Sunday, February 17, 2008

தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும்?

சுகுணாத் திவாகர்:"தாலி என்னும் சனியனை"க் கட்டித்தானாக வேண்டும்!



"புதியகலாச்சாரத் தோழர்கள் தம்மையே முன்னுதாரணமாக்கிப்
போராடுவதைப் பாருங்கள்.
தோழர் துரை சண்முகத்தின் மணவிழா எப்படி
நிகழ்ந்தது?
சொல்வதைப் போல் வாழக்கற்றுக்கொள்வது அவசியம்!
எழுத்துக்கும்
வாழ்வுக்கும் இடைவெளியை வைத்தபடி
"ஊருக்குத்தான் உபதேசம்
நோக்கில்லேடி"என்பதுதாம் கொடுமை:பொய் வாழ்வு!
வாழ்வில் உண்மையாய் வாழ முதலில்
போராடுங்கள்!
உண்மை நீங்கின் உயிர் நீக்கும் நெஞ்சுரம் வேண்டும்!
இவர்களே
சமூவிடுதலைப் போராளிகள்-புரட்சியாளர்கள்!மற்றவர்கள் போலிகள்!"



//மேலும் இன்னொரு வருத்ததுக்குரிய அம்சம், தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். (போகிற இடமெல்லாம் புருசனைக் காப்பாற்ற தாலி என்ன கோல்கேட்ஜெல் பாதுகாப்புவளையமா? என்று எவ்வளவு கேலி பேசியிருப்பேன்). //-சுகுணாத் திவாகர்.



ங்கேதாம் எல்லோரும்(போலிப் புரட்சிக் காரர்கள்,பெரியாரீஸ்டுக்கள்,முற்போக்காளர்கள்,பெண்ணியவாதிகள்) மிகமிகத் தப்பான முறையில் சமூகப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.தத்தமது விருப்புக்கு ஏற்ற தரணங்களை உருவாக்கியபடி மக்களை மடையர்களாக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரக் கிரிமனல்கள்போலவே இவர்களும் தமக்கான அரசியலைக் கடைவிரிக்கிறார்கள்.சமூகத்தை இங்ஙனம் கேவலமாக்கி,சமூக மாற்றத்தையே கொச்சைப்படுத்தும் இத்தகைய போக்கை முன்வைத்தே"இருபது வயதில் கம்யூனிசம் பேசுபவன் அறிவாளி,நாற்பதிலும் அதைத் தொடர்பவன் முட்டாள்"என்றும் ஐரோப்பாவில் நகைச் சுவைக் கருத்துண்டு.நாம் நம்மையே ஏமாற்றியபடி போலிக்கு எழுதுவதில் என்னதான் முற்போக்கான அம்சங்கள் இருப்பினும் அதை அம்பலப்படுத்தி நிராகரித்தாகவேண்டும்.

இத்தகைய நிராகரிப்பே நம்மைச் சூழ்ந்த ஆத்திக்கப் பண்பாட்டிலிருந்து நம்மை விடுவிக்க முனையும் முதற்படி.இதுவே,உலகத்தில் புதிய பாட்டாளிய வர்க்கப் பண்பாட்டின் முகிழ்ப்புக்கான விசும்பு நிலை!இதன் உருவாக்கத்தைப் பல தளங்களில் நகர்தாமால் புரட்சியென்பது சாத்தியப்படாத ஒன்று!இவற்றையெல்லாம் உணர்வு பூர்வமாக ஏற்று, நம்மை அதற்குள் திணிக்காத ஒவ்வொரு தரணமும் நம்மை இந்த நிலவுகின்ற அமைப்புக்குப் பலி கொடுத்தபடி அதுள் ஐக்கியமாகி அழிவதையே செய்து வருகிறோம்!சமபந்தி,சாதி மறுப்புப் போராட்டமெல்லாம் வெறும் ஒளிவட்டங்களைக் கட்டும் சுய முனைப்பு முன்னெடுப்பாக அமையுமெனில் இதுவே நாம் செய்யும் துரோகங்களில் முதற்றரமான துரோகம்!சொல்வதற்கும்,செயற்படுவதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லாது ஊராரை ஏமாற்றிவரும் படைப்பாளிகளை முதலில் இனம் காணுவது அவசியம்.


சமுதாயத்தைக் கேவலமாகச் சுரண்டிக்கொண்டிருக்கும் இந்த ஆதிக்க அதிகார வர்க்கத்தின் உறுப்பாக இருபதில் என்னதாம் "தெரிவு"உண்டு?என்தாம் பின்-முன் நவீனத்துவம் உண்டு?எல்லாமே புனைவெனும் அறிவுக்குத் தாலியென்பது தவிர்க்க முடியாத "தெரிவாக-நிலைப்பாக-வாழ்வாக" மாறிவிடுகிறது!



ஆண்-பெண் இணைவில் தாலியென்பது அவசியமற்றது.

"சமூகத்துக்காகத் தாலி கட்டுவது-சூழலுக்காக,பாரம்பரியத்துக்குச் சம்பிரதாயத்துக்கு-பாதுகாப்புக்காக"என்பதெல்லாம் வெறும் வெற்றுக் கருத்துக்கள்!அதைவிடப் பெண் விரும்புகிறார்,பெற்றோர்களின் ஆசை அது,எனவே,தவிர்க்க முடியாது தாலி கட்டுகிறேன்.என்பவர்களெல்லாம் பொய்யர்கள்!

என்னைச் சொல்கிறேன் கேளுங்கள்!-இது,மார் தட்டுதலல்ல!!

நானும் மரபு,ஆச்சாரம்,அது-இது என்று பார்க்கும் மிக இறுக்கமான குடும்பத்தில்தாம் மணம் முடித்தவன்.எனினும்,தாலிப் பிரச்சனை பெரிதாக உருவெடுத்தபோது இக் கல்யாணம் தேவையில்லையெனப் பிடிவாதமாக மறுத்து அத்தகைய மணப் பெண்ணுறவைவிட்டு ஒதுங்க முடிவெடுத்தவனும் நான்.பின் அதில் வெற்றியோடு தாலி,ஐயர்,அறுகரிசி,முகூர்த்தம் மறுப்புக் கல்யாண நிகழ்வைச் செய்தவர்கள் நாம்(ஆண்-பெண்)!-ஊர்கூடியல்ல சில உறவினர்கள்,நண்பர்களோடு நமது இணைவுகுறித்த எமது பார்வைகளை அவர்கள் முன் வைத்துவிட்டு, மோதிரங்களை மாற்றிக் கொண்டோம்.இங்கே,மோதிரங்கள் இணைவினது வெறும் குறியீடுமட்டுமே.அது அன்பினது அடையாளமென நீட்டத் தேவையில்லை!இப்போது அந்த மோதிரங்கள் எந்த மூலைக்குள் கிடப்பதென்று எமக்கே தெரியாது!

நாம்(பெண்-ஆண்)இருவர் மட்டுமே வாழ்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தரணங்களில்தாம் மற்றவர்களின் தயவு-இணைவு தேவையாக இருக்கிறது.சமுதாயத்தில் மற்றவர்களுக்காக வாழ்வதென்பது இத்தகைய சுயத்தை இழந்தல்ல.நமக்குச் சரியானதாகப்பட்டது முழுமொத்த மக்கள் கூட்டத்தில் தவறாகவே இருக்கிறது.அது தவிர்க்க முடியாது ஒவ்வொரு குடும்பத்துள்ளும் பிரதிபலிக்கிறது.எனினும்,நாம் சமூக மாற்றத்துக்காப் போராடுகிறோமா?அதற்குள் நம்மை மாற்றியாகவேண்டும்.பெண்ணின் விருப்பமாக இருக்கலாம் தாலி!ஆனால்,உண்மையில் அந்தவிருப்பம் நிலவுகின்ற அமைப்பின் கருத்தியல் புனைவு.

அது,நமக்குள் திணிக்கப்பட்ட சமூக ஒடுக்குமுறை.இதை ஒருவரின் தனிப்பட்ட விருப்பு-புண்ணாக்கென்றால் உங்களுக்கெல்லாம் சமூக மாற்றமென்பதெல்லாம் ஒரு கேடா?பிறகெதற்கு இறை-மதம் மறுப்பு?,சடங்கு-சம்பிரதாய மறுப்பு?

புதியகலாச்சாரத் தோழர்கள் தம்மையே முன்னுதாரணமாக்கிப் போராடுவதைப் பாருங்கள்.
தோழர் துரை சண்முகத்தின் மணவிழா எப்படி நிகழ்ந்தது?

சொல்வதைப் போல் வாழக்கற்றுக்கொள்வது அவசியம்!எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியை வைத்தபடி"ஊருக்குத்தான் உபதேசம் நோக்கில்லேடி"என்பதுதாம் கொடுமை:பொய் வாழ்வு!

வாழ்வில் உண்மையாய் வாழ முதலில் போராடுங்கள்!உண்மை நீங்கின் உயிர் நீக்கும் நெஞ்சுரம் வேண்டும்!இவர்களே சமூவிடுதலைப் போராளிகள்-புரட்சியாளர்கள்!மற்றவர்கள் போலிகள்!


எத்தனையோ தடைகளை உடைத்துப் போராடுவதே வாழ்வு!குடும்ப வாழ்வில் முற்றுமுழுதான புரிந்துணர்வென்பது எந்தத் தரப்பிடமும் இல்லை!அது சமூக ஒடுக்குமுறையாகவே-ஒரு பெரும் நிறுவனமாகவே குடும்பம் நமக்குள் வாழ்கிறது.எனவே,நம்மால் முடியக்கூடிய தாலி மறுப்பு,முகூர்த்தம் பார்த்தல்,ஐயர்வழி நடாத்தப்படும் மண நிகழ்வு,இவையெல்லாம் மறுத்து-ஒதுக்கியே நாம் இணைந்தவர்கள்!இது கடினமான பணி.திடமாகப் போராடி,விளக்கும்போது யாவும் கைகூடும்.

இத்தகையவற்றில் விட்டுக் கொடுப்பென்பதற்கும்,ஓட்டுக்கட்சி அரசியலுக்கும் எந்த வித்தியாசமுமில்லை!



இது,தனிபட்டவர்மீதான விமர்சனமில்லை.


பொதுவான சமூகத்தின்மீதான-பொதுப் புத்திமீதான விமர்சனம்.


சுகுணாத் திவாகர்களோ தாலியைச் "சனியன்"என்று கூறியபடி தப்பிக்க முனைகிறார்கள்!அதைக் கடக்கும் போராட்டத்தைச் செய்து,அதை (தாலிமறுப்பு)மறுத்து ஒத்துக்கி வைத்தல்-மனதாரப் புரிந்தபடி தவிர்த்தல் மிக அவசியமான முன் நிபந்தனை சமூகப்பண்பாட்டு மாற்றத்துக்கு.இதைத் தவிர்த்தபடி,தமக்குத் தமக்கென வரும்போது போலிச் சாட்டுக்களைக் காவிக் கொண்டு பூப்புனித நீராட்டு விழா,தாலிகட்டும் திருமண நிகழ்வு,சுபமுகூர்த்தம் பார்த்தல்-ஐயரை அழைத்து விவாகம் நடாத்தித் தாம்பாத்யம் பகிர்தல் நடை பெறுவதும் நமக்குள் கண்கூடு!

புரட்சி பேசியவர்கள்,போலித்தனமாகப் புத்தகங்கள்,பத்திரிகைகள் போட்டவர்கள்-வெளியிட்டவர்கள்,எத்தனையோ தடவைகள் இத்தகைய செயலுக்குள் தம்மை இணைத்தபடி"மகளின் பூப் புனித நீராட்டு விழா மனுசியின் விருப்பம்,ஐயரை வைத்துத் தாலி கட்டுவது பெண்ணின் பெற்றோருக்கு விருப்பம்-வயசானவர்கள்,அவர்களின் விருப்பத்தை மறுக்க முடில்ல"என்றபடி இந்த அமைப்பைக் காத்தே வருகிறார்கள்,தம்மைப் புரட்சியாளர்களாகக் காட்டியபடி-பெரியாரிஸ்டுக்களாக முன் நிறுத்தியபடி.

குடும்பம் என்ற அமைப்பே இதைக் காக்கும் ஒரு வடிவம்தாம்.எனினும்,இன்றைய நிலையில் அதைக்கூடப் புரட்சிகரமாக்கியபடி செல்ல முடியவில்லையானால் நாமெல்லோரும் போலிகளே!


ஒவ்வொரு அங்குலம், அங்குலமாகப் போராடியே இவற்றைக் கடந்தாகவேண்டும்.

இங்கே,சமரசம் செய்பவன்-செய்பவள் சமூகத்தை ஏமாற்றும் போலிகள்!உங்களையும் நேரடியாகவே சொல்வேன்:நீங்கள் போலித் தனமாகவே புனைகிறீர்கள்!சமூகத்தை ஏமாற்றிக்கொள்ள மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்,பெரியாரைத் துணைக்கழைக்கும் ஒரு செயலைச் செய்கிறீர்கள்!


என்றபோதும் நண்ப,
நீவீர் நீடூழீ நிலைத்து(ஆணும் பெண்ணும் மனம் ஒன்றிப் பிரிவகற்றி) வாழ
வாழ்த்துகிறேன் நெஞ்சார!

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.
17.10.2008
வூப்பெற்றால்.

5 comments:

x-group said...

http://x-group.blogspot.com/2008/03/farewell-to-castro-great-anti.html

அசுரன் said...

சரியான பதிவு. மிகச் சரியான விமர்சனம்

அசுரன்

Anonymous said...

திரு.சிறீரங்கன்,

மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களிடம் தனது திருமணம் பற்றி கூறிய சுகுணா திவாகர், தாலி கட்டி திருமணம் செய்வது பற்றிய‌ தோழர்களின் விமர்சணத்தை ஏற்று, தன்னுடைய வீட்டில் போராடி அதனை மாற்றியிருக்கிறார், இப்பொழுது அவரது திருமணம் சாதி,தாலி மறுப்பு திருமணமாகவே நடக்க இருக்கிறது, தனது வீட்டிலும் உறவுகளிடத்திலும் அவர் நடத்தியிருக்கும் இந்த போராட்டமும், பெற்றிருக்கும் வெற்றியும் உணமையில் பாராட்டத்தக்கது, இதற்கென எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு நடக்கவிருக்கும் அவரது திருமணத்திற்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின்

குறிப்பு: சுகுணா தாலி மறுப்பு திருமணம் செய்யவிருப்பதை ஒரு தோழரின் மூலமாகவே அறிந்தேன், அந்த செய்தி உண்மைதானா? என்பதை சுகுணாதான் உறுதிப்படுத்த வேண்டும்.

கொழுவி said...

எனக்கும் பெண்ணியம் பெரியாரியம் தலித்தியம் என நிறைய கொள்கை கோட்பாடுகள் நிறைய உண்டு. ஆனால் என்ன செய்வது ?

திருமணத்தின் போது அந்தச் சனியன் எனது சாதியில் தான் பெண் எடுக்க உள்ளேன். (போகிற இடமெல்லாம் சாதியை பற்றி எவ்வளவு கேவலமாக பேசியிருப்பேன். என்ன செய்வது சமூகம் சார்ந்தது தானே வாழ்க்கை !

Sri Rangan said...

தோழர் அசுரன்,தோழர் ஸ்டாலின் மற்றும் தம்பி கொழுவி வணக்கம்.

தங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி.

எட கொழுவி இப்படியும் அறுக்கிறியோ மகனே? ச்சீ, அப்படியும் சொல்லுவது தப்பு!நீங்க சமூகத்தின் ஆணிவேரைச் சுட்டிச் சொல்லுவது சரிதாம்.இதுதானே சமூக மெய்ப்பாடு!அதைச் சொல்லுறியள்-சுகுணாத்திவாகர் போராடி வெற்றி பெற்றதாகத் தோழர் ஸ்டாலின் கூறுகிறார்!அப்படி நடந்தால் சுகுணாவுக்கு என் பாராட்டுக்கள் என்றும் உண்டு!

ஸ்ரீரங்கன்

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...