சந்திரயான்-3 ‘ம் நம் மக்களும் : பலி ஆடுகள் ! , “பல்வேறுபுரிதலைக் கோரி”—சிறு சுட்டிக் காட்டல்கள் !
—ப.வி. ஶ்ரீரங்கன்
பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி .
உருசிய நிலவாய்வுச் செய்மதி இலூனா-25(Luna-25)விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு, இந்தியநிலவு தரையிறங்கும் பணி தீர்க்கமான கட்டத்தில் நுழைந்து , நேற்றுப் புதன் கிழமை 23.08.23 அன்றுபாதுகாப்பாக நிலவுத் தரையில் சந்திரயான்- 3 (Chandrayaan-3 ) இறக்கி விடப்பட்டுள்ளது . இதன் , உயிர்வாழும் காலம் இரு கிழமைகளே !
இந்தியாவின் விண்வெளி நிறுவனம் நிலவின் தென் துருவத்தில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முயற்சி செய்துவெற்றியீட்டியுள்ளது ! - இதன்மூலம் , இந்தியாவானது ஒரு விண்வெளி பயண நாடாகத் தன்னைமாற்றியமைத்து விட்டதென்பது உண்மை .
சந்திரயான்-3 நிலாவுக்கு தரை இறங்குவதற்குமுன் உருசிய இலூனா-25 நிலாவில் தரையிறங்கப்பட்டஅவசரமும் பின்பு, அதன் தகர்வும் நிச்சியக்கப்பட்ட பின்பே இந்த நிகழ்வுகள் இடம் பெறுகின்றன .
இதன் , உள்ளர்த்தம் நமக்குப் பல சந்தேகங்களை விட்டு வைத்துள்ளது . இங்கு நிகழும் விஞ்ஞானவிளையாட்டுக்கு என்னபெயர் ? உலக முதற்றர வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவுக்கான போட்டிக்குஇந்தியாவைத் தயார்ப்படுத்திக் களத்துக்கு அனுப்பும் CIA‘ யின் வான விளையாட்டா இது ? கடந்த காலத்துள் சீனாவையும் , இந்தியாவையும் அடிபட வைத்தவர்கள் அமெரிக்கப் புலனாய்வுத்துறை என்பதை நாம்ஆதாரபூர்வமாக (Covert operation —National Security Act ) நிரூபிக்க முடியும் . அவ்வண்ணம் , இந்தியஅனைத்து தேசிய-மாநிலக் கட்சிகளையும் , திராவிடக் கட்சிகளை ; இயக்கங்களையும் CIA தன்கட்டுப்பாட்டுக்குள் 1965’ ஆம் ஆண்டே கொணர்ந்தது . அதன் பின் இந்தியாவுக்கான புலானாய்வு துறையை(Research and Analysis Wing) 1968’ஆம் ஆண்டு அமெரிக்கப் புலனாய்வுத்துறையே நிர்மாணிக்கஆலோசனை வழங்கியது .
அன்றைய இந்திய-சீன யுத்தம் 1962’இல்( Sino-Indian War ) ஆரம்பிக்கத் தூபமிட்டவர்கள் அமெரிக்கர்கள் . அப்போது , இருகசியமாகச் சீனாவைக்குள் போதைப் பொருள் நுழைத்து யுத்தஞ் (Air America: größte Fluggesellschaft Südostasiens während des Vietnamkriegs, von der CIA kontrolliert und seit 1962 intensiv für Geheimoperationen und zum Schmuggel von Heroin eingesetzt) செய்தது . இக்காலக்கட்டத்துள் 1959 ‘ ஆண்டிலேயே திபேத் வசந்தம்(1959 Tibetan uprising) மூலம்அமெரிக்காவோடிணைந்து இந்தியா மூக்கை நுழைத்தது . CIA முற்று முழுதாக இந்தியாவைச் சீனாவுக்குஎதிராக வளர்த்தெடுத்தது . அதேபோல் திபத்தைச் சீனாவுக்கு எதிராகத் தகவமைத்துப் பயிற்சி வழங்கிது (The CIA trained Tibetans from 1957 to 1972, in the United States, and parachuted them back into Tibet to organise rebellions against the PLA. ) . இது வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்ல . இன்றைய இந்திய வானவியற்திட்டத்தின் பின்னால் அமெரிக்கா உண்டு . எங்ஙனம் நாசா SpaceX என்று மாற்று வடிவத்துள் நுழைகிறதோ , அதே வியூகத்தோடு அஃது , இந்திய ISRO வடிவமாகவும் மாற்றுமுறுகிறது இந்திய முகத்தோடு. இது, சீனாவைஎதிர்கொள்ளும் அமெரிக்க யுக்தி !
சந்திரயான்-3 திட்டம், தெற்கு மாநிலமான ஆந்திராவில் உள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளித் தளத்தில்இருந்து ஜூலை 14 அன்று ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) சந்திரயான்-3 பணி பற்றிய மிக முக்கியமான உண்மைகளைஇங்கே , மேல உங்களுக்குச் சொன்னேன் . இது , முற்றிலும் அமெரிக்க வல்லாதிகத்தின் அடுத்தகட்டசீனாமீதான யுத்தத்தின் முன் தயாரிப்பு என்பதே உண்மையாகும் .
சந்திரயான்-3ன் இலக்கு என்ன?
சந்திரயான்-3 பணியின் குறிக்கோள் நிலவின் தென் துருவமாகும், இது உறைந்த நீரின் ஒரு பகுதி, இதுஇறுதியில் நிரந்தர சந்திர காலனிக்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கலாம்.
வெற்றிகரமாகத் தரையிறங்கிய இந்த விண்கலம் -செய்மதி சந்திரயான்-3 , இரண்டு வாரங்களுக்குசெயல்பாட்டில் இருக்கும் அத்தோடு நிலாவினது மேற்பரப்பின் கனிம கலவையின் ஸ்பெக்ட்ரோமீட்டர்பகுப்பாய்வு உட்பட தொடர்ச்சியான சோதனைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக நியூயோக்கர்ரைம்ஸ் பல்லிளிக்கிறது .
நாசா நிர்வாகி பில் நெல்சனின் கூற்றுப்படி, அமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்தியப் பணி என்ன கொண்டுவரும் என்பதைப் பார்க்க "உற்சாகமாக" உள்ளதாம். எனக்குச் சிரிப்பு வருகிறது நண்பர்களே . செய்பவனும் , செய்து முடிப்பவனும் கிருஷ்ணாவான நாசாதாம் ; அமெரிக்காதாம் ! பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில்தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி .
இங்கே , உருசிய இலூனா-25 ‘இன் அவசரமாகப் பயணித்துச் சென்றதன் மர்மம் துலக்கப்பட்டதா ? அல்லது, துலங்குகிறதா? ; துலங்க வேண்டும் ! பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் கூட்டுத் தொடர் நிகழ்வில் இந்தச்சந்திரயான்-3 ‘ இன் வெற்றி பேசப்பட வேண்டுமென்பது திட்டமிடப்பட்ட வித்தை . அபெரிக்காவானது பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பை இந்தியவெனும் ஆப்பை உருவாக்கிப் பிளப்பதன் அரசியல் இது .
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நிறைய ஆபத்து உள்ள இந்தத் அமெரிக்க-இந்தியக் கூட்டுச்சதி , வளர்ந்துவரும் சீனாவை இந்தியாவுடன் மீளக் கொழுவ வைத்து இந்தியாவின் மூலம் சீனாவைப்பலவீனப்படுத்தி சீனாவை அமெரிக்கா அடித்து வீழ்த்தும் தந்திரத்துக்குட்பட்ட வியூகமாகும் .
வெற்றிகரமாக்க் காட்டப்பட்ட சந்திரயான்-3’இன் இயக்கத்தின் மூலம், அப்போதைய சோவியத் ஒன்றியம்உட்பட , அமெரிக்கா மற்றும் , சீனாவுக்குப் பிறகு, சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாகஇந்தியா மாற்றப்பட்டுள்ளது , அமெரிக்காவால் . இதற்கான சஞ்சோற்றுக் கடன் , சீனாமீது சகலவழிப் பின்கதவு-பனியுத்தம் ஒன்றை இந்தியாவின் மூலம் செய்தலாகும் .
மேலும் , அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தன்னை விண்வெளி சக்தியாக நிலைநிறுத்தியபடிபாரதிய ஜனதா அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலைத்து ஆட்சியில் அமரவும் இத் திட்டத்தின் வழி காய்நகர்த்தப்பட்டுள்ளது !
கூடவே , அமெரிக்க சார் தனியார் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் , செயற்கைக்கோள் சார்ந்தநிறுவனங்களில் முதலீடுகளை ஆதரிக்க பிரதமர் நரேந்திர மோடியையும் கட்டாயப்படுத்துகிறது அமெரிக்கா !
இந்தத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த தசாப்தத்திற்குள் அமெரிக்க-இந்தியத் தனியார் விண்வெளி நிறுவனங்கள்உலக சந்தையில் தங்கள் பங்கை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து சதிசெய்து இந்தியாவைக் கட்டிப் போடுகிறது .
இஸ்ரோ—ISRO "இந்தியாவின் விண்வெளி ஆராட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை" எழுதி வருவதாகவும், "ஒவ்வொரு இந்தியரின் கனவுகள், இலட்சியங்களை" ஊக்குவித்து வருவதாகவும் நிலாப் பயணத்தின் துவக்கநிகழ்வில் மோடிஜீ கூறியதை இங்கு, ஞாபகப்படுத்துபடி உங்களைக் கோரி அமர்கிறேன் தோழர்களே ! ; புரிந்தவன் பிஷ்தா !!
—ப. வி. ஶ்ரீரங்கன் 24.08.23