Monday, March 05, 2007

"எங்களது அழகான,புதியவுலகம்"

"எங்களது அழகான,புதியவுலகம்"


1991 இல் இருந்து 2001 ஆம் ஆண்டுவரைக்குள் இந்த ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திடம் வட்டியாகச் சேர்ந்த பணம் 3332 பில்லியன்கள் டொலர்களாகும்(Quelle:Budesbank/BMA)


என்னடா இவ்வளவு தொகை வட்டியாக வந்திருக்கே இது யாரிடமிருந்து வந்திருக்கு?


எவரால் இது சாத்தியமாச்சு-யாரிதைத் தாங்குகிறார்கள்?


எவரிடம் இப்பணம் குவிந்துள்ளது??



இவ்வளவு பணம் இந்த நாட்டின் ஆளும் வர்கத்தின் கைகளில் தேங்கியுள்ளது!



அப்பாவி உழைப்பாளர்கள் மற்றும் வளர்முக நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களிலிருந்து பெறப்பட்ட வட்டிக்கு வட்டிகள் இதைச் சாத்தியமாக்கிறது.


ஜேர்மனிக்கே இவ்வளவு தொகை வருமானம் வட்டியாக வந்தால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இன்ன பிற வல்ல பேய்களுக்கு எத்தனை ஆயிரம் பில்லியன்கள் டொலர்கள் வட்டியாக வந்திருக்கும்? இத்தகைய நாடுகள் வட்டியை வழங்கிய நாடுகளுக்குக் கூட்டாக வழங்கிய சமூக நல(?)க் கொடுப்பனவுகளைக் கீழே பாருங்கள்.அதில் மீளவும் ஆயுத ஏற்றுமதியால் எவ்வளவைத் திருடுகிறார்கள் என்பதையும் பாருங்கள்.


இத்தொகையில் இவர்கள் சுரண்டுவதைச் செவ்வனவே செய்து முடிப்பதற்கும்,தமது சுரண்டலை நியாயப்படுத்துவதற்காகவும் உதவித் தொகைகளாகக் கண்துடைப்புச் செய்து,வட்டி கட்டிய நாடுகளுக்கு குடி தண்ணீர் வழங்குவதற்கும் அந்தத் தேசத்து மக்களுக்கு ஆரோக்கியம் வழங்குவதற்காகவும் அவர்களிடம் தட்டிப் பறித்த பல்லாயிரம் பில்லியன்கள் டொலரில் வெறும் 40 பில்லியன் டொலர்களை இந்த உலகம் வழங்கியுள்ளது(www.welthungerhilfe.de)



ஆனால் இந்தத் தேசங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களுக்காக(மூன்றாம் உலகத்தின் மொத்தக் கடனாது 2456 பில்லியன்கள் டொலர்களாகும்)அந்தந்த நாடுகள் வருடமொன்றுக்கு மேற்குலக நாடுகளுக்குத் திருப்பிச் செலுத்தும் நிலுவையில் ஒரு பகுதி மட்டும்166 பில்லியன்களாகும்.இந்தப்பணம் சில பத்துக் குடும்பங்களின் கைகளுக்குப் போய்விடுகிறது(Weltbank:Global Developement Finance 99)



இவர்கள் மீளவும் இந்த வறிய நாடுகளில் தமது வருவாய்க்கு-வயித்துக்கு,ஐந்து நட்சத்திரக் கோட்டல்களுக்கான உணவுப் பொருள்களுக்காகத் திட்டமிடப்பட்ட விவசாய உற்பத்திக்கு 350 பில்லியன்கள் டொலரை நிதியிட்டுத் தமது விருப்புக் கேற்ற விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்து கொள்வதில் முனைப்படைந்து நிதியிடுகிறார்கள்.;.(www.welthungerhilfe.de,weltbank 2004)




மூன்றாமுலக நாடுகள் தாம் பெற்ற கடன்களின் நிலுவைக்காக(2456 பில்லியன்கள் டொலர்கள்) வருடமொன்றுக்கு வட்டியாக்கட்டும் வட்டி-வட்டிக்கு வட்டி 256 பில்லியன்கள் டொலர்களாகும்.இப்பணமும் சில பத்து மேற்குலகப் பணக்காரக் குடும்பங்களிடம் போய்ச் சேர்ந்தே விடுகிறது.(Weltbank:Global Developement Finance 99)



இப்படி வட்டிக்கு வட்டியாக அறவிடப்பட்ட பணத்தில் வெறும் 12 பில்லியன்கள் பணத்தை மீளவும் இந்தக் கடன் கார நாடுகளுக்குச் சுகாதார வசதி-தாய்மை அடைந்த பெண்களுக்கான சுகாதாரப் போசாக்கு வசதிக்காகவென்று அவர்களிடம் அறவிட்டதையே உதவுவதுமாதிரிப் பிச்சையிட்டு மேன் மேலும் வட்டியை அறவிடப் பால் தொட்டு பால் கறப்பதற்கு முனைந்துகொண்டன இந்த மேற்குலகப் பயங்கரவாதிகள(Entwicklungsprogramm der UN,1999)



இந்தப் பரதேசிகள் தமது உயிர் கொல்லி உற்பத்தியால் அதாவது ஆயுதத் தளபாடங்களால் மூன்றாம் உலகிடமிருந்து பெற்ற வருமானம் 956 பில்லியன்கள் டொலராகும்.(UNICEF Jahresbericht"Zur Situation der Kinder in der welt")



என்னவொரு கரிசனையான நாடுகள்!நம்மை ஒரு பக்கம் ஆயுதத்தால் கொன்று குவித்தபடி வாய்ககு அரிசியிடும் இந்தத் தேசங்கள் நம்மிடமிருந்து தட்டிப் பறித்தெடுத்து நமக்கே பிச்சையிடுவதைத்தாம் நாம் நவகாலனித்துவம் என்கிறோம்.இதுவே புதிய கொலனித்துவத்தின் பல் தேசியமயப்படுத்தல்-நிதி மூலதனத்தின் நவீனச் சுரண்டலாகும்.
மேலும் பார்ப்போம்:


மூன்றாம் உலகத்தின் மொத்தக் கடனாது 2456 பில்லியன்களாகும்;(Weltbank:Global Developement Finance 99)


ஆனால் ஜேர்மனிக்கு வந்த வட்டி எவ்வளவு இங்கே?


3332 பில்லியன்கள் டொலர்களாகும்.இவை பத்தாண்டுகளில் இந்த மூன்றாம் உலகமும் உழைக்கும் மக்களும் ஜேர்மனிக்கு மட்டும் செலுத்திய வட்டியாகும்.


இதில் ஒரு 55 பில்லின்கள் டொலர்கள் போதுமானது இந்தவுலகத்துக் குழந்தைகள் பாடசாலை சென்று பள்ளிக் கூடத்துள் படித்து ஒரு பட்டம் பெறுவதற்காகவும் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரச்சாத்துக்குச் செலவு செய்வதற்கும்;(UNICEF Jahresbericht"Zur Situation der Kinder in der welt").



இந்தவுலகத்தின் 52 வீதமான உலக மொத்த உற்பத்தியைக் கட்டுப் படுத்துபவர்கள் உலக நாணய நிதியமும்,உலக வங்கியுமென்பது குறிப்பிடத் தக்கதாகும்.இவர்களே நமது அனைத்து அசைவுகளையும் கட்டுப்படுத்தி,எங்கள் செல்வங்களை அள்ளி-கொள்ளையடித்து(வட்டிக்கு வட்டி) உலகின் 500 மல்ரி நசனல் கொன்சேர்ன்களிடம் தார வார்க்கிறார்கள்;.(www.faz.net,Umfrage der Bank of England,Handelstage laut Klander der Frankfurter Wertpapierboerse)



நாம் ஏன் இன்னும் வறுமையில் வாடுகிறோம்?



நமது நாட்டு அரசியல் வாதி சொல்கிறான(ள்):நீங்கள் சோம்பேறிகள் என்று!


நமது நாட்டு மதவாதி சொல்கிறான்(ள்):முற்பிறப்பில் செய்த வினை!



இது உண்மைதானோ?



மேலே காட்டிய புள்ளி விபரம் சொல்கிறது:இல்லை!ஐரோப்பியன் செய்த வினையால் நாம் பட்டுணி கிடக்கிறோம் என்பதாக!



என்ன செய்லாம்? நாம் தனி நாடு பெற்றுவிட்டால்மட்டும் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடுமா அல்லது சமுதாயத்தில் புரட்சியின் மூலமாக இந்தப் பொருளாதார முன்னெடுப்பை மாற்றித் தனியுடமையை ஒழித்தாகவேண்டுமா?


"ச்சீ இதெல்லாம் நடக்கிற காரியமா?சும்மா போங்க சார்!நாம நம்ம தொழிலைப் பார்த்துப்போட்டு,மாசத்தில் வரும் நம்மட தொகையைக் காத்தால் போதும்."என்பீர்களானால் நாளைய தலைமுறை இன்னும் ஒரு பிடி சோற்றுக்கே நாதியின்றியிருக்கும் உலகின் பல கோடிச் சிறார்களோடு சேர்ந்து கொள்ளுமே தவிர வாழ்வு அதற்கு என்றுமே இல்லை.நாளைய தலை முறையில் உங்களதும்,எனதுமான குழந்தைகள் அங்கம் பெறுகிறர்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
06.05.2007














4 comments:

வடுவூர் குமார் said...

என்னங்க எழுத்தெல்லாம் வெள்ளையில் போட்டுவிட்டீர்கள்.
படிக்க பயங்கர கஷ்டமாக இருக்கு.

Anonymous said...

அண்ணன் எந்த விசயத்தையும் ஓரள
வுக்குமேல் ஆராய்ந்து பார்க்க கூடாதுங்கோ அதுக்கு மேல குடஞ்சு
பார்த்தால் நாம எல்லோருக்கும்
இருக்கிற கொஞ்ச அறிவும் இல்லாது
போய்விடும்.
அதாவது நம்ம ஊர் மொழியில
சொல்லுவது என்றால் மாட்டில பால்
கறப்பதற்கு முன்னம் கன்றை கொஞ்சம்
தாய் முலையில பால் குடிக்க விட்டு
பின்பு ஒரு சொட்டு தண்ணியில மடிய
கழுவிபோட்டு ஒட்ட பாலை கறந்து எடுப்பதில்லையா அப்படித்தான்
இதுவும். இதைத்தான் பாரதியும்
விடுதலை விடுதலை மறவருக்கும்
குறவருக்கும் விடுதலை என்று அன்று
பாடினானோ. காரணமில்லாமலா
எல்லா பக்கிரிகளும் பல்லை காட்டி
கைகளை குலுக்கிறாங்கள்.

K.R.அதியமான் said...

Anbualla Srirangan,

sorry for writing in English as my
tamil tying is slow.

interst has definete and important
function and it is the cost of borrowing or 'renting' money. interst rate depends on inflation and money supply. In Japan, now interst rates are less than 1 % for
the past few years due to sluggish economy and govt intervention.

we cannot live without interest and
the whole monetarty system will collapse into anarchy if it is 'abolished' arbitarily.

Due to massive sufferings in Germany after post war hyper inflaltions, they learnt a bitter
lesson and have controlled their money supply prudently. hence W.Germany had te lowest rates of inflation for many decades, but
prosperity levels improved dramitically after 1950s.

You must be grateful for the German
nation and its prospertiy (due to
free market capitalism followed there) that allowed you as a refuge and enabled to live you in
a better standard of living than possible in Sri Lanka or India.
and MNCS and World Bank are not
evil empires but they contribute to
poverty reduction and prosperity.

We, in India suffered enormosuly due to mis-guided socialism until
1991 which resulted in massive
corruption and crony capitalism.
now things are improving but
a long way to travel..

Anbudan
K.R.Athiyaman
athiyaman.blogpsot.com

Sri Rangan said...

//we cannot live without interest and
the whole monetarty system will collapse into anarchy if it is 'abolished' arbitarily.//

அன்புள்ள அதியமான் அவர்கட்கு,வணக்கம்!

உங்கள் கருத்துப்படி இன்றைய பொருளாதாரப் பொறி முறைக்கு வட்டியென்பது அது உயிர்வாழும் முறைமையுடன் சம்பந்தப்பட்டதென்பது உண்மைதாம்.என்றபோதும், நாம் குறித்துரைக்கும் பொருளாதாரப் பொறி முறையானது அதற்கு மாற்றானது.இதை நான் சில்வியோ கேசல் மற்றும் ஜோண் மைனார்ட் கைனெஸ் குறித்ததையும் கடந்து மார்க்ஸ் குறித்ததை நெருங்கிச் செல்கிறேன்.எனவே வட்டியென்பது இன்றைய பொருள் உற்பத்தியில் நாப்பது வீதமான செலவை தன்பால் உட்கொள்வதால் பாரிய தொழிற் கழகங்கங்கள் தவிர்ந்த நடுத்தர தொழிலகங்கள் உயிர்வாழ முடியாதிருக்கிறது.இதுவே இன்றைய தேசிய முதலாளித்துவத்துக்கு மிக எதிரான பல் தேசியப் பகாசூரக் கம்பனிகளிடம் இவர்களைக் கையேந்த வைக்கிறது.எனவே வட்டியும்,வட்டிக்கு வட்டியும் துரத்தியடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நியாயமாக எதிர்கொள்ளத்தக்க பொருள் வாழ்வை நோக்கிச் செல்லவும்,மாற்றைக் கோரவும் முன் நிபந்தனையென்றே கருதுகிறேன்.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...