இலங்கை:யுத்தம் எவரால்-ஏன் தொடங்கியது?
வெஸ்ற் டொச்ச றுண்ட் புங்5-West Deutsche Rundfunk 5(மேற்கு ஜேர்மன் வானொலி 5)19.08.2006 13-35மணிக்கு- இன்றைக்கான செய்தி விவரணத்தில் இலங்கை யுத்தம் குறித்து விவரணம் செய்தது.இது தொகுத்த செய்தி விவரணமானது ஓரளவு முற்போக்கானதாகும,; தமிழ் பேசும் மக்களின் துயர் நிறைந்த பக்கத்துக்கு ஓரளவு சாதகமான செய்தியைத் தாங்கி வந்தது.இத்தகைய நிலையை இதுவரை இத்தகைய ஊடகங்கள் எடுப்பது மிக அரிதானாதாகும்!எனினும் எமது மக்களின் கண்ணீர்க் கதைகளுக்குக் காரணம் தேடுகிற நாம் தொடர்ந்து புலிகளைக் கூண்டிலேற்றிச் செய்தி தொகுத்து வருகிறோம்.குறிப்பாக இந்திய-இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் இயக்கப்படும் ரீ.பீ.சீ. T.B.C.வானொலி இத்தகைய வகைகளில் தொடர்ந்து செய்தி தொகுப்பதை நாம் அறிவோம்.
ரீ.பீ.சீ.T.B.Cபோன்ற மக்கள் விரோத வானொலியானது இலங்கைச் சிங்கள பௌத்த சியோனிசத்தின்(இங்கு சியோனிசம் பற்றியும் குறித்தாகவேண்டும்.வாசகர் ஒருவர் கடந்த கட்டுரையில் கேள்வியும் எழுப்பியிருந்தார்! இஸ்ரேலியச் சியோனிஸ்ட்டுகள் இரண்டாவது யுத்தத்தின் பின்பாக தமக்கானவொரு தாயகத்தை பாலஸ்தீன நிலப்பரப்புக்குள் அமெரிகத் துணையுடன் நிறுவியது வரலாறு.இது அண்மைக் கிழக்கு நாடுகளுக்குள் தனது எண்ணை அரசியலை ஒழுங்குற நடாத்துவதற்கு அமெரிக்கா இஸ்ரேலென்ற விஷச் செடியை நாட்டியது.இந்தச் செடியானது தனது மேலாதிக்க நலனின் பொருட்டு தனக்குச் சொந்தமல்லாத,வரலாற்றுத் தொடர்ச்சியற்ற நிலப்பரப்புகளை தனது தாயகமெனக் கூறியபடி பாலஸ்தீனத்திடமிருந்து பறித்தபடி,வரலாற்றுப் புரட்டுக் கதைகளை அவிட்டு விட்டபடி, நாடுபிடிக்கும் யுத்தத்தையும்,கொலைகளையும் செய்தபோது, இது அந்தக் கொடிய இஸ்ரேலியச் சியோனிசத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.இத்தகைய அரசியல் ஆர்வத்தை,கொடிய மனிதவிரோதச் செயற்பாட்டை அரசியல் விஞ்ஞானத்தில் பொதுமைப்படுத்திக் கொண்டபோது "சியோனிசம்"மெனும் அரசியற் கருத்தாக்கம் "பாசிசம்"போன்ற பொதுமைப்படுத்தல் போன்று பயன்பாட்டுக்கு எடுத்தாளப்படுகிறது.இலங்கை அரசானாது இஸ்ரேலிய வழிகாட்டலோடுதாம் இனவாதப் போரைச் செய்வதும் கூடவே இக்கருத்துக்கு வலுவை வழங்கிக் கொள்கிறது.இத்தகைய அரசியற் கருத்தை இலங்கை இடது சாரிகள் 70 களில் பயன் படுத்தத் தொடங்கினார்கள்.குறிப்பாக கே.கணேசலிங்கன் எனும் மார்க்சியக் கல்வியாளர் தனது பல கட்டுரைகளிலும் பயன்படுத்தியதைச் சுட்டலாம்.இத்தகைய கருத்துக்களை இலங்கையின் முன்னணி சமூக விஞ்ஞானி குமாரி ஜெயவர்தனாவும் அப்பப்ப பயன் படுத்துவார்கள்.) காலடியில் கிடந்தபடி இந்திய உளவுத்துறையால் உரமிடப்பட்டு நடாத்தப்படும் வானொலியாகும்.இது தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமையைத் தனது எஜமானர்களுக்காக சிதைக்கும் கருத்தியற்றளத்தை கட்டியமைக்க முனையும் பிழைப்புவாத வானொலிதாமென்பதை இந்த யுத்த காலக்கட்டத்தில் நாம் மிக இலகுவாக அறியமுடியும். இத்தகைய தரணத்தில் இந்த ஜேர்மன் வானொலியினதும்,ஜேர்மன் கரிதாஸ் நிறுவனத்தின் கொழும்புக்கான அதிகாரி திருமதி பெக்கரின் கருத்துகள்,அவர்களின் செய்திகள்-இலங்கை யுத்தம் குறித்து என்னவென்பதைப் பார்ப்போம்:
"இலங்கையில் எதற்காக யுத்தம்?இந்த யுத்தமானது அப்பாவி மக்கள் பலரைக் கொன்று தள்ளியுள்ளது.இது தொடங்கப்பட்ட பின் சுமார் 1500.மக்கள்வரைக் கொல்லப்பட்டுள்ளார்கள்.நேற்றைய நிலவரத்தின்படி புலிகளின் பல கடற்கலங்களை இலங்கை இராணுவம் அழித்துள்ளதாக இராணுவம் கூறுகிறது.இதைப் புலிகளின் சார்பு ஊடகமான தமிழ் நெட் மறுத்து"அது சுனாமிக்குப் பின்பு கட்டியமைக்கப் பட்ட மீனவர்களின் நவீனப் படகுகள்"என்று கருத்துச் சொல்கிறது.இவையெல்லாம் சுதந்திரமான செய்திகளில்லை.இன்றைய நிலவரப்படி இலங்கையில் தனித்துவமான சுதந்திர ஊடககங்கள் கிடையாது.
கடந்த காலத்தில்,அதாவது 2004 சுனாமியால் இந்தத் தேசம் பாதிப்படைந்தது.அப்போது,தேசத்துpலுள்ள அனைத்து இனங்களும் பொதுவாகப் பாதிக்கப்பட்டு,பொதுவான துக்கத்தில் மூழ்கியது.எனினும்,மீளவும் யுத்தம்!இது எதற்கானது?இது கேள்வி.யாழ்பாண மாவட்டத்திலும் மற்றும் பல பாகங்களிலுமாகத் தொடரும் யுத்தத்தால் இதுவரை 160.000 அகதிகள் உருவாகியுள்ளார்கள்.இலங்கையில் சமாதானமான தீர்வு எட்டப்படவேண்டும்.யுத்தம் தவிர்கப்பட வேண்டுமென ஐ.நா.பிரதிநிதி திரு.கோபி அனான் தொலைபேசி மூலமாக இலங்கை ஜனாதிபதி திரு.இராஜ பக்சவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.எனினும் யுத்தம் தொடர்கிறது.மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று தடையைச் செய்த பின்பு, இத்தகைய நாடுகளால் இலங்கைப் போரில் பாரிய தாக்கத்தைப் புலிகள் மேல் செய்ய முடியாதுள்ளது.நோர்வே அரசுக்கும் இந்த யுத்தத்தின் வாயிலாக என்ன செய்ய வேண்டுமென்ற ஆலோசனையும் இருப்பதாகத் தெரிய வில்லை.யுத்தும் நடாத்தும் அரசும் புலிகளும் யுத்தம் பாதுகாப்புக்கென்றபடி போரிடுகிறார்கள்.இது விரைவாக நிறுத்தப்படும் நிலை அங்கு இல்லை!"-வெஸ்ற் டொச்ச றுண்ட் புங்க.West Deutsche Rundfunk5-Mittagsecho : 19.07.2006. vom 13.35 Uhr.
அதே வானொலி தொடர்ந்து கொழும்புக்குத் தொடர்பை மேற்கொண்டு,ஜேர்மன் கரிதாஸ் நிறுவனத்தின் கொழும்புக்கான அதிகாரி திருமதி.பெக்கரைப் பேட்டி காண்கிறது:
வானொலி: கொழும்பில் இந்த யுத்தம் குறித்து எந்தவிதமான சூழல் நிலவுகிறது?இந்த யுத்த்தால் யாழ்பாணத்தோடான கொழும்புத் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதே?
திருமதி பெக்கர்: கொழும்பில் இது குறித்து எதையும் பெரிதாக அறிய முடியாது.எனினும் இந்த யுத்தம் பாரிய அவலத்தைக் கொண்டுள்ளது.
வானொலி: இந்த யுத்தத்தில் 160.000.மக்கள் அகதிகளாகியுள்ளார்கள்,அவர்கள் எங்கே-எப்படித் தங்கி வாழ்கிறர்hகள்?
திருமதி.பெக்கர்:இது குறித்துப் பெரிதாக அறி முடியாதுள்ளது.எனினும் பல பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துள்ளார்கள்.கிட்டத்தட்ட 7000.பொதுமக்கள்வரை இந்தியாவுக்கு அகதிகளாகிச் சென்றுள்ளர்கள்.வெளி நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருக்கும் தமிழர்கள் கொழும்பு நோக்கி வரவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.
வானொலி:இந்த யுத்தம் எதற்காக தொடங்கியது?கடந்த நான்கு வரடமாகச் சமாதானமாக இருந்து வந்தவர்கள் திடீரெனப் போருக்குள் மூழ்கியது எப்படி?
திருமதி பெக்கர்: இது இலங்கையின் புதிய அரசியல் தலைமை மாற்றத்துடன் ஆரம்பமாகிறது.கடந்த தேர்தலில் இராஜ பக்ச தலைமையில் ஆட்சி மாறியது.இந்தத் தலைமை சிங்களத் தேசியச் சக்திகளால் வழி நடாத்தப்படுவதால் இலங்கையில் இனங்களுக்கிடையிலான பிரச்சனைக்குச் சமஷ்ட்டி முறையில் அமையும் தீர்வுகளை விரும்புகிறதில்லை.எனவே ஒப்பந்தங்களிலுள்ள திட்டங்களைக் கிடப்பில்போட்ட அல்லது நிராகரித்த இராஸபக்ச ஆட்சியின் செயற்பாட்டால் யுத்தம் புலிகளுக்கும் அரசுக்கும் வெடித்துள்ளது."-கரிதாஸ் நிறுவன கொழும்புக்கான அதிகாரியோடான பேட்டி:19.08.2006 மணி:13.40.
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
10 comments:
ஐயா நீங்கள் என்ன சொல்லுறீங்க சாமி
ஒரு இழவும் புரியமாட்டேங்குது இந்த
மரமண்டைக்கு உங்க முதல் பதிவு ஓரளவுக்கு புரிஞ்சளவு இது சுத்தமா நம்ம தலைதான் சுத்துது இந்தியா உளவு
துறை பணம் கொடுத்து ஒரு வானொலிய பிரச்சாரத்துக்கு பயன்படுத்தனுமா அதுவும் புலம்பெயர்ந்த புலிரசிகர்களின் மனதை
மாற்றுவதற்கு, நமக்கு கேட்கவே ஒரு
மாதிரியா இருக்கு சார்
//...இந்தியா உளவு
துறை பணம் கொடுத்து ஒரு வானொலிய பிரச்சாரத்துக்கு பயன்படுத்தனுமா அதுவும் புலம்பெயர்ந்த புலிரசிகர்களின் மனதை
மாற்றுவதற்கு, நமக்கு கேட்கவே ஒரு
மாதிரியா இருக்கு சார்//
நிச்சியமாகச் செய்து வருகிறது.
புலம் பெயர்ந்த புலி இரசிகர்களை மட்டுமல்ல புலம் பெயர்ந்த சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதம் ஊட்டி வருகிறது இந்தியப் புலாய்வுத்துறை.இலங்கையில் இதைப் பன்மடங்கு செய்துவரும் இந்தியா,இலங்கை மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் திட்டமிட்டு இத்தகைய செயற்பாட்டிலிறங்கி இன்று ஐந்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
புலம் பெயர் தமிழ் மக்கள் ஈழயுத்தத்துக்கு மிக முக்கியமான உந்துதல் சக்தி.தனியே நிதிமட்டுமல்ல.வெளிநாடுகளில் பரப்புரை மற்றும் அழுத்தங்களைக் கொடுப்பதில்.இத்தகைய உந்து சக்தியைப் புலிகளிடமிருந்து பிரித்தெடுக்கும்போது புலிகள் தனிமைப்பட்டுப் பலவீனமடைகிறார்கள்.அது மட்டுமல்லாது போராட்ட வளங்களையும் இழந்து இலங்கையரசால்- இந்திய அரசால் மிக விரைவாகப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது இன்னுமொருவுண்மை.அதாவது புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்கள்தம் குடும்பங்கள்,உறவுகள் ஈழத்தில் வாழ்பவர்கள்.இங்கிருந்து போகும் பணத்தால் உயிர் வாழும்போது,இவாகளில் தங்கும் நிலமையுள்ளது.இந்த நிலைமையில் நிதி வழங்கும் உறவு புலம் பெயர்ந்த மண்ணில் புலியை எதிர்க்கும்போது,தளத்திலுள்ள உறவும் மெல்ல எதிர்க்கும்.இதுதாம் உளவியல் யுத்தம்.இதில் இந்தியா வென்றுவரும்போது இப்போது இராணுவத்தின் ஒடுக்குமுறை தொடங்கிவிட்டது.தற்போது சகல குஞ்சு குருமானும் இனவொடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்கும்போது புலிகள் தன்னிச்சையாகத் தமிழர்களால் வலுப்படுத்தப் படுகிறார்கள்.இதைப் புலிகள் நன்றாக அறிவார்கள்.
நாம் உண்மைகளைச் சொல்கிறோம்.
யுத்தங்களால் வெற்றியடையப்போது எவருமில்லை.
புலிகள் புரட்சிகரமான இராணுவமாக உருவாகி இலங்கை ஆளும் வர்க்கத்தைச் சிங்களப் புரட்சியாளர்களோடு தோள் சேர்ந்து தோற்கடிக்க முடியும்.ஆனால் இது நடவாத காரியம்.எனவே இரண்டு அரச ஜந்திரங்களும் போரிட்டு மக்களை அழித்துத் தேசத்தைச் சுடுகாடாக்கும்போது, இந்திய உலக நலன்கள் மட்டும் பாதிப்படையாது காப்பாற்றப்படும்.மக்கள் சாகவேண்டியதுதாம்.இதைத்தாம் நாம் கூறுகிறோம்.எனவே யுத்தம் வேண்டாம் என்கிறோம்!இந்த யுத்தத்தைச் செய்விப்பதில் இலங்கை மற்றும் புலிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்நியச் சக்திகள் இந்தியா மட்டுமல்ல உலகத்தின் பெரும் உற்பத்திச் சக்திகளை வைத்திருக்கும் நாடுகளாகும்.இங்கே புலிகள் தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தைக் கையில் எடுத்து வைத்திருப்பதால் அதை முன்னிறுத்தும் மக்கள் அவர்களைத் தவிர்க்க முடியாது ஆதரிக்கிறார்கள்.அவர்களும் தமது தேவைக்கேற்றபடி மக்களைப் போட்டுத் தள்ளிப் போராடுகிறார்கள்.இந்தப் புதை சேற்றைப் புரட்டிப்போட்டு உண்மைகளை நாம் வெளிக்கொணர்வது தமிழ்பேசும் மக்கள்தம் சுயநிர்ணயவுரிமையை வென்றெடுப்பதும்,இனங்களுக்குள் பரஸ்பர ஐக்கியம் மலர்வதற்குமே.
போரை நிறுத்தமாட்டோம்
போரை நிறுத்தமாட்டோம் என்பவர்கள் மக்களின் இரத்தத்தைக் காட்டியே தமது இருப்பை வலுப்படுத்துபவர்கள்
சமாதானத்தின் பெயரில் நடத்தப் படுவது அரசியல் விபச்சாரம்
சமாதானத்தை பேசுவதன் மூலம் காட்டிக் கொடுப்பது மக்களின் போராட்டத்தை
அழிக்கப்படுவது அவர்களின் போராட்ட உணர்வை
நிலைப்படுத்த முயற்சிப்பது சுரண்டும் வர்க்கச் சிந்தனையை
பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்றதன் போர்வையில் அழிக்கப்படுவது மக்களின் மக்களின் உயிரை
மக்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை
தயா மாஸ்டருக்கு நெஞ்சு வலி வந்தவுடன்
இராணுவ பாதுகாப்புடன் கொழும்பில் சிகிச்சை
இது அதிகார வர்க்கத்தின் ஊதாரித்தனம்
ஆனால் பாவப்பட்ட மக்களுக்ளோ கசாயம் குடித்துத்தான்
தமது நோயை போக்க வேண்டும்
இது அனைத்து அதிகார வர்க்கத்தின் ஊதாரத்தனமாகவும் இருக்கின்றது.
அப்பாவி மக்களை பலிக்களத்திற்கு அனுப்பி விட்டு நிரப்புகின்றனர் தமது பணப்பையை
இன்றைக்குத் தேவையானது பிணங்களின் எண்ணிக்கை
இந்த எண்ணிக்கையை வைத்தே இனவாதம் மோசமானது என நிலைநிறுத்த முடியும் என்ற ஏகாதிபத்திய எசமானர்களின் சிந்தனை வடிவம்
இவ்வாறு விலைகொடுக்கப்பட்டது இந்திய எசமானர்களுக்காக
அன்று அநுராதபுர இரத்த வெள்ளம்
இன்று ஒரு மூதூர் இனச் சுத்திகரிப்பு
தூதரக அதிகாரி மீதான குண்டுத்தாக்குதல்
இவைகள் அரசியல் விபச்சாரத்திற்கான பாய்விரிப்புக்கள்
ஆக எந்த எசமானர்களின் கால்களில் விழுவது என்பது பற்றி மனப் போராட்டத்தின் விழைவுகள் தாம் இவைகள்
ஆக யுத்த நிறுத்தமாட்டோம் என்பது தமது பங்குக்கான நலனே முன்னிறுத்தப்பட்டிருக்கின்றது.
விழும் கால் இந்திய அதிகார வர்க்கமா
அல்லது மேற்கத்தைய வெள்ளை எசமானர்களா விரைவில் தெரியும்
Hi.
Lately your thought are not going toward the peopel's view. As we are Srilankan Tamils we lost our moral credibility for following resons???
1.We enjoy the internal murders and brotherhood fights(LTTE & others movements).
2. We never respect other's right
3. We credit ethinic cleancing
4. More tamils are killed by tamils than others(SL force & others)
5. We lost all the possibilities & opertiunities(My comment - If Palastieans are happy or want with what HAMAS got now, PLO and others lost the goldan oppertiunity on 1972).
6. Most of the Tamils are living abrod are not hardcore supporter of the LTTE. (these group are doing this for self benifits and time being). Next generation will ognore these thought because they are no longer tamils supporters.
7. Now we are facing lot of contradiction within ourself(North-East, cast, Class conterdiction went up to the extreme nationalist level & Sediest Chavanist attitudes
Thank You
//Lately your thought are not going toward the peopel's view//
வணக்கம்,வாசகரே!
இதையெப்படிச் சொல்கிறீர்கள்?மக்களுக்காகவே நாம் எழுதிவருபவர்கள்.அவர்களுடைய நலனை முன்னிறுத்தாத எழுத்தை எப்போதும் எழுதுவதுகிடையாது.
//...As we are Srilankan Tamils we lost our moral credibility ...//
நாம் எம்மைத் தமிழர்கள் என்ற குறியீட்டுக்குள் அடக்குபவர்களில்லை!
நான் முதலில் மனிதன்.
எனக்கான அடையாளப்படுத்தல்களெல்லாம் அரசியல் படுத்தப்பட்ட"உடல் அரசியில்"சார்ந்த கருவ+லம்.இதற்குள் என்னை முடக்கிவிட்டு"நாங்கள் தமிழர்கள் அனைத்தையும் இழப்பதற்கு கீழ்வரும் காரணங்கள்..."என்று நீங்கள் சுட்டுவதில் எனக்கு உடன்பாடு கொள்வதற்கு தயக்கமொன்றுமில்லை!ஏனெனில் இவை குறித்து நாம் பலபக்கக் கட்டுரைகளை எழுதிவிட்டோம்.தமிழர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டது மிகுதியென்பதெல்லாம் உண்மைதாம்.அதைவிடத் தமிழர்களால் தமிழர்கள் மானத்தோடு வாழதிருப்பதும் உண்மை.
சாதியம் என்பது இங்கு என்னத்தைச் செய்கிறது?
இதைத்தாம்.மற்றவர்களின் உரிமைகளை நாம் எப்போதும் மதிப்பதில்லையென்பது சாதியத்திலிருந்தே தொடர்கிறது.
ஒரே மொழியைப்பேசி ஒரு சமூகமாக-இனமாக வாழ்பவர்ளை சாதி சொல்லி அடிமைப்படுத்தும் சமூகத்திடம் மற்றவர்களின் உரிமையென்று எதாவது புலப்பட வாய்ப்பில்லை.இத்தைகய ஒடுக்குமுறைபோன்றதேதாம் இன்றைய போராட்ட அணுகுமுறையும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருப்பதைவிட அதற்கு வெளியில் உயிர்வாழ முனைதல் உயிரைக்காப்பது மட்டுமல்ல ஜனநாயத்தை எதிர்பார்த்துமாக இருப்பதால் நீங்கள் கூறுவது உண்மை.இத்தகைய அரசியல்-சமூக வாழ் சூழலில் தமிழ்பேசும் மக்களிடம் நீங்கள் சுட்டிய அனைத்தும் மலிந்திருக்கிறது.இது வடக்கான், கிழக்கான், மலையகத்தான்,சோனி,மோட்டுச்சிங்களவன்,பறையன்,நளவன் அம்பட்டன் என்றும் வர்க்கங்களாகவும் பிளவுபட்டு தேசியவெறிக்குள் அமிழ்ந்தும்,கொதித்தும் சியோனிசத்தின் கொதிநிலைக்குள் கிடந்தலையும் நிலைதாம்.
என்றபோதும் இத்தகைய நிலையோடு சிங்களப்பாசிச இனவாதமானது இலங்கை வாழ் மக்களைத் திட்டமிட்டு அழிவுக்குள் இட்டுச் செல்லும் காரணங்கள் தனியே இனவழிப்போடு சம்பந்தப்பட்டதல்ல.இது இலங்கைத் தரகு முதலாளியத்தின் ஆட்சி நெருக்கடிகளின் விளைவாயும் அறுவடையாகிறது.
தமிழ் ஆளும் வர்கத்தைப்பற்றி...
சிங்கள அரசு எப்படித் தமிழ்பேசும் மக்களை இனச் சுத்திகரிப்ப+டாக அழித்து வருகிறதோ அதேபோன்றே தமிழ்ப் பாசிசத்தின் ஊற்றுமூலமான புலிகளும்(தமிழ் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள்) முஸ்லீம் இனத்தைப் ப+ண்டோடு அழிக்கும் இனப்படுகொலைகளைச் செய்கிறது.இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோமென்றுவிட்டுத் தூங்கவில்லை!தொடர்ந்து இதன் காரணத்தைத்தேடிக் கற்றுக்கொண்டுவருகிறோம்.இத்தகைய காரியங்களின் பின்பக்கம் வெகு கொடியது.அது குறித்து நீண்ட விவாதங்களை வெகு விரைவில் தொடங்குவோம்.
அப்படி என்றால் ஜிகாத்முஸ்லீம்களாள் எந்த தமிழனும் கிழக்கில் கொல்லப்படவில்லை என்று உம்மால் உறுதிப்படுத்த முடியுமா??
//அப்படி என்றால் ஜிகாத்முஸ்லீம்களாள் எந்த தமிழனும் கிழக்கில் கொல்லப்படவில்லை என்று உம்மால் உறுதிப்படுத்த முடியுமா??//
ஏன் இப்படி இடக்கு முடக்காய் சிந்திப்பது?
கொல்லப்பட்டார்கள்!
நல்ல கைதேர்ந்த வியாபாரிகள் இலங்கையில் குட்டையைப் குழப்பி நன்றாகவே மீன் பிடிக்கிறர்hகள்.
இவர்கள் இனங்களை ஒன்றுடனொன்று மோதவிட்டு இலங்கையில் இராணுவ வகைக்ப்பட்ட சர்வதிகார ஆட்சியை நிலவ வைத்து அந்த நாட்டின் முன்னேற்றத்தைத் தடுப்பதும்,தமது நாடுகளின்-தொழிற் சாலைகளின் பசிக்கு மூலப்பொருள்களை உறுதிப்படுத்தல்,தடங்கலற்ற கடற் போக்குவரத்து,இதற்கான துறைமுகங்கள்-எண்ணைக் குதங்கள் என்றபடி பல நோகத்தோடு நம்மை அடிபட வைக்கிறார்கள்.நாங்கள் உலக அரசியல்,அதன் தேடுதல்கள்,நலன்கள்,ஆர்வங்களைப்பற்றிச் சிந்திக்காது-அவன் கொல்வதால் நாமும் கொல்வோமெனக் கலை கொள்கிறோம்.
இன்னும் ஒரு சில நாட்களில் கொங்கோ முதல் லெபனான் வரையான யுத்தங்கள்,ஐ.நா.படைகள்...மூலவளக் காப்பு,உறுதிப்படுத்தல்கள்,சுண்டிக் கொள்ளல் என்பது பற்றி எழுதுவேன்.அப்போது நமது நாட்டின் சுண்டங்காய்ப் பிரச்சனையின் பின்புலம் என்னவென்று ஆதாராங்களுடன் எழுதுகிறேன்.இதில் புலியென்ன இலங்கை அரசென்ன...? எல்லாம் ஆட்டுவிப்பவர்கள் தேவையோடு நாம் ஆடுகிறோம்.அழிவது சமூகப் பலவீனமான மனிதர்களே!
"//அப்படி என்றால் ஜிகாத்முஸ்லீம்களாள் எந்த தமிழனும் கிழக்கில் கொல்லப்படவில்லை என்று உம்மால் உறுதிப்படுத்த முடியுமா??//
ஏன் இப்படி இடக்கு முடக்காய் சிந்திப்பது?
கொல்லப்பட்டார்கள்!"
இதைத்தான் நாமும் கூறுகிறோம் கிழக்கில் கொல்லப்பட்டவர்கள், ஜிகாத்முஸ்லீம்களே, அப்பாவி முஸ்லீம்கள் அல்ல.
அவன் கொல்கிறான் நாமும் அப்படி செய்யலாமா என்று வாழாதிருந்தால், இறுதியில் கிழக்கில் தமிழன் வாழ்ந்தான் என வரலாற்றுப்பாடத்தில்தான் படிக்கவேண்டி இருக்கும்.
//அவன் கொல்கிறான் நாமும் அப்படி செய்யலாமா என்று வாழாதிருந்தால், இறுதியில் கிழக்கில் தமிழன் வாழ்ந்தான் என வரலாற்றுப்பாடத்தில்தான் படிக்கவேண்டி இருக்கும்.//
நீங்கள் வேறு...உலகம்போற போக்கில் ஆப்பிரக்கா போன்ற கண்டத்தில் இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றுதாம் படிக்கவேண்டி வரப்போகிறது!எல்லாவற்றுக்கும் தகுந்த காரணங்கள் இன்றைய பகாசூரக் கொன்சேர்ன்களின் ஆர்வத்துக்குள் இருக்கு,இதை மீறிய எந்த அரச அதிகாரங்களும் செல்லாக் காசு!கொஞ்சம் பொறுங்கள் சீனாவும் ஐரோப்பாவுமே அடிபடுவினம்.இப்படி அடிபாடுகள் பொருளாதாரத்தைப் பின்புலமாகக்கொண்டே நடைபெறுகிறது.இலங்கையிலும் இதன் பலாபலனே ஜிகாத் என்றும் புலிகளென்றும் இன்னும் எத்தனையோ வாலுகளென்றும்-அரசென்றும் யுத்தம்,கொலைகள் செய்து தத்தமது எஜமானர்களுக்குச் சேவை செய்கிறது.இதில் தமிழன் சிங்களவன்,முஸ்லீம்...
மிகச் சரியாக சொன்னீர்கள் சிறி அண்ணை இதுதான் இதைபுரிந்து
கொண்டாலே பாதிபிரச்சனை தீர்ந்து
விடும்
Post a Comment