யுத்தமற்ற வாழ்வு: "அழகானது".
இந்தவுலகத்தின் இன்றைய சமூகவுளவியலானது வெறுமனமே கனாக்காணும் மனதை எல்லோருக்கும் வழங்கியுள்ளது.திட்டமிடப்பட்ட இந்த மனோபாவமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆரோக்கியமாக வளரும் ஒரு நிலையை எய்திடுவதற்கு எந்த வழியுமில்லை.இருக்கின்ற வழிகளெல்லாம் ஒவ்வொரு பெரும் தொழில் நிறுவனத்துக்கோ அல்லது பெரும் கட்சிக்கோ சொந்தமான வழிகளாக இருக்கின்றன.அந்தந்தக் காலங்களில் அந்தந்த அமைப்புக்குச் சாதகமானதாக இருந்த நிறுவனங்களின் காலங்கள் போய்,இப்போது ஒவ்வொரு பெரும் குடும்பங்களுக்குச் சொந்தமான உடமையாக இருப்பவைகளைக் காப்பதற்காகவே குடும்ப நிறுவனங்களாக-மேல்மட்ட அமைப்புகளாக இவை நிலை பெற்றுவிடுகின்ற சூழலில், கருத்துக்கள் கட்டியமைக்கப்படுகின்றன.மொத்தமான கூட்டு அமைப்பானது எவ்வளவுதாம் நாகரீகமான அமைப்பாண்மைக் கொண்டிருப்பினும் அது ஆண்டான் அடிமைச் சமூகத்தின் அதியுயர்ந்த அடக்குமுறையைக் கொண்ட சமுதாயமாக விரிவுற்றுள்ளது.இங்கே மனித சமூகத்தின் முழு ஆக்கத் திறமையும் மிகவும் கேவலமான சந்தையாக வடிவுற்றுள்ளது.இந்த அமைப்புள் தோற்றிவைத்துப் பூசி மெழுகும் எண்ணவோட்டமானது எப்பவும் இந்தவுலகத்தின் ஆளும் வர்க்கத்தின் இருப்பை அசைக்காத எண்ணங்களாக விரிகின்றன.இவற்றைச் செய்து முடிக்கும் பெரும் கல்விக் கழகங்கள் தமது நெறியாண்மையின் அதீத பலாபலனாகத் தயாரித்து வெளியேற்றும் மனிதர்களோ இந்தச் சமுதாயத்தின் மிகக் கெடுதியான பெரும் பொறுக்கியாக நிலைபெறுகிற உளவியலைச் சற்றும் பொருந்தாத காலத்துக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்வதில் தனது அதீத புத்திசாலித்தனத்தை ஏலம் போடுகிற தரணமே அவனது-அவளது எல்லையற்ற அறிவின் நாணயம் அம்பலத்துக்கு வரும் தரணமாக இருப்பதில் எந்த வியப்புமில்லை.
சிலருக்கு யுத்தமற்ற சமூகச் சூழல் பெரு விருப்பாக இருக்கிறது.பலருக்கு யுத்தமே வாழ்வுக்கான அடுத்த நிலையாக இருக்கிறது.அடிமையாய் இருப்பவன் தனது அடிமை விலங்கொடிக்கப் போராடாதிருக்க முடியாது.போராட்டமே அவனக்கு வாழ்வாக இருக்கிறது.அற்பமான வாழ்வுச் சுகத்துள் மூழ்கடிக்கப்பட்ட நடுத்தர வர்க்க அறிவானது எப்பவுமே தனது மொன்னைத் தனமான கருத்தியல் மனதை கடைவிரிக்கத் தயங்குவதில்லை.அந்தக் கடைவிரிப்பை அழகு நிறைச் சுகமாக இன்னொரு நடுத்தர வர்க்கத்து உறுப்பு உணரும்போது அங்கே முழுமொத்தச் சமுதாயத்தையும் ஒரு குட்டைக்குள் அடக்கும் அளப்பெரிய "அறிவு"நிலையெடுத்துவிடுகிறது.இவர்கள் போடும் "பெரும்-குறுங்"கதையாடல்கள் எல்லாமே புனைவுதாம் என்ற "பேருண்மையை"மகாபேறாகப் பெற்றதாகச் சொல்லும் அழகு தனித் தன்மையிலானதென்று நாமும் நம்பத்தாம் வேண்டும்.இல்லையோ நம்பத் தகுந்த காரணங்களாக இசங்களுக்கு வலியெடுத்த கதைகளை அவர்கள் பைபிள் பாணியில் மொழிவார்கள்.இதைச் சொல்வதற்காக அப்பப்ப அரிப்பெடுத்த மனிதர்களின் வம்பளப்புகளைக் கண்ணே மணியேயெனச் சொல்லிச் சமூக இயக்கங்கங்கள் அவற்றின் அதீத இயக்கப் பாடுகளெல்லாம் புனைவுக்குள் வந்தொதுங்கிவிடும்.அப்பாடா இந்த யுத்தமில்லாத தரணங்கள்-சூழல்கள் மிக இனிமையானதுதாம்.அந்த இனிமைக்குள்ளும்,அழகுக்குள்ளும் அழிபவர்கள் அந்தச் சமுதாயத்தின் பொருள் குவிப்புள் குருதி கொட்டிச் சாகும் பெரும் பகுதி மனிதர்களே!
எந்த அழகும் எல்லோருக்கும் பொதுவானதாகத் தோன்றமுடியாது.
பசியோடிருப்பவர்களுக்குக் கருவாட்டுக் குழம்பும் ஒரு தட்டுச் சோறுமே மிக அழகானதாக இருக்கும்.
இதுவல்லாத பேர்வழிக்கு இஞ்சி இடுப்பு அழகாக இருக்கும்.இந்த இரண்டுமே ஒரே நேர் கோட்டில் சந்திக்கும்போது,ஒன்;றை இன்னொன்று தாழ்த்திச் சென்று தத்தம் வர்க்கத் தளத்தைக் காப்பதற்கெடுக்கும் முயற்சியே யுத்தமாக வெடிக்கிறது.
ஆக யுத்தம் என்பது தொடர் நிகழ்வு.அது வர்க்கங்களாக மக்கள் பிளவடையும் அந்தப் பொருள் வளத்தின் பெரு நிலையெடுப்பில், ஒரு சமுதாயம் எதைக் கூவி விற்க முடியும்?
சமீப காலத்து ஈழத்து மனிதர்களுக்குச் சவம் பார்த்தே சலித்துவிட்டது.
அவ்வளவு மோசமான சமூக வாழ்வு இவர்களுக்கு மட்டுமல்ல.இந்தவுலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தச் சீவியம் நிலைபெற்;றேயிருக்கிறது.ஒரு நேரக் கஞ்சிக்காகவும் உடலைக் குளிரிலிருந்து காப்பதற்காகவும், ஒதுங்கும் கொட்டிலுக்காவும்,தாகம் போக்கும் நீருக்காவும் உழைப்பவன், உருப்படியாய் வாழ்வதென்பதை யுத்தமற்ற சூழல் ஒரு போதும் அனுமதிக்காதிருக்கும்போது,அந்தச் சூழல் அவனுக்கு-அவளுக்கு யுத்தச் சூழலே!இங்கிருந்து அழகிய மனதையோ அல்லது விருப்புடைய அக வளர்ச்சியையோ அவர்கள் பெறுவதான நிச வாழ்வு கற்பனையில் நிலைப்படுகின்ற ஒவ்வொரு தரணத்திலும் இந்தச் சமுதாயத்தின் வீரீயம் எந்தக் கோடியில் இருக்கிறது?
கடைக் கோடியில் என்று சொல்லிவிடலாம்.ஆனால் அங்கே மனித உழைப்பும் மானுட தரிசனமும் அல்லவா அந்தக் கடைக் கோடி நிலைக்குள் உறைந்து போகிறது!இந்த உறைவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடம் வலம் தெரியாது அழகு குறித்து ஏங்குகிறது.இதற்கான திசைவழியாக அது நிறுவ முனையும் காரணங்கள் அற்ப ஆசையின் விளைவாக விரிகிறது.இது அறிவு நாணயத்தைப் பேணும் ஓரிரு சந்தர்ப்பங்கள் தன்னைக் குறித்த மட்டுப்படுத்தப்பட்ட புரிதல்களில் மையமுறும் தரணங்களே அதிக பட்ச அறிவாகத் தோற்றமுறும்.
கடந்த காலமானாலுஞ்சரி இல்லை நிகழ்காலமானாலுஞ்சரி மனிதாண்மை மறுத்தொதுக்கப்பட்டு பொருள் குவிப்பின் அதீத வேட்கை, எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்தமற்ற பூமியையும் மனித வாழ்வையும் அனுமதிப்பது கிடையாது.அங்கே யாரை யார் எதிர்த்து யுத்தஞ் செய்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாக முன் நிற்கும் சந்தர்ப்பத்தில் இந்த"ஜனநாயகம்-சுதந்திரம்-மனிதாபிமானம்"போன்ற ஆயுதங்கள் முன் வந்து, நியாப்படுத்தப்படும் கொலைகள் ஏராளம் இந்தப் பூமில் தினம் விழுகிறது.இதைப் பெரிதுபடுத்தாமல் மெளனமாக அங்கீகரித்த குழந்தைகள் இன்று பாடும் சங்கீதமோ"யுத்த மற்ற வாழ்வு அழகானது"என்று நீளும் போது சிலர்"ஆமாம்"போடுவதில் என்ன கரிசனை இவர்களுக்கு அப்பாவி மக்களில்- வாழ்வில்?
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் எந்த இயக்கத்தில் நாம் இருக்கிறோம்?
தேசத்துக்காகவெனத் திருடப்படும் மனிதவுயிர்களின் அழகு புரிந்துகொள்ளப்பட்ட எல்லா அழகையும் போன்ற அழகுதாம்.அத்தகைய அழகைத் திருடும் யுத்தம் வலிந்துருவாக்கப்படும் தரணங்கள் மிகச் சாதரணமான யுத்தமற்ற அழகைத் தின்றுவிடுவது எல்லா மனிதர்களினதும் தேவையோடு நிகழ்பவையல்ல.அது மனிதவுணர்வுகளுக்குக் கட்டுப்படாத(உழைப்பாளர்களின் உணர்வுகளுக்கு) பொருளாதாரத்தின் "இயக்கம்-இருப்பு-பெருக்கம்"எனும் பொறி முறையால் உந்தப்பட்ட ஒரு ஜந்திரத்தனமான ஊக்கத்தால் நிகழ்கிறது.அங்கே நிகழும் தொடர் யுத்தம் பொருளைக் குவித்து உழைத்து வரும் உடல்களைச் சல்லடையாக்கும் ஆளும் வர்க்கத்தின் கனவோடு தொடர்கிறது.மனித சக்தியை ஜந்திரத்தின் உறுப்பாகவும்-உதிரிப்பாகமாகவும் கணித்த இன்றைய பொருளாதார விஞ்ஞானம் மற்றையவொரு புதுமையான உலகைக் கற்பனையுள் கட்டிப் போட்டிருக்கும் தரணம் நமக்கு யுத்தமற்ற சூழலாக விரியும்.அது இன்றைய மூலதனத்தின் ஒரு பகுதி வெற்றிக்கான திறவு கோலாக இருக்கிறதென்பது வாழ்க்கையின் மெய்ப்பாடு.
அந்தரித்து,அல்லற்படும் மக்கள் கூட்டத்துக்கு அப்பன் ஜேசுநாதர் வானத்திலிருந்து குதித்துவந்து விடுதலையளிப்பதாகச் சொல்லும் தினகரனும் அவனது மாமிசப்பிண்டங்களும் பெறும் கூலியோ அமெரிகச் சன்மானமாக அவனது குடும்பத்தைக் கோடிகளில் நீந்த வைக்கிறது.கூனிக் குறுகிச் சவங்களாய் கிடந்துழலும் கூட்டமோ பாவ விமோசனத்துக்காக ஏங்கும்போது, இவன் வர்ணத் தொலைக்காட்சியுள் வடிவமைக்கப்பட்ட தோரணத்தை இறையின் தூதுவனாகத் தருவதில் பெரு நாடகத்தை அருங்கேற்றும் தரணமும் யுத்தமற்ற சூழலின் அழகைத்தாம் பேசுகிறது.இந்தச் சந்தர்ப்பம் மிகவுந் திட்டமிட்ட பொருள் வளத்தின் மிகுதியான உற்பத்தியூக்கத்தை,அதன் சந்தையை நிலைப்படுத்தும் பொறியையும் பின்னால் பாவச் சுமையாகவே காவி வருகிறது.
ஆக யுத்தமற்ற வாழ்வு மட்டுமல்ல பூமியும் அசிங்கத்தின் அதீத உச்சமாகவே உதிர்ந்து போகிறது.அடிமை தன்னை விடுவிப்பதற்காகப் போராடிக்கொள்ளும் ஒவ்வொரு தரணமும் மிக அழகானது.அந்த அடிமை உயிர் துறக்கும் அந்தக் கணம் மனிதாற்றலின் உச்சபச்ச வெளிப்பாடாகும்.இது தியாகமல்ல.வாழ்வின் இருப்பு-வதையின் இருப்பு.நான் இருப்பதற்காக அழிவதும் ஒவ்வொரு தரணத்திலும் படைப்பாளுமையோடே மறுவார்ப்பாகிறது!
ப.வி.ஸ்ரீரங்கன்
27.06.2007
Wednesday, June 27, 2007
Saturday, June 02, 2007
அரசு-புலிகளின் யுத்தங்கள்...
அரசு-புலிகளின் யுத்தங்கள்:யாருக்கு அவசியமானவை?
இன்றையவுலகில் "எது,எப்படி"என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு.இதிலிருந்து மீண்டு விடாதவரைக்கும் இந்த அமைப்புக்குப் பாதகமில்லை.அப்படி இருத்தி வைப்பதற்கான தொடர் நிகழ்வுகள் மனித உடலை மையப்படுத்திய அரசியலாக விரிவுற்றுத் தொடரும்போது சமீபகாலத்து எல்லாவகைச் சமூக முன்னெடுப்புகளும் அந்தச் சமுதாயத்தின் அதீதத் தேவையோடு முரண்டுபிடிப்பதில் "பொது ஜனநாயகம்"பொலிவுறுவதாகவும் சுட்டிக் கொள்ளப்படுகிறது.இதன் தாத்பரியம் இன்னொரு வதைக்கான தொடர் நியாயங்களைச் சுற்றிக் கொண்டிருப்பதற்கான வகைப்பாடுகளை நமது சிந்தனா முறைக்குள் திணித்து விடுவதில் இன்றைய பொது அப்பிராயத்துச் சிந்தனா வகைப் பெறுமானங்கள் பாரிய பங்கை வகிப்பதாலும், அதன் அத்துமீறிய வகைமாதிரியானவொரு கருத்துத் திணிப்பாலும் நமது சமூக வாழ்வு எந்தப் பெரிய ஆர்ப்பாட்டமுமின்றித் தனித்தவொரு திசை(இருள்)வெளியில் தாந்தோன்றித்தனமாக விரிந்தபடி.
நாங்கள் தினமும் தங்கு தடையெதுவுமின்றிச் சிந்திக்கிறோம்.நமது நினைவுகள் எதையோ நம் வாழ்வுக்குள் குறித்துரைப்பதும் பின் திசை புரியாதவொரு மெல்லிய வலிக்கும் காரணமாக இருக்கிறது.எந்தத் திசைவழியுமின்றித் தனித்தியங்கும் அமைப்பாண்மை எமக்கிருப்பதாகக் கூறும் பெரும் கதையாடல்கள் இப்போது ஓய்ந்திருக்கின்றன.அவை எமக்குக் கடுப்பானவொரு உண்மையைச் சொல்லி ஓய்ந்திருக்கிறது.அந்தவுண்மைதாம் எமது வாழ்வின் அதீத தேவையாகி வருகிறது.உலகத்துள் உயிர் வாழ்வதற்கான எல்லா வகை உரிமைகளும் எமக்கு உண்டு.என்றபோதும் நாம் நமது இனம் சார்ந்த மதிப்பீடுகளால் தகவமைக்கப்பட்ட எமது இடைவெளிகளை மனிதக் கூட்டுக்குள் குறைத்துக் கொள்ளத் தக்கவொரு சிந்தனா முறைக்குள் அவசியம் கால் பதித்தாக வேண்டும்.இதன் அவசியத்துள் இருக்கும் நமது சமூகக் கட்டுமானம் எந்தப் பொருண்மையான யதார்த்தையும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.வெறும் கூச்சலுக்குள் கோரப்படும் "நமது விடுதலை"என்பது அத்துமீறியவொரு யுத்தத்தைக் கோரி நிற்கிறது.இந்த யுத்தம் எவ்வளவு காலமாகக் கண்ணீரையும்,கடுப்பையும்,அழிவையும் நமக்குள் ஏற்படுத்தியதென்றவொரு பிரக்ஞை எமக்கு இதுவரை கைகூடவில்லை.நாம் தனித்தொரு வெளியில் "தேசியம்-சுதந்திரம்,தாயகம்"எனும் கருத்து வளையங்களுக்குள் கட்டுண்டு போயுள்ளோம்.இந்த வளையங்களுக்குள் பிற பெருந் தேசிய இனங்களொவ்வொன்றும் தமது பொருண்மிய வாழ்வைத் தக்க வைப்பதற்கான பொறியோடு வாழும்போது,நாமோ கற்பனாவாதப் பொருண்மியக் கூறுகளுக்குள் பல அர்ப்பணிப்புகளைச் செய்கிறோம்.
இந்த அபரிதமான விசையூக்கம் நமது மனங்களைச் சமாதனப்படுத்தும் ஒரு வகைமாதிரியானவொரு இயலாமைக்குள் எமது ஆற்றல்களை வைத்திருக்கிறது.இந்தச் சடுதியான இயக்கத்துக்கு உதவாத "பொது நிலை"எம்முள் சிதைவுகளை மிக வலுவாகச் செயற்படுத்துகிறது.நாம் பல கூறுகளாக உடைந்து சிதறுவதில் தோற்றமுறும் இடைவெளிகள் நமது வாழ்வின் தொடர்ச்சியை முற்றாக அறுத்தெறிந்து நமக்குள் பல் வகைப் பிரிவுகளின் எதிர் விளைவுகளைப் பின்னுகிறது.இங்கேதாம் நமது எதிரிகள் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறுகிறார்கள்.இந்த நிலைமையைப் பெரிதுபடுத்தாமல் சிதைவுறுவோமெனும் போக்குள் காலாகாலமாக இருத்திவைக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தங்கள் தனித்துவங்களாக் கண்டெடுத்த ஈழப்போராட்டத்துக்கான நியாய வாதங்கள் இப்போது தவிடுபொடியாகி விட்ட நிலையில் மீண்டும் அதை வலியுறுத்தும் இன்னொரு வகைமாதிரிக்குள் வீழ்ச்சியுறுவது நியாயமற்ற போக்குத்தாம்.கடந்த கால் நூற்றாண்டாக நடைபெறும் சுயமற்ற அந்நிய நலக்கூறுகளுக்கானவொரு மனிதப் போராட்டம் நம் மக்களில் கணிசமானவர்களை விழுங்கி ஏப்பமிட்டுள்ளது.அதேபோன்றவொரு இன்னொரு விளைவு நமது சமூகத்தின் சிதைவாக விரிந்து, நாம் அந்நியத் தேசங்களில் ஏதிலிகளாகவும்,அடிமைகளாகவும் மாற்றமுற்றுச் சிதைவுறுகிறோம்.இத்தகையவொரு தாந்தோன்றித் தனமானவொரு அரசியல் பாதை எமக்குச் சாதகமற்றவொரு வாழ் சூழலைப் பிறப்பித்து இன்றுவரையும் தேசத்தின் விடுதலையெனும் பெயரால் இயக்கம் பெறுவதற்கானவொரு தார்மீக நியாயத்தை எமக்குள் நிலைப் படுத்துகிறதில் வெற்றியீட்டிவருவதும்,பின் அந்த வெற்றியால் விளைவுறும் அரசியலானாது நமது மக்களின்மீதான பாரிய அடக்கு முறையாக விரிவதில் தனது வர்க்க நிலை எதுவென்பதை உறுதிப்படுத்துகிறது.இங்கேதாம் நாம் வர்க்கஞ் சார்ந்தாற்றும் பொருள் நலன் சார்ந்த கோசங்கள் யாவும் நமது எல்லைகளை நாமே நிர்வாகித்து நம் மக்களைப் பலியெடுப்பதில் மிகக் கவனமாகத் தகவமைக்கப் படுகிறது.
யதார்த்தத்துக்குப் புறம்பானவொரு மதிப்பீடுகளைச் செய்வதும் பின் அதையே மிகச் சாதரணமானவொரு "பொதுச் சூழலாக"வரிந்து கட்டிச் செயற்பாட்டுக்கானவொரு மதிப்பீட்டை அதன் தயவில் கட்டிக் கொள்வதால் நாம் இன்று நடுத் தெருவில் நிற்கிறோம்.உலகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின,; யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி அரசியல் வெற்றியாகக் குவித்தபடி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன.
பெரும்பகுதி மக்களால் ஏற்கப்படும் ஒரு நிகழ்வில் அது பெரும் பங்கை அந்த மக்களுக்கு எதிராகவே ஆற்றும் யுத்தக் கூறுகளாக விரித்து வைக்கிறது.நமது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று எவராவது கூறுமிடத்து அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.எமது சமுதாயத்துள் இந்த நிலைமை இப்போதைய சூழலாகி வருகிறது.
எந்தவொரு மனிதாயத் தேவைகளையும் உள்ளடக்காதவொரு யுத்தம் பொதுவில் மக்களால் செய்யப்படுவதில்லை.அத்தகையவொரு யுத்தத்தை வரலாறு வர்க்கப் போராட்டமாகவே உறுதி செய்திருக்கிறது.நாம் இதுவரை கண்டிருக்கும் ஒவ்வொரு யுத்தங்களின் பின்பும் பாரிய உயிரழிவு சாட்சியாகப் பின் தொடர்கிறது.இன்றைய இலங்கைக்குள் நடை பெறக் காத்திரக்கும் "யாழ்பாண"உரிமைப் போராட்டம் இலங்கைச் சிங்களத்து ஆளும் வர்க்கத்தின் இருப்பை நிலைப்படுத்துவதற்கானதல்ல.மாறாகச் சிங்கள அரசியல் ஆதிக்கத்தை நிலைப் படுத்துவதற்கானவொரு அதீத யுத்தம் மக்களைக் கொல்வதற்கான நியாயங்களை"இறைமை"எனும் கருத்தாக்கத்தால் சமன் படுத்திவிடுவதில் முழுப் பிரச்சாரத்தையும் முந்தியடித்துச் செய்கிறது.இங்கே இயக்கம்-அரசு எனும் இரண்டு அமைப்பாண்மையும் நேருக்கு நேர் நின்று மக்களை ஏமாற்றித் தமது சுய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
இவைகளின் பின்னே நிழலாகத் தொடரும் அந்நியக் கரங்கள் நமது வாழ்வைப் படு குழியுள் தள்ளியவொரு அரசியலை யுத்தச் சூழலுக்குள் மென்மேலும் விருத்தியாக்கி வருகின்றன.இந்தப்படுபாதகப் போக்கைத் தீர்மானிக்கும் உட்புறக் காரணங்கள் யாவும் ஒருதரப்பு நியாய வாதமாக்கப்பட்டு அதுவே அந்தந்தத் தேசங்களின் "இறைமை"என்ற கோசத்தோடு வெளியரங்குக்கு நியாயங் கற்பிக்கப் படுகிறது.இந்த இறைமைக்குள் மறைந்துபோய்க் கிடக்கும் வர்க்க நலனானது தேசத்தை, ஆளும் வர்க்கத்தின் மிகவுறுதியான இருப்புக்கானதாகவே இதுவரை உணரப்பட்டு வருகிறது.எனினும், இத்தகைய கோசத்தின் அதீத நோக்கானது மிக விருத்தியாகி வரும் பொருளாதாரத்தின் அதீதத் தேவையான சந்தைகளைப் பங்கீட்டுக்குள் கொணர்வதும்,அதைப் பலப்படுத்துவதுமாகவே இருக்கிறது.இன்றைய இலங்கையானது மிகவும் இராணுவமயப்படுத்தப்பட்டு,நவீன போர்த் தளபாடத்துடன் இந்திய எல்லையில் உருப்பெறும் அந்நிய நலன்கள் நிறைந்த தேசமாகும்.இந்தத் தேசத்தின் இராணுவப் பொறிமுறைகளை யார் முன்னிலைப்படுத்தித் வளர்த்து வருகிறார்களென்பதை நாம் ஓரளவேனும் புரிந்திருப்பதற்கான சந்தர்ப்பங்களை நாமே உருவாக்காது வெறும் யுத்த வாதங்களுக்குள் மூழ்கிக் கிடப்பதில் எந்தப் புத்திசாலித்தனமுமில்லை.
இலங்கையை இன்னொரு "எத்தியோப்பா-எரித்திரியா"வகை மாதிரியாக்கி வைத்திருக்கும் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இந்திய நலன்கள் அந்தத் தேசத்துள் மலினப்படுத்தும் யுத்த முனைப்புகளானது எப்போதுமே நமது மக்களின் வாழ்வாதாரவுரிமைகளோடு பாரிய முரண்பாட்டைக் கொண்டிருப்பினும் அவை "ஜனநாயகம்,மனிதாபிமானம்,மனிதவுரிமை"எனும் மாய்மாலங்களால் அத்தகைய பாரிய முரண்பாட்டைப் பின் தள்ளிச் சிங்கள மூலதனத்தின் உறுதிப்பாடுகளையும் அதன் அத்துமீறிய அபிலாசைகளை நியாயப்படுத்துவதில் இத் தேசங்கள் முனைகின்றன.இதன் மெய்பாடு புரிந்துகொள்ளத்தக்க அளவுக்கு மிக வெளிப்படையாக இருப்பதில்லை.சிங்கள ஆளும் வர்க்கத்தின் அதீத பொருளாதார அபிலாசைகள் தமிழ் மூலதனத்துடன் போட்டியைக் கொண்டிருப்பது மிக இயல்பானவொரு முரண்பாடாகவே இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது.இதன் போக்கில் எந்த மாற்றமும் இதுவரை நிகழாதபடி இந்தியச் சகபாடிகள் இலங்கைக்குள் வலையை விரித்து காத்திருக்கிறார்கள்.இது இந்தியப் பிராந்திய நலன்களெனும் இந்திய ஆளும் வர்க்கத்தின் இருப்போடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது.இந்தியாவின் பாதுகாப்பு என்பது,எப்போதும் இந்தியாவின் சிறுபான்மைத் தேசியங்களின்-தேசங்களின் சிதைவைத் தக்கவைப்பதும், ஒருங்கமைந்த பாரிய இராணுவத்தால் உட்கொள்ளப்பட்ட ஒரு தேசம் எனும் போர்வைக்குள் இருத்திச் சுரண்டுவதாகவும் இருப்பது இன்றைய மெய்மையாகும்!இதற்கிசைவானவொரு முன்மாதிரித் தேசமாக இலங்கைத் தேசிய இனங்கள் இருத்திவைக்கப்படுவது செயற்கையாக ஒருங்கமைக்கப்பட்ட இந்தியாவிலுள்ள இருபதுக்கு மேற்பட்ட தேசங்களின் அடிமை வாழ்வுக்கு அவசியமாகிறது.இலங்கையெனும் ஒரு சிறிய தேசத்துள் இவ்வளவு குழறுபடிகளைச் செய்யும் அகன்ற இந்தியா,இலங்கைமீது எத்தகைய இராணுவப் பலத்தையும் புலிகள் மேற்கொள்வதைக் கண்கட்டிப் பார்த்திருப்பெதென்பது அதன் தற்கொலைக்கு நிகராகவே இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது.புலிகள் என்பது தமிழ்பேசும் மக்களின் தேசிய இராணுவமென்று அது கருதுவது கிடையாது.அந்நிய நலன்களின் வளர்ப்புப் பிராணிகளாகவே இந்திய ஆளும் வர்க்கத்துக்குப் புலப்படும் புலிகள் உண்மையில் தமிழ்பேசும் மக்களைப் பின் புலமாகக்கொண்ட-அவர்களின் நலனுக்கான விடுதலைப்படையென்பதும் ஒரு பகுதி உண்மைதாம்!புலிகளின் அந்நியத் தொடர்புகள் மற்றும் வர்க்க நிலை,அவர்களை அந்நிய நலன்களின் ஏவற்படையாகவே தொடர்ந்திருத்தி வைக்கிறது.என்றபோதும் அவர்களின் பின்னே தொடர்கின்ற இளைஞர்களின் கனவுகள் தமிழ்பேசும் மக்களின் நலன்களுடன் மிகவும் பின்னப்பட்டவை.
இந்த நிலையுள் புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்த யுத்த முன்னெடுப்பையும் ஒரு கட்டத்துக்கு மேல் இந்திய நலன்கள் அனுமதிப்பது கிடையாது.புலிகளால் இலங்கையின் ஆதிக்கத்தை தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலத்திலிருந்து துடைத்தெறியுமொரு நிலையை இந்தியத் தேசம் விரும்புவது கனவிலும் இல்லை.புலிகளால் பாரிய நிலப்பரப்புகள் வென்றெடுக்கப்பட்டு,அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் அவை இலங்கையின் ஆதிக்கத்துள் உட்பட்டவையே.தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதரங்களை இலங்கையின் தயவிலேயே பெற்று வாழும் எந்தப் பகுதியும் அதன் ஆதிக்கத்துள் இருப்பது தவிர்க்க முடியாது.இதன் உண்மையைப்"பிரபாகரனுக்கு உணவு போடும் நாங்கள்,தமிழ் மக்களைப் பட்டுணி போடுவதற்கில்லை"எனும் சிங்கள தேசத்து அறைகூவலுக்குள் இனம் காணலாம்.
அற்பத்தனமாக அரசியல் கூச்சல்கள் போடுவதற்கு நாம் கடந்து வந்த பாதைகள் விடுவதாகவில்லை.தொடர்கிற யுத்தங்களால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்.நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய யுத்தங்கள் எமது தேசத்துள் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தருவதற்கில்லை.மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்துள் மக்களை இருத்திவைப்பது எந்தக் காரணங்களுக்காவென்றாலும் அது மக்கள் விரோதப் போக்கே!
தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள்.ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளால் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்தோங்கியுள்ளது.இலங்கையில் வாழும் மக்கள் தமது விடுதலையைச் செய்வதற்கான யுத்தமானது தனியே சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரானதாக இருப்பதில்லை.அது சாரம்சத்தில் இந்தியாவுக்கு மற்றும் உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.இலங்கையிலுள்ள இரணுவத்தின் தோல்வி இறுதியில் இலங்கையில் புரட்சிகரமான மாற்றத்துக்கு அதை இட்டுச் செல்லும் என்பதை நன்குணர்ந்த அந்நியத் தேசங்கள் என்றைக்குமே சிங்கள இராணுவத்தைப் பலப்படுத்தியே வந்திருக்கின்றன.இத்தகைய பலப்படுத்தலை இந்திய ஆர்வம்,அதன் நலன்கள் மட்டுப்படுத்த விரும்பும் ஒவ்வொரு தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை அது பேசும் அல்லது தூக்கிப் பிடிக்கும்.இத்தகைய சித்து விளையாட்டை அது இலங்கைக்குள் செய்தே வந்திருப்பதை நாம் நன்றாய் அறிவோம்.எனவே, இலங்கை இராணுவமென்பது இந்திய மற்றும் அந்நியத் தேசங்களின் நன்களின் வாயிலாகக் கட்டப்பட்டவொரு பாசிச இராணுவமே.இதைக் கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த முனையும் தந்திரோபாயத்துள் புலிகளின் இருப்புச் சாத்தியமாகிறது.இதுவரையான எந்த யுத்தமும் எமக்கு நன்மை பயக்கவில்லை.இனியும் அப்படியே.
இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் யுத்த முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதையுணர்ந்த இந்தியா,இலங்கை அரசியலுக்குள் இருக்கும் சிறுசிறு கட்சிகளையும் குழுக்களையும் உசிப்பி விட்டுத் "தீர்வுத் திட்டம்"வரைந்து சமர்ப்பிக்கும் (சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன்மொழிந்திருக்கும் இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை மையமாகக் கொண்டு இறுதித் தீர்வு யோசனைகளை தயாரிக்க கொள்கையளவில் உடன்பாடு கண்டுள்ளது...)நிலைக்குள் தள்ளியது மக்களை ஏமாற்றுஞ் சதியுடன் சம்பந்தப்பட்டது.
எமக்கான சிந்தனைத் தளம் இதுவரை நம் நோக்கிலிருந்து எழமுடியாது போயிற்று.எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தரணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.
இந்த நிலையில் யாழ்பாணத்தைப் புலிகள் பிடிப்பதற்கோ அல்லது இலங்கை இராணுவம் வன்னியைப் பிடிப்பதற்கோ பெயர் விடுதலை அல்ல,மாறாக அந்நிய நலன்களின் அதீத முரண்பாடுகள் முட்டிமோதுவதென்தே உண்மை!
இதுள் நமது மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு அந்நிய மூலதனம் செழிப்பாகுவதற்கு எங்களுக்குள் இருக்கும் அரசியல் பெருச்சாளிகளும் உடந்தையாகி வருவது நமது மக்களின் சாபக்கேடே.
ப.வி.ஸ்ரீரங்கன்
02.06.2007

Subscribe to:
Posts (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...