ஐ.நா’வில் பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !
இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டமைப்புக் குறித்த எந்த நல்ல அபிப்பிராயம் எவராலும் குறித்துரைக்க முடியாமலுள்ளதே —இது ஏன்?
“வீட்டோ உரிமையை (A veto is a legal power to unilaterally stop an official action) வெள்ளையினங்களின் தேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ் , இருஷ்சியா ஆகிய நான்கு நாடுகளிடமும் , வெள்ளை இனமற்ற பிற இனங்களது உரிமை சார்ந்து சிந்தித்தால் , வெள்ளையினங்களுக்கு வெளியில் ஒரேயொரு (சீனா) தேசத்திடம் மட்டுமே வழங்கப்பட்டது -கொடுமை ! இங்கிலாந்திடம் உள்ள வீட்டோ உரிமையை ஆப்பிரிக்காவிடமும் , பிரஞ்சியத் தேசத்தினது வீட்டோ உரிமையை பிரேசிலிடமும் கையளிக் வேண்டும் .”
ஐக்கிய நாடுகள் சபையுள் முழு உறுப்பினராகும் பாலஸ்த்தீனத்தின் முயற்சியைத் தடை செய்த அமெரிக்காவின் வீட்டோவை ( Palestine denounces US veto blocking full UN membership bid) பாலஸ்தீனம் மட்டுமல்ல உலகமே கண்டிக்கிறது!
'நியாயமற்றதும் , நெறிமுறை பிறழ்ந்ததுமான ஐரோப்பிய-அமெரிக்க-இஸ்ரேலிய இத்தகைய யுத்தவாத அரசியலை எதை முன் வைத்தும் நியாயப்படுத்த முடியாது !
சர்வதேச சமூகம் என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்தும் இந்த அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் , தம் தேசங்களின் பொருளாதார/புவிகோள நலன்சார் விருப்பத்திற்கு ஏற்ப ஜனநாயகம் , மனித உரிமை -பெண்ணுரிமை , சமாதானம் ; மனித நேயம் ; சுயாதீனம் , தேசம் -தேசிய இன உரிமைகள் ; விடுதலை குறித்து நமக்கு வகுப்பெடுக்கின்றனர் .
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தினம் என்ற விடுதலை பெறத்துடிக்கும் தேசம் தன்னை ஐ.நா’வில் முழு உறுப்புரிமையை கோரிய” ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீர்மானத்தை “ (Die USA haben im Sicherheitsrat ein Veto gegen eine Resolution für eine UN-Vollmitgliedschaft Palästinas eingelegt.) வியாழன் அன்று , வீட்டோ (Veto)செய்து தடுத்தது ,அமெரிக்கா !
இந்த முடிவை பாலஸ்தீனம் மட்டுமல்ல ஐரோப்பா தவிர்ந்த ஏனைய கண்ட நாடுகள் கடுமையாகக் கண்டித்தன .
ஏகாதிபத்திய அமெரிக்கக் கொள்கையில் உள்ள முரண்பாடுகளை இந்த வீட்டோவின் மூலம் அமெரிக்காவே அம்பலப்படுத்தும் விந்தை இது .
இஸ்ரேல்-பாலஸ்தீனிய முரண்பாட்டுக்கு ஆக்கிரமிப்பு மோதலுக்கு பழைய பாலஸ்த்தீனத்துக்குள் “இரு தேசங்கள் “ எனுந் தீர்வை ஆதரிப்பதாகக் கூறுகிறது , அபெரிக்கா . அதே நேரத்தில் சர்வதேச சமூகம் இந்தத் தீர்வை எட்ட மீண்டும் மீண்டும் ஐ.நா’வில் ஏதோ வழிகளில் முனையும் போது அதை , வீட்டோவைக் காட்டி இந்த ஏகாதிபத்தியங்கள் தடுக்கின்றன .
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த வியாழன் அன்று (18.04.24) நியூயோர்க்கில் கூடியது . இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நாட்டை ஐ.நா’வின் முழு அளவிலான உறுப்பினராக அனுமதிப்பதற்கு அல்ஜீரியாவால் பரிந்துரைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தின் மீது வியாழக் கிழமை வாக்களிக்கப்பட்டது.இதற்கு ஆதரவாக 12 தேசங்கள் வாக்களித்ததோடு, இங்கிலாந்தும் , சுவிட்சர்லாந்தும் வாக்களிக்காமல் வாளாது கிடந்தன . அமெரிக்க தன் வீட்டோ பலத்தினால் உறுப்பினர் சேர்க்கையை தடுத்தது .
வாக்கெடுப்புக்கு முன், ஐ.நா.வுக்கான அல்ஜீரியாவின் தூதவர் கூறுகிறார் : “ பாலஸ்தீனம் எனும் அடிமைப்படும் நாடு உலக அரங்கில் சரியான இடத்தைப் பெறுவதற்கான நேரம் இது .ஐ.நா’வில் முழுமையான உறுப்பினராகத் தேறுவது அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படை.” என்று கூறினார். பாலஸ்த்தீனம் 2012 ‘ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையின் பார்வையாளர் நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது இங்கு சுட்டிக் காட்டத் தக்கது .இதன் வழி பாலஸ்த்த்தீனத் தூதர் உலக அரங்கில் விவாதங்கள் மற்றும் , ஐ . நா. அமைப்புகளில் பங்கேற்க அனுமதிகிடைத்தது . என்றபோதும் ,வாக்கெடுப்பு இல்லாமல் ஐ.நா’வில் நிரந்தர முழுமையான உறுப்பினர் நாடாகப் பாலஸ்தீனம் அங்கம் வகிக்க முடியாது .
ஐக்கிய நாடுகள் சபையினது சட்டவிதிச் சாசனத்தின்படியும் ; பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையின் பேரிலும் ,பொதுச் சபையின் முடிவின் மூலமும் ஒரு தேசம் ஐ.நா’வில் முழுமையான உறுப்பினராக அனுமதிக்கப்படுகின்றது .ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக குறைந்தது ஒன்பது நாடுகள் வாக்குகள் இட்டாக வேண்டும் . கூடவே , நிரந்தர வீட்டோ உறுப்பினர்களான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இருஷ்சியா, சீனா போன்ற வல்ல மேசங்கள் தம் வீட்டோ உரிமையை கிடப்பிலிட்டால் மட்டுமே எதுவும் நிறைவேறும்.
கடந்த ஒக்டோபர் முதல் இன்றுவரை பாலஸ்த்தீனத்தின் மீது யுத்தம் புரியும் இஸ்ரேல் கிட்டத்தட்ட 34,000 பாலஸ்தீனியர்களைக் கொன்று தள்ளி உள்ளது . 70,000 மக்கள் படுகாயமடைந்தும் , 20 இலட்சம் பாலஸ்த்தீன மக்கள் அகதிகளாகத் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ இஸ்லேலியப் பாசிசப் பயங்கரவாதத்தால் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் . இந் நிலையிலும் , அமெரிக்கா முதல் ஐரோப்பாவரை பாலஸ்த்தீன மக்களுக்கு எதிராக இநங்குகின்றன .
ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?
ஐரோப்பா-அமெரிக்கா திறந்த சுதந்திரச் சமூகமெனில் எதற்காக இவ்வளவு பெருந்தொகையான அணுக்குண்டுகள், போர்த்தளபாடங்கள்?
உலகெலாம் இராணுவக் காவலரண்களையும் இராட்சதத் தளங்களையும் எதன் பொருட்டு நிறுவியுள்ளார்கள்?வரலாறு முதற்கொண்டு மானுடர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது? அமெரிக்கா , உலகின் பொருளாதார வல்லரசுப் போட்டியில் உலகை ஏப்பமிட ,வன்முறைசார் கருத்தியலையும் ; வன்முறைசாராக் கருத்தயலையும் இன்றுவரை காட்டமாகப் பயன்படுத்துகிறது!
1950 களில்,அமெரிக்கா >The Congress for Cultural Freedom< என்ற அமைப்புக்கூடாக பல்வேறு போக்குகளையும்,தத்துவங்களையும் உருவாக்கியது! இன்று, நாம் தம்பட்டம் அடிக்கும் “Postmoderner“எனும் பின்நவீனத்துவம்கூட CIA‘யின் சட்டியில் சமைக்கப்பட்டதுதாம்!
விசயம் இப்படி இருக்க,நாம் 2030 இல் உலகின் இரண்டாவது பொருளாதாரப் பேரரசு குறித்து என்ன நினைக்கிறோம்?; இந்தியா பாலஸ்த்தீன மக்களின் அழிவு கண்டும் வாளாது கிடக்கும் மர்மம் என்ன ?
இந்தியாவின் ,வன்முறைசார் கருத்தியலையும் ; வன்முறைசாராக் கருத்தயலையும் குறித்து என்னத்தைப் புரிகிறோம்? இதன் வழி இந்தியாவுக்குள் எத்தனை தேசிய இனங்கள் ஒடுக்கப்பட்டு இந்தியா எனும் சிறைக்குள் பலாத்தகாரமாக தள்ளப்பட்டுள்ளார்கள் ?
அமெரிக்கக் கண்டத்துக்குள் 600 ஆண்டுகளுக்குமுன் நுழைந்த ஐரோப்பியர்களைவிட இந்தியாவுக்குள் 3000 வருடங்களுக்கு முன்பே நுழைந்த வேத விசாரணைகளுடைய சங்கிகள் குறித்து என்ன புரிகிறீர்கள்?
எல்லாம் பொய்த் தோற்றங்கள்!
“நான்-நீ” என்பதெல்லாம் அவர்களது கட்டளைக்குட்பட்ட சமாச்சாரம்!; ரோவின்
கழுகுப் பார்வைக்கு உட்பட்டவர்களே நாம்!
போராடும் தேசிய இனங்களைக் கருவறுப்பதே இன்றைய நிகழ்ச்சி நிரல்!; இதைத் தலமை தாங்கி வழி நடாத்தும் இந்தியா , உலகம் பூரகவும் புகுந்து விளையாடுகிறது.
நாமெல்லோரும் அதன் நடிகர்கள்!
யாரையும் நம்ப வேண்டாம்!
எல்லோரும்,இலக்கியம் படைப்பவர்கள்முதல்;அரசியல் பேசிப் பறைகிறவர்கள்,கட்சிகள்;தலைவர்கள்,பேராசிரியர்கள்,பல்கலைக் கழகங்கள்-பாடசாலைகள்; ஊடகங்கள் என்று அனைத்துமே ஏகாதிபத்தியக் கள்ளக் கூட்டுகளின் கட்டுப்பாட்டில்!
இந்த உலகம் புலனாய்வுத்துறைகளது கூடாரம்!
இதுள்,நாம் அவர்களது காயடிப்புகளைக் காவி வருகிறோம்.பொரும் பகுதி மக்களை ஒடுக்குவதே உள் நோக்கம்.
எந்தக் கட்சியும்,எந்தத் தலைவரும் எவருக்கும் விடுதலை தரப்போவதல்லை;விமோசனம் தரப்போவதில்லை.
போராடும் தேசிய இனங்கள்,பேரினவாத அரசுகளால் ஒடுக்கப்படுவதும்; ஒட்டச் சுரண்டப்படுவதும் இன்றையவுலக நிகழ்ச்சி நிரல்!
நாம் கயவர்கள்; நயவஞ்சகர்கள். ஒடுக்குமுறையளர்களது முகவர்கள் நாம்!
எவரையும் நம்ப வேண்டாம்!
— ப.வி.ஶ்ரீரங்கன்
20.04.2024