அரசியல் சகுனி:ஆனந்தசங்கரி-ரீ.பீ.சீ.வானொலி...
(சிறு இடைமறிப்பு.)
இன்றைய இலங்கை- புலிகள் யுத்தம் குறித்து நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.யுத்தங்கள் எப்போதும் மக்களைக் காவு கொள்வதுமட்டுமல்ல,மக்களின் அடிப்படை வசதிகளைக் கொண்ட குடிசார் கட்டமைப்புகளைச் சிதறடிப்பதாகும்.அத்தகைய வன் கொடுமை அரச பயங்கர வாதத்தை கடந்த சில கிழமைகளாக இஸ்ரேலியச் சியோனிச அரசு லெபனான் குடிமக்கள்மீது கட்டவிழ்த்துவிட்டதை நாம் அறிவோம்.இது குறித்துச் சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பே அறிக்கைவிட்டுக் கண்டித்தது.
*மக்கள் வாழ்விடங்களை
*நுகர்வு அங்காடிகளை
*பாடசாலைகளை
*வைத்தியசாலைகளை
*மருந்தகங்களை
*பாலங்களை
*போக்குவரத்து வீதிகளை
*நெடுஞ்சாலைகளை
*நீர்த்தேக்கங்களை
*குடிநீர் விநியோக் கட்டமைவுகளை
இப்படிப் பற்பல குடிசார் அடிப்படைக் கட்டுமானங்களை இஸ்ரேலிய அரசு லெபனானில் குண்டுபோட்டழித்தது.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதியில் இலங்கையரசானது- வெளிநாடுகளின் வழிகாட்டலில்- இஸ்ரேலை உதாரணமாக்கித் தமிழ்பேசும் மக்களின் குடியிருப்புகள்மீது குண்டெறிந்து, அந்த மக்களை அகதிகளாக்கி வருவதை நாம் ஊடகங்களுடாகவும்,தொலைபேசிய+டாகவும் அறிகிறோம்.இத்தகைய மனிதவிரோதப் படுகொலைகளை இலங்கையரசு "புலிகளின் பெயரால்" விய+கம் அமைத்துச் செய்து வருகிறது.
இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரைய+டாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும,; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.
இந்த விய+கத்தின் வெளிப்பாடாக "அரசியல் அலி,பொறுக்கி,பச்சைக் கள்ளன்,அரசியல் விபச்சாரன்" ஆனந்த சங்கரியை உசார் படுத்தி,இஞ்சியுண்ட குரங்காய்ச் செயற்பட வைக்கிறது.இந்த "முதிர் அரசியல் விபச்சாரகன்" தனது பதவி இலாபத்துக்காக அப்பாவித் தமிழ்பேசும் மக்களை இந்திய அரசுக்குக்கும்,அந்நிய அரசுகளுக்கும் காட்டிக்கொடுத்துப் "புலிகளின் பாணியிலேயே" நமது சுயநிர்ணயவுரிமையைக் காயடிக்கிறான்.
மக்கள் இதுவரையான யுத்தால் இலட்சத்துக்கு மேல் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இன்றுவரையும் இலங்கையரசும்,அந்நிய அரசுகளும்,புலிகளும்,எலிகளுமாக மக்களைக் கொன்று குவிப்பதில் முனைப்பாக யுத்தம் செய்யும் தமிழ் நிலப்பரப்புகளில் குருதியாறு ஓடிக்கொண்டிருக்கிறது.
இவன் ஆனந்த சங்கரி பத்தாதற்கு...
எமது மக்களுக்கு-அதுவும் புலம் பெயரும் மக்களுக்கு அரசியல் அரிவரிப்பாடம் புகட்ட முனைவதும்,அதை ஜெயதேவன் என்ற திருட்டு முதலாளி-கோயில் கொள்ளைக்காரன் வழிமொழிந்து, எமது மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பதாக நாடகம்போட,அதையும் கமுக்கமாக ஆமோதிக்கும் மார்க்சியமே தெரியாத மார்க்சியர் திரு.விஸ்வலிங்கம் சிவலிங்கம் ரீ.பீ.சீ-இந்திய,இலங்கை கூட்டுச்சதிக்குப் பலிபோவதும்,தமிழ் பேசும் மக்களை இன்னும் அடிமைகளாக்கிப் பாரிய விலங்கை அவர்களுக்கு மாட்டித் தீருவோமெனச் செயற்படுவதும் இன்று வழமையாகி வருகிறது.
இன்றைய(30.08.06) ரீ.பீ.சீ.வானொலியின் உரையாடலானது இந்தியாவின் செல்லப்பிராணிகளாக இந்தப் பாவிகளை வெளிப்படுத்துகிறது.
"புலிகளைத் தோற்கடித்தவுடன் சமஷ்டிக்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கினால் அவர்கள் அதை ஏற்கமாட்டார்களென நான் ஜனாதிபதியிடம் கூறினேன்"என்கிறான் ஆனந்தசங்கிரி.
இவன் என்ன சொல்கிறான்?
மகிந்த எந்தப் பிரதேசத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்?
செவ்வாய்க்கிரகத்திலிருந்தா?
தமிழ் பேசும் மக்களுக்கு "இதை" வழங்கினால்தாம் ஏற்பார்கள் என்று ஆனந்தசங்கரித் திருடன் கூறும்போதுதாம் மகிந்த புரிந்து கொள்வாரா?
தமிழருக்கு உள்ள பிரச்சனை குறித்து எந்த அரசியல் அறிவுமற்றா மகிந்த அரசியலுக்கு வந்தவர்?
எட ஆனந்த சங்கரி!
உனது பித்தலாட்டமானது இன்னும்பலபடி உச்சிக்குச் சென்று "இந்தியவோடு ஒத்து,அவர்களின் விருப்பைத்தாம் நாம் ஏற்கவேண்டும்-அவர்களது மாநிலங்களுக்குள்ள உரிமையைவிடக் கூடிய எந்த உரிமையையும் இந்தியா தர விடாது-அப்படிக் கூடிய அதிகாரத்தை இருபது கட்டை தூரத்திலுள்ள தமிழர்கள் பெற்றால் 50 இலட்சம் தமிழர்களும்(தமிழ் நாட்டில் 50 இலட்சம் தமிழர்கள்தாம் வாழ்வதென்று புலம்பும் ஆனந்த சங்கரியின் அறிவோ அறிவு!ஐந்தரைக்கோடியில் 550 இலட்சம் மக்கள் என்று யாராவது அரிவரிப்பாடம் நடாத்தும் அளவுக்குப் பதவிப் பித்துப்பிடித்து,அறிவு மங்கிக் கிடக்கிறது ஆனந்த சங்கரிக்கு)பின் கூடிய அதிகாரத்தைக் கேட்பார்கள்.தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா.வேறுபல மாநிலங்களும் பின் உரிமைகேட்டுப் போராடும்.இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் இல்லை"...
இப்படித் தனது இந்தியக் கைக்கூலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டு,மக்களை மடையர்களாக்கும் இந்தத் திருடர்கள் எப்போது தமிழ் பேசும் மக்களின் நலனிலிருந்து இலங்கை இனப் பிரச்சனையைப் பேசப் போகிறார்கள்?.
ஆனந்த சங்கரியோ வ+ப்பெற்றால் இராமச்சந்திரனோடிணைந்து அப்பாவி அகதித் தமிழர்களை ஓட்டச் சுரண்டியவன்.
இவன் எங்கே மக்களின் நலனைப்பற்றிச் சிந்திப்பான்?
தனது அத்தாட்சிக்கடித்துக்கு 10.000. இலங்கை ரூபாயையும்,ஆட்கடத்தி இலட்சத்தையும் பெற்றவன் இவன்.
இராமச்சந்திரன் மக்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்தும்,ஆரம்பத்தில் புலிகளை ஏசித்திரிந்து,பின்பு புலிகளுக்கு நிதி வழங்கித் தனது உறவைப் பகைக்காது,இன்று கொழும்பில் மாட மாளிகையோடு,பிரயாண முகவர்த் தொழில் பண்ணுவதும் இந்த ஆனந்த சங்கரியின் கூட்டுக் கொள்ளையோடுதாம்.
இதற்குப் போதிய ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம்.
இந்த மனிதர்கள்தாம் இந்தியாவுக்கு விளக்குப்பிடித்து அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு நியாயம் வழங்கி வருகிறார்கள்.
இவர்கள்தாம் ஜனநாயகத் தலைவர்களாம்! கேட்கவே சகிக்க முடியவில்லை.புலிகளுக்கும் இந்தத் திருடர்களுக்கும் எந்தத் தளத்தில் வித்தியாசமுண்டு?
காலம் இதைக் காட்டுவதற்கு ஏதாவது வித்தியாசமுண்டா?
கிடையாது!
அப்பாவிகளாக மக்களென்றும் இருக்க முடியாது.
இந்த இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்து இத்தகைய அரசியல் மாபியாக்களால் ஏமாறும் நிலைக்குப் புலிகளின் அடி முட்டாள்த்தனமான யுத்த விய+கமே காரணமாகிவருகிறது.
தொடர்ந்தும் மக்களைப் பலிக்கடாவாக்கும் பாரிய யுத்தம் வெறும் அச்சத்தையும்,அழிவையும் நிரந்தரமாக்கிக்கொள்ளும்போது அரசியல் வெறுமை இருந்துகொண்டேயிருக்கும்.இந்த வெறுமைக்குள் சதிராடும் ஆனந்த சங்கரி வகையறாக்கள் இப்படிப் பல துரோகத்தை நமது மக்களுக்குச் செய்ய முனைப்புடன் திரிவது இன்னும் தொடரத்தாம் போகிறது.
எனினும் மக்களுக்கு சுய எழிச்சிகொள்ள முடியாத சூழலில் இவர்களைத் தட்டிக்கேட்க முடியாது!
மக்களைப் பேசவிடுவதும்,போராட விடுவதும் காலத்தின் தேவை.இதைப் புலிகள் செய்யும்போது,புலிகளின் கையிலிருக்கும் தமிழர்களின் உரிமைகளை,அது சார்ந்த நியாயப் பாடுகளை எவரும் தோற்கடிக்க முடியாது.
ப.வி.ஸ்ரீரங்கன்
30.06.2006
Wednesday, August 30, 2006
துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(3)
இனவாதமும்,இணைவின்மையும்:
தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும்,பட்டுணியும்,மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள்,வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் ப+ர்வீகக் குடிகளோடு கலந்தும்,இணைந்தும் வாழமுடிவதில்லை.
இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் ப+ர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் ப+ர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.
இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."die Auslaender","die Schein Asylanten"...usw.)" வெளிநாட்டார்கள்"பொய் அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.
இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.
இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.
உதாரணமாக இன்றைய நோர்த்தன் வெஸற்;பாலின் மாநிலத்து(Nordrhein-Westfalen)முதல்வர் திரு.யுர்கன் றுட்கார் கடந்த 2001 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சாத்வீக இனவாதக் கோசத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்தார்."."Kinder statt Inder"(இந்தியர்களுக்குப் பதில் குழந்தைகள்)எனும் தேர்தல் கோசம் பட்டி தொட்டியெல்லாம் ஒட்டப்பட்டன.இது ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் இந்தியக் கணினி மென்பொருள் வல்லுனர்களை எதிர்த்து முன்வைக்கப்பட்ட கோசமாகும்.இந்தியர்களுக்குப்பதிலாக "நமது குழந்தைகளை-அதுவும் நீல விழிகளும் பொன்னிறத் தலைமுடியும் கொண்ட வெள்ளைக் குழந்தைகளை இப்போதே படிக்க வைத்துத் தயார்படுத்து" என்பதே அதன் பொருளாக இருந்தது.இதன் பின்பு ஜேர்மனிய நாசியக் கட்சிகள் யாவும் இத்தகைய வெளிநாட்டார்-அகதிகள் எதிர்ப்பை மிகவும் வலுவாகச் சட்டப+ர்வமாக முன்னெடுத்தார்கள்.
ஏலவே பற்பல படுகொலைகளைச் செய்திருந்த இனவாதிகளுக்கு இத்தகைய ஓட்டுக்கட்சிகளின் அடவாடித்தனம் மிகவும் பயனுள்ள செயலாகத் தெம்ப+ட்டியது.(நாங்கள் தமிழ்பேசும் மக்கள்.இலங்கையின் இனவாத அரசியலிலும்,அதன் இனவாதக் கருத்தியலிலும் அநுபவம் பெற்றவர்கள்.எமக்குள்ளும் மாற்று இனங்கள் குறித்த இந்த சாத்வீக இனவாத்தின் ஆதிக்கம்-அநுபவம் இருப்பதை உணரவேண்டும்.இதுவேதாம் செயலூக்க இனவாதிகளை யுத்தத்தில் உருண்டு பிரண்டு கிடக்கத் தூண்டுவதையும் நாம் மறக்கப்படாது.)இவர்கள் அகதிகளுக்கு-வெளிநாட்டார்களுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்துத் தினமும் மனிதர்களைக் காயப்படுத்தியும்,கொன்றும்,அகதிகளின் வதிவிடங்களைத் தீ மூட்டியும் அகம் மகிழ்கின்றார்கள்.
கடந்த 26.05.1993 ஆம் ஆண்டு அகதிகளுக்கான சட்டம்(Art.16 des Grundrecht auf Asyl)ஆர்ட்டிக்கல் 16 ஐ மாற்றிய மூன்றே நாளில் 29.05.1993 ஆம் ஆண்டு ஜேர்மனியின் இரும்பு நகரான சோலிங்கனில்(29.Mai 1993 wurden in Solingen fuenf tuerkische Frauen ermordet.) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து துருக்கியப் பெண்மணிகள் நித்திரைப்பாயில் அவர்களின் வீடெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.அடுத்த சில மாதங்களில் இன்னும் இரண்டு குழந்தைகள் மோல்ன்(;(Moelln)எனும் கிராமத்தில் தீ மூட்டிக் கொல்லப்பட்டார்கள்.இத்துடன் இத்தகைய அகதிகள்-வெளிநாட்டார்கள் வெறுப்புத் தணியவில்லை.அது தொடர்ந்து, நாளும் பொழுதும் பெரும் தீயாய் பரவி அகதிகளை அடித்துக் கொல்கிறது-மரணப்படுக்கையில் கிடத்துகிறது.கிழக்கு ஜேர்மனியில் நாளொன்றுக்கு இருவராவது நாசிகளால்-சாமானிய ஜேர்மனியர்களால் உடற் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
மிகச்சமீபத்தில்,16.04.2006 அன்று கிழக்கு ஜேர்மன் சக்ஷன் மாநிலத்தின் தலைநகரமான பொட்ஸ்டாமில்(;(Potsdam)இஒரு நைஜீரிய அகதிப் பொறியியலாளர் அடித்துக் கோமாவில் கிடத்தப்பட்டார்.இத்தாக்குதல் குறித்து நாடு தழுவியவரையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பேர்ளினிலிருந்து தினமும் அகதிகள் தாக்கப்படுவதை"முதலாம் தேதியிலிருந்து முப்பத்யோராம் தேதிவரையும்" ஆவணமாகத் தொகுத்தது "Konkret"எனும் இடதுசாரியச் சஞ்சிகை.இவற்றுக்கு ஜேர்மனியப் பொலிசாரே உடந்தையாக இருப்பதையும் அது அம்பலப்படுத்தியது.இங்ஙனம் நிர்வாகத்துறையிலும்,அமைப்பு நெறியாண்மைக்குள்ளும் இடையாக இந்த"சாத்வீக இனவாதக் கட்டமைப்பு வேரோடியுள்ளது((Besondere Aufmerksamkeit werden wir auf rassistische Strukturen innerhalb des Verwaltung-und Organisationapparates...z.B. wie Sri Lanka/Tamil Eelam.).
இவையெல்லாம் இந்தப் பொருளாதாரத்தின் மறுபக்கச் செயற்பாடாக விரிகிறது.அகதிகள்மீதான ஐரோப்பிய இனவெறியாளர்களின் தாக்குதலைப்பட்டியல் போடுவதற்கு ஒரு ஆயுள் போதாது.தினமும் ஒருவராவது ஒரு நகரத்தில் உடல்ரீதியாகத் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது,ஜேர்மனியில்.
இந்த நிலையில் யுத்தங்களால் மக்கள் புலம் பெயர்ந்து அகதியாகும் கீழ்வரும் அறிக்கையைப் பார்த்தால் உலகம்ப+ராக மக்கள் அகதியாகி மடிந்துவிடுவார்களோவென அஞ்சவேண்டியுள்ளது.உலகத்தில் நடைபெறும் அனைத்து நாசகார யுத்தங்களும்,உயிர் கொல்லி ஆயுதத் தளபாடங்களும், நிதி மூலதனமும்,பாரிய தொழிற்சாலைகளும் மனிதர்களை அகதியாக்கி வரும் இந்த அட்டவணை மிகவும் அச்சமூட்டுகிறது.
"2003 ஐக்கியநாட்டுச் சனத்தெகை பற்றி அறிக்கை ஒன்றில் ,உலகத்தில் 17.5 கோடிகள் மக்கள் தத்தமது நாட்டுக்கு வெளியில் வாழ்வதாகக் கூறியுள்ளது. 10 பேர்களுக்கு ஒருவர் சொந்த நாட்டடை விட்டு வெளியேறுகின்றார். முன்னேறிய நாட்டை நோக்கிப் பன்தங்கிய நாட்டைச் சேர்ந்த 23 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் புலம் பெயர்கின்றனர். 1975க்குப் பின் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து வெளியேறியவர்களின் புலம் பெயர்வு இரண்டு மடங்காகியுள்ளது.
இந்த புலம் பெயர்வு வட அமெரிக்காவி;ல் 5 கோடியும், ஐரோப்பாவில் 4.1 கோடியும், ருஷ்சியாவில் 5 கோடியமாகும். முன்னேறிய நாடுகளில் ஒவ்வொரு 70 பேருக்கு ஒருவர் வெளிநாட்டவராகியுள்ளனர். 1995-2000 இடையிலான 5 வருடத்தில் 1.2 கோடி பேர்கள் முன்னேறிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தம் 23 இலட்சத்தால் அதிகரிக்கும் வெளி நாட்டவாகளில் 18 சதவீதம் பிறப்பினால் உருவாகின்றது. மொத்தில் வட அமெரிக்கா 14 இலட்சமும,; ஐரோப்பாவில் 8 இலட்சமுமாக அதிகாரிக்கின்றது. மொத்தில் 9 வீதம் பேர்கள் அகதி அந்தஸ்தைப் பெறுகின்றனர்.
வருடந்தம் 2000 முதல் 2050 வரையான காலத்தில் வெளிநாட்டவரின் புலம் பெயர்வு சராசரியாக:
அமெரிக்காவை நோக்கி 11 லட்சம்
ஜேர்மனி 2.11 லட்சம்
கனடா 1.73
இங்கிலாந்து 1.36
அவுஸ்ரேலியா 0.83
வருடாந்தம் அகதிகளின் புலம் பெயர்வு இலட்சத்தில்:
சீனா 3.03
மெக்சிக்கோ 2.67
இந்தியா 2.22
பிலிப்பைன்ஸ் 1.84
இந்தோநேசியா 1.8- (புள்ளி விபரக்குறிப்புக்கு நன்றி:தமிழரங்கம்)"
மேற்காணும் இந்தப்பட்டியல் சொந்த நாடுகளில் அகதிகளானவர்களின் பட்டியலை இணைக்கவில்லை.இன்றைய நிலவரப்படி வெளிநாடுகளிலும்,சொந்த நாடுகளிலுமாக "உலக மக்கள் தொகையில் 50வீதமானவர்கள"; அகதிகளாக வாழ்கிறார்கள்-வதைபடுகிறார்கள்.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
30.08.2006

Tuesday, August 29, 2006
துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(2)
துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(2)
"ASYLUM"-Asyl , இந்த வார்த்தைகள் உலகத்தில் பிரபலமான அளவுக்கு மற்றெந்த வார்த்தைகளும் பிரபலமடைந்திருக்க முடியாது!அவ்வளவுக்கு மனிதர்களின் இடப்பெயர்வு நிகழ்ந்து வருகிறது.இன்றிந்தக் கோணத்தில் இடப்பெயர்வு நிகழுந் தறுவாயில்,இத்தகைய இடப் பெயர்வுக்குக் காரணமான ஐரோப்பிய-அமெரிக்க அரசுகள் தமது எல்லைகளை இறுக மூடிவைத்துவிட்டு,அசூல் எனும் வார்த்தைக்குப் புதுப்புது அர்தங்களை அள்ளி வழங்குகிறார்கள்.அகதி எனும் கோசம் "அரசியல் கோரிக்கையாக-உயிர்வாழ்வை காத்து,எம்மை வாழவிடு"என்ற மிக வலுவான மனிதாபிமானக் கோரிக்கையாக,மனிதவாழ்வின் அடிப்படையுரிமையாக விரிந்து செல்லும்போது,இத்தகைய நாடுகள் அதை மிகக் கேவலமாகத் தமது மக்களுக்குப் பரப்புரை செய்கிறது.
"Schein Asylanten."பொய் அகதிகள் என்று ஜேர்மனிய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இந்த மனித அடிப்படையுரிமையைக் கேலிக்குள்ளாக்குகின்றனர்.இவர்களே தமது தேவைக்காகவும்,வசதிக்காகவும் உலக யுத்தங்களை நடாத்தியபோது,இவர்களுக்கு இந்த அரசியல் சட்டவுரிமைக் கோரிக்கை அவசியமானதாக இருக்கிறது.இவர்கள் தமது நாடுகளை மீளக்கட்டியமைக்கும் தேவைக்காக தமக்குள் உடன்பாட்டுடன்-சமாதானத்துடன் மற்றைய கண்டங்களிலுள்ள நாடுகளை யுத்தத்தால்-கொடும் சுரண்டலால் அழிக்கும்போது,உயிர்ப்பலியெடுக்கும்போது,யுத்தத்துக்குள் சிக்கி உயிர்காக்கப் புலம்பெயரும் மக்கள் வெறும் பொய் அகதியாகி விடுகிறார்கள்,இந்த ஐரோப்பியத் திமிருக்கு.
நேற்று முன் தினம்(27.08.06 ஞாயிற்றுக் கிழமை)கரீபியன் தீவுகளில் கால்பதிக்க முனைந்த ஆபிரிக்க அகதிகள் கடலில் படகு கவிழ நீரில் மூழ்கிப் பலியானார்கள்.இதுள் பல பத்துப் பேர்கள் பலியானதை மேற்குலக ஊடகங்கள் செய்தியாக அறிவித்தன.இந்தப் படகுப் பயணமானது ஐரோப்பாவை நோக்கி வாழ்சூழல் பாதிப்படைந்த ஆபிரிக்கக் கண்ட மக்களால் தினமும் நடாத்தப்படுகிறது.தமக்குமுன் போன பல படகுகள் கவிழ்ந்ததையறிந்தும் இந்தப் பயங்கரமான கடற் பயணம் தொடர்கிறது.எனினும் ஐரோப்பா தனது கதவுகளை இறுக மூடிக்கொண்டு மனிதாபிமானம் பேசுகிறது.மொரோக்கோவுக்கும் இஸ்பெயினுக்குமான "போடர்"புலம்பெயரும் மக்களுக்கு மூடப்பட்டபின்,ஆபிரிக்க மக்கள் இத்தகைய விபத்துகளில் தினமும் பலியாகி வருகிறார்கள்.இந்தாண்டுக்குள்-இதுவரை அண்ணளவாக15.000.அகதிகள் இப்படி வந்து,மரணித்தும், அடித்தும் விரட்டப்பட்டுமுள்ளார்கள்!மொரோக்கோவுக்கு வரும் கருப்பின அகதிகளை மொரோக்கோ இஸ்பெயினுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டுவதற்காக ஐரோப்பிய ய+னியனானது பல மில்லியன்கள் யுரோவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.இது ஏலவே பேர்ளின் போடரை மூடுவதற்கு அன்றைய கிழக்கு ஜேர்மனிக்கு மேற்கு ஜேர்மனி வழங்கிய தொகையைவிட அதிகமானதென அகதிகளைப் பராமரிக்கும் பொது அமைப்புக்;(Wohlfahrtspflege fuer Fluechtlinge e.v) கூறுகிறது.
இன்றைக்கு இந்த ஐரோப்பா தனது தொழிற்சாலைகளை நல்லபடியாக இயக்கிப் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது.அதற்கான மூலப் பொருள்களை 90வீதம் ப+ர்த்தி செய்யும் கண்டம் ஆபிரிக்கக்கண்டமே.இந்த நிலையில் இவர்களே அகதிப் பெருக்கத்துக்கான மூலகாரணமாக இருந்தும்,தம்மால் இயற்றப்பட்ட அரசியல் தஞ்சக் கோரிக்கைச் சட்டங்களை மதிப்பதில்லை.அந்தச் சட்டம் தமக்குத் தேவையென்றால் மட்டுமே நடைமுறைக்கு உகந்ததாகக் கணிக்கும் மேற்குலகம்,அதை மதிப்பதில் இரட்டைவேஷம் போடுகிறது.
இத்தகைய சட்டங்களை எதற்காக ஐ.நா.முன்மொழிந்து வரைந்தது?அதன் உள்நோக்கம் எதுவாக இருந்தது?
முன்னாள் நாசிய ஜேர்மனி 20ஆம் நுற்றாண்டுகளில் இரண்டு உலகயுத்தங்களில் சுமார் 80 மில்லியன்கள் அப்பாவி மக்களை வேட்டையாடியது.இந்த ஈனத்தனத்திற்குப் பின் ஐரோப்பிய மனிதவுரிமை ஆணையகம் மற்றும் ஜெனிவா அகதிகள் ஆணையகமும் சில வரைவுகளை -ஒப்பந்தங்களை செய்துள்ளார்கள்இஇந்த வரைவுகள் 'சட்டத்தின் முன் சகலரும் சமனம்'என்றபடி எதையுரைத்ததோ அஃது இவ்வைரோப்பியரசுகளால் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.
அரசியல் தஞ்ச உரிமை சட்மாக்கப்பட்ட வரலாறானது 1946 இல் ஆரம்பமாகிறது,ஐ.நா.சபையின்
பொதுக்கூட்டம் சர்வதேச அகதிகள் கழகத்தை மேற்கூறிய ஆண்டில் ஆரம்பித்தது. இக்கழகமானது முதலில் நான்கு வருடங்களும் அதன்பின் மீள இரண்டாண்டுகளும் தொடர்ந்தியங்கியது,ஆரம்பத்தின் நோக்கம் உலகயுத்தத்திற்குப் பின்பான சமூகப்பிரச்சனையை
ஓரளவு தீர்க்கக்கூடியமாதிரி இது இலக்கு வைத்து மீள் குடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றங்களை யும் அதுசார்ந்த தேவைகளுக்காக இயங்கிக் கொண்டது.
எனினும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் யுத்தத்தை இரண்டாவது உலக யுத்தத்தோடு நிறுத்தி விடவில்லை,மாறாகத் தனது குருதிதோய்ந்த வலுக்கரத்தை உலகம் பூராகவும் விரிகத் தொடங்கியது.இதன் போக்கால் இந்த அகதிகள் பிரச்சனை ஒரு தொடர் இயக்கமாக இயங்கிக்கொள்ள ஐ.நா.சபை அகதிகளுக்கான உயர் ஸ்தானிக சபையை உருவாக்கிச் சட்ட வரைவைச் செய்தது.
பொதுவான மனிதவுரிமை விளக்கப்படி 10.12.1948ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட சட்டம்:Art.14 Abs 1"Jeder Mensch hat das Recht, in anderen Laendern verfolgungen Asyl zu suchen und zu genießen."(வேறொரு நாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கும்,அதை அனுபவிப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.) இந்த அழகான வார்த்தை ஜாலம் அதை குடிசார் சட்டவாக்கத்திற்குள் அடக்காது நாடுகளினது கடமையாக -அவர்களே அதை நிறைவேற்றும்படி அரசியல் யாப்புச் சட்டத்தில் அடக்கியதன் விளைவு இப்போது ஒவ்வொரு நாடுகளும் தாம் நினைத்தபடி தார்ப்பார் காட்டிக்கொள்கிறது.
இந்தத் தவறைச் சரிக்கட்ட 1951ஆம் ஆண்டு யூலாய் 28 பிரேரிக்கப்பட்டு 22.04.1954 இல் அமூலுக்கு வந்த 'அகதிகளுக்கான சட்ட அமூலாக்க ஒப்பந்தம்' ஜெனீவா ஒப்பந்தமாக அறியப்படுகிறது.இதுவே அரசியல் தஞ்சம் கோருபவரின் காரணத்தைக் குறித்து இந்திந்தக்காரணம் மட்டுமே அரசியல் தஞ்சம் கோர உரித்துடையதென வகுத்து வைத்துள்ளது.
இதன்பிரகாரம் ஒரு தனிநபர் தனது மத,இன,பிரைஜாவுரிமை இவைகளின் பொருட்டு அல்லது தனது அரசியல்,சமூகக் காரணிகளால் பாதிக்கும்போது வேறு நாட்டிற்குள் சென்று புகலிடம் கோர உரித்துடையவராகிறார்.
ஆனால் இன்று நடப்பதோ அனைத்தும் தலைகீழ்! இன்று 29.08.2006 செவ்வாய்க் கிழமை, கிழக்கு ஜேர்மன் மாநிலமான சக்ஷன் மாநிலத்தின் உள்துறை மந்திரி போட்டலா கூறுகிறார்:"இணைந்து வாழ்வதென்பதற்குப்பதில் வதிவிடவுரிமையற்ற வெளிநாட்டார்களைப் பிடித்து அவர்களது தாய் நாட்டுக்கு அனுப்புவதுதாம் சரி.அதைவிட்டு இணைந்து வாழ்தல்,கலந்து வாழ்தல் என்றபடி சட்டங்கள் இயற்றுவது தப்பு.குடும்பமாக இருப்பவர்களுக்கு,அவர்களது குழந்தைகளுக்குப் பாடசாலை செல்ல ஒழுங்கு செய்து கொடுப்பது நல்லது"என்று சக்ஷன் மாநிலத் தினசரி ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார்(Volkszeitung vom 29.08.2006).
கடந்த கிழமை எனது மகன் ஒரு பேப்பர் கட்டிங்கோடு பதறியடித்து வந்தான்.அவனது வகுப்பு மாணவனின் பெற்றோர்கள் அந்தப் பத்திரிகை நறுக்கை இவனிடம் கொடுத்து,"இதை தமிழ் இணையங்களில் பிரசுரிக்கவும்"என்று.அவர்கள் ஜேர்மனியப் பெற்றோர்.மிகவும் பொறுப்பானவொரு காரியத்தை செய்திருந்தார்கள்.
அந்தப் பத்திரிகையில் இருந்த வாசகம்:
Abschiebung:Tamile fuerchtet um sein leben.
Vimalathas Kurunathpillai hat Angst."Ich weiss nicht, was passieren wird,wenn ich aus dem Flugzeug in Clombo steige."sagt der junge Mann.(Wuppertaler Zeitug)
நாடுகடத்தல்:தனது உயிருக்கு ஆபத்தென்று தமிழர் அச்சம்.விமலதாஸ் குருநாதபிள்ளைக்கு அச்சம்." நான் விமானித்திலிருந்து இறங்கிக் கொழும்பில் கால்வைக்கும்போது,எனக்கு என்ன நடக்குமென்றே புரியவில்லை."இந்த இஞைர் இங்ஙனம் கூறுகிறார்.
விமலாதாஸ்(வயது 23) வ+ப்பெற்றாலில் இருப்பவர்.1997 இல் ஜேர்மனிக்குள் கால் வைக்கும்போது 14 வயது.இந்த நகரத்தில் அவரது சகோதரர்,சகோதரி இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாது சட்டம் சதிராடுகிறது.இப்போது இவர் பொதுத் திருச்சபை நிறுவனம் ஒன்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
29.08.2006

Monday, August 28, 2006
துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(1)
துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(1)
அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது.
நாமே நமது விலங்கொடிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை!
அகதி!
அகதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து!!இதிலிருந்துதாம் மற்றெல்லாவுரிமைகளும் வென்றெடுத்தாகவேண்டும்.உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் தினமும் பல நூறு மக்களைக் கொன்றும்,பல்லாயிரம் மக்களை அகதியாக்கியும் வருகிறது.
எனினும் மக்கள் உயிர்வாழப் போராடியும்,கண்டம் தாண்டிக் கையில் பிடித்தவுயிருடன் அகதி நாமம் தேடிக் கொள்வதும்,துரத்தப்படுவதும் நிகழ்கிறது.
எதற்காக நான் அகதியானேன்?
இது கேள்வி மட்டுமல்ல!-தேசத்தின் இருப்பையும் அதன் தன்மானத்தையும் பேசுவது.
இந்தச் சூழலை மறுதலித்துவிட்டு எனது ஜேர்மனியப் பிராஜாவுரிமையோடு என்னைக் கழுவிக் கொள்வதில் நாட்டமில்லை.நம்மில் பலர் தம்மை அகதிகள் என்பதைக் கேட்கச் சகிக்க மாட்டார்கள்.
என்றபோதும் பத்துத் தலைமுறை தாண்டினாலும் நானும் எனது தலைமுறைகளும் அகதியே!-இது பிரகடனம்.
தேசம் தொலைத்தவனின் வயிறு எரியும் மனப் போராட்டம்.தான் வளர்ந்து மண்ணளைந்த ப+மியைப் பார்க்க முடியாது தவிக்கும் வாழ் சூழல் இந்தவுலகத்தின் அனைத்து ஒடுக்கு முறையிலும் மிகக் கொடியது.இந்தவுணர்வைத் தேசத்தில் உழையாது,பிறர் பணத்தில் உண்டு ,ஏப்பமிட்டுத் தனக்கு பக்கத்தில் உடல் உழைப்பை நல்கும் மனிதர்களைச் சாதி சொல்லித் திட்டும் ஏப்பத்தால் உணரமுடியாது.-இது ஒரு தேச அவமானம்.தேசம்!...
உயிர் வாழும் வலையம்:
மனித அவலம் தொடர்கிறது.
பல்லாயிரம் மக்கள் இடம்பெயரப் ப+மியின் பெரும் பகுதி அகதிகளின் பெருக்கத்தைக் காண்கிறது.
இன்றைய மதிப்பின் படி புவிப்பரப்பெங்கணும் 370 கோடிகள் மக்கள் அகதியாகியுள்ளார்கள்.
இந்தப் பெரும் மனித அவலமானது மனிதவுயிர்வாழும் சூழலுக்கானவொரு போராட்டமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.இந்தப்போரில் நம்மிடம் நவீனச் சுடு கருவிகளோ அல்லது தாங்கிகளோ,ஆட்லெறிகளோ கிடையாது.அல்லது நம்மிடம் மதமோ இல்லை எந்த மொழிவாரி,இனவாரிக் கோசங்களோ கிடையாது.மாறாக நம்மை உயிர் வாழ-உழைத்துண்ண விடு,என்ற தார்மீகக் கோசமே ஆயுதமாக இருக்கிறது.இதைக் கண்டு அஞ்சும் நிலை ஆளும் வர்கங்களின் விழிகள் முன் வருகிறது.வாழும் சூழல் இல்லாதாகும்போது மனிதர்கள் வாழக்கூடிய சூழலை நோக்கி இடம் பெயர்வது சாத்தியமே!
இது உலகத்தில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது.வலுவுள்ளது மட்டும் வாழுமென்பது உயிரியலுக்கும் அன்றையச் சமூகவாழ்வுக்கும் பொருந்தட்டும்.ஆனால் இன்றைய நவீன மனிதர்களுக்கு இது பொருந்தத் தேவையில்லை.
நாம் இன்று பின் நவீனத்து சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்கிறோம்.இன்றைய சமூகப் பொருளாதார உற்பத்தித் திறனாது மனிதர்களின் எந்த நிலையானவர்களுக்கும்(ஊனம்,பலமற்றவர்கள்...)சமூகக் காப்புறுதியையும் தீவனத்தையும் உயிர் வாழும் தகுதியையும் கொடுக்க முடியும்.இதுதாம் இன்றைய பின்தேசிய அடையாளமாக(postnationalen Identitaet) விரியும் உற்பத்தித் திறன்மிக்க இனங்களுக்குள் முகிழ்க்கும் பொதுவறித் தளமாக விரிகிறது.
இதை எமது முன்னோர்களின் அறிவே நிலை நாட்ட உதவுகிறது.சதா தன்னைச்(சுய சோதனைக்குள் தம்மை ஈடுபடுத்திய விஞ்ஞானிகள்) சிதைத்து கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலறிவு குறிப்பிட்டவொரு இனத்துக்கோ அல்லது தேசத்துக்கோ-தொழிற்கழகத்துக்கோ சொந்தமில்லை.இது முழுமொத்த மனித இனத்துக்கும் பொதுவான சொத்து.இங்கே மானுடம் உயிர்வாழப் போராடும் இழி நிலை.
வாழும் இருப்பிடம்,கிராமம்,நகரம்;-பயிர் விளையும் மண் நாசமாகிறது!-நஞ்சாகிறது.நீர் நிலைய+ற்றுக்குள் வற்றி வரண்டுபோகிறது.நதி நீர் நஞ்சாக்கப்படுகிறது.இங்கே மீளவும் கனிவளங்களை வேட்டையாடிக் கொள்ள மேற்குலகத் தொழிற்கழகங்கள் யுத்தம் நடாத்தக் குண்டுகள் வெடிக்கின்றன.வாழும் வலையம்(Lebensraum)சிதைக்கப்படுகிறது.இதற்கு நல்லதொரு உதாரணம் நர்மதா அணைக்கட்டு விவகாரம்.இதுகுறித்துப் பேசும்போது, நாம் நமக்கு அருகினில் பிரச்சனையிருப்பதை இன்னும் அதிகமாகவே உணர்கிறோம்.
யாருக்காக
யார் வாழும் இடங்களைப்
பறிகொடுப்பது?
"Laenger als ein halbes jahrhundert haben wir geglaubt,dass die grossen Staudaemme die Bewohner Indien von Hunger und Armut befreien wuerden.Das Gegenteil ist eingetreten."-(Arundhati Roy,indische Schriftstellerin)
"இந்தியக் குடிமக்களின் பசியையும்,பட்டுணியையும் நர்மதா அணைக்கட்டு போக்கிவடுமென அரை நூற்றாண்டுக்கு மேலாக நம்பிக்கொண்டோம்.ஆனால் நடந்ததென்னவோ எதிர் நிலைதாம்."என்கிறார் அருந்ததி ரோய்.
மனிவுரிமைச் சங்கத்தின் 2000 ஜுனிக்கான(ஜுனி என்பதை ஜுன் என்று வாசிக்கவும்,ஜேர்மனிய மொழிப் பயன்பாட்டின் வெளிப்பாடது.) மனிதவுரிமைக்கான கோரிக்கையின் அறிவுப்பு நர்மதா மனித அவலத்தை மேத்கா பட்டர் மூலம் அறிவிக்கிறது.அது பொருளாதாரத்தின்மீதே கோரிக்கைகளை முன்வைத்துச் செல்கிறது.(ISBN 3-89290-044-2 என்ற சர்வதேச நூற்சுட்டியின் மூலம் இவ் நூலைப் பெறமுடியும்.)
1.5 மில்லியன் மக்கள் குஜராத்,மகாரிட்ஷ்ரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அகதிகளாகப்பட்டு வருகிறார்கள்.இவர்கள் தமது வாழ்விடங்களைப் பறி கொடுப்பதும்,அகதிகளாக உருப்பெறுவதும் பாரிய தொழிற்சாலைகளின் மின்சாரத் தேவைக்காவேதாம்.1993 ஆம் ஆண்டளவில் நர்மதா அணைக்கட்டுக்கு உலக வங்கி உதவி வழங்கி மக்களை அகதிகளாகத் திட்டம் தீட்டியது!அது தனது வாலைச் சுருட்டிப்பதுங்கும் நிலைக்கு மக்கள் நலக் குழுக்களின் தீவிரமான போராட்டம் காரணமானது.எனினும் 2000 க்குப் பிறகு அதே உலக வங்கி 450 மில்லியனகள்; டொலர் நிதி உதவியை வழங்கி மீளவும் தனது வலுக்கரத்தை இந்த அப்பாவி மக்கள்மீது வைத்து,அவர்களை அகதிகளாகி அநாதையாக்கிறது.இது நர்மதாவின் கதை.
ஒரிசா மாநிலத்தில் 1993 இலிருந்து ஆதிவாசி மக்கள் துரத்தியடிக்கப்பட்டும்,கொல்லப்பட்டும் அவர்களது நிலங்கள்-வாழும் வலையங்கள் பல் தேசியக் கம்பனிகளின் கால்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தியாவிலேயே ஒரிசா மாநிலமானது மிகவும் தனிச் சிறப்பான தாதுப் பொருட்கள் நிரம்பிய-கனிவளமிக்க மாநிலமாகும்.இந்த மாநிலத்தை அந்நியத் தொழிற்கழகங்கள் வேட்டையாட ஆதிவாசி மக்கள் தமது வாழ்வைப் பறிகொடுப்பதில்போய் முடிகிறது.பாலங்கள்,கட்டுமானங்கள்,தொழில் முன்னெடுப்பு என்று, பல்வகைக் காரணங்களால் இவ் மாநிலம் மக்கள் வாழும் உரிமையைப் பறிக்கிறது.உட்கால் அலுமெனியம் (Utkal Alumina) எனும் பாரிய தரகு முதலாளிய நிறுவனம் ஒரிசாவை அந்நியக் கம்பனிகளான நோர்வே நாட்டு நோஸ்க் கைட்ரோ(Norsk Hydro)மற்றும் கனேடிய அல்கான் அலுமெனியம்(Alcan Aluminium) தொழிற்கழகங்களோடு சேர்ந்து ஒரிசாவின் தாதுப் பொருட்களைத் திருடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அலுமெனியம்(INDAL Ltd.)உதவி வழங்கிக் கொழுத்து வருகிறது! லார்சன் அன்ட் ரூப்புரோ(Larsen &Toubro)என்ற மாபெரும் தொழிற்சாலை இந்தியாவின் மிகப் பெரும் ஜந்திரத் தொழிற்சாலை.இது அந்நியக் கம்பனிகளின் கூட்டுக்கொள்ளை நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள்தாம் போராடும் மக்களை அரச மற்றும் தனியார் படைகளை வைத்துக் கொல்கிறது.அப்பாவி மக்களின் வாழ்விடங்களைப் பலாத்தகாரமாகப் பறிக்கிறது.இந்திய மத்திய அரசோ அந்நியக் கம்பனிகளால் நிர்வாகிக்கப்பட்டு மக்கள் நல அரசியலைப் பறி கொடுத்து அந்நியக் கம்பனிகளின் தயவில் வாழ்கிறது.இதை ராபி மிஸ்ரா போன்றோரின் கைதுக்கும்,விடுதலைக்குப் பின்பும் அவர்களே ஒப்புக்கொண்டு கருத்துக் கூறினார்கள்.தாம் கைது செய்யப்பட்டது தனியார் படையின் மூலமாகவும்,அது உட்கால் அலுமெனியத்தின் அடியாட்படையென்பதாகவும்.(Persecuted for challenging injustice,Human rights defenders in India.)
இதைப்போன்றோதாம் இன்று ஆசிய, ஆபிரிக்க,மத்திய ஆசிய மற்றும் பாரசீக வளைகுடாவெங்கும் மக்கள் வாழும் வலையங்களைப் பறி கொடுத்து, அகதிகளாக்கப்படுகிறார்கள்.
உலக வர்த்தகக் கழகத்தின்(;(WTO)சேட்டில் மாநாட்டில் மனிவுரிமைச் சங்கம் வாய்கிழியக்கத்திய"Multinationale Investoren haben die Verpflichtung zum Schutz der Menschenrechte,unabhaengig davon, in welchem Lande sie taetig werden" சுலோகத்தை இவர்கள் மதிப்பதுமில்லை,காப்பதும் இல்லை!
"எந்த நாட்டில் பல்தேசிய நிதியீட்டாளர்கள் இயங்கினாலும் மனிவுரிமையைச் சுதந்திரமாகக் காத்து இயங்குவது அவர்களது கடமை"என்பதெல்லாம் நீரில் எழுதப்பட்ட எழுத்துக்களாகும்.
கடந்த 45 ஆண்டுகளாக நடைபெறும் சூடானிய யுத்தத்தால் 2.5 மில்லியன்கள் மக்கள் கொல்லப்பட்டு,5 மில்லியன்கள் மக்கள் உள் நாட்டில் அகதியாகியும் அந்நியத் தொழில் நிறுவனங்களின் எண்ணை வேட்டை தொடர்கிறது.மக்கள் வாழ்விடங்களைப் பறிகொடுத்து அகதியாக அல்லல்படும் இழி நிலை! ஒரு மில்லியன் மக்களுக்கு மேலாக மேற்குலகத்துக்குள் அநாதைகளாக நுழைந்துள்ளார்கள்.செல்வம்(கனிவளம்) கொழிக்கும் நிலத்தின் மக்கள் அதை அநுபவிக்க முடியாது,அநாதைகளாகி-அகதியாகி...
1956 ஆம் ஆண்டளவில் சூடானில் யுத்தம் வெடித்தது.இது உள்நாட்டு யுத்தமாகவே வர்ணிக்கப்பட்டது.ஆனால் அதன் கதை கனிவளங்களை-எண்ணையை மையப்படுத்தியே போர் ஆரம்பமாகியது.
அங்கு கேட்கப்பட்ட கேள்வியானது:
"யார் எண்ணையை-அந்த ஊற்றை சொந்தமாக வைத்திருப்பது,எவர் அதனால் இலாபம் அடைவது"என்பதே!
அந்நியக் கம்பனிகளின் கனிவளச் சுரண்டலால்,அவர்களுக்காக நடாத்தப்படும் யுத்தத்தால் சுடுகாடாக மாறிப்போனது சூடான்!
இங்கே சூடான்மட்டுமல்ல சமீப ஆவ்கானிஸ்த்தான் முதல் ஈராக்வரை இது தொடர்கதை!
எனவே "அகதி" என்பது சர்வதேச அரசியல் முரண்பாட்டின் அதியுச்ச அரசியற் கோசமாகிறது.இது நமக்குக் கடந்த கால் நூற்றாண்டாகப் புதுப்புது அர்த்தங்களைச் சுட்டிக் கொள்கிறது!
அடுத்த பகுதியிலும் சொல்வேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
28.08.2006

இந்த வாரம் நான் ...
வணக்கம்!
சொல்லத் தக்க விஷயங்கள் பல, வெவ்வேறு தரணங்களில் பேச முடியாது போய்விடுகிறது.அதைப் பேசித்தாம் ஆகவேண்டுமென்றும் எந்தக் கட்டாயமும் இல்லை!
எனினும் சொல்லிவிடத் தூண்டும் நிகழ்வுகள் சதா நம்மைச் சுற்றி நிகழ்ந்தபடியே...
உலகம் என்றுமில்லாதுவாறு சுருங்கிவிட்டது.இந்தப் புவிப்பரப்புமீது ஆதிக்கஞ் செய்யும் பெரும் தொழிற்கழகங்களும்,அவைகளின் விய+கங்களும் மனித வாழ்வை-வாழும் சூழலை,உயிர் வாழும் புற வலையத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளது.ஒரு இனத்தின் இருப்பை-அவைகளின் நியாயப்பாடுகளை,உரிமைகளை,குறிப்பிட்டவொருவினத்தின் உயிர்வாழும் உரிமையை,சமூகத் தகுதியை இவை காலில் போட்டு நசித்தழிக்கின்றன!
மூன்றாமுலகத்திலுள்ள பற்பல நாடுகளில் தேசியவினப் போர்கள் நிறைவுக்கு வரமுடியாது சிக்கலுக்குள் தள்ளிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.உதாரணமா பாலஸ்தீனம்,காஷ்மீர்,நாகலாந்து,ஈழம்... என்று தொடர்ந்து செல்கிறது.வாழத் துடிக்கும் பல தேசிய இனங்கள் எந்தவுரிமையுமின்றிப் போர்களால் மடிந்து போகின்றன.யுத்தங்களால் சூழல் வலுவாகப் பாதிப்படைகிறது.இதனால் பாரிய விஷக் கிரிமிகளின் கொடிய தாக்குதல்வேறு அடிப்படை வசதிகளற்ற மக்களைத் தினமும் அழித்தபடி...
இவையெல்லையற்ற தொடர் நிகழ்வாய் உலகம் சுழன்றபடி.சுழலும் ஒவ்வொரு நொடியும் இப் புவியில் உயிர்வாழப் போராட்டம் நிகழ்ந்தபடி.புவிப்பரப்பு அமைதிப் ப+ங்காவல்ல!-அது போராட்டக்களம்.
இந்தப் போராட்டக் களம்(ஆளும் வர்க்க அடக்கு முறை) விருப்புடையதல்ல!இது மனிதவிரோதமானது.
இந்த மனித விரோதப்போக்கை மனிதர்களின் குவிப்புறுதி மனதைக் கடந்த உற்பத்திப் பொறிமுறையும்,நிதி மூலதனமுமே நடாத்திச் செயற்படுத்தி வருகிறது!
நாம் எமது தலைமுறைகளோடு இந்த உயிர்வாழும் தகுதியை இழந்துவிடும் நிலைமை நெருங்கி வருகிறது.
எங்கும் யுத்தம்!
எதற்காகவென்றே தெரியாதபடி,அமைதிக்குச் சமாதானத்துக்கு,ஜனநாயகத்துக்கு-மனிதவுரிமைக்கு என்றபடி சதா போர் நடாத்தப்படுகிறது.
பல தேசத்து இராணுவங்கள் ஒன்றுகூடிக் கொண்டு ஜ.நா.ப் படைகளென்று பம்மாத்துப்பண்ணி மேற்கத்தைய நாடுகளின் தலைமையில் மூன்றாம் உலகமெனக் கூறப்படும் கனிவளமிக்க நாடுகளை வேட்டையாடி வருகின்றன!
இந்த மையமான மனித வதைச் சூழலில் எந்த மனிதரும் உலகத்தின்-இயற்கையின்,இலக்கியத்தின்-கலையின் அழகைப் பேசமுடியாது!அப்படிப் பேசிக் கொண்டால் அது அவரவர் அறிவீனத்தையல்ல இந்தச் சமுதாயத்தின் அக்கறையற்ற சமூகவெண்ணவோட்டத்தையேதாம் வெளிச்சப்படுத்துகிறது.
மனிதர்களின் வாழ்வை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல,வாழ்நிலையே உணர்வைத் தீர்மானிக்கின்றது.இந்த வாழ் நிலையில் நமது உணர்வு மேற்காணும் நோக்கு நிலைக்குள் சுற்றியே பின்னப்பட்டுள்ளது!
புயலடிக்கும்,கடல் நீர் கொந்தளித்து படகுகள் நீரில் அமிழ்ந்து போகின்றன!பல பத்து மக்கள் இந்தக் கோரத்தில் நாளும் பொழுதும் இறந்துபோகிறார்கள்!இது எங்கே?
சொற்கத்துக்கும் நரகத்துக்கும் எல்லையிடப்பட்டதாக உணரப்படும் இஸ்பெயினுக்கும் மேற்கு ஆபிரிக்காவுக்குமான எல்லைப் புகுமுகத்தில்.இத்தாலிய,இஸ்பெயின் கடற் தீவுகளில் வந்திறங்கும் ஆபிரிக்க மக்களை நாயிலும் கேவலமாக அடித்து விரட்டும் மனித அவலம் இன்னும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.அப்பாவி ஆபிரிக்க மக்களின் வாழ்விடங்களைச் சூறையாடும் மேற்குலகத் தொழிற்கழகங்கள் அவர்களது உயிர்வாழும் சூழலை அழித்துவிட்டு,இங்ஙனம் இந்த மக்களை அகதிகளாக இடம் பெயர்ந்து சாகும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.
இந்த வாரம் நான் இத்தகையவை பற்றியே எழுதவிருக்கிறேன்.
தமிழ் மணத்தில் இந்தவாரம் எனக்கானதென முன்கூட்டித் தெரிந்திருப்பினும்,எதையும் முன்கூட்டி எழுதிவைத்துவிட்டு மணிக்கொரு தடவை பதிவேற்றம் செய்யும் நிலையில் நான் செயற்படவில்லை.பதிவேற்றம்படும் தரணம்வரை எழுதிவிட்டு,அடுத்தவினாடி பதிவேற்றுவதுதாம் எனது நிலை!இதைவிட்டுத் தயார்ப்படுத்தி எதையும் எழுதுவது கிடையாது.(தினமும் எனது உணர்வு வெளிக்குள் சிறைப்படும் சூழலே என்னை எழுதத் தூண்டுபவை.இந்தப் புற நிலைகளின் தன்மையே எனது சிந்தனைகளைத் தூண்டுவதால்,நான் இந்தச் சமூகத்தில் கால் பதித்து இருக்கிறேன்.இதைக் கடந்து வானத்தில் எம்பிக் குதித்து-எனக்கு முன் நிகழ்பவற்றைத் தாண்டி அழிகியல் பேச முடியாது,தத்துவம் பேசிக் கொள்ளவும்,தவப் பயன்களை அறிவிக்கவும் முடியாது.
வாங்க!நமது கால்களில் மிதிபடும் நமது முகங்களைத் திரும்பப் பார்ப்போம்.நம்மீது சுமத்தப்படும் சுமைகளின் பாரத்தை இறக்க முனைவோம்.)
எனவே,தினமும் ஒரு பதிவு என்னிடமிருந்து வருவதற்கில்லை.அப்படி வருவேண்டுமென எவரும் ஒத்தக்காலில் தவமும் செய்யப் போவதுமில்லை.-தெரியும்!என்றபோதும்,இந்தவொரு வாரத்தில் மூன்று பதிவுகளையாவது எழுதிவிடுவேனென எனது மனது உணருகிறது.அப்படி எழுதப்படும் பதிவுகள் எமது வாழ்வின்(மனித வாழ்வின் அகதியக் கோலம்!) சீர்கேட்டுக்கான காரணங்களை அறிவிப்பதில் முனைப்புறும்.
இதை முன்மொழிவதால்,விருப்புடையவர்கள் இவற்றை வாசிப்பதற்கும்,அதற்றவர்கள் ஓடியொதுங்குவதற்குமான சாத்தியப்பாட்டின் கதவைத் திறந்துவிடுகிறேன்.
மழை மேகத்தின் நிலைத்திருப்பில் அப்பப்பத் தலைகாட்டும் கதிரவனின் நிலைதாம் எனது.
அதுவரை...
நட்போடு

Saturday, August 19, 2006
இலங்கை:யுத்தம் எவரால்-ஏன் தொடங்கியது?
இலங்கை:யுத்தம் எவரால்-ஏன் தொடங்கியது?
வெஸ்ற் டொச்ச றுண்ட் புங்5-West Deutsche Rundfunk 5(மேற்கு ஜேர்மன் வானொலி 5)19.08.2006 13-35மணிக்கு- இன்றைக்கான செய்தி விவரணத்தில் இலங்கை யுத்தம் குறித்து விவரணம் செய்தது.இது தொகுத்த செய்தி விவரணமானது ஓரளவு முற்போக்கானதாகும,; தமிழ் பேசும் மக்களின் துயர் நிறைந்த பக்கத்துக்கு ஓரளவு சாதகமான செய்தியைத் தாங்கி வந்தது.இத்தகைய நிலையை இதுவரை இத்தகைய ஊடகங்கள் எடுப்பது மிக அரிதானாதாகும்!எனினும் எமது மக்களின் கண்ணீர்க் கதைகளுக்குக் காரணம் தேடுகிற நாம் தொடர்ந்து புலிகளைக் கூண்டிலேற்றிச் செய்தி தொகுத்து வருகிறோம்.குறிப்பாக இந்திய-இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் இயக்கப்படும் ரீ.பீ.சீ. T.B.C.வானொலி இத்தகைய வகைகளில் தொடர்ந்து செய்தி தொகுப்பதை நாம் அறிவோம்.
ரீ.பீ.சீ.T.B.Cபோன்ற மக்கள் விரோத வானொலியானது இலங்கைச் சிங்கள பௌத்த சியோனிசத்தின்(இங்கு சியோனிசம் பற்றியும் குறித்தாகவேண்டும்.வாசகர் ஒருவர் கடந்த கட்டுரையில் கேள்வியும் எழுப்பியிருந்தார்! இஸ்ரேலியச் சியோனிஸ்ட்டுகள் இரண்டாவது யுத்தத்தின் பின்பாக தமக்கானவொரு தாயகத்தை பாலஸ்தீன நிலப்பரப்புக்குள் அமெரிகத் துணையுடன் நிறுவியது வரலாறு.இது அண்மைக் கிழக்கு நாடுகளுக்குள் தனது எண்ணை அரசியலை ஒழுங்குற நடாத்துவதற்கு அமெரிக்கா இஸ்ரேலென்ற விஷச் செடியை நாட்டியது.இந்தச் செடியானது தனது மேலாதிக்க நலனின் பொருட்டு தனக்குச் சொந்தமல்லாத,வரலாற்றுத் தொடர்ச்சியற்ற நிலப்பரப்புகளை தனது தாயகமெனக் கூறியபடி பாலஸ்தீனத்திடமிருந்து பறித்தபடி,வரலாற்றுப் புரட்டுக் கதைகளை அவிட்டு விட்டபடி, நாடுபிடிக்கும் யுத்தத்தையும்,கொலைகளையும் செய்தபோது, இது அந்தக் கொடிய இஸ்ரேலியச் சியோனிசத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.இத்தகைய அரசியல் ஆர்வத்தை,கொடிய மனிதவிரோதச் செயற்பாட்டை அரசியல் விஞ்ஞானத்தில் பொதுமைப்படுத்திக் கொண்டபோது "சியோனிசம்"மெனும் அரசியற் கருத்தாக்கம் "பாசிசம்"போன்ற பொதுமைப்படுத்தல் போன்று பயன்பாட்டுக்கு எடுத்தாளப்படுகிறது.இலங்கை அரசானாது இஸ்ரேலிய வழிகாட்டலோடுதாம் இனவாதப் போரைச் செய்வதும் கூடவே இக்கருத்துக்கு வலுவை வழங்கிக் கொள்கிறது.இத்தகைய அரசியற் கருத்தை இலங்கை இடது சாரிகள் 70 களில் பயன் படுத்தத் தொடங்கினார்கள்.குறிப்பாக கே.கணேசலிங்கன் எனும் மார்க்சியக் கல்வியாளர் தனது பல கட்டுரைகளிலும் பயன்படுத்தியதைச் சுட்டலாம்.இத்தகைய கருத்துக்களை இலங்கையின் முன்னணி சமூக விஞ்ஞானி குமாரி ஜெயவர்தனாவும் அப்பப்ப பயன் படுத்துவார்கள்.) காலடியில் கிடந்தபடி இந்திய உளவுத்துறையால் உரமிடப்பட்டு நடாத்தப்படும் வானொலியாகும்.இது தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமையைத் தனது எஜமானர்களுக்காக சிதைக்கும் கருத்தியற்றளத்தை கட்டியமைக்க முனையும் பிழைப்புவாத வானொலிதாமென்பதை இந்த யுத்த காலக்கட்டத்தில் நாம் மிக இலகுவாக அறியமுடியும். இத்தகைய தரணத்தில் இந்த ஜேர்மன் வானொலியினதும்,ஜேர்மன் கரிதாஸ் நிறுவனத்தின் கொழும்புக்கான அதிகாரி திருமதி பெக்கரின் கருத்துகள்,அவர்களின் செய்திகள்-இலங்கை யுத்தம் குறித்து என்னவென்பதைப் பார்ப்போம்:
"இலங்கையில் எதற்காக யுத்தம்?இந்த யுத்தமானது அப்பாவி மக்கள் பலரைக் கொன்று தள்ளியுள்ளது.இது தொடங்கப்பட்ட பின் சுமார் 1500.மக்கள்வரைக் கொல்லப்பட்டுள்ளார்கள்.நேற்றைய நிலவரத்தின்படி புலிகளின் பல கடற்கலங்களை இலங்கை இராணுவம் அழித்துள்ளதாக இராணுவம் கூறுகிறது.இதைப் புலிகளின் சார்பு ஊடகமான தமிழ் நெட் மறுத்து"அது சுனாமிக்குப் பின்பு கட்டியமைக்கப் பட்ட மீனவர்களின் நவீனப் படகுகள்"என்று கருத்துச் சொல்கிறது.இவையெல்லாம் சுதந்திரமான செய்திகளில்லை.இன்றைய நிலவரப்படி இலங்கையில் தனித்துவமான சுதந்திர ஊடககங்கள் கிடையாது.
கடந்த காலத்தில்,அதாவது 2004 சுனாமியால் இந்தத் தேசம் பாதிப்படைந்தது.அப்போது,தேசத்துpலுள்ள அனைத்து இனங்களும் பொதுவாகப் பாதிக்கப்பட்டு,பொதுவான துக்கத்தில் மூழ்கியது.எனினும்,மீளவும் யுத்தம்!இது எதற்கானது?இது கேள்வி.யாழ்பாண மாவட்டத்திலும் மற்றும் பல பாகங்களிலுமாகத் தொடரும் யுத்தத்தால் இதுவரை 160.000 அகதிகள் உருவாகியுள்ளார்கள்.இலங்கையில் சமாதானமான தீர்வு எட்டப்படவேண்டும்.யுத்தம் தவிர்கப்பட வேண்டுமென ஐ.நா.பிரதிநிதி திரு.கோபி அனான் தொலைபேசி மூலமாக இலங்கை ஜனாதிபதி திரு.இராஜ பக்சவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.எனினும் யுத்தம் தொடர்கிறது.மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று தடையைச் செய்த பின்பு, இத்தகைய நாடுகளால் இலங்கைப் போரில் பாரிய தாக்கத்தைப் புலிகள் மேல் செய்ய முடியாதுள்ளது.நோர்வே அரசுக்கும் இந்த யுத்தத்தின் வாயிலாக என்ன செய்ய வேண்டுமென்ற ஆலோசனையும் இருப்பதாகத் தெரிய வில்லை.யுத்தும் நடாத்தும் அரசும் புலிகளும் யுத்தம் பாதுகாப்புக்கென்றபடி போரிடுகிறார்கள்.இது விரைவாக நிறுத்தப்படும் நிலை அங்கு இல்லை!"-வெஸ்ற் டொச்ச றுண்ட் புங்க.West Deutsche Rundfunk5-Mittagsecho : 19.07.2006. vom 13.35 Uhr.
அதே வானொலி தொடர்ந்து கொழும்புக்குத் தொடர்பை மேற்கொண்டு,ஜேர்மன் கரிதாஸ் நிறுவனத்தின் கொழும்புக்கான அதிகாரி திருமதி.பெக்கரைப் பேட்டி காண்கிறது:
வானொலி: கொழும்பில் இந்த யுத்தம் குறித்து எந்தவிதமான சூழல் நிலவுகிறது?இந்த யுத்த்தால் யாழ்பாணத்தோடான கொழும்புத் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதே?
திருமதி பெக்கர்: கொழும்பில் இது குறித்து எதையும் பெரிதாக அறிய முடியாது.எனினும் இந்த யுத்தம் பாரிய அவலத்தைக் கொண்டுள்ளது.
வானொலி: இந்த யுத்தத்தில் 160.000.மக்கள் அகதிகளாகியுள்ளார்கள்,அவர்கள் எங்கே-எப்படித் தங்கி வாழ்கிறர்hகள்?
திருமதி.பெக்கர்:இது குறித்துப் பெரிதாக அறி முடியாதுள்ளது.எனினும் பல பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துள்ளார்கள்.கிட்டத்தட்ட 7000.பொதுமக்கள்வரை இந்தியாவுக்கு அகதிகளாகிச் சென்றுள்ளர்கள்.வெளி நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருக்கும் தமிழர்கள் கொழும்பு நோக்கி வரவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.
வானொலி:இந்த யுத்தம் எதற்காக தொடங்கியது?கடந்த நான்கு வரடமாகச் சமாதானமாக இருந்து வந்தவர்கள் திடீரெனப் போருக்குள் மூழ்கியது எப்படி?
திருமதி பெக்கர்: இது இலங்கையின் புதிய அரசியல் தலைமை மாற்றத்துடன் ஆரம்பமாகிறது.கடந்த தேர்தலில் இராஜ பக்ச தலைமையில் ஆட்சி மாறியது.இந்தத் தலைமை சிங்களத் தேசியச் சக்திகளால் வழி நடாத்தப்படுவதால் இலங்கையில் இனங்களுக்கிடையிலான பிரச்சனைக்குச் சமஷ்ட்டி முறையில் அமையும் தீர்வுகளை விரும்புகிறதில்லை.எனவே ஒப்பந்தங்களிலுள்ள திட்டங்களைக் கிடப்பில்போட்ட அல்லது நிராகரித்த இராஸபக்ச ஆட்சியின் செயற்பாட்டால் யுத்தம் புலிகளுக்கும் அரசுக்கும் வெடித்துள்ளது."-கரிதாஸ் நிறுவன கொழும்புக்கான அதிகாரியோடான பேட்டி:19.08.2006 மணி:13.40.

Monday, August 14, 2006
இலங்கை: ஈழமும் இனவழிப்பும்!
இலங்கை: ஈழமும் இனவழிப்பும்!
சொந்த மக்கள்மீது விமானத் தாக்குதலைத் தொடுப்பதற்கான அரசியல் விய+கம் கிளர்ந்தெழும்போது அதைச் சிங்கள அரசு செவ்வனவே செய்து முடித்துப் பல குழந்தைகளைக் கொன்று குவிக்கிறது.அப்பாவிச் சிறார்கள் போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொல்லும் வன்கொடுமை அரசாகச் சிங்கள அரசு உலகத்துக்குத் தன்னை இனம் காட்டுகிறது.இந்த அரசின் இச் செயற்பாட்டை இந்தவுலகத்துப் பம்மாத்து ஐனநாயகம் தற்செயலாக-கவனமற்றதன் விளைவெனக் காரணம் கூறிச் செய்தி சொல்கிறது.இத்தகைய நிலைமைகளில் இந்தப் பொன்னான செய்தி நிறுவனங்கள் தமது எஜமானர்களின் அடிவருடிகளைக் காப்பதில் முன்நிலையில் நிற்பது மட்டுமல்லக் கூடவே தம் அற்புதமான மனிதநேய(?!)பண்பாட்டையுங் காப்பதில் முன்நிலையில் நிற்கிறார்கள்.
இந்த மனிதநேயமானது பெயரளிவில் தமது எஜமானர்களின் வரும்படியைத் தக்கவைக்கும் மூல மந்திரமென்பதாலும், இந்தகைய ஊடகங்கள் முன்மொழிவுகள் பலவற்றைக் கருதியே முந்தியடித்துச் செய்திகளாக்கித் தருகின்றன.இன்று நிகழ்ந்த சிங்களவரசின் படுகொலைத் தாக்குதலானது மழலைகளைக் கொன்று குவித்துள்ளது.இந்த மழலைகளைக் கொல்லும் வான் தாக்குதலானது மிகவும் திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதலாகும்.இதற்குப் பின்னால் ஒரு சூழ்ச்சிமிக்க இராணுவத் தந்திரோபாயம் இருக்கிறது.என்றபோதும் சொந்த மக்கள்மீது விமானத் தாக்குதலில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.இத்தகைய தாக்குதலிலீடுபடும்போதெல்லாம் இந்த அரசு ஒன்றைத் திடமாகத் தெரிவித்துக்கொள்கிறது.அதாவது தமிழர் பகுதியானது தனது சொந்த ஆளுமைக்குள் இல்லாதது என்பதும்,அது இன்னொரு தேசமென்பதையுங் அது தௌ;ளத் தெளிவாக உரைக்கிறது,கூடவே இலங்கைக்குச் சார்ப்பான ஐ.நா. தீர்வை நாடிக் கொள்கிறது!
தனது சொந்த மக்களை இத்தகைய தாக்குதல்களின்வாயிலாக இன்னொரு தேசத்தின் குடிகளாக்கிவிட்டிருக்கும் இலங்கை அரசானது பின் அத்தகைய மக்களின்பால் தனது அரச ஆதிகத்தை நிலைபெறவைக்க முனைதல் வெறும் இராணுவ வாத முனைப்புத்தாம்.இங்கே இரண்டு தேசங்களின் இருப்பென்பது இத்தகைய தாக்குதலின் இயங்கு திசையில் மிகவும் உறுதிப்பட்டுக்கொண்டே செல்கிறது.ஆனால் இது திட்டமிட்ட இலங்கை அரசின் பொறியரசியலின் விய+கமாகும்.
பாலஸ்தீனம் எப்படி உண்மையானதோ அவ்வண்ணமே ஈழமும் உண்மையான தேசமாகிவருகிறது.தற்போதைய இந்த உள்ளகத் தேச வடிவமானதை உறுதிப்படுத்தும் வான்வழித் தாக்குதல்கள் ஒற்றைத் தேசியத் தன்மையை உடைத்து பல்தேசியத்தையும் பல தேசக் கட்டமைப்பையும் இங்கே நிலைபெறச் செய்கிறது.இது எந்தவொரு சட்டவாக்கத்துக்குள்ளும் நிலைபெறாதிருப்பினும் ஒரு தேசத்து மக்களை அவர்களின் இன அடையாளத்தை மையப்படுத்தி, இனச் சுத்திகரிப்புச் செய்யும் தறுவாயில் அந்தத் தேசம் அவர்களை இன்னொரு தேசத்துக்கு அத்திவாரமிடத் தூண்டுகிறார்கள்.இத்தகைய தூண்டலில் ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கும் உயிர் வாழ்வதற்குமாக ஒரு தேசத்துக்குள் பிரிவினையைக் கோருவது தவிர்க்க முடியாததாகிறது.
இந்த நிலைமையில் ஈழம் என்பது மீளவும் தனக்குள் இருக்கும் இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்க முனையும்போது அங்கேயும் அவர்களுக்கானவொரு நியாயம் இன்னொரு தேசத்தின் அபிலாசையாக மாற்றமுறுகிறது.அது முஸ்லிம் தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இரண்டு அரசஜந்திரங்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து கொழும்பில் தமிழர்களுக்கெதிரான முஸ்லீம் இளைஞர்களின் எதிர்ப்பாக வெடித்ததை நாம் கடந்த கிழமை பார்த்தோம்.இதுவொரு முன்னோட்டம் மட்டுமே.
இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக அதன் இனமுரண்பாட்டைக் கணித்திருக்கும் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் உதாசீனப்படுத்தப்படுகிறது.இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தும் இந்த ஆளும் வர்க்கமானது இலங்கையின் இறைமையை எப்போதோ அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி இந்தியாபோன்ற அமெரிக்க அடிமை நாட்டின் அவலமாக விரிகிறது.
தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆளும் வர்கத்தை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையைத் தொடர்கிறது.
இந் நிலையில் தமிழினத்தின் முஸ்லீம் விரோத அடக்குமுறையானது அந்தச் சமூகத்தை தேசிய இனவுருவாக்கத்துக்கும் ஒழுங்கமைந்த ஒருமைப்பாட்டுக்கும்,சிதறிக்கிடக்கும் இஸ்லாமியவுணர்வுகளை முஸ்லீம் தேசியவுணர்வுக்குள் வீழ்த்தி அவர்களை இன்னொரு வலுவான தேசிய இனச் செறிவுக்குள் உந்தித் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறது.முஸ்லீம் மக்களின் பொருளாதார முன்னெடுப்பும் அவர்களின் வாழ்வாதாரங்களும் அவர்களை இலங்கையில் இன்னொரு தேசியவலுவுள்ள-மாநில அபிலாசைமிக்க இனமாக, அதற்கு உரித்துடையவர்களாக்கும்போது, மலையக மக்களும் தமது அதீதமான உழைப்பாலும் வாழும் பகுதிகளாலும் இன்னொரு தேசிய இனமாக இருப்பதும் முஸ்லீம் மக்களுக்குப் பலமானதே.மலையக மக்களின் தயவோடு முஸ்லீம் இனமானது தனது தேசியக் கனவை வெல்லும் தரணங்கள் இனிவரும் காலங்களின் நம் முன் விரியும்.
இந்த அரசியல் வெளிக்குள் இலங்கை அரசானது எவ்வளவுதாம் விமானத் தாக்குதலைச் செய்தாலும் அதன் தரித்திரம்(இனமுரண்பாடு) சிங்கள ஆளும் வர்க்கத்தின் அந்நியச் சார்பால் அகற்றப்பட வாய்ப்பில்லை.இது தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை மட்டுமில்லை மற்றைய இரு தேசிய இனங்களின் முரண்பாட்டையும் ஒன்றுடனொன்று மோதவிட்டுக் குளிர்காயமுனையும் பல தரணங்கள் வந்து தொலையும்.அப்போது இன்னும் பல நூறு மனிதர்கள் உயிரிழந்து நாடு திவாலாகும்.யுத்த நெருக்கடிக்குள் மூழ்கும் இலங்கையில் ஐ.நா.துருப்புகள் இந்திய,சீன,ஐரோப்பிய,ஆபிரிக்க முகங்கள் தாங்கி உலாவப்போகிறது.லெபனானுக்குப் பிறகு இலங்கையே அடுத்த பட்டியலில் இருக்கும்.இதற்கிசைவாகப் படுகொலைகளை இலங்கை ஆளும் வர்க்கங்கள் செய்யத் தூண்டப்படும்.இத்தகைய தூண்டலில் அநாதைகள் இல்லப்படுகொலைகள் எல்லாம் நடக்க அதை உலகம் இன்னும் ஊக்கப்படுத்திக்கொண்டே மனித நேயம்பேசி தனது வலுக்கரத்தை இலங்கை நோக்கி அசைக்கும்.அழிவதென்னவோ அப்பாவிகள்தாம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
14.08.06
"சர்வதேச வீடமைப்பு
டும் டும் டும்...கண்டிய
நடனம்
சகலருக்கும் வீடமைப்பு
டும் டும் டும்...தேசிய
நாடகம்
கட்டு கட்டு...பிரமா
கட்டு
கட்டுவனில்...கட்டுவனில்
பிரம்மா ராட்சதர்
இடி இடி இடி
தனதனதனன தனதனதனன
தனதனதனன தனதனனா
வசந்தன் ஆடி மகிழ்ந்த
ப+மியில்
டாங்கு டாங்கு டகு
டகு டகு டகு டகு
வீடும் சுடலையும்
ஒண்டாய்ப் போச்சு...
மயான காண்டம்...மயான
காண்டம்...
"பதி எழு
அறியா
பழங்குடி"வாழ்க்கை
பரதேசிகளால்
போச்சு...போச்சு...
தர்மம்
பேசி
பேசிப் பேசி
தமிழன் ப+மியில் குண்டு
சர்வேதசப் பயங்கர
வாதம்
சர்வதேச
வீடழிப்பு!
-என்.சண்முகலிங்கன்.(1986)

Friday, August 11, 2006
யுத்தம் வேண்டாம்!
Rebellen: 50 tote bei Armeeangriff
Im Osten Srilanka ist es nach Angaben
der Tamilen - Rebellen der LTTE erneut zu
Artillerie und Luftangriffen der Armee
mit zahlreichen Toten gekommen.
Der LTTE- nahe Internetdienst "Tamilnet "berichtete
50 Zivilisten seien bei Gefechten in Rebellen
gebieten getötet worden. Es habe hunderte Verletzte
gegeben. ein LTTE Sprecher sagte laut Tamilnet:
" Wir können das nur als Kriegserklärung Columbos deuten".
Bei den Gefechten sollen auch Soldaten
ums Leben gekommen sein. Die Rede war
hier vom fünf Toten und 35 Verletzten.
ARD Text: Nachrichten Tagesschau ( Do. 10.08.06 )
(மேற்காணும் செய்தியை ஜேர்மன் அரச தொலைக்காட்சியின் வீடியோ எழுத்துச் செய்தி வெளிப்படுத்தியது.அது தமிழ்நெட்டிலிருந்து இந்தச் செய்தியைத் திரட்டித் தந்திருந்தது.உலக அரசுகளால் தமிழ் நெட்டும் படிக்கப் படுகிறது.
புலிகளின் செய்திகளின்படி கிழக்கிலங்கையில் இலங்கை இராணுவத்தின் வான்வழி மற்றும் ஆட்டிலறித் தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள்.புலிகளுக்குச் சாதகமான தமிழ்நெட் தகவல் தருவதின்படி 50 பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்கள்.நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமும் அடைந்துள்ளார்கள்.புலிகளின் பேச்சாளரின் கருத்து:"இத் தாக்குதலானது கொழும்பினது யுத்தப் பிரகடனமாக நாம் அர்த்தம் கொள்ளலாம்"என்று தமிழ்நெட் கூறுகிறது.இந்தச் சண்டையில் இராணுவமும் கொல்லப் பட்டுள்ளார்கள்.இந்தப் பேச்சானது 5 இராணுவம் இறந்து, 35 இராணுவம் காயமடைந்துள்ளது.
-ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி.)
யுத்தம் வேண்டாம்!
லெபனானில் குண்டு போடப்படுகிறது,ஈராக்கில் குண்டு வெடிக்கிறது,ஈழத்திலும் குண்டுகள் நாலா பக்கமும் கொட்டப்படுகிறது,மானுடம் செத்து மடிகிறது!-மடிகனக்க மழலையைக் காக்க மண்டியிட்டுக் கிடக்கிறது தாய்மை!
குருதியால் உலகம் சிவக்கிறது.
புணங்கள் வீதிகள் தோறும் அழுகி நாறுகிறது!
இந்தப் பொழுதில் எந்தவொரு மனிதராவது உலகம் அழகானதென்றும்,அற்புதமானதென்றும் எழுதமுடியுமா?
இருந்தும் பலரால் எழுதமுடிகிறது!
இன்றைய உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் மானுடவர்க்கத்தைச் சிதைத்தபடி அரசியலொன்றை நடாத்துகிறது.அதன் நோக்கு நிலையானது மனித நலனின்பாற்பட்டதென்று நாம் நம்பும்படி பழையபடி ஐயா ஜோச்சு புஷ்சு பிளேயர் கூட்டணி கருத்துரைக்கிறது."நாம் இஸ்லாமியப் பாசிசப் பயங்கர வாதிகளுக்குள் சிதைந்து போகாது எதிர்த்துப் போராடுகிறோம்,எமது இனத்தை அழிப்பதில் அவர்கள் நோக்கமாக இருக்கிறார்கள்"என்றபடி அனைத்து மக்களுக்கும் கருத்துரைக்கும் உலகத்து ஜனாதிபதிக்கு நாசாகார இஸ்ரேல் செல்லப்பிள்ளை.
பிறகென்ன!
"ஆய் அல்லா!"என்று குண்டடிபட்டுச் சாகும் அப்பாவி லெபனான்-அரபுத் தேச மக்கள் இஸ்லாமியப் பாசிஸ்ட்டுக்கள்.இந்த ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நலன்கள் தமது வருமானத்தை உத்திரவாதப்படுத்திய அரசியலை முன் தள்ளும்போது அப்பாவிகளின் அழிவுகூடப் பயங்கரவாதிகளின் அழிவென்பதாகவே (தமது) மக்கள் முன் காட்டப்படுகிறது.இது தொடர்கதையாகி நெஞ்சை வருத்தியபோது எதையும் எழுதமுடியாதவொரு இக்காட்டான சூழலுக்குள் நாம் மூழ்கிப்போனோம்.
எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அதர்மம் தலைவிரித்தாடுகிறது.அப்பாவி மனிதர்கள் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ வலுவால் அழித்தொழிக்கப்படுகிறார்கள்-அடித்து விரட்டப்படுகிறார்கள்.யாருமே எதுவும் செய்ய முடியாதிருப்பதற்கானவொரு சூழல்தாம் இன்றைய சூழல்.
இதுவரை அரை மில்லியன் கையெழுத்துக்களை"லெபானான் மக்களைக் காப்பதற்கு"ப் பெட்டிசனாகச் சேர்த்திருக்கிறது ஒரு இணையம். என்றபோதும் சியோனிச இஸ்ரேலிய நாசகார இராணுவம் லெபனான் மக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.இந்த அற்பமான அதிகாரத் திமிரானாது இன்னொருவடிவில் இலங்கைச் சிங்களச் சியோனிசத்தினதும், தமிழீழப் போராட்டத்தினதும் வடிவில் இலங்கைத் தமிழ்,முஸ்லீம் மக்களை வேட்டையாடுகிறது.
இலங்கைப் போரானது தமிழ் மக்களை வேட்டையாடி வரும்போது ஈழப்போரானது தமிழ்பகுதிகளில் வாழும் முஸ்லிம் இனத்தை வேரோடு பிடுங்கியெறிய முனைகிறது.இதில் எத்தகைய நியாய வாதத்தையும் எவரும் வைக்கலாம். ஆனால் அழிவது அப்பாவிகள்தாம்.இந்த அப்பாவி மக்கள்தாம் கடந்த வருடத்தில் சுனாமியால் சூறையாடப்பட்டார்கள்.அந்த மக்களின் பிரேதங்களைக்காட்டிக் காசு சேர்த்த அரச-அமைப்புகள் இன்று யுத்த மோகங்கொண்டு வான்வழித்தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் செய்து மக்களைக் கொல்லுகிறார்கள்.
என்னவொரு தேசம்?
இதில்தாம் எத்தனை வகை அரசியல்!
என்ன மசிரப்புடுங்கின தேசம்,தேசியம்,இறமை?
அப்பாவி மக்களை அழித்தபடி தேசம் தன்னைப் பாதுகாக்கிறதாம்!
ஆண்டு கொழுத்த வர்க்கம் அப்பாவி மக்கள்மீது சவாரி செய்யும்போது அழிவது அந்தந்தத் தேசத்தின் குடிகளே- மக்களே.
அவர்களது உயிரைக் குடித்தபடி அரசியல்,சமாதானம் பேசும் பிசாசுகள்தாம் தத்தமது மக்களுக்குச் சுதந்தரம் பறைகிறது.
மூதூரில் தொடங்கிய முஸ்லீம்களின் அவலம் திருகோணமலை மற்றும் பல பகுதிகளையும் எட்டிப்பிடித்து எல்லாவகை மத,இனக் கோதாரி விலங்குகள் மாட்டிய மக்களையும் அழித்தப்படி தேசமெங்கும் குருதியாறாய்ப் பாய்கிறது.
இங்கே,நீ தமிழன்-அவன் சிங்களவன்,இவன் முஸ்லீம் என்று எம்மால் மக்களைக் கூறிட்டுப் பேச முடியவில்லை!அப்பாவிகளை அழிக்கும் அரசியலை எல்லா வகைப் போராட்டங்களும் கையப்படுத்தி வைத்துள்ளன.அவை நேரத்துக்கேற்றபடி தமது காரியத்தைச் செய்கிறபோது செத்துத் தொலைவது ஏழை எளிய மக்கள்!
இவர்களை எங்ஙனம் காப்பது?
எந்த அரசியல் இலக்கு இந்த மக்களைக் காப்பது?-இது கேள்வி அல்ல!
எமக்கு முன் பல பொறுப்புகள் தோன்றிக் கொண்டிருக்கிறது.
எமது வாழ்வு சிதறடிக்கப்பட்டு நாம் அகதியாகி அல்லற்படும் இந்தப் பொழுதில் அப்பாவி மக்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகளற்று அகதிகளாக்கப்படுகிறார்கள்-அழிக்கப்படுகிறார்கள்.
யுத்தத்துக்கெதிரான அணித்திரட்சி,
அதிகாரத்துவத்துக்கெதிரான திரண்ட தார்மீகப் போராட்டங்கள் எழ வேண்டும்.
இத்தகைய மக்கள் குரல்களை மையப் படுத்தியவொரு அரசியல் கோரிக்கையானது"யுத்தத்தை நிறுத்து"என்பதாக விரிந்து தேசமெங்கும் கலகம் வெடித்தாக வேண்டும்.
யுத்தப் பிரியர்களைத் தனிமைப் படுத்தி,யுத்த அகோரத்தைத் தோலுரித்துக் காட்டியாகவேண்டும்.
யுத்தம் மனித இருத்தலையே கேள்விக் குறியாக்கிறது.
யுத்தத்தால் எந்தவொரு இனமும் சுதந்திரமாக இலங்கையில் வாழவில்லை.இத்தகைய நிலையில் யுத்த வியாபாரிகள் மீள யுத்தத்தைத் தொடக்கி, யுத்தமே தீர்வு என்று வம்பளத்தால் அவர்களை அத்தகைய நிலைக்குள் தள்ளித் தனிமைப் படுத்தி மக்கள் நலனைக் காத்தாக வேண்டும்.
இதற்காக மக்களின் அனைத்து வலுவையும் திரட்டியாகவேண்டும்.
மக்கள் அகதியாகி,
நாடோடிகளாய் அல்லற்படும் இன்றைய நேரத்தில்,
அவர்களின் தார்மீக வலுவை யுத்தத்துக்கெதிராகத் திரட்டுவதற்கான பணி
ஒவ்வொரு மக்கள் நல அமைப்புகளிடமும் வரலாற்றுக் கடமையாகக் கிடக்கிறது.
இதை நிராகரித்துவிட்டு எந்தவொரு மானுட விழுமியத்தையும் எவரும் காத்திடமுடியாதென்பதே உண்மையாகும்.
உலகத்தின் எந்தப் பகுதிக்கும் இஃதே அவசியமானது.
அடக்கப்படும் மக்கள் தத்தமது அடையாளங்களோடு அணி திரள்வது அவசியமானது.அந்த அடையாளமானது ஒப்பற்ற மானுட நேசிப்பாக ஒடுக்குமுறையாளர்களைப் பந்தாடுவதற்கான ஒத்த கரத்தின் இணைவாக இருத்தல் வேண்டும்.இதைச் சாதிக்காமால் எந்தவொரு இனமும்,மதமும் வரலாற்றில் நிலைத்திருக்க முடியாது.
ப.வி.ஸ்ரீரங்கன்
11.08.06

Friday, August 04, 2006
லெபானான் மழலைகள்...
லெபானான் மழலைகள்...
நாசகார இஸ்ரேலினது குண்டுகள் வெடித்துச் சிதற
உயிர் உதிர்ந்து குருதி கொட்டும் லெபனான் மக்கள்.
அந்த நாட்டின் பக்கத்து நாடு இஸ்ரேல் அதன் எல்லை நாடான எகிப்த்தின்
அரைத் தீவு சினையில் "சாம் எல் சைக்" என்ற சுற்றுலாக் கடற்கரை மேவும் நகரம்.
சமீபத்திலும் இங்கும் குண்டுகள் வெடித்துருண்டன.
மனிதர்கள் செத்து மடிந்தார்கள்.
எங்கள் நாடு மட்டுமல்ல.இந்த நாடுகளும் ஐரோப்பியர்களுக்கு-அமெரிக்கர்களுக்காகக் குருதி சிந்திச் செத்து மடியும்போது,
நான் "சாம் எல் சைக்கில்"வந்து விரியும் செங்கடலில் நீந்திக் கொண்டிருந்தேன்.இந்தக் கொலைகளுக்கு நடுவில் மாண்டு விழும் சிறுசுகளைப்போன்ற சிறுசுகள் காணுமிடமெல்லாம் கைகளை ஏந்திக்கொண்டார்கள்!
"பசிக்கிறது காசு கொடு" என்றார்கள்.இவர்கள் எகிப்த்தியச் சிறார்கள்.
ஒரு பக்கம் குண்டினது கோரத்துள் பலியாகும் சிறார்கள்,மறுபுறம் அரசுகளின் கூட்டுச் சுரண்டலில் மாண்டுவரும் ஏழைச் சிறார்கள்!
இதற்குள் சமாதானத்தின் பிதா முபராக் எனும் பாரிய தட்டிகள் எகிப்த்திய வீதிகள் தோறும்.
குண்டு
குருதி,
வறுமை
பசி,-சாவு!
"கலோ ஒன் பை"(கலோ ஒன்றாவது வேண்டு)என்றபடி சிறார்கள் மொய்க்க மனது துவண்டுவிடும் சோகம்.
இந்தச் சோகம் மட்டுமல்ல.எகிப்த்தின் இன்றைய வாழ்வும் இனிவரும் வீழ்வும் சொல்வேன்.
வீடற்றவனின் வேதனையும் வீழ்ந்து போன நாகரீகத்தின் தொட்டிலின் சிதைவும் சொல்வேன்.பார்ப்பதைவிடக் கேட்பது பெரிதல்ல.வெள்ளைத் தேசங்களின் சின்னக் காசுகளைக் கண்டவர்களில்லை இந்தச் சிறுசுகள்.
சிரிக்கும் விழிகளுக்குள் சிந்தும் சோகம் சொல்வது எவ்வளவோ!
கேசாவின் பிரமிட்டுகளைவிடச் சினையின் கருங்கல் தொடர் மலைகளைவிட அந்தச் சிறார்களின் சின்னச் சிரிப்பு அழகானது.
முலையை நன்னும் மழலையை மடிக்குள் இட்டபடி சங்கு,முத்து மாலைக் கடை விரிக்கும் அன்னை,எந்தச் சுற்றுலாப் பேர்வழியும் ஏறெடுத்துப் பார்க்காதபோது அவள் சோகத்தோடு பாலைவனத்தில் பாதம் பதித்துக் கொட்டில் மீளும் சோகம்.
இந்தக் கதைகளுக்கு முன் லெபானான் மழலைகள் ஈழத்து மழலைகளின் கதைகளைச் சொல்வதைப்பாருங்கள்!
இஸ்ரேலியக் கொடுங்கரத்தில் இருப்பது ஐரோப்பிய-அமெரிக்க ஆயுதம்தாம்.
அமேரிக்காவின் "பேட்டிரியற் லோஞ்சர்" இஸ்ரேலைப் பாதுகாக்கலாம்.ஆனால் அப்பாவி அரேபிய-ஈழக் குழந்தைகளை எந்த லோஞ்சரும் காக்காது.
ஆயிரக்கணக்கான அப்பாவி லெபனான் மக்களைக் கொன்று குவித்துவிட்டு,இஸ்ரேல் ஜேர்மனியிடம் நடுநிலை இராணுவ (யு.என். நீலத் தொப்பி இராணுவம்) ஒத்துழைப்புக் கோருகிறது.உலகத்துப் பயங்கர வாதிகளின் இருப்புக்கு ஆபத்து வரும்போது, அவர்களின் கரங்கள் பலபத்து ஆயிரம் பயங்கர வாதிகளுடன் பிணைத்திருப்பதை இத்தகைய அழைப்பினூடு கண்டறியலாம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
04.08.2006

Subscribe to:
Posts (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...