"தமிழ்மணம் தமிழச்சிமீதான"தடாவை" தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்"
வலைப் பதிவுகளில் மிகவும் பொருத்தமற்ற சில வசவுகளைத் தனிநபர் சார்ந்து முன்வைத்த தமிழச்சியின் அதீத தனிநபர்வாத முனைப்பின் செயலூக்கம் அவர் குறித்த எல்லைகளை "பிறர்" நிறுவுவதற்கேற்றவாறு விளைவினையேற்படுத்தியபின் தமிழ் மணத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்?.இ·து,தற்செயல் நிகழ்வல்லவென்று நாம் உணரத்தக்கபடி தமிழச்சிதம் தனிநபர்சார் காழ்ப்புணர்வு இயங்கி வருகிறது.இது,அவரது செயற்பாட்டிற்கு ஒருபோதும் அழகல்ல.சமூகச் சீர்திருத்தம் என்பதை அவர் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே இந்த"அழகு"இங்கே முன் வைக்கப்படுகிறது!தொடர்ந்து பெயரிலியைத் தாக்கி விசனிப்பதன் வெளி "சகவோடிகளால்"நிறுவப்படும்போது-அங்கே,தமிழச்சிமீதான சுய செயற்பாடு அடிபட்டு,முன்னைய எதிர்பார்ப்பு எவரெவருக்காகவோ நிறைவேற்றப்படுகிறது.இதை இனம் காண மறுக்கும் தமிழச்சி தொடர்ந்து தனிநபர் தாக்குதலக்கு "இலக்கு"வைத்த பதிவுகளையே-பின்னூட்டங்களையே எழுதுகிறார்.
நாம், புரிதலில் நீண்ட பயணத்தைத் தொடரவேண்டும்.எமக்குப் புரியாதவைகளைச் சிறுவர்கள் மனத்திலிருந்துகொண்டு புரியவும் முனைகிறோம்.இதுவே அவசியமானதும்.ஆனால்,மற்றவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் தமது கருத்துக்கு உடன்பாடற்றுப்போனால் அவைகளை எதிரி(ர்)க்கருத்துக்கள் நிலையில் தள்ளப்பட்டு,தாக்குதலாக விரிவுறும்போது இன்றைய நிலை உருவாகிறது!இது தவிர்த்திருக்கூடியது.எனினும்,சமூக நிலைகளைப் புரிந்துகொண்ட முறைமைகளை யதார்த்தப்படுத்தத் தவறும் ஒவ்வொரு தருணத்திலும் இத்தகைய "தாக்குதல்-வசவு"மேலெழுந்து தாம்கொண்ட செயற்பாட்டையே கேலிக் கூத்தாக்கும் நிலைமைகளை உணர்வெழிச்சியின் உந்துதல் தந்துவிடுகிறது.இதன் தொடர்ச்சியாக இப்போது ஓசை செல்லா களத்தில் இறங்குகிறார்!இது கூட்டு மனப்பாண்மையைக் குதறிவிட்டுத் தனிநபர்களின் விருப்பு-வெறுப்புக்கு உட்பட்ட சில நபர்களின் மனவூக்கமாக முன்னெடுக்கப்படுகிறது.இங்கே,எந்த சமூக நலனும் முன்னிற்பதாகத் தெரியவில்லை.பொதுவான சமூக இயகத்தைப் புரியமறுக்கும் மேட்டிமைப் பண்பு புரிதலற்ற-ஆழ்ந்த அநுபவமற்ற சூழலில் தோற்றமுறும்.தமிழச்சி இதை உணர்வதிலிருந்து பின் வாங்கும் ஒவ்வொரு பொழுதும் காழ்ப்புணர்வே மேலெழும்.சரியான தெரிவைவிட்டுத் தடுமாறும் சூழலை மனிதவுணர்வு முன்னிலைப்படுத்தும்.இங்கு, மிக அவதானமாகச் செயற்படும் நிலை தோன்றியுள்ளது.
சமூகமாற்றமென்பது தனிநபர்களால் செய்து முடிக்கப்படுவதல்ல என்பதை முதலில் எவர் புரிகிறார்களோ இல்லையோ தமிழ்மணம் மிக விரிவாக அதைத் தொட்டுள்ளது!தமிழச்சியின் பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வு"தமிழச்சி புரிய மறுக்கிறார்"எனும் உணர்வே.இன்றைய சமூக ஒழுங்குகள் யாவும் நிலவும் அமைப்புகளுக்கு இசைவாகவும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது.இதைப் புரிந்துகொண்ட தமிழச்சி புரிய மறுத்தது சமூகத்தளத்தில் இதற்கெதிரான கருத்தாடலை எங்ஙனம் கொண்டு செல்வதென்பதே!
தனிநபர்சார்ந்த உணர்வுகளால் சுயமுனைப்பை முன் நிறுத்துவது நடுத்தரவர்க்கத்துக்கான பாரம்பரியமாகவே இருக்கிறது.நாம் சமூகமாற்றை விரும்புகிறோமெனில் முதலில் நம்மைக் கொன்றாக வேண்டும்.அங்ஙனம் கொன்றபின் நாம் முன்நிறுத்தும் செயற்பாட்டுக்குமுன் நம்மை முன் நிறுத்தும் செயல் அடிப்பட்டுப் போகும்.இதைத் தவிர்த்துவிட்டு நாம் மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட முடியாது.இது, பொது மனிதக் கூட்டுக்குள் வேலைத் திட்டத்தை முன் தள்ள முனையும் ஒரு அமைப்பின் செயற்பாட்டிலுள்ள முன் ஆலோசனைகளில் ஒன்று!மக்களிடமிருந்து கற்பதும் அதை(கற்றதை)அவர்களுக்கே மீள அளிப்பதும் செயற்பாட்டின் ஆரம்பப் புரிதல்களாக இருக்கிறது.இங்கு மாணவ நிலையிலேயே நாம் இருந்தாக வேண்டும்.நமது சிந்தையில் உட்புகுந்துள்ள படிமங்களைக் கொன்று குவித்துவிடுவதற்கு நீண்ட போராட்டம் தேவை.இதுவே தமிழச்சியிடம் நாம் காணும் பலவீனமாகும்.
தமிழச்சிதம் கடந்த-சமீபத்து எழுத்துக்கள் சுட்டும் உடற்கூறுகளைக் குறித்த பதிவுகளைப் பெரிதுபடுத்தும் நிலையற்ற எமக்கு-அவரது தாக்குதல் தனமான பொதுபுத்தி எழுத்துக்களையே பெரிதும் சலிப்புடன் பார்த்தது. பொதுவில் வலைபதியும் எவருக்கும் இருக்கும் பொறுப்புணர்வு,மனித கெளரவம்,சுயமதிப்பின் தொடர் பங்கீட்டுச் சக மனித மேன்மை மதிக்கப்படாத அவரது போக்கு மிகவும் வருந்தத் தக்கது!எதிரிகள் நம்மை நாயிலும் கேவலமாக அவமதித்தாலும் நாம் பொது மனித கெளரவத்தை அவர்கள் பாணியில் நொருக்க முடியாது!இது புரட்சியல்ல.சிறுபிள்ளைத் தனம்.பெரும் பொறுபுணர்வுமிக்க அரிய செயல் வடிவத்தை(பெரியாரியம்)மிகவும் மலினப்படுத்திய நிலைமைக்குத் தமிழச்சிமட்டும் பொறுப்பேற்க முடியாது!-நாமும்தாம்!செயற்பாட்டை எங்ஙனம் முன்னெடுப்பதென்ற முயற்சிகளை ஓரளவு செயற் திட்டமாகக்கூட வரையறை செய்யாதவொரு சூழலைத்தாம் தமிழ்ச் சூழல்கொண்டிருக்கிறது.பெரியாரைச் சொல்லிப் பிழைப்புறும் கூட்டமாகப் போன முன்னாள் பெரியாரியத் தொண்டர்கோடிகள் இன்னாள் பெரும் முதலீட்டாளர்களானபின் இத்தகையபோக்கு நிலவத்தாம் செய்யும்!எனவே,தமிழ் மணம் இதைப் புரிந்துகொள்ளும் தருணத்தில் தமிழச்சியின் பதிவுகளைத் திரட்டுவதற்கான ஒழுங்கைச் செய்வதே சாலச் சிறந்தது.தமிழச்சி முதலில் இத்தகைய சூழலின் சுய விமர்சனப் புரிதலை முன் வைத்தாகவேண்டும்.
என்றபோதும்,கடந்த செயற்பாடுகளை,அதன் விளைவுகளைப் பார்த்து,நாம் தமிழச்சியை எத்தனைவிதமாக(நட்பாக-தோழமையாக) அணுகினாலும்,தமிழச்சி அதைக் கூர்ந்துணர முடியாது"தனக்கெதிரான தாக்குதலாகப் பார்த்திருக்கிறார்"தத்தளித்திருக்கிற தருணங்களில் அவர் எழுத்து தனிநபர் தாக்குதலாக சக பதிவர்களைத் தாக்கி இருக்கிறது.எனினும்,தமிழச்சி இது குறித்து மிகையான சுய மதிப்பீடுகளை உருவாக்கித் தாக்குதல்களை வார்த்தைகளினூடாகக் கட்டமைத்தபோது,அவரைத் தொடர்ந்து சிந்திக்கும்படி நாம் கட்டுரை எழுதினோம்.அதீத சுய மதிப்புத் தன்மீதான அழுத்தங்களைத் தனக்கெதிரான திசையில் விவாதமாக்கியது.இதைத் தமிழச்சி உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை "சகவோடிகள்"விட்டுவைக்காது தமிழச்சியை உருவேற்றும் எழுத்துக்களைப் பதியமிட்டபோது,இதன் வரிசையில் முன் நிற்பவர்கள் திருவாளர்கள் இலக்கி மற்றும் ஓசை செல்லா.இவர்களைத் தாண்டி நாம் இக்கட்டுரையூடாகச் சிலவற்றைச் சொல்ல முனைந்தோம்.அவ்வளவுதாம்.
தொடர்ந்து தமிழச்சி குறித்த கட்டுரை எதுவும் எழுதுவதில்லை.
"தமிழ் மணம் தமிழச்சிமீதான"தடாவை" தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்" என்ற எமது நம்பிக்கை வீண்போகாது.
தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
25.03.2008
Tuesday, March 25, 2008
Sunday, March 23, 2008
அல்லகண்டம் தொலையா இலங்கை
பேரப்பூச்சி.
ஆச்சி அமுக்கிய இறுகிய நெற்றியும்
அப்பு அணைத்த பிஞ்சு நெஞ்சும்
ஆத்தை முலையின் கனவொடு சேர்ந்து
நெடுக அழிந்தது பேரப்பூச்சி
அழலிக்கையோடு அமர்ந்திருந்தவர்கள்
அடக்கிப் பழகிய அர்த்த பொழுதுகளில்
அப்பனின் சாக்குக் கட்டிலுக்குத் தீ வைத்தவர்கள்
அவன் நாட்டிய பயிரரிந்து அப்பால் அள்ளிச் சென்றதும்
அம்மாவின் முலையில் பல்லைப் புதைத்து
அல்குல்லில் துப்பிய இச்சைக் கழிவு
இதயம் சிதைத்துக் கொன்றது அவளை
கச்சை வலிக்கக் கடுந்தவமிருக்கும்
அப்பனின் அசையாத பொழுதுகள்
அள்ளிய சிறு நீர் கைகளில் வற்ற
முகம் தொலைத்தான்
முந்தைய வினையில்
மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!
பேரப்பூச்சி பாதியில் இழந்த முகத்தை
இன்னொரு பொழுதுகளில் எங்கோ புதுப்பிக்க
இடியிடியாய் வான் அதிரும் சிங்கக் கனவில்
ஆச்சி காலில் எண்ணை தடவிக் கண்ணை மூடி
மெல்லச் சிதறியது
அல்லகண்டம் தொலையா இலங்கை
இழவோலை வரையும் ஈழம்
அவகடமுடையச் சிங்களச் சினம்
அழிகடை எல்லாம்!
என்ன நம் இழுதை!
ஏங்கிக் கிடக்கும் எம் தாய் முலையும்
எண்ணை பிசிறும் ஆச்சியின் கரமும்
வான் முட்டும் அப்பர்களின் ஏரும்
இன்னொரு வினைக்கும்
மீள் வருகைக்கும் நேரம் குறிக்க
மீண்டும் உருளும் "கொமிசன்" கண்ட குண்டுகள் எங்கும்.
ஊழகம் கண்ட மேனிச் சிலிர்ப்பும்
மெல்ல விரிந்த சில்லறைச் சிரிப்பும்
கபாலத்து வெடிலில்
ஒளியின் வேகத்தோடு மறையும்
யுத்தப் பொழுதாய் மேவிய விடியல் எங்களது!
இன்னொரு பொழுதில்
ஆச்சியின் காலில் மெல்லக் கிடந்து
மேனி வளர்க்கும் பேரப்பூச்சி
ஆத்தையின் முலையில் அருவி கொட்டும்
அப்பன் அடைக்கும் அந்த வெள்ளம்
அள்ளித் தரும் வெள்ளைச் சோற்றை
அடுப்பில் அமரப் பூனையின் தவமும்
கனவில் தொடரும் அகதியின் முகத்தில்.

Saturday, March 22, 2008
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு...
நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?
இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே"ஜனநாயகம்-அமைதி-சமாதானம்"என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு அதன் ஐந்தாண்டுகால யுத்த ஐந்தொகையை வெளியிடும் சந்தர்ப்பம் நெருங்கிவந்தபோது அது ஆளும் புஷ்சின் மொழிவுகளாக வந்தாலும் அங்கே அமெரிக்காவின் பகாசூரக் கொம்பனிகளின்-குடும்பங்களின் திமிர்த்தனமான மனமே முன்னிற்கிறது."ஈராக் யுத்தம் அவசியமானதும்,சரியானதும் என்பதோடு மட்டுமல்ல அங்கே நிலை கொண்டிருக்கும் 158.000.அமெரிக்கத் துருப்புகளை மிக விரைவாக மீளப் பெறுவதும் சாத்தியமில்லை"என்று வெள்ளை மாளிகை பட்டியலிடுகிறது.அமெரிக்கத் துருப்புகளின் ஈராக்கைவிட்டான அகல்வு-வெளியேற்றம் ஈரானைப் பலப்படுத்தும் அதேவேளை அது இஸ்ரேவேலுக்குப் பாதுகாப்பின்மையையும் அச்சத்தையும் கூட்டும் என்று இன்னொரு புதிய அத்தியாயத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா திறந்து வைக்கிறது.
20.03.2003 ஆம் ஆண்டு ஈராக்கை இராணுவரீதியாகத் தாக்கி அழித்த அமெரிக்கக் கொடும் யுத்தத்தை புஷ் கோமாளி சரியானதென்பது அவரது புத்திஜீவித்துவப் பிரச்சனையல்ல.மாறாக,அதுதாம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கனவு."இதுவொரு யுத்தம், அமெரிக்கா அதை வெல்வதற்கும்,அவசியத்துக்குமானதாகும்,துருப்புகளை மீளப்பெறுவதற்கென்ற கேள்விக்கே இடமில்லை"என்று பெண்டகேனில் வாந்தியெடுக்கும் புஷ்சின் பிரச்சனை அமெரிக்க வங்குகுரோத்துக் கம்பனிகளின் பிரச்சனையாக இன்னொரு அத்துமீறிய எண்ணைவள நாட்டைக் கைப்பற்றும் அரசியலோடு சம்பந்தப்படுகிறது.இது உலகத்தின் அனைத்து மக்களினங்களின் ஜீவாதார உரிமைகளுடனும் மிகப்பெரும் இராணுவக் குறுக்கீட்டை செய்யும்-நியாயப்படுத்தும் அரசியலாக விரிகிறது.
ஈராக் குறித்த ஆய்வை ஜேர்மன் ஊடக முகாமையாளர் டாக்டர் யுர்கன் ரோடன்கோவ்பெர் என்ற பத்திரையாளர்"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?"என்ற தனது ஆய்வு நூலில் தான் நேரடியாகப் பார்த்தை-அநுபவித்தைப் பதிவு செய்திருக்கிறார்.ஈராக்கில் அமெரிக்கத் துரப்புகளின் அட்டூழியத்தை மட்டுமல்ல அமெரிக்க அரசியல் ஈராக்குக்குள் நுழையவிடும் பத்திரிகையாளர்களை தமது கட்டுப்பாட்டின்கீழ்த்தாம் இடங்களைக் காண்பிப்பதும்,எந்தெந்த இடங்களைப் பார்வையிடலாமென்பதை அமெரிக்க இராணுவ அதிகாரிகளே தீர்மானித்துத் தமது கண்காணிப்பின் கீழ்தான் அனைத்தையும் அநுமதிப்பதாகவும் பதிவு செய்திருக்கிறார்.
//Das ist keine Kritik an Journalisten. Erstens sind bereits über 200 mutige Journalisten im Irak gestorben und zweitens gab es für einen Journalisten, zumindest in den letzten drei Jahren, nur noch die Möglichkeit, als „embedded journalist" ins Land zu kommen. Deswegen sind Berichte, die Sie im Fernsehen sehen, ich würde sagen zu 99,9%, in Begleitung von schwer gepanzerten amerikanischen Kampffahrzeugen mit schwer bewaffneten amerikanischen GIs entstanden. Und natürlich bringen die amerikanischen Presseoffiziere die Journalisten nur dahin, wohin sie sie bringen wollen. Dass es trotzdem weltweit ein kritisches Bild gegenüber diesem Krieg gibt, verdanken wir den Journalisten, die trotz des begrenzten Zugangs in den Irak sich eine unabhängige Meinung gebildet haben. Ich bewundere diese Journalisten. //-Dr. Todenhöfer இது அமெரிக்க அரசியல்.இந்தியாவையோ அல்லது இலங்கையில் தமிழர்கள் பலியெடுக்கப்படுவதையோ மனிதவுரிமை மீறலாக அது பார்க்காது.அல்லது, இத்தகைய நாடுகளுக்கோ அது ஒருபோதும் குற்றப் பத்திரிகை தயாரிக்காது.இதையும் நாம் புரிவதில் சஞ்சலம் இருக்குமாயின் தொடர்ந்து மேலே செல்க!
ஈராக்கில் இதுவரை 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.11 இலட்சம் மக்கள் ஊனமுற்றுக் கிடக்கிறார்கள்.பாக்தாத்தில் ஒவ்வொரு இரண்டவது வீடும் ஏதோவொரு வகையில் குறைந்தது ஒருவரையாவது பலிகொடுத்திருக்கிறது.ஈராக்கின் முழுமையான குடியிருப்புகளில் 40 வீதமான குடியிருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.மேற்காணும் தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு நிறுவனமான ஓ.ஆர்பி. மிகக்கடினமான ஆய்வுகளுக்குப் பின்பு கடந்த 2007 இலையுதிர்காலத்தில் வெளியிட்டிருக்கிறது.
மேற்குலகத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஆய்வை-நூலைத் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் எழுதியிருக்கிறார்."மேற்குலகத்தவர்கள் மிகவும் கொடுமையானர்கள் இஸ்லாமிய உலகத்தவரைக்காட்டிலும்"என்று தடாலடியாகவே குறிப்பிட்டுத் தனது ஆய்வை ஈராக்குக்குச் சென்று-அநுபவித்து எழுதியுள்ளார்.
காலனித்துவத்திலிருந்து இன்றுவரையும் பல கோடி இஸ்லாமியர்கள் பலிகொள்ளப்பட்ட வரலாற்றைச் செய்தவர்கள் "பழைய ஐரோப்பாவின்"குடிகளே!இன்றைய அமெரிக்கா அதன் அடியொற்றி அழிப்பு அரசியலை மேற்கொள்ளும்போது இந்தப் பழைய ஐரோப்பாவின் நவ லிபரால்கள் ஆங்காங்கே அமெரிக்காவுக்குப் பின்னால் பதுங்கியபடி ஐனநாயகம் பேசுகிறார்கள்.இவர்களின் மனோத்திடமானது ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியை அமெரிக்க அத்துமீறிய ஆக்கிரமிப்பால் முன்னெடுக்கமுடியுமென்பதுமட்டுமல்ல அதன் வாயிலாக வந்தடையும் மூலவளத்தை கணிசமானளவு ஐரோப்பியச் செல்வமாக்குவதில் அமெரிக்காவுக்கான தார்மீக இராணுவ-அரசியல் ஒத்துழைப்பாக இருக்கிறது.ஈராக் யுத்தத்துக்காக ஜேர்மனிய அமெரிக்காவுக்குக் கொடுத்த நிதி 4.000 கோடி அமெரிக்க டொலர்கள் என்பது ஒரு மெய்யான மதிப்பீடு.இன்றைய புஷ்சின் பின்னே மறையமுனையும் ஐரோப்பியக்கூட்டுக்குள் நிலவும் முரண்பாடுகள் அமெரிக்க மூலதனத்தோடு மல்லுக்கட்டும் போக்கை மிகுதியாக மறைத்தபடி அமெரிக்காவின் முதுகில் குத்த முனையும் அரசியலை ஜேர்மனியும்,பிரான்ஸ்சும் முன்னெடுக்கும்போது போலந்து அமெரிக்காவுக்கு மிக விசுவாசமான நாடாக இருக்க முனைகிறது.அங்கே,அமெரிக்காவுக்கான நம்பகமான இராணுவத் தளம் நிலைபெற்று ஏவுகணைத் திட்டம் நிறைவேறி வருகிறது.இது இருஷ்சியாவின் வயிற்றெரிச்சலாக விரிந்து கொசோவோ எதிர்ப்பாக மாறுகிறது!
கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர்Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும,; இன்றைய புஷ்சினது நெட்டூரம் எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.அன்றோ காலனித்துவக் கொடூர நெடுமுடிகள் ஆட்சியல் அமர்ந்தபடி உலகை வேட்டையாடியதற்கும் இன்றைய நவீன"ஜனநாயக"க் காவலர்கள் ஆட்சியில் அமர்ந்தபடி"சகோதரத்துவம்,ஜனநாயகம்,அமைதி,சமாதானம்"சொல்லி உலகை வேட்டையாடுவதற்கும் அடிப்படையில் ஒற்றுமை தமக்குச் சொந்தமில்லாத சொத்தை தமதாக்கும் செயற்பாடாக இருக்கின்றதெனினும் உலகைத் தொலைத்துக்கட்டும் பொருளாதார முனைப்பின் அதி நவீன அணுவாயுத இராணுவக் குறுக்கீடானது இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்பே மிக மோசமான வன்முறையாக உலகைத் தொலைக்க முனைகிறது!இன்றைய அமெரிக்காவின் இராணுவ விய+கமானது"Ground-Based Midcourse Defense System" (GMD) திட்டமாகவும் உலகைச் சுற்றிப் பொறிவைக்க முடியுமென்பதற்கு அமெரிக்க-இருஷ்சியப் பேச்சுவார்த்தைகளில் தென்படுகின்றன.இத்தகைவொரு சூழலில்தாம் நாம் அமெரிக்க வல்லாதிகத்தின் போர் வெறியானது வெறுமனவே மூலவளத் திருட்டுக்கானதுமட்டுமல்ல அது இனவாத அரசியலின் இன்னொரு தொடர்ச்சியை வற்புறுத்துவதாகத் தொடர்ந்து கூறிவருகிறோம்.அமெரிக்காவின் இத்தகைய அரசியல் உள்ளீடுகளை மறைப்பதற்கானவொரு தயாரிப்பில் நாளை திருவாளர் ஒபாமா அமெரிக்க அதிபாராகவும் வாய்புண்டு.ஏனெனில், முகமிழக்கும் அமெரிக்க ஜனநாயகத்தை நிறப்பாகுபாடற்ற அமெரிக்க நவீன அரசியல் தடுத்து நிறுத்துவத்தின் இராஜ தந்திரத்தில் இனவாதக் கழிசடை அழிப்பு யுத்தத்தின் வீரியத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சிகளில் ஓபாமாவும் ஒரு கருவியாக இருப்பதைத் தவிர வேறென்ன அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு அவசியம்?
இங்குதாம் ஜேர்மனிய ஊடகவியலாளர் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் தனது ஆய்வுகளை ஒடுக்கப்படும் மக்கள்சார்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.இவர்களது எழுத்தின் எல்லை மேற்குலகச் செழுமைமிகு மூலதனவொழுங்குக்கானதாகவே இருக்கிறது.இது உலகு தழுவிய அத்துமீறிய அமெரிக்க-ஐரோப்பிய இராணுவக் குறுக்கீட்டுக்குத் தடையாக முன்வைக்கப்பட்டாதாக இருப்பினும்,உலக மூலவளங்களைப் பெறுவதற்கான இன்னொரு வகையான முதலாளிய மதிப்பீடுகளை உருவாக்க முனைகிறது.அது சாரம்சத்தில் இராணுவவாதத்தை மறுப்பதற்குப் பதில் அதையும் செழுமையாக்க முனைகிறது.இத்தகைய இருவகைப்பட்ட முகத்தைக் கொண்டிருப்பினும் இன்றைய அமெரிக்காவின் அதீத கொடுமைகளைச் சொல்லும் ஆதாரப+ர்வமான உண்மைகளை அது உலகுக்குத் தருகிறது.நாம் அவரோடு கூட நின்று"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?" என்று கேட்காது நீங்கள்,எதற்காக உழைப்பவர்களைக் கொல்கிறீர்கள் என்று கேட்டுவிடலாம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
22.03.2008

Sunday, March 16, 2008
இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்
இன்னொரு கொசோவா உருவாகிறது!
இன்றைய தினம்வரை திபேத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள்,கொலைகள்,கைதுகள் குறித்துரைக்கும் அரசியலைப் புரிந்துகொள்வது மிகக்கடினமாகவே இருக்கிறது.உலகத்தின் பெரும் பகுதிகளிலும் சீனத் தூதுவரலாயங்கள்முன் அணி திரண்டுவரும் திபேத்தியப் புலம் பெயர்ந்தவர்களின் பின்னே உலக மூலதனவாதிகள் மறைந்திருந்து சீனாவுக்கு அம்பு விடுகிறார்கள்.இதற்கு அகிம்சை-காந்திக் குறியீடுகள்வேற துணையாகின்றன.அன்றுஞ்சரி இன்றுஞ்சரி காந்தியைச் சரிவரப் புரிந்தவர்கள் ஐரோப்பியர்களே!
இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்-ஆர்ப்பாட்ட முன்னெடுப்புகளுக்குத் தலைமை வகிப்பவர் தலாய் இலாமா என்பது எல்லோராலும் கூறப்படும் ஒரு மாதிரிப் பதில்கள்தாம்.எனினும்,இன்றைய பிக்குகளின் ஆர்ப்பாட்டத்திலும்,அதன்வாயிலான அரச படைகளின் எதிர்த் தாக்குதல்களாலும் சிலர் இறந்துள்ளார்கள்.திபெத்துக்கான எக்ஸில் பாராளுமன்றம் இந்தியாவில் கூறுகிறது கிட்டத்தட்ட 100 பொதுமக்கள் வரை சீனாவால் கொல்லப்பட்டதாக,மேற்குலகம் சீனாவுடன் இன்னொரு அடுக்கு மொழியையும் கூடவே இணைக்கிறது,அது கொம்ய+னிசச்சீனா என்பதாக இருக்கிறது.சீனாவோ உலகத்தில் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைப்பிடித்திருக்கிறது.இது ஜேர்மனிக்குப் பின்னால் உள்ள ரேஞ்சாக இருந்தும் அங்கே இன்னும் கொம்ய+னிசம் இருப்பதாகக் கயிறுவிடும் மேற்குலகம்-காரணத்தோடுதாம் இந்த இத்த கயிற்றை ஒப்புவித்துவருகிறது!
கிட்டத்தட்ட மேற்குலக நாடுகள் பலவற்றின் பெரும் கம்பனிகள் சீனாவில் தமது தொழிற்சாலைகளை இயங்க வைத்துச் சீனத்துத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டியபடி சீனாவையும் கொம்ய+னிசத்தையும் இணைத்தபடியே தத்தமது வேட்டையை ஆரம்பித்துள்ளார்கள்.தமது தேவைக்கேற்ற சீனாவை உருவாக்கும்வரையும் தெபேத்தியத் தலாய் இலமா புனித மனிதவாதியாகவும் அவரது சொல் மந்திரமாகவும் இருக்கவே செய்யும்.என்றபோதும்,இன்றைய தெபேத்திய அரசியல் வன் முறைகளுக்கும் அதுசார்ந்த புலம்பெயர்ந்த தெபேத்தின் பாராளுமன்றத்தினதும் கருத்துகள் மற்றும் அந்நியத் தொடர்புகளுக்குமுள்ள இணைவுத் தொடர் நிகழ்வுகள் இன்னொரு கொசோவோவை ஞாபகப்படுத்துகிறது.இந்நிலையில்,இந்த அரசியலுக்கும் சீன ஆதிக்கத்துக்கும் இருக்கும் பிணக்குகள் வெறுமனவேயான திபேத்தின் சுதந்திரத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்துக்குமானதாக இருக்குமுடியும்h? கடந்த 49 ஆண்டுகளாக அரசியல் தஞ்சத்தில் இந்தியாவிலிருந்தபடி மேற்குலகத்துக்கு விசுவாசமாக அரசியல் நடாத்திவரும் தலாய் இலாமாவுக்கு மீளவும் திபேத்தின்மீதான அகிம்சை அரசியல் அரங்குக்குவருகிறது-இன்னொரு காந்தி உதயமாகி வருகிறார்!
இன்றைய நிலவரப்படி சிட்னி முதல் பேர்ளின்வரையிலான உலகத்தின் பல பாகங்களிலும் தெபேத்தியவர்கள் ஆர்பாட்டங்களைச் செய்கிறார்கள்,கைதாகிறார்கள்.தலாய் இலாமா தரப்பிலிருந்து, ஐ.நா.சபை திபேத்துக்கானவொரு பிரத்தியேகக் கண்காணிப்பாளர்களை அனுப்பும்படி கோரிக்கை முன்வைகப்படுகிறது.கடந்த 49 ஆண்டுகளாக நடந்துவரும் சீன-திபேத்திய இழுபறிக்கான அரசியல்காரணங்கள் மேற்குலகத்தின் சீனாமீதான அழுத்தத்திலிருந்தே தொடங்குகிறது.இத்தகைய அழுத்தம் சீனாவின் முழுமொத்தப் பொருளாதார நகர்வோடு சம்பந்தப்பட்டு இன்றுவரையும் சீனாவின் அதிவேக வளர்ச்சியின் உந்துதலால் உள்வாங்கப்படும் முலப்பொருள்களின் சந்தைப் பங்கீட்டோடு முரண்பாடாக எழுகிறது.சீனாவின் தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் மற்றும் மூலவளத் தேவைகளின் அதீத முனைப்பு மேற்குலக அரச விய+கத்தோடும் அமெரிக்கப் பொருளாதாரத்தோடும் போட்டியைச் சந்திக்கிறது.
கடந்த ஆண்டிலிருந்து சீனாவானது எண்ணை மற்றும் மூலவளத் தேவைக்காக ஆபிரிக்கக்கண்டத்தைப் பங்கு போடுவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் முட்டிமோதுகிறது.இரும்புத் தேவையானது என்றுமில்லாதவாறு சீனாவை உலகத்தோடு போட்டியிடவைத்ததால் இரும்புவிலை மிகமிக உச்சத்துக்போனது.அவ்வண்ணமே மசகு எண்ணையின் மிகப்பெரும் அழிவு சீனாவின் பொருளாதார வளர்சியால் மேலும் பல மடங்கு உயர்ந்தது.சீனாவும் தனது பொருளாதாரத் தேவைகளோடு மிகுதியாத் தேவையாகும் எண்ணைக்காக ஈரான்முதல் ஆபிரிக்கக் கண்டம்வரைத் தனது விய+கத்தை விரித்துவைத்து மேற்குலகுக்கு இடைஞ்சலாகவே இருப்பதால் அமெரிக்க மற்றும் மேற்குலகம் சீனாவைத் தடுத்து,ஒரு சிறு தேக்கத்தை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றன.சீனாவின் எரிபொருள் தேவையானது எண்ணைவள நாடுகளின் கூட்டின்(ஒபெக்)ஆதிகத்தை மேலும் விருத்தியாக்கி வருவதால் உலகச் சந்தையில் ஒரு பெறல் மசகு எண்ணை 108 டொலராக உயர்கிறது.இது ஐரோப்பாவுக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லாதிருந்தும் ஐரோப்பாவில் எண்ணை விலையை அமெரிக்க எண்ணைக் கம்பனிகள் கிடுகிடுவென உயர்த்தியே வருகின்றன.ஒரு ய+ரோ நாணயத்தின் பெறுமதி இரண்டு டொலராக இருந்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவைப்போட்டு ஆட்டுகிறது.இதன் தொடர்ச்சியில் ஒரு பொறியாக மேலெழும் திபேத்தியச் சுயநிர்ணயப் போராட்டம் மேலுமமொரு கொசோவோவின் அரசியல் வித்தையாக நகரும்போது அங்கேயும் சீனத்துருப்புகளின் கைகள் பல பொதுமக்களை வேட்டையாடுகிறது.
சீன முதலாளித்துவத்தை இன்னும் கொம்ய+னிசமெனப் பறைசாற்றியபடி மேற்குலக அதிதீவிரத் தனியார் துறை மேலும் தனது வலுக்கரத்தை மறைத்துச் சீனாவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்த முனைதல் மேற்குலக-அமெரிக்கப் பொருளாதார முரண்பாட்டின் அப்பட்டமான சதியாகவே நகர்கிறது.இது வளர்ந்துவரும் மேற்குலக முதலாளித்துவத்தின் அதிபயங்கர அராஜகத்தை மறைப்பதற்கும் இந்தப்பயங்கர வாதத்துக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் அணித்திரட்சியைத் தகர்ப்பதற்காகவும் சீனாவை வலிந்து கம்ய+னிசத் தேசமாகக்காட்டிப் பயங்கரவாதச் செயற்பாட்டை கம்ய+னிசத்துக்கும் பொதுமையாக்கி மக்களைத் திசை திருப்பும் ஒரு யுக்தியாகவே ஏகாதிபத்தியம் பொய்யுரைத்துவருகிறது.சீனாவென்பது மேற்குலகத்துக்கு இணையானவொரு ஒடுக்குமுறைத் தேசமாகவே இருக்கிறது.அங்கே கொம்ய+னிசம் மருந்துக்கும் கிடையாது.சீனாவை நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீன ஆளும் வர்க்கமானது உலகத்து மாபியாக்களோடு தமது உறவை வளர்த்துச் சீனாவையும் அதன் கடந்த காலப்பாரம்பரியத்தையும் கடந்த முப்பதாண்டுக்கு முன்பே குழி தோண்டிப் புதைத்தாகிவிட்டது.இதற்கு டெங்கு கும்பலுக்கு நன்றியை மேற்குலகஞ் சொல்லியாக வேண்டும்.எனினும்,பொருளாதார முரண்பாடுகள் அந்த நன்றியை இப்படிச் செய்து தென்கிழக்காசியத் தொழிலாளரை மொட்டையடிக்க ஒரு தலாய் இலாமாவைத் தயார்படுத்தி வருகிறது.இதற்கு ஜேர்மனியே நல்ல உதாரணமாக இருக்கிறது.
தொட்டிலையும் ஆட்டிக் குழந்தையையும் கிள்ளிவைக்கும் ஜேர்மனியோ "பலாத்தகாரத்தால் எந்தப்தரப்பும் எந்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது"என்று ஒப்பாரி வைத்தபடி தலாய் இலாமாவுக்கு மேலும் ஒரு உந்துதலைக் கொடுக்கிறது.பலாத்தகாரத்தால் எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாதென்று கூறும் ஜேர்மனியோ அவ்கானிஸ்தானில் பலாத்காரத்தைபயன்படுத்தி அங்குள்ள எரிவாயுவைக் கொள்ளையிடுகிறது.இன்றைய உலக நடப்புகள் யாவும் மூலவளத் தேவைகளைக் கையகப்படுத்தும் போராட்டமாகவே விரிகிறது.ஆங்காங்கே சுயநிர்ணயத்தைக் கோரும் சிறுபான்மை இனங்களின் அனைத்துவழிப் போராட்டங்களையும் இத்தேவையை மையப்படுத்தியே உலகம் பயன்படுத்தி வருகிறது.எமது தேசத்தில் நடந்தேறும் அரசியலும் அதன் வாயிலான போராட்டத்தையும் இதே உலகம் தத்தமது தேவைக்கேற்றபடி உபயோகப்படுத்தி வந்த இன்றையபொழுதுவரை நாம் இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம்.இன்று உலகத்தின் மூலதனச் சுற்றோட்டம் தேவைகருதித் தேசங்களைப் பிரித்தெடுத்துத் தமது மூலதனத்தைப் பெருக்கும் உற்பத்திப் பொறிமுறையைத் திறம்பட விருத்தியாக்கி வருவதற்கு ஆங்காங்கே அப்பாவி மக்கள் பலியாவது தொடருகிறது.1949 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றங் கண்ட சீனா தனது மக்கள் விடுதலை இராணுவத்தூடாக 1950 இல் திபேத்தைச் சீனக் கட்டுப்பாட்டுக்குள்கொணர்ந்தது.அன்றுதொட்டு இன்றுவரையும் கம்ய+னிசத்தின்பேரால் கூட்டிப் பெருக்குகிறது மேற்குலகம் திபேத்தியப் பிரச்சனையை.
மடாலயங்களாலும் மகிமையுடைய சுதந்திரத் தாயகம் அமைக்க முடியுமெனவொரு அரசியல் நகருகிறது.இதுள் வெற்றியுறும் தருணங்கள் மெல்லத் திபேத்தின் பக்கம் கனிந்து வருகிறது.அமெரிக்க-ஐரோப்பிய-சீனாவின் முரண்பாடுகள் திபேத்தில் சுயநிர்ணயப் போராட்டமாக வெடிக்கிறது.இதில் வெற்றிபெறும் தரப்பு நிச்சியமாக சீனாவாக இருப்பதற்கில்லை.
ப.வி.ஸ்ரீரங்கன்
16.03.2008

Saturday, March 15, 2008
இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது
தனிநபர்வாதத்தின் உச்சம் தமிழ்மணத்தில் எத்தனையோ பெயர்களில்...
இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் அனைத்துச் சிக்கல்களும்-அது சிந்தனைத் தளமாகட்டும் அல்லது சமூக மாற்றத்துக்கான கருத்தாடல்கள்,வேலைத்திட்டமாகட்டும்-அனைத்தும் தனிநபர் வாதக் கண்ணோட்டத்தோடு தன்முனைப்புக்கொண்டே எதிர்கொள்ளப்படுகிறது.இத்தகையவொரு சூழலில் முன்தள்ளப்படும் கருத்துக்கள் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகள் இன்னுஞ் சொல்லப்போனால் செயலூக்க முனைப்புகள் யாவும் ஏதோவொரு தனிநபருடைய அறிவுப்பயனாகக் கட்டியமைக்கப்படுவதே நமக்குள் நிலவும் அபத்தம்.இத்தகைய பார்வையின் தொடர்ச்சியான சமூக வறட்சி தனிநபர்களை உச்சியில் தூக்கி வைத்து அவர்களுக்குள் முழு உலகத்தையும் பார்ப்தாக முடிவடைகிறது.இன்றைக்குத் தமிழ் மணத்தில் நடைபெறும் தெருச் சண்டைக்கு மூல காரணம் எதுவென்று தேடுமிடத்து அங்கே புரிதலற்ற வெறும் வெத்துவேட்டுத் திமிரே காரணமாகிறது.
ஒரு விடையத்தை ஒருவர் முன் வைக்கும்போது அதன் தாத்பாரியத்திலிருந்து பார்ப்பதல்லப் பார்வை,மாறாக தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் புரிவதே சரியானதாக இருக்கிறது.இதற்கு நீண்ட படிப்பு அவசியமாக இருக்கிறது.ஒருவர் தனது அடிப்படையான பொது அறிவை வைத்து எதையும் எழுதிவிடலாம்.ஆனால், சமுதாயத்தின் பற்பல முரண்பாடுகள் அது சார்ந்த செயற்பாடுகளை நோக்கிக் கருத்தாடும்போது மிகக் கூர்மையான ஆழ்ந்த படிப்பும் அறிதற் புலமும் அவசியமாகவே இருக்கிறது.ஒருவர் முன்வைக்கும் கருத்தை ஆழ்ந்து நோக்குவதற்கு நீண்ட வாசகத் தன்மையிலான அநுபவம் அவசியமாகவே இருக்கிறது.இன்றைக்கு தமிழ் மணமெங்கும் அல்லோலகல்லோலப்படும் தனிநபர்வாத முனைப்போடு எழுதப்படும் அரைவேக்காட்டுத் தனமான எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் மிக மோசமான தனிநபர் முனைப்புடையவர்களாக இருக்கிறார்கள்.இவர்களே மிகவும் கூர்மையடைந்த அதி தனிநபர் வாதத் தன்மையோடு ஆழ்ந்த கருத்துடைய எழுத்துக்களையே தூசாகத்தட்டித் தமது புலம்பல்களைக் கடைந்தேற்றும் மகா கோபத்தோடு கிறுக்கித் தள்ளுவதில் முனைப்பாக இருக்கின்றனர்.
நிதானமிழந்த எந்த எழுத்தும் இதுவரை தர்க்கத்தோடு வந்ததாகச் சரித்திரமில்லை.அதுவும,; சமுதாயம் சார்ந்து மக்கள் நலனுக்கான பெரியார் கருத்துக்களைப் பரப்புவது,அதனூடாகச் "சமூகச் சீர்திருத்தம்"செய்வதாகச் சொல்பவர்கள் முதலில் சமுதாயத்தின் அனைத்து முரண்பாடுகளையும் அதை உற்பத்தி செய்யும் பொருளாதாரப் பொறி முறைகளையும் ஓரளவாவது புரிந்துகொள்ள முனைவது அவசியமான முன் நிபந்தனையாகும் மேற்காணும் செயற்பாடுகளுக்கு.இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு "வாழ்வியல் மதிப்பீட்டைக்"கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட"ஜனநாயகம்"எனும் கருத்தாக்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாக உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல் "ஒப்பாரி" எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் "பிரதிநித்துவப்படுத்தும்" ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.
பதினாறாம் நூற்றாண்டின் பழைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனையானது காலனித்துவம் மற்றும் உலக மகாயுத்தங்களுக்குப் பின்பான ஐரோப்பிய மையவாதச் சிந்தனையோட்டச் சிதறல்களாகிப் பொருளாதாரத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி சமதாயத்தைப் ப+ர்ச்சுவாக்களாகவும்,பாட்டாளிகளாகவும் பிளந்தெடுத்தது.அளவுமுறையற்ற மூலதனவ+க்கத்தால் குவிப்புறுதியும் கடும்கூலி ஏய்ப்பும் தொழிலாள வர்கத்தையின்னும் ஓட்டச் சுரண்டிக் கொள்ளத்தாம் இவர்களால் திட்டமிடமுடிந்ததே தவிர பொருளாதார சுபீட்சத்தையல்ல.இதன் காரணமாகவே கடும் சுரண்டலும் வறுமையும்,சாதிய-நிற-பால் ஒடுக்குமுறைகள் மக்கள் சமூகத்தில் தலைவிரித்தாடியது-ஆடுகிறது!இந்தத் தத்துவத்தின் மகிமையை நிராகரிக்கவிரும்பாத ஆளும் வர்க்கமானது 1980களில் நவ லிபரலிசமாக முழுவுலகையும் வலம் வந்து உலகைத்திவாலாக்கிய வரலாறாக நீண்டுகொள்கிறது.
இந்தக் கொடுமையானது மனிதாபிமானமற்ற முறைமைகளில் அரசியலையும்,மனிதவுரிமையையும் புண்படுத்தியது.காலாகாலத்துக்கும் மாறாத வடுவாக மனிதர்களைக் கொல்லும் அணுவாயுதங்களாக இதன் திமிர் வளர்ந்துள்ளது.இப்பரிணாம வளர்வானது எக்காலத்துக்கும் முதலாளிய நலன்களை மையப்படுத்தும் கல்வி,கலை,விஞ்ஞானப் பொறிமுறைகளையெல்லாம் இதன் மையவலுவைக்கூட்டும் ஊடகமாகக் குறுக்கப்பட்டுள்ளது.இத்தகைய செல்நெறியானது அரசியலைப் ப+hச்சுவாக்களினது நலன் சார்ந்த அரட்டையரங்கமாகவும்,அவர்களது உரிமைகளை-செல்வங்களைக் காக்கும் அடியாட்படையாகவும் வைத்திருக்கிறது.இந்த முறைமைகளை அரசியற்பொருளாதாரத்தில் அச்சொட்டாகக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது அதன் வன்மமான சொற்சிலம்பத்தால் மக்களையின்னும் அடிமைப்படுத்தும் கல்வியாளர்களை உற்பத்திசெய்கிறது. இத்தகையவர்களே தமக்கத்தாமே ஏதேவொரு தத்துவத்துக்குத் தாரவார்த்துக் கொடுத்த வாரீசாக முன்னிறுத்தி வியாக்கியானஞ் செய்கிறார்கள்.பெரியாரின் சமூக முன்னெடுப்பும் அதன் சமூகத் தன்மையும் வெறும் பார்ப்பனியத்துக்கு எதிரானதாக இருப்பதாக இருந்தால் அது நிச்சியம் என்றோ சிறைப்பட்டுப் போயிருக்கும்.எனினும்,அது இன்றுவரையும் உயிர்வாழ்வதாக உணரப்படுமாயின் அதன் சமூகத்தன்மையும் உயரிய போராட்டத் தளமும் நிச்சியம் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் ஏதோவொரு வகையில் தன்னுள் கொண்டிருப்பதாகவே இனம் காணத்தக்கதாகும்.இங்கே,தத்துவம் வேண்டாம்,அறிவியல் மட்டுமே போதும் என்பதும், நான் சமூகஞ் சார்ந்து சிந்திக்கவில்லை,சமூக சீர்திருத்தம் பேசுகிறேன் என்பதும் சுத்த அபத்தமாக இருப்பதை உணரச் சமூகக்கல்வி இன்றியமையாதது.இத்தகைய நிலையிலும் தம்மைத்தாமே முதன்மைப்படுத்தியபடி சமூகச் சீர்திருத்தம் பேசுவதே அறிவிலித்தனமாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் மிகக் கொடுமையான தாழ்வு மனப்பாண்மையானது மிகக் கெடுதியான திமிராக மேலெழுகிறது.இது ஏன்-எப்படி உருவாகிறதென்பதை உணரத் தவறும் ஒவ்வொரு பொழுதும் குறிப்பிட்ட நபர் தன்னையும் எம்மையும் முட்டாளாக்கி விடுகிறார்.
இத்தகையவொரு சூழலில் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு"அதிகாரவர்க்கம்"செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்.இவர்கள் தம்மை ஏதோவொரு சமூகக் கருத்தாண்மைக்குப் பலிகொடுத்துவிட்டுச் சமூகச் சீர்மை செய்வதாகக் கனவு காண்கின்றனர்.இத்தகைய கனவை முன்தள்ளிக்கொள்ளும் முனைப்புக்குப் பெயராகப் பெரியாரை-மார்க்சை,அம்பேத்காரை,அண்ணாவை என்று தமக்குத் தெரிந்த தெரிவுகளோடு முன் வந்துவிடுகிறார்கள்.ஆனால்,அவர்களது செயலூக்கத்தைச் சரிவர அவர்களே புரியாது தடுமாறுகிற நிலையில் மற்றைய கருத்துக்களை மனதார ஏற்பதற்கான சிந்தனைத் தெளிவற்று அனைத்தையும் போட்டுக் குழப்பி எடுப்பதில் தமது காலத்தை விரையாமாக்கி விடுகிறார்கள்.இதுதாம் அப்பாவித்தனமானது.
இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.இவர்களே எல்லோரையும் தமது சொந்த அளவுகோல் கொண்டு அளந்தெடுக்கிறார்கள்.தத்தம் படிப்புக்கு-அறிவுக்கு நிகராக மற்றவர் இல்லை என்றும் வாதிடுகிறார்கள்.இவர்களே பற்பல கட்டத்தில் தமக்கு மட்டுமே கல்வி-மொழியறிவு,பிறமொழியறிவு இருப்பதாகவும் மற்றவர்கள் சோணைகிரிகள் என்றும் சிறுபிள்ளைச் சிணுங்கலைக் கட்டவிழ்த்துவிட்டுத் தாண்டவம் ஆடுகிறார்கள்.இத்தாண்டவத்தை "சோபா சக்தி-யமுனா இராஜேந்திரன்" குடுமிப்பிடிச் சண்டையில் மிக இலகுவாக நாம் இனம் காணமுடியும்.இத்தகையவொரு நிலை ஏலவே தமிழ் மணத்தைப் பிடித்தாட்டுகிறது.அது பற்பல உடலியற் கூறுகளைத் தனக்குக் குறியீடாக்கியபடி ஏதோ சொல்ல முனைந்து தோல்வியில் தத்தளிக்கிறது!
இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது.இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும் பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல.இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள்.இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன.மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும்.இந்த நாடுகளில் உருவாக்கப்படும் "கருத்தியல் வலுவை" எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவு;வுண்மை இலகுவாகப் புரியமுடியும்.
அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த ப+ர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.இதன் தொடர்ச்சியே இப்போது அதீத தனிநபர் வாத்தைத் தூண்டிவிட்டபடி நமது பல்தேசியக் பகாசூரக்கம்பனிகள் படுத்தும்பாடோ எத்தனையோ பெயர்களில் சமூகச் சீர்திருத்தம் செய்ய முனைகிறது.அதன் போராட்டக்காரர்களே இப்போது நாத்தியெடுக்கின்றார் நம்மை,நாமோ முகத்தைத் திருப்பி வேறுதிசை பார்த்திருக்க முடியாது இதையும் எழுதித்தாம் தீரவேண்டியுள்ளது.
ப.வி.ஸ்ரீரங்கன்.
15.03.2008

Subscribe to:
Posts (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...