Sunday, July 31, 2011

நாம் மார்க்சியத்துள் கலந்து போகின்றோம்

முன் _சிறு குறிப்பு:

ன்றைய சூழலில் தமிழ்பேசும் மக்களாகிய நாம்,நமது அரசியற் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.நமது ஓட்டுக்கட்சி அரசியலை நாம் அடியோடு விட்டுத்தொலைத்தலும் முடியாதுபோன அவலச் சூழலில்,புரட்சிகரமான கட்சியின் அவசியம் இன்னும் வலிமையான வெற்றிடமாகவே இருக்கிறது.

எங்களுக்குள் நீடிக்கும் வெளிப்படையற்ற அரசியல்-தோழமையற்ற போட்டி வெற்றுக் கூச்சலும்,வேடிக்கை மார்க்சியச்சவடால்களும் தோழமைகளை நொருக்கி வர்க்க உணர்வற்ற ஜடங்களாக நம்மை மாற்றியுள்ளது.இந்த நாமே இன்றைய இலங்கைப் பாசிச அரசுக்கும்,அந்நியச் சக்திகளுக்கும் ஏதோவொரு வகையில் கூஜாத் தூக்குவதில் போட்டியிடுகிறோம்.

எங்கள் தலைமையில் மக்களைக் குறித்தும் கனவுகாணும் நாம்,முதலில் புரிந்துகொள்ளவும் பாடங்கற்கவும் வரலாற்றுப் புரிதல்களும்,மக்களுமே மிச்சமாக இருக்கிறது-இருக்கிறார்கள்.இதுள் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு தளமும் நமது தலைவிதியை நாமே திறம்பட நிர்ணயிக்க முடியுமாயின் இந்த மொழிபெயர்ப்பில் எனது உழைப்பும் ஏதோவொரு அர்த்தங்குறித்து...
கீழ்வரும் பேட்டியின் டொச்சு மூலத்தை வாசிக்கத் தெரிந்தவர்கள் இங்கே சென்று வாசிக்கலாம்: http://www.jungewelt.de/2011/07-16/001.php

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.
01.08.2011


வார விவாதம்

16.07.2011 Junge Welt -வார மஞ்சரி.

"நாம் மார்க்சியத்துள் கலந்து போகின்றோம்."

Li Junru வோடான பேட்டி இஃது.


சீனக் கம்யூனிசக் கட்சினது செயலூக்கம் மற்றும் ஆளுங்கட்சியாக இருக்கும் தறுவாயில் எழுங் கஷ்டங்கள் குறித்தும்.இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இப்போது 90வது அகவையில்காலடி எடுத்து வைக்கும் தறுவாயில் இது உலகிலேயே அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியுமாகும்.மார்க்சியத் தத்துவார்த்தக் கோட்பாட்டு நூலிற்கு முன் மார்சியர்களது செய்வினைப் பயன்.

பேட்டி காண்பவர்: செபஸ்டியன் கார்ல்லென்ஸ்[Sebastian Carlens]

தமிழில்:ப.வி.ஸ்ரீரங்கன்.

[இலீ யூன்று (Li Junru பி. 1947) சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (PKKCV) என்ற நிலை குழு நீண்டகால உறுப்பினராக உள்ளார். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி,கட்சி வரலாற்றியல் ஆராய்ச்சி மையத் துணை இயக்குனராகவும்,சீனக் கட்யூனிசக் கட்சியின் உயர் நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் அவர் இருக்கிறார். ]


[Li Junru]

90 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1921 ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி அரசாங்கத்தைக் கொண்டியக்குகிறது.அனைத்து ஆட்சி அதிகாரத்துக்கும் அதுவே பொறுப்பானது.ஒரு விவசாய நாடாகவிருந்த சீனத் தேசம்,தொழிற்றுறை வளர்ச்சியூடாக இன்று உலகின் மிக பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக, அடிப்படையில் மாறிவிட்டது. இந்த வளர்ச்சிக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்களிப்பு என்ன?

சீன கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு மூன்று குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளது.

1: சீனாவின் ஒரு பகுதி காலனித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக இருந்தது.கூடவே,சீனத் தேசமானது ஏகாதிபத்திய வாதிகளது அடக்குமுறைக்கும்,அவமானப்படுத்துலுக்கும் உட்பட்டு நலிந்தது.சீனக் கம்யூனிசக்கட்சியானது சீனத்தை விடுவித்து அதை விடுதலையுடைய நாட்டாக்கி மக்கள் சீனத்தை உருவாகியது அல்லது நிறுவியதென்று சொல்ல முடியும்.

2: சீனக் கம்யூனிசக் கட்சியின் வாயிலாகச் சீன மக்கள் தாமும் உலகத்து மக்கள்கூட்டத்துக்கு நிகரானவர்களென நிரூபித்து உயர்ந்துள்ளனர்.மேலும், சீனா ஒரு வகையில் ஒரு பொருளாதார மற்றும் கலாச்சாரத்துள் பின்தங்கிய நாடக இருந்தது. ஒரு அமைதியான சோசலிச மறுசீரமைப்பு மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் ஒரு சோசலிச அமைப்பு நிறுவப்பட்டது.

3: கம்யூனிஸ்ட் கட்சி அதன் சீர்திருத்தம் மற்றும் திறந்த அரசியல் செய்ல்பாட்டை- கொள்கையூடாக ஒரு வலிமையான, ஜனநாயக, நாகரீக மற்றும் இசைவிணக்கமான சோசலிச நாட்டை அமைப்பதற்கு முனைகிறது,சீனாவென்பது ஒரு ஏழை நாடாகவும்,பலவீனமான தேசியவினத்தையும் கொண்டிருக்கும் சூழலில் இதை நோக்கிக் கொம்யூனிசக் கட்சி அதற்கு மாற்றானவொரு வலிமையானதும்,ஜனநாயக பூர்வமானதுமான குடிசார் சமுதாயத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறதென்பதை உலகம் புரிந்தாகவேண்டும்.இந்தச் செயற்பாடானது முழுச் சீன மக்களுக்குமானதும் கூடவே ஒவ்வொரு சீனனுக்குமானதும் என்பதை விளங்கியாகட்டும்.சீனக்கொம்யூனிசக்கட்சியானது ஆளுங் கட்சியாக இருந்தபடி தனது நீண்ட வரலாற்றில் மேம்பட்ட பண்பாடு, மேம்பட்ட உற்பத்தி சக்திகள் மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரே ஒரு கட்சி, இந்த நோக்கையெல்லாம் நாம் நீண்ட காலத்தில் நிறுவ முடியுமென நம்புகிறோம்-உறுதியாக இருக்கிறோம். சீனக் கொம்யூனிசக் காட்சியாகிய அது "பிரதிநிதிகள்" என்ற உண்மையில் சரியாக மூன்று முறை கோட்பாடு உள்ளது. இந்த கட்சி எப்போதும் முற்போக்கானதாக இருக்கவேண்டும். இருக்கவேண்டுமென்பது கட்சியை பலமடங்கு வேகத்தோடு முற்போக்கான சிந்தனையோடு வைத்திருக்க வேண்டும். மற்றும் கட்சி எப்போதும் மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை சந்திக்க வேண்டும்.அதை நிவர்த்தி செய்தாவேண்டும்.



சீன மக்கள் குடியரசானது, 1989 இல் சரிந்து விழுந்த சோவியவிற் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய வீழ்ச்சி குறித்து விவாதிக்கும்போது,இது வரையான ஸ்த்திரமான அரசியல் கட்டமைப்பைக் எங்கிருந்து மக்கள் சீனம் பெற்றது?

ஐரோப்பியச் சோசலிச முகாங்களது வீழ்ச்சியின் பின்னணிக்கு முன்பே சீனக் கொழ்யூனிசக் கட்சியானது மிகச் சரியான சோசலிச வளர்ச்சிக் கட்டுத்துடன் சீனாவில்உயர்ந்து உருப்பெற்றிருந்தது.ஏனெனில்,நாம் மட்டுமேதாம் ஒரு சரியான பாதையைக் கொண்டிருந்தோம்:சோசலிசமானது சீனாவினது சிறப்புக் கூறுகளையும் அதன் வலயத்துக்கேற்ற தேவைகளையும் கவனித்துக் கருத்திற்கொண்டிருக்காது செயற்பாட்டில் சாத்தியமாக்கிப் பயணித்தது.

1989 இல் ஐரோப்பிய முகாங்களது வீழ்ச்சியின் பலாபலன்களிலிருந்து எமக்குமுன் இரண்டு தெரிவுகள் மேலெழுந்தது:

ஒன்று:எமது மறுசீரமைப்புத் திட்டங்களும் சோவியற் வீழ்ச்சியைப் போலவே வீழ்ந்து நொருங்கிவிடப்போகிறதென்று பலர் அச்சப்படுத்தினார்கள்-எச்சரித்தார்கள்.அந்தோ அஃது பூர்ச்சுவா நிலையைக் குறித்துரைத்தது.எனவே,சீனாவானது மரபுசார்ந்த சீனவினது சோசலிசப் பாதைக்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.இந்த இரண்டாவது தெரிவினூடாக-யோசனையூடாக கிழக்கு ஐரோப்பிய-சோவியற் சோசலிச முகாங்களது உடைவை வரலாற்றுத் திருப்பு முனைவழியாக ஆழ்ந்து ஆய்வு செய்வதாக இருக்க வேண்டுமென்பது காலக் கட்டளை.அதன்வழி சீனாவானது முதலாளித்துவ லிபரல் முறையை உட்புகுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது.சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்தத் கேள்விகளை மிகத் தீவராமாக ஆய்வுக்குட்படுத்தியது.அதன் வழி இத்தகைய இறுதி முடிவு எட்டப்பட்டது:

மீளப் பழைய பாதைக்குத் திரும்புவது முட்டுச்சந்தி.

முதலாளித்தவத் தாரளவாதம்-லிபரல்,மற்றும் முதலாளித்துவம்கூடவொரு முட்டுச் சந்தியே.எனவே,சீனாவானது கண்டிப்பாகத் தனக்கானவொரு சொந்தப் பாதையை வகுத்தாகவேண்டும்.இந்த வகைச் சோசலிசப் பாதையானது சீனாவினது சிறப்பியல்வுகளை மூன்று முக்கிய வகைகளில் கண்டடைந்து:

1)முக்கியமான மத்திய வேலைத் திட்டமானது பொருளாதார வளர்ச்சியை-அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

2)சீனாவானது சோசலிச வளர்சிப்படிகளை சீனக் கொம்யூனிசக்கட்சியின்கீழ் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.

3)மறுசீரப்மைப்புப் பொருளாதாரத்தைக்கொண்டு சீனாவைத் திறந்த தேசமாக்குவது.இந்தப் பரிசோதனை-செயற்றிறன் இன்றெமக்கு ஊட்டும் பாடாமானது: இந்தப்பாதையே சரியானதென்பதையும்,இதனூடாக மீளச் சீனமக்கள் எழுந்து பயணிப்பதையும் சாத்தியாமாக்கியுள்ளதென்பதையும் பாடமாகச் சொல்கிறது.

XVIII. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம்( காங்கிரஸ் )2012 இல்திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு ,ஒரு புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. கட்சியின் பொது செயலாளர், ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபாவோ, பிரதம மந்திரி மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர், வேட்பாளர்களாகப் போட்டியிட முடியாது. ஒரு புதிய தலைமுறை மக்கள் சீனத்தைப் பொறுபேற்க இருக்கிறது.இந்தத் தலைமுறை மாற்றம் சீனாவில் அரசியல்-பொருளாதார கொள்கை மாற்றத்தைச் சாத்தியமாக்கிவிடுவதில் போய்முடியுமா?

பதினெட்டாவது கட்சிக் காங்கிரஸ் மகாநாடானது சீனக் கொம்யுனிசக் கட்சியின் வழி புதிய தலைமுறையை சீன அரசியல் மேடைக்கு அரங்கேற்றப்போகிறது.திறந்த சீனாவைச் சிருஸ்டித்தவர்களது என்ணங்களுக்கேற்றவொரு புதிய தலைமுறையினர் அவர்களர் வார்ப்பிலேயே கட்சியின்வழி தலைமையைத் தோந்தெடுப்பார்கள் என நினைக்கிறேன்.இவர்கள் தடால்புடாலாகவொரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்களென நான் சிந்தகவில்லை.இவர்கள் தத்துவார்த்த அடிப்படைகளையும்,கட்சியின் சட்டவொழுங்குகளையும் கடைப்பிடிக் வேண்டும்.இதன்னூடாகவேதாம் இன்றைக்கு, எதிர்காலத்துக்கான நடைமுறைகளும்,யதார்த்த பூர்வமான வேலைத்திட்டப் பொருத்தங்களும்கூடிய சோசலிசத்துக்கான பாதையைத் சீனவுக்கான சிறப்பியல்வுகளுடன் எடுத்தாள முடியும்.சீனக் கொம்யூனிசக் கட்சியானது பொருளாதாரச் சீரமைப்பையும் திறந்த சீனக் கொள்கையையும் கடைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்.அதன்வழியின் முலமே கட்சியினது உறுப்பினர்களதும்,சீன மக்களதும் பங்களிப்பு-ஒத்துழைப்புக் கிடைக்கும்.எவரொருவர் இதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறாரோ அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைப்பதிற்கில்லை!இத்தகையவர்களைக் கட்சியின் தலைமையாகவும் தேர்ந்தெடுப்பதில்லை.

21 வது நூற்றாண்டின் இரண்டாவது தசாப்பத்துள் எந்தப் பணிகளைப் புதிதாகத் தேர்வு செய்து, தலைமை முன்னெடுக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

அவர்களது பணியுங்கூடக் கட்சியினது முழுமொத்த முக்கிய பணிகளே.நாங்கள் 2020 க்குள்ளான சில நோக்கு நிலைகளை சம்பிரதாய முறையிற்றெரிருந்து முன்கணித்துள்ளோம்: இந்தக் காலத்துக்குள்சீன மக்கள் சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களது நல்வாழ்வைச் சிறப்புற வைக்கும் ஆயத்தத்தைத் தொடக்குவது.இதுவே,புதிய தலைமைக்கான மிகப்பாரிய கடமை.இந்த வேலைத் திட்டத்தை முன்னகர்த்தி முடிக்கும்போது நமது நீண்ட தூர இலக்கை 2050 க்குள் அடைந்துவிடுவதுதென்பது சீனாவினது நவீனப்படுத்தல்கள் முற்றுப் பெறுவதென்பது அர்த்தமாகும்(2050 க்குள்).இத்தோடு,புதிய தலைமையானது நமது கட்சிகள் இருக்கும் முரண்பாடுகளை-பிரிதிவாதங்களைத் தீர்ப்பதும் இன்றைய காலத்தின்...

சீனக் கம்யூனீசக் கட்சிக்குக்முன் என்ன முரண்பாடுகள் அண்மித்து நிலவுகறது?

உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி இடையேயுள்ள ஏற்றதாழ்வுகள், பல்வேறு பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் , நகரம் ஆகியவற்றுக்குள் நிலவும் சமச் சீரற்ற பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மற்றும் நாட்டில் உள்ள வேறுபாடுகள், நாம் சமூக அமைதியை உருவாக்க வேண்டும்.



சீன அரசாங்கம் 62 ஆண்டுகளில், சீன கம்யூனிஸ்ட் கட்சி வழியாக பஞ்சத்தை மக்களிடமிருந்து கூடியளவு அகற்றியிருக்கிறது.அனைத்துச் சீனமக்களுக்குமான சுபிட்சம் அதிகரித்தது. அதே நேரத்தில் ஒரு இடைவெளி, நகரம் மற்றும் நாட்டின் கிழக்கு கடற்கரை ,மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்குள் நிலவுகிறது.மக்களது வாழ்க்கை தரம் இடையே, ஏழை மற்றும் பணக்காரர் இடையே நீறுபூர்த்த நெருப்பாக முரண்பாடுகளை உருவாக்கி சமூகப்பதட்டத்துள் சீனம்நிலவுகறிது.சீனக் கொம்யூனிசக் கட்சி இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளும்-என்ன நடவடிக்கைகள் அவற்றை போக்கிக்கொள்ள எடுக்கப்படும்?

முதலாவதாகப் புரிந்துகொள்ள வேண்டும்:இந்தப் பாரிய முரண்பாடுகளைச் சீனக் கொம்யூனிசக்கட்சி ஏற்பதியதோ-கொணர்ந்ததோ இல்லை என்பதே.அத்தோடு இவைகளெல்லாம் சீனாவினது வரலாற்றோடு இணைந்தே வந்தவை.கிழக்குக்கும்,மேற்குக்குமான பாரிய இடைவெளி,மற்றும்செல்வந்தர்களுக்கும்,ஏழைகளுக்குமான வித்தியாசங்கள்,நகரத்துக்கும் கிராமத்துக்குமான வித்தியாசங்கள் அனைத்தும் சீன வரலாற்றின் விளைவே.இரண்டாவதாக: சீனக் கொம்யூனிசக் கட்சியினது கடந்த 30 ஆண்டுகால மறுசீரமைப்பு மற்றும் திறந்த அரசியல் வேலைத் திட்டமானது இந்த முரண்பாட்டை ஓரளவு தீர்ப்பதில்ஒரு திட அடிப்படைய உருவாக்கி வெற்றியடைந்துள்ளது.மூன்றாவதாக: கட்சியானது இந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வகைகளில் அனைத்து அளவு முறைகளையும் பிரயோகிக்கிறது.கூடியவரை இம்முரண்பாடுகளை ஓரங்கட்டிவிடவேண்டும்.நாங்கள் யதார்த்தவாதிகள்.இந்த முரண்பாடுகளை.ஏற்றத் தாழ்வுகளைக் குறுகிய காலத்துள் அகற்றிவிடமுடியாது,இஃது,நீண்டகாலப் பொறிமுறையைக்கொண்டது.இதை நாமும் அறிந்தே உள்ளோம்.இப்போது நாம் சாதகமான காலக் கட்டத்துள் இருக்கிறோம்.இதைச் சீனமக்களும் பார்த்தே வருகிறார்கள்,அதாவது, சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்த ஏற்ற தாழ்வுகளை-வித்தியாசங்களைக் குறைத்து,நிவர்த்தி செய்வதில் முனைப்புடன் இருப்பதாக.அத்தோடு மக்கள் நம்புகிறார்கள் சீனக்கொம்யூனிசக் கட்சியால் இதைச் சாதிக்க முடியுமென.

பல மேற்கத்திய ஊடகங்களில் பல ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி இறுதியில் "வெடிக்கும்" என்று ஊகிக்கப்பட்டு எழுதப்படுகிறது.குறிப்பாகக் கட்டுமானத்துறையில் இந்த வகை வளர்ச்சியானது ஒரு அபரிதமான "சவுக்கார நுரைக் குமிழி" உற்பத்தையைப் போன்றதே என்பது அவர்களது கணிப்பு.இஃது,எப்போதாவது வெடித்தே தீருமென்று கூறுகிறார்களே. குறிப்பாக சொத்து துறையில் "குமிழி" உற்பத்தி, என சந்தேகிக்கப்படுகிறது ...

சீனாவினது பொருளாதாரம் குறித்து மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து பல கெட்ட கனவுகளைக் காணுகிறார்கள். அத்தகையவொரு வீழ்ச்சியைச் சிதைவை எண்ணி எழுதுகிறார்கள்.சீனப் பொருளாதாரம் பொறிந்து சிதைவதில் அவர்கள் விருப்பங்கள் எழுத்துகளாக மாறுகிறது.ஆனால்,அவர்களது இதுநாள் வரையான கணிப்புகள்-திட்ட முலாங்கள் யாவும் தோல்வி கண்டுவருகிறது.காரணம்,சீனப் பொருதார வடிவங்குறித்த அவர்களது ஆய்வுகள் யாவும் சரியான முறையில் ஆய்வைச் செய்யவில்லை.அத்தோடு சீனக் கொம்யூனிசக் கட்சிக்கு ஒரு பலமான காரணி உண்டு:அதாவது கட்சியானது மனிதவரலாற்றிலிருந்து அனைத்து நன்மையான அநுபவங்களை தனக்குள் செரிக்கிறது.அத்துடன்,உலக நிலவரங்களையும் உள்வாங்கி ஆராய்கிறது.இன்னொரு பக்கம் எந்தப் பிரச்சனையையும் மிகத் தீவிரமான வெறியோடு சவாலாக ஏற்று ஆய்ந்து அறிவதில் விழிப்பாகச் செயற்படுகிறது.இவைகளே எங்களது அரசாங்கத்தின் இலாயக்கு.இவைகளை மேற்குலக ஊடகங்கள் புரிந்துகொள்ளவேயில்லை.உலகப் பொருளாதார நெருக்கடியை ஓரங்கட்ட நம்மிடம் பாரிய பொருளாதாரப் ஊக்கப் பொதி உண்டு.

... மொத்தவிட்டமாக இருக்கும் € 1.2 டிரில்லியன் யூரோக்கள் தானே? .

ஏற்றுக்கொள்கிறேன்.நாம் இந்த நெருக்கடியை நன்றாக் தீர்ப்பதில் வெற்றிகண்டோம்.முதன் முதலாகச் சீனாவே உலகத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் உள்ளது.

எதனால்,எப்படி முடிந்தது?

இந்த நெருக்கடியை ஓரங்கட்டித் தீர்ப்பதில் மட்டும் நாம் கவனத்தைக்கொண்டிருக்கவில்லை.இதன் நெருக்கடி குறித்த சரியான புரிதலை"ஏன்-எதற்கு"என்பதையொட்டிப் புரிந்து சீனாவினது பொருளாதார நகர்வில் மாற்றங்களைச் செய்வதும் நமது விருப்பாக இருந்தது.எங்களது பொருளாதாரக்கட்டமைபின்வழி நாம் அதிக உயர் சேவையைப் பெற விரும்புகிறோம்.இதன் வழியாக எதிர்காலத்தில் வரும் பொருளாதார நெருக்கடியை மிகச் சுலபமாக எதிர்கொண்டு நிவர்த்தி செய்ய முடியுமெனப் புரிகிறோம்.உதாரணமாக:பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம்,உற்பத்திச்சாலை பொறிமுறைமாற்றம் மற்றும்வர்தகப் பொறி முறை மாற்றங்களைக் கவனப்படுத்துகிறோம். இவைகளின் மேம்பாட்டை நாம் இன்னும் எட்டிவிடவில்லை.இதுவே எமுக்குமுன் பாரிய கடமையாக இன்று உள்ளது.


பொருளாதாரத்தின் வெடிப்புக்கேற்ற சுடு நிலையினது தீவிரமான அபாயம், அதீத பணவீக்கத்தை ஏற்படுத்தும் ,உண்மை எந்தளவில் உள்ளது?

இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. உற்பத்தி முறையில் மாற்றம் ஒப்பிடுகையில் பணவீக்கம் பிரச்சனை. ஆனால் அது ஒரு துணை வினைதாம்,நமது விருப்பமெல்லாம் பொருளாதாரப் பொறிமுறையில் மாற்றத்தை செய்வது,கூடவே,நிச்சயமாக, நாம் மேலும் பணவீக்க பிரச்சினைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.பணவீக்க அபாயம் குறித்த அடிப்படை ஆய்வுகள் நம்மிடம் இருக்கிறது.நாங்கள் அதன் காரணங்கள்,வகை நிகழ்வுகள் குறித்த ஆய்வுக்குள் கண்டடைந்தது,இந்தப் பணவீக்கமானது பழைமையான பிரச்சனையிலிருந்து வேறப்பட்டதே அல்லது வேறானதே என்பதே.முன்னைய பிரச்சனையானது எமது ஊக்கமின்மை,அறிவிலித்தனம் அல்லது அறுவடை வீழ்ச்சியிலிருந்து எழுந்தன,அல்லது வேறு பொருளாதாரக் காரணிகளால் ஏற்பட்டது.அத்தோடு இதுவே பணவீக்கமாகப் புரியப்பட்டது.இம்முறையோ பணவீக்கத்தின் காரணமானதுக்குள் அதிகமான பணப்புழக்கமே காரணமாக இருக்கிறது.அத்தோடு இன்னுஞ்சில காரணங்களில், எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பணவியல் கொள்கை. ஆனால், நமது சொந்த அரசியற் கொள்கைகளும் பணவீக்கத்தின் மிகபெரும் காரணமாக இருக்கிறது.எங்களது கணிப்பின்படி இந்தப் அதிதீவரப் பணவீக்கத்தை க் கட்டுப்படுத்த முடியும்.அத்தோடு நாம் அதைக் கட்டுப்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.அது, பாதிப்பை ஏற்படுத்துவதற்குள்ளும் தனிமனிதர்களைப் பாதிப்பதற்குள்ளும் இப்பிரச்சனைக் குறைத்துக்கொள்ள முடியும்.நாங்கள் பல அளவுகோலை இந்தப் பணவீக்கத்துக்கு எதிராக முன் தள்ளியுள்ளோம். எடுத்துக்காட்டாக:ஊதியத்தைக் கூட்டுவது,அதன் பலாபலனை மக்களுக்குள் இனம் கணாத்தக்கதாக இருந்தது.


மீளவும்,இன்னொரு முறை பொருளாதார நெருக்கடி குறித்த கேள்விக்கே செல்வோம்:ஐரோப்பியக்கூட்டமைப்பானது அதன் உறுப்பு நாடுகளது கடன் பளுவையிட்டு அதீத அச்சத்துக்குள் இருக்கிறது.திவாலுகும் அரசுகள் வரிசையில்ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்பல திவாலகுமென கூறப்படுகிறது.மக்கள் சீனமோ இத்தகைய தேசங்களுக்கு உதவுவதாகவும்,அரச கடன் பத்திரங்களை வேண்டுவதுமாகக் கூறிக்கொண்டிருக்கிறது.கடன் செலுத்த முடியாதளவுக்கான தீவிரக் கடன் பளுவைச் சுமக்க முடியாத தேசங்களது வரிசையில் கிரேக்கம்,சிலவேளை போர்த்துக்கல்சாத்தியமானவரை அயர்லாந்து எனத் தொடர்கிறது.இதுகுறித்து மக்கள் சீனம் எத்தகைய சிந்தனையோடு-சிபாரிசோடு உள்ளது?இந்த நாடுகள் குறுகிய காலவெளிக்குள் மீளவும் தமது சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரப் பலத்தை பெறுவார்களென எப்போதாவது கணித்திருக்கிறதா, இல்லையா...

சீனா மிக பெரிய அந்நிய செலாவணியைக் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இதுகுறித்து எப்படிச் சமாளிப்து என்பதே பாரிய கேள்வி.முன்னர், நாம் முக்கியமாக அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கிக்கொண்டோம்.அதுவே பாரிய இடர் சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆனால் , இப்போது நாம் ஆபத்தை குறைக்க விரும்பினோம் எனவே மற்ற நாடுகளின் அரசாங்க பத்திரங்களை வாங்க வேண்டும் என விரும்புகிறோம். சீனா பொருளாதார உலகமயமாக்கல் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலை ஆதரிக்கிறது.இதன் மூலமாக அனைத்து நாடுகளும் இதைப் பயன்படுத்தி நன்மை அடையுமென நம்புகிறோம் நாம்.இதைவிட்ட அதீத பாதுகாப்பு வாதமானது அனைத்தையும் பாதிப்புக்குள் தள்ளிவிடுகிறது.ஐரோப்பியக் கூ ட்டமைப்பு நாடுகளது அரச கடன் பத்திரங்களை வேண்டுவதனூடாக நாம் சுதந்திர வர்தகத்துள் எமது பாத்திரத்தை ஆற்ற முனைகிறோம்.அத்தோடு நாம் விரும்புவதெல்லாம் நியாமான போட்டியை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கிடையிலும் சாத்தியமாக்க விரும்புகிறோம். அதே போல் ஒரு "வெற்றி, வெற்றி" சூழ்நிலையை உருவாக்க நாம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்குள் ஒரு சாத்தியமான சூழலை உருவாக்க முனைகிறோம்.

ஆபிரிக்க மீதான சீனாவினது அதீத ஈடுபாடு மேற்குலகோடு முட்டிமோதுகிறது.இது ஜேர்மனியோடும் என்றாகிறது.இது குறித்து மேற்கில் அதிகமாக விசனத்துக்குள்ளாகிய நாடுகள் கடுமையாக விமர்சிக்கின்றன.ஆபிரிக்க நாடுகளில் சில சீனாவோடான தமது பொருளாதாரவுறவை மிக நெருக்கமாகப் பேணிவருகின்றன. இவைகள்மீது மேற்குலக அரசுகள் சில அழுத்தங்களை பிரயோக்கிறது:சூடான் பிளவுபடப்போகும் நிலை,லிபியாவோ தினமும் குண்டுத்தாக்குதலுக்குள் உட்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு சர்வதேசப் பலப் பரீட்சையில்-உறவுகளில் ஒரு மாற்றம் புலப்படுகிறதே.இது சீனாவினது வெளியுறவுக்கொள்கையில் ஏதாவது அர்த்தங்கொள்ளத்தக்கதா?

சீனாவானது ஆபிரிக்கத் தேசங்களது வளர்ச்சியில் அதிக ஆர்வமுள்ளவொரு நாடு.ஆபிரிகத் தேசமானது காலனித்துவ வாதிகளாலும்,ஏகாதிபத்தியவாதிகளாலும் பாதிப்படைந்து இருப்பது வரலாறு.சீனமக்களுக்கும் இந்த அநுபவ வரலாறு உண்டு.இந்த அடக்குமுறையின் தாக்கமானது ஏகாதிபத்தியத்தின் வினையே.

ஆப்பிரிக்கா மக்கள், எங்கள் ஆப்பிரிக்க நண்பர்கள் .அவர்களுக்கு எங்கள் உதவி வேண்டும், நாமும் அவர்களுக்கான உதவிகளைச் செய்கிறோம்.எங்கெங்கு உதவிகள் அவசியமாகத் தேவைப்படுகிறதோ அங்கே எங்கள் உதவிகள் உண்டு.இதுவே,சமவுரிமை உதவி.இஃது இருபக்கத்துக்கும் உட்டபட்ட நட்புரீதியான உறவு.அத்தோடு இந்த வகையிலான உதவிகள் இரண்டு தரப்புக்குமே சாதகமான விளைபயனைத் தரும்.நாங்கள் விரைவில் ஆப்பிரிக்க மக்களதுவறுமை மற்றும் பின்தங்கிய நிலையை அகற்ற விரும்புகிறோம்.இந்தக் கேள்விகளது திசையில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.நாம் எந்தவிதக் காலனித்துவத் தூண்டுதல்களையும் கொண்டிருக்கவில்லை.இதுகுறித்து ஆபிரிக்க மக்களே சீனாவைக் குறித்து நன்றாக அறிந்துள்ளார்கள்.மேற்குலக அரசியல்வாதிகளே நெடுகப் புலம்புகின்றனர்,சீனாவானது உள்நோக்கத்தோடு ஆபிரிக்காமீது ஈடுபாடுகாட்டுவதாக.இதுவொரு அவதூறத்தை தவிர வேறென்ன.அத்தொடு இத்தகைய கேள்விகளைத் தொடரும் நாம் அவர்களது உள்விவகாரங்களோடு பிணைவதில்லை.ஆபிரிக்த் தேசத்தவர்களது உள்நாட்டு அரசியலில் நமது உறவுகள் எந்தத் தாக்கத்தையும் செய்வதில்லை,அவர்களுக்கு எமது உதவிகள் கிடைப்பினுங்கூட.இத்தகைய தேசங்களில் பிரச்சனைகள் இருந்தால் அவர்களே அதைத் தீர்த்துவிடுவார்கள் என்றே நாம் கருதுகிறோம்.கூடவே,அந்தந்தத் தேசத்து மக்கள் இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலுடையவர்களென்றே நாம் கருதுகிறோம்.அவர்களுக்கு அந்த ஆற்றலுண்டு,மாற்றார் அவசியமில்லை.இதுவே,எங்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்குமிடையிலான பாரிய வித்தியாசம்.

சீனக் கம்யுனிசக் கட்சியின் அதியுயர் கல்வி நிறுவனமான மத்திய குழு உயர் கல்லூரியின் துணைவேந்தராக இருந்தீர்கள்.அதவாது,இது சீனக் கொம்யூனிசக் கட்சியின்அதியுயர் கல்வி-அறிவுத்துறையானது. எனவே,சீனாவில்இன்று, மார்க்சிசம் எந்தப் பாத்திரத்தில் வினையாற்றுகிறது என்பதை விளக்க முடியுமா?

சீனக் கொம்யூனிசக் கட்சியினது உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் அடிப்படைத் தத்துவார்த்தக் கருவியாக மார்சிசம் இருக்கிறது.எங்களது சிந்தனைப்போக்கில் இந்த மார்க்சிசமானது சீனச் சூழலுக்கேற்ற, அந்த மண்ணினது விசேசத் தன்மைகளுக்கேற்ப,அதைப் புரிந்துகொண்ட மார்க்சிசமே:மார்க்சிசம்,லெனியம்,மாவோயிசம் மற்றும் டெங்கினது சிந்தனைகள் இணைந்த "மூவகைப் பிரதிநித்துவம்"என்பதோடு, அறிவியல் ரீதியான அபிவிருத்தித்திட்டமாக மார்சிசம் பங்காற்றுகிறது.மார்க்சியத்தை நாம் மறுக்க முடியாத-மாற்ற முடியாத தத்துவமாகக் கற்கவில்லை.மாறாக,மார்க்சியத்தைச் சீனாவினது யதார்த்த நிலைமைக்கொப்ப இணைக்க விரும்புகிறோம்.அதையே செயற்படுத்துகிறோம்.

ஒரு மார்க்சிச வாதியாக,சீனாவினது குணாதிசயங்கள் கொண்ட சோசலிசப் பண்ணபக்கொண்டு, உலக சோசலிச அபிவிருத்தியில் ஏற்படும் முரண்பாடுகளைத்தீர்க்க எந்தப் பதிலைத் தரமுடியும்?

நாங்கள் மார்க்சிசத்தை எங்களுக்குள் கலப்புற வைக்கின்றோம். கட்சிச் செயற்பாட்டாளர்களும்,உறுப்பினர்களும் மார்க்சியத்திலிருந்து இரண்டு அளவுகோல்களைக் கற்கின்றனர்.முதலாவதாக, நாங்கள் மார்க்சினது முக்கியமான கட்டுரைகளைத் தேர்கிறோம்,இவற்றின்வழியாக சீனாவினது வளர்ச்சியைக் கற்கிறோம்.மார்க்சினது ஆய்வுகள்-கட்டுரைகள் யாவும் கட்சி உறப்பினருக்குக் கட்டாயமான பாடமாகும்.இவற்றை அவர்கள் தொடர்ந்து வாசிக்க- கற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவது, நாம் மதிப்பிடுவது,மார்க்சியத்தினது முக்கியமான வரலாற்று அநுபவங்களிலிருந்து பிரச்சனைகளைத் தீர்ப்பது அணுகுவது.மார்க்சிய முறை வழியில் சீன யதார்த்த நிலைக்கொப்ப பிரச்சனைகளைத் தீர்ப்பது நமது விருப்பமாகும்:

மக்கள் சீனாமானது,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மொத்தத் தொகுப்பையும்[MEGA]மொழி பெயர்த்து முடித்த கையோடு பாரிய நூற் தொகுதிகளாகச் சீன மொழியில் வெளியிட்டது.இப்போதும் அவ்வண்ணம் மேலும் மார்க்சியப் பகுப்பாய்வு நூல்களைத் தெரிந்தெடுத்து,மதிப்பீடுசெய்து, பதிப்பிலிட்டு வெளியிடுவீர்களா?

கடந்த ஆண்டு நாம் இரண்டு முக்கியமான திட்டங்களை நிறைவு செய்து வெளியிட்டோம்.முலாவதாக,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்சினது 10 தொகுதிகளான மேகா பதிப்பு.மற்றும்,5 தொகுதிகளடங்கிய லெனினது தேர்வு நூல்கள்.நாம் இந்த 15 தொகுதிகளது உள்ளடக்கங்களை மதிப்பீடுசெய்து அவற்றைத் தொகை நூலாக்கி இணைக்கிறோம். இந்தத் தொகை நூற்றொகுதியே எங்களது கட்சிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினகளுக்கான கட்டாயப் பாட நூற்கள்.

http://www.jungewelt.de/2011/07-16/001.php

டொச் மொழியிலிருந்து தமிழில்:

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2011

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...