Sunday, April 21, 2013

சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம்

சுகனார் படிகம்.

கருவரத்தேவர் எண்ட நம்மட சுகனார் ரொம்பத்தான் காவடியொண்டை அன்று தூக்கினார்-1990 வாக்கில்!

//Shoba Sakthi :'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே' - சுகன் //


தில்லப் பாருங்கோ, அவர் சும்மாவொரு வெறும் காவடியைத் தூக்கியிருந்தால் பறுவாயில்லை.இது,முழுமொத்தக் குறைபாட்டையும் இரண்டாயிரம் வருடங்களாக வந்த அனைத்து வினைகளையும் மறுத்து "வேளாளன் சாதி வெறியன்" என்றாக்கி வைத்து, அதன் தேற்றங்களுக்குப் பிரியாவிடைகொடுத்த சுகனது வரண்ட பார்வைக்கு அல்லது சமூகத்தைப் புரியும் திரணியற்ற கிறுக்குத் தனத்துக்கு இன்று, மகுடம் வைத்து அதையும் சோபாசக்தி ,தனக்கேற்ப வளைத்துப்போடுவது சுத்த சாக்கடைத் தனம்.

இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடாத்துவது இவர்களுக்கு அவசியமானால் அதை நடாத்துவதை விட்டுச் சாதிய அரசியலாக இதையொரு முரண்பாடாக்குவதன் தெரிவில் மீளவும், அனைவரையும் பிளந்து குருதி குடிக்கும் அந்நிய வியூகத்துள் இயங்கும் அரசியலுக்குச் சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம் என்று சொல்லேன்.ஏனெனில், அதன் பிதாமகனாக அங்கீகரிக் கப்பட்டவர்கள் நிறையவே நமக்குள் அணிதிரண்டுவிட்டனர். இதன் சூத்திரதாரிகள் பல முகங்களோடு நமக்குள் இலக்கியம் படைக்கின்றனர்.




"புத்தஞ் சரணஞ் கச்சாமே" என்றபடி கருவரத்தேவர் போடும் அரசியல் வடக்கில் டக்ளசின் அராஜகத்தை ஜனநாயகமாகக் கண்டதன் தொடரல்ல.சாதிப் பிளவுகளது தெரிவில் அவை சார்ந்தியங்கும் இன்றைய தமிழகப் பாணி அரசியலைக் கயமைமிகு டக்ளஸ் தனது சுய இலாபத்துக்காக நகர்த்துகிறார். அவரது இருப்புக்காகக் கூர்மைப்படுத்தப்படும் சாதியஞ் சார்ந்த அரசியலானது தொடர்ந்து வேளாள ஒடுக்குமுறை குறித்து வகுப்பெடுக்கும்போது இலங்கைப் பாசிச அரசால் நிர்மூலமாக்கப்படும் பரந்தபட்ட மக்களது பிரதான முரண்பாட்டை மறைத்தொதுக்கும் இந்தக் கயவர்கள், இலங்கையின் அனைத்துச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராகவே நிலவும் ஒடுக்கு முறையாளர்களுக்குப் பின் நிற்கிறார்கள்.இதன் உச்சம் இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை நகர்த்துவதென்பதில் இவர்கள் கட்டும் கருத்துக்கள் அதுசார்ந்து முன்வைக்கும் நியாயங்கள் யாவும் சாதிய முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அதைக் கருத்தியற் தளத்தில் மீளமீளத் தகவமைத்துக்கொண்டு அதன் வேகத்துள் பிளவுவாத அரசியலை முன்னுக்குக்கொணர்வது.

இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களது பாரம் பரிய ஐதீகச் சுயாதீனப் பூமியானது சமீபத்தில் பிரதேச ரீதியாகக் கிழக்குத் தனி மாணமாகப்பட்டுத்  தமிழ்பேசும் மக்களைப் பிளந்த இலங்கை-இந்திய ஆளும் வர்க்கமானது வடமாகாணத்துள்இத்தகைய பிளவு வாத அரசியலைப் பயன்படுத்தச்சந்தர்ப்பமற்றதன் தொடரில் சாதிய முரண்பாட்டைக் கையிலெடுத்துள்ளது. அதன் வழியில் தலித்துவக் குழுக்கள் மற்றும் கிறிஸ்த்துவ மேட்டுக்குடிகளையும்(நிர்மலா இராஜசிங்கம்,நோயல் நடேசன்,அகிலன் கதிர்காமர்,இரத்தின ஜீவன்கூல்,இராஜன் கூல்...) இணைத்து ப் புலிகளது பணக்காரப் பினாமிகளையும்கூடவே,கே.பி. கருணா-பிள்ளையான்,டக்ளசு போன்ற இத்தகைய குறுக்குவழி நபர்கள்மூலம் பெரும் பான்மையான மக்களைப்பிளந்து தமிழ்பேசும் மக்களது நியாயமான அரசியல்வாழ்வையும்,அவர்களது உரிமையையும் இலாத்தாக்குவது அவசியமாகிறது.





இதன் தெளிபொருள் விளக்கவுரை:

வடமாகாணத்துள் வேளாளரைத் தனிமைப்படுத்தும்போது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள் என்றான தெரிவில் வடமாகாண மக்கள் தொகையில் சரி அரைவாசி மக்களைப் பிளந்து அவர்களைச் சிங்கள அரசுக்குப் பின்னே கைகோர்க்க வைப்பது இலங்கை-இந்திய அரசியலுக்கு மட்டும் அவசியமில்லை. மாறாக,இன்றைய அராஜகக் கட்சிகள்-இயக்கங்கள் அவர்களது புதிய குட்டி முதலாளிய முன்னெடுப்புக்கும்-இருப்புக்கும் அவசியமாகவிருக்கிறது.தமிழ் தேசியத்தால் தமது இருப்பு அழிந்துபோய்விடுமென அஞ்சும் இத்தகைய புதிய குட்டி முதலாளிய வர்க்கம் இதுசார்ந்து, நிதியீடுகளையும்-கலை இலக்கிய முன்னெடுப்பையும் சார்ந்து புதிய கருத்தியற்றகவமைப்பத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.இதற்குக் கடந்த கால வேளாளரது சாதியத் திமிர் உடந்தையாகியும் விடுகிறது.அந்த வடூ இனவாத ஒடுக்குமுறையாளரோடிணைந்து பரந்தபட்ட தமிழ்த் தேசியவினத்துக்குத் தூக்குக் கயிறாச்சு!

இந்தத் தெரிவில், புலம் பெயர் தலித்துவ அமைப்புகளும்,தனிநபர்களும்இலங்கையில் இந்திய அரசியல் நோக்கங்களது தெரிவுக்கான திசையில் பயணிப்பதும், அது சார்ந்த தமக்கான சாதியச் சங்கங்களை நிறுவிக்கொண்டு அதன்வழியிலான அரசியல் பலத்தைப் பெறுவதும் ஒரு கட்ட இலக்காகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய தமிழகத்தின் திருமாவளவன் பாணி அரசியலாகும்.

புலியழிந்துகொண்டிருந்த தருணத்தில் தமிழ்நாட்டில் சுகனார் இலங்கைத் தேசிய கீதமிசைக்கத் துவங்கினார்.இங்குதாம் புலம்பெயர் தலித்துவக் குழுக்களுக்கும்,தனிநபர்களுக்கும் பல வடிவிலான நோக்கங்கள் இந்திய உளவுப்படை ரோவால் இயக்கப்படும்தமிழகத் தலித்துவப் பிழைப்புவாதிகளால் பயற்றுவிக்கப்படுகிறது.

இப்போது மனிதத்துக்காகச் சுகன் கண்ணீர் வடிக்கிறார்.அகிம்சை பேசுகிறார்.ஆயுதம்-யுத்தம் அவருக்கு அலேர்ச்சி!ஆனால்,அவரது மானுட விரோத வார்த்தைகள்வழி, கண்ணி வைத்துப் பேசும் கருத்துக்கள் மிகப் பெரும் அராஜகத்தைத் தூண்டிச் சாதியக் கலவரங்களுக்குத் தூண்டுபவை.

இந்தச் சுகன் என்ற கருவரத்தேவர் கோமாளிக்கும் அவரது அரசியல்-இலக்கிய நடிப்பும் கண்டு  கலாமோகன் பலமுறை கொதித்தார்-அவரும் ஒரு தலித்தாய் இருந்தும்!

இந்தமாதிரியெல்லாம் சுகனார் ரொம்ப சென்டிமென்ரா நடிப்பார்."சிரிக்கிற மாதிரி அழுவார்-அழுகிறமாதிரிச் சிரிப்பார்"எண்டு எக்ஸிலில ஒருக்காய் கலாமோகன் பெரியண்ணா எழுதினவர்.அப்படிப்பட்ட சுகன் பெரும் கவிஞனாரபின் அவரைப் பார்க்க முடியாதெண்டும்-"பாடச்சொன்னால் புலவரும் பாடார்"எண்ட மாதிரி அவர் பாட மாட்டாரெண்டும் கலாமோகன் சொன்னார்.பாடுறத்துக்கு "சட்டியில இருந்தால்தானே அகப்பையில ஒட்டி கொண்டுவரும்"எண்டதை நல்லாவே புலவர் கருவரத்தேவனார் சுகன் அறிஞ்சு வைச்சிருக்கிறார்.இப்படிப்பட்ட புலம் பெயர் இலக்கியத்தில் சீனியரான சுகனார் இப்போது, இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை முன்னெடுத்துச் சென்று அங்கேயொரு லொபி அரசியலுக்கும்-தெரிவுக்கும் முன்நிறுத்தப்படும்போது சுகனாரது அன்றைய கருத்துக்கள் சோபாசக்திக்கு இன்று,  அவசியமாகிறது!தன்னையும், தான்கொண்ட கருத்துக்களையும் நிலை நிறுத்த எந்தச் சதிக்கும் சோபாசக்தி தயாராகிறார்.

ஆனால்,இதே சுகன் குறித்து மேலும் கலாமோகனிடம் போவோம்:

கலமோகன்ர வார்த்தையில சொன்னால்"பெட்டையளைக் கண்டால்(இப்பை எந்தப் பெட்டையைக் கண்டாலும் கன்னங்கள் ரெண்டிலும் ஒரு உறிஞ்சல் உறிஞ்சிக் கொஞ்சுவார்.;)பெண்நிலைவாதி என்பார்,தாழ்த்தப்பட்டவரைக் கண்டால் தலித்தியவாதியென்பார்,விஸ்க்கிப் போத்திலோடு வருபவரைக் கண்டால் உடனே தன்னை விளிம்பு நிலை வாதியென்பார்"கூட்டுக் கலவிக்குப் பேர்போன வட்டுக்கோட்டைக் கருவரத்தேவருக்கு சுகனார் வேடமும் சரியான அச்சாவாகவில்லை.இப்ப பெரிய பீ நவீனத்துவ சொறீ...பின் நவீனத்துவக் கொம்பு ஒண்டும் அவருக்கு முளைச்சிருக்காம்."





இப்படியாகச் சுகனுக்கு "வேளாளனான ஒவ்வொருவரும்", தான்சாதி வெறியன் இல்லலையென்று மறுபடியும்,மறுபடியும் வேளளன் மட்டும் பிரகடனப்படுத்தியாகவேண்டும்.வேளாடிச்சி தேவையில்லை!ஏனெனில்,அவளுக்கான "பெண் விடுதலை" இதை இல்லாதாக்கிறது.அதாவது,வேளளன் கையில் அவள் தலித்தாகக் கிடப்பதே காரணமென்றுஞ் சொல்லக் கூடும்!

இப்படிப் பிரகடனப்படுத்தின பிறகுதான் "வேளாளன்" தலித்தியம் பேசலாம்.இல்லாட்டி இந்தச் சுகனார் நம்மை "இருள் வெளிக்குள்"தள்ளி மதிப்பு மறுப்பறிக்கையை விடுவார்;.

இப்படியாக எல்லா மனிதர்களையும் வேட்டையாடிய மச்சானுக்குப் பக்குவம் வந்திட்டுதாம்!அதால இப்ப டக்ளசுக்குக் காவடியெடுத்து"புத்தஞ் சரணங் கச்சாமே"வழி இலங்கைத் தேசிய கீதமுரைப்பில் மகிந்தா காந்திய வடிவம்-அகிம்சா மூர்த்தி.இலங்கை இராணுவத்தின் கரங்களில் ஒவ்வொரு ராட்டினமுண்டாம்!

இப்படியாகச் சுகன் "அகிம்சா மூர்த்தியாக" மாறியதற்குக் கடந்கால பின்-நவீனத்துவப் பார்வைக்கும்(பின் நவீனத்தைத் தமிழில் அங்கொன்றுமிங்கொன்றுமாய்த்தாம் சுகன் வாசித்துவிட்டு...),தலித்தியப் பிரகடனங்களுக்கும் ஒரு பரிகாரம் தேடுறாரெண்டு எடுத்துப் போடாதேங்கோ!இப்ப பலருக்குத் தங்கட "இருப்பில" சந்தேகம் வந்திட்டுது.அதுக்காக, இப்பிடி மீள் பார்வைகள் வருகிறதெண்டும் பார்த்துப்போடலாம்.

பாத்திபன்ர கதையொண்டை(பலமா,யாருக்கு?) ஒப்பிரேசன் செய்து" செட்டியிலிருந்து ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் ய+னியன் சரிவை ஆராய்ந்தார்கள்"எண்ட பார்த்திபனின் எள்ளலை நக்கி,

1: சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?

2: ஜொனிவோக்கர் அடிக்கக் கூடாதென்கிறானா?"

3: ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?"

4: செற்றியில் இருக்கக் கூடாதென்கிறான?"-எனக்கு உறுத்துகிறது,நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன்." எண்டு தன்னைப் பற்றிப் பிரகடனப்படுத்தி ஜொனிவோக்கர் கம்பனியை விளிம்பு மனிதர்களின் கம்பெனியெண்டவருக்கு இலங்கை ஆளும் வர்க்கங்களும் விளிம்பு மனிதர்களானார்கள்-வடக்கில் அவர் காணும் ஒவ்வொரு இராணுவமும் விளிம்பு மனிதர்களே-வேளாளனைத் தவிர!

"தன்னைச் சாதிவெறியன் இல்லை என்று
தொடர்ந்து(கவனியுங்கள் தொடர்ந்து...)நிருபிக்காதவரை ஒவ்வொரு
வெள்ளாடனும் சாதி வெறியனேதான்
என்று தலித் கருதுவதில் தவறில்லை."-சுகன் 


இப்படியெல்லாம் பொன் மொழி பொழிந்த எங்கட கருவரத்தேவரது பொன் மொழிகளை முன்வைத்துச் சோபாசக்தி தொடர்ந்து  வேளாளர்களைப் பார்த்து தன்னையொரு சாதிவெறியன் இல்லையெண்டு நிரூபிக்கச் சொல்லும்போது இலங்கையில் இலக்கியச் சந்திப்புக்கான தொகுப்பையும் வெளியிடுவதற்கு ஆக்கங்கள் தேடுகிறார்.ஆனால்,தமிழ்ப் பிரதேசமெங்கும் தமிழர்கள் அடிமையாய் சிங்கள இராணுவத்தின் முன் மண்டியிடும்போது குவானிக்காவின் தெரிவு "புலிப்பாசிசம்-வேளாளச் சாதி வெறியாகவும் இருந்திட்டால் ஆச்சரியமில்லை!


ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

21.04.2013

Sunday, April 07, 2013

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

40 வது, இலக்கியச்சந்திப்பின் வரலாற்றைச் சொல்லும் சுசீந்திரன்,சந்துஷ்-சில கருத்துக்கள்!

இதுவரையான இலக்கியச் சந்திப்புக்குறித்தும்,அதன் வரலாற்றுக் கட்டங்கள் குறித்தும் சந்துஷ்,சுசீந்திரன் இருவரும் தங்கள் அநுபவங்களைச் சொல்கின்றனர்.இலக்கியச் சந்திப்புக் குறித்துக் கருத்தாடுவதில் சந்துஷ்கும்,சுசீந்திரனுக்கும் காத்திரமான பாத்திரமுண்டு.இந்த 40 வது, இலக்கியச் சந்திப்பை நாமும் நேரடியாகப் பார்க்க வழி செய்த தலித்தியத்துக்கு நன்றி.இல்லையேல் இவர்களது கருத்தை நாம் கேட்கும் எந்தச் சந்தர்ப்பமும் கிட்டியிருக்காது!

பொதுவாகக் கருத்தாடியவர்கள்-விவாதித்தவர்களென்போரைக் கடந்து, இவர்களை 1988 ஆம் ஆண்டு செம்படம்பரிலிருந்து தொடரும் இலக்கியச் சந்திப்பின் தொடரில் வைத்துக் காணமுற்பட்டபோது இந்தச் சந்திப்பு பெரிதாக எந்த உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக இவர்களே உரைக்கின்றனர்.

எனினும்,வரலாற்றின் நிகழ்வு சார்ந்த இலக்கியச்சந்திப்பின் பாத்திரத்துள் சந்துஷ் வகுத்துக்கொள்ளும் பிரிப்புகளும்,அதுசார்ந்து மாவோயிசம்,ரொக்சிசம்,மார்க்சிசம் என்ற வகைப்படுத்தலில் சிலரை முன்வைத்துக் கருத்தாடுவது தமிழ்ச் சமுதாயத்தின் ஆரம்பகால அரசியலை வகைப்படுத்துவதென்பதைவிட இந்த இலக்கியச் சந்திப்பானது அதன்வழியில் சிலரது இன்றைய அரசியல் தற்கொலையை எனக்கு உறுதிப்படுத்துகிறது.அந்த வகையில் சந்துஷ்சுக்கு நன்றி.



மாவோயிசம் பேசிய அறுவைச் சீனி லோகன் இலங்கை அரசியலில், அரசின் போக்குகளுக்குச் சார்பாக இயங்குவதும்,மார்க்சியம் பேசியவர்களில்பலர் குறிப்பாய்ந் சிந்தனை,பரா மாஸ்டரது இழப்போடு தலியத்தோடு சங்கமித்து இலங்கையின் பொது அரசியலோடு ஒன்றித்துப்போனதும்,ரொக்சியம் பேசிய புதுமை,வாணீ,ஜெயபாலன்,பாரதி தமிழ்த் தேசிய அரசியலில் தடுமாறுவதும்,தூண்டில் இது எதுவுமேயின்றித் தனது பாத்திரத்துள் சமூகக் கொடுமைகள்,சமத்துவத்துக்காகப் போராடியதில் அது தமிழ்த் தேசிய-மற்றும் தமிழீழ மக்கள் கட்சியால் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பாத்திரத்தின் கூறு சிலரை இன்னும் துடிப்போடு இந்தப் பெரு வெள்ளத்தை விட்டு மக்கள் பக்கம் நின்றியங்கவும்,விமர்சிக்கவும் தூண்டிக்கொண்டுதாம் இருக்கிறது.

அண்மை வரை, இலக்கியச் சந்திப்பானது புலிகளது அரசியல் மற்றும் பாசிசம் குறித்துக் கருத்தாடியதிலிருந்து சில நிசப்த காலத்துள்(அதுள் பங்கு பற்றிய பலரை இன்று வரலாறுரைக்கும்) அனைவரையும் கட்டிப்போட்ட அரசியல் தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் அடுத்த எல்லைக்கு(பாசிசத்துக்கு எதிரான போராட்டப் பாத்திரம்)த் தாவுவது வரலாற்றின் உண்மைகளைக் குறித்து நோக்குபவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது.



தலித்தியம் முதல் மாவோயிசம் பேசியவர்கள்,மார்க்சியம் முதல் ஈ.பீ.ஆர்.எல்.ஏப் வரை அரசியல் செய்தவர்கள் இலங்கையின் பொது அரசியல் நீரோட்டத்துள் கலந்துபோனதும் ,வாசு தேவ நாணயக்காராக்களையும் இலங்கியச் சந்திப்புள் இனங்கண்டபோதும் இவர்கள் முள்ளி வாய்க்காலுக்குள் சிக்குப்பட்ட மக்கள் குறித்து என்ன பதிவை 2005 களுக்குப் பின் முன்வைத்திருக்கிறார்கள்?

பாசிச இராணு ஜந்திரங்களுக்குள் சிக்குப்பட்ட அப்பாவிகள் குறித்து, அவர்களது நலனின் அக்கறை கொள்ளாது, முள்ளி வாய்க்காலில் அவர்களைப் பாசிசச் சிங்கள இராணுவம் அழித்துக்கொண்டபின் -அந்த மக்களது குருதி உலர்வதற்குள் தலித்துவ வாதிகளும்,இராகவன் போன்றவர்களும் இலங்கையில் மகிந்தா ஜனநாயகத்தை மீளக் கொணர்ந்ததாகப் பேட்டிகள் செய்தும்,நன்றி தெரிவித்ததுமாக இந்த இலக்கியச் சந்திப்பின் உள்ளடக்கம் மாறிப் போனது உண்மை!

இன்று,சாத்திரியை கேள்வி கேட்டுத் துளைப்பவர்கள்,தேவதாசன்,அசுரா,ஞானம்,இராகவன் போன்றோரைப்பார்த்து அரசியல் ரீதியான காட்டிக்கொடுப்புக்குகான எதிர்வினையை ஆற்றுகிறார்களா?அல்லது, பாசிச மகிந்தாவின் அரசியலை ஜனநாயகமென வகுப்பெடுத்து முழுத் தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையின் சிறுபான்மை இனங்களையும் மகிந்தாவின் அரசியல் நிகழ்வுக்குள் தற்கொலை செய்ய வைக்கும் கயமைக்குப் பதில் தேடுகிறார்களா?

இங்கு,தனிப்பட்ட நட்பு,உறவாடலென்பது பரந்துபட்ட மக்களது அரசியல் வெளிக்குள் இல்லையென்பதைச் சந்துஷ் நிரம்பவே புரிந்தவர்.ஆனாலும்,யாரை விட்டது முகம் பார்த்து அரசியல் பேசுவது?




அடுத்து,அண்ணன் சுசீந்திரனிடம் வருவோம்.

எப்பவும்போல நகைச் சுவையாக மனிதவுணர்வுகளை தனக்குள் ஒன்றிக்க வைக்கும்"அன்பு" நிறைந்த உரையாடல் அவருக்கானதே!அதனாற்றான்,நான் அவரை "நேசம் நிறைந்த சுசீ அண்ணா" என்று எப்போதும் அழைப்பவன்.அவரது உரையாடலில் முரண்படும் கருத்துக்களை அவர் மிக விவேகமாகத் தவிர்த்துவிட்டு வரலாற்றையுரைக்கிறார்.அதுள், தனக்குள் வசப்பட்ட நியாயங்கட்குவுட்பட்டு வரலாறு கட்டும்போது பீட்டர் ஜெயரெட்னத்தை மட்டும் சொல்லிச் செல்பவர் ஏனோ பார்த்திபனை,செல்வராஜாவை,சிவத்தை,ஜோசெப்பை மறந்தாரோ தெரியவில்லை!

இந்த இலக்கியச் சந்திப்புக்காக ஆரம்பம் முதல் அதன் பல சந்திப்புகளுக்கு அவித்துப் போட்டவர்களும் அதற்காகத் தமது வீடுகளைத் திறந்து விட்டவர்களும் இந்த மேற்சொன்ன பேர்வளிகளுக்குள் இருக்கின்றனர்.இதற்காகப் பாரிய பொருள் இழப்பையும் அவர்களே தாங்கினர்.

போகட்டும்.

கன்னை கட்டி அரசியல்,வரலாறுரைக்க முடியாது.

திரு.சுசீந்தரன் ஆரம்பகால இலக்கியச் சந்திப்புள் ஒருவருமாக,இப்போது ஒருவருமாகக் கருத்தாடுவதுள் அவரோடு முரண்படும் ஒரு விடையத்தை "மனம் புண்படும்" என்ற அகவிருப்போடு அவர் மறுத்துரைத்ததற்கு நாம் சில வற்றைச் சொல்லியாகவேண்டும்.

நா.கண்ணன் என்பவர் பார்ப்பனர் என்பதும்,அவரது படைப்புகள் நவீனப் பெண்ணியச் சம வாழ்வுக்கு,எதிரானதென்பதும்,அவர் அடிப்படையில் பார்ப்பனர்களைத் தாண்டி இலக்கியமோ, அரசியலோ செய்ய விரும்பாதவரென்பதும் நாம் அவரோடு விவாதித்துத் தெரிந்துகொண்டவை.

அவரது இலக்கியச் சந்திப்புப் பங்களிப்பில் அவர் பார்ப்பனியச் சனாதன தர்மத்தைக்கூடப் புதிய மொந்தையில் வார்த்தவர்.

அப்படியாகிய, அவருக்கெதிரான "ஆண்டாள் மார்க் அளவு நாடா" என்ற குறியீட்டு அரசியல் எதிர்ப்புப்பிரசுரம் மிகவும் தார்மீகத் தன்மையுடையது.

அது,பார்ப்பனியத்தாலும்,சனாதன தர்மத்தாலும் பாதிக்கப்பட்டவர்களது நியாயத்தின்-உணர்வின் வெளிப்பாடு!


இதுவொரு தனிப்பட்ட மனிதரைப் புண்படுத்துவதென்பது பார்ப்பனியத்தின் அதிகாரத் தன்மையை,தனிப்பட்டவர்களது தெரிவுக்குள் குறுக்குவதாகும்.பார்ப்பனியர்கள் ஒவ்வொருவரும் அதன் சேவர்களாக இருப்பது மட்டமல்ல அதற்கு வெளிநிலைப் படிச் சாதிகளும் அதையே வெளிப்படுத்துபவர்கள்.இந்த ஆண்டாள் மார்க் அளவு நாடா பொதுவாகப் பார்ப்பனியத்தின் மனித விரோதத்தை எதிர்ப்பதாகும்.இதைத் தனிப்பட்ட தாக்குதலாகக் குறுக்கி"மனித மனம் புண்படும்"என்பது மிகவும் பொறுப்பற்று வரலாற்றை மறுப்பதில் முடிச்சிடுகிறது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில்,239 மில்லியன் மக்களைச் சனாதன தர்மம் தீண்டத் தகாதவர்களாக்கிச் சிதைக்கிறது.அந்தச் சீரழிவுப் பண்பாட்டின் கூறுகளைத்தாங்கி நமக்குள் கருத்துக்கட்டிய கண்ணனின் மனம் புண்படும் என்ற சீசீந்தரனுக்கு இவர்களால்  சிதைக்கப்பட்ட , 239 மில்லியன்கள்  மக்களது மனத்தின் காயங்கள் ஒரு பொருட்டாக இல்லை!இதை எதனோடு ஒப்படி முடியும்?

இலக்கியச் சந்திப்பில் இப்படியும் வரலாறு திரும்புகிறது.

பிற்குறிப்பு : "ஆண்டாள் மார்க் அளவு நாடா" விளிம்புக்குரல் துண்டுப் பிரசுரம் 1998 ஆம் ஆண்டு பிராங்பேர்ட் இலக்கியச் சந்திப்பில் சோபாசக்தி-ரஃபேல் போன்றோரால் வினியோகித்து எதிர்ப்புக் காட்டப்பது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2013

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...