Tuesday, May 19, 2009

பிரபாகரன் நிச்சியம் வீடியோவில் உரை தருவார்

திரு.பிரபாகரன் குறித்தான மரணவோலம் நம்மை வருத்துகிறது.ஓவென்று அழுதும் பார்த்தாச்சு.பிரபாகரன் குறித்த கணிசமான விமர்சனத்தில் அவர் பாசிச வாதி என்றும் நான் சொன்னேன்.இவையெல்லாம் அவரைக் குறித்தான விமர்சனங்களைவிட அவருக்குப் பின்னாலுள்ள வர்க்கத்துக்கான விமர்சனம்.அவர் தமிழ்த் தேசியக் குறியீடாக இருப்பதென்னவோ உண்மைதாம்.விதேசியக் கொள்கையுடைய அவருக்குப் பின்னாலுள்ள வர்க்கம், அவரையும் அதையொட்டியே தகவமைத்தது.இது கடந்து, சிங்களத்துக் களிநடனத்தில் நாம் தாயைத் தொலைத்த பிள்ளைகளாகவே அழுது வடிகிறோம்.என்றபோதும், திரு.பிரபாகரன் குறித்தான கருத்தாடல் அவசியமானது.


நேற்று வேலை முடிந்த கையோடு வீடுதிரும்பியபோது, எனது வீட்டு நிலைமை இங்ஙனம் இருந்தது:




"காவலன் காதை.


இது வார்த்தை உதிராப் பொழுது
வீட்டில் துணைவி எரிந்து விழுகிறாள்
அப்பப்ப அவள் விழி பனிக்கத் தீபம் ரீ.வீ.
பி.பி.சீ.யெனத் தொலைக் காட்ட தாயிழந்தவள் போல்...


செய்திதாம்
உண்மையற்றுப் போனால்...
மகிழ்வுதொலைத்த நெஞ்சோடு
"சந்தோசந் தானே என" ஏளனங் கலக்க அவள் மொழி
என்னைக் கொன்று வினாவுகிறது!


இனவாதத் தேசத்தில்
எமக்கு அவன் காவற்காரன் என்ற
அவள் நம்பிக்கை என்னைச் சுட்டெரிக்கிறது
எதை எடுத்துரைக்க?


சிங்களத்துக் களிப்பில்
எல்லாமே சிறுத்தைகளாப்போன
துருவத்தின் மத்தியில் நான் அநாதையாகப் விடப்படுகிறேன்."


என எழுதினேன்.இப்போதும், சில கேள்விகள் எழுகிறது.பிரபாகரன் குறித்துப் பற்பல செய்திகள் கசிகிறது.அவர் உயிரோடு இல்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப் பாடுபடும் இலங்கை அரசு ஒருபுறம்.மறுபுறமோ, அவர் உயிருடன் சுகமாகவே இருப்பதாக ஐரோப்பியப் புலிகளுமாக நம்மைக் கொன்று வருகிறார்கள்.

இங்கே சில சந்தேகங்கள் என்னுள் எழுகிறது.



ஜோர்தானில் வைத்து"இலங்கையில் பூரணமாகப் பயங்கரவாதத்தை"அழித்துவிட்டாதாக இராஜபக்ஷ கொக்கரித்தார்.பிரபாகரன் இல்லாதபோதுமட்டுமே இவ்வார்த்தை அர்த்தம் பெறும்.பிரபா தப்பி உயிருடன் இருக்கும்போது அவரால் மீளப்படைகட்ட முடியும்.அது ஒரு தார்மீக நிலை.அவர்மீதான ஒரு உளவியற் குறியீடாக இவ்வினை நடந்தேறும்.


இதன்படி அவர் கொல்லப்பட்டிருந்தால்-சனியன்றே கொல்லப்பட்டிருக்கவேண்டும்!


சனிக்கிழமை 16.05.09 கொல்லப்பட்டிருந்தால், பத்தமநாதன் எங்ஙனம் ஞாயிற்றுக்கிழமை பிரபாகரனுடன் தொலை பேசியிருக்க முடியும்?


என்றுமில்லாதவாறு இங்கே,ஞாயிறன்று சூசை குரல்தரவல்ல புலி ஜெனரலாக மேற்குலகங்களால் மேலெழுகிறார்.அவரை ஜெனரலாகவே ஜேர்மனிய ஊடகங்கள் வர்ணித்தன.


சூசை தன் மனைவி பிள்ளைகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.


அவர் இன்னும் உயிருடன் இருப்பார்.


பிரபாகரனைச் சுற்றிய தலைகள் எல்லாம் உருண்டுள்ளன.இதுள் சூசையின் பெயர் இல்லை.


கருணா பிரிவுக்கு முன், ஐ.பி.சீ.யில் குரல்தரவல்லவராகச் சிலதினம் வலம் வந்தார்.அதன் பின் பிளவு.இப்போது, சூசை வந்தார்.


சனியன்று கொல்லப்பட்ட பெருந்தொகைப் புலித் தளபதிகள் எங்ஙனம் கொல்லப்பட்டார்கள்.இதுள் பிரபாகரன் அடக்கமா?


உள்ளிருந்து துரோகத் தலைமை பிறப்பெடுக்குமா?


இப்போது, பிரபாகரன் காதைக்காட்டாத(காது-செவிகள்) உயிரற்ற உடலம் அவராகவே காட்டப்படுகிறது.இங்கே என்ன நடக்கிறது?



பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்துப் பத்மநாதன் வலுவாக மறுக்கிறார்.

இவர் ஞாயிறன்று பிரபாகரனுடன் தொலை பேசியதாகவும் கூறுகிறார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது இலங்கையில் "தனிநாட்டுப் பயங்கரவாதப்போரை" வென்றதாகச் சனிக்கிழமை இராஜபக்ஷ கூறமுடியாது.


பிரபாகரனின் ஒரு சொல் நிச்சியம் ஓராயிரம் படையைத் திரட்டும்.இது,வெறும் நம்பிக்கை அல்ல.உளவியற் செயல்-குறியீடு.


இங்கு,துரோகத் தலைமை ஒன்று பிறப்பிடுக்கிறதா?


அது எவர் பெயரில்?


இதை முறியடிப்பதாக இருந்தால்,இன்றைய தொழில் நுட்ப வசதியில் திரு.பிரபாகரன் பின்லாடன் மாதிரி ஒளியுரை செய்தாகவேண்டும்.அது, இன்றைய தனது மரணம் குறித்த உரையாகவும் இருக்கவேண்டும்.வீடியோ வந்தால் பல தமிழர் வீடுகளில் விடியும்.


பொறுத்திருந்து பார்ப்போம்.


சிங்களக் களிப்பு நம்மை ஒடுக்குகிறது.பிரபாகரன் உரை நிச்சியம் மீளத் தலை உயர்த்தும் தமிழர்களை!



தமிழர்கள் கண்ணீரோடு விளையாடும் இந்திய இலங்கை இராணுவக்கூட்டு பிரபாகரன் உயிருடன் இருந்தால் நிச்சியம் இன்னொரு புதியவரவில் புரட்சிகரமான போரைச் சந்திக்கும்.இது, மிகவிரைவில் நிகழும்.

இன்றைய தவறை விமர்சனபூர்வமாக விளங்கிக்கொண்டு மேலெழும் பிரபாகரன் தலைமை இன்னொரு ஈனத்தனத்தை செய்யாது-பார்ப்போம்!


பிரபாகரன் நிச்சியம் வீடியோவில் உரை தரலாம்.


நம்புவோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
19.05.09











2 comments:

Anonymous said...

http://ceylonpoomi.blogspot.com/

Anonymous said...

He who has been bitten by a snake is afraid of an eel

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...