இந்தப் பிரச்சனைகள் யாவும் ஒன்றுடனொன்று தொடர்புப்படுத்தப்பட்ட சிக்கலிலிருந்து பேசப்படும் பிரச்சனையாக இருக்கிறது.ம.க.இ.கவுக்கு மனிதவுணர்களைத்தாண்டி வார்த்தைகளுக்கு அர்த்தங்காணும் தூய்மைவாதக் கருத்தென்றால் இரயாகரனுக்குத் தொழிலாளர்மீது தாக்கியதும் அதன் தளத்திலிருந்து மறுமுனையில் சோபாசக்தி செயற்படுவதுமான எண்ணத்தை உரைத்துப் பார்த்தல் சோபாசக்திக்கும் அவனது தனிப்பட்ட பாலியல் நடாத்தைக்குமான புள்ளியில் நிகழ்கிறது.எனவே,நீங்கள் என்ன வேடமிட்டு எழுதினாலும் இந்தப் புள்ளிகளை அழித்துவிட்டுப் புரிய முனையாதவரை எம்மில் பலர் "நல்ல-தூய"தொழிலாள வர்க்கத் தோழர்கள்தாம்.இதைத் தாண்டுவதற்கு நாம் பலதரப்பட்ட மக்களோடிணைந்து வாழ-போராடக் கற்றாகவேணும்.அது மறுக்கப்படும் சூழலில் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோதான அட்டைகளை எழுதி நெற்றியில் ஒட்டுவதைத் தவிர வேறெதுவையும் செய்யவில்லை.இதுதாம் இன்றைக்கு அதிகாரத்துக்கு அவசியமானது.அதை நாம் எல்லோருமே சரியாகச் செய்கிறோம்.
பரவலாகப் பேசப்படும்-எழுதப்படும் எழுத்துக்கள் யாவும்"மக்கள் நலன்"சார்ந்தது என்பதாகவே நமக்குள் வருகின்றன.இதில் இன்றைய பிரச்சனைகள் யாவும் ஏதோ சில தனிநபர்களுக்குள் இருந்து பற்றி வளர்வதாகவும் அது தனிப்பட்ட சிலரது செயலால் மக்கள் விரோத நிலையை எடுத்துவிடுவதாகவும் பர்ர்க்கப்படுவதானபோக்கில் சிக்கியுள்ள நிலைமைகளுக்கொப்ப, சோபாசக்தி தனது கருத்தை முன்வைத்திருப்பது ஒரு தளத்தின்மீதான எதிர்வினைக்குப் பதிலானாலும், அஃது, பரவலான இன்றைய அரசியல்-பொருளியில் உலகத்தோடு மிகப் பொருத்தமாக உறவுறுகின்றதென்பதை எல்லோருக்கும் பொதுவான "மக்கள்"நலன்சார்ந்து உள்வாங்கப்படுவதிலிருந்து எவரும் தப்ப முடிவதில்லை.
இந்த இலக்கில் அசோக்கினது அரசியல் குறித்த இராஜாவின் தொடர்விமர்சனம் இறுதியில் குறிபிட்ட தளத்தில், அசோக்கையும் இன்னொரு புறத்தில் மற்றறெல்லோரையும் அம்பலப்படுத்துவதாக இரயாகரன் சொல்லி முடித்துவைத்துவிட்டு,அடுத்த தொடரை சோபா சக்தி-லீனா மணிமேகலை குறித்தும்,அவர்களுக்குள் இயங்கும் அரசியலை அம்பலப்படுத்துவதாக ஆரம்பமாகிறது தமிழரங்கத்தில்.
இந்தத் தருணத்தில் சோபாசக்தி,தனதும்,லீனாமணிமேகலை குறித்ததுமான பொதுத்தளத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றத்தக்க செயலின்பொருட்டு ஒரு கட்டுரையை வரைந்துள்ளார்.வாசிக்கப்படும்போது,எத்தரப்பில் நியாயமிருக்கெனப் புரிந்துகொள்வதற்கப்பால் இவர்களனைவரும் இயங்கிகின்ற தளத்தின் இருப்பு என்ன?அதற்கும் பரந்தபட்ட மக்களது வாழ்வுக்கும்-விடிவுக்கும் எத்தகைய தொடர்பு,சமூகத்தன்மை என்னவெனப் பார்ப்பது அவசியமானது.
ஏனெனில், சோபாசக்தி ஆண்டாளின் பெண்மன விருப்புகள்,அதை அவளன்று வெளிப்படுத்த இறைவன்மீதாகப் பாடிக்கொண்ட சமூகச் சூழல்வரை, சோபாவின் எழுத்து விரிகிறது.இதில் தனிப்பட்ட பிரச்சனைகளை அரசியலாக்குதல்-பொதுப்பிரச்சனை ஆக்குதலென்பது மாற்று-மற்றும் அரசியல் கட்சிகளது நடவடிக்கக்குப் புதிதில்லை என்ற எனது பொதுப்புத்தியிலிருந்து புரியமுனையும் தளத்தில், இவர்களது இன்றைய இந்த"அரசியல்"ஒருபோதும் எவரையும் திரட்டிப் பொதுத் தளத்தில் இயங்க அனுமதிக்கத் தயாரில்லை என்பதை எனது கடந்தகாலக் கூட்டுக்கள் நிரூபித்திருக்கிறது.
தாந்தோன்றித்தனமான செயற்றளத்தில் இயங்கும் எழுத்துக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மை முன் நிறுத்துவதில் வந்து நிற்கின்றன.இந்தத் தாந்தோன்றித்தனமான எழுத்துக்களது பின்னே இயங்கும் அல்லது இயங்க அனுமதிக்கப்படுவதான சந்தர்ப்பவாத அரசியலில் நிலவுகின்ற அதிகாரத்துக்கிசைவான தெரிவையே இன்னொரு தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடிவுக்கான பாதையாகவும் காட்டி நிற்கிறது.இதைத்தாண்டிச் செயற்பாட்டுத் தளத்தில் இத்தகைய எழுத்துகளுக்கு வாழ்வே கிடையாது.
இவர்களது தெரிவில் எத்தகைய சுயநலம் தங்கியுள்ளதென்பதை பூதக்கண்ணாடி கொண்டு துப்புத்துலக்க அவசியமில்லை.ஒவ்வொருவரும் தத்தமது நியாயமாக மக்களின் சிண்டைப்பிடித்து அரசியல்-இலக்கியம்-புரட்சி பேசுகிறார்கள்.இதில் நான் பல சந்தர்ப்பங்களில் இதன் பின்னாலுள்ள தொடர்புகளைச் சந்தேகக்கண்ணோடு பார்க்கின்றேன்.ஒவ்வொரு தனிநபர்களதும் விரிந்த செயற்பாட்டுக்கும் ஒரு எல்லை இருக்கின்றது.அந்த எல்லையுடைத்து இயங்க அனுமதிக்கும் கட்சிசார் நடவடிக்கையாக-நிறுவனமாகப்பலர் இயங்கும் சூழல் இன்றைய புலம் பெயர்வுத் தளத்தில் புலிகளைத்தாண்டி எவருக்கு இருக்கிறதோ அவரது செயற்பாட்டின்மீது எனக்கு அதிகமான சந்தேகம் உள்ளது.இப்படியான சந்தர்ப்பத்தில்"மக்களை"சொல்லி இயங்கும் எவரும் வெளிப்படையான அரசியலைச் செய்வதாக மறைப்பு அரசியலோடு புரட்சி-இலக்கியம்-அரசியல் பேசுகின்றனர்.இவர்களிலிருந்து சோபா சக்தியும்,லீனா மணிமேகலையும் நசுக்கப்படும் குரலாகப் புனையும் சோபாசக்தியின் எழுத்து உண்மையானதாவெனச் சந்தேகம் எழுகிறது.
எதையுமே-எவரையுமே நம்புவதற்குத் தயாராக நான் இல்லை.
இங்கு, எவர்மீதும் தியானித்தபடி பின் செல்லவும் எவரும் வேண்டாம்.எழுத்துக்களால் இயக்கப்படும்"நியாயம்-அநியாயம்"நிலவும் ஆதிக்கச் சக்திகளுக்கு ஏதொவொரு வகையில் முண்டுகொடுப்பதில் மையங்கொள்ள முனையும் அரசியலையே கேள்விக்குட்படுத்தவேண்டும்.அங்கே,நானோ அல்லது எவரோ தூய்மைவாத முகமூடியணிந்து புரட்சி பேசமுடியாது!
இந்த முதலாளித்துவச் சாக்கடையில் நாம் எல்லோருமே கருவுற்றதன்பொருட்டு,எமக்குள் நிலவும் அனைத்துச் சிறுமைகளுடனும் பிணைந்த கூட்டுச் செயற்பாடு எவ்வளவு தூரம் ஒரு பொதுத் தளத்திலான பரந்துபட்ட மக்களோடு பிணைவுறும் என்பதை உரைத்துப்பார்த்து இயங்க முனைவதன் தொடரில் சோபாசக்தியின் இக்கட்டுரையை அனைவரும் வாசிக்க வேண்டியதுதாம்.என்றபோதும்,பொதுத் தளத்திலான உரையாடலைத் தனிப்பட்ட நடாத்தைகளின் தெரிவில் அரசியலாக்க முனையும் செயற்பாட்டின் இன்னொரு தன்மையிலான வெகுளித்தனத்தின் கடைக்கோடி நிலையும் பாசிசத்தின் ஊற்றுக்களில் ஒன்று என்பதும் உண்மையானது.
ப.வி.ஸ்ரீரங்கன்
21.04.2010
ஜேர்மனி
Wednesday, April 21, 2010
Subscribe to:
Posts (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...