Sunday, March 20, 2005

மானுட நேசிப்பும்,'நான்' சாகடித்தலும்-மனித உறவுகளும்.

மானுட நேசிப்பும்,'நான்' சாகடித்தலும்-மனித உறவுகளும்.

மீண்டுமொருமுறை இந்த முறைமையிலான பண்டுதொட்டுப் பேசப்படும்- மொழிவழி செயற்படும் அதிகாரத்துவ,ஆணவ ஆதிக்க உளவியல் குறித்வொரு குறிப்பு அவசிமாக இருக்கிறது.திரு. தமிழ்வாணன் அவர்களது மடலுக்கான விளக்கமாகவும்-எம்மீதான கேள்விக்குமான பதிலீடாவும்,எதிர்வினையாகவும் இந்தக் குறிப்பை வளர்த்துக்கொள்வது எமது தவிர்க்கமுடியாத வினையாக இருக்கிறது! காலாகாலமாக மரபுவழிப் புரிதற்பாட்டினது உளவியற் பரப்பிலிருந்து முற்று முழுதாகி விட்டு விடுதலையாகும் ஒரு மனிதருக்கும் -அதன் வழி இதுவரை செயற்பட்டுவரும் எழுத்து வடிவத்துக்கும் மதிப்பீடாக எந்த வொரு சாத்தியப்பரப்பையும் இதனுள் நிறுவாது-இது முற்றுமுழுதானவொரு உளப்பரிமாற்றமாகவும் நட்பினது ஆகக்கூடிய தோழமையை உறுதிப்படுத்துவதற்கான முனைவாகவும் இருந்தால் அதுவே எமது தோழமையினது வெற்றியாகும்.

திரு.தமிழ்வாணன் அவர்கள் கேட்கின்றார்:'மேலும் நீங்கள் உங்கள் பதிலில் நாங்கள் நாங்கள் என ஒரு பக்கமாக ஒரு அணியின் பிரதிநிதியாக பதில் அளித்துள்ளீர்கள். அது தவறுதலாக ஏற்பட்டது என நான் நினைக்கிறேன். அப்படியில்லாவிட்டால் அந்த அணி எது என நான் அறிந்து கொள்ளமுடியுமா?

'´நாம் செயற்படும் தளமானது நமது சொந்த வாழ்வினது வட்டமில்லை,மாறாக இதுவொரு சமுதாயத்தினது தளத்தின் உள்ளகத்தில் நின்றுகொண்டு அதன் இதுவரையான செயற்பாட்டின் மீது விமர்சன ரீதியாக முன்வைக்கப்படும் எழுத்துக்களோடு நாம் வருகிறோம்.இதற்கு வழிவழி வரும் தனிநபர் வாத உளப்பாங்கைக் கருவறுத்து உலகு தழுவிய நேசிப்பும்-எமக்கு முன் வாழ்ந்த எம் முன்னோர்கள் தந்த அறிவுப்பரப்பில் நின்று நிதானிக் முனையும் ஒருவர் நிச்சியாக தன்முனைப்பிழந்த 'நாம்' என்ற சுட்டலுக்குள் வந்து விடுதல் தவிர்க்கமுடியாத இயக்கப்பாடாகவேயிருக்கும்.ஒரு தனிநபர் தன்னால் முடிந்தது என்பது அறிவுவாத புரிதற்பாடற்ற தன்முனைப்பினது நோயாகவே இது வரை நோக்கப் படுகிறது.இது சகல மட்டங்களிலும் பரவாத நிகழ்வுப்போக்கால் நாம் இதன் தளத்தைத் தவிர்த்து விட்டுள்ளோம். எதற்கெடுத்தாலும்'நான் சொன்னேன்-நான் செய்தேன்,என்னால் முடிந்தது' என்பது தனிநபர் சார்ந்தவொரு செயற்பரப்புக்கு வேண்டுமானால் சரியாகலாம் ஆனால் அதுகூட இன்னொரு துணையின்றி நிகழ முடியாது! இது ஒரு குழு வாழ்வு.குழுவென்றவுடன் பல்பத்துப்பேர்களோடு திட்டமிட்டவொரு செயற்பாங்கென்று கற்பனைசெய்தால் அது தப்பு. நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்குமானால் அதன் சுட்டல் சரிவரும் பரப்பு ஒற்றை மானிட வாழ்வுக்குப் பொருந்தும்.அதுவே கூட்டு வாழ்வாய் மலர்ந்து சமுதாயமாக நாம் வாழும் இன்றைய வாழ்சூழலில் நமது என்பது செத்து நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்காது 'தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே 'தான்' எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது. இதன் வெளிப்பாடு குடும்ப மட்டத்தில் துணைவனின் இழப்பில் துணைவியும் தன் வாழ்வு முடிந்ததாக எண்ணுவதும்,அது சமுதாயமட்டமானால் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காதாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.

இந்த 'நான்' இழப்பினது அவசியமென்பது வெறும் கருத்துருவாக்க சொற் கோர்வையற்ற சமுக உளவியற்போக்குக்கும் அதன் வாயிலான கூட்டுமுயற்சிக்கும் அவசியமானதென்பதை நம் முன்னோர்கள் நன்றாகவே அறந்துள்ளார்கள்.இதற்கொரு உதாரணம் கூறுகிறோம்(கூறுகிறேன்):

பண்டைய தமிழகத்தில் மன்னனொருவன் ஒரு ஞானியைச் சந்திப்பதற்காக அந்த முனிவரின் குடிசை(பங்களாவல்ல) நோக்கிப் போகின்றான்.போனவன் அவர்தம் குடிசையின் கதவைத் தட்டுகிறான்.பதிலுக்கு ஞானி கேட்கிறார்'யார் அங்கே?',மன்னன் கூறுகிறான்' நான் வந்திருக்கிறேன் உங்களைப் பார்க்க'. ஞானியின் பதிலோ'நான் இறந்த பின் வருக!' மன்னனுக்கு எரிச்சில் அதிகமாகி 'நீர் இறந்த பின் எப்படி உம்மை த் தரிசிக்கிறது?' என்ற கடுகடுப்பு.ஞானியோ மௌனமாக.

இது எதைக் குறித்துரைக்கிறதென்பதை அந்த மன்னன் மட்டுமல்ல இன்றைய 'நான்' களும்தாம்!

சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி 'தலைவரே,தலைவரே' போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் 'சுப்பர் மேன்' கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.

'நானென்றும் தானென்றும்

நாடினேன்!நாடலும்

நானென்று தானென்று

இரண்டில்லை என்று

நானென்ற ஞான

முதல்வனே நல்கினான்

நானென்று நானும்

நினைப்பொழிந் தேனே' -என்கிறார் திருமூலர்

எனவேதாம் 'நான்' சாகடிக்கப்பட்டு 'நாம்','நாம்' பிறக்கிறது!

தமிழ்வாணன் அவர்கள் கேட்கும் இன்னோரு கேள்வி:

'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. அவ்வாறான வாழ்க்கையில் எங்கள் குழந்தைகள் சகோதரர்கள் எங்கள் முன் வீழும்; போது வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடுகிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு என்று போராட்டத்;தை ஆரம்பித்துவிட்டு இடையில் விட்டுவிட சொல்லுகிறீர்களா? '

வாழ்கையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கென்று போராட்டத்தை ஆரம்பித்து விட்டு,இடையில் விட்டுவிடச் சொல்கிறீர்களா? கேள்வியிலேயே பதிலுமுள்ளது! முதலில் இப்படிக் கேட்போம் யாருடைய வாழ்வு? பதில்:தமிழ் மக்களுடையது என்று சாதரணமாகக் கூறிவிடலாம்.ஆனால் தமிழ் மக்கள் என்ற பொத்தாம் பொதுவான மொன்னைப் பேச்சு அல்லது கருத்தாடல் முற்று முழுதான கட்டுடைப்பில் சோகம்கப்பிய விடையோடு குப்புற வீழ்ந்து விடுகிறது.தமிழைப்பேசுவதால் மட்டும் தமிழர்கள் ஒன்றுபட்டவர்களாக முடியாது.தமிழர்கள் தமிழரை நேசித்த முறைமையிங்கு முன்னுக்கு வருகிறது. கடந்த வரலாறும் நாம் காணும் இன்றைய வரலாறும் கூறுவது என்னவெனில்: மனிதர்கள் முதலாளித்தவச் சந்தைப் பொருளாதாரத்தில் வர்க்கங்களாகப் பிளவு பட்டுக்கிடக்கிறார்கள்,இந்த வர்க்கத்தோற்றமானது ஏற்ற தாழ்வான பொருட் குவிப்பாலும், உற்பத்திச்சக்திகளின் தனியுடமையாலும் நிகழ்கிறது.இந்த நிகழ்வுப்போக்கானது மக்களை வெறும் கூலியுழைப்பு நல்கும் கருவியாக்கிவிடுகிறது.முதலாளிய அமைப்பில் உழைப்பாளர்களும் ஒருவகைப் பண்டமாகவே கருதப்படுகிறுது.இந்த நிலையில் ஈழப்பிரதேசமெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் ஒழுங்கமைந்தவொரு பொருளாதாரச் சம வாழ்வைக் கொண்ட வர்க்க பேதமற்ற சமுதாயமாக இருக்கின்றார்களாவென்றால் இல்லையென்பதே பதில்.அப்போ இங்கு உழைப்பவருக்கும்,உடமையாளருக்குமான முரண்பாடுகளுண்டு.அவை குறித்தான தீர்வுக்கு தேசியப் போராட்டத்தில் என்ன திட்டவாக்கம் உண்டு?உழைப்பவர்கள் சிங்கள முதலாளிய அரசால் ஒடுக்கப்பட்ட மாதிரி ஏன் தமிழ் முதலாளியத்தால் ஒடுக்கப் பட மாட்டார்களா? எமக்குள் நிலவும் சாதியவொடுக்குமுறையை ஊட்டி வளர்த்த அடிப்படை சமூகக் காரணி என்னவாக இருக்க முடியும்? இதன் தோற்றவாய் குறித்த தேடுதலல்ல எமது நோக்கம்.காரணமேயின்றி மானுடர்களை அழித்து ஏப்பமிடும் இன்றையபோர்களெதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரண காரியத் தன்மையுண்டு. இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வரலாற்றுத் துரோம் நிகழ்கிறது.இது அன்நிய சக்திகளின் அளவுக்கதிகமான வற்புறுத்தலகளினால் இலங்கை வாழ் உழைப்பவரின் உரிமைகள் முடமாக்கப் படுகிறது.அவர்தம் வாழ்வாதார ஜனநாகயத் தன்மை இல்லாதொழிக்கப்பட்ட சூழலைத் தோற்று விக்க இந்த யுத்தம் கருவியாகப் பட்டள்ளது.

இது மக்களின் வாழ்விடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக்கி- அவர்தம் வரலாற்று வாழ்விடங்களை இல்லாதாக்கி அவர்களை அடிமை கொள்கிறது.இதுவரை கால,ஈழம் குறித்த அரசியற் கருத்தாக்கம் எந்த உறுதிப்பாடை வழங்க முடியும்-ஈழம் சாத்தியமென? உலகத்துள் நாம் நாடு என்று அமைப்பில் வாழ்ந்த வரை இது சாத்தியமாக இருக்கலாம்.இப்போது நாம் நாடுகள் என்ற அமைப்புக்குள் வாழ்கிறோம். இங்கு ஆளும் சிங்கள அரசுக்கும் தமிழர்தரப்புக்மான பிரச்சனையாக இந்தப் போராட்டமில்லை.இதன் பின்னணி உலக அரசுகளுடனான உறுவுகளில்-அவர்தம் பொருளாதார உறுவுகளில்-உரிமைகளில் தங்கியுள்ளது. எனவே சாத்தியமற்றதை சாத்தியமெனச் சொல்லி மக்கள் சாவதை நாம் வெறுக்கிறோம்-எதிர்க்கிறோம்!

தலைமைத்தவம் குறித்தான கேள்விக்கு நாம் மேலே குறித்த' நான்' விளக்கமே பதிலாகிறது!

மானுட நேசிப்பென்பது வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று.இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது,இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது. அதுவே மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.இங்கு அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது. இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச்; செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது. என்றபோதும் நாம் உணர்கின்ற மானுட நேசமானது மாற்றாரை நம்முள் காணும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும்.நமது சித்தர்களும்,ஞானிகளும் பாடி வைத்ததும் இவற்றையே!

'மண்ணொன்று தான்பல

நற்கலம் ஆயிடும்

உண்ணின்ற யோனிகள்

எல்லாம் இறைவனே

கண்ணொன்று தான்பல

காணும் தனைக்காணா

அண்ணலும் அவ்வண்ணம்

ஆகிநின் றானே!'-திருமூலர் திருவாக்கு

எனவே நாம் நிற்கும் தளமானது ஒருமைத் தோற்றுவாயின் பன்மையான பயன்களே.இதன் தாத்பரியம் 'மாற்றானை நேசி மனமே' என்பதுதாம்.இதுவன்றி வேறு மார்க்கம் மானுடர்கட்கு மகத்துவம் அளிப்பதில்லை.கருத்துகட்கு மேலான மனிதநேசிப்பு மதங்களின் பால் மையங்கொண்ட மாயை அல்ல.இது மகத்துவமான அறிவின் வெளிப்பாடு.ஆதலால் மனித மாண்புக்கு நிகராக எந்தக் கருதுகோளும்- தத்துவங்களும் எம்மை ஆட்கொள்ள முடியாது.அப்படி ஆட்கொள்ளத்தக்க தத்துவங்களும்-தேச விடுதலைப் பரிமாணங்களும் நம்மிடமிருந்தால் காட்டுங்கள், அந்தக் கோட்டைக்குள்ளும் நுழைந்து மானுட மாண்பைப் பார்ப்போம்.

வூப்பெற்றால்

ஜேர்மனி

20.03.2005 -ப.வி.ஸ்ரீரங்கன்

Friday, March 18, 2005

நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும்

தமிழ்ச்சிறுமியும்

நியூஸ்லாந்தும்,நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும்

தமிழ்ச்சமுதாயமும்.

'நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.'

Hier

fremd geblieben

dort

fremd geworden

Vielleicht

sollten wir

ein land suchen

einen Staat gruenden

fuer alle

die irgenwo

irgenwie

Fremde sind.

-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984

இங்கே அந்நியராய் இருந்தோம்அங்கே அந்நியராக்கப்பட்டோம் எனினும்,நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி ஒரு நாட்டை உருவாக்குவோம் எங்கெங்கு எப்படியெப்படியோ அந்நியர்களாகிய அனைவருக்குமாக.)

உலகமெல்லாம் இடர் படும் மானிடர்களுக்காக

-அகதிகளாகி அலையும் எமக்காக ஜேர்மனியக் கவி தன்னால் முடிந்ததைச் சொல்கிறான்.

இன்றைய இந்த இரு

(

ள்சூழ்ந்த நிலையை நாம் உணர்வுபூர்வமாகக் கருதிக்கொள்ள முனையும்போது நமக்கு முன் வாழ்ந்தவர்களை எண்ணிப் பார்க்கும்படி நேர்கிறது, லியோ ரொக்ஸ்சி Leo Trotzki):" Someone who wishes a quiet life would have done better not to be born in the twentieth Century"

என்று கூறியது ஞாபகத்திற்கு வருகிறது

.

சரிதாம்

! ஆனால் நாம் பிறந்துவிட்டோம். இது எமது தப்பா? இல்லை, இல்லவே இல்லை! கலவியை மறுத்த சமூகம் காதல் வயப்பட்டு ஆவதொன்றுமில்லை,எனவேதாம் ஜேர்மனியக் கவிஞர் புதியவுலகு குறித்துப் பேசுகிறார்.இதை ஒரு கலகக் காரனுக்குரிய ஆத்ம பலத்தோடு பேசுகிறார், எமது வாழ்வு உண்மையானது,எப்படி நாம் உண்மையோ அவ்வண்ணமே. எனவே

,

நாம் வாழ்வுதேடி அலைதலும்

,உயிர்த்திருத்தலுக்காக ஓயாது விருப்புறுதி கொள்வதும் இயற்கையானது.இந்த இயற்கையுரிமையைப் பறிக்க எந்தக் கொம்பர்களுக்கும் உரிமையில்லை

.

சுமார் அறுநுறாண்டுகளுக்கு முன் உலகெங்கும் நாடோடிகளாகச் சென்று குடிபெயர்ந்து

-கொலை செய்து... குந்த வந்த இடங்களெல்லாமின்று அவர்தம் வரலாற்றுப் பூமியாக, பின்னால் வந்த நாமோ அவர்களால் நாடுகடத்தும் நிலையில் வாழ்விழந்து போதல் நீண்ட வலியுணர்வை நெஞ்சில் விதைக்கின்றது

!

வேலைக்குப் போனகணவன் வீடுமீளும் போது மனையாளும் மைந்தர்களும் மாயமாய் மறைந்து போகிறார்கள்

,இறுதியில் செய்தி :'நாடு கடத்தப் பட்டுவிட்டார்கள்.'

எப்படியிருக்கும்

இந்தக் கணம்

? இது, இங்கே ஜேர்மனியில் சர்வசாதரணமாக நடைபெறும் நாடுகடத்தல் நிலைவரம். என்றபோதும் இந்தப் பதினைந்து வயதுப் பாலகியினது( நாடுகடத்தல் தர வன்புணர்வு மூலம்... ) இன்றைய இருள்சூழ் நிலை சற்றுக் கடினமான ஒரு கனத்த உணர்வை நமக்குள் கொட்டுகிறது.நியூஸ்லாந்தரசின்எமது சமுதாயத்தின் இந்த நீசச் செயலை நாம் விளங்கிக் கொள்தலும்,அதனுடே உலக அகதிகளுக்கான தார்மீக உரிமைகளை வென்றெடுப்பதும்,எமது விடுதலையின் ஒரு பகுதிதாம்

.

அரசியல் தஞ்சமும்

,கோரிக்கையும்

:

நாம் நாடுவிட்டு நாடுகளுக்கும்

,கண்டம்விட்டு கண்டங்களுக்கும் புலம் பெயர்கிறோம். இருபதாம் நுற்றாண்டின் இறுதியிலும் இருபத்தியோராம் நுற்றாண்டின் இன்றைய பகுதியிலும் அதிகம் பேசப்படும் வார்த்தை இந்த 'அரசியல் தஞ்சம்'எனும் வார்த்தைதாம்!இன்றைய நிலவரப்படி சொந்தநாட்டிலும்,வெளிநாடுகளிலுமாக மக்கள் அகதியாகி அல்லற்படும் நிலை அதிகரித்தபடியேதாம் இருக்கிறது,

இந்த அகதிய வாழ்வை வாழ நிர்பந்திக்கப்பட்ட நம் தொகை

கிட்டத்தட்ட

300 கோடியாகும். இது உலக சனத்தொகையில் 50 வீதமாகும்,(என்ன முழிக்கிறீர்கள்? தொகை பிழையானதென்றுதானே கூற வருகிறீர்கள்?) எனினும் இஃது உண்மையே! உள்நாட்டில் உதிரிகளாகவும்,வெளிநாடுகளில் அடிமைகளாகவும் நாம் வாழ்கிறோம். இந்தத்தொகை 300 கோடிக்கு மேல் வரும்.இந்தியத்துணைக் கண்டத்திலிருந்து அவுஸ்திரேலியா,பின்பு அமெரிக்காவிலிருந்து ஆபிரிக்கா ஊடாக மத்திய கிழக்கு ,மற்றும் ஐரோப்பாவரையும் நமதுறவுகள் காடுகளில் -வீதிகளில் அலைந்தபடி உயிர் வாழ முனைவது இன்றைய உலக நடப்பில் பெரிதாக ஒன்றுமில்லைத்தாம்.என்றபோதும் இந்த அகதிய வாழ்வின் சூத்திரமென்ன அதன் உற்பத்திக்கு ஏதுவாக எந்த இயக்கு சக்தி உந்துதலளிக்கிறது-அரசியல் தஞ்சம் கோர யார் தகுதி(!?) உடையவர் ? என்பதை நாம் சற்று அவதானிப்போம்

.

'"

pfui,Fremder-! Du bist das elendeste Wesen unter der sonne Europas. Fremder-! Die alten Griechen nannten die Fremden Barbaren-aber sie uebten Gastfreundschft an ihnen. Du aber wirst von ort zu ort gejagt, du Fremder unserer zeit,du bekommst hier keine Einreiseerlaubnis und dort keine Wohnunggenehmigung,und dort darfst du keinen Speck essen , und da von da keinen mitnehmen -Fremder! "-Peter Panter (1920)

)

'

கூய்,அந்நியரே! ஐரோப்பாவினது சூரியனுக்குக் கீழே நீயோ வறுமையான உயிராத்மா. அந்நியன்-!பழைய கிரேக்கமோ நாகரீகமற்ற அந்நியனென அழைத்தது-எனினும் விருந்தாளிபோன்றே உன்னை நடாத்த முயன்றார்களாம்.ஊரூராய் நீயே வேட்டையாடப்பட்டாய், எமது காலத்தினது அந்நியன் நீ, இங்கோ உனக்கு நாடுவிட்டு நாடுகள் பயணிக்க அனுமதியில்லை,அங்கோ வதிவதற்கு அனுமதியில்லை,அத்தோடு நல்ல உணவருந்தவும் முடியாது,கூடவே எதையுமே எடுத்துக்கொள்ளவும் முடியாத -அந்நியன்

!'

Tucholsky,Kurt

இன் மனித இரங்கலின் அதியுன்னத வெளிப்பாடிது

,வெள்ளைத் தேசமெங்கும் நாடோடிகளாக அலைந்து வரும் ஜிப்சிகளின் நிலை கண்ட சொல்ஸ்க்சி கூர்ட் இப்படியிரங்கி நொந்து கொண்டார்

.

ஒரு வகையில் இது நம்மெல்லோருக்கும் பொருந்திவிடுகிறது

! அன்றைய ஐரோப்பிய மனோபாவத்தை கிழக்கு ஜேர்மனியின் மனிதநேயப் படைப்பாளி சொல்ஸ்க்கி கூர்ட் மிக மிக அழகாகப் படம் பிடித்துள்ளார்கள்.இந்த மனோபாவம் 16,17ஆம் நுற்றாண்டுகளின் தொடர்ச்சியாய் விருத்தியாகி 20ஆம் நுற்றாண்டுகளில் இரண்டு உலகயுத்தங்களில் சுமார் 80மில்லியன்கள் அப்பாவிமக்களை வேட்டையாடியது.இந்த ஈனத்தனத்திற்குப் பின் ஐரோப்பிய மனிதவுரிமை ஆணையகம் மற்றும் ஜெனிவா அகதிகள் ஆணையகமும் சில வரைவுகளை -ஒப்பந்தங்களை செய்துள்ளார்கள்,இந்த வரைவுகள் 'சட்டத்தின் முன் சகலரும் சமனம்'என்றபடி எதையுரைத்ததோ அஃது இவ்வைரோப்பியரசுகளால் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சிதாம் நியூஸ்லாந்தினது இன்றைய அகதிகள் மீதான சட்ட நடவடிக்கை

.

அரசியல் தஞ்ச உரிமை சட்மாக்கப்பட்ட வரலாறானது

1946 இல் ஆரம்பமாகிறது,.நா.

சபையின்

பொதுக்கூட்டம் சர்

;வதேச அகதிகள் கழகத்தை மேற்கூறிய ஆண்டில் ஆரம்பித்தது. இக்கழகமானது முதலில் நான்கு வருடங்களும் அதன்பின் மீள இரண்டாண்டுகளும் தொடர்ந்தியங்கியது,

ஆரம்பத்தின் நோக்கம் உலகயுத்தத்திற்குப் பின்பான சமூகப்பிரச்சனையை

ஓரளவு தீர்க்கக்கூடியமாதிரி இது இலக்கு வைத்து மீள் குடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றங்களை யும் அதுசார்ந்த தேவைகளுக்காக இயங்கிக் கொண்டது

.எனினும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் யுத்தத்தை இரண்டாவது உலக யுத்தத்தோடு நிறுத்தி விடவில்லை,மாறாகத் தனது குருதிதோய்ந்த வலுக்கரத்தை உலகம் பூராகவும் விரிகத் தொடங்கியது.

இதன் போக்கால் இந்த அகதிகள் பிரச்சனை ஒரு தொடர் இயக்கமாக

இயங்கிக்கொள்ள ஐ.நா.சபை அகதிகளுக்கான உயர் ஸ்தானிக சபையை உருவாக்கிச் சட்ட வரைவைச் செய்தது,

பொதுவான மனிதவுரிமை விளக்கப்படி

10.12.1948

ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட சட்டம்:Art.14 Abs 1"Jeder Mensch hat das Recht, in anderen Laendern verfolgungen Asyl zu suchen und zu genießen."

.'(வேறொரு நாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கும்,அதை அனுபவிப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.) இந்த அழகான வார்த்தை ஜாலம் அதை குடிசார் சட்டவாக்கத்திற்குள் அடக்காது நாடுகளினது கடமையாக -அவர்களே அதை நிறைவேற்றும்படி அரசியல் யாப்புச் சட்டத்தில் அடக்கியதன் விளைவு இப்போது ஒவ்வொரு நாடுகளும் தாம் நினைத்தபடி தார்ப்பார் காட்டிக்கொள்கிறது.

இந்தத் தவறைச் சரிக்கட்ட

1951ஆம் ஆண்டு யூலாய் 28 பிரேரிக்கப்பட்டு 22.04.1954 இல் அமூலுக்கு வந்த 'அகதிகளுக்கான சட்ட அமூலாக்க ஒப்பந்தம்' ஜெனீவா ஒப்பந்தமாக அறியப்படுகிறது.இதுவே அரசியல் தஞ்சம் கோருபவரின் காரணத்தைக் குறித்து இந்திந்தக்காரணம் மட்டுமே அரசியல் தஞ்சம் கோர உரித்துடையதென வகுத்து வைத்துள்ளது

.

இதன்பிரகாரம் ஒரு தனிநபர் தனது மத

,இன,பிரைஜாவுரிமை இவைகளின் பொருட்டு அல்லது தனது அரசியல்,சமூகக் காரணிகளால் பாதிக்கும்போது வேறு நாட்டிற்குள் சென்று புகலிடம் கோர உரித்துடையவராகிறார்

,

நம் தோல்வி

:

'

அகதியென்று சொல், அதிலிருந்துதாம் விடுதலை பெறவேண்டும்'. இன்றைக்கு நம்மில் பலர் அகதியென்ற சொல்லையே கேட்கப்பொறுக்காதவர்களாய், தாமும் அகதிகளென்பதையே மறந்து வாழும் நிலையில் நாம் இந்தப் பிரச்சனை குறித்து விக்கிரமாதித்தன் பாணியில் எழுதிக்கொள்கிறோம்.இதுவொரு வகையில் எமது சமூகத்திற்கு அவசியமான தேவை! கணக்கு வைத்துச் சொல்லமுடியாதளவுக்கு நமது சனங்கள் நாடுகடத்தப்படுகிறார்கள்,பலர் ஏமாற்றுக்காரரிடம் சிக்குண்டு பணத்தைக்கொட்டியும் அரசியல் தஞ்சக்கோரிக்கையை ஏற்கப்பண்ண முடியாது துரத்தப்பட்ட நிகழ்வு நாளாந்தம் இடம்பெற்றபடியேதாமிருக்கிறது

.

இவைகள் எதைக்குறித்துரைக்கிறது

?

நம்மிடம் போதிய ளவு அறியாமை நிலவுவதென்பதைத் தவிர வேறெதையுமில்லை

.

நியூஸ்லாந்து அரசால் பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலையோ மிகவும் பரிதாபகரமானது

, அவள் பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்ட நிகழ்வுடன் தனது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை இணைத்திருக்கிறாள், சிறுமி,இவ்வளவு காரணங்களும் கூட அவளைக்காக்கவில்லை. இங்கு மனிதாபிமான அடிப்படை மட்டுமே தாம் அவளைக்காத்திருக்க முடியும், சட்மும்,நீதித்துறையும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டே சிந்திக்கப்பயிற்றப்பட்டது. இவ்விடத்தில் நமது அறிவு வேலை செய்திருந்தால் நிச்சியம் அவளைக்காத்திருக்க முடியும் ,அதை நாம் தவற விட்டுவிட்டோம்

.

பொதுப்படையான காரணங்களைத்தாண்டி தனிப்பட்ட காரணத்தை நமது அகதிய விண்ணப்பம் கோரிநிற்க நாமோ காரணத்தைத் காட்ட முடியாது தவிக்கின்றோம்

. எமது வாழ்சூழல் பாதிக்கப்பட்ட வாழ்சூழல்,தமிழ் பேசும் ஒரே காரணத்தால் நாம் இன்று நாட்டை,வீட்டை விட்டு வெளியேறியுள்ளோம்.இது' ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளை போல் ஊரின்றித் தவிக்கும் நம்மை யாரறிவார்'என நொந்துகொள்ள வைக்கிறது.மனிதாபிமானமற்ற நீதித்துறைகளும்,ஆட்சியாளர்களும் தத்தமது நாடுகளினது கதவுகளை இறுக மூடிக்கொண்டு எமது நாடுகளினது கதவுகளை நன்றாகத்திறந்து - தமது நாடுகளின் நலத்தின் பொருட்டு- எம் மண்ணில் யுத்தப் பிசோதனை செய்யும்போது நாம் இடம்பெயராது சாகவாமுடியும்

?

புலம் பெயரும் சூழலும்

,அகதிகளாய் நாம் மாறும் பரிதாபமும்

:

மனிதர்கள் எதைவேண்டுமானாலும் இழக்கலாம்

,சொத்து,சுகம், ஏன் அன்னையைக்கூட இழக்கலாம்,ஆனால் தான் பிறந்து ,தவழ்ந்து,மண்விளையாடி,வளர்ந்த மண்ணை இழக்கவே கூடாது! இந்த இழப்பு இழந்த பின்பேதாம் இதயத்தைத் துளைக்கும்,அதுவரையும் அதன் சிறுமைகள்தாம் புலப்படும்.ஒருவகையில் இந்தச் சிறுமைகளேதாம் எம்மை வளர்த்திருக்கிறது

!

இந்தச்சிறுமைகள் எம்மை கேவலப்படுத்தலாம்

,அவை நம் முன்னோர்களின் தொடர்ச்சி.அவற்றை நாம்தாம் களைந்தெறியவேண்டும், எனினும் தேசம் தொலைத்த இந்த மனோபாவம் படும் வேதனை எத்தனை நம் அரசியல் வாதிகளுக்குத் தெரியும்? அப்படித் தெரிந்திருந்தால் நம்நாடுகள் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்யத்திற்கு கூஜாத்துக்கும் நிலைக்குப்போயிருக்க முடியாது,இதனாற்றான் நாம் மீளவும்,மீளவும் ஓலமிடுகிறோம்,

எமது

படைப்புகள் அந்த வலி குறித்தே திரும்பத்திரும்பப் பேசுகின்றன

.நாம் எழுதித்தாம் இது தெரிய வேண்டியதில்லை,நம் பாட்டன் பாப்பாக்களுக்குப் பாடி வைத்ததே போதும்

.

'

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே

-

அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே

...

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து

,

அருள்

ஈந்ததும் இந்நாடே

-

எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந் நாடே

-

அவர்

கன்னிய ராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந் நாடே

-

தங்கள்

பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி

,

இல்

போந்ததும் இந் நாடே

...' என்று மனதாற வாழ்த்திப்பாடுகிறானே! இதுதாம் வலி

.

இந்த வலியை யார் விதைக்கிறார்கள்

?,எம் மண்ணை விட்டு நாம்நெடுந்துரம் போய் அகதியாக எது உந்தித்தள்ளியது

?

யுத்தம்

,மண்அபகரிப்பு,துரோகியெனும் கழுத்தறுப்பு,பயங்கரவாதியென்று கொல்லும் அரசு-அமைப்புகள், இத்யாதி இத்யாதி.

இன்றைய முதலாளிதுவ அரசுகள் யாவும் பேருக்கு ஜனநாயகம்

பேசியபடி போர்களை நடத்துகிறார்கள்

, போர்கள் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாகச் சந்தைப் பொருளாதாரத்துள் நிலவுகிறது.முதலாளியத்தின் கொடுமையான சுரண்டலினாலேற்படும்வறுமை

,

வேலையில்லாப்பிரச்சனை மற்றும் சமூகச் சமமின்மை ஆளும் அரசிற்கு நெக்கடியை வழங்கும்போது அவற்றைத் தணிப்தற்காக மூன்றாமுலக நாடுகள் போரை ஒரு ஆயுதமாப் பயன் படுத்துகின்றன

, அல்லது இன வாத,மதவாத கருத்தியலை அழுத்தமாகப் பரப்புகின்றன. இதனால் சகோதரங்களாக இருந்த இனங்கள் முட்டி மோதி இரத்த ஆற்றில் மூழ்கி வாழ்வைத் தொலைக்கின்றன.இங்கே சொந்த மண்ணிலேயே வாழ்வு அகதி வாழ்வாய் மாற்றப் படுகிறது

!

வளர்ச்சியடைந்த நாடுகள் தமது வருவாய்க்கு தடங்கல் ஏற்படும்போதும் தமது தொழிற்சாலைக்களுக்கு மூலவளம் தொடர்ந்து கிடைப்பதற்காகவும் மற்ற நாடுகள் மீது தொடர்ந்து படையெடுப்பைச் செய்து யுத்தம் நடாத்தி பல இலட்சம் மக்களைக் கொன்று பல கோடி மக்களை அகதி வாழ்வுக்குள் தள்ளுகிறார்கள்

. சமீபகால அவ்கானிஸ்தான், ஈராக்கு இதற்கு நல்ல உதாரணங்கள்

.

இதனால் நாம் வாழ்வைத் தொலைக்கிறோம்

.அகதியாய் நாடுவிட்டு நாடு புகுகிறோம், புகல் நாடுகளோ நம்மை வேண்டா விருந்தாளியாகப் பார்க்கிறது , நாடுகடத்தி தன் கதவை இறுக மூடுகிறது.தமிழ்பேசும் மக்களாகிய நாம் கால் நுற்றாண்டாக அகதிவாழ்வை மேற்குலகில் வாழ நிர்பந்திகப்பட்டுள்ளோம்,இந்த மோசமான -சோகமான சூழலில் உயிர் வாழ்வதற்கே உழைத்து ஓடாய்ப்போகின்ற நிலை வேறு.இந்நிலையில் ஒத்து ஒருமித்த செயற்பாட்டை எதற்குமே நாம் வழங்குவதில்லை,இதனால் சமூகக்கூட்டான வாழ்வு இல்லாது போய்விட்டது,இதன் உள்ளார்ந்த அர்த்தம்யாதெனில் ,சமூகக் கூட்டுணர்வுக்கு சமூக வாழ்வில்லாது போய்விட்டதென்பதாகும்

.

இன்றைய எமது வாழ்வானது உதிரிவாழ்சூழலை எமக்குத் தந்துள்ளது

.இந்தச்சூழலில் நாம் ஒற்றை மானிடர்களாக ,நாடோடி நிலைக்குத் தள்ளப்பட்டு சமூக சீவியம் உடைந்து சிதறிவிட்டது

.

இதன்போக்கால் சமூதாய விருத்திக்கிட்டுச் செல்லும் ஆன்மீகப்பலமின்றி வெறும் கோவில் கட்டிக் கும்பிடும் அகவயத் தன்மைக்குள் நமது படைப்பாற்றல் முடங்கிவிடுகிறது

.இதுவே நம்மை அடக்க முனையும் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது

.

பாலியல் வன்புணர்வுகளும் நமது சமூதாயமும்

:

"

Die Sexualkraft ist die Grundkraft des Leben.Der Sexualtrieb ist der Grundtrieb fuer alle Regungen,Wuensche,Begehrlichkeiten und Gefuehle der Seele.Fast alle nervoesen Stoerungen und seelischen Konflikte haben ihre Ursache im sexuellen Erleben.Selbst die Leistungen schoepferscher Menschen sind der Sexualkraft entsprungen,sind Leistungen sublimierter Sexualitaet dieser Menschen."-(psychoanalytischen Theorie von Siegmund Freud.)

பாலியற்பலமானது வாழ்க்கையின் அடிப்படைப் பலமாகும்

.பாலியல் உந்துதலே அனைத்து அடிப்படையான உந்துதலுக்கும் துண்டுதலுக்கும்,விருப்பிற்கும்,இன்பத்திற்கும்,உள்ளத்தினது உணர்வுக்கு;ம் காரணம்.சகல மனப்பிறழ்வுகளுக்கும்,

சிதைவுகளுக்கும்உளமுரண்பாடுகளுக்கும்

பாலின்ப வாழ்வே அடிப்படையான காரணியாகும்

.

பாலியல் இரீதியான உந்துதலே மாபெரும் படைப்பாற்றலுள்ள மனிதர்களை உருவாக்கி அவர்தம் காரியங்களைத் துய்மைப் படுத்தியதும்.

இவ்வளவு முக்கியமான இந்த உணர்வு நமது சமுதாயத்தில் மிக மிக கேவலமான முறைமைகளில் புரிந்துகொள்ளப்படுகிறது!மனிதர்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆற்றலோ, தகமையோ இன்றைய முதலாளிய சமூகத்திற்குக் கிடையாது, இது பாலியலை பண்டமாக்கி,பெண்ணுடலை பண்ட பரிவர்தனையாகச் செய்து வருகிறது.இது இயற்கையான உணர்வை கேடுகெட்ட ஊடகங்களுடாய் கொதிநிலைக்கு கொண்டுசென்று தனது காரியத்தை நிறைவேற்றுகிறது,இந்த ஈனத்தனமான பாலியற்து;பிரயோகம் தற்போது கட்டுப்பாடற்ற விளம்பரப்படுத்தல்கள் மூலம் பெண்ணை வெறும் போகப் பொருளாய்ச் சித்தரிக்க அதுவே தற்போதய குறியீடாய் பெண்மீது சுமத்தப்படுகிறது,இந்த வக்கிரமான வியாபாரம் தெருத்தெருவாய் பைத்தியக்காரர்களை உருவாக்கி விடுவதில் பாரிய பங்கு வகிக்கிறது.

இந்தப்பைத்தியங்களின் அகத்தில் வடிவமைக்கப்பட்ட பாலியற் கனவுகள் இன்றைய தமிழ்ச்சினிமா வடிவமைக்கும் பெண்ணாக த் தமிழ்ச்சமூகத்தில் வெளிப்படுகிறது.

இந்த காமப் பரிணாம வளர்ச்சியானது இன்னும் மேலே சென்று பாலியற் சுதந்திரமென்றும் பேசப்படுகிறது, தமிழ்ப் படைப்புச் சூழலில் மஞ்சள் பத்திரிகைகளில் வந்த 'கத்தரிக்காய் காயத்திரியை' சாருநிவேதிதா தனதாக்கி படைப்புகள்(!?) தருகிறார்,அதுவும் 'உன்த சங்கீதம்'என்ற பிரமணியத்தனமான விழித்தலுடன் சனதரும போதினியில் இடம்பெற நாம் மௌனிக்கிறோம்.

இன்றைக்குப் பாலியலைத் துண்டிப் பணம் பண்ணும் சமூகம் அதற்கேற்றவாறு வடிகால் அமைக்காததால் பாலியலில் இரட்டைத்தன்மை கடப்பிடிக்கப்படுகிறது, இஃது பார்க்கின்ற பெண்களையெல்லாம் அழைக்கின்ற பெண்ணாய்ப் பார்க்கத்துண்டுகிறது.இது ஒரு தலைமுறையையே பாழாக்கிவிட்டது.ஐரோப்பாவெங்கும் வாழும் தமிழ் இளைஞர்களில் பலர்

(குறிப்பாக கனடாவில் வதிபவர்கள்)தாம் ஆடிமுடித்ததும் கனடாவில் வதியும்தமிழ் பெண்ணை

நிராகரித்து இலங்கையை நோக்கிப் போவது வரை கொண்டுவந்து விட்டுள்ளது.

இத்தகைய சூழலில் சிறார்கள் பாலியற் பலாத்தகாரத்திற்குப் பலியாவது நாளாந்தம் நிகழும் காரியமாகி விட்டது,

எய்தவர்கள் பட்டொளி வீசும் வெளித்தோற்றத்துடன் கோவில் முகப்புகளிலும்,பெரியமனசு படைத்த கொடை வள்ளல்களாகவும் பவனி வருதல் நம் மத்தியில் சகஜம்.

தனிமனிதர்களினது பிரச்சனையாக இருந்த இந்தப் பிரச்சனை இப்போது சமூகத்தையே பாதிக்கும் பாரிய பிரச்சனையாக ஊதிப் பெருத்துவிட்டது. இன்றைய சினிமா மற்றும் வர்த்தக விளபரம்கள் வடிவமைக்கும் பெண் தோற்றங்கள் திட்டமிட்ட கயமைத்தனத்தை தன்னகத்தே கொண்டியங்குகிறது,இது முற்று முழுதாக இளைஞர்களைத் தமது நுகர்வுக்கு ஏற்ற அடிமைகளாக்கி கோடிகோடியாய்ச் சம்பாதிக்கும் தமிழ்ச் சினிமாவாக -அஜீத்தும்,விஜேயும்,5கோடி சம்பாதிப்பதில் வெற்றி பெற அப்பாவிச் சிறார்கள் பாலியல் வல்லுறவுக்குட்பட நாம் கையாலாகாதவர்களாய் சங்கடப்படுகிறோம்.நமது சமூகத்தில் நிலவும் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி பயங்கரமான பாலியற் கற்பனைகளை உருவகப்படுத்துகிறது. இது

மனித வாழ்வின் சகல படைப்பாற்றலையும் கருக்கி வக்கரமான சமூக உளவியலைத் தோற்றவிக்கிறது!இதன் வெளிப் பாடுகள் 'கொண்டை போட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி கொலை கொள்ளும்' காரியமாக, எத்தனை கோணேஸ்வரிகள்,சின்னஞ்சிறார்கள்

இன்னும் பலி கொள்ளப் படுவார்களோ அத்தனையும் நம் சமுதாயத்தின் முடிவை மிக விரைவாக்கிவிடும்.

அகதிக் குழந்தைகள்:

குறைந்தது ஒரு நாளைக்காகவாவது

இந்தப் பூமிப் பந்தை நாங்கள்

உங்களுக்குத் தந்து பரிசளிக்க வேண்டும்,

பற்பல வர்ணங்கள்கொண்ட பலுன்கள் போன்று

நீங்கள் அத்துடன் விளையாடுவதற்காக,

நட்சத்திரத்தின் அடிவாரத்தில் விளையாடுங்கள்,பாடுங்கள்

ஓருருண்டை ஆப்பிள் பழத்தைப்போன்று

அன்றி சூடான பாண் துண்டைப்போன்று

இந்தப் பூமிப்பந்தை குழந்தைகளுக்குப் பரிசளிக்க

எங்களை விட்டுவிடுங்களேன்

குறைந்ததது ஒரு நாளைக்காகவாவது அவர்கள் திருப்தியாய் இன்புற,

உங்கள்வசமாக பூமிப்பந்து முழுவதும் வந்துவிட்டால்

நீங்கள்

நட்பு என்பது என்னவென்று

குறைந்தது ஒருநாளுக்குள்ளாகவாவது கற்று விடுங்கள்

பின்னர் தயக்கமின்றி

எமது கரங்களிலிருந்து தேசத்தைஎடுத்துக் கொள்வார்கள்

அதுள்

அழிவற்ற மரங்களை நாட்டுவதற்கு.

-

Nazim Hikmet.

ப.வி.ஸ்ரீரங்கன்

Thursday, March 17, 2005

சுனாமியைச் சொல்லி

சுனாமியைச் சொல்லி...

பூவேந்தும் கரங்களின்று புண்ணாகிப் போக

ஆயுதத்தை அரவணைக்கும் அதன் உயரமற்ற சிறுசு,

தும்பி பிடிக்கவெண்ணும் மூளை

கபாலம் பிளந்து வெளிக்கிளம்ப மல்லாந்து

படுத்துவிடும் மழலை கோடி ஈராக்,அவுக்கான்,சூடானென்ன -உலகெங்கும்தாம்!

அண்ணாந்து பார்த்து அடியெடுத்தோட

அகல விரிந்து அறுத்துவிடும் அணுப்பிழம்பு

விழித்தபடி மண்புணரும்

துண்டுபட்ட சிரசு பல

இல்லாத மருந்தால் இதயம் தொலைந்து

கொத்துக் கொத்தாய் மடியும் பாலகர்கள் முன்

மருத்துவர்கள் கை விரித்துக் கண்ணீர் மல்கி...

பொருட்தடை ,

செய்கைமுறைக் காப்பு,

செயற்கையான பற்றாக்குறை,

கடலினில் கொட்டி

கச்சிதமாகக் காரிமாற்றும் சந்தை

வல்ல பல வர்த்தகப் பேய்களினால்

வாடி வதங்கி

வாழும் பல பச்சைமண்கள்

மாண்டுவிடும் உலகெங்கும்

நில்லாது சதிராடும் பெருமூலதனப் பேய்களினால்

நித்தமொரு சாவு வரும்

இடம் வலமிழந்து

இயற்கைவேறு சுனாமியின

சும்மா வந்து சோகமதை சொல்லிச் செல்ல

இலட்சோபலெட்சம் உயிர்களதன் கூலியாக

இத்தனைக்கும் மத்தியில்

எதன்பொருட்டு இவர் பின்னால்

ஓடுமிந்த மக்கள் குழாம்?

குரல்வளையைத் தறித்துவிட்டு

குடிப்பதற்கு கோலாவும்

உண்பதற்கு கம்பேக்கரும்

பார்ப்பதற்கு சி.என்.என்'ம் உண்டாம்

நம்பவைத்து நலமடிக்கும்

நயவஞ்சக வலைகள் பல

நல்ல மனிதர்கள் வேடமிட்ட கபட மனிதர் கூட்டம்

'கடவுளுண்டு,கடவுளுண்டு' ஏசு பிரான் வருவதாக்

கல்லெறியும் பிணங்கள் மீது!

எண்ணைக் காசுகளில்

எடுத்துவைக்கும் இவற்றையெல்லாம்

சொந்தமண்ணின் வளங்கொண்டு

சோறுண்ண முடிவதில்லை எமக்கிங்கு

எம்மிடமே பறித்து எமக்கிடும் பிச்சைக்கும் வட்டி வைப்பார் வழி நெடுக

கள்ளமனிதருள் கால் கழுவும் காரியக்குட்டி

கர்தருக்குத் தூதுவனாம்

ரோமாபுரியின் முதல் மகனாம்

கட்டையிற் போகும்போதும் வரிப் பணத்தில் விதவிதமாய் வைத்தியம் பெறுபவர்

கடவுளிடம் விண்ணப்பிக்கின்றார்

மக்களின் நோய்-பிணி தீர்க்க (!?)

யாரிடம் கூற

யாரிடம் நோக?

மூலதனப்பேயால் முதுகொடிந்து

முதுமைக்குள் சிறைப்படும் நமது வாழ்வு

அணுவைப்பிளந்து,

உயிரைக் குடித்து விவிலியச் சிறைக்குள் தள்ளி

உலகைக் கருக்குமிவர் ஊறுதனை மறைத்திட

ஒரு சுனாமி

அள்ளிக் கொடுப்தாக

அரசுகளுடாய் அன்பின் கருணையான ஆணைகள் பல

அற்புதம்,

அற்புதம் !

மனிதவேட்டை

ஒரு புறமாகவும்,

மறுபுறம் மானுடமாண்பு பற்றி ய பொழிப்பும் அற்புதமைய்யா,அற்புதம்!!

வழிநெடுக

வரிப் பணத்தை தமக்காகயெண்ணிய மந்தி(ரி)கள்,மன்னர்கள்

கிராமத்தின் சேவகர்கள் பல நூறுபேர் மட்டும்தாமா நம் நா(கா)டுகளில்?

சுனாமியைச் சொல்லிச் சேர்கட்டுமையா,சேர்க்கட்டும்

நாளையின்னுமொரு சுனாமி வருவதற்கான

உறுதியில்லையே!

வூப்பெற்றால்

06.02.05 ப:வி.ஸ்ரீரங்கன்

தொப்புள் கொடி

தொப்புள் கொடி!

ப.வி.ஸ்ரீரங்கன்

கனவுகளின் எச்சமாக

சோகம் கப்பிய மங்கலான

நினைவுகளினது நிழல்கள்

தேகமெங்கும் தன் இருள் படர்ந்த விரல்களைப் பரப்பியபடி

அன்னை!

அடுப்பினில் புகையும் தென்னம் பாளையும் ,

அதனருகினில் வேகும் அந்த அற்புத உயிரும்

மப்புக் கரைந்த மந்தாரமாய்

வெறுமையின் நீண்ட கரங்கள் பிடரியைத் தடவ

உணர்வினது சூனிய வெளியில் அந்தரத்தில் தொங்கும் அன்னை,

நொண்டிக்காகமும் சொண்டுக்கிளியும்

நொந்து போக வைக்கும் நெருங்கிய தோழமையின் இழப்பாய்

நெஞ்சத்து மூலையில் மோதியபடி

கனவுகளைக் கருக்கிய பனிக்காலக் காற்றின் ஓலம்

கற்சுவரின் மோறையில் அறைந்து காலத்தில் அமிழ்ந்தது

எழுந்து சென்று பார்த்திட கால்களை அசைக்க

முதுகினது பின்புறமிருந்து மோதிய அதிகாரத் திமிர் இரும்புச் சுவராய்

நேரம் நெருங்குகிறது!

ஒர கால அவகாசம் கோவணம் கழன்ற கதையாக

மோப்பம் கொண்ட வெறி நாயோ வெல்வதற்குத் தயாராகும்

கோபுரத்து உச்சியில் தவமிருந்த கொக்கு பறப்பதற்கு இறக்கை விரிக்கும்

இங்கு காத்துக்கிடக்குமிந்த நடை பிணம்

கஞ்சல் பொறுக்கியபடி

அன்னையின் மடியும் அவித்துண்ணும் பனங்கிழங்கும்

அற்புதமான நிகழ்வாகிப் போச்சு!

தெருவோர வேப்பமரமும் வைரவ சூலமும்

முற்றத்து முல்லையும் பனையும்

முந்திய காலது;துச் சுவடாய்

கருச்சுமந்த அந்தக் காதலி கால் நீட்டிட

துணியினால் பிணை படும் அவள் விரல்கள்

என் முனகலில் கிழிபடக் காத்துக்கிடக்கும்

எனக்கு நரையேற்றும் காலமோ தன் கொடுங் கரம் கொண்டு

ஓங்கி உச்சியில் குத்த ஒப்பாரியாய் விரியும்

குடும்ப அகழியும் ஆழப் புதைக்கும் அன்னை மீதான பரதவிப்பை

என்றோ அறுபட்ட தொப்புள் கொடி

இதுவரை ஆறுதலளித்த ஆத்தை

இருண்டுவிடப் போகுமிந்த யுகம்

விழி நீரின் வெடிப்பில் அமுங்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

Tuesday, March 15, 2005

சுனாமியும்,நிதியுதவியும்

சுனாமியும்,நிதியுதவியும்

உலக நாடுகள் கூறும் மனிதாயமும்-

மக்களாண்மை நோக்கிய தேடலும் -ப.வி.ஸ்ரீரங்கன்

இன்றிருக்கும் முறைமைகளுக்குள்ளிருந்து எவ்வித எதிர்பார்ப்புகள் உயிர்வாழ்வதற்கான மனவூக்கமாக இருக்கமுடியும்?

ஒருகணமாயினும் உறங்காத பொதுப்படையான குவிப்புறுதியூக்கச் சமுதாயத்தில் இஃதொரு வாய்பாட்டுச் சொல்லாகவன்றி வேறென்னவாகவிருக்க முடியும்? நமது கனவுகளெல்லாம் இன்றையவுலக நடப்புகளையெல்லாம் பதிவுக்குள்ளாக்கிவிட்டு 'செத்தனே சிவனே'கதையல்ல.

பொறுப்புணர்வுள்ள மனித இனமாக மலர்வதற்காக, மகத்தான காரியமாற்றும் பணி இவ்வுலக மக்களாகிய நமக்குண்டு! இந் நோக்குள் பல்முனைப்புடைய உயிராதாரமிக்க உழைப்புண்டு, மறுப்பதற்கில்லை. இதன் தாத்பரியம் நமது கடப்பாட்டு முறைமைக்குள் ஆதிக்கவுணர்வை பொருள்சார்ந்து வெளிப்படுத்துமாயினும் அதனது புரிதற்பாடு இந்த விசத்தைப் பின் தள்ளி மனிதாயத்தேவைகளை முதன்மைப்படுத்துமிடத்து அதுவேயொரு வெகுஜனத்தன்மைமிக்க அணிதிரட்டலுக்கான பொதுமைப் பண்பைக் கொண்டு வரலாம் .

தவிர்க்கக்கூடிய - தனிநபர்வாத முறைமையை வழிபடாதவொரு மக்கட்டொகை இப்போதும் நமது சமுதாயத்தில் இருக்கின்றது.இந்தச் சு10ழலே நமது கனவுகளுக்கான ஆதரமிக்க ஊட்டப் பொருள்,மூலதனம்!

எமக்கான மெய்மைத் தன்மையென்பது வெறும் கருத்துக் கோர்க்கும் கணினிமயத் தகவல் மையமாகத்தோன்றும் இன்றைய படைப்புச்சு10ழலாக இருக்கமுடியாது.ஆழ்ந்து நோக்கப்பெறும் அறிவூக்கங்கூடவின்று பரந்துபட்ட 'மக்களாண்மை'ப் பண்பை முன் நிறுத்தத் தவறிவிடுகிறது. இதனடிப்படையிலெழுகின்ற எண்ணப்பரிமாற்றம் என்றுமில்லாதவாறு பொதுப்படையான வாழ்வாதாரவுரிமைக்குள் கால்வைத்து மூலமான பிரச்சனையை முக்கியமற்றவொரு நடப்பாகச் சிதைத்து வருவதில் கங்கணம் கட்டிக் காரியமாற்றுகிறது. இங்கு வாழ்வு என்பது வெறும் உழைப்பை நல்குவது,உற்பத்திச் சக்திகளோடு உறுவு கொள்வது,நுகர்வது என்ற மட்டத்தில் மட்டும் பார்க்கப்படும் ஒருசெயற்கைமிக்க உலகை இந்த குவிப்புறுதிச்சமூகம் தோற்றியுள்ளது,மனிதாயத் தேவையென்பதை வெறும் 'உணவு,உடை,உறையுள்'என்ற சொற்கோர்வைக்குள் வரையறுத்தல் எந்த அடிப்படையைக் கொண்டிருக்கிறது?

உழைப்பை மட்டுமே பொருள் சார்ந்து சிந்திப்பதில் எமக்கு உடன்பாடுகிடையாது. மனிதாயத்தை முன்னிறுத்தி மக்கள் மேலாண்மையைக் குறித்துச் சொல்வது ஏதோவொரு சகட்டுமேனி எழுத்தலங்காரப்படுத்தலாகப் பயன் படுத்துவதோ அன்றி முதன்மைப் படுத்தும் வெளியலங்காரப் பயன்பாட்டிற்கோ அல்ல! அதிகமாகப் பேசப்படுமிந்த 'மனிதாயம்'வெறுமையுலகைத் தோற்றி வைப்பதற்கான பண்பல்ல.யார் யாரோ கூவிக் கூவிக்கூறும் பொறுப்புணர்வற்ற மதவாத மானுடநேயத்தையோ அன்றி அரசியற் கருத்தாக்கப் பரப்புரையாகவோ இது குறிகிவிட முடியாது, உயிர்மீதான மத-பௌதிக காரியவுலகப் புரிதற்பாட்டிற்கப்பால் இயற்கை மீதான புரதலோடுகூடிய ஒருமைப் பண்பாகவும்,காலாகாலமாக இயற்கை உருவாக்கித் தந்த ஆக்கத் தகவமை;ப்பாகவும் ,உயிரிடத்தான இயல்புணர்வாகவுமிருக்க முடியாதுபோயினும் நாம் கொள்ளும் பொருள்சார்ந்த உழைப்பை முன்னிறுத்தப் போதுமான உறுதிப்பாடேயில்லாததொழிக்கப்பட்ட இந்த 'ஊனமே' நமக்கான ஆதாரமாக இருக்கும்.

ஊனத்தை அறியும் போது மட்டுமே நாம் கொள்ளும் அனைத்து உறவுகளும் தெளிவாகும், அதுவரையும் யார் யாரோ போடும் கூச்சலுக்கெல்லாம் தலையாட்டுதலும்,தனிநபர் மீது அளவிடமுடியாதளவு பிரமிப்பில் நம்பி ஏமாறுவதும் நிகழ்ந்த வண்ணமிருக்கும்.

எது நோக்கிச் செல்வதற்கான 'செல்வத்தேட்டம்'தேக்கி வைக்கப் படுகிறதோ அதுநோக்கி யாரும் செல்வதாகவில்லை,மீளவும் உயிரிடத்தான நேயமெனும் பாசாங்கு மொழி குறுகிய மதவாத அற்புத மனிதக் கடவுளார்களைப் படைத்து சாமானிய மனிதார்களை இன்னும் ஒட்டச் சுரண்டிக் கொழுக்கவும்,உழைப்பை உழைப்பவனிடமிருந்து அன்னியப் படுத்தவும் இச் செல்வமெல்லாம் உதவுகிறது,இந்தச் செல்வத்தை ஈட்டிக் கொடுத்தவர்களே இதற்குப் பலியாவது இன்று பொதுவான நிகழ்வாக எல்லோராலம் ஏற்றுக் கொள்ளும்படி ஆக்கப்பட்டதன் வாயிலாக மீளவொரு 'அதீத மனிதாயத் தேவை'என்ற மாய மான் அரசியலரங்குக்கு வருகிறது.இதை வைத்து உலக நாடுகள் பல தத்தமது இலாபகர அரசியல் விளையாட்டை மூன்றாமுலக நாடுகளில் நடாத்தி 'மறு காலனித்துவ' வலைக்குள் இழுத்து வருகின்றனர்.

பண்டுதொட்டுப் பேசப்படும் இந்த மனிதாபிமானம் வேறு வகையானதல்ல,இது வர்க்கச் சார்புடையது,உடலுழைப்பை எந்த விதத்திலும் மதியாத-அதைத் திருடிக்கொண்டிருக்கும் மனிதாபிமானம் இது. இதற்கு ,ஈராக்கில் பொருளாதாரத் தடை போட்டு பல இலட்சம் பாலகர்களைக் கொல்லத் தெரியும்,படையெடுத்து குண்டு போட்டு மக்களைக் காவு கொள்ளத் தெரியும்,கடன் கொடுத்து வட்டிக்கு வட்டி அறவிடத் தெரியும்.இதை இப்போது போற்றிப் பேசுவதற்கு பற்பல மேலாண்மை நாடுகள் புயலாகக்கிளம்பியுள்ளன,கூடவே இரத்தக்கறைபடிந்த தங்கள் உதவிக் கரத்தை நீட்டுகின்றனர்.இங்கு இதுவொரு மேல்நிலை உறுதிப்பாட்டிற்கான உலகாதிக்க-வள ஆதிக்க முறைமையின் வெளிப்பாடென்பதை மறைத்து முற்றுமுழுதான அதீத மனிதாய வெளிப்பாடாகக் காட்சிப் படுத்தப்படுகிறது. இது போலியான கண்ணீர்! ஒரு குவளை சோற்றை மையப் படுத்திய பலமற்ற மனிதர்களின் புரிதலுக்கு-உணர்வுக்கு,எதிர்பார்ப்புக்கு-கண்ணீருக்கு நிகரானதல்ல.

மனித வாழ்வினது உள் தடத்திலிருந்து தாக்கும் முதலாளியத் தேவைகள்,வாழ்வின் விளிம்புக்கு மானிடர்களைத் தள்ளிச் செல்கிறது.இதன் கொடூரமான விளைவாக உதிரிய மனிதர்களாக்கப்படும் மக்கட் கூட்டம் ஒருபுறமாகவும்,மறுபுறம் 'குவிப்புலகக் கோமான்களாக'இன்னொறு சிறு மக்கட் பிரிவாக உலகம் பிளவு பட்டபடி,இவ்விரு தொகுதியையும் இணைப்பதற்கான 'உற்பத்திப் பொறிமுறை'உலகத்தின் தேவையைப் புறந்தள்ளிய மூலதன பெருமுதலாளியமாக விரிந்து -வாழ்விலிருந்து மனிதாயத்தைத் தூக்கித்தூரவீசியுள்ள கொடுமையின் வாயிலாக வள்ளல்கள் பலரை மக்கள் முன் நிறுத்திய சமூகச்சு10ழலின்று வாழ்வைக் கையாலாகச் சுமைக்கான பொறியாக்கியும்,வெறுமை வெளியாகவும் தோற்றுகிறது.

இந்த அவலச் சு10ழலில் தாம் சுனாமியின் தாக்கம் மக்களை கொடுமையாகத் தாக்கி அவர்தம் ஆளுமையை முழுமையாகக் காவு கொண்டுவிட, சோற்றுப் பார்சலுக்குக் கையேந்தும் இழிநிலைக்கு அவர்களைத் தள்ளி விட்டது.இந்த இக்கட்டான கொடிய யதார்த்தத்தில்தாம் யார் யாரோ வந்தெமக்கு உதவுவதாக பாசாங்கு பண்ணி நம் கொஞ்ச நஞ்ச வாழ்வுரிமையையும் பறிப்தற்கு தங்கள் இராணுவ மேலாண்மையை பயன் படுத்துகிறார்கள்,இதன் வெளிப்பாடு கப்பல் கப்பலாகப் பொருட்கள் வந்து குவிவதாகப் காட்டப்படுகிறது! இன்று பூமியிலுள்ள அநேக நாடுகளில் ஒருநேரப் பசிக்கு சிறுதுண்டு ரொட்டித் துண்டு கொடுக்கும் தமது நாட்டு அரச தலைவர்களை தெய்வமாகக் கொண்டாடும் நிலை,பூமியிலுள்ள மக்களில் பெரும் பகுதியினர் இந்த வகை வாழ்சு10ழலில் வாழ்ந்து மடிகிறார்கள்! இவர்கள்தம் நாளாந்த வருமானம் ஒரு யூரோவை விடக் குறைவே,முன்னைய 'எகிப்திய நாட்டைப்போல்' பிழைத்திருப்போரின் பேரில் யாராவது உதுவும்போது நன்றிமிக்கவர்களாக எதையும் இலகுவில் விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உதவி செய்யும் நாடுகளோ ஒரு மில்லியன் உதவியாகக் கொடுத்தால் இரண்டு மில்லியன் வட்டியாக மீளவும் இந்த தொழில்துறை நாடுகளுக்கு வந்து விடுகிறது,(இந்த வட்டிக் கணக்கு இன்று நீண்ட கால வட்டியாக 7 வீதம் அறவிடப் படுகிறது,இஃது கடன் பெறும் ஒவ்வொரு நாட்டுக்கும் தெரிந்த கணக்கே.எனினும் சராசரி வாசகத் தேவைக்காக இங்கே சிறு கணக்கீடு: 100.000.-யூரோவிலிருந்து பார்ப்போம், வட்டி வீதம் :7-1வருடம், 10 ஆண்டுகளின் பின் 196.720.யூரோ, 25 ஆ.542.740.-யூரோ,50 ஆ.2.945.700.யூரோ, 75 ஆ.15.987.600.-யூரோ, 100 ஆண்டுகளின் பின் 86.771.630.-யூரோவாகக் குவிகிறது.இவ்வளவும் அந்த ஒரேயொரு இலட்சத்தால் வரும் வட்டியாகும்,இந்த 100 ஆண்டுகளுக்கும் வட்டி வெறும் 700.000.-யூரோதாம் ,ஆனால் வட்டிக்கு வட்டி: 85.971.630.-யூரோவாகும்,கிட்டத்தட்ட 86 மில்லியன் யூரோ வட்டி ஒரேயொரு இலட்சத்துக்கு! இது 100 வருடத்துக்கு மட்டும்) அப்போ நம் நாடுகள் எத்தனை பில்லியன் யூரோக்களை வட்டியா...?

இஇந்த வட்டி,வட்டிக்கு வட்டி நாடுகளைக் கடன்கார நாடுகளாக வைத்திருப்பதில்லை,மாறாகக் கடன்கார நாடுகள் யாவும் மேற்குலகத்துக்கு மீளவும் மறு கொலனியாக மாற்றப் படுகிறது.

எகிப்தினது இன்றைய ஜனாதிபதி கோஸ்னி முபாறாக் கூறுகிறார்: 'இந்தக் கடன் சுமை கடந்த 10.ஆண்டுகளில் ஆபிரிக்காவில் மட்டும் 500.மில்லியன் மக்களை பட்டுணிச் சாவுக்குள் தள்ளியது',இது ஆபிரிக்கா கடன் வட்டிக்கக் கொடுத்த விலை.

'3வது உலக மகா யுத்தம் ஆரம்பித்து விட்டது,அதன் பயங்கரமான ஆயுதம் கடனினது வட்டிக்கு வட்டி முறைமையாகும்,இது அணுக்குண்டை விட ஆபத்தானது'-லூய்ஸ் இனாசியோ லுலா டா சில்வா.(பிறேசிலின் ஜனாதிபதி)

மேற் கூறிய இருவரும் ஏகாதிபத்யங்களின் கூஜாத் தூக்கிகள்தாம் எனினும் அவர்களாலேயே இக் கொடுமையைச் சகிக்க முடியவில்லை.

ஆக இவர்கள் காணும் இந்த உலக வல்லரசுகள்தாம் இன்று எமது நாடுகளுக்கு வாரீ வழங்கும் கொடை வள்ளல்கள்,ஓடோடீ வரும் அழகென்ன அழகு!கடன் பழுவை இரத்து செய்கிறார்களாம், சுனாமி எச்சரிக்கைக் கருவி கொடுக்கிறார்களாம்,எல்லாம் எதற்காக?இவர்கள் அனைத்துக்கும் ஒரு விலை வைத்துள்ளார்கள், 'யார் குறை கூலிக்கு உழைக்கத் தயாரோ அவருக்கு வேலையுண்டு'மேற்குலகு தொழிலாளிக்கு வைக்கும் விலையிது. 1896 இல் இரஷ்சிய இராணி சாரின் கத்தரினா (இரண்டாவது) அலஸ்காவை 7.2 மில்லியனுக்கு அமெரிக்காவிடம் விற்றாள்,இப்போது முழு இரஷ்சியாவையும் என்னவிலையென்கிறது அமேரிக்கா.இந்தியாவினது விலையை இங்கிலாந்தினது 'கிழக்கிந்தியக் கம்பனி'17ஆம் நூற்றாண்டில் பதில்சொல்லியது,சீனாவுக்கான விலையை பிரித்தானிய முடியரசு 'அபினி யுத்தமாக' 19 நூற்றாண்டில் வெளிப் படுத்தியது, வைரம் விளையும் பூமியான லிபேரியா தனது விலையாக மில்லியன் மக்களை உள்நாட்டு யுத்தத்தில் பலி கொடுத்தது,எக்குரேறீயால்குவேனியா என்ற எண்ணை வளம் நிரம்பிய சின்னஞ்சிறு நாடோ முற்று முழுதான தனது வளமனைத்தையும் ஏலத்தில் இழந்தது.ஆபிரிக்காவின் மிகப் பெரும் நாடாகிய கொங்கோ'வில் தங்கம்,யுரேனியம்,செம்பு,மோபாய்க்களுக்கான அட்டை செய்யும் கொல்டான் கனிமங்களென அதன் வளத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்,இவ் வளங்களுக்காகக் கொடுக்கப்பட்ட விலை:1998இல் மட்டும் 2மில்லியன் உயிர்கள்.இவ்வளவு வியாபாரமும் அமேரிக்க-ஐரோப்பியத் தலைமையில்தாம் நடந்தேறியது! ஈராக்கில் அன்றைய ஒஷ்மானிய பேராட்சிக்காலம் வரை யுத்தம் விலையாகக் கொடுக்கப்படுகிறது',ஈராக்கினது எண்ணை இருப்பை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்கள் உலகத்தின் எந்த அபிவிருத்தியையும் கட்டுப்படுத்த முடியும்,தடுக்கமுடியும்'-நோம் கோம்ஸ்கி,பேராசியர்:மசூஸ: தொழில் நுட்பக் கல்லூரி,போஸ்டன்.2003 இல் ஈராக் யுத்தத்திற்கு கொட்டப்பட்ட பணம்100.பில்லியன் டொலர்களாகும்.இதைக் தமிழர்கள் அறிந்த கோடியில் சொன்னால்:10.000.கோடி டொலர்களாகும்.

நம்மிடமுள்ள கேள்வி நமது நாடுகள் கொடுத்துவரும் விலை இன்னும் அதிகமாகுமா இல்லை குறைந்துவிடுமா?

மக்களிடம் தாம் மகத்தான படைப்பாற்றலுண்டு,அவர்கள்தாம் வரலாற்று நாயகர்களெனக்கொண்டால்,நமது கேள்விக்கு விடையின்றிப் போகாது.வாழ்சூழல் பாதிப்பதால் மக்கள் பரந்து பட்ட முறையில் திரட்சி கொள்கிறார்கள்,என்றபோதும் எதிர் கருத்தியற் கட்டுமானம் வலுவானமுறையில் மக்களைத்; தாக்குவதால் சிந்தானாமுறையில் கோளாறு செய்யப்படுகிறது.இந்த யுக்தி காட்சிரூப ஊடக வளர்ச்சியோடு இன்னும் அதிகமாக மக்களாண்மையைத் குறிவைத்துத் தாக்குகிறது,இந்த கண்கட்டி வித்தை தொடரும் வரை காயடிக்கப்பட்ட மக்களாகவே நாம் இருக்கிறோம்.பு

p

ரிந்து கொள்ளக் கடினமான இந்த பிரபஞ்சம்போல் சிக்கலிடப்படும் மனித விழுமியம் அனைத்து வாழ்வாதாரவுரிமையையும் மட்டுப்படுத்திவிடுவதால் இன்னும் குறைவிருத்தி நிலைகளிலேயே நமது சிந்தனாமுறை தகவமைக்கப்படுகிறது,இருப்பினும் இதிலிருந்து மேலெழுவதில்தாம் எமது முதலாவதான வளர்ச்சிப்படிக்கட்டு இச் சமூகத்தின் பாலிடப்படுகிறது.இத்தகைய நிகழ்வு மலரும் தருணங்களில்தாம் அரச வன்முறை சார வடிவங்களில் கருத்தியற்றளம் உருவாக்கப் படுகிறது.இது தனிநபர் வாதங்களையும்,மேன்மைகளையும்,மத வாத-நவ நாகரீக பசப்பு வாதங்களையும் தாங்கி குறிப்பிட்டவொரு இனத்தின் மேன்மையாகப் பரப்புரை செய்யப்பட்டு மக்களை அணிதிரளவிடாது கூறு போடுதல் சாத்தியமாக்கப்படுகிறது.இதிலிருந்து மேலெழுகிற மானுட வெறுப்பு, தாம் சார மனிதர்களை கீழான பிராணிகளாக நசுக்குவதில் போய் முடிகிறது,இது உலகளாவியரீதியல் பற்பல நலன்களுடன் பின்னப் பட்டு எல்லாத் தரப்பு அரசுகளாலும் முன்னெடுக்கப் படுகிறது.

இலங்கை,இந்தியா போன்ற நாடுகளது நிலையோ சாதிகளாக்கப்பட்ட மக்களாக பிளவுபட்டு தமக்குள் அணிதிரள முடியாத பலகினமான இனங்களாக இருப்பதால் அன்னிய மேலாண்மை இங்கே செல்லுபடியாகிறது.

சுனாமியைச் சொல்லி நம் நாடுகளுக்கு யுத்தஜந்திரங்களோடு வந்தவர்கள் நம்மையின்னும் பழங்குடி மக்களாகவும் அகவயக் குறைவான வளர்ச்சியுடைய மக்கட் தொதியாகவுமே பார்க்கிறார்கள். இவர்கள் நடாத்தும் அரசியலைப் புரிந்து கொள்ளும் ஜனநாயகத் தன்மையற்ற சூழலை உருவாக்கி நம்மை காலாகாலத்துக்குக் கட்டிப்போடும் தந்திரங்களைத் தொடங்கி விட்டார்கள். அபிவிருத்தி,மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்போன்ற குடிசார் சேவைத்துறைகளை இந்துநேசியாவிலும் -இலங்கையிலும் ஆளும் அரச படைகளிடம் கையளித்தல் அமெரிக்கத் தந்திரமானது.இது பல்தேசிய மக்களைக்கொண்ட மேற்கூறிய நாடுகளில் இன்னும் இனங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டி இத்தகைய நாடுகளின் சுய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி உலக வல்லரசுகளின் நோக்கை அடைவதில் குறிவைத்துள்ளது.மக்களாண்மை சிதறடிக்கப்படும்போது மக்கள் ஆட்டுமந்தைகளாகவே பின் தொடர்வர்.சமீப கால மக்கள் வரலாறு பைபிள் ஈறாய் பகவத் கீதை-குரான் வாயிலாக நாம் அறிவதுதாம்!

அதிகாரம் எங்கும் வியாபித்திருக்கவும்,அதை வலுவாக்குவதன் மூலமாக நிதி மூலதனத்தினது எதிராளிகளை இனம் கண்டழிக்க படாதபாடு படும் ஏகாதிபத்திய எசமான்கள் கொலின் பவுல்,யோஸ்கா பிஷ்சர்,கோபி அனான் போன்றவர்கள் நமது நாட்டின் ஓரு பகுதிகுப்போவதும் பாதிப்புகளை பார்வையிடுவதும் -பாதிகப்பட்ட இன்னொரு பிரிவைக் பார்கக விரும்பினாலும்'; குறிப்பிட்ட' வரவேற்பளித்த நாடு விரும்பாத பட்சத்தில் சாத்தியமில்லையெனக் கூறுவதும் இராஜதந்திரம்தாம்.இந்த எசமானர்கள் சுண்டு விரலசைத்தாலே நம் நாடுகள் ஆஷ்டரும் கையுமாக அல்லது கூஜாவும் கையுமாக நிற்கும் நிலையில் இத்தகைய நாடுகள் மீது பழிபோடுதல் மீளவும் மக்களை தங்களுக்குள் தாங்களே அடிபட வைப்பதற்கே! இதுநாள்வரை தமிழ்பேசும் மக்களின் துயருக்குக் காரணமான அமெரிக்காவும் ,சி.என்.என்.தொலைக்காட்சியும் திடீர் கரிசனை வந்து மேற்கூறியபடி செய்தி கோர்க்கிறது.இதுதாம்'தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் நுள்ளுதல்'என்பதா?

பண்டிட் நேருகாலத்தில் பஞ்சசீலக் கொள்கையென்றொரு சாமான் இந்திய நலனை பாதுகாக்கப் போடப்பட்டு இலங்கை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நாடு,இந்தியாவினது பாதுகாப்புக்கு ஆபத்து வரும்போது இலங்கையை இந்தியா வேண்டியபடி கையாளப் போடப்பட்ட எழுதாத சட்டத்தின் மீது அமெரிக்கா ஓங்கியொரு அறை போட்டு இந்தியாவைக் காலம் பூராகக் கண்ணீர் விட வைத்துவிட்டதில்அதன் தந்திரம் வெட்ட வெளிச்சம்.சொந்த மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கு கையேந்திக்கொண்டிருக்க இந்தியாவோ இலங்கை நோக்கி கப்பல் கப்பலாகப் பொருட்கள் உட்பட இராணுவத்தை அனுப்புகிறது,தனது செல்வாக்கு மண்டலம் முற்றுமுழுதாகச் சரிவது அதற்கு அழிவெனத் தெரியும்.உலக நாடுகள் வழங்க இருந்த உதவியை மறுக்கும் இந்தியா,'கையேந்தினால் இலங்கைக்கு' தான்' பரோபகாரம் செய்ய இலாய்க்கின்றிப்போகும் நிலையயிலிருந்து மட்டும் தப்பியுள்ளது.

மக்களோ எந்த ஆளுமையுமின்றி உயிர்வாழக் கஞ்சிக்குக் கையேந்தியபடி,இந்த ஊனத்தை அறிவதும்,இதனூடாக அணிதிரள்வதும் எதிரிகளை இனம் காண்பதும் அதனூடாய் மக்களாண்மை பெற்று உலகு தழுவிய தோழமையைக் கட்டியெழுப்பி உலகு தழுவிய மக்களாட்சி மலரப் பாடுபடுவதுதாம் இன்றைய வாழ்வாதார மெய்மை.

வூப்பெற்றால்,

ஜேர்மனி-14.01.05 ப.வி.ஸ்ரீரங்கன்

அச்சமும்

அச்சமும்

அவலமும் அவரவர்க்கு வந்தால்

அன்புக் குழந்தைகளே!

நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்

என்னிடமில்லை,

கவித்துவமற்ற மொழியூடு

வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை

வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர

நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி

ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு

எம்மிடம் எந்த மந்திரமுமில்லை

இரண்டும் கெட்டான் பொழுதுகளை

மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்

ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை

நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்

முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்

தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள்

நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்

குளிரில் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்

என் செவிகளினூடாகவும் கேட்கிறேன்

கண்கள் விரிகிறது

அவற்றைப் பார்த்துவிட,

எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!

ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்

பரிகாசிகின்ற இதழ்களிலிருந்து மெல்லிய 'ச்சீ' ஒலி

இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது

அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி

எப்படி இந்தக் குழந்தைப் பருவம்...

கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர

வேறெதையும் என்னால் செய்ய முடியாது,

அன்னையை இழந்த சேயும்,

சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,

அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து

புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்தற்கான

எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்

எனது மெழுகு திரியோ

மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!

ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காவும்

எனக்காகவும்,

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்

ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக

புதிய பொழுது மலாரது போய்விடுமோவென்ற

நெஞ்சத்து ஏங்கலில் ,

உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,

பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்...

பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,

கௌரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்...

மேகங்களுக்குப் பின்புறம்

எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக

மண்டியிட்டுக் கிடக்க

இந்த உலகத்து மானுடர்களெல்லாம் நமக்காக பிராத்தனையிலீடுபட

அனைத்து நித்யங்களும் மௌனித்துக் கொள்கின்றன

இனி எவரும் வரமாட்டார்கள்

இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி

நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து

அறுவடை செய்வதற்கான முனைப்புடன்

மேசைகளில்'மற்றவர்களினது தவறுகளாக'கொட்டி

கடைவிரித்தவர்கள் இப்போ

அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,

மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது

என்றபோதும் ,

குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:

நம்பிக்கைதரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை.

11.02.05

வூப்பெற்றால், ஜேர்மனி. -ப.வி.ஸ்ரீரங்கன்