Tuesday, February 26, 2013

கணையாழி:கேடயம்,பொன்னாடை-எதற்காக?

Theepachelvan Pratheepan: "புலிக்காய்ச்சலில் பொய்களால் 'புனைவு' செய்து வாழும் அண்ணன் ஒருவருக்கு சமீப நாட்களாக 'தீபச்செல்வன் காய்ச்சல்' பிடித்திருக்கிறது.நீங்கள் முதலில் புலிகளை பார்த்து குரைப்பதை நிறுத்திவிட்டு மற்றப் பங்கங்களுக்கும் உங்கள் தலையை திருப்புங்கள்!"


=================================================================
தீபச் செல்வனென்ற பிழைப்பு வாதியைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதில்லை.
================================================================

ரு சமுதாயத்தை ஆணிவேரோடு பிய்த்தெறிந்து, ஓட்ட மொட்டையடித்த புலிகள்,பல இலட்சக் கணக்கான உயிர்களை நாசஞ் செய்து சில குடும்பங்களைக் கோடிஸ்வரர்களாக்கிவிட்டு வன்னியில் சரணடைந்துகொண்ட அரசியலுளெஞ்சிய புலிக்கூட்டமோ மீளவும், மக்களை மொட்டையடிக்கும் தெரிவுகளோடுதாம் அரசியல் செய்கிறது.இலக்கிய வியாபாரி தீபச் செல்வன் அதற்கான சிறு உதாரணமாகும்.இவருக்கு முன் சேரன் என்பது உலகறிந்தது!

இஃது மக்கள் விரோதமானது.ஏன்-எதற்காக?

இது,குறித்துப் பலருக்குப் புரியும்படி நாம் ஏலவே பல மாதிரிகளாக எழுதிவிட்டோம்!

அப்படி, இவர்கள் பார்ப்பன இலக்கிய வியாபாரப்பிழைப்புக்கும்,அவர்களது சதி அரசியலுக்கும் உடந்தையாவதைத் தட்டிக்கேட்பது "புலிக்காய்ச்சாலாம்" தீபச் செல்வனுக்கு!ஏனென்றால், அவரும் மக்களது குருதியை வைத்துத்தாம் தமிழ்நாட்டுப் பார்ப்பன முகாமுக்குப் பிழைப்புக்காட்டுகிறார் என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது.அதைத் திசை திருப்புவதில் புலிகளது பாணியும் கைகொடுக்கலாந்தாம்.

தமிழ்பேசும் மனிதர்களை அழித்துச் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கம் வன்னியில் யுத்தஞ்செய்தபோது அதை மௌனித்து ஆதரித்தவர்கள் தரும் கேடயமெல்லாம் எதற்கானது-எவருக்கானது?நமது உரிமைகளைப் பூண்டோடழித்தவர்களது அரசியலும்-இலக்கிய நகர்வும் பார்ப்பனியத்தின் மிகப்பெரும் செல்வாக்கோடு வன்னியின் குருதிதோய்ந்த யுத்தக் களமாக விரிந்தது.

இஃது, இந்தத் தீபச் செல்வனுக்கான பொன்னாடை போர்த்தும் இலக்கியக் கருவானால் அதைத் தார்மீக அறத்தின்முன் நிறுத்திக் கேள்விகளைக் கேட்டாக வேண்டுமா-இல்லையா?

இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் திராவிட-பார்ப்பன அரசியலின் பங்கு என்ன?

இதுவரையான நமது மக்களது அழிவுக்கான அரசியலை மெல்ல நகர்த்தியவர்கள் யார்?

கனிமொழிக்குப் பரிசு கொடுக்குமளவுக்கு மகிந்தாவின் அரசியலது தெரிவெங்ஙனம் உருவாகியது?அதே, கனிமொழியே மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துக் கைதான மாபெரும் மக்கள் விரோத அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரென்பதை உலகமே அறிந்தது.

இந்த மாபியாக்களது முகாமில் உனக்கென்ன வேலை?

இவர்களது சதித்தனமான அரசியலுக்காக நீ, எமது மக்களது அவலத்தை விற்கும்போது நாம் மௌனித்திருக்கவேண்டுமா?புலிகளாக நீங்கள் செய்த மக்கள்விரோத அரசியலுள் மக்களது வாழ்வு,இருப்பு,சுக-துக்கம்,உயிர்-உடல்,வளமென அனைத்தையுமே திருடினீர்கள்-தமிழீழத்தின் பெயரால்!

இப்போது,அந்த மக்கள்மீது நீங்கள் கட்டவிழ்த்த அந்தத் துன்பகரமான போராட்டத்தின் குருதிக் கறைகளையெல்லாம் இலக்கிய-வரலாறாகச் சொல்லிப் பிழைக்கும் கயமைக்கு என்ன பெயர்?





இது,மக்களுக்கான விடுதலைக்கான அரசியல்-இலக்கிய நகர்வா?

வன்னியின் சாக் குரலையே செவிமடுக்காத இந்தியத் தேசியத் திமிருக்கு-பார்ப்பனத் திமிருக்குக் கரிசனை எதை நோக்கி வந்து, உங்களையெல்லாம் பொன்னாடைக்குள் மறைக்கிறது?

இதிலிருந்து,நீங்கள் கக்கும் பாரதமாதாவுக்கான அரசியலது தெரிவென்ன தீபச் செல்வன்?

"இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது" என்ற முடிச்சென்ன? இந்திராகாந்தி சாகும்போது தவழ்ந்த உங்களுக்கு, அவரது அரசியல் பொதுப்புத்தியாகப் புகுந்ததா அன்றிப் பார்ப்பனத் தாஜாவா?

இன்று, எமது மக்களது கண்ணீர் உனக்குப் பொன்னாடையாவதை நீ உணரமாட்டாய்!ஏனெனில், நீங்கள் மனிதப் பிணங்கள்மீது "அரசியல்-இலக்கியம்"புனைந்தவர்கள்.அதனாலேயேதாம் உங்களுக்கானவொரு "இருப்பும்-நிலைப்பும்" தமிழ்நாட்டில் எப்போதும் இருக்கிறது.

இதை,நீங்கள் இழக்கமாட்டீர்கௌன்பதை நாம் அறிவோம்.

என்றபோதும்,மக்களைத் தொடர்ந்து கருவறுக்க நீங்கள் புனையும் "இந்திரகாந்தி இருந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது"எனும்,அரசியல்தாம் மிகவும் பாதகமானது.இதைத்தாம் கீறிக் கிளறிக்காட்டுகிறோம்.இது புலிக்காய்ச்சலாகுமா?

நமது "தமிழீழக்" கவிஞர் புலிகளது ஆதிக்கத்தின் கீழ் வேரிட்டு வளர்ந்தவராச்சே!அதன்,எச்சமும்-மிச்சமும் சமூக சீவியத்தைப் பெயர்த்தெறியப்பட்டவர்களது முற்றத்திலிருந்து "பொன்னாடைக்கும்-கேடயத்துக்குமாக" இன்று இலக்கிய முகிழ்ப்பாகுமானால் அதை வைத்துக் கேள்வி கேட்பது நமது கடமையில்லையா?

எமது மக்களது கண்ணீரைப் பார்த்தும் வாளாதிருந்த தமிழ்நாட்டு "இலக்கிச் சூழல்-அரசியல் சூழல்" அதை வைத்துக் கட்சி நலன்சார் அரசியலைச் செய்தது.இந்த மோசடியான பேர்வழிகள் மீளவும், தமது நலனுக்காக நமது மக்களது அவலத்தையும் ஒரு கச்சாப் பொருள் நிலைக்குக் குறுக்கியதைக் கொள்ளையிடும்போது நாம் கேடயத்துள்-பொன்னாடைக்குள் இதை மறைக்கலாமா தீபச் செல்வன்?


இதைத் தொட்டுப் "பிழைப்புவாதிகளென" இந்திய லொபிகளைச் சொல்லும்போது அதே புலிமனதானது மக்கள்விரோதத் தமது அரசியல்-இலக்கியப் பிழைப்பில் கவனத்தைக் குறிவைத்து மற்றவர்களுக்குப் "புலிக்காய்ச்சல்" என்கிறது.

புலிகுறித்து நாம் பேசுவதெல்லாம் பொய்யானதா?

இதுவரை புலிகளது போராட்டத்தின் பயனென்ன?

புலித் தலைவனுக்கே காடாத்துச் செய்துவிட்டு, இவன்கள் என்ன சொல்கிறாங்கள்?

மானங்கெட்டவங்களே!

பார்ப்பன-திராவிட அரசியல் வியூகம் வன்னியில் மக்களைக் கூண்டோடு பொசுக்கிவிட்டு,இப்போது அதை வைத்துப் பிழைக்கிறாங்கள்.அந்தப் பிழைப்புக்காகப் பல  "தீபச்செல்வன்கள்"  இன்று அவசியமாகவிருக்கிறது.இந்தப் பிழைப்பினது நோக்கே தமக்கான லொபிகளை நேரடியாகவுருவாக்குவது, தம்மில் தங்க வைத்துச் சிதைப்பது,அதன்வழி தமக்கான அரசியல் நிகழ்ச்சியை நமது மக்களது ஆன்மாவில் கீறுவது.இதைத்தானே ஏகாதிபத்தியங்கள் பல வடிவத்துள் செய்து முடிக்கின்றன-இதைத்தானே கோடம்பாக்கம் மாற்றுச் சினிமா வட்டத்துக்குள் செய்து சிதைக்கிறது.இதுள், சுண்டங்காய் நீயோ இந்திரா காந்தி குறித்து எமது மக்களுக்கு வகுப்பெடுக்கிறாய்? 

தமிழ் நாட்டரசியலின்சதி, கட்சிசார் நலன்களது மிகப் பெரும் கயமையைக்கூடக் கேள்வி கேட்க நாதியற்ற நீங்கள்,அவர்கள் போர்த்தும் பொன்னாடைக்குள் குறுகுவதற்கு எமது மக்களது அவலம் தேவையாகவிருக்கும்வரை உங்களது பிழைப்பு வாத இலக்கிய வியாபாரத்தைக் கேள்விக்குட்படுத்தியாகவேண்டும்.மீளவும்,அதே இந்திய ஆளும்வர்க்க வல்லூறுகளது தெரிவுக்குள் நமது மக்கள் வீழ்ந்துவிடாதிருக்க இஃது, அவசியமாகும்.இங்கு, தீபச் செல்வனென்ற பிழைப்பு வாதியைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதில்லை. தீபச் செல்வனென்ற நபர், மக்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் அந்நியச் சதிக்குடந்தையாகும்தருணத்தை- அரசியலையே நாம் விமர்சிக்கிறோம்.இந்தவிடத்தில் தீபச் செல்வனுக்குப் பதிலாக இன்னொரு தவச் செல்வன் இருந்தாலும் அதே கதைதாம்.

2009 ஆம் வருடம் வன்னியில் மக்கள்கொத்துக்கொத்தாகச் செத்தார்கள். அதன்மீது இந்தப் பார்ப்பன ஏடுகள்-நிறுவனங்கள் கரிசனை காட்டாத நயவஞ்சகத்தைக்கூட அறியமுடியாது அவர்களது பொன்னாடைக்குள் குறுகும் சின்னப் பயலே!உனக்கு"எது பொய்-புனைவு" என்று வகுப்பெடுக்கத் திரணியுண்டா?அந்த அறமுண்டா?

தமிழ்நாட்டுப் பார்ப்பன- திராவிடக் கட்சிகள்-நிறுவனங்கள்,ஊடகங்களது கள்ள மௌனமானது இலங்கைக்கான ஆதாரவாகவியங்கிய அரசியலது புள்ளி!இது, மத்திய அரசின் யுத்த ஒத்துழைப்புக்கான அங்கீகாரமாவியங்கியபோது அதைத் தட்டிக் கேட்க வக்கற்ற நீயோ,இந்திராகாந்தி இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காதென்ற பால் குடித்தனமான அரசியல் பேசித் தமிழ்நாட்டில் பொன்னாடைப் பிச்சை எடுத்தபடி யாரையாடா தம்பி புலிக்காய்ச்சல்-பொய்-புனைவு என்கிறாய்?

பொன்னாடைக்கும்-பரிசுக்குமாக மக்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் நாமில்லைக் காணும்!

அப்படிப் பழைப்பவர்கள் புலிகள்தாம் என்பதை நீங்கள் அனைவருமே நிரூபிக்கின்றீர்கள்.அதைத் தட்டிக் கேட்ட நியாயத்தின்மீது "புலிக்காய்சல்" சொல்கிறீர்களோ?

புலியின் போராட்ட அறுவடைதாம் உங்களில் விடிகிறதே!

அஃது,பார்ப்பன அரசியல் நலுனுக்காக-பிழைப்புக்காக எமது மக்களது பிணத்திலிருந்தல்லவா நியாயத்தன்மை கற்பிக்கிறது?

இப்படியாக, நமது மக்களைக் கருவறுத்த இந்தியப் பார்ப்பன-திராவிடக் கட்சிசார் விசக் கிருமிகளுக்கே விலைபோன நீங்கள் பொன்னாடைக்குள் மறைவதொன்றும் நமக்கு ஆச்சரியமில்லை.ஆனால்,இதன்வழியுருவாகும் அரசியல்தாம் ஆபத்தானது!

"எங்கள் மக்களது அழிவைப் பார்த்து, மௌனித்தவர்கள்-இலங்கைப்பாசிச அரசுக்குத் துணைபோனவர்கள் போர்த்தும் பொன்னாடைகளெல்லாம் எம் காலடித் தூசு"என்று நிராகரிக்க வக்கிருந்தால் நீ, கலைஞன்.அதைவிட்டு,அவர்களுக்காக எமது மக்களது பிணங்களைப் புரட்டியெடுத்துப் புனையும் நீயோ உனது மேன்மையென எதையெண்ணுகிறாய்?

உனக்கெல்லாம் "சாதகமான அரசியலாகவா" அவர்களது சதிக் கேடயம்-பொன்னாடை எல்லாம் புரிகிறது?

தூ... பிழைப்புவாதிகளே!

இதுவெல்லாம் ஒரு பிழைப்பு?


ப.வி.ஸ்ரீரங்கன்
26.02.2013

Wednesday, February 06, 2013

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்!


யோசித்துப் பார்க்கிறேன்.எட்டு ஆண்டுகளுக்கு முன் வலைப் பதிவை அண்மித்து அதற்குள் இயங்கியங்கியபோது தமிழ்மணத்தால் அறிமுகமானவர் இந்த டோண்டு இராகவன் அவர்கள்.பெரும்பாலும் தமிழ்ச் சமுதயாமானது படு பிற்போக்கான சமுதாயமாகவிருப்பதும்,அதன் சிந்தனை யோட்டமானது ஆளும் அதிகாரத்துக்கிசைவானதாகவும்,  இருக்கின்றது.இந்தச் சமுதாயமானது தனது முரண்பாடுகளுக்கொப்ப வளர்வுறுதால் அதுள் நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கொப்பவேதாம் மனிதர்களின் உள-அறிவு வளர்ச்சியும் சமூகவுணர்வாகவும்-பண்பாடாகவும் பிரதிபலிக்கும்.எமது சமூக வாழ்நிலையின் குறை நிலைகள் நமக்குள் பிரதிபலிப்பவை.

எனவே,ஒரு சக மனிதரைப் புரிந்துகொள்வதற்கு மேலே கூறியவொரு சமூக-உளவிற் பார்வை அவசியமானது.டோண்டு இராகவன் பெரும் பாலும் இந்தச் சமுதயாத்தின் அனைத்துக் குழப்பகரமான முரண்பாடுகளோடும் ஒட்டியுறவாடுபவர்.இதே சமுதாயத்தின் சாக்கடையிற்றாம் நாம் அனைவரும் உருவாகிறோம்.இதுள், பெரிதாகச் சொல்லி , நீட்டி முடக்கத் தேவையில்லை.நாம் அனைவருமே குறைபாடுடையவர்கள்.

டோண்டு அவர்களை,நான் கண்ட இந்த எட்டு ஆண்டுகளில் அவர் சளைக்காது பல பக்கங்களை நிறைத்து எழுதிக்கொண்டிருந்தார்.என்னோடு அதிகமாக டொச்சு மொழியிலுரையாடுவார்.அவருக்கு மொழியொரு தடை அல்ல.இது, குறித்து நான் சில வேளைகளில் ஆச்சரியப்படுவதுண்டு!

2005-2006 கள் ஒரு பொற்காலமாக எழுத்துக்கும்-உணர்வுக்கும் இடைவெளியே புரியமுடியாதளவுக்கு ஒருவரதெழுத்தை மற்றவர், வாசித்து விமர்சிக்கும் உறவு நிலையாய் மாறியிருந்தது.அதற்குத் தமிழ்மணம் பாரிய பங்களிப்பையுஞ் செய்தது.





எது குறித்தும் டோண்டு அவர்கள் எழுதுவார்.நாம், எப்படியும் விமர்சிப்போம்,ஏசுவோம்-சண்டை பிடிப்போம்.எனினும்,இறுதியில் "டோண்டு ஐயா"  என்று, புன்னகைத்து விலத்திச் செல்வோம்.

மிகவும்,தப்புத் தப்பாகவெல்லாம் சமூக வளர்ச்சியைப் புரிந்து வைத்திருப்பார்.பிற்போக்குச் சிந்தனைகளைத் தனது அனுபவத்தின் தொடர்ச்சியாகவும் சந்தர்ப்பத்தில் நியாயப்படுத்தியும் விடுவார்.

சோவையும்-மோடியையும் பெருமிதத்தோடு போற்றுவார்.அப்படிப் போற்றும்போது,குஜராத்தில் நடாத்தப்பட்ட முஸ்லீம்களுக் கெதிரான படு கொலைகளையும் நியாயப்படுத்துவதை அவர் புரிய மறுத்தார்.என்றுபோதும்,அவரோடு உரையாடத்தக்கதாகவே இருந்தது.எதிராளியை வசைச் சொல்லால் அடித்து நொருக்கியதை நான் அறியேன்.மிகவும்,குதர்க்கமாகச் சமூகச் சிந்தனையை அவர் புரிய முனைந்திருப்பினும் அவரது தொழில்முறை-திறன்சார் அனுபவங்களும் எழுத்தும்,அறிவுறத்தல்களும் மிகவும் நேர்த்தியானது-பிரயோசனமிக்கது.சம்பவங்களைக் கோர்வையாக்கித் தனது தொழில் அனுபவங்களையும்,தான் கண்ட மனிதர்களையும் மிக அழகாக-நேர்த்தியாக எழுத்துக்குள் கொணர்வார்.இஃது, பாலு மகேந்திராவின் கமராக் கண்ணுக்கொத்த காட்சிப்படுத்திலாக எமது மனத்திலும்-விழிகளுக்கு முன்னும் விரிந்துகொள்ளும்.

தனது,ஒவ்வொரு நகர்வையும்-தான் அநுபவிக்கும் தருணத்தையெல்லாம் பகிர்ந்துகொள்ளும் திரு.இராகவன் அவர்கள், வலைப்பதிவில் நம்மைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்துக்களையெல்லாம் முன்வைப்பார்.அதை மூடி மறைத்து-நசிந்தபடி அவர் வைப்பதில்லை.தனக்குப்பட்டதை"எடுத்தேன்-கவிழ்த்தேன்"என்று போட்டுடைத்து எழுதுவார்.இதன் தாக்கத்தில் நாம் அவரோடு பல்வேறு பார்வையின் தெரிவில் சண்டை போடுவோம்.ஆனால்,இறுதியில் நம்மை அரவணைத்து,மனம் நோகமால் திரும்பிச் செல்ல வைப்பார்!இதனால்,அவரோடு முட்டிய வலி தெரியாது விலத்திப்போகும் பதில்களையே முன் தள்ளுவார்.

நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த மனிதரைக் கடந்த மாதம்வரை முக நூலில் தேடியலைந்திருக்கிறேன்.வலைப் பதிவில் சக்கை போடு போட்ட மனிதரை முகநூலில் காணாமலிருப்பதையெட்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால்,இன்று வாசித்த செய்தி அவர் இந்த உயிர்வாழ்வில் இன்னொரு கட்டத்தை அடைந்து விட்டாரென.

இந்தப் பௌதிக வாழ்வில், பெருந்துயர் நாம் பிறக்கும்போதே நம்மோடு தோழமைகொண்டு நிழலாகத் தொடர்கிறது.அதைத் துரத்த முடியாது.இது, "இயற்கையின் நியதி" என்று முன்னோர்கள் சொல்வதைப் புரிந்திருந்தாலும், நம்மோடு மல்லுக்கட்டி-உறவாடி,எழுதி,அநுபவத்தைப் பகிர்ந்து தன்னையும்,இந்த உலகத்தையும் விட்டுப் பிரிக்க முடியாது தொடர்ந்தியங்கிய மனிதர் நம்மோடு, இப்போதில்லையென்றுணரும்போது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.

நீண்டகால எழுத்தியகத்தின் மூலம் அறிந்த மனிதர் டோண்டு.இஸ்ரேலையெல்லாம் தான் ஆதரிப்பதாகச் சொல்லி உண்மை பேசும் மனிதர்.தனது நேர்மைக்குப் பாதகமில்லாமல் எழுதுபவர்.அஃது,பெரும் பகுதி மனிதர்களுக்கெதிரானதாவிருந்தாலும் தனது கருத்தை நேரடியாவும்-உண்மையாகவும் முன் வைப்பார்.

நாம்,எல்லோருமே குறைபாடுடையவர்களென மேலே சொன்னேன்.

"நல்லதும்-கெட்டதும்"  இந்தச் சமூக வாழ்நிலையின் வழியே நம்மை ஆட்டுவிப்பது.

டோண்டு அவர்களுக்கோ அன்றி எனக்கோ இருவேறுபட்ட உலகமில்லை!

நமது வாழ்நிலையில், அதுசார்ந்த சமுதாயக் கட்டமைப்பில் வர்க்கமாகப் பிளவுண்டுபோன பொருளாதார-மனித விருப்புகளும், வர்க்க அரசியலும் அதுசார்ந்த செயற்பாடுகளுமேதாம் நமக்குள் பிரதிபலிப்பது.

அந்த வகையில் டோண்டு அவாகள், தன் வாழ்நிலைக்கொப்பத் தன் சமூகவுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது,இழப்பு வலிக்கிறது.

கடந்த காலத்தை வெறுமையோடு திரும்பிப்பார்க்க வைக்கும் அவரது இன்மை, என்னையும் அவரது இழப்பையிட்டு எதையாவது உணர்வதைக் குறித்து எழுதெனத் தூண்ட, இதைப் பதிந்தேன்.

அன்னாரின் இழப்பையிட்டு வருந்தும் அவர்தம் குடும்பத்தவர்களுக்கும், மற்றும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபத்தைப் பகிர்ந்து,உங்களோடு நானும் அவரது இழப்பின் வலியில் பந்திகொள்கிறேன்.

Goodbye Dondu!
Der Tod ist wie ein Horizont,dieser ist nichts anderes als die Grenze unserer Wahrnehmung.Wenn wir um einen Menschen trauern, freuen sich andere,
ihn hinter der Grenze wieder zu sehen.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.02.2013

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...