Tuesday, October 18, 2011

நடுகல்: பிரபாகரன்!

தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பம் !


புலிகளது தலைவர் வே.பிரபாகரனை இந்த [27.11.2011] மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் தரிசிக்கமுடியும்!


" சுழன்றடிக்கும் சூறாவளியாக,
குமுறும் எரிமலையாக,
ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக
ஓயாது வீசும் இந்த மாவீரர் தினக் கொண்டாட்டம் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் கைகளில் விடுதலைப் புயல் வீசியபடி மையம்கொண்டு நிற்கிறது. "


இங்கே, தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பமும் உருப்பெறுகிறது...

னித சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.


தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?; மாவீரர் பட்டியலுள் இருந்து இருந்து வெளிவருவதாக...

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி : பிரபாகரன் மாவீரர் பட்டியலுள் இருந்து வெளிவருவதாக.

ப.வி.ஸ்ரீரங்கன்

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...