அநாமதேயங்களும்,அறிவிலித்தனங்களும்...
வலைப் பதிவர்கள்-வாசகர்கள் மத்தியில் இன்றிடம்பெறும் அநாமதேய மிரட்டல்,எச்சரிக்கை-அதுசார்ந்த கருத்தாடல்,அநாவசியப் பின்னூட்டங்கள்,திரு.டோண்டு அவர்களை விடாது பின்தொடரும் அநாமதேயமென நாறடிக்கும் இந்த இழி நிலைமையைப் பற்றி நாம் வாழாதிருக்கமுடியாது.கருத்துக்களின்பாலான அரைவேக்காட்டுத்தனமானது ஒருவரையொருவர் மறைந்து தாக்கும் மர்ம மனிதர்களாக-முகமூடிபோட்டுத்தாக்கும் அநாமதேயங்கள் சொந்த முகவரியோடு-முகத்தோடு வரும் தோழர் இரயாகரனைத் தாக்குவது மிகமோசமான வரட்டுத்தனமாகும்.இதை வன்மையாகக் கண்டிக்கும் நாம் ஆரோக்கியமான கருத்துக்களோடு முகமூடி கழட்டி வரும்படி அனைவரையும் அழைக்கின்றோம்.
இந்த நோக்குநிலையற்ற அநாமதேயங்கள் தமது வக்கரப்புத்திக்கான துணையாக வலைப்பதிவுகளை நாறடித்து வருவது மிக மிகக் கேவலமானது.அதுவும் மாற்றார் பெயர்களில் பின்னூட்டமிடுவது இன்னும் அநாகரீகச் செயற்பாடாகும்.கணினி அறிவை இப்படிக் கேவலமாக செயற்படுத்தும் இவர்கள்,இந்த அறிவில் பின் தங்கியிருக்கும் என்னைப்போன்றவர்களுக்குப் பயனடையும் வகையில் கட்டுரைகள்-செய்முறைகள் போன்றவற்றையெழுதி வலைபதிந்தாலாவது பிரயோசனப்படும்.இது ஆரோக்கிமான அறிவை-நுட்பத்திலேற்படுத்தும்.
பெடியன்களின் வருகைக்குப் பின் பற்பல மாறாட்டங்கள்,அநாமதேயங்கள்-கருத்துக்கள் வந்தவண்ணமுள்ளன.இதன் வாயிலாகப் பின்னூட்டப் பெட்டிகள் யாவும் பதிவுசெய்த வாசகரையே அனுமதிக்கும் நிலைக்கு மாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.அனைவரும் கருத்தாடும் நிலை வலுவிழந்து போனவொரு சூழலில் எழுத்தினது பெறுமானம் வெறும் சிலருக்காக எழுத்தப்படும் நிலையில் ஆரோக்கியமானவொரு கருத்துநிலை வளர்வு இல்லாது போகின்றது.இதைச் சாத்தியமாக்கும் சமூகப்போக்கானது மென்மேலும் தொடரும் பட்சத்தில் வலைப்பதிவுகளை நாம் துஷ்பிரயோகஞ் செய்வதில் முடியும்.அபரிதமான சாத்தியங்களைத் தந்துகொண்டிருக்கும் இந்த வலைப்பதிவானது கடைந்தெடுத்த அற்ப மனிதர்களால் வலுவற்ற அரட்டையரங்காக மாற்றமுறுவது கவலைக்குரிய விடயமாகும்.இங்கெவரும் பொழுதுபோக்க வருவதில்லை.மாறாகக் கருத்துக்ளோடு முட்டிமோதிக் அறிவையும்-ஆற்றல்களையும் கண்டடையும் நோக்கமும் உண்டு.ஒவ்வொருவருடைய அநுபவமும் புதுமையாக-ஆரோக்கியமான பாடமாக இருக்கும்.அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் ஊடகமாவிருக்கும் இந்த வலைப்பதிவுகள் 'அநாமதேய-சைக்கோ கிரிமினல்களால்' வலுவிழக்கிறது.
எந்த நிலையிலும் இத்தகைய மாறாட்டப் பின்னூட்டங்களை அனுமதிக்கமுடியாது.இதை நிறுத்திக்கொள்ளும்வரை இதற்கெதிரானதும்,கருத்துக்களுக்கு ஆரோக்கியமானதுமான ஒரு வலுவான கருத்தியற்போராட்டத்தைச் செய்வது தேவையாகும்.
இலங்கைப் பிரச்சனைகளை மையப்படுத்திய அமைப்புகளின் ஆர்வலர்களிடும் 'பெடியன்கள்'பாணியிலான பதிவுகள் தமது கருத்துக்களுக்கு ஆரோக்கியமானவொரு தளத்தை உருவாக்குவதைவிட்டு,எல்லோருக்கும் 'எச்சரிக்கை-தளங்களை அழிப்பது',எதையெழுதுவது-எதையெழுத்தக்கூடாது,இன்னமாதிரிச் சொல்வது கொஞ்சமும் நியாயமாகாது. தலைமை முடிவெடுக்கும்,அமைப்பு செயற்படுத்தும் என்பதன் பின்னாலுள்ள அதிகாரமானது திமிர்த்தனமானவொரு அராஜக அரசியலைத் தருவது.
தமிழ்தேசியத்துக்கு எதிராகச் செயற்படுவதைத் 'தாம்' அனுமதியோமெனக் கூறிப் பயம்காட்டிய பெடியன்கள்,தாமே தமிழ்த்தேசியத்தைக் காலில் போட்டு மிதித்ததை அவர்தம் 'ஈழப்போராட்டத் தீர்வு:1-2 இல் நாம் காண்கிறோம்.ஏனிந்தச் செயற்பாடு?சிங்களத்தைத் தாய் மொழியாக ஏற்பதும்,பௌத்தத்தை ஆத்மீக மதமாக ஏற்பதும் தீர்வென விவாதித்தல் தமிழ்தேசியத்திற்கு எந்த வகையிற் ஒத்ததாகவிருக்கிறது?
இவ்வகைக் கருத்தாடலையும்,இதுசார்ந்த செய்கைகளையும் பாசிசச் சிங்களவரசு செய்வதாற்றாம் நாம் போராட வெளிக்கிட்டோம்.அதை மிக இலகுவாகத் தீர்வாக முன்மொழியும் பெடியன்களை எப்படித்தாம் தேசிய நலன்நோக்கர்களாகப் பார்க்க முடியும்?
இவ்வகைக் காரணங்களும்-எச்சரிக்கைகளும் நம்மையின்னும் மூடர்களாக்கும் எல்லை தாண்டிய சிங்களவரசினது செயற்பாடகக் காணத்தூண்டுகிறது.இவர்களால் ஆரோக்கியமானவொரு கருத்தியற் சூழல் இல்லாதொழிக்கப் படுகிறது.
இத்தகைய நிலையில் இவர்களினதும்,ஆள்மாறாட்டப் பேர்வழிகளினதும் அபரிதமான செயற்பாடுகள் மற்றவர்களைத் துன்புற வைத்தல் ஆரோக்கியமற்ற போக்காகும்.நம்மை நோகடித்துத் துவண்டிடக் காரியமாற்றும் அநாமதேயங்கள் தமிழ்பேசும் மக்களின் அறிவுப்பரப்பை அடியோடழித்துச் சிங்களவரசையும்,அவர்களது நோக்கத்தையும் வலுவாக்கி, எமக்கெதிராகக் கருத்தியல் யுத்தஞ் செய்கின்றனர்.
இவர்களை இனம் காண்பதும்,இவர்களோடான கருத்தாடல்களை வலுவாக்குவதற்கு இவர்கள் முகமூடியைக் கழட்டி வெளியில் வந்தால் நாமும் தயாராக இருக்கின்றோம் கருத்தாட.
ப.வி.ஸ்ரீரங்கன்
28.06.05
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
5 comments:
சார் அநாமதேயங்கள் எல்லாரும் இப்போ அனாதையாகிக் கொண்டிருக்கிறார்கள்........ நீங்கள் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்..... என்னால் கொடுக்க முடிந்த ஊக்கம் +ல் ஓரு சொடுக்கு சொடுக்கி விட்டேன்
குப்பைகளை நீங்கள் ஏன் படிக்கபோகிறீர்கள்!!!!! சில வெற்றை பாத்தாலும் பாக்காதவாறு போகவேண்டியது தான்!!!
ஒருவரின் மனதைப் புன்படுத்தும் அளவிற்கு அநாமதேயங்கள் வருவது ஆரோக்கியமானதல்ல.....
பின்னூட்டங்களிட்ட கணேஷ்,நோ நோ,பாலசிறி அனைவருக்கும் என் நன்றி! நீங்கள் சொல்வது யாவும் சரியே!இனிமேல் பார்த்தும்,பார்க்காததுபோல் செல்லவேண்டியதுதாம்.
அன்போடு
ஸ்ரீரங்கன்
சுதன் வணக்கம்!தாங்கள் குறிப்பிடுவது சரியே!எனினும் இந்த வகையறாக்கள் செய்யும் மோடி வித்தைகளைக் கண்கொண்டு பார்க்காததுபோல் விட்டுவிட்டால் பரவாயில்லைப்போல் தோணுகிறது.அவர்களின் நோக்கம் வேறானது.என்றபோதும் தோழர் இரயாகரனை வம்புக்கிழுப்பது நேர்மையற்ற செயல்.அவரிடம் உள்ள கருத்துக்களை எதிர்கத் திரணியற்றவர்கள்,இப்படியும் கேவலப்படுத்த முனைகிறார்கள்.
அன்புடன்
ஸ்ரீரங்கன்
Post a Comment