அதிகாரம் என்பது வியூகமாகுமா?
உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ,வர்க்கப்போரும், இன்று மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் இந்த வேளையில் அதிகாரத்தையும் -ஆதிக்கத்தையும் தக்க வைத்தலே மேலானவொன்றாக அமெரிக்க -ஐரோப்பியப் பாசிச அரசுகளுக்கு மாறியுள்ளது.அதன் நோக்கமானது ஒரு தேசத்தை அடியோடு சாய்ப்பதற்கு -ஆட்சிமாற்றத்தை செய்வதற்கு போரிட்டும் ;மக்களை அச்சப்படுத்திக் கொன்று குவித்தும்; இடம் பெயர வைத்தும் நிலை நாட்ட முடியுடிமென்பதற்கு சிரியா நல்லதொரு உதாரணமாகப் போகின்றது.இதன் மூலம் ஒரு இனத்தின் தேசிய -வரலாற்று அடையாளங்களைக் கூட அழித்து ஆதிக்கத்தை நிலைப்படுத்தி விடுவதில் ஈராக் மீதான அழிவு யுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடாத்தியபடி சிரியாவில் அதன் உச்ச இலக்கை எட்ட முனைகிறது.இதற்காக இத்தேசத்தைப் பயங்கரவாதிகளது கூடராமாக்கி விட்டுள்ளது.இந்தப் பயங்கரவாதிகளேதாம் வொசிங்டனின் வெள்ளை மாளிகைக்குள் நவீனத் தலைவர்களாகவும் அரபு நாடுகளில் ISIS பயங்கரவாதிகளாகவும் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.
ஆனால் ,பரந்துபட்ட மக்களுக்கு இந்த அதிகாரத்தைத் தோற்கடித்தல் என்பது முன்நிபந்தனைச் சிந்தனை,அரசியல் நடைமுறைப் பயிற்சியில். அதிகாரத்தைக் குறித்துச் சர்வதேச அளவில் பேசும்போது,அது நீண்டவொரு கருத்தாளுகையைக்கொண்டவொரு தளத்துக்கு நம்மை நகர்த்திச் செல்வதாகும்.இன்று,நாம் மூன்றாவது உலக மகா யுத்தத்தின் அழிவைச் சந்திக்க இருக்கிறோம்.
அமெரிக்க-ஐரோப்பிய அதிகாரத்தின் மையவலு அழிப்பு யுத்தத்தின் வெற்றிவரை அவர்களை அழைத்துச் செல்வதை ஈராக்-அவ்கான்-லிபிய மற்றும் சிரியா -உக்கிரைன் யுத்தங்கள்வரை உணர்ந்துகொண்டோம்.இந்த அதிகாரமானது முழுக்கமுழுக்கப் பொருளாதரத்தைச் சுற்றிய இலாபவேட்கை-தொடர் மூலவளக் கொள்ளையென அதன் அத்துமீறிய தளங்களிலான ஆதிக்கமானது வளர்ந்த தொழில்நுட்பப் போரர் தளவாடங்களின் வருகையோடு உலக மக்களைக் கணிசமாகக் கொன்று நிலைப்படுத்தி ,விரிவாக்கப்படுகிற இன்றைய தருணத்தில்தாம் உலகத்துள் 60 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உலகெங்கும் அலைகிறோம்.
இத்தகக் கேடுகெட்ட பாசிச ஆதிக்கவாதிகளது தேவைகள் என்னத்தைத்தாம் நடக்கு விட்டு வைக்கும்?
,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert" [ எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும் ] -அமெரிக்காவில் இருந்து ,1918 இல் பிரஞ்சுப் பிரதமர் Clemenceau ஒரு உரையாற்றலில் கூறிய மிகப் பிரபல்யமான சொற்றொடர், இஃது.
எண்ணை கிடைக்காத பட்சத்தில் இராணுவ போர் ஜந்திரம் நின்றநிலையில் நிற்கவேண்டியதுதாம், வியாட்நாமில் அமரிக்கத் தோல்விக்கும் இந்த எரிபொருள் சக்தியும் ஒரு காரணமென்பதை நவீன போரியல் வல்லுனர்கள் இன்றும் கூறுகிறார்கள்.முதலாம்,இரண்டாம் உலகப்போர்கள் எண்ணை வளத்தை பெருமளவில் கணக்கிலெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.எண்ணை விலை,எண்ணை வள கட்டுப்பாடு யாவும் உலகை வெற்றிகொள்ளல் மூலம் தம்மால் கையகப்படுத்தமுடியுமென ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கருதியது,முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்பு அமெரிக்கா எண்ணை வளத்திற்காக [ "Oil is much too important a commodity to be left in the hands of the Arabs." --Henry Kissinger ] பேய்போல் அலைந்து துரகிழக்கு - அண்மைக் கிழக்கு நாடுகளை தினமும் வேட்டையாடி வந்தது;இன்றும் ஈராக் , அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று நேட்டோ பயங்கரவாதக் கூட்டணியூடாகப் பாசிசப் போரை அப்பாவி மக்கள்மீது அமெரிக்க -ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் கட்டவிழ்த்து விடுகிறது.
இஃது சமகால -நிகழ்கால வரலாற்றைக் கடந்து , நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினத்தும் வாழ்வாக நம் முன் அச்சத்தைத் தருகிறது..
11 செப்ரெம்பருக்குப் பின்னோ பற்பல அரசியற் கருத்தியற் வியூகங்கள் உலகரங்குக்கு வந்தன..அமெரிக்க| ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் இதன் படைப்பாளிகள்.இவர்கள் ஈராக், அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று பல் தேசங்களை அழித்தபடி இருசியாவோடு அணுயுத்தம் நடாத்தக் கருத்துக் கட்டுவதில் தமது அனைத்து வளங்களையுமின்று பயன்படுத்துகின்றனர். இதுவே தற்போதைய நிகழ்ச்சி நிரலாகவுங் கூட இருக்கின்றது.
'இது பயங்கரவாதத்திற்கு எதிரானபோர்[ The War on Terror and "Global War on Terrorism" ]!, இஸ்லாமுக்கெதிரானதோ அன்றி ஒரு இனத்திற்கெதிரானதோ அல்ல.' ஒரு கையில் உயிர் கொல்லி ஆயுதம் மறு கையில் உணவுப்பொட்டலமும் கூடவே பைபிள் சார்ந்த அரசியற் தத்துவ விளக்கமும்,மேல்நிலை வல்லரசு அமெரிக்காவிடம் அதன் நேட்டோக் கூட்டணிப் பயங்கரவாத அரசுகளிடம் இருக்க, நமது அப்பாவிகளோ முளைத்து மூன்றிலை விடுவதற்குள் அமெரிக்காவுக்கான அடியாளாகப் போவதில் நாட்டமாகின்றனர்.இந்த அமெரிக்காவனது உலகத்துள் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தித்தித் தனது காட்டுமிராண்டித் தனத்தைத் தொடர்ந்து நியாயப் படுத்திவிடுகிறது.இதற்காக எவரையும் - எந்தக் குஞ்சு குருமானையும் அது தனக்கேற்பத் தயார் செய்து ஒவ்வொரு துறைகளுக்குள் தொடாந்து நுழைத்து விடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள 13 வயதுத் தமிழ்ச் சிறுவனின் பெயரில் வந்த இந்த நாவலும் ( Flug-747) தற்போது சாட்சி!
" Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten."" Flug-747 By Sagithjan Surendra
" Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! " - Flug-747
" Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal." - Flug-747
உலக ஆளும் வர்க்கம் தனது வர்க்க தோழமையுடன் கூட்டாகப்போரிடும் இன்றைய சூழலில்,எப்படியெல்லாம் கருத்துக்களை முன்தயார்படுத்தி அவர்தம் ஊதுகுழல்கள் மூலம் நமக்குள் கொட்டுகின்றார்கள்!
இன்றைக்கு அமெரிக்க அரசை முதலாவது "அதிவல்லரசு" என்றால் இரண்டாவது அதிவல்லரசு இருசியவோ அன்றிச் சீனாவோ அல்ல என்கின்றார் சுவிச்சர்லாந்து வரலாற்றுப் பேராசிரியர் டானியல் கன்செர் ( Prof.Dr. Daniele Ganser).மாறாகப் பொது அபிப்பிராயத்தைக் கட்டுப்படுத்தி உருவாக்குபவர்களே இராண்டாவது பெரிய வல்லாதிக்கம் என்பது அவரது கருத்து.இது சரியானது.மார்க்சு கருத்தியற் போராட்டங் குறித்து மிக விரிவாகவும் அதன் பலத்தையும் நமக்குச் சரியாகவே சொல்லிச் சென்றதால் இது ஆச்சரியமில்லை!
இந்த அளவுகோலுக்குட்பட்டு அமெரிக்க - ஐரோப்பியர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் இந்த அழகிய "மனிதாபிமானம் "உலக அரங்குக்குள் வரும்.இதுவே அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்ன? இவையெல்லாம் யுத்த அளவுகோலாம்! இந்நாடுகளில் மரணிக்கும் மானுடர்களுக்கு மௌன அஞ்சலியை இந்த ஐரோப்பிய நாடுகள்,அவர் -தம்தொழிற்சாலைகள்-கல்விக் கூடங்கள்-மதாலயங்கள்-பாராளுமன்றங்கள் செய்யவே செய்யா.ஆனால் Charlie Hebdo மீது தாக்குதல் தொடக்கப்பட்டால் உடனே உலகைக் கூட்டி "Je Suis Charle" எனக் கத்தும் உலகப் பயங்கரவாத நேட்டோ அணியானதுதாம் ஈராக்கில் ஐந்து இலட்சம் குழந்தைகளைப் பொருளாதாரத் தடையாற் கொன்றழித்தவர்கள்; இப்போது ஈரானிலிருந்து இருசியாவுக்குத் தமது பொருளாதாரத் தடைகள் மூலம் மனிதாபிமானத்தை வகுப்பெடுக்கின்றனர்.
ஆனால்' 11 செப்ரெம்பர் ' என்பது கலாச்சாரமட்டத்தில் கருத்துக்களாக்கப்பட்டுள்ளது,அகராதியில் சொற் களஞ்சியமாக்கப்பட்டுள்ளது.இந்த' பதினொன்று' மனித குலத்துக்கு விரோதமான பயங்கரவாதிகளின் தாக்குதல்,சமாதானமாக வாழும் சுதந்திரத் திறந்த சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தாக்குதல் எனும் விளக்கமும் வேறு.இதைச் செவ்வனவே மேலே சொன்ன நாவல் அருமையாக நகர்த்துகிறது!
அமெரிக்காவில் நெறிகட்டினால் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவில்கூட நோவு வந்துவிடுகிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களது குழந்தைகளையே விட்டுவைக்காது அவர்களையும் ;அவர்களது திறமைகளையும் கணக்கிலெடுத்து அமெரிக்கப் புலானாய்வுத் துறை தன் தேவைக் கேற்ப அவர்களையும் தயார்ப்படுத்துகிறது.இந்நிலையில் , உயிரிழப்புகள் எங்கு நேரிடினும் நாம் நொந்துகொள்வோம்.அதுவே மானுடப் பண்பு.'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எம் மூதோர் கூறியதும் இஃதே!
ஆனால் மானுடநேயம் மட்டுமல்ல இந்தப்பூமிப்பந்தின்மீதுள்ளனைத்து விடயங்களுமே வர்க்கம் சார்ந்தது.இதனால் ஆளும்வர்க்கம் தனது வலியை எமதாக்க முனைகிறது,இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. தனது சுமையை எமக்குள் அமுக்கி மூலதன நெருக்கடியை உலக மொத்தமக்களுக்குமான நெருக்கடியாக்கி வெற்றியும் கண்டுவிட்டன இந்த உலக ஆளும் வர்க்கப்பேய்கள்.இதனாற்றாம் கீழ்வரும் நாவலின் கருத்தை CIA இன் குரல் என்கிறோம்.
(" Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten."" Flug-747 By Sagithjan Surendra)
இது எப்படிச்சாத்தியமாச்சு? ,இந்த 'உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்' எனும் அரசியற் கருத்தாக்க உளவியலுக்கும் இந்தத் தமிழ்ச் சிறுவனுக்கும் என்ன தொடர்பு?, இது சார்ந்து மேற்கொள்ளப்படும் செயற்தந்திர வியூகத்திற்கும் போருக்கும் என்ன தொடர்பு?சிரியாவில் தொடர்ந்து நடாத்தப்படும் பயங்கரவாதக் கூட்டணிகளது தாக்குதலுக்கும் உக்கிரைனில் நெறிகட்டும் நேட்டோவின் இராணுவ முஸ்த்தீப்புக்கும் (Military exercise/War game )என்ன தொடர்பு???
'யுத்தத்தினது நோக்கை அரசியற் கோரிக்கைக்குள்ளும் அரசியற்கோரிக்கையை பொருளியல் நலன்களுக்குள்ளும் தேடணும்'
இன்று நடைபெற்று வரும் உலகுதழுவிய அதி நவீன யுத்தமானது வெறும் பொருளீட்டு நோக்குடையதன்று,மாறாக பற்பல நோக்கத்தை மையமாகக்கொண்டு வியூகங்கொண்டுள்ளது. இதை மனதிலிருத்தி க்கொண்டால் மட்டுமே இந்த ஜனநாய முகமூடியின் பின் எந்த முகமுள்ளதென அறியமுடியும். அப்போதுதாம் நமது சிறார்களைக்கூட இந்தப் பாசிசப் பயங்கரவாத அமெரிக்காவிடமிருந்து காக்க முடியும்.
அவ்கானில்-ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் பலியாக்கப்பட்டது எதற்காக?; இதுவரை சிரியாவில் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்படுவது எதற்காக.??உலகத்துள் 60 மில்லியன்கள் மக்கள் அகதிகளாப்பட்டு அலைவதும், 13 மில்லியன்கள் குழந்தைகள் ஆரம்பப் பாடசலைக்குச் செல்ல முடியாது துரத்தப்பட்டதும் எதற்காக???
எது பயங்கரவாதம்? அமெரிக்க -ஐரோப்பிய பொருளாதார -ஆதிக்க வன்முறைக்குப் பலியாகப்பட்ட இத்தகைய அரச பயங்கரவாதத்தை அமுக்கிவிடுவதற்கு அல்லது திசைதிருப்பிவிடுவதற்கு ஒரு சதாம்--பின்லாடன் மற்றும் The Islamic State வகையறாக்கள் தேவைப்படுகின்றது.
வரலாறுதோறும் வினை விதைத்தவர்கள் கீரோசிமாவையும்--நாகசாகியையும் சமீபகால வியாட்நாம் மற்றும் ஈராக்,யுக்கோஸ்லாவியா,அவ்கானிஸ்தான் என்று பல் இன-நாடுகளை கொடும் அணுயுத்தம் செய்து இன-கலாச்சாரஅழிவுக்குள் தள்ளிய ஐரோப்பிய அமெரிக்கர்கள் இப்போது இவ் கொடூரமான, மானுடவிரோத யுத்தத்தை, பயங்கரவாதத்தை-ஆளும்வர்க்க பாசிசத்தை'யுத்த அளவுகோல்' என்று விவாதிக்கிறார்கள். இது பயங்கரவாதமில்லையாம்! மாறாக யுத்தநெறியாம்,(ஜேர்மனிய-அமெரிக்கப்பத்திரகையாளர்கள்) அதாவது ஐரோப்பாவும்,அமெரிக்காவும் செய்வது யுத்த அளவுகோல்|சமன்:யுத்தநெறி. அதையே மற்றய இனத்தவர்கள் செய்தால் பயங்கரவாதம்.
" Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! " - Flug-747
(...)
ஆளும்வர்க்கங்கள் தமது முரண்பாட்டை-ஆட்சிக்கு வரும் முரண்பாட்டை,நெருக்கடியை தீர்க்க எப்பவும் யுத்தத்தை நடாத்துவார்கள். உலக மேலாதிக்கத்திற்கேற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் பயன்பட அனைத்து தேசிய விடுதலை மற்றும் பொருளாதாரவாத எதிர்ப்புப் போராட்டங்களும் பயங்கரவாதப்பட்டியலில் போய் சேர இனவொடுக்குமுறை நிலவும் நாடுகளெல்லாம் ஜனநாயக நாடுகளாயின.
வரலாறு நெடுக மூலதனமானது தன் கரங்களை குருதியில் நனைத்தபடியே...இன்று சிரியாவில் ; உக்கிரைனில் புதிதாய் குருதியாற்றைத் தோண்டவில்லை. என்றபோதும்,ஆளும்வர்க்கச் செயற்பாடுகள் கடந்த காலங்கள்போன்று இன்றில்லை.இது மிகவும் கவனத்தக்குரியது.
மூலதனத்தைப் பெருக்கிட,சந்தைவாய்பை காத்திட, உலகப்பொதுச்சொத்தான மூலவளங்களைத் தாமே தொடர்ந்து கொள்ளையிட யுத்தம் செய்யும் இன்றைய சூழலுக்கு வேறு வகையான தந்திரங்களைக் கட்டவிழ்துவிடுகிறார்கள்.
அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக்கள் நடாத்தும் இன்றைய அதிநவீன தாழ் அணுயுத்தங்களுக்கு 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்ற அரசியற்-சமூக உளவியற் கருத்தாக்கம் ( " Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal." - Flug-747
) வலுவாக்கப்பட்டுள்ளது.
இது சாரம்ஸமான 'ஜனநாயகம்' என்ற கோட்பாட்டு உத்தியை மறைமுகமாகப் பிரதிநித்துவம் செய்கிறது ,முதலாளித்துவ உற்பத்திப்பொறிமுறை இதனாற்கட்டிக்காக்கப்படுகிற முகாந்திரம் வலுவாக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரையான 'ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகள்'எனும் கருத்தாக்கம் இப்போது 'பயங்கர வாதத்திற்கு ஆதரவான நாடுகள்' என்பதில் போய்முடிந்துள்ளது.
இதன்படி பார்ப்போமானால் இன்று நடைபெறும் அனைத்து யுத்தங்களும் வர்க்க ஒடுக்குமறையாக விரிந்து உலகு தழுவி உழைப்போரை ஒடுக்குதலே!
ஆக , நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்:
இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய மற்றும் லிபியா -சிரியா - உன்கிரைன் ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா, ஈரான்-வடகொரியா யுத்தங்களும் மற்றும் இருசிய -சீனா மீதான மீள்-பனிப் போரும் இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184 பாரிய-சிறிய அளவிலான யுத்தங்களும் பழைய முதலாம்,இரண்டாம் யுத்த வடிவத்தை தகர்த்து விட்டு புதிய மகாயுத்த வடிவத்தை எடுத்துள்ளது! ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதாம்.தோற்றத்தில் இஃது உலக மகாயுத்தமாக இருக்காது,ஆனால் 1945 க்குப் பிறகு நடைபெறும் அனைத்து யுத்தங்களும் இந்த மூன்றாவது உலக மகாயுத்தத்தின் புதிய வடிவத்தைக்கொண்டே நடைபெறுகிறது. இதன் சாரம் மூலதனப் பாச்சலுக்கெதிரான அனைத்து நாடுகளையும்-இயக்கங்களையும் கொய்தெறிவதே.
இந்த யுத்தங்களின் விருத்தி 'பயங்கர வாதத்திற்கெதிரான யுத்தக் கூட்டு' என்ற முக மூடியைத் தாங்கி உலக மகாயுத்தமாக நடைபெறுகிறது, இதுதாம் உண்மை!
ஏகாதிபத்திய ,நவகாலனித்துவ பல் தேசியக் கம்பனிகளுக்கெதிரான செயற்பாடுகள்,போர்கள்,தேசியயெழிச்சிகள்,இடைவிடாத தன்னெழிச்சியான எதிர்ப்புகள், உலக தழுவிய தன்னார்வக் குழுக்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள், இவற்றுக்கும் பல் தேசியக்கம்பனிகளுக்கும் நேர்|எதிராகவும் பகை முரண்கள் நிறைந்திருப்பினும் இவ் எதிர்ப்பியக்கங்களுக்குள் ஊடுருவிய பல்தேசியக் கம்பனிகளின் புத்திஜீவிகள்-மாபியாக் குண்டர்படைகள் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கங்களை 'பயங்கரவாதிகளின் கூட்டு'வடிவமாச் சித்தரிப்பதில் வெற்றியீட்டியு;ள்ளன.
இது 11 செப்டம்பருக்கு பின் வெள்ளையின கவ்போய் மூலதனவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட விச வடிவிலான அராஜகக் கூட்டுணர்வு.
ப.வி.ஸ்ரீரங்கன்
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment