புதைகுழிகளைப் போற்றும் தொண்டர்கள் !
...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...
//ஆனால்,எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.//
...ம்...இம்முறை நம்மட தேசியத் தலைவர் "காலம்"குறித்த கடுமையானவொரு ஆய்வைச் செய்து,அதன்வழி தான் கண்டடைந்த தரவுகளோடு,ஞானம்பெற்ற கையோடு,இவ்வாண்டின்"மாவீரர்"தினவுரையை வீடியோக் கமிராவுக்கு முன்னால் வாசித்துக் கொண்டிருந்தார்.எனக்கு இந்தக் கதம்பத்துரையில்(விடலைக் குஞ்சுகள் வினைதீர்க்கக் கொதிக்காதீர்) எந்தவொரு கண்றாவியையும் விமர்சிக்க-விவாதிக்க விருப்பமில்லை,என்றபோதும் தலைவர் தனிநாட்டுக்கான போரை இலட்சம் மக்கள் இறந்த பின்பும் முன்னெடுக்கிறபோது நாம் கொஞ்சமாவது கதைக்கத்தானே வேணும்-இல்லையா?
நம்ம தலைவர் தன்பாட்டுக்குப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்."அது,இது"வென்று மனிதர் பட்டியலிட்டே உலக அரசியலை விமர்சித்துப் புரட்சிகரமானவொரு பொருளாதாரப் புதுயுகத்தைத் தனது வழியில் நிறுவி, ஈழத்தை விடுவிக்கப் போகிறார்.
(மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை, பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகிறார்கள். பி/கு:தலைவரைப் பார்த்துப் புரியவும்)
இதுவரை நடந்தவைகளைப் பட்டியலிட்டுக்கொண்டிருப்பதைக் கடமையாக ஏற்றுப் புலிகளின் ஊதுகுழல்கள்- பல ஊடகங்கள் இதுநாள்வரை பட்டியலிடும் இவ்வேலையைச் செய்தே வருகின்றன.மீளவும் அந்த ஊடகங்களின் பட்டியலிடலில் திருப்த்தியுறாத "நம் தலைவர்"தன்பாட்டுக்குப் பட்டியலிட்டு,இறுதியில் கால்நூற்றாண்டுக்குப் பின்பாகவும் அதே பல்லவியோடு, "தனியரசு"தனிநாடு என்று கூறிக்கொண்டு,"புலிகளின் தாகம்"சொல்லி உரையை முடித்தார்.
அப்பாடா அருமையான உரை!அவசரப்படாத ஆய்வு!அள்ளவள்ள அறிவாய்ச் சொரியும் அற்புதவுரை.
சிங்களவனிடம் சினக்கிறார்,பின் அவனிடம் மக்களுக்காக உணவுக்கு மடிப்பிச்சை கேட்கிறார்.திரும்பக் கோடானகோடி குற்றங்களைச் சுமத்தி சிங்களவரசுகள் "நீதியான"முறையில்"தீர்வு"தராதென்று சாத்திரம் சொல்லித் தமிழீழப்போரை செய்வாதாகச் சொல்கிறார்.இவர் தமிழீழப் போர் செய்யும் சூழலிலும் சிங்களவனே சாப்பாடு நமக்குப் போடணுமாம்.இவர்போடார்.இவர் அதற்கான முயற்சியோடு ஸ்ரீலங்காவின் ஆதிக்கத்தை உடைத்துத் தனது மக்களின் வயிற்றுப்பாட்டைத் தனது மண்ணிலேயே உற்பத்தியாக்கிக் கொள்ளார்.சுயசார்புடைய பொருளாதார இலக்குகளைச் செய்யாத தலைவர் தமிழீழத் தனியரசு நோக்கிய போரைத் தொடர்கிறாராம்.தனிநாடமைத்த கையோடு உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உலருணவுகள் வழங்குவாராக்கும்!யாரூ கண்டார்?
இப்படியாகத் தலைவர் தனிநாட்டுப் போரில் முனைப்படையும்போது, மரணம் பற்றி மகத்தானவொரு விளக்கத்தைச் சொன்னார்: >>>...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள். <<<
இதைக் கேட்டபடி வேலைக்குப் போன நான்,பின் இரவு வந்து ரீ.ரீ.என்.தொல்லைக் காட்சியைப் பார்த்தேன்.
அடேங்கப்பா!
என்னவொரு ஆரய்ச்சி!! போராடிச் செத்த இராணுவங்களின் புதைகுழிகள் பற்றியொரு நீண்ட ஆய்வுரையை ஒரு தமிழர் செய்து கொண்டிருக்கிறார்.அப்பாடா,இரண்டாம் உலக யுத்தத்தில் தமது நாட்டிற்காகப் போராடிச் செத்த ஜேர்மனிய "இராணுவீரர்கள்"63 ஆண்டுகளாக உறங்குவதாகக் குழிகளைக் காட்டிச் சொன்னார்.
நல்ல ஆராய்ச்சி!தலைவனுக்கேற்ற தொண்டன்!
அவனவன் உற்பத்திகளை எங்ஙனம் உயர்த்துவதென்றும்,தாம் செய்யும் உற்பத்திகளில் எப்படிப் புதுமைகளைப் புகுத்திச் சந்தையைக் காப்தென்றும் யோசிக்கிறபோது-ஆராய்ச்சிகள் செய்கிறபோது,நாம் கல்லறைகள் குறித்து ஆய்வு செய்வது சரிதானே?அவரவர் எதைச் செய்கிறார்களோ அதில்தாம் ஆர்வம் அதிகமாகி மூளை சிந்திக்க ஆரம்பிக்கும்.
அட பாவித் தமிழர்களே!
உங்களுக்கு கருக்கு மட்டையால அடிக்கிறதுக்கு ஆளில்லையா?
இரண்டாம் உலகில் நாடுபிடித்து இனவழிப்பைச் செய்த பாசிச இராணுவங்கள் வீரர்களா?தாய் நாட்டுக்காகப் போராடினதா இந்த நாசிய ஜேர்மனியின் ஈனப்படைகள்?
அதென்னடா "அமைதியான" உறக்கம்?
செத்து மண்ணோடு மண்ணாகி, மக்கிப்போன பிண்டங்கள் இன்னும் உறங்குதோ?
>>>...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள். <<< இப்பிடிச் சுத்திச் சுத்தியே பல்லாயிரக்கணக்காகப் பறிகொடுத்தாச்சுத் தலைவரே!
அதைவிட இன்னும் கொடுக்கிறதுக்காக நார்மண்டிப் புதைகுழிகளை உங்கட தொண்டன்கள் போற்றிப் புகழ்ந்து ஆய்வு செய்து அடுக்கித் தள்ளும் அற்புத வரிகள் மாவீரர் துயிலும் குழிகளை ஒப்பிட்டு உயர்த்துவது இன்னும் அத்தகைய குழியளைத் தோண்டுவதற்குத்தாம் என்பதை நாம் அறிகிறோம்.ஐயா தலைவரே!அப்பாவிகளின் தலையில் இப்பிடி மிளாகாய் அரைக்கலாமோ?
எங்கட வாரீசுகள் பேராடும் பல்கலைக் கழகங்களுக்குள் தூங்கி வழியும்போது அப்பாவிகள் புதைகுழிகளுக்குள் அமைதியாய் துயின்று வரலாற்றில் மகத்தானவர்களாக வரவேண்டுமென்ற உங்கட பெரிய மனசு யாருக்கு வரும்?
நார்மண்டியில செத்தவர்களுக்கும் ஜேர்மனியில் செத்தவர்களுக்கும் வைக்கப்பட்ட தூபிகள்,கல்லுகள் வரலாற்றில் இத்தனை பேர்களை அழித்தது கொடிய யுத்தம் என்பதைச் சொல்வதற்கே!போற்றுவதற்கல்ல,மாறாகப் போரைத் தடுப்பதற்கு!
புதைகுழிகளைப் போற்றும் தொண்டர்கள் நார்மண்டியை மட்டுமல்லை வியாட்நாமிலும் போய் புதைகுழிகளை ஆய்வு செய்து,"மாவீரர்களை"த் தயார் செய்வது மகத்தான தமிழ் தேவைதாம்!
வாழ்க:
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!"
ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
4 comments:
விரைவில் எதிர்பாருங்கள்.
இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் உலக நாடுகள் புலிகளின் தலைவரின் உரையை கண்டிக்க இருக்கின்றன. அது தவிர புதிய ஜனநாயகப் புரட்சியை வேண்டுவோர் மற்றும் மாற்று (இயக்கக் காரர்) கருத்தாளர்களும் பிரபாகரனின் உரையை வரிக்கு வரி ஆராய்ந்து முட்டையில் மயிர் பிடுங்க இருக்கிறார்கள்.
ஆகவே நண்பர்களே அனைத்தையும் படித்து இன்புற இப்போதே தயாராகுங்கள்
சத்தியமாச் சொல்லுறன்.. உந்தப் பின்னூட்டத்தை என்ர பதிவில எழுதினது நான் தான். ஆனா இதில கொண்டு வந்து போட்டது நானில்லை.. ஆரோ நோகாமல் வேலை செய்திருக்கிறாங்கள்..
//சத்தியமாச் சொல்லுறன்.. உந்தப் பின்னூட்டத்தை என்ர பதிவில எழுதினது நான் தான். ஆனா இதில கொண்டு வந்து போட்டது நானில்லை.. ஆரோ நோகாமல் வேலை செய்திருக்கிறாங்கள்..//
இதற்கெல்லாம் ஏன் கொழுவி சத்தியம்?
நாம்தாம் ஒருவருக்கொருவர் வருடக் கணக்காகக் குட்டுப்பட்டுக் கிடக்கிறோமே!அதை... தலைவர்மீது அபிமானத்துக்குரியவன்(ள்)போட்டிருக்கலாம்.
சிறியண்ணை உந்த தலைவரில எந்த
மக்கள்இன்னும்அன்பு வைத்திருக்கினமாம்
"எனது அன்பார்ந்த மக்கு மக்களே"
அப்படியென்றால் சரி.
போனமாவீரர் தின சொய்தியில் இவர்
என்ன சொன்னர் என்று இவருக்கே
தெரியாது நேற்று என்ன நடந்தது என்று
இன்றைக்கு மறந்து விடும் மக்கள்
இவரின்ர உரையில ஈழமக்களுக்கு ஒரு
செய்தி சிங்கள அரசுக்கு ஒரு மிரட்டல்
இந்தியாவுக்கு எங்களையும் பார்த்து
கொள்ளுங்கோ என ஒரு செய்தி
வெளிநாடுவாழ் தன்ர பொன்கொஞ்சுகளுக்கு குஷிப்படுத்த
ஒரு செய்தி இது தவிர என்ன இருக்கும்
இந்த பாசிச வாதி முஸ்லிம்களை பற்றி
ஏதாவது சொன்னான
இந்த ஒருவருட காலத்தில் ஆயிரம்
புலிகள் மரணித்திருக்கிறார்கள்
இதனால் அடைந்த நன்மையென்ன
அதற்க்கு நிகராக பொதுமக்களும்
கொல்லப்பட்டிருக்கிறார்கள்
Post a Comment