளது உலகத்தைப் புரியாத நிலையில், அந்த மரணம் பெற்றோராகிய எமது தோல்வியெனக் கருதுகிறேன்.

பிள்ளைகளது உலகத்தைத் தரிசிக்க முனையாதவொரு சூழலில் பெற்றோர்கள் இழப்பது,அந்தப் பிள்ளையை என்றால் [anomischer Selbstmord ]அதையொட்டி மிக ஆரோக்கியமாகச் சிந்திக்கவேண்டும்-அததீவிரமாக நம்மை நாம் கேள்விக்குட்படுத்திச் சிறார்களது உலகத்தைத் தரிசித்துக் குழந்தைகளைப் புரிந்தாகவேண்டும்.

எனக்கு,இந்த அச்சம் எப்பவுமே இருக்கிறது.

குழந்தைகளை எமது சொத்தாக எண்ணுவதை நான் எப்பவோ தவிர்த்துவிட்டேன்.ஆனால்,அவர்களது உலகத்தைப் புரியவே முடியவில்லை!

இதைப் புரிந்துகொள்ள முனைந்தால் இத்தகைய சிறார்களது தற்கொலையைத் தடுத்துவிடலாம்? புரியவில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.01.2012

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...