Sunday, July 02, 2006

இராஜீவ் கொலை-புலிகள்,தொடரும் கதைகள்...

இராஜீவ் கொலை-புலிகள்,தொடரும் கதைகள்...


கொழுவி,சும்மா"நாங்கதான் செய்தம்"என்று வீம்பு பேசாமல்,இக்கொலையை யாரினது ஒத்துழைப்புடன்-யாருக்கு அவசியமாகச் செய்யப்பட்டதெனப் பார்ப்பதும் அவசியம்.

நாம் புலிகளின் போராட்ட-யுத்த தந்திரோபாயத்தை-பொருளாதாரக் கொள்கைகளை,வர்க்கப் பிரதிநிதித்துவத்தை,பாசிசப்படுகொலைகளைக் எதிர்ப்பதும்,அதற்கெதிராகப் கருத்து வைப்பதும் எல்லோரும் அறிந்தது.எனினும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும்,எமது மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் எதற்காகவும்-எவருக்காகவும் விட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டியென்பதைக்கூட ஒரு ஷோசலிசச் சமுதாயத்தில்தாம் "எந்த நேரமும் பிரிந்து போகக்கூடிய" சுயநிர்ணயச் சமஷ்ட்டியென்கிறோம்.

இதுதாம் எமது மக்களின் அரசியல் அபிலாசையின் நியாயமான கோரிக்கைக்குத் தீர்வாக இருக்கமுடியும்.

முதலாளிய அரசான இலங்கையில் மற்றெல்லாத் தீர்வுகளும் தமிழர்களுக்கு விலங்கே.
இங்கே புலிகள் அரசியலால் எமது மக்களின் சுயநிர்ணயப் போரை எவரும் கொச்சைத் தனமாக மறுக்கமுடியாது.

அங்ஙனம் மறுப்பவரோடு கருத்தாட எமது இந்தப் பதிவினூடாக தமிழகத்து அன்பர்களை அழைப்பு விடுகிறேன்.

இராஜீவ் கொலையை இந்திய மனதோடு பார்ப்பதைவிட பஞ்சாப் மனதோடு- இந்திரா அம்மையார் படுகொலை செய்யப்பட்ட மனதோடு-சஞ்சீவைக் கொன்ற-காந்தியைக் கொன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் விய+கத்தின் மனதோடு ஆழ்ந்து ஆராயவேண்டும். இந்திய ஆளும் வர்க்கப் பிளவுகளும்,அவர்களின் நலன்களுமே இத்தகைய கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

எமது மக்களைக் படுகேவலாமாகக் கொன்ற இந்திய இராணுவத்தின் முதல் பொறுப்பாளர் இராஜீவ்தான்.

எந்தவுலகத்திலும் இராணுவம் அரசியல்-நாட்டின் தலைவரின்,பாதுகாப்பு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள்ளேதாம் காவடி எடுக்கிறது-கொலை,பாலியல் பயங்கர வதைகளைச் செய்கிறது.எனவே நாட்டின் தலைவன்தாம் முதலில் பொறுப்பாளியாகிறார்.

"அண்ணா,அண்ணா-மகனே என்னைக் காப்பாத்தடா"தம்பி ஓடியா,இவன்களிடமிருந்து என்னைக் காப்பாத்தடா"எண்ட எங்கள் தங்கை,தாய்மார்கள்,அக்காமார்களை காப்பாத்த முடியாது, தவித்த தேச பக்தச் சிறார்கள்-தம்மால் இந்தியப் பாசிச இராணுவத்தை எதிர்கொள்ள முடியாதென்று தெரிந்தும் எதிர்த்துச் செத்தார்கள்.
இது வரலாறு.

இட்லிவடைபோன்ற எருமைகளுக்கு இது ஒருபோதும் உறைக்க முடியாது.

இராஜீவ் கொலைக்கு முதலில் வி.பீ.சிங்கிடம் ஒத்திகையைச் செய்விக்க ராவ் உடந்தையாக இருந்தது.பின்பு இராஜீவைக் கொல்வதற்கு உலகத்துக்கே தண்ணிகாட்டும் இந்திய உளவுப்படை ஒத்தாசை புரிந்தது.

இங்கே தமிழ்நாடே தேர்ந்தெடுக்கப்பட்டது.இதை ஒழுங்காகக் கவனிக்கவும்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இப்படியொரு சதியை ராவ் உளவுப்படை இங்ஙனம் செய்கிறது.

இந்தியாவின் ஆளும் வர்கத்தின் நலனும்-இந்தி இந்தியாவின் தேசிய ஒருமைப்(!!!???)பாடும் ஈழத்தின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கிறது.எங்கே ஈழம் மலர்ந்தால்,அது தமது அடக்கு முறைத் தேசிய ஒருமைப்பாட்டுக் ஆப்பு வைத்து-இந்தியத் தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் பிரிந்து போய்விடுமென்ற இந்தியத் தரகு முதலாளியம் பெரும் சதியை "பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மனதினூடாகச்" செய்து முடித்தது.

இங்கே புலிகளின் அரசியல் புரட்சிகரமற்றதால் இதற்குச் சோடைபோனது.

ராவ் உளவுப்படையின் திட்டம் இப்படி அமைந்தது:

1:அதாவது தமிழ் நாட்டில் இராஜீவ் கொல்லப்படும் போது தமிழகத்து மக்களின் தொப்புள்கொடி உறவை அறுத்தெறிதல்,எப்போதும் ஒரு வரலாற்று வடுவை-குற்றுவுணர்வைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தித் தமிழகத்தை,அதன் விடுதலையைப் பின் தள்ளுவது.திரவிடக் கருத்தியலை வலுவிழக்க வைத்தல்-இந்திய தேசியத்தை மிக வலுவாக்கிக் கொள்ளும் வகையில் கருத்தியல் வலுவைத் தக்கவைத்தல்.

2:இந்திய ஆளும் வர்க்கங்களுக்குள் ஒரு சாரரைக் காக்கும் காந்தி குடும்ப பரம்பரை அரசை உடைக்க முனையும் மற்றப் பிரிவு ஆளும் வர்க்க நலனை முன்னிறுத்துதல்-பி.ஜே.பி.அதிகாரத்துக்குவர வழிகளைத் திறத்தல்

3:ஈழமக்களின் சுய நிர்ணயப்போரை உலகுக்குப் பயங்கர வாதப் போராகக் காட்டல்.

4:தமிழகத்தில் பெருகிவரும் ஈழத் தமிழ் மக்கள் ஆதரவைப் ப+ண்டோடு அழித்தல்.

5:தமிழகத்து அரசியல் கட்சிகளின் ஈழ ஆதரவுத் தீர்மானங்களை-எதிர்ப்புப் போராட்டங்களைச் சட்டப+ர்வமாகத் தடை செய்து பயங்கரவாத முன்னெடுப்பாகக் காட்டுதல்.

6:புலிகளை இந்தியாவால் தடை செய்வதற்கும்,தமிழகத்து மக்களை எதிர்ப்பின்றி கிடப்பதற்கான அரசியில் நெருக்கடிக்குள் தள்ளுவதும் கூடவே மாறிவரும் இந்தியப் பிராந்திய அரசியல் விய+கத்தில் இலங்கையின் பிளவில் ஈழத்து அரசு இந்தியாவைச் சாரும்போது இலங்கை எதிர் நிலைக்குப் போகும்.அங்ஙனம் போவதும் ஒரு கோடி சிங்களச் சனங்களின் சந்தை இழப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரானது-அதைத் தடுப்பதற்கும்.

இப்படிப்பல நலன்கள் இருக்கிறது.இராஜீவ் கொலையின் அவசியமென்பது இந்திய உளவுப்படையின்-ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு அவசியமாக இருந்தது.இதை கோட்சேயின் மொழியில் சொன்னால்:


" இராஜீவ் காந்தி இல்லாத அரசியல் ஆர் .எஸ்.எஸ்-பாரதிய ஜனதாவுக்கும் அவர்கள் பிரிநிதப்படுத்தும் ஆளும் வர்க்கத்துக்கும் நிச்சியமாகக் காரிய சித்தியுடையதாகவும்,எதிரடி கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்,பிரியப் போகும் இந்தியத் தேசிய இனங்களை மீளவும் கட்டிப்போட்டுப் புதிய தலைமையின் கீழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறைக் கூடமாக்க முடியும்."

இது கோதாரி புடிச்சது நீண்டுபோகிறது.

இத்துடன் முடித்து விவாதம் தொடரும்போது தொடர்வோம்.
இராஜீவ் கொலையைச் செய்வித்தது இந்திய ஆளும் வர்க்க ஒரு பிரிவே!இதற்குப் பலியானது இராஜீவ் மட்டுமல்ல புலிகளும்தாம்-ஈழத்தமிழ் மக்களும்தாம்.

இங்கே இட்லி வடை எழுதுவது சூழ்ச்சி மிக்கது.

இவரினது அரசியல் காலா காலமாகத் தொடரும் "இந்து-இந்தி.இந்தியா"எனும் பார்ப்பனியக் கருத்தியல் மற்றும் இராணுவ மேலாண்மையின் வெளிப்பாடே.
இங்கே பார்ப்பனியமென்பது இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் மேல்மட்டக் கருத்தியல் பண்பாட்டு மேலாண்மையாகும்.இது சாதியை இழுப்பதல்ல.இந்தப் பார்ப்பனிய மேலாண்மை இந்தியத் தொங்கு சதை நாடுகளான இலங்கை,நேபாளம் முதல் தொடர்கதையே.

மீளவும் சொல்வோம்:இராஜீவைக் கொன்றது இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவின் செல்வாக்குக்குட்பட்ட ராவ் உளவுப் படையே.இதற்கு அடியாளான நிலையே புலிகள்.

பாலசிங்கம் பகிரங்கமாக ஒத்துக்கொள்வது காரணத்தோடுதாம்.இதைப் புரிந்துகொண்ட இந்திய ஆளும் வர்க்கம்,உளவுப்படை தம்மைப் புலிகள் அம்பலப்படுத்தி விடுவார்களோவென அஞ்சுகிறார்கள்.

இங்கே புலிகளை இந்தியா அணைத்துக்கொள்வது காலப் போக்கில் நிகழ்வதற்குப் பாலசிங்கம் விளையாடும் அரசியல் சதுரங்கம் இது.

இதுதாம் புலிகளின் இறுதி ஆஸ்த்திரம்.நாகாஸ்திரத்தை ஒரே ஒருமுறைதாம் எய்யும்படி வேண்டுமென தாய்ப்பாசத்தை வைத்துச் சூதாடினான் கண்ணன்.இங்கே இந்திய ஆளும் வர்க்கம் இதையே உதாரணமாகப் பின் பற்றுமா அல்லது தூங்கிற மாதிரி நடிக்குமாவென்பது புலிகளின் கைகளில்தாம் இருக்கிறது.


இட்லி வடை,பேசாமல் இட்லி வடை விற்பது நன்று.

12 comments:

Anonymous said...

//
மீளவும் சொல்வோம்:இராஜீவைக் கொன்றது இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவின் செல்வாக்குக்குட்பட்ட ராவ் உளவுப் படையே.இதற்கு அடியாளான நிலையே புலிகள்.//

நல்லா காதுல பூ சுத்துங்க....

கொலைகார கூட்டமான புலிகளுக்கு இந்தியாவைப்பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?

Sri Rangan said...

Mr.Siva,//நல்லா காதுல பூ சுத்துங்க....//



இராஜீவ் கொலையை இந்திய மனதோடு பார்ப்பதைவிட பஞ்சாப் மனதோடு- இந்திரா அம்மையார் படுகொலை செய்யப்பட்ட மனதோடு-சஞ்சீவைக் கொன்ற-காந்தியைக் கொன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் விய+கத்தின் மனதோடு ஆழ்ந்து ஆராயவேண்டும். இந்திய ஆளும் வர்க்கப் பிளவுகளும்,அவர்களின் நலன்களுமே இத்தகைய கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

சின்னக்குட்டி said...

//சஞ்சீவைக் கொன்ற//

நானும் கேள்விப்பட்டிருக்கிறன்....சஞ்சய் காந்தியின் அப்போதைய நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்துக்கு பாதகமாயிருந்தமையால்..kgp உளவு ஸ்தாபதனத்தால் சதி செய்து கொலை செய்யப்பட்டாரென்று. கூறப்படுகிறது...... நம்புவது கஸ்டமாகத்தான் இருக்கு... இது பற்றி இந்திரா காந்திக்கும் முந்தியோ பிந்தியோ தெரிந்திருக்கலாமென்றும கூறப்படுகிறது

Anonymous said...

சிறிரங்கன் அவங்கள் இட்லி வடை என்றால் நீங்கள் என்ன சாம்பாரா
அடியுமில்லாமல் நுநியுமில்லாமல் குளப்பாதீர்கள் முதலில் நீங்கள்
எந்த தளத்தில் நிற்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள் ஒரு தடவை
புலிக்கு ஜால்ரா இன்னொருதடவை எதிரில் நின்று ஜால்ரா நீங்கள் எங்கு
இருக்கிறீர்கள் என்பது இத்தளங்களை வாசிக்கும் எமக்கு ஒரே குளப்பம்
புலிஅம்மம்மாக்கள் உங்களை திட்டுவதை நீங்களாகவே நிருபித்து
வருகிறீர்கள் என்பது மெல்லமெல்ல உங்கள் கருத்துகள் மூலமாக காட்டி
வருகிறீர்கள்.இந்தியா இராணுவம் ஈழத்தில் புரிந்த கொடுமை மறக்கவோ
மறுக்கவோ முடியாத உண்மை. ஆனால் புலிகள் இந்தியா இராணுவத்துடன் யுத்தம் நடைபெறுவதற்கு முன் என்ன நடந்தது அதற்கு
பின்பு இந்தியா இராணுவம் இலங்கயை விட்டு வெளியேறியது ஏன்
என்பது பற்றி உங்களால் பகிரங்கமாக (முறிந்த பனை போன்று) விவாதிக்கமுடியுமா...? இதைவிடுத்து பேராசிரியர் சிவத்தம்பி போன்று
கைபுண்ணுக்கு காலுக்கு மருந்து தேடாதீர்கள் உங்களைப் போன்ற
படித்தவர்களின் விவாதங்கள் மிகவும் மதிப்புமிக்கவை இன்றைய காலத்தின் தேவையும் அதை வீணடிக்காதீர்கள்

பிரியமுடன்
செல்வன்

Anonymous said...

இராஜீவ் கொலை என்பது பல நாடுகள் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
இதில் புலிகளின் மனிதவிரோத பாட்டாளிவர்க்க விரோத அரசியல் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே உருப்பெற்றதாகும். இன்று பாசீசமாக உருவெடுத்த ஒரு தேசியத்தின் மனித மூலவளத்தையே கருவறுக்கின்றது என்பது ஒரு வரலாற்று நிலையாக இருக்க மறுபடியும் இராஜீவ் கொலை விவாதப் பொருளாக உருப்பெற்றுள்ளது.

தாங்கள் குறிப்பிட்டது போன்று ரோ என்ற உளவு நிறுவனம் ஆளும் வர்க்கம் மற்றும் இவர்களுக்கு திரையில் நின்ற தேசங்கள் என்ன என்பது பற்றி எவரும் உரைப்பாதக இல்லை.

இதில ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் நம்பந்தப்பட்டிருக்கின்றன.
இவை பற்றி எவரும் ஆராய்வதில்லை. அதே வேளை இவர்களிடம் விலைபோகப்பட்டதுதான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம். இன்றும் நோர்வே மூலமாக தற்காலத்தில் விலைபோகின்றது தேசியப் போராட்டம்.

அதேவேளைகளில் தனிநபர்களை கொண்றதின் மூலம் இந்திய ஆழும் வர்க்கத்தை துடைத்தெறியவில்லை. இங்குதான் தனிமனித பயங்கரவாதம் என்பது மக்கள் திரள் அரசியலுக்கு எதிரியாக இருக்கின்றது..
இங்கு இந்திய மக்களின் ஆழும் வர்க்கத்திற்கு எதிரானபோராட்டத்தில் தனிமனித பயங்கரவாதம் தீங்கே இழைத்துள்ளது.

மற்றையது பாலசிங்கத்தின் இந்த நிலைப்பாடு என்பது அவரின் அரசியல் நிலைப்பாடு என்பது மக்கள் சார்ந்தது அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கின்றது.
இந்திய சாதாரண மக்களை நோக்கிய அறைகூவலாக இருந்திருக்க வேண்டும் அவரின் கூற்று.
அவர்களின் அரசியல் பாதையை சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும்.
போராடும் நக்சல்பாரி சிந்தனைவாதிகளின் பாதையில் செல்பவர்களை நோக்கியதாக இருந்திருக்க வேண்டும்.

//
மீளவும் சொல்வோம்:இராஜீவைக் கொன்றது இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவின் செல்வாக்குக்குட்பட்ட ராவ் உளவுப் படையே.இதற்கு அடியாளான நிலையே புலிகள்.//

நல்லா காதுல பூ சுத்துங்க.... என்று கூறுவது தவறு சிறிரங்கன் எழுதுவதே உண்மையாகும்.


இன்று தேசியத்தின் முகமூடி அணிந்து கொண்டு மேலைதேசங்களின் மனைவி பிள்ளைகளை பாதுகாப்பாக வாழ வைத்து விட்டு புன்சிருப்புடன் வலம் வரும் தற்கால அரசியல் தலைவர்கள்
ஈழதேசத்தில் தொடர்சிசியாக பிணவாசனை வீசவேண்டும் என்பதற்காவே நித்தம் கொலைகைள செய்து கொண்டு வருகின்றனர்.
இதனால் யாரின் பலம் வளம் குறைவவடைகின்றது?????
தேசியம் பேசும் எம்மில்தான் இழப்பு!!!
இதைஏன் சிந்திக்கின்றோம் இல்லை???
ஏனெனில் என்னுடைய ஆத்திரம் அவரசம்!!!
இவற்றில் இருந்துதான் தனிமனித வட்டம் என்ற நிலைப்பாட்டில் இருந்து பொதுமைப்பட்ட அரசியல் கருத்துக்களை முன்வைத்து அகவுணர்வைத் தீர்த்துக் கொள்கின்றனர்.
அகவுணர்வு என்பது மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிக் கொள்வதில்லை.

Sri Rangan said...

//சிறிரங்கன் அவங்கள் இட்லி வடை என்றால் நீங்கள் என்ன சாம்பாரா
அடியுமில்லாமல் நுநியுமில்லாமல் குளப்பாதீர்கள் முதலில் நீங்கள்
எந்த தளத்தில் நிற்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள் ஒரு தடவை
புலிக்கு ஜால்ரா இன்னொருதடவை எதிரில் நின்று ஜால்ரா நீங்கள் எங்கு
இருக்கிறீர்கள் என்பது இத்தளங்களை வாசிக்கும் எமக்கு ஒரே குளப்பம்
புலிஅம்மம்மாக்கள் உங்களை திட்டுவதை நீங்களாகவே நிருபித்து
வருகிறீர்கள் என்பது மெல்லமெல்ல உங்கள் கருத்துகள் மூலமாக காட்டி
வருகிறீர்க//


சின்னக்குட்டி கருத்துக்கு நன்றி.

செல்வம்,இட்லி வடை என்பது ஒரு வலைப்பதிவாளரின் புனை பெயர்.

அடுத்து எந்தத் தளமென்பதா?

உங்களுக்கும் இந்தப் பிரச்சனையா?

எல்லாம்; கருத்துக்களை நேரடியாக விளங்க முற்படுவதன் விளைவுதாம்.புலிக்கு ஜால்ரா போடுவது இருக்கட்டும்.முதலில் நான் கூறுவதைத் தவறென்று கூறமுடியுமா?

அப்பாவித் தமிழ்பேசும் மக்களை இந்திய இராணுவம் மட்டமல்ல அனைத்து ஒடுக்குமுறையாளர்களும்தாம்(இலங்கை அரசு,இயக்கங்கள்,மேல்சாதியம் இப்படிப்பல...)அழித்தார்கள்.இங்கு நான் சொல்வது இந்திய ஆளும் வர்க்கம் இராஜீவ் கொலையைப் புலிகளினூடாகச் செயற்படுத்தித் தமிழக மக்களின் தார்மீக ஆதரவை மட்டுமல்ல தமிழ் நாட்டின் விடுதலையையே காயடித்தார்கள் என்பது.இதற்கு எங்ஙனம் ரோவ் புலனாய்வுப் பிரிவும் அதன் எஜமானர்களும் இராஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்டார்கள் என்பதை வரலாறு சொல்லும்.

இத்தகைய விமர்சனத்தை முன்வைத்தவுடன் புலிக்கு ஜால்ரா!

இங்கே புலியைத் திட்டித் தீர்ப்பதல்ல நமது நோக்கு.


அந்த இயக்கத்தின் வர்க்க நலனையும்,அந்த நலனுக்காக அது சதா போராடி அப்பாவி மக்களைக் கொல்வதையும்,அதனூடாகப் பாசிசத்தைக் கட்டியமைத்துத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் தனது காலடியில் வைத்திருப்பதை நாம் விமர்சிக்கிறோம்.இது அவசியமானது.மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் புலிகளை விமர்சிப்பதுதாம் இக்கட்டுரையின் நோக்கம்.அதாவது இராஜீவ்வைக் கொல்வது ஈழ மக்களின் நலனுடன் சம்பந்தப்பட்டதல்ல.அது இந்திய ஆளும் வர்க்க நலனுடன் சம்பந்தப்பட்டது.இங்கே புலிகள் அடியாளாகச் செயற்பட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலையைப் பின் தள்ளியது மாபெரும் துரோகம்.இதையேதாம் பேசுகிறோம்.

அடுத்து, பாலசிங்கம் கூறுவது-ஒத்துக் கொள்வதெல்லாம் ஒரு எச்சரிக்கைச் சமிஞ்சையாகும்.அதாவது "நாம் இது குறித்துப் பேச வெளிக்கிட்டால் இந்திய அதிகார வர்கத்தின் பெரும் தலைகள் உருளும்.அத்தகைய ஒரு நிலையில் உருண்ட தலைகளை நியாயக் கூண்டில் ஏற்றும்போது இன்னும் பல அந்நிய நாடுகள் இதுள் சம்பந்தப்படும்.பின்பு அரசியலில் ஆதக்கஞ் செய்யும் பெரும் ஓட்டுக்கட்சிகள் அதன் தலைவர்கள் என்று பற்பல விளைவுகள் நடந்தேறும்".என்று சொல்லாமல் சொல்கிறார் பாலா. இது,இப்போதைக்குப் புலிகளின் மௌனத்தால் இதுவரை பின்போடப்படுகிறது.

இது மிகவிரைவில் அம்பலத்துக்கு வரும்போது புலிகளின் பங்கு அடியாள் வேலையென்பதும்,ஆட்டிப்படைத்த சூத்திரதாரி யாரென்பதும் வரும்.இந்த துணிவுடன்தாம் பாலசிங்கத்தார் சதுரங்கம் ஆடுகிறார்.அவரது பக்கம்தாம் இப்போது பிடியிருக்கிறது.இதைக் கூறும்போது ஜால்ரா போடுவதில்லை.உங்கள் நோக்கில் அப்படியிருக்கலாம்.அது என் தவறல்ல செல்வம்.அடுத்துப் படித்தவர்கள் என்று ஒன்றும் இல்லை.எல்லோரும் தத்தம் வர்க்கவுணர்வோடுதாம் காரியமாற்றுகிறார்கள்.

இன்னுமொன்று, முறிந்த பனை போன்று...அது தனிநபர் முயற்சி அல்ல.கூட்டு முயற்சி.நாம் எமக்குள் கேள்வி,கல்வியால் முன்னேறும்போது ஒரு ஐக்கியம் மலரவே செய்யும்.அப்போது இத்தகைய படைப்புகளை-வரலாற்று ஆய்வுகளை முன் வைப்போம்.அது மக்கள் புரட்சிக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றையேனும் வருங்காலச் சந்ததிக்குக் காட்டி நிற்கும்.இப்போதைக்கு இவ்வளவுதாம்.

கருத்திட்ட பெயர் குறிப்பிடாத நண்பருக்கு நன்றி.

இராஜீவ் கொலையின் நோக்கம் தற்கால அரசியல்-ஓட்டுக்கட்சி ஆதிக்கம் மற்றும் இந்திய உலக ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அவர்கள் செய்வித்தது.இதுள் தலைமைகளை இழப்பதால் அந்த அமைப்பை-ஆதிகத்தை,கட்டமைப்பை-அரச ஜந்திரத்தை உடைக்க முடியாதென்று கூறும் உங்கள் கருத்துச் சரியானது.ஆனால் இத்தகைய கொலைகளை மேற்கூறியவர்கள்தாம் செய்தார்கள்!அவர்களுக்குப் புரட்சியின் நோக்கம் இல்லைத்தானே?எனவே இதைப்போல ஆயிரம் அரசியல் கொலைகளை செய்தபடி தமது இருப்பை,நலனைத் தக்க வைக்கிறர்ர்கள்.ஆளும் வர்க்கங்களுக்கேற்படும் முரண்பாடுகளை இப்படியான கொலைகளுடாகத் திசை திருப்பிவிடுகிறார்கள்.இதற்குப் புலிகள் போன்ற பற்பல குழுக்களைத் தேவைக்கேற்றபடி பயன்படுத்துகிறார்கள்.

Anonymous said...

உங்கள் விளக்கத்துக்கு உதாரணம் சில வருடங்களுக்கு முன் ராமர்பிள்ளை என்று ஒருத்தர் தமிழ் நாட்டில் இயற்கை எரிபொருள் தயாரிக்கிறேன் என்று ஒரு கோல் (தடி) வைத்து வித்தை காட்டினாரே
அதற்கும் உங்கள் கருத்துக்கும் வித்தியாசம் கிடையாது (வேறுபாடு உங்கள் கையில் பேனா ராமர் கையில் ஒரு தடி அவ்வளவுதான்)
உங்களைப பொறுத்தவரை புலியும் வேண்டும் உங்கள் பேனாவால்
புலியின் கொள்கையை மாற்றவும் வேண்டும் ஆகா பேஷ் பேஷ்
புலிகள் தங்கள் வர்க்க நலங்களுக்காக யாரையும் கொல்வார்கள் யாரையும் விலைகொடுத்து வாங்குவார்கள் யாருக்கும் விலைபோகமாட்டார்கள் (உளவுத்துறை புலிகளை வைத்து ராஜீவை கொன்றது என்பது ஆகா அற்புதமான உங்கள் விளக்கம்) இப்போது எல்லா
நாடுகளும் புலியை தடைசெய்தாகி விட்டது இனி ஒளிவதற்கும் ஒண்டு
வதற்கும் இடமில்லை வளர்ந்த வளர்த்த இடத்திற்கே திரும்ப வேண்டிய
நிலைவந்து விட்டது புலிக்கு அதுதான் மதுஉரைஞரின் இந்த புலம்பல்.

செல்வன்

மு. மயூரன் said...

//இங்கே புலிகளை இந்தியா அணைத்துக்கொள்வது காலப் போக்கில் நிகழ்வதற்குப் பாலசிங்கம் விளையாடும் அரசியல் சதுரங்கம் இது.//

பாலசிங்கதின் பேட்டி தொடர்பாக இந்த கோணத்தில் நான் யோசித்திருக்கவில்லை.
சிந்திக்க வைத்தமைக்கு நன்றி

Anonymous said...

v.p.சிங்- 'ரா' உளவுப்படை- ராஜீவ் கொலை....interesting story...இதையே CIA,KGB போன்றவற்றோடு இணைத்து வெவ்வேறு விதங்களில் கதை பண்ணலாம்.

கட்டுரை தீவிர விசயங்களை ஆராய்கிறது. அதே நேரத்தில் பண்ணிய கற்பனைகள் வெளிவந்து விடுகின்றன.

விவாதத்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு 'இட்லிவடைபோன்ற எருமைகளுக்கு இது ஒருபோதும் உறைக்க முடியாது' என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்திருக்கலாம்.

இந்த கட்டுரையில் எல்லா தரப்பினரையும் விவாதத்குள்ளாக்குவதே நல்ல விசயம்தான்.வரவேற்க்கப் பட வேண்டியவை.

ஒரு மார்க்ஸீயவாதி, இன அரசியலை சந்திக்கும் போது ஏற்ப்படும் சிக்கலும்,குழப்பமும் எப்பிடி இருக்கும் என்பதை தங்கள் கட்டுரை மூலம் தெரிந்துகொண்டேன்.

Anonymous said...

miga nalla karpanai.

i thought you people have not mentioned about brahmins , god!!!
my expectations didn't vain,
you came to exact point.
yes for all past assasinations, future assasinations, present assasinations, one and only root cause is brahmins only brahmins
innum evalo solla mudiyumo sollunga.
nalla irukku unga joke.

Anonymous said...

எதை வேண்டுமானாலும் எழுதாலம் எப்படி வேண்டுமாலும் எழுதலாம் இது தான் எழுத்துச் சுதந்திரம்.
ஆடை உடுத்திச் செல்லலாம் அதை நீக்கியும் செல்லலாம் இது அவர்களது சுதந்திரம்.

Anonymous said...

இதில் என்ன கற்பனை இருக்கிறது?

கொலை நடந்தபின் சம்பந்தப்பட்டவர்களை மீட்க புலிகள் எந்த ஒழுங்கையும் உடனடியாகச் செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் காத்திருந்து ஏமாற்றப்பட்டனர். ஒற்றைக்கண் சிவராசன் ஒட்பட அந்தக்குழு தம்மைத்தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டனர் என்பதும் சந்தேகத்துக்குரியதே.

சிறிரங்கன், நீங்கள் புதிய கோணத்தில் அணுகுகிறீர்கள். தேசிய வாதிகளுக்கும் ஏன் புலி அடிவருடிகளுக்கும்கூட இந்த கட்டுரை இனிக்காது. ஆனால் உங்கள் கருத்துத் தளததை விட்டுவிடாதீர்கள். விரைவில் பல சம்பவங்கள் அம்பலத்துக்கு வரத்தான் போகின்றன.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...