Tuesday, January 29, 2013

இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலகம்: சாத்திரியும்,பங்கு பிரிப்பும் படுகொலையும்!

"ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். "-சாத்திரி   http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html

ந்த 2013 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள்நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான  ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள்,புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச் " சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?"அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!

கடந்த 2012 ஆம் ஆண்டு மாவீரர் தினக் கொண்டாட்டத்துள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துள் உருவாக்கப்பட்ட "புரட்சிப் பொறி " மாவீரருக்கு விளக்கேற்றும் "தார்மீக" உரிமைக்கானதென ஆரம்பித்து, இறுதியில் பலரைச் சிதைத்துக் கைதுகளோடு சிங்கள இராணுவம்தமிழ்ப் பிரதேசமெங்கும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான நியாயம் கொடுக்கப்பட்டது.இதுவும்,மேலே சொன்ன சதி வியூகத்தோடிணையும் சக்திகளோடு சந்திக்கும் புள்ளி இந்தியச் சாணாக்கியம்-புலத்துப் புரட்சிப் புரட்டென்று நாம் தொடர்ந்து எழுதினோம்.





இதைக் குறித்து, நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தோம். இது சதிவலையென்றும் மக்களை மீளக் காட்டிக்கொடுக்குஞ் சதியென்றுஞ் சொல்லியிதையெதிர்க்க வேண்டுமெனக் குறித்துரைத்தோம்.ஆனால், புலத்தில் "மாற்றுக் கருத்தாளர்கள்", இடதுசாரிகள்,புரட்சிக்காராகளென ஓட்டுமொத்தமானவர்களும் கூடவே,புலிகளும் இதை ஆதரித்துச் சங்கூதினர் மக்களுக்கு!. வழமைபோலவே தட்டந்தனியாக உண்மைக்காகப் போராடினோம். இதன் சதிகளை அம்பலப்படுத்தி "இது முற்றிலும் தவறான சக்திகளது தெரிவு " என்று மக்களை எச்சரித்தோம்.

இந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களது கலகத்தைத் தூண்டிய சக்திகள் அறுவடைக்குத் தயாரானபோது அதை சாத்தியமாக்குவதற்கான முறையில் நிலத்திலுள்ள பல போராட்ட அநுபவமுள்ள"அறிஞர்கள்" வேலி ஓணானாக மௌனமாகவிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சீண்டிய நாம் புலத்திலுள்ளவர்களது மௌனத்தைக் கலைத்தோம். அதுள்,கலகத்தின் பின்னே நிலவும் உண்மைகளை உறுதிப்படுத்தத் தக்க வகையிலேயேதாம் அவர்கள் தமது மனசாட்சியை வெளிப்படுத்தினர்.அஃது, உண்மையின் சாயல் வரவேற்கப்பட வேண்டியது.அவர்கள், இந்திய அரசின் நிகழ்ச்சிக் குட்பட்டிருப்பினும் இந்தவிடத்தில் மனசாட்சியோடு கருத்து வைக்கும் தார்மீகத்துக்குக் கட்டுப்பட்டு மக்களோடு நின்றனர்.

ஆனால்,புலத்தில் விழுந்தடித்துக்கொண்டு போட்டிபோட்டு "யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புரட்சிப் பொறியை" யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களெனும்பந்தத்துள் அந்தப் பல்கலைக் கழகக் கலகத்தை  முழுக் குத்தகைக்கு எடுத்து, இரயாகரன் குழு அதை ஆதாரித்து "மாணவர் எழுச்சி,மக்கள் எழுச்சியென"ப் பல பத்துக்கட்டுரை போட்டு அந்நியச் சக்திகளது சதிக்கு உடைந்தையாகவிருந்தது.இதேபோலவே, புலத்தில் பலர் அந்நியச் சதியை மக்களது தார்மீகப் போராட்டவுணர்வின் பேரால் ஆதரித்து அறிக்கைகள் விட்டனர்.அதுள், முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்க "அமைப்புகள்" புதிய திசை-புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற  இரயாகரனது பெயர்ப்பலகை!

என்னவொரு அந்நிய விசுவாசம்!,அடிமைச் சேவகம், இந்த அமைப்புகளுக்கு!!

இலட்சக் கணக்கான மக்களை"தமிழீழப்போராட்டம்"செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருந்தனர்.

நாம்,இந்த அவலத்தின் நடுவே, ஓங்கியொலித்து மாணவர்களது கலகமானது அந்நியச் சக்திகளது தெரிவு,அது அவர்களாற் தூண்டப்பட்டு மக்களது உரிமைகள்-போராட்டவுணர்வுக்கு விலங்கிட்டு அடிமைப்படுத்தும் சதியெனச் சொன்னபோதெல்லாம் அதை இந்தப் புலத்து புரட்சிகாரர்கள் ஏதேதோ சொல்லிக் கருத்தடி தந்தனர்!.

கூடவே, எமக்குச் சமூகவியக்கம்,அதன் அசைவாகத்துள் உருவாகிய புதிய தலைமுறையின் சமூகவுணர்வு குறித்தெல்லாம் வகுப்பெடுக்க வெளிக்கிட்டனர். ஆனால்,அவர்கள் சமூகவியலில் எந்தக் கடைக்கோடி நிலையில் நிற்கிறாகளெனத் தம்மை நிரூபித்தபடி தமது அந்நியச் சேவையைத் திறம்படச் செய்தனர்.அதனால், இத்தகைய கலகங்களையும் அதுசார்ந்து இலங்கையின் தென் மாகாணப் பல்கலைக்கழகத்துக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட கலகத்தையெல்லாம் "இனங்கடந்த போராட்டவுணர்வு தோழமை " யென வகுப்பெடுத்துத் தமது எஜமானர்களுக்கிசைவாகக் கருத்தாடினர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும்,முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடித்தனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இந்தச் சதிகளது தெரிவில் சிலவுண்மைகளது முடிச்சவிழ்க்கும் "பங்கு பிரிப்பும்,படுகொலையும்" எழுதும் சாத்திரியைக் குறித்து நாம் சில கருத்துக்களை முன்வைத்தாகவே வேண்டும்.





சாத்திரி,ஒருவகையில் முழுமையான புலி விசுவாசி.பிரபாகரனுக்காக எதையும் செய்யும் மனநிலையுடையவரென்பதும்,வியாபாரப் புலிகளால் ஏமாற்றிப் படுகொலைசெய்யப் பட்ட பிரபாகரனுக்குப் புலத்தில் தமது வட்டத்துக்குள் முதன்முதலாகப் பொதுவெளியில் மாவீரர் அஞ்சலி செய்தவரும் சாத்திரிதாம்.சாத்திரி இத்தகைய மனிதரென்பதால் புலிகளையும்,அவர்கள் வழியிலான விதேசியப் போராட்டத்தையும் நாம் விமர்சித்த கடந்த காலத்தில் இந்தச் சாத்திரியார் எமது கட்டில்வரை வந்து எம்மைத் தூசித்தவர். எனினும்,அதையெல்லாம் நாம் எமது சமூக நடாத்தையினதும்,அதன் வளர்ச்சிக்கட்டத்திலும் புதைந்து பார்த்ததன் காரணத்தால் அது ஆச்சரியமோ அன்றி வேதனையையோ தரவில்லை.மாறாகச் சமூகக் கோபத்தையே தந்தது.என்றபோதும்,இந்தச் சாத்திரியின்இந்தப் "பங்கு பிரிப்பும்,படுகொலையும்" என்ற தொடரை மிக முக்கியமானவொரு சமூகப்பணியாகவே நாம் பார்க்கிறோம்.

புலிகள் தம்மைக் குறித்த ஆவணங்கள் யாவையும் நாசிகளைப்போலவே தாமும்  கைக்கெட்டியவரை அழித்துத் தமது அந்நியத் தொடர்புகளை,சதியை அதையொட்டி அந்நியருக்காக மக்களைக் கொலைகளத்துக்கனுப்பிய அனைத்து அரசியல் ஆவணங்களையும் இல்லாதாக்கிவிட்டனர்.புலத்தில் புலிப்பினாமிகள்,வியாபாரப் புலிகள்-மாணவப் புலிகளெல்லோரும் நேரடியாக அந்நிய ஏஜென்டுகளோடு உறவாடித் தம்மிடமிருக்கும் அனைத்தையும் மறைத்துவிட்டனர்.

இந்த நிலையில்,தமிழீழப் போராட்டத்தால் நாம் இடம் பெயர்ந்ததுக்கும்-அழிந்ததுக்கும்,திக்குத்திக்காய் புலம் பெயர்ந்ததற்கும்காரண காரியம் தேடும்வருங்காலச் சந்ததிக்கு,அதன் அறிவுக்கும்-தேடுதலுக்கும் அவசியமான"தமிழீழப் போராட்டத்தின்" உண்மையான வரலாறு இன்னும் உருவாகப்படவில்லை.அத்தகைய வரலாறு தரவுகளையும்,உண்மைகளையும் சார்ந்தே எழ முடியும்.அஃது,அநேகமாகக் கை கூடாதும் போகலாம்.ஆனால், சாத்திரியின் தொடர் அதுள் சிறு பொறியையாவது வருங்காலச் சந்ததிக்கான உண்மையாகவிட்டுச் செல்லும்.

நாமும், இந்தச் சாத்திரியின் மூலமாக இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் தொடர் முடிச்சுக்களை போடும் நிலைக்கு அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் கலகத்தின் பின் புலத்தையும், அதற்குக் கயிறு கொடுத்தவர்களையும் குறித்துப் பேசுகிறார்.அந்தக் கயிறு இந்தியாவால் திரிக்கப்பட்ட தெய்வீகன் மற்றும் புலத்துப் புலி வியாபாரிகள்!எப்படியிருக்கிறது இந்தச் சதி? மக்களைக் கொல்லுஞ் சதி-அந்நியர்களால் நடாத்தப்படுகிறது, இந்தக்கலகமெனத் தொடர்து இடைவிடாது கூறிக்கொண்டோம்.கபோதி, இரயாகரன் குழு இதை "மக்கள் எழிச்சி-மாணவர் எழுச்சி" என்றிட்டுக்கட்டி அந்நிய எஜமானர்களுக்காக நமது இளைஞர்களைச் சிங்களத்துச் சிறைக்கனுப்பினார்கள்-பாவிகள்-கொடும் மாபியாக்கள்!!இவர்கள்தாம் இப்போது அந்நிய சேவைக்கேற்ப முன்னிலைச் சோசலிசக்கட்சிக்கு வால்பிடித்துத் தம்மைத் தக்கவைக்க முனைகிறார்கள். அன்று, தம்மால் கொள்ளையிடப்பட்ட கட்டன் நசனல் வங்கிக்குள்ளிருந்த மக்களது பல கோடி பணம்-நகைள் மூலம் அமைப்புகளுக்கு நிதியிட்டும்,பொருளிட்டும் தமது ஏஜமானர்களிடம் இதற்காக இரட்டிப்பாக அறுவடை செய்கின்றனர்.;இது,எதன் பெயரால்? மக்களது விடுதலை-புரட்சியின் பெயரால்!

எதிர்ப் புரட்சியாளர்கள் வரலாற்றில் சறுக்கியவர்களல்ல. மாறாகப் புரட்சிக்குரிய நிலவரத்தைத் திட்டமிட்டுச் செயற்கையாகப் படைத்து அதன்வழியாகத் தம்மைப் புரட்சிகரச் சக்தியாகக் காட்டிப் புரட்சியைச் சிதைத்தபடியே தம்மைப் புரட்சியாளர்களெனத் தொடர்ந்து நிரூபித்துப் பற்பல புரட்சிகரக் கட்சி நாமத்துடன்  உலகெல்லாம் விரிந்து வாழ்பவர்கள். இது, புட்சிகரத் தோழமைக்குள் நியாயப்படுத்தப்பட்ட தோழமையாக விரித்து வைக்கும் சதி முதலாளித்துவத்து இருப்புக்கான வியூகத்தின் தெரிவிலொரு வழியாகும்.எனவேதாம், மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில்:" எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ]". என்பது. இதன்வழி நமது சிந்தனையாளர்கள் பலர் 2009 வரை ஆழ்ந்த மௌனத்தைப் புலிப்பாசிசத்தின் முன் கடைப்பிடித்தபோது அதன் கிளைகள்-வேர்கள்-விழுதுகள் தற்போது புரட்சிகரச் சக்தியாகப் படங்காட்டிப் பின்னும் சதிவலையைக்கூடப் புரட்சியென நம்பும் நம் மக்களை விட்டில் பூச்சியாகவே நாம் இனம் காணவேண்டும்.

ஆகவே, யாழ்மாணவர்கள்கலகத்துக்குப் பின் நின்று தூண்டிய சக்திகளை நாம் ஏலவே சொன்னோம்.சாத்திரியின் குறிப்பின்வழி அது பலமான தொடர் புள்ளிகளை நமக்குத் தருகிறது.

இதிலிருந்து,இன்னொரு புள்ளிக்குத் தாவினால் அதுள் சந்திப்பவர் பரணி கிருஷ்ணரஜனி.

இவர் 2009 க்குப் பின் பொதுவெளிக்கு வருகிறார்.முள்ளி வாய்க்காலில் புலிகள் மண்கவ்வி மக்களைப் பலிகொடுத்து அழிந்துபோன பின்புலிகளது தவறுகள்,தப்புகள்,போராட்டச் செல்நெறிகள்,அவர்களது காட்டிக்கொடுப்பு,அந்நிய அடியாட்படைப் பாத்திரத்தோடு புலிகளது வரலாற்றுத் துரோகம் குறித்து நிறையக் கேள்விகளோடு மக்களும்,அவர்களது குழந்தைகளும் புலத்திலும்-நிலத்திலும் முனையுங் தருணமிது.

இதைத் தடுத்து, மக்களைத் தொடர்ந்து விவேகமாகச் சிந்திக்கவிடாதிருக்க அதே புலிவழிபாடு,தலைவர் துதியைத் தொடர்ந்து அச்சுப் பிசாகமால் பரணி செய்து வருகிறார்.இது இந்திய அரசின் மிகப்பெரும் கருத்தியல் தாக்குதலாகும்.

புலத்தில் மீள,அதே புலிவழிச் சிந்தனையையும்-ஏமாற்றையும் மனோவியற் புரிதெலெனுந்தொலியின்வழி  சொல்லிப் புனைந்து, புலத்தில் புலி குறித்த சரியான மதிப்பீட்டுக்கு மக்கள்வராதிருக்கப் பாடுபடுகிறார்.இது, ஒருவகையில் பார்ப்பனர்கள்இன்று தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுவதுபோன்றது.அதாவது, ஜெயலலிதாவையும் கவனித்துக்கொள்ள முடியுமென்கிறேன்.


வீன் பல்கலைக்கழகப் பின் கற்கையியல் மாணவன்பரணியின் வயதையொட்டிய ஆறாவடுச் சயந்தன் கதிர் பரணியின் இத்தகைய நடவடிக்கைக்குச் சமீபத்துள் எங்கோவொரு குறிப்பில்சொன்ன கருத்து:" பரணி, சின்ன விடலைகளுக்கு உசுப்பேத்திக் கதைவிடுகிறார்"என்பதாக இருந்தது.


ஆனால்,நாம் தொடர்ந்து கூறினோம் பரணி இத்தகையவழியில் இளைஞரைச் சிந்திக்கவிடாது புலிகளுக்கு ஒளிவட்டம் கட்டி மாயயை ஏற்படுத்துவது அந்நியச்சதி. இளையர்களைத் தொடர்ந்து போலித்"தமிழீழ" க் கனவின் வழி மழுங்கடிப்பதற்கான வியூகம் இதுவென்றோம்.அதுதாம் உண்மையென்பதைப் பல்கலைகழக மாணவர்களது கலகம் குறித்த பரணியின் உரையாடலின் மூலமும் ,புலி மாணவன்-இளய போராளி தெய்வீகனது இந்திய மண்ணில் இருத்தலுக்குட்ட பாதுகாப்பும் இன்னும் அதிகமாகப் பரணியின் பாத்திரத்தை உறுதிப்படுத்தும்

பரணி கடந்த 2012 கார்த்திகை மாதம் ஆரம்பத்திலேயே யாழ்ப் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் உறுமுகிறார்கள்-ஒரு புரட்சி வெடிக்கும்,அது துனேசியாவைப்போல வெடிக்கும் என்றெல்லாம் கதைவிடத் தொடங்கினார்.இது திட்டமிடப்பட்ட சதிகளது முன்கூட்டிய தொடர்பு,அதன்வழியான பின்புலச்சக்திகளது உரையாடல் மூலமாக அவர் பெற்றுக்கொண்டபின் அதை அவிட்டுவிட்டார்.

இப்படிப் புலிகளால் வளர்க்கப்பட்ட பல மாணவர்களே இந்திய உளவுப்படைகளால் இப்போது உள்வாங்கப்பட்டு முழுக்க முழுக்க இந்திய நலனுக்கான தெரிவில் புலியைப் போற்றியும்,தேசம்-தேசியம்-தமிழீழம்"என்று கருத்துக்கட்டி மக்களைப் புதிய தெரிவுகளிலிருந்து அப்புறப்படுத்த்தித் தொடர்ந்து புலிக்கனவில் வைத்து ஒடுக்குவதற்கான கூட்டுக்கள்-சதிகள் தொடருகிறது.

இதை எங்ஙனம் முறியடிப்பது?

மக்களைத் தவறான பாதைக்குள் தள்ளிப் பலியெடுக்கும் இந்திய-மேற்குலக-இலங்கைச் சதிக்கார லொபிகளுக்கும் அவர்களது "இயக்க-கட்சி-புரட்சிக்குள்ளிருந்து" அடுத்த தலைமுறையை எங்ஙனம் காக்கப்போகிறோம்?

அரபுத் தேசத்துள்அமெரிக்க மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியத்துக்காகச் சாகும் அரேபியர்கள்போன்றோ அல்லது தமிழீழப் போராட்டத்தின் மூலம் அந்நியர்களுக்காக நமது மண்ணில் வீழ்ந்த பல இலட்சம் மக்களைப் போன்றோ இனியும் மக்களைச் சாகடிக்கும் அரசியலைப் புரட்சி-விடுதலை என்று வகுப்பெடுப்பவர்களைக் குறித்து எப்படிப் பார்ப்பது?

அந்நிய ஏஜென்டுகளை-கூலிகளை,லொபிகளை புரட்சிக்காரர்கள், விடுதலைப் போராளிகளென்றுரைக்கும் முட்டாள்தனத்தை எப்போது விடப்போகிறோம்?

குறைந்தபட்சமாவது சாத்திரியின் இத்தகைய உண்மை கூறிலின்வழியாவது சில சதிகளை கருத்து ரீதியாவுணர்ந்தாலும் செயற்பாட்டில் இத்தகைய குழுக்களை,புலத்தில் புரட்சிப்படங்காட்டும் புலிப்பினாமிகளையெல்லாம் வெற்றிகொள்ளும் ஆற்றலை முழுமையான உண்மை கூறற் கருத்துக்காளாலும் அது சார்ந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் பெறமுடியும்.

ஒரு சிறு பொறியை எழுப்ப முடியும்.

அந்த வகையில் சாத்திரியும் தமிழீழப் போராட்டத்தின் மூலமான சதி வரலாற்றை ஒரளவு மக்கள் அறிவதற்கு முக்கியமானவொரு பங்கைச் செய்திருக்கிறார்.


ப.வி.ஸ்ரீரங்கன்
29.01.2013

Friday, January 11, 2013

என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்...

என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்-ஓடியாருங்கோ,ஓடியாருங்கோ!


நான், பிறருக்கு "உதவும்-உதவிக்கு"ப் பின் எனது எதிர்பார்ப்புகளை ஒரு  corporate ethics முறையில் தரச் சொல்லி பார்த்திபன் கேட்டிருக்கிறார். அங்ஙனம்,வழங்கும்போது என்னால் நடுச் சந்தியில் ஆசீர்வதிக்கப்படுபவர்களுக்கு(குறிப்பாக: என்னிடம்"உதவி" பெறுகிறவர்களுக்கு) வசதியா இருக்குமென்பது மேன்மை மிக்க பார்த்திபனது வேண்டுகோள்.

அவ்வண்ணமே,நான் எனது முகநூல் நிலைத் தகவலில் எழுதிய குறிப்பைப் பார்த்திபன் தனக்கேற்ற வகையில் இதை ஒரு பாரிய சுற்றுக்குவிட்டும்[corporate social responsibility ]கூடவே, யசீகரனது சகோதர-சகோதரிகளுக்கும் அனுப்பிவைத்து இப்படியொரு நல்ல வேலையைச் செய்திருக்கின்றதால் யசீகரனது சோதரி ஜெயகலாவும் எனக்குத் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து, "எனது எதிர்பார்ப்பு" [ corporate ethics ]அறிதற் பெருவிருப்பையும் தெரிவித்திருக்கிறார்.

எனவே,நான் கண்டிப்பாக எழுத்து மூலம் "corporate ethics-சை"  தெரிவித்தே ஆகவேண்டியவொரு சூழலுக்கு "என் முன்னைய பாமர விருப்பான "என்வீட்டிற்கும் வந்திருக்கலாம்" என்றவணர்வினது[Aspects of Intellectual Property Rights  ] வெறுப்பில் கொண்டித்தீர்த்த இந்த நாய்-பேய் வார்த்தகளால் பாதிக்கப்பட்ட பெரு மனிதர்களது கேள்விகள்-எதிர்பார்ப்புகள் கொணர்ந்திருக்கின்றது!

எனவே, அவர்களது கருத்துக்களும்"எனது "எதிர்ப்பார்பு  "code of business ethics " பரவலாக வெளிப்படும்போது,எனது எதிர்பார்பினது  corporate ethics  நிறைவடையும்.அதனால் இது பொதுவெளில் வைக்கப்படுகிறது.

ஜெயகலா,உங்கள் மின்மடலுக்குப்


[ வணக்கம்,

உங்களைப் போன்ற நண்பர்களின் உதவியினால் இன்று சுவிசில் வாழும் ஜசி, வளர்மதியின் சகோதரி. உங்கள் குருதியின் பங்களிப்பினை பார்த்திபன் மூலமாக பெற்றுக்கொண்டவள். எங்கள் சுமைகளை நீங்களும் உங்களைப் போன்ற நண்பர்களும் உங்கள் தோள்களில் சுமந்த அவ்வேளை முகம் தெரியா உங்களை நினைத்து பெருமைகொண்டு நின்றோம். மனிதம் மரணிக்கவில்லை என மகிழ்வு கொண்டு நின்றோம். தாமாக முன்வந்துசெய்த உதவியினால் நெஞ்சம் நெகிழ்ந்து நின்றோம். நிச்சயம் உங்களைப் போன்ற
நண்பர்களின் உதவியே எனது சகோதரனையும் மனைவியையும் மீட்டது. இன்றும் அவ் உதவிக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

face book இல் நீங்கள் பறையறைந்த செய்தி கண்டேன். இந்தக் கணமும் உங்கள் உதவியை நாம் மதிக்கின்றோம். உங்கள் உண்மைக்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் பறையறைந்திருந்த செய்திகளை
முன்பே ( உதவி செய்யும் போதே) தெரியப்படுத்தியிருந்தால் எங்களுக்கும்
உதவியாயிருந்திருக்கும். உங்கள் குறிக்கோளை உணர்ந்து கொண்டிருப்போம். யாவற்றுக்கும் நன்றி.



பெறுமதியற்ற பிண்டமாகிய நாய்கள்.
ஜெயா,
இலங்கை.                                                                                             ]

 பதிலெழுதவேண்டுந்தாமாவென மனதுள்பட்டாலும் ஏதோவொருணர்வு, எழுதவேண்டுமென மனதில் தைக்கிறது. "உதவி-உதவுதல்" எனும் வார்த்தையே சகிக்கமுடியாதளவுக்குத் துஷ்ப்பிரயோகஞ் செய்யப்பட்ட சமுதாயத்தின் உறுபினர்களாகிய நாம் பெரும்பாலும் மனதவுறகளில் மகத்துவமுடையவர்களெனக் கொள்ள முடியாதுதாம். நான் அப்படியானவொரு "எதற்கும்" ஒரு எதிர் பார்ப்புடைய-நலன் நோக்கும் Code of Ethics காரியவாதி.







பலரை இப்படி "இறால் போட்டுச் சுறாவாகப் பிடிப்பதில்"நான் ஒரு வியாபாரி.

இத்தகைய எனது,"உதவி"க்குக் குறிக்கோள் அறியவேண்டுமென்பது உங்களது நோக்கென்பது நான் எழுதிய குறிப்பொன்றின் மூலமாக எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

எனது,நிலையோ "எல்லோருக்கும் விலாசங்காட்டி உதவுது",அதை வைத்து நல்ல மனிதர் வேடம் பூணுவது, இந்த இலக்கிலிருந்தபடியே அரசியலொன்றை நகர்த்தவது.அதன் செழுமைக்கு இத்தகைய உதவிகளை விளம்பரப்படுத்தி, சமூகத்துள் காலூன்றுவதன் பயனாக மக்கள் மத்தியிலொரு அரசியல் அறுவடையைச் செய்வதே இலக்கு.

எனவேதாம் "எவருக்கும்  மனமுவந்து உதவுவதுபோல் உதவி"அதை விளம்பரப்படுத்துவது.

பின், அதைவைத்தே கண்ணீர் வடித்துச்  சுயதம்பட்டம் அடிக்கும்போது "தியாகி-கொடை வள்ளல்" என்ற பெயரோடு"அழியாப் புகழ்" வந்தடையும் வரலாற்றைக் குறித்தெனதிலக்குகள் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இதைப் பரவலாகப் பகிரங்கப்படுத்துவதால் என்னிடம்"உதவி" கேட்பவர்களும்-நானாக உதவுவதாக நாடகமிட்டு உதவும்போதும்" சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.01.2013

Wednesday, January 09, 2013

"ஆண்கள் விற்பனைப்" பார்த்திபனும்,நூறு யூரோவும்...

"ஆண்கள் விற்பனைப்" பார்த்திபனும்,நூறு யூரோவும்,ஸ்ரீரங்கனும்-சில குறிப்புகள்.


னிபட்டதும்,அஃது,சந்தர்ப்பத்தில் "பொது" வெளிப்பட்டதும்,அரசியல் வாழ்வில்-"நண்பர்களாக" ச் சில தன்முனைப்பு மனிதர்கள்-என்னைப்போலவேதாம்?

இடது கரங்கொடுத்ததை வலது கரம் தெரியாதிருக்கும் "கர்ண" பரம்பரை- குபேரன்அல்லது வங்கிக் கொள்ளைப் பணத்தில் சொத்துச் சேர்த்து வைத்துப் புரட்சி பேசும்"தோழரும்" நானில்லை!

நான் சாதாரணத் தொழிலாளி-சாமான்ய மனிதன்.







என்றபோதும்,எனக்கும் "தமிழ் பேசும்" மனிதர்களைக் குறித்து ரொம்ப நல்ல அநுபவ வாழ்வைக் காலம் கனிய வைத்திருக்கிறது. அதற்குத் "தமிழீழப் போராட்டம்" இன்றைய புலிகளது வாழ்வியல் நிலவரம்,மக்களது நிலைமையென ஓராயிரம் பக்க விளைவுகள் புரியுவும்-தெரியவும்.இந்தக் காலம் உதவித்தாம் இருக்கிறதென்று சொல்வதை விட வரலாறு இப்படியெல்லாம் நம் முன் உண்மைகளோடு உறவாடுகிறதென்றுரைப்பதே சரி!. இந்தத் தமிழ்ச் சமூகத்துள்தாம் நானும்,பார்த்திபனும் வாழ்கிறோம்!

சமீபத்தில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

அக்குறிப்பின் ஆரம்பம்"நான் ரொம்பக் கவலையாக இருக்கிறேன்..." என்பதாக.

இக் குறிப்பு எழுதியபோது,வெறும் சாதரண மனிதனுக்குரிய "நட்பு-நிராகரிப்பு" என்றவுணர்வுக்குள் நானும் அப்பப்பவென்ன எப்போதும் உணர்வுரீதியான எதிர்பார்ப்புகள் இருக்கும்போது,இவை குறித்தான மனிதத் தொடர்பாடல்-சமூகக்கூட்டு,எனும் வாழ்வியல் நமக்கு இல்லாதவொரு புலம் பெயர் வாழ்வில் சமூகத்தோடானவுறவு,பழைய நண்பர்களைச் சந்திப்பதில் ஆர்வமெனும் உணர்வு எமக்குள் சில எதிர்பார்ப்பு-கனவுகளைத் தருவதென்பது இயல்பானது.

அந்தவகையில், சமீபத்தில் பார்த்திபனும்,முகமறியா ஜசீதரனும் அவரது குடும்பமும் சயந்தன் கதிர் வீட்டுக்குப் போயிருந்தபோது சயந்தன்" அவர்களது படத்தையும் முகநூலில் போட்டுக்" குறிப்பு எழுதினான்.எனக்கு,ஏற்கனவே,பர்த்திபன்மீது "மதிப்பும்,தொடர்ந்து சந்திக்க வேண்டுமெனவுணரும் விருப்பும்" இருப்பதென்பது உண்மை.

நான்,அழைத்தாலும் பார்த்திபன் வருவதில்லை!நேரமில்லை என்பது அவரது தரப்பு நியாயம்.அதுவும், சந்தர்ப்பத்தில் சரியானதுதாம்!







கடந்த ஓரிருமாதத்துக்குமுன்  எனது சகலர் வீட்டுக்குப் பார்த்திபனும்,ஜசீதரன் குடும்பமும் வந்திருந்தை நான் அறிந்தேன்.இது,எனக்கு மனதில் அதிகம் அழுத்தத்தைக் கொடுத்திருந்து.

ஜசீதரன்,இலங்கை அரசாங்கத்தால் புலிகளென்று சந்தேகத்துக்குள்ளாகிச் சிறையில் இருந்தார்.அவரது விடுதலைக்கு-வக்கீல் செலவுக்குப் புலம் பெயர் மண்ணில் காசுகள் சேர்த்தபோது (நண்பர்-அறிந்தவர் வட்டத்துள்)நானும் உதவுவதாகப் பார்த்திபனுக்குச் சொல்லி 100 யூரோவும் உதவியிருந்தேன்.

என் சகலனது வீடு 20 கிலோமீட்டர் அண்மையிற்றாம் இருக்கிறது.

அங்கே,ஜசீதரனைக்கூட்டி வந்த பார்த்திபன், என்னையும் எட்டிப் பார்த்திருக்கலாம்,ஜசீதரன் என்னிடம் வந்திருக்கலாமென நான் உணர்ந்த புரிதலில் மனம் நொந்திருந்தபோது சயந்தன் கதிரது படமும்,பார்த்திபன்,ஜசீதரன் குடும்பத்தை அவன் வரவேற்றுபசரித்த குறிப்பும் எனக்குள் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது-நான்,என்ன மகாத்மாவா என்ன?

என்னடா," நாம் இவ்வளவு தோழமையாகவிருந்தும் நம்மிடம் வரமுடியாதளவுக்கு நாமென்ன தப்பை இவர்களுக்குச் செய்திருக்கிறோம்?,நாம் ஏன் மற்றவர்களுக்கு நட்புப்பாராட்டும்படி நடக்கவில்லை" என்றும் எனக்குள் ஒரே கேள்வி.

எப்போதும்,பலருக்கு உதவியவுணர்வும்,என்னை நட்புப் பாராட்டி ஏமாற்றிய கவிஞன் காங்கேசன் கோவிந்தகுமார் " எல்லாம் "ஞாபகம் வந்தது-வந்தார்கள்.காங்கேசன் கோவிந்தகுமார் ஆயிரக்கணக்கான டொச்சு மார்க்கை என்னிடம் வேண்டி ஏமாற்றி  இருக்கிறான்.இன்று, இருபது வருடாமாச்சு, இந்த ஏமாற்றுக்கு!.அப்படியொருவுணர்வில் நான்-எனது முகநூல் நிலைத் தகவலில் இப்படியொரு குறிப்பெழுதினேன்:


 Sri Rangan Vijayaratnam:
26. Dezember 2012 in der Nähe von Wuppertal
நான் ரொம்பக் கவலையாக இருக்கிறேன்.இவன் பார்த்திபனால் நான் பல மாணவருக்குவுதவி செய்திருக்கிறேன்.உதவி அமைப்பினூடாகவுஞ்கூட . செல்வி ஜனகாவின் ஊடாக நான் 6 மாணவர்களை உயர் கல்வி வரை இந்தியாவிலும்,ருஷ்சியாவிலும்வைத்துப் படிப்பித்திருக்கிறேன்.எனது உழைப்புகள் யாவும் இப்படியே அழிந்திருக்கிறது.எனது குடும்பத்தைப் பார்க்காது-எனது தாயை அநாதையாகச் சாகவிட்டு இவவர்களைப் படிப்பித்திருக்கிறேன்.பலர் இப்போது பொறியியலாளராக இருக்கின்றார்கள்.ஆனால், எனக்கு இவர்களால் எதுவும் நடாவது போயினும்,எனது உறுவுகளை இவர்களால் நான் இழந்துள்ளேன்!ஜசிதரனது வக்கீல் செலுவுக்கும் நான் உதவி செய்திருக்கிறேன். ஆனால்,எனது சகலனது வீட்டுக்கு வந்த ஜசீதரன் எனது வீட்டுக்கு வரமுடியவில்லை!நான் ஜசீதரனுக்கு எனது குருதியில் பங்களித்திருக்கிறேன்-உதவி செய்திருக்கிறேன்.என்றபோதும் ,என்னிடம் வரமுடியாததன் காரணமென்ன?
புலிக் குணமா?
போங்கடா புலிப் பயல்களே!
நான் மனிதர்களையே நேசிப்பவன்.
எனது குறிக்கோள்-உண்மைக்கு முன் எந்த நாய்களும் எனக்குப் பெறுமதியற்ற பிண்டங்களே!

சயந்தன் வீட்டுக்குப் போனவர்கள் எனது வீட்டை வரவேண்டுமென நினைக்கவில்லை!

இனிமேல்,எவனாவது உதவியென வந்தால் செருப்பால் அடிப்பேன் நாய்களே!



இதைப் பார்த்த பார்த்திபன்,எனக்கொரு குறிப்பும் எழுதி,நான் ஜசீதரன் வழக்கில் செலவுக்கு அனுப்பிய 100,€  யூரோப் பணத்தையும் மீள, எனக்கு அனுப்பியிருக்கிறார்.


சிறீரங்கன்..

Facebookஇல உங்களை நீங்களே அறிமுகப்படுத்தியதைப் பார்த்தன்.அதின்ர ஒரு copyயை ஞாபகத்துக்கு இதோட அனுப்புறன்.

நான் உங்களை எந்த உதவியும் செய்யச் சொல்லிக் கேக்கேல.உதவி-நீங்களா செய்தது.எண்டாலும் யசிகரன்/வளர்மதி வழக்கிற்கு நீங்கள் தந்த 100 யூரோவை உங்கட வங்கிக் கணக்குக்கு இண்டைக்கு அனுப்பியிருக்கிறன்.காசு அனுப்பினத்துக்கான வங்கிப் பற்றுச்சீட்டு  copyயும் இதோட அனுப்புறன்.
** நீங்கள் தந்த காசை நான் திருப்பித் தந்தாலும்,அந்த நேரம் நீங்களாகச் செய்த அந்த உதவியை நான் இப்பவும் மதிக்கிறன்.

சிறையில இருந்து சுவிசுக்கு வந்தவுடன் வளர்மதியும்,யசீகரனும் உங்கட உதவிக்குத் தலைசாய்த்து நன்றி தெரிவித்து உங்களுக்கு எழுதின கடிதத்தின்ர copyயையும் ஒரு ஞாபகத்துக்கு இதோட அனுப்புறன்.

எனக்கு எத்தினையோ கல்லெறி விழுந்திருக்கு/விழுகுது.ஆனா,உங்களிட்டை காசை வேண்டினதால உங்கடை உறவுகளை நீங்கள் இழந்ததாயும்,குடும்பத்தைப் பார்க்காது தாயை அநாதையாக சாகவிட்டதாயும் நீங்கள் எனக்கெறியிற கல்லுப் புதிசு.வாழ்த்துக்கள்.

உங்களிட்டை உதவி பெற்றவை தங்கட நன்றியை உங்களுக்கு எந்தெந்த விதத்தில்-வழியில தெரிவிக்க வேணுமெண்டு நீங்கள் பஞ்சியைப் பாராமல் ஒரு Catalog தயாரிச்சு தருவியளாயிருந்தால்,என்னைப்போல நடுச்சந்தியில் உங்களிட்டை ஆசீர்வாதம் வாங்குகிற நிலமை தங்களுக்கும் வராமல் மற்றவை தங்களைப் பாதுகாக்கலாம்.

எந்தச் சவுண்டும் இல்லாம சைலன்ற்றா உதவி செய்யிற சில மனிசரும் எனக்கு இன்னும் நண்பர்களாயிருக்கினம் எண்டதுதான் என்னட்டை மிஞ்சியிருக்கிற நம்பிக்கையள்.

உங்கட பார்வையில்
பெறுமதியற்ற பிண்டம் /உதவி கேட்டு வந்த நாய்,

பார்த்திபன்
07.01.2013


அவரிடம் பணம் இருக்கிறது.

அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இப்போது,புலம் பெயர்ந்து வாழும் அனைவரிடம் வேலையிருக்கிறது. அதனால்,ஓரளவு பணமும் பெறமுடியம்.

அதற்காக அன்று செய்தவுதவிகளைச் " சொல்லிவிட்டோம் " என்பதற்காக மீள அனுப்பிவைப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை.

முதலில், உள்ளவும் உதவுபவர்களையெண்ணுதலும்,அவர்களையும் ஒருக்கால் பார்த்திருக்க முடியுமென்பதும் மனித நடாத்தையின் பண்புதாம்.அதை எதிர்ப்பார்க்கும் நானும் மனிதர்தாம்.


பார்த்திபன்," தொப்பி  நல் அளவாக இருப்பதால்"  அதைத் தனக்கே போட்டுவிட்டுக் குறிப்பெழுதிப் பணம் 100.€  யூரோவையும் திருப்பி அனுப்பியுள்ளாராம்.








அதை,யார் கேட்டான்.

உங்களிடம் இருக்கா-அனுப்பிட்டீர்களா?நல்லது!அப்பணத்தை இன்னொரு தேவையான மனிதர்[களுக்]கு மீள அனுப்பிப்பியபடி நான் உங்களையெல்லாம் கடந்து செல்வேன்.

இதுள்,நீங்கள் நாயுமில்லை-நானும் பேயுமில்லை!.

பார்த்திபனைப் போலவே, புலிகளும் இருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்!

மக்களைக் கொள்ளையடித்த-தட்டிப்பறித்த பணத்தை மீள அவர்களுக்கு வழங்கியும்,பல இலட்சம்தமிழர்களைக் கொன்று குவித்த  ஈனச் செயலுக்குப் பொதுமன்னிப்புக்கோரி,தமக்கான தண்டனையைப் பொதுமக்களாகிய தமிழரிடம் கோரினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

உலகம் இவ்வளவுதாமாம்!

இவர்கள்தாம்,மக்களுக்குள்-சமூகத்துக்குள் இயங்குபவர்கள்!தூ...

பிற்குறிப்பு:






பார்த்திபன், உங்களைக் குறித்து,சுவிஸ் இரவீந்திரனும்,ரஞ்சியும் என்னென்னவோ சொல்லியும் அதை நம்ப முடியாமல் இருப்பவனும் நான்தான்.அதுபோல், உங்கள் நண்பர் இரயாகரனுக்கும் இது நன்றாகவே தெரியும்.புகலிடச் சிந்தனை மையச் சந்திப்பில் உங்களைப் பற்றியும் ரொம்ப விசனத்தோடு விமர்சனத்தை முன்னாள் மனிதம் சஞ்சிகை ஆசிரியர் குழுவுள் ஒருவரான  இரவீந்தரன் வைத்தபோது அதை நம்ப முடியாதிருந்தவன் நான்.எல்லாம் ஆச்சரியம் பார்த்திபன்!

உம்மை,இப்போது ரொம்ப நன்றாகவே புரிந்திருக்கிறேன்.

நீர்,மற்றவர்களது உணர்வை உம்மிலிருந்து புரிகிறீரென்பது புரியக் கூடியதே!


நன்றி.


நான்,உயிருடன் இருக்கும் வரை உம்மை எங்கும் காணாதிருக்க வேண்டுமெனக் காலத்தை வேண்டுகிறேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்.

09.01.2013

Saturday, January 05, 2013

புலத்து இயக்க அராஜக வாதிகளது...

புலத்து "இயக்க" அராஜக வாதிகளது 
உளவியல் சார்ந்த அரசியலும், இலங்கைப் புரட்சியும்(?!)


திரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்தப் புரட்சி-போராட்டம்,புதிய-பழைய ஜனநாயக முன்னணி என்றெல்லாம் திடீர்க் கட்சிகள் கூட்டுகளெல்லாம் புலம்பெயர் தளத்தில் கட்டிப் பத்திரிகை வெளியீடு,புத்தகவெளியீடு செய்து புரட்டு விடுவதில்"தடைகளைத்தாண்டிப் பத்திரிகைகள்" இலங்கையிலிருந்து வருகிறதாம்! கடந்த கார்த்திகை 2012 இல் "மாவீரர்" தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து மாணவர்களைத் தமது அந்நிய எஜமானர்களது வலையில் வீழ்த்தி அப்பாவி மாணவர்களைக் கலகஞ் செய்யத் தூண்டிவித்தவர்கள், அந்தக் கலகத்தை மாணவர் எழுச்சி,மக்கள் எழுச்சியெனக் குரல்கொடுத்து இலங்கையிலொரு சதி அரசியலைக் கட்டவிழ்த்த இந்தக்கூட்டம் அம்பலப்பட்டுப் போனபின் இப்போது அந்தச் சதியின் பலாபலன்களை போலிக்கு மறுத்து ப் "பல்கலைக் கழகங்கள் இராணுவ மயமாகிறதென்று" ஓலமிடுகின்றன. இரணுவவாதத்தைத் தொடர்ந்திருத்தத் தமது எஜமானர்களது கட்டளைக்கிணங்கக் காற்றியமாற்றிய இவர்கள்,தம்மைத் தருணம் பார்த்துத் தொடர்ந்து அம்பலப்படாமற் பார்த்துக்கொள்ளவிப்போது புரட்சிகரப் பத்திரிகை-கட்சி,தடைகளை மீறி வெளிக்கொணர்வதாகச் சுத்திக்கொண்டு புரட்டுப் புரட்சி பேசுகிறது.


இது,ஏலவே எமக்குக் காடாத்திக் கருமாதி செய்த  தமிழீழப் போராட்டத்தின் வியூகத்திலிருந்து பெரும் அராஜகவாதிகளாகிய இயக்கவாத மாபியாக்களின் அதே ஏவற்படைச் செயலாகும். திடீரெனக் கட்சி கட்டி "மத்திய குழு" மண்ணாங்கட்டியெனத் தம்மைத்தாமே மேய்ப்பர்களாக்கும் கடந்தகால உளவியலது தெரிவைவிட்டு, வெளியில் வரமுடியாது மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கான இயக்கவாத மாயயைத் தொடர்ந்திருத்தி வைத்தபடி கருத்தியல் ரீதியாக மக்களை மொட்டையடிக்கும் இத்தகைய குறுங் குழுக்களது புரட்டுவாதமானது நமது மக்களுக்கெதிரான சக்திகளோடு கைகோர்த்திருக்கிறது. எங்கேயும்-எப்படியும் உருட்டிப் பிரட்டி, இட்டுக் கட்டித் திடீர்க் கட்சி கட்டிக்கொண்டு புரட்சியைப் பேசும் இந்த உதவாக்கரைகளை இனங்கண்டு நிராகரித்துவிடவேண்டும். இவர்களே இலங்கையின் சமூக மாற்றத்துக்குக் குறுக்கே அரசியலொன்றைச் செய்கின்றனர்.அது காலத்துக்கு முந்திய "புரட்சி" பேசி இலங்கைத் தேசத்தின்-பெரும்பகுதி மக்களின் விடுதலையை முளையிலேயே கிள்ளியெறிகின்றனர்.


நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், தமிழீழப் போராட்டஞ் செய்த இந்த இயக்கங்களால்-குழுக்களால், அவர்தம் துப்பாக்கி முனையால்  அச்சத்துக்குள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள்-கொலை செய்யப்பட்டார்கள். இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப்பட்ட இந்தத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அவல வாழ்கையை வைத்துப் பிழைக்க முனையும் அனைத்துக் கயவர்களையும் இனங்காண வேண்டும்.இரயாகரன் கும்பல்போன்ற பல நூறு கும்பல்கள் புலத்திலும்-நிலத்திலும் நிறைந்திருக்கிறார்கள்.இவர்களை ஆட்டிப்படைக்கும் அந்நிய-இலங்கை ஆளும் வர்க்கங்களின் நலன்கள் இவர்களை அராஜகவாதிகளாகவும்,இயக்கவாத மாயைக்குட்பட்ட ஆயுததாரிகளாகவும் தொடர்ந்திருத்தி  வைத்துக்கொண்டிருக்கிறது.







இவர்களால் அன்றுமின்றும் தமிழ்பேசும் மக்கள் அந்நியச் சக்திகளுக்கும்,சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்-படுகிறார்கள். இந்த வாய்ப்பைச் சரியாகக் கணித்தியங்கும் சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்த்தெடுத்து வரும்போது, இவர்களோ தமிழர்களை வெறும் உணர்ச்சி வழி சிந்திக்கும் கூட்டமாகிச் சீரழித்தார்கள்.இன்றும் அதிலிருந்து அணுவளவும் பிசகாத கூலிப்பட்டாள வேலையைச் செய்வதில் போட்டியிடுகின்றனர்.இதுள் கடந்த 25 ஆண்டுகால அநுபவத்தையிவர்கள் பெற்றிருக்கின்றனர்!


இன்றைய நிலையிலோ இத்தகைய புலத்து-நிலத்து மாபியாத்தனமான ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டு வருகிறது.


இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் பல இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும்  கொடுமை! இத்தகைய வாழ்வை நமது மக்களுக்குள் திணித்தவர்கள்,மக்களது சொத்தை-உயிரைப் போராட்டம்-புரட்சி-தமிழீழம் சொல்லிக் கொள்ளையிட்டவர்களேதாம் இன்றும் மக்கள் நலனெனக் கதைவிட்டுச் சுக வாழ்வுக்காகச் சொந்த மக்களையே நீண்ட துயருக்குள் தள்ளுகின்றனர்.இதை மிகக் கறாராகப் பயன்படுத்தும் இலங்கை-இந்திய ஆதிக்க வர்க்கமானது இவர்களால் தூண்டப்படும் அனைத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது.அதன் தேவைக்கேற்ப இத்தகைய குழுக்களைத் தொடர்ந்து நிதியூட்டி வளர்க்கின்றன அந்நியத் தேசங்கள்.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள், புரட்சியை முறியடிக்கும் தந்திரங்களென ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது. இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமது மக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப் படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த  முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள். இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புலத்து ஆயுதக் குழுக்கள்(இரயாகரன் குழுக்களையொத்த பல பிரிவுகள்) தமது சுய நலனுக்காக நம்மை ஏமாற்றப்"போராட்டம்"என்றும்,வெகுஜனப் பத்திரிகையென்றும் அந்நிய வியூகங்களைப் புரட்சியின் பெயரால் நமக்குள் கொண்டு வருகின்றன.இது,நிலத்து மக்களின் அடிமைத்தனத்தைத் தொடர்திருத்தும் சதியரசியலாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
05.01.2013

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...