Saturday, March 11, 2006

யுக்கோவின் முன் நாள் அதிபர்!

யுக்கோவின் முன் நாள் அதிபர்!

முன் நாள் யுக்கோஸ்லோவிய அதிபர் திரு.ஸ்லோபோடான் மிலோசேவிக் இன்று அரசியல் கைதிகளுக்கான சாவதேசச் சிறைச்சாலை( Das UN-Kriegsverbrechertribunal in Den Haag )டென்காக்கில் மர்மமான முறையில் இறந்துள்ளார்!இந்தச் சாவின் மர்மம் என்னவென்பது தெரியாதிருப்பினும் யுக்கோஸ்லோவிய அரசியலிலும்,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்ப்பதில் இந்தத் தலைவரின் செயல் முறையிலும் நான் அதிக கவனஞ் செய்திருந்தேன், கடந்த காலங்களில்.அதற்கானவொரு வலுவான காரணமானது எப்பவும் எனக்குள் நிறைந்திருந்தது.

திரு.ஸ்லோபோடான் மிலோசேவிக் ஏகாதிபத்திய அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் குறித்திருக்கும் பிம்பத்துக்குரியவரில்லையென்பதை, அவர் தமது நாட்டின் இனப்பிரச்சனைகளில் நிரூபித்திருந்ததே எனக்குள் ஒரு மரியாதயை ஏற்படுத்திருந்தது.கடந்த கால ஒன்றிணைந்த யுக்கோ ஸ்லோவியா பாரிய பொருளாதாரக்கட்டமைப்பைக் கொண்டு, நாட்டின் கட்டுமானங்களை முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகளுக்கிணையாக வளர்த்திருந்தும்,அதன் இனங்களுக்குள் வலுவான சமத்துவமின்மை வளராதிருந்தவேளை அதன் தகர்வு சாத்தியமாகும் நிலை தோன்றியது.இங்கேதாம் இந்தத் தலைவரின் செயற்பாடு கவனத்தை ஈர்த்தது.

எந்தவொரு முதலாளித்துவ நாட்டையும்விட இங்கே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மிகச் சாதாரணமாகக் கையாளப்பட்டது.தேசிய எழிச்சிகளும்,இனங்களின் சுயநிர்ணயப் போராட்டங்களும் கீரைபாத்தியான சின்னஞ்சிறு நாடான யுக்கோ ஸ்லோவியாவில் பெரும் இராணுவ அடக்குமுறையின்றி(ஆரம்பத்தில் சிலவொடுக்குமுறை நிகழ்ந்தது) அணுகப்பட்டது.அங்கே சுயநிர்ணயத்தைக் கோரிய இனங்கள் கொரோசிய-சேர்பிய-போஸ்னிய நாடுகள் உருவாகுவதற்கு இந்தத் தலைவரின் மனப்பாங்கு இடமளித்தது.இதுவே இந்திய(இந்தியாவோ அணுமூலம் மக்களின் வாழ்வை அழிக்க முனைகிறது இன்றும்.மேற்குலகம் அணுமின்னைத் தவிர்க்க முனையும்போது இந்தியா...)-இலங்கை அரசுகள் அல்லது ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா,ஜேர்மனிய நாடுகளென்றால் ஒடுக்குமுறை இராணுவம் குருதியாற்றைத் திறந்து பல இலட்சம் மக்களைக் காவு கொண்டிருக்கும்!இன்றும் லத்தீன் அமெரிக்காவில் 1.3 மில்லியன்கள் மக்கள் அடிமைகளாக இருத்தி வைக்கப்பட்டுள்ளாகள்.இதற்கு அமெரிக்க வல்லாதிக்கமே காரணம்!

எனினும் இவர்மீது பல கிரிமனல் குற்றங்களை மேற்குலகஞ் சுமத்தியது.என்றபோதும் நியாயமான,காத்திராமானவொரு நீதிவிசாரணையை இந்த சர்வதேச நீதிபதிகள் இவர்மீது செய்யாதிருக்க, அமெரிக்காவும் அதன் நேட்டோ அணி நாடுகளும் பலதில்லுமுல்லுகளைச் செயற்படுத்தி வந்ததை எவரும் மறுக்க முடியாது.உலக மக்களுக்குத் தமது எதிரியான யுக்கோ ஸ்லோவிய நாட்டின் அதிபரைப் பயங்கர இனவாதியாகவும்,சர்வதிகாரியாகவும் படம் காட்டிய இந்த நேட்டோ நாடுகள் தமது சந்தையைக் குறித்த நலனின் காரணமாக யுக்கோஸ்லோவிய நாட்டைக் குண்டுகளால் சிதைத்தது வரலாறாகும்.

கொசோவோ யுத்தமென்பது(1998.1999) 900 மக்களைக் கொன்றும்,800.000.மக்களை யுத்தத்தால் வருத்தியதாகவும் மேற்குலகம் கூறுகிறது.இவ்வண்ணமே போஸ்னிய,(1992-1995)மற்றும் கொரோசிய(1991-1995) யுத்தங்களால் அவர் இந்தவின மக்களைக் கொன்றதாகவும் குற்றஞ் சுமத்திய இந்த நாடுகள,; தமது யுக்கோ ஸ்லோவிய நாட்டின் யுத்தத்தையும்,அங்கு நடந்த தாழ்நிலை அணுயுத்தத்தையும் வசதியாக மறைக்கிறது.

இதுதாம் மேற்குலக-அமெரிக்க நீதியென்பதை நாம் ஈராக்மீதான இந்த நாடுகளின் யுத்தத்தில் உணரமுடியும்.யுக்கோ ஸ்லோவிய முன் நாள் அதிபர்மீதான சட்ட நடவடிக்கை உலக நீதி பரிபாலனத்தின்மீது பல கேள்விகளைக் கொண்டிருக்கிறது.இந்த நீதி மன்றத்தைத் தனது சட்டவல்லமையால் கேள்விக்குள்ளாக்கிய இந்த ஸ்லோபோடான் மிலோசேவிக் மறைந்துவிட்டார்.என்றபோதும் இவர்மீதான அணுகுமுறையானது, ஒரு நாட்டின்மீதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் விருத்தியானதென்பதை நாம் மறக்கக்கூடாது.

தேசிய இனப்போராட்டங்கள் இன்னும் நிறைவுபெறாத நாடுகள் பல இப்புவிப்பரப்பில் போராடி வருகின்றன.இந்த நாடுகளிலுள்ள முதலாளிய அரசுகள் தத்தம் நாடுகளிலுள்ள சிறுபான்மை இனங்களை எங்ஙனம் ஒடுக்குகின்றனவென நாம் பார்த்து வருகிறோம்.இத்தகைய வன் கொடுமையான நாடுகளை மேற்குலகம் எந்த வகையில் அணுகுகின்றெனவென்பதும் குறைவிருத்திச் சோஷலிச நாடுகளை எங்ஙனம் அணுகியதென்பதற்கும் யுக்கோ ஸ்லோவியா நமக்கு நல்ல பாடமாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

11.03.2006

1 comment:

Anonymous said...

அதிகமான சுட்டிகள் ஜேர்மன் மொழியிலிருக்கே,படிக்கமுவதில்லை.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...