இந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள "பகிரங்கமடல்" மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் "நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை"என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும்.
//சிறிரங்கனுக்கு பகிரங்க மடல்...
.............................
Sri Rangan Vijayaratnam க்கு 'கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை!
மட்டுப்படுத்தப்பட்ட விபரம்...
* இந்த வங்கி 'மனேசர்' சுட்டுக் கொல்லப்பட்டார்...
** இதன் சொத்துக்கள் புலிகளால் அபகரிக்கப்பட்ருந்தது...
*** இராயாகரானால் பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் முதுகெலும்பில்லாதவர்காளால் தாரைவார்க்கப்பட்டது...
*** ஐயரிடம் ஒப்படைக்பப்பட்ட சொத்துக்களின் விபரத்தை... 'இனியொரு' , 'சிறீரங்கன்' போன்றவர்களால், ஏதோ 'பில்டா விடுபவர்கள்' சரியாக, அல்லது மாதிரியாகத்தன்னும் வெளியில் (முகப்புத்தகத்தில்) வைக்க முடியுமா???-குமார்
Ceylon Illaikai : ஐயரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது தமிழீழக்கட்சியிடம் கொடுக்கப்பட்டது. இப்போ வசதிக்காக அனேக முற்போக்குகள் மௌனமான இருக்கிறார்கள். இதுதான் புரட்சிவாதிகளின் தோழமையோ. தோழர் ......//
இரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல்
இந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள "பகிரங்கமடல்" மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் "நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை"என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும்.
பல முகமூடிக்குள்ளிருக்கும் இந்த இரயாகரன் குழுவானது தன்னைச் சுற்றிப்போடும் வேடமானது அப்பணத்தைக் காத்துக் கொண்டு அதன்மீது நாமம் போடும் அரசியலைக்குறித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
இவர்களது,விளக்கத்தின்படியே இரயாவிடமிருந்த பணம் இறுதியில் தமிழீழக் கட்சிக்கும் போனதாம்.அதாவது,ஜான் மாஸ்டரின் தலைமையில் தமிழீழ மக்கள் கட்சியென்றும்,அதன் அரசியல் ஏடென்றும்"தமிழீழம்"சஞ்சிகை தலைமறைவாக அனைவருக்கும் கிடைத்து வந்ததை நண்பர்கள் அறிவார்கள்.
இந்தத் தமிழீழக் கட்சியானது புலிப் பாசிசத்தைக் கருத்தியல் ரீதியாக ஆதரித்து மக்களைக் காயடித்த புலிப் பினாமிகளது முகாமாகும்.அச்சஞ்சிகை புலிப்பாசிசம் உச்சத்தில் இருந்த போது அதைத் தேசிய இராணுவமாகவும்,தேசம் அதனால் விடுவிக்கப்படுவதுமாகப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களைப் புலத்தில் திறம்படக் காயடித்தது.இதற்குக் காசைத் தாரவார்த்த இரயாகரன் யார்?-சீச்சீ அது இரயாகரனல்ல-ஐயர் கையளித்தது! :-)
இந்தக் கேள்விக்கும் புரட்டல்வாதிகளது பதில் இவ்வாறு "புரட்சிகரக் குழுவாகத் தோன்றியதன் நம்பிக்கையில் வழங்கினோம்.அது,புலிப் பாசிசத்துடன் அண்மித்து முதுகெலும்பில்லாது அரசியல் செய்விட்டதென்றுங்கூட வகுப்பெடுத்தலாக அமையலாம்." ஏனெனில், இரயாகரன் குழுவினது புரட்டல் "இப்படி" எத்தனை ஆயிரம் நமக்குள் கடந்த 20 வருடமாக அனுபவமாகியது-புலத்துள்!
புலிப் பாசிசத்துக்குக் கருத்தியற்பலம் கொடுத்த தமிழீழக் கட்சிக்குக் கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளையில் நிதியிட்ட இரயாகரன் புலிப்பினாமியென நான் ஆய்ந்து சொல்வதன் நியாயத்தைப் பாருங்கள்!
இவர்கள், இப்படியாக மக்களை மொட்டையடித்த மகாத் திருடர்கள்,பாசிஸ்டுக்கள்-எதிர்ப் புரட்சிகாரர்கள் என்பதைக் குறித்து மிகக் கவனமாக உற்று நோக்குங்கள்.
ஒரு சதிகாரக் கூட்டு, எப்படியெல்லப் புரட்சிகரச் சக்திகளையும் வேட்டையாடியதென்பதை மிக விரைவில் உணர்த்துகொள்ளவேண்டும்!
பயங்கரமான சதிக் குழுவான இரயாகரன்-குழு,சதி நிரம்பியதென்பதற்கு இந்த ஒப்புதல் வாக்கு மூலங்கள் அவர்களையறிவதற்கு இன்னுமொரு படிக்கல்!
இவர்கள் எப்படியெல்லாம் புலிக்கு முகவர் வேலைசெய்து, தமிழிச்சிகளது தாலியை அறுத்தனரென்பது நாம் அறிய வேண்டிய வரலாற்றுண்மைகள்!
இப்போது அதே எதிர்ப் புரட்சியை மீளப் "புரட்சி வேடங்கட்டி" அந்நியர்களுக்கும்,அவர்களது வியூகத்துக்குமொப்ப அந்நியச் சக்திகளால் தூண்டப்பட்ட"மாவீரர் தினக்கொண்டாட்ட"ஆதரவுக் கலகப் "பல்கலைக் கழகப் போராட்டத்தை" மக்களது ஆவேசமாகவும்,தார்மீகவுரிமையாகவும் வர்ணித்து, அதைச் சொல்லி மீளவும், இலங்கை-இந்திய விச அரசியலுக்குக் கருத்தியல் நியாயம் கற்பிக்கும் கபோதிகளைக் கவனமாக் கண்காணிக்க வேண்டும்.
அன்று,தமிழீழக் கட்சியின்வழி முகமூடிபோட்டுப் புலிக்காவடி தூக்கிய இரயாகரன் குழு, மிக மோசடியான மாபியாக்களென்பதைத் தமிழீழக் கட்சி-ஜான் மாஸ்டர்,தமிழீழச் சஞ்சிகை,அவர்களது"தேசிய இராணுவம்"தமிழீழம்"விடுவிக்கப்பட்டு வருகிறதென்ற பாசிச ஆதரவுப் பரப்புரைகள்-கருத்துக் கட்டலிலிருந்தும்,இதே குழுவுக்குள் பல தலைகள் "விக்கியென்று,இளங்கோவென்று,ஜான் மாஸ்டரென்று,இரயாகரன் குழுவென்று" புலிகள் தமக்கான உளவுப்படைகளை எப்படியெல்லாம் உருவாக்கிவைத்துச் சிறு தொகையான இடது சாரிகளை வேட்டையாடினர்,இப்போதும் அதே குழுவை வைத்து எப்படி அந்நியச்சக்திகள், புலியினது புலம்பெயர் பினாமிகள் காரியத்தை முடிகிறார்களெனப் பார்த்தால் இந்தக் கற்றன் நசனல் வங்கிப் பணம்,விஸ்வா நந்ததேவனின் படுகொலை,கோவிந்தனின் படுகொலை,புலிகளால் இரயாகரன் கைது-தப்பித்தல் நாடகமெல்லாம் புலியினது வியூகத்துக்கமைய நடாத்தப்பட்டுப் புரட்சிகர அணிகளை நம்பவைத்துக் கழுத்தறுத்தது ஒரு பெருஞ் சதி!
இஃது, வரலாறாக நம் முன் எஞ்சி நிற்கிறது,புலிகள் இரயாகரன் குழுவை புரட்சிகர முகாமுக்குள் மெல்லத் தள்ளிப் புரட்சிகரவணிகளையுடைத்தும்-சிதைத்தும் வெற்றிகொண்டது, புலத்திலும்-நிலத்திலுமென்பது ஜீரணிக்க முடியாதவுண்மை!
இஃது, வரலாறாக நம் முன் எஞ்சி நிற்கிறது,புலிகள் இரயாகரன் குழுவை புரட்சிகர முகாமுக்குள் மெல்லத் தள்ளிப் புரட்சிகரவணிகளையுடைத்தும்-சிதைத்தும் வெற்றிகொண்டது, புலத்திலும்-நிலத்திலுமென்பது ஜீரணிக்க முடியாதவுண்மை!
புலிப் பாசிச எஜமானர்களது முள்ளிவாய்க்கால் அழிவில், அவர்களுக்குத் தியாகிகளெனப் புலிப் பினாமி இரயா கண்ணீர் வடித்துக் கட்டுரைபோட்டுக் கழற்றி மீள எனது அம்பலப்படுத்தலில் மாட்டுண்டு அதைத் தொடர்ந்து இணையத்துள் விட வேண்டிய நிலையும் நீங்கள் அனைவரும் அறிந்ததே!
இந்த மாபியாக்களை எங்ஙனம் வெற்றி கொள்வது?
இவர்களை அம்பலப்படுத்தித் தமிழ் அரசியற் பரப்பிலிருந்து அகற்றவது நிலத்து மக்களதும்,புலத்து மக்களதும் கடமை.
இவர்களால் தொடர்ந்து சுத்தப்படும் அரசியல் சதிகள், தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு புரட்சிகரக் கட்சியின் தோற்றத்தைத் தொடர்ந்தழித்து வருகிறது.
புரட்சிகரக் கருத்தியலைச் சிதைத்தும்,தனிநபர்களான புரட்சிகரச் சிந்தனையாளர்களை தமக்குள் உள்ளிளுத்துச் சிதறடித்தும்-காட்டிக்கொடுத்தும் வரும் இரயாகரன் குழு மிகப்பெரும் சதிகாரக்குழுவென்பதைப் பகிரங்கமாகவுரையாடவேண்டும்.
இவர்களது அனைத்து வேடங்களும் கலையாதவரை புலத்தில் புரட்சிகர அணிகள் தொடர்ந்து சிதைக்கப்பட்டுத் தோல்விகண்டே வருவர்.
ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2012